About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/12/17

ஜல்லிக்கட்டு:
மறுபடியும் என் கதையை சொன்னால்தான் விளக்கம் சரியாக இருக்கும்.
நான் பள்ளி மாணவி அப்போது.
அப்போதெல்லாம் வீடுகளில் பசு இருக்கும். அது பால் தரும் காலம் வரை வீட்டில் இருக்கும். அதன்பின் விளைநிலத்தில் (தோட்டம் )  (agri land ) கொண்டு விட்டு விட்டு பால்தர தயாராக இருக்கும்,( புதிதாக கன்று ஈன்ற பசு  )மாட்டை ஊரில் இருக்கும் வீட்டிற்கு கொண்டுவந்து விடுவார்கள்.
அப்படித்தான் ஒரு  (பசு லட்சுமி கொச்சுமி என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டிருந்த மாடு ) தோட்டத்திற்கு போய் விட்டது.விடுமுறையில் வயலுக்கு சென்ற நான் அந்த மாட்டை மேய்ச்சலுக்கு பிடித்து சென்றேன் எங்கள் வயலுக்குள்ளேதான் .சிறிது தூரம் சென்றபின் அந்த மாட்டை திருப்பிக் கொண்டு வர முயன்றபோது ,தன பசியாலோ என்னவோ டக்கென்று என்னை கீழே தள்ளி விட்டு முட்ட ஆரம்பித்து விட்டது. (நன்றி கெட்ட மாடு. ) ஒரு நிமிடம் பயந்து விட்டாலும் அடுத்த நொடி சுதாரித்துக் கொண்டு அதன் மூக்கனாங்கயிற்றை எட்டிப் பிடித்து அதனை  அடக்கி அதன் கட்டுத் துறைக்கு கொண்டு வந்து விட்டேன். அம்மாவிடம் கூட சொல்லவில்லை.சொன்னால் அந்த மாடு மேல் கோபம் வந்து விடுமே என்ற எண்ணம்தான்.
இந்த கதை எதற்கு என்றால் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டிற்காக ஏற்படுத்தப் பட்டதல்ல. 
அந்த மாடுகளையும் காளைகளையும் அதை பயன்படுத்துபவரால் கண்ட்ரோல் செய்ய கொடுக்கும் ஒரு பயிற்சிதான்.
 இப்போதும் மாடுகள் ,காளைகள் நமக்கு  தேவைப் படும் ,சேவைக்கு வேண்டிய மிருகங்கள். அது எப்படி வனவிலங்கு ஆகும்?
சிந்திப்பார்களா சம்பந்தப்பட்டோர் ???????



1 comment:

Jeevan said...

எனது ஆதங்கம், ஜல்லிக்கட்டு க்கு தடை விதித்தால் காளை மாடுகள் (குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு என்று வளர்கப் படும்) இனமே அழிந்து விடும். அவைகளுக்கான தேவை இருக்கும்வரை மட்டுமே மாடுகள் நிலைத்து நிற்கும்... அது காளை யாக இருந்தாலும் சரி, பசு எருமை மாடுகள்ளாக இருந்தாலும் அதே கதி தான்.