About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/30

ஒற்றை பிராமணன் :
இன்று சங்கரா டி .வி யில் ஒரு ஜோதிட நிகழ்ச்சி பார்த்தேன்.ஒரு பிரபல ஜோதிடர்.
அவரிடம் பூனை குறுக்கே போதல் போன்ற சகுனங்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ''ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்த ஒருவர் ஒற்றையாக எதிரில் வந்தால் போகும் காரியம் வெற்றி பெறாது என்ற சகுனத்திற்கு ஒரு விளக்கம் கொடுத்தார்.
Disclaimer :
நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை.
பெரிய ஜோதிடரும் இல்லை.
ஒரு L K G அளவில்  தெரியும்.அந்த அளவில் இந்த
ஒற்றை பிராமணன் என்பது குருவை குறிப்பது.ஒரு ஜாதகத்தில் எந்த கட்டமாக இருந்தாலும் சரி.
குரு  தனித்து ( வேறு எந்த கிரகத்துடனும் சேராமல் )நின்றால் நல்ல பலன் இல்லை .
அதைத்தான் ஒற்றை பிராமணன் ஆகாது என்றார்கள்.
நம்  மக்கள்தான் super brain ஆயிற்றே.
கதை செய்து கயிறு திரித்து விட்டார்கள்.
பாவம் அவர்கள் .தனியே வந்தால் எதிரில் வருபவர்களை கண்டு தயங்குவார்கள்.
ஆனால் காலம் மாறி விட்டது.இப்போதைய தலைமுறைக்கு இந்த சகுனங்கள் என்ற ஒன்று பற்றி தெரியுமா என்பதே சந்தேகம்தான்
மறக்க விடாமல் கொள்ளியை எரிய விடுவோம் என்பது சரியா?
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2015/12/24

First Rank :
ஒரு விளம்பரம்.( பட விளம்பரமா? )
அதில் ஒரு சிறுவனின் அப்பா
'' உன்னை எப்படியும் First Rank வாங்க வைத்து விடுவார்கள் '' என்று சொல்கிறார்.
அதற்கு அந்த பையன் '' எல்லோரிடமும் இப்படித்தானே சொல்வார்கள். ஆனால் First Rank ஒன்றுதானே இருக்கிறது ''
என்று சொல்வான்....
இது மிக மிக தவறான கருத்து
+2 வில் 12 லட்சம் மாணவர்கள் எழுதினாலும் 1200 மதிப்பெண்கள் அவரவர் தனி சொத்து. அதில் அவர் எவ்வளவு பெறுகிறார் என்பதுதான் நடைமுறை. ஒரு மாணவன் 800 மதிப்பெண்கள் பெற்றாலும் மீதி 400 மதிப்பெண்களை யாருக்கும் கொடுக்க முடியாது.எதுவும் செய்ய முடியாது.
......    .....
அப்படிஎன்றால் 1000 பேர் 1200 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று  கொள்வோம்.
அந்த 1000 பேருக்கும் First Rankகொடுக்கப் படும். அடுத்த மதிப்பெண் பெரும் மாணவனுக்கு 1001 வது Rank கொடுக்கப் படும்.
சம்பந்தப் பட்டவர்கள் திருத்திக் கொள்வார்களா?
கார்த்திக் அம்மா

2015/12/17

ஜல்லிக்கட்டு:
மறுபடியும் என் கதையை சொன்னால்தான் விளக்கம் சரியாக இருக்கும்.
நான் பள்ளி மாணவி அப்போது.
அப்போதெல்லாம் வீடுகளில் பசு இருக்கும். அது பால் தரும் காலம் வரை வீட்டில் இருக்கும். அதன்பின் விளைநிலத்தில் (தோட்டம் )  (agri land ) கொண்டு விட்டு விட்டு பால்தர தயாராக இருக்கும்,( புதிதாக கன்று ஈன்ற பசு  )மாட்டை ஊரில் இருக்கும் வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார்கள்.
அப்படித்தான் ஒரு  (பசு லட்சுமி கொச்சுமி என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டிருந்த மாடு ) தோட்டத்திற்கு போய் விட்டது.விடுமுறையில் வயலுக்கு சென்ற நான் அந்த மாட்டை மேய்ச்சலுக்கு பிடித்து சென்றேன் எங்கள் வயலுக்குள்ளேதான் .சிறிது தூரம் சென்றபின் அந்த மாட்டை திருப்பிக் கொண்டு வர முயன்றபோது ,தன பசியாலோ என்னவோ டக்கென்று என்னை கீழே தள்ளி விட்டு முட்ட ஆரம்பித்து விட்டது. (நன்றி கெட்ட மாடு. ) ஒரு நிமிடம் பயந்து விட்டாலும் அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு அதன் மூக்கனாங்கயிற்றை எட்டிப் பிடித்து அதனை  அடக்கி அதன் கட்டுத் துறைக்கு கொண்டு வந்து விட்டேன். அம்மாவிடம் கூட சொல்லவில்லை.சொன்னால் அந்த மாடு மேல் கோபம் வந்து விடுமே என்ற எண்ணம்தான்.
இந்த கதை எதற்கு என்றால் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டதல்ல. 
அந்த மாடுகளையும் காளைகளையும் அதை பயன்படுத்துபவரால் கண்ட்ரோல் செய்ய கொடுக்கும் ஒரு பயிற்சிதான்.
 இப்போதும் மாடுகள் ,காளைகள் நமக்கு  தேவைப் படும் ,சேவைக்கு வேண்டிய மிருகங்கள். அது எப்படி வனவிலங்கு ஆகும்?
சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டோர் ???????



2015/12/11

PWD officers .IAS officers:
இது தற்பெருமை அல்ல.என் சுய புராணமும் அல்ல. இது பற்றி முன்பே எழுதியுள்ளேன்.
1990  என நினைக்கிறேன்.நான் ஆசிரியையாக பணியாற்றிய போது நடந்த நிகழ்வு :
+2 தேர்வு.
தனித் தேர்வர்கள் 120 பேர் .அவர்களுக்கு ஹால் டிக்கட் வரவில்லை.
இது எதுவும் எனக்கு தெரியாது. வழக்கம் போல் பள்ளிக்கு வந்த என்னை தலைமை ஆசிரியர் அழைத்து கையில் ஒரு file  கொடுத்து நீங்கள்தான் in charge .இந்த தேர்வை நடத்துங்கள் என்றார்.
அதில் என்ன பிரச்சினை ,ஆபத்தா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'' எங்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கவில்லை.''
எப்படி தேர்வு  எழுத அனுமதிப்பது?
அனுமதிக்காமலும் இருக்க முடியாது.
இதையெல்லாம் என் சீனியர்சுடன் விவாதித்திருக்கிறார் என் தலைமை ஆசிரியர்.(நான்தான் most junior ).
அவர்களெல்லாம் பிளான் செய்து என் தலையில் கட்டியுள்ளனர்.
இந்த சதி எதுவும் தெரியாமல் நான் அங்கு சென்றேன்.
அந்த இடத்திற்கு சென்றபோது 120 பேரும் ஒரே கூச்சல்.'
நான் ஒரு நிமிடத்தில் முடிவெடுத்தேன்.
''  எல்லோரும் எதோ ஒரு பெஞ்சில் உட்காருங்கள்.உங்களுக்கு கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும்  வழங்கப்படும். '' என்றேன்.
அத்தனை பேரும் இரண்டே நிமிடத்தில் கிடைத்த இடத்தில் அமர்ந்தனர்.
 கேள்வித்தாளு ம் ,விடைத்தாளும் வழங்கப்பட்டது.
( கண்ணீருடன் நின்று கொண்டிருந்த அவர்கள் 
தேர்வு எழுத முடியாது என்று அறிவிக்கப் பட்டிருந்த அவர்கள் )
என்ன ஒரு நிம்மதி .:
அப்புறம் அவர்கள் அனைவரிடத்தும் ஒரு undertaking எழுதி வாங்கிக் கொண்டேன்.
இரண்டாம் நாளும் இது தொடர்ந்தது..
மூன்றாம் நாள் ஹால் டிக்கெட் வந்து  விட்டது.
THE GREATEST JOINT DIRECTOR  வேக வேகமாக வந்தார். புஸ் புஸ் என்ற கோப மூச்சு.இவ்வளவு இளையவளான இவளை எப்படி இந்த பொறுப்பிற்கு ????
அதில் நான் இவ்வளவு சரியாக செயல்பட்டேன் என்பது இன்னும் கூடுதல் எரிச்சல்.
ஆனால் 
என்னை எதுவும் செய்ய முடியவில்லை.
இவ்வளவு கதை எதற்கு என்றால் 
அன்று நான் எடுத்த துணிச்சலான முடிவு 120 பேரின் எதிர்காலத்தை நற்காலமாக மாற்றியது.
இன்று இந்த officers யாருக்கும் பயப்படாமல் தண்ணிரை உரிய நேரத்தில் திறந்து விட்டிருந்தால் சென்னைக்கு இந்த கொடூர சோகம் நிகழ்ந்திருக்காது .
அரசு அதிகாரிகளை என்ன செய்து விட முடியும்?
அட அப்படியே வீட்டிற்குதான் அனுப்பட்டுமே.
பிழைக்க வழியே இல்லையா?
இத்தனை மக்களை காப்பாற்றினோம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்.
கார்த்திக் அம்மா

  

2015/12/07

We Chennaiites  AMPHIBIANS:
நாங்கள் சென்னை வாசிகளாகிய நாங்கள் AMPHIBIANS: ஆகி விட்டோம்.
நீரிலும் நிலத்திலும் வாழும் தவளை ,முதலை போல்
நாங்களும் நீரிலும் வாழ்வோம்.
நிலத்திலும் வாழ்வோம்.
.....
கிண்டல் செய்யும் நேரமா இது என்ற கேள்வி வேண்டாம்.
The best joke in the world is to tell the truth என்று   சொல்வது உண்டு.
உண்மை சுடுகிறது.
.... ...   ...
சென்னையின் பெயர் மாற்றம்:
சென்னையின்  புது பெயர் :
CHENNAI SEA.
..... .....
மனமார்ந்த நன்றிகள் :எத்தனை எத்தனை நல்ல உள்ளங்கள் இரவு பகலாக உதவிக் கரம் நீட்டிக் கொண்டிருக்கின்றனர்.
எந்த விளம்பரமும் இல்லாமல்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்.
HATS OFF TO YOU MY BRETHREN
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா