வாழ்க்கை நான்கு வகைப் படும்.
1.கட்டுரை: உண்டோம்,உறங்கினோம் என்பது ஒரு கட்டுரையை போன்றது
2.கதை:உண்டோம்,உறங்கினோம்,சிறிது உல்லாசமாய் இருந்தோம் என்பது.
3.கவிதை:மேறகூறியவற்றுடன்,அன்பு , பாசம் கலந்து அதில் இன்பம் கண்டு வாழ்வது
4.அன்புக்காக மட்டுமே வாழ்க்கை என்று ஒருவர் கொண்ட அன்பிற்காக, பாசத்திற்காக,இன்றைய வார்த்தையில் சொல்வது என்றால், காதலுக்காக மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வது.."காப்பியம்"
என் மகன் ஒரு அழகான கவிதை.அவன் வாழ்க்கை ஒரு அற்புதமான காவியம்.அந்த கவிதையை சுவைப்பது தின்ன தின்ன,பருகப் பருக திகட்டாத அமுதம்.
என் வாழ்க்கை ஒரு காவியமாக இல்லையெறாலும்,என் மகன் என்ற கவிதையின் நினைவுகளில் இனிமை பெறும் கவிதையாகவாவது இருக்கட்டுமே
2 comments:
Great!! Naan Kavithaiyaga irukka veandun endru Asai padukerain:)
Have a Peace New Year!
Post a Comment