அசை போடுகிறேன்
Rain rain go away
Come again another day
This is mummy's washing day
இந்த rhyme எங்களுக்குதான் மிகவும் பொருந்தும். கார்த்தி, செந்தில் சிறுவர்களாக இருந்த போது [90 களில் ] சனிக்கிழமைதான் துணி துவைக்கும் நாள். ஒரு வாரத்து துணிகளையும் washing machine ல் போட்டு துவைத்து ,,
அலசுவதற்கு, மொட்டை மாடிக்கு சென்று விடுவோம். [ அப்போது, மின்வாரிய குடியிருப்பில் இருந்தோம். 3 அடுக்கு அபார்ட்மென்ட். .. மேட்டூர். .] வீடுகளுக்கான தண்ணீர் தொட்டி மொட்டை மாடியில். தண்ணீர் நிரம்பிய பிறகு வெளியேறும் நீரை அன்று மட்டும்
நிறுத்த மாட்டார் அதன் பொறுப்பாளர். அவருக்கு தெரியும், அன்று எங்களுக்கு தண்ணீர் தேவை என்று.]. துணி அலசுகிறோம் என்று ஒரு மணி நேரம் கூத்தடிப்போம். குற்றால அருவியில் குளிப்பது போல்தான். ஒருவர் மேல் ஒருவர் தண்ணீர் அடித்துக் கொண்டு ஆட்டம், பாட்டம்தான். என் கணவர் இதில் எல்லாம் பங்கெடுக்க மாட்டார். அவருண்டு, அவருடைய செய்திதாள் , அல்லது office புத்தகம் என்று எதிலாவது மூழ்கியிருப்பார். நாங்கள் மூவரும் அவிழ்த்து விட்ட கழுதைகள்தான்.
இப்படிப்பட்ட ஒரு நாளிலே , நாங்கள் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த போது, கீழேயிருந்து,, அவருடைய அடிக்குரலில் 'கார்த்தி, கார்த்தி ' என்று கூப்பிட்டார். ஒரு 15 நிமிடம் கத்திய பிறகுதான், எங்களுக்கு கீழே போக வேண்டும் என்றே தோன்றியது.[fully drenched] கிழே இறங்கி வந்தால், வரவேற்பறையில், என்னுடைய பெரிய மைத்துனர்கள் இருவர், இன்னும் 4 பேர் அவருடைய உறவினர்கள் [சுத்தமான கிராமத்து மக்கள்] என்று 6 பேர் வரவேற்பறையை அடைத்து உட்கார்ந்திருந்தனர். எங்கள் கோலத்தை பார்த்து அவர்கள் முழிக்க, அவர்களை பார்த்து நாங்கள் முழிக்க ,,( ஒரு பெண் அதுவும் 2 மகன்களுக்கு தாய் இப்படி விளையாடுவதென்பது அவர்களுக்கு ஜீரணிக்க முடியாத விஷயம்}.
மகானுபாவன், என் கணவர் ஒரு 4 படி மேலே வந்து உறவினர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கப் படாதோ ? என்னத்தைச் சொல்ல?
3 comments:
//மகானுபாவன், என் கணவர் ஒரு 4 படி மேலே வந்து உறவினர்கள் வந்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கப் படாதோ ? என்னத்தைச் சொல்ல?//
:) Ipdi ella veetlayum yaravdhu sothapi embarrass panirukanganu theliva vilangudhu ...
Appa phone'ku koopdrapo pala neram naan seshtai seiven..romba neram kazhichu dhaan SPEAKER'la pesitrukanganu theriyum.. adhuvum suthi irukum appa friends sirickradhu vechu dhan theriyum..
"OK appa... aprama pesren...i guess u with ppl " apdinutu asadu vazhiya phone'a vechutu oru 10 minisham manda kanjudum. :)
Your story remembers my times of playing with water at our grandpa’s bull shed with aunty and brother. We usual wash dresses and bath in the open space where water flows from the pipe and into the tank that feed water for bulls.
Glad to know your fun and funny with anna’s… cool blink :)
ஆன்ட்டி எனக்கு கூட தண்ணில விளையாட ரொம்ப பிடிக்கும்
Post a Comment