About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/01/09

பெண்ணே  பெண்ணே
நேற்று என் சொந்த கிராமத்திலிருந்து 4  பேர் வந்திருந்தனர். உறவினர்களா என்பது தெரியாது.இதுவரை ஜாதி மதம் பார்த்து பழகவில்லை.
அவர்களில் ஒரு பெண்.
வயது 20.
கொடுமை என்னவென்றால் கணவனை இழந்து 9 மாத கைக்குழந்தையுடன் வெறுமையாக நின்றது.பழனி கந்தசாமி ஐயாவிடம்  கருத்து பகிர்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். 20 வயதில் வெறும் நெற்றியுடன், வளையில்லா கைகளுடன்.......பார்த்த நிமிடத்தில் மனம் கலங்கிப் போயிற்று.
அந்த பெண்ணிற்காக சில அலுவலகங்கள் அலைந்து சில நன்மைகளை செய்து தந்தேன் . மறு கல்யாணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்கிறாள்.சமுதாயம் அவளை கொத்த காத்திருக்கிறது. எப்படி சமாளிப்பாள்?
படித்து கை நிறைய சம்பளம் +கார்த்தியின் யானை பலம்  நிலையிலிருந்த நானே எவ்வளவு போராட வேண்டியிருந்தது.கைம்பெண் என்றால்நல்ல நிகழ்ச்சிகள், எதிரில் வந்தால் அபசகுனம் என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகளை சந்திக்க வேண்டுமே. ஆ ஆ அப்படியெல்லாம் இல்லை. சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்.10 % கூட மாறவில்லை.
அந்த பெண்ணை மேற்கொண்டு படிப்பை தொடர். உனக்கான உதவிகளை செய்கிறேன் என்று சொன்னேன்.
சீக்கிரம் இளைய மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
இது போன்றவர்களுக்கு உதவி செய்ய என்னை அர்பணித்துக் கொள்ளவேண்டும். கார்த்தியின் திருவடியை அடையும் வரை என்னால் முடிந்த உதவிகளை இவர  போன்றவர்களுக்கு  செய்ய வேண்டும்.
கலாகார்த்திக். (அம்மா )
  

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அம்மா...