About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/24

First Rank :
ஒரு விளம்பரம்.( பட விளம்பரமா? )
அதில் ஒரு சிறுவனின் அப்பா
'' உன்னை எப்படியும் First Rank வாங்க வைத்து விடுவார்கள் '' என்று சொல்கிறார்.
அதற்கு அந்த பையன் '' எல்லோரிடமும் இப்படித்தானே சொல்வார்கள். ஆனால் First Rank ஒன்றுதானே இருக்கிறது ''
என்று சொல்வான்....
இது மிக மிக தவறான கருத்து
+2 வில் 12 லட்சம் மாணவர்கள் எழுதினாலும் 1200 மதிப்பெண்கள் அவரவர் தனி சொத்து. அதில் அவர் எவ்வளவு பெறுகிறார் என்பதுதான் நடைமுறை. ஒரு மாணவன் 800 மதிப்பெண்கள் பெற்றாலும் மீதி 400 மதிப்பெண்களை யாருக்கும் கொடுக்க முடியாது.எதுவும் செய்ய முடியாது.
......    .....
அப்படிஎன்றால் 1000 பேர் 1200 மதிப்பெண்கள் பெறுகிறார்கள் என்று  கொள்வோம்.
அந்த 1000 பேருக்கும் First Rankகொடுக்கப் படும். அடுத்த மதிப்பெண் பெரும் மாணவனுக்கு 1001 வது Rank கொடுக்கப் படும்.
சம்பந்தப் பட்டவர்கள் திருத்திக் கொள்வார்களா?
கார்த்திக் அம்மா

1 comment:

G.M Balasubramaniam said...

எனக்கு என்னவோ இந்த ரேங்குகளில் நம்பிக்கை இல்லை. 98 மார்க் வாங்கியவன் 99 மார்க் வாங்கியவனை விட எந்த விதத்தில் குறைந்தவனாகக் கருதப்படுகிறான் மேலூம் திருத்தியவர் ஒருவரேயா. திருத்துபவர்களின் அந்த நேர மனநிலை எப்படி இருந்ததோ. ஒருவன் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துவிட்டால் அவன் அந்த சப்ஜெக்டில் இனி அறிய வேறெதுவுமில்லையா.ஒருவனின் புத்திசாலித்தனம் வேறு மார்க் வாங்கும் திறன் வேறு. நாங்கள் படிக்கும் போது கணிதம் தவிர வேறு எந்த பாடத்திலும் நூறு மதிப்பெண்கள் கனவுகூடக் காணமுடியாது