SUPER NEWS:
ஜெர்மனி
நாட்டின் உர்செலின் நகரைச் சேர்ந்தவர் கிளவுடியா. இவர் சிறுவயதிலிருந்தே
ஏராளமான பூனைகளை வளர்த்து வருகிறார். நிறைய பூனைகள் இருந்தாலும்,
கிளவுடியாவின் செல்ல பூனை 'அல்ஜோஷா'. இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்
அல்ஜோஷா சேட்டைக்கார பூனை. சமையல் அறையில் இருக்கும் தின்பண்டங்களை திருடி
தின்றுவிட்டு, எங்காவது ஓடி ஒளிந்துக்கொள்ளும். கிளவுடியா வந்து கூப்பிடும்
பட்சத்தில் தான், மீண்டும் வெளியில் வந்து தலைக்காட்டும். இப்படி
இருக்க... ஓரிரு நாட்களாகவே அல்ஜோஷாவை காணவில்லை. கிளவுடியா வீட்டின் மூலை
முடுக்குகளில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டார். ஆனால் பூனை
கிடைத்தபாடில்லை. நாட்கள்...வாரங்களாக மாறின. வாரங்கள்...மாதங்களாக ஓடின.
ஒரு நாள் கிளவுடியாவின் பக்கத்து வீட்டுக்காரர், தன்னுடைய குடவுனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒயின் பாட்டில்களை எடுப்பதற்காக திறந்தபோது, அங்கு அல்ஜோஷா இறந்த நிலையில் கிடந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த கிளவுடியா, அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.
பள்ளத்தில் புதைப்பதற்கு முன் அல்ஜோஷாவை கையில் தூக்கி கொஞ்சியவாறு கண்ணீர் வடித்திருக்கிறார். அப்போது கையில் நெளிந்த பூனை, 'மியாவ்...மியாவ்...' என முனங்கி விட்டு, மீண்டும் இறந்தது போல கிடந்திருக்கிறது. இதனால் திடுக்கிட்டு போன கிளவுடியா உடனடியாக, கால்நடை மருத்துவரை வரவழைத்துவிட்டார்.
வந்த டாக்டரோ, 'அட.... பூனை உயிரோட தாங்க இருக்கு! ஆனால் போதை மயக்கத்திலே இருக்கு! ஓரிரு நாட்களில் போதை தெளிந்தவுடன் எழுந்துவிடும்' என்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரார் 17 காலி ஒயின் பாட்டில்களுடன் கிளவுடியாவை தேடி வந்துவிட்டார். அந்த சேட்டைக்கார பூனை குடவுனில் மாட்டிக்கொண்ட சமயத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 17 ஒயின் பாட்டில்களை ருசி பார்த்திருக்கிறது. கண் விழிப்பது... ஒயின் குடிப்பது... மீண்டும் தூங்குவது என போதையிலேயே ஒரு மாதத்தை கழித்திருக்கிறது. மருத்துவர் சொன்னப்படியே மூன்று நாட்களுக்கு பின்னர், போதை தெளிந்து எழுந்திருக்கிறது அந்த பூனை.

SUPER
SUPER
SUPER
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
2 comments:
ஹா ஹா :) படிக்கும்போது கொஞ்சம் கவலையா இருந்தது முடிவு ஹாப்பிக்கா :)
இங்கே நண்பர் வீட்டில் ஒரு பூனை ஒயின் ஒரு சிப் எடுக்குமாம் :) எங்க வீட்டு பூனைக்கு க்ரீக் யோகர்ட் என்றால் ஆசை.
இனி பக்கத்துக்கு வீட்டுக்காரர் உஷரா இருக்கணும், ருசி பார்த்த பூனை மீண்டும் வரலாம்... ஹி ஹி
Post a Comment