About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/01/13

போகி பண்டிகை:
     வருடா  வருடம் எழுதுகிறேன்.இதை பற்றி.
பழையன கழிதலும் புதியன புகுதலும்:
அந்த காலத்தில் தானியங்களை கொட்டி வைக்க ''சேர் '' அல்லது  '' குதிர்'' ( store house   or  granary ) என்ற வீடு இருக்கும்.4 அறைகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.3 அல்லது 4 ஆள் 20, 24 அடி இருக்கும்.ஜன்னல், (திட்டிவாசல் ) போன்ற கதவு இருக்கும்.
ஒரு அறையில் கம்பு, இன்னொன்றில் சோளம் ,மற்றொன்றில் ராகி  மற்றும் நெல் கொட்டி வைப்பர்.மாதம் ஒருமுறை ஒருவர் ஏணி  வைத்து உள்ளே இறங்கி தேவைப்பட்ட தானியங்களை எடுத்துக் கொண்டு மேலே வந்து கதவை மூடி விடுவர்.
  தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு   பூலாப்பூ ,ஆவாரம்பூ ,வேப்பிலை,  மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி( இயற்கை பூச்சிக் கொல்லிகள்) அதன் மேல் தானியங்களை கொட்டுவர்.பூச்சிகள் அண்டாமல் காப்பதால் ''காப்பு கட்டுதல்'' என்றாகியது.
பழைய தானியங்கள் கழிந்து புது தானியங்கள் வருவதால் பழையன கழிந்து புதியன புகுதல் வருதல் என்றாகியது.
அதே போல் மட்பாண்டங்கள் ஒரு வருடம்வரைதான் உபயோகப்படுத்தலாம்.அதனால் பழைய பானைகள் சட்டிகள் போன்றவற்றை மாற்றி புது பானையில் பொங்கலிடுவர்.
இதுவும் பழையன கழிந்து புதியன புகுதல்.
இக்கால வாழ்க்கை முறைக்கும் போகிப் பண்டிகைக்கும் ஒவ்வாது.இப்போது எல்லாவற்றிற்கும் பூச்சி கொல்லி மருந்து அடித்துவிடுகிறோம்.காய் பழங்கள்   மேல் vax தடவி விடுகிறோம்.
அதனால் போகியே அர்த்தமற்றதாகி விடுகிறது.முன்னோர்கள் காரண காரியங்களுடனேயே பண்டிகைகளை வைத்தனர்.எல்லா காரணங்களையும் மறந்து டயர்களையும் துணிகளையும் எரித்துக் கொண்டிருக்கிறோம் .
காலத்தின் கோலம்.
கார்த்திக் அம்மா ...கலாகார்த்திக்

3 comments:

Angel said...

நம் முன்னோர் செய்தவை எல்லாமே ஒரு காரண காரியமாக ..சிற்றுயிர் எறும்புக்கும் நன்மை செய்தாங்க ..பூச்சி மருந்துகள் பாதிப்பு இன்னமும் நம் மக்கள் உணரவில்லை :( என்டோசல்பான் விளைவுகளுக்கு பின்னும்

டயர் எரிப்பது எவ்ளோ environmental pollution ..நம் இருப்பிடத்தை மாசுபடுத்துவது கொண்டாட்டமில்லை .

Jeevan said...

Fact! Great knowing the reason behind the bhogi festival

திண்டுக்கல் தனபாலன் said...

கூடவே மனதில் படிந்த அழுக்குகளும்...