ஒரு தொலைக் காட்சியில்
.......நாமக்கல் அருகே 2 பண மூட்டைகள் கிடந்தன .அவற்றை கண்ட ஒரு ஆசிரியரும் ஒரு பால்காரரும் போலிசுக்கு தகவல் கொடுக்க போலிஸ் அந்த பண மூட்டைகளை கைப்பற்றி சென்றனர் என்பதாக செய்தி சொல்லப் பட்டது .....
என் நினைவுகள் 1996 க்கு சென்றது.
அப்போது நாங்கள் மேட்டூர் (அணை ) யில் குடியிருந்தோம்.Govt வீடு.சுமார் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும். வீட்டை சுற்றி பெரிய தோட்டம்.நெடிதுயர்ந்த பெரிய பெரிய மரங்களுடன் கூடிய வீடு.
கம்பி வேலி போட்டு கேட் போட்டிருந்தோம்.
ஒரு நாள் இரவு சுமார் 2 மணி இருக்கும். யாரோ கேட்டை gate பயங்கரமாக தட்டும் சத்தம். வீட்டு கதவை திறந்து நானும் என் கணவரும் வெளியே வந்தோம்.
வெளியே வர இருந்த கார்த்தி+செந்திலை வீட்டிற்குள் தள்ளி வெளிப்புறமாக கதவை சாத்திக் கொண்டேன்.(நான் பயங்கர முன்னெச்சரிக்கை முத்தண்ணா ).
கேட்டிற்கு வெளியே ஒரு கிராமத்து பெண்.
இடுப்பில் ஒரு ட்ரங்கு பெட்டி.
தலை மேல் ஒரு சாக்கு பை.
'' '' அம்மா , கதவை திறந்து என்னை உள்ளே விடுங்கம்மா .என்னை கொல்ல துரத்தி வருகிறார்கள்.காப்பாற்றுங்கள்.'' '' என்று கதறல். படி இறங்க ஆரம்பித்த கணவரை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய மரத்தை காட்டினேன். அங்கே 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
''மூட்டையில் என்ன ?'' என்றேன். அதற்கு முன்பே யூகம் செய்து விட்டேன். அது பண மூட்டை என்று.
அதே பதில்தான் கிடைத்தது.
'' அம்மா , நீ அடுத்த பக்கத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு செல். அங்கே நிறைய பேர் இருக்கின்றனர்.காவலாளியும் இருக்கிறார்'' என்று சொல்லி விட்டு கணவரையும் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைநது கதவை தாளிட்டுக் கொண்டேன்.
HIGH LIGHT
அடுத்த நாள் செய்தி:
ஒரு பெண்ணின் சடலம் காவிரி ஆற்றில் கிடைத்தது
பல ரூபாய் தாள்கள் ஆற்றில் மிதந்தன .
......
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கலாமே
...
என்று நீங்கள் கேட்பீர்கள்.
அந்த பெண்ணை வீட்டில் அனுமதித்திருந்தால் நாங்களும் வெட்ட பட்டிருப்போம்.
அதற்கு முதல் நாளே ஒரு அமைச்சரின் மாட்டு கொட்டகையில் இருந்து பணம் திருடப் பட்ட விஷயம் எங்களுக்கு தெரிந்தே இருந்தது.
.....ஆக விஷயம் என்னவென்றால் எப்போதுமே சாக்கு பையில்தான் பணம் வைப்பார்கள் என்பது தெரிகிறது.
அடுத்து ....
மேட்டூரில் இந்த கொலைகள் அப்போது அதிகம்.
ஒரு நாள் இரவு 4,5 பேர் எங்கள் வீட்டின் கூரை மேல் இன்னொருவனை துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
நாங்கள் கப் சிப் .
பணமும் பதவியும் என்ன சுகத்தை கொடுக்கும் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

3 comments:
அந்த நேரம் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் !! நினைச்சி பார்க்கவே பயம்மா இருக்கு
மனசாட்சி !!..//அப்பெண்மணி வெறுங்கையுடன் வந்திருந்தாலாவது அடைக்கலம் தந்திருக்கலாம் வைத்திருந்தது களவாடிய பணம் ..இந்த மாதிரி நேரத்தில் அதிகவனமா இருக்கணும் ..காப்பாற்றுகிறேன் உதவிசெய்கிறேன் என்று செல்லும் நல்ல சமாரியர்களைதான் இப்பெல்லாம் முதலில் அட்டாக் செய்றாங்க
ஆம் anjalin .உண்மையே.
வருகைக்கு நன்றி
karthik amma
பட காட்சி போல் உள்ளது
Post a Comment