About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/12/24

விளக்கம்

என் முந்தைய பதிவை படித்து,ஜீவன் ஒரு சந்தேகம் கேட்டுள்ளார்.ஏன் தற்கொலை முயற்சி என்று.நீண்ட விளக்கமாக இருக்கக் கூடும் என்றாலும் தேவையான விளக்கம் இது.
ஒரு பதிவர், [பெயர் வேண்டாம், ஏனெனில் ஏற்கனவே பெரிய யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது ],ஒரு பதிவர்,தன் பதிவில்,பி.எட் படிப்பிற்கு பணம் கட்ட முடியாததால் ஒரு பெண் கல்லூரியிலிருந்து வீட்டிற்கு அனுப்பப் பட்டதால் , அப்பெண் தற்கொலைக்கு முயன்றதாகவும்,அதனால்,அந்த பெண்ணிற்கு பண உதவி செய்யும்படியும் கேட்டிருந்தார்.நிறைய பேர் உதவி செய்ய முன்வந்து பணம் அனுப்பினர்.ஒரு பதிவர் மட்டும்,அந்த பெண்ணின் இந்த செயலை கண்டித்து இத்தகைய போக்கை நாம் ஊக்குவிக்கக் கூடாது என்று எழுதினார்.அவருடைய வாதம் பின்வருமாறு:" அந்த பெண்ணின் தந்தை ஒரு சிறு வியாபாரி.அவருக்கு இன்னும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.மகன் ஒரு workshop ல் வேலை செய்கிறான்.அடுத்த மகள் படித்துக் கொண்டிருக்கிறாள்.M.Sc படிக்க வைக்கவே அவருடைய பாடு திண்டாட்டம்.அப்படியிருக்க இந்த பெண் 1,20,000 ரூபாய் செலவு செய்து ப்டிக்க வேண்டுமா?அதற்கு பதிலாக ஒரு வேலைக்கு சென்று சிறிது சம்பாதித்து ,பிறகு,correspondence படிப்பில் பி.எட் படிக்கலாமே, அதும் அல்லாமல்,தற்கொலைக்கு முயன்ற்து எந்த வகையில் நியாயம்,அப்படி படித்து பிறகு வேலை கிடைக்கவில்லையென்றால் ஒரு முறை தற்கொலை செய்ய முயல்வாரா,அதன் பிறகு காதல் தோல்வி என்று ஒரு முறை தற்கொலைக்கு முயல்வாரா,இவரைப் போல் இன்னும் எவ்வளவு பேர் உதவி கிடைக்காததால்,படிப்பை தொடர முடியாமல இருக்கிறார்கள்" என்றெல்லாம் கேட்டிருந்தார்.அவ்வளவுதான்.பதிவர்காள் பலரும் அவரை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டனர்.ஒருவர் 'ஆ, ஒரு தலித் பெண், ஒரு கிராமத்து பெண்,'என்று பெருன் குரலெடுத்து விட்டார்.
என்னுடைய கேள்வி "கிராமத்தில் மட்டும்தான் அதிலும் தலித் பெண்களுக்கு மட்டும்தான் கஷ்டமா?இந்த சென்னை மாநகரில் எத்தனை பெண்கள் ,எல்லா இனம், மதம், குலம் சார்ந்த பெண்களும் ,பையன்களும் காசில்லாததால் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள் தெரியுமா"...இப்படியெல்லாம் கேள்வி கேட்பதே தப்பு என்றால் என்ன சொல்வது.உதவி செய்ய வேண்டும் என்பதை யாரும் மறுக்கவில்லை.ஆனால்,மனித குலத்தை காக்கவே நாங்கள் அவதரித்திருக்கிறோம் என்பது போலவும் அந்த முயற்சியை எந்த கேள்வியும் கேட்காமல் ,ஆஹா என்று கொண்டாட வேண்டும் என்ப்து போலவும் போய்க் கொண்டிருக்கிறது வாதம் [அல்ல,அல்ல, குடுமிப் பிடி சண்டை]
ஆசை வேண்டும்.உடனே சொல்வார்கள் "கனவு காணுங்கள்" ஐய்யோ,கலாம் சொன்னது எந்த அர்த்தத்தில்?ambition ...நான் கூட இந்த உலகின் ராணி என்று கனவு கானட்டுமா? மீதி பிறகு

1 comment:

Jeevan said...

Some wealthiest people used to urge their children to study well, but they never. In her life, the wealth is the ban for her studies.