விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து
எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான
பரிதாபம்!!
பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று
இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப்
நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று
கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது.
ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான
பரிதாபம்!!
இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ
பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி
உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான
பரிதாபம்!!
ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை
அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .
எத்தனை
ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான மனைவியை பார்க்கும்
ஆவலுடன், அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக்
கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு
ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே
இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும்
நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன்
.அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த
ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம்
செய்தவர்களா? 40 தாய்களும் பாவிகளா?சுற்றம், உறவு, என்று அத்தனை பேரும்
சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும்
...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே வெந்து
கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து
ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று
சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால் போவது, யார் பின்னால்
போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள்
நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த பெங்களூர் பஸ்
விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று.
யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க
முடியாது இந்த வேதனையை..