பொள்ளாச்சி சொல்லும் செய்தி :
ஒரு வீட்டிற்கு சென்று இருந்த போது நடந்த விஷயம்.
அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருந்தவர்கள்.
அவர்களுக்கு 3 வயது ஆண் மகன் .நான் உட்கார்ந்து இருந்த இருக்கைக்கு எதிரில் நின்ற அந்த சிறுவன் தன பிறப்புறுப்பை தொட்டு தொட்டு பெருமையுடன் காட்டுகிறான்.அதை நான் பிரமாதமான விஷயமாக பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவனிடம்.
அவன் அம்மா முகத்தை பார்த்தேன்.
அவரும் அப்படி ஒரு பூரிப்புடனும் பெருமையுடனும் என்னை பார்த்தார்.
அப்படி என்றால் 3 வயது சிறுவனுக்கு தான் ஒரு ஆண் ,தன உறுப்பு அவ்வளவு பெரிய விஷயம் என்ற அளவில் அந்த மெத்த படித்த பெற்றோர்களே அவன் மனதில் பதிய வைக்கிறார்கள் என்றால்
இந்த கொடுமையை என்ன சொல்வது?
அதனால் பணம்,பதவி படைத்த ஆண்கள் என்று சொல்லிக் கொள்ளும் இந்த மிருகங்கள் செய்த கொடுமை சமுதாயம் கொடுத்த தைரியம்.
ஒரு ஆண் பெண்ணை போக பொருளாக ,அனுபவிக்க படைக்கப் பட்ட ஒரு சாதனமாக பார்க்க பழக்கப் படுத்தப் படுகிறான்.
எனக்கு தெரிந்த ஒரு தாய் பற்றி சொல்கிறேன்.
அந்த தாயின் மருமகள் பிள்ளை பேறுக்கு தன் தாய் வீட்டிற்கு சென்று இருக்கிறாள்.
அந்த தாய் சொல்கிறாள்.''இவள் பிள்ளை பெற்று திரும்பி வர 6 மாதம் ஆகும்.அது வரை என் மகன் சும்மா இருப்பானா? அவனுக்கு இடைப்பட்ட காலத்திற்கு இன்னொரு பெண் வேண்டும் ''
இப்படி ஆண்மகன் என்பவன் காம களியாட்டத்தில் மூழ்க வேண்டும் என்று வளர்க்கப் படுகிறான்.
இந்த எண்ணம் மாறவே மாறாது.
பெண்ணியவாதிகள் சண்டைக்கு வர வேண்டாம்.நீங்கள் சொல்லும் பெண்ணுரிமை ,பெண்ணும் ஆணும் சமம் என்ற வாதமெல்லாம் அந்த பெண்ணின் கதறலில் காற்றில் பறக்கிறது.
ஏன் ,வாங்கடா ,எத்தனை பேர் வேண்டுமானாலும் வாங்க என்று அந்த பெண் சொல்லியிருக்கலாமே.
ஆண் போல அந்த நிகழ்வை ''அனுபவித்திருக்கலாமே.''.
ஆண் கை வீசி நடக்கிறான் .பெண் கர்ப்பம் அடைகிறாள்.
கர்ப்பமே இல்லாவிட்டாலும் உதிர போக்கு, PCOD என மென்மேலும் பிரச்சினைகள் தொடர்கின்றன.
அதனால் பெண்களே ,சற்று எச்சரிக்கையாய் இருங்கள்.
அந்த காலத்தில் பெண்கள் அடிமைகளாக நடத்தப படவில்லை.அவர்களின் மெண்மையான மனசு,அதனினும் மென்மையான உடல் இவற்றை கருத்தில் கொண்டே அவர்களை போற்றி வளர்த்தனர்.அவர்கள் சுயம்வரம் என்ற சுதந்திரம் பெற்றிருந்தனர்.யாருக்கு தோன்றியதோ.பெண்ணுரிமை என்ற வார்த்தையில் பெண்களுக்கு கொடுமைகள்தான் அதிகமாகிவிட்டது.
கார்த்திக் அம்மா

4 comments:
ஆண்களுக்கும் பெண்களுக்கும் நல்ல செருப்படி. அருமையான கட்டுரை
நீங்கள் இந்த பதிவை ஒரு தாயின் கோணத்திலிருந்து எழுதி இருக்கிறீர்கள்.
பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்று நீங்கள் சொல்வதை மறுப்பதற்கில்லை. ஆனால் பெண்களை வீட்டுக்குள் வைத்து அடைகாப்பது இனிவரும் காலத்தில் சாத்தியமில்லாதது.
மதுரைத்தமிழன் தனது அவர்கள் உண்மைகள் தளத்தில் பெண்குழந்தைகளை எப்படி இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் விதத்தில் பெற்றோர் வளர்க்க வேண்டும் என்பது குறித்து மிக சிறப்பாக பதிவிட்டுள்ளார். அதேபோல ஜோதிஜி அவர்கள் தனது தேவியர் இல்லம் தளத்தில் பகிர்த்துள்ள கருத்துக்களும் பயனுள்ளதே
பெண்களை வீட்டில் அடைக்க வேண்டும் என்பது அல்ல என் கருத்து.நானே ஒரு பெண்ணியவாதிதான்.எத்தனையோ மேடைகளில் பெண்ணுரிமை பேசியவள் .ஆனால் எது உரிமை,எது அடிமைத்தனம் என்று புரிந்து கொள்ளாமல் ஆபத்தில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்பதுதான் என் கரிசனம்.And i read both the posts..Yet it is better to be safe.That's my point.
//அந்த வீட்டின் கணவனும் மனைவியும் நன்கு படித்தவர்கள்.நல்ல வேலையில் இருந்தவர்கள்.
அவர்களுக்கு 3 வயது ஆண் மகன் ...//
இப்படி தான் ஆண் சிங்கம்மடா, புலியடா என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கொடுமையாக ஆண் ஆதிக்க சிந்தனையை சிறு வயதிலிருந்தே வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள்.குற்றவாளி திருநாவுக்கரசின் அம்மாவும் அப்படி தான்.
//பெண்ணுரிமை என்ற வார்த்தையில் பெண்களுக்கு கொடுமைகள்தான் அதிகமாகிவிட்டது.//
இது உங்களிடம் கேட்பது அதிர்ச்சி.
பெண்ணுரிமை பற்றி பேசுபவர்கள் இந்தியாவில் இருப்தால் தான் திருநாவுக்கரசு அவனை சேர்ந்த மோசமான குற்றவாளிகள் கைது செய்யபட்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. அல்லது அந்த பெண்களுக்கு வேணும் நல்லா வேணும் திருநாவுக்கரசு அவன் கூட்டாளிங்க எல்லாம் ஆம்பிளை சிங்கம்மடா என்று சொல்லி கடந்து செல்லும் சமூகம் அது.
Post a Comment