About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/05/27

குமுறல்கள்:
my first disclaimer : i am not jealous with anybody ,nor  am  i  a  cynic .
யார் மீதும் பொறாமையோ , மற்ற ego எதுவுமோ இல்லை.
சௌந்தர்யாவை  மனமார பாராட்டுகிறேன்.
ஆனால் சௌந்தர்யாவை ஓ ஓ ஓவராக பாராட்டும் பலரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஒருவர் சொல்கிறார்.''இந்த பெண்ணுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது என்றே தெரியவில்லை''
எத்தனை இளைஞர்களுக்கு இந்த மாதிரி கனவு இருக்கிறது தெரியுமா? அவர்களிடம் இந்த 'ரஜினி' என்ற மந்திர சொல்லையும், 150 கோடியும் கொடுத்திருந்தால் அவர்களும் சாதித்திருப்பார்கள்.இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள் தெரியுமா?
*******
Green ink :
என் வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். எழுத பேனா கேட்டேன் .''இது பச்சை மை'' என்றார். அதிர்ந்து ''அதிர்ந்து'' விட்டேன்.
ஏன் தெரியுமா?
அவர் 8ம் வகுப்பு கூட தேறாதவர்.
உள்ளாட்சி ,ஒரு கிராம பஞ்சாயத்தில் ஏதோ ஒரு பதவியாம்.
''G '' போட்ட வண்டியில் வந்தார்.
கொடுமையே !!!!!
எத்தனை மென்பொருளை வடிவமைத்து நாட்டின் பொருளாதாரத்தையே  உயர்த்தும் பொறியாளர்கள் எல்லாம் கனவு கூட காண முடியாது இப்படி ஒரு பச்சை மை, G வண்டி.
நான் பணியில் சேர்ந்த போது பச்சை மையில் கையெழுத்திடும்  உரிமை இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு AEE  போன்ற பலருக்கும் அந்த உரிமை மறுக்கப் பட்டது.அனல்மின் நிலைய கட்டுமானத்தில் பணியின்போது  எத்தனை சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் .tunnel ,chimney போன்ற கட்டுமானங்கள் எவ்வளவு அறிவும் ,அர்பணிப்பும் தேவைப்படும் விஷயம் தெரியுமா?.அவர்களுக்கெல்லாம் பச்சை மை கிடையாது.
யாரை குறை சொல்வது?
*****
+1 பாடங்கள்;
மாநகராட்சி செய்த முடிவு:
மாணவர்களின்  தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இனி +1 பாடங்களை நடத்தாமல் +1 லும் +2 பாடங்களையே நடத்த வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
எல்லா தனியார் பள்ளிகளிலும்  இதைத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இதன் விளைவு என்ன தெரியுமா?
+1 கணிதம்தான் மிக முக்கியமானது. B .E சேர்ந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் மாணவர்கள் இருப்பார்கள். இந்த M 3 என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அது அவர்கள் சேரும் எந்த வேலைக்கும் பயன்படுவதில்லை.ஆனால் அந்த M 3 யில் தேறி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.பட்டம் பெற்றுவிடுவார்கள்.ஆனால் ஒரு 30% பேர்தான் தேறுவார்கள். இந்த அடியில் துவண்டு விடும் மாணவர்கள் அதிர்ச்சியில் அடுத்து அடுத்து arrears என்று ,வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள்.
என் மாணவர்கள் பலர் இப்படி ஆகியுள்ளனர்.ஒரு 10 கணக்குகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வைத்து (அதுவும் ஒரு vocational பிரிவு )மாணவன் 200க்கு 200 பெற வைத்து கிண்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம்.ஆனால்....அதனால் +1 கணிதம் மிக மிக முக்கியம்.
கார்த்திக் அம்மா

2014/05/24

கார்த்தியும் கோச்சடையானும் :
 கார்த்திக்கிற்கு  பிடித்த நடிகர்  ரஜினி..அவருடைய படம் என்றால் முதல் நாளன்றே பார்க்கும் பழக்கம் உள்ளவன்..
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்  என்று கார்த்திக்கிற்கும் ஆசை இருந்தது..குடும்ப பாரம் காரணமாக  அந்த ஆசையை தள்ளிப் .போட்டிருந்தது என் செல்லம்.
 படம் தொடங்கும்  போது கார்த்தி இருந்திரிருந்தால் கண்டிப்பாக இந்த டீமில்  அவன் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்.
 வேதனையில் மனம் தள்ளாடுகிறது .
கார்த்திக் அம்மா

2014/05/12

அன்னையர் தினம் :
என் அன்னை:
என் தாய்
என் அம்மா
அவன் எனக்கா  மகனானான் ?
நான் அவனுக்கு  மகள் ஆனேன்.
என் தாயே,
என் தெய்வமே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நாம் மீண்டும் தாய் மகனாகப் பிறந்து சேர்ந்து இருக்க வேண்டும்.
இல்லையேல் சொர்க்கத்தில்   (அப்படி ஒன்று இருந்தால் )  உன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

2014/05/10

என் blog ஐ யார் படிக்கிறார்களோ இல்லையோ வருணபகவான் நிச்சயம் படிக்கிறார். பின் என்ன? வருண பகவான் கருணை செய்ய வேண்டும் என்று எழுதினேன். கொட்டி தீர்த்து குளிர்ச்சியாக்கிவிட்டார்  சென்னையை.
நன்றி வருண பகவானே.


முதல் மதிப்பெண் :ஊசிப் போன வசனம்:
முதல் மதிப்பெண் பெறும் அனைவரும் சொல்லும் வசனம்:
டாக்டராகி  ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் .
கலெக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்.
இது வரை எத்தனை பேர் அப்படி சேவை செய்திருக்கிறார்கள்  என்ற லிஸ்ட்டை  யாராவது தந்தால்  நன்றாக இருக்கும்.
நான் முதல் மார்க் வாங்கினேன். மகிழ்ச்சி.என்பதோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

2014/05/08

தேர்தல் விழா முடிந்து விட்டது.இனி அடுத்த நாடகங்கள் ஆரம்பிக்கும்.எல்லா M .P க்களும் மந்திரியாக முயற்சிப்பார்.
கொடுத்த வாக்குறுதிகள் செவ்வாய்,சனி கிரகத்திற்கு பறந்து விடும்.
இதற்கு என்ன தீர்வு?
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.
இருந்தாலும் சொல்வதை சொல்லி வைக்கிறேனே..
மிக அதிக வாக்கு பெற்றவர் M .Pயாக  6 மாதம் இருக்க வேண்டும். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த 6 மாதத்திற்கு அவருக்கு அடுத்து அதிக வாக்கு பெற்ற அடுத்த வேட்பாளரை M .Pயாக்க வேண்டும். 
அவருக்கும் அதே 6 மாதம்.
அவரும் சரியாக  கடமை செய்யவில்லைஎன்றால் அடுத்தவர்.
இப்படி ஒரு system வந்தால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
5 வருடம் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரில்தான் 1000 +2000 கோடி சொத்து சேர்க்கும் வேலையில் இறங்குகின்றனர்.
My suggestion :
Who cares if i record my idea?
Anyhow, i will write my ideas here. The elections being over the next drama will start.All elected M.P s will try to become Ministers.( Not to serve the country)
but to fill up their coffers at least with 1000 or 2000 crores.
Those who voted will have to wait for another 5 years.
THE SOLUTION:
The candidate who secured the maximum votes should be M.P for the first six months.If by the given time if they don't fillup their promises they should quit. 
And the next candidate should become the M.P.
Like this without another election for another 5 years the cycle should continue.
This system will instill a fear in their mind and the M.Ps will try to work for the people.
 AM I  RIGHT ?