ஹோலி பண்டிகை .
மதம் என்று சொல்லுங்கள்.இல்லை என்ன பெயரில் சொன்னாலும் சொல்லுங்கள்.
நம் முன்னோர்கள் நமக்கு காட்டிய அறிவியல் வாழ்வியல் முறைதான் பண்டிகைகள்.
இன்று ஹோலி .
என்ன காரணம்.?
இன்று சென்னையிலும் பெங்களுரூவிலும் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன.
ஒரு வைரஸ் காய்ச்சல்.
என்ன காரணம் ? என்ன வைரஸ்? மருத்துவ துறை ஆராய்ச்சி செய்கிறது.
ஆனால் நம் முன்னோர்கள் இது போன்ற காய்ச்சலை தடுக்கத்தான் மாரியம்மன் பண்டிகை என்று செய்து ஊரெங்கும் வேப்பிலையும் மஞ்சளும் கலந்த தண்ணீரை எல்லோருக்கும் ஊற்றினார்கள்.
வடநாட்டில் இந்த முறை சற்று மாறுபட்டு கலர் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
கலர் மாறினாலும் நோக்கம் ஒன்றுதான்.
வைரஸ் காரணியை விரட்டி அடிப்பது.
காரணம் காரியம் மறைந்து ஒரு கோலாகல கொண்டாட்டமாகவே மாறி விட்டது.
அதற்கு ஒரு சொதப்பலான பக்தி( ?????? )கதை.
பாமர மக்களை மூளை சலவை செய்வது.
இப்போது எல்லா மக்களும் மூளை சலவையை விரும்பி செய்து கொள்கிறார்கள்.
மதத்தின் உண்மை அறிவியல் பின்னணி மறைந்து ( அல்லது மறைக்கப்பட்டு )
எல்லாம் வெறும் ஆடம்பரம் ,ஆரவாரம் , பகட்டு என்று மாறி விட்டது.
இன்னும் நிறைய எழுதலாம் .ஆனால் என்ன பலன் ??????????????
1 comment:
ம்... உண்மை தான்...
Post a Comment