About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/10/27

வெங்காய விலை ..மற்றவற்றின் விலை...வருமான உயர்வு 
எனக்கு வேதனைப்படுவதா , நகைப்பதா என்று தெரியவில்லை.
  எப்படி இப்படி ஒரு கூப்பாடு?
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகியுள்ளதா கவும்  மற்ற பொருள்கள் எல்லாம் 1 ரூபாய்க்கும் 2,3 ரூபாய்க்கும் கிடைப்பது போலவும் ....எந்த பொருளின் விலை கம்மியாக உள்ளது?
அரிசி,பருப்பு,எண்ணெய் ,பால் பொருட்கள் ,சோப்பு போன்ற பொருட்கள் விலை யும்தான் விண்ணை எட்டியுள்ளது.
ஒரு சோப்பு  50 ரூபாய்க்கு விற்றால் வாங்கும் மக்கள் ,10 நாட்களில் ''சிகப்பாகி விடுவீர்கள்''  என்ற கிரீம்களை  500 ரூ கொடுத்து வாங்கும் மக்கள் ,அந்த கடைகளில் போய் அவர்கள் சொல்லும் விலையில் ஒரு போலி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு பெருமையுடன் வரும் மக்கள்  அதைப் பற்றி ஏதாவது  குறை சொல்கிறார்களா ?
அட ,ஒரு துணிக்கடைக்கு  சென்றேன். ஏதாவது ஒரு நாள் ( வருடத்தில் ஒரு நாள் ,யாராவது  உறவினர்கள் வந்து அவர்களுக்காக  செல்ல வேண்டியிருக்கும் )
அப்படி சென்ற போது எனக்கு மயக்கம் வராத குறைதான்.ஒரு சாதாரண சுடிதார் கூட 2500 ரூ ,அதை விட சாதாரண புடவை 1500 -10000 வரை.
என்னுடன் வந்தவர்கள் உணவுக்கு தக்காளி,பால் செலவுக்கு அத்தனை கஞ்சத்தனம் செய்பவர்கள் , அந்த கடையில் ரூ 10000 த்திற்கு  துணி எடுத்தனர்.
   சரி.....இப்போது தீபாவளி  வருகிறது. பட்டாசு விலை 30%  அதிகமாகி உள்ளதாக செய்தி சொல்கிறது.
யாராவது 2000 ரூ விட கம்மியாக வாங்குகிறார்களா  என்று சொல்லுங்கள்?
அப்போது மட்டும் எந்த புலம்பலும் இல்லை. அது ஒரு பெருமை.!!!1
இதை விட முக்கியமான விஷயம் :எல்லோரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.எல்லோரின் வாங்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது
     வெங்காயமே இல்லாமல் சமைத்தாலும்  நன்றாக இருக்கும்.
விரத நாட்களில் உணவில் வெங்காயம்  சேர்க்க மாட்டார்கள்.அன்றுதான் உணவு இன்னும் அதிக சுவையுடன் இருப்பது போல் தோன்றும் .
சரி ,10 வெங்காயம் போடும் இடத்தில் 5 வெங்கயம் போட்டு  பயன்பாட்டை குறைத்து ,கம்மியாக வெங்காயம் வாங்குங்கள் .
வியாபாரிகள் எவ்வளவு நாள் பதுக்க முடியும்?
கண்டிப்பாக விலையை குறைத்துதானே விற்க வேண்டும்.
செயல் இழந்த மத்திய அரசு 
என்னதான் செய்கிறது அரசு? வியாபாரிகள் பதுக்குகிறார்கள் என்று சொல்லி விட்டால் சரியா? ஒரு ரெய்டு  போய் அதை வெளியே கொண்டு வர முடியாதா?ஏற்றுமதியை  நிறுத்த முடியாதா? காமெடி செய்கிறது மத்திய அரசு.

No comments: