About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/10/18

கிராமத்து குர்பானி :
ஒட்டகங்களை  வெட்டக் கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார் என்ற செய்தி எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டது.
நாங்கள் ( நான்+என் சகோதரர்கள் ) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.நான் P .S .G .என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரி.
கிராமத்தில் 'தவம்'  என்று கொண்டாடுவார்கள். பங்காளிகள் எனப்படும் அனைவரும் எங்கிருந்தாலும் வந்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள்.எனக்கு விவரம் தெரிந்து வந்த முதல் தவம்அது.
என் அண்ணா கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்.ஏதோ  பண்டிகை என்று நினைத்து தன நண்பர்களையும் அழைத்து வந்து விட்டார் வீட்டிற்கு.அடுத்த நாள் கிராமத்திற்கு சென்றோம்.என் பெரியப்பாதான் ஊர் தலைவர். சிற்றரசர் போல்.ஊருக்கு அவர்தான் ராஜா. ஊரே கையெடுத்து கும்பிடும்.  சினிமாவில் வருவது போல்தான்.
ஆனால் நான் ''பெரியப்பா' என்று அதட்டலாக( அப்படியே அழைத்து பழகிவிட்டது ) கூப்ப்பிட்டால் போதும். சிறியதாக ஒரு நடுக்கம் வந்து ''என்ன பொண்ணு'' என்பார்.
அவரை நன்றாக அலங்கரித்து,மாலை போட்டு ஒரு குதிரையில் ஏற்றி கோவிலுக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அவரை பார்க்க (அழகாக இருந்தார்) வேடிக்கையாக இருந்தது.
ஆனால் உண்மையான வேடிக்கை அப்புறம்தான் ஆரம்பித்தது.எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்கள் வந்தார்களோ ?ஆளுக்கொரு ஆடு, கோழி .ஒருவர் வெட்டி வெட்டி என் பெரியப்பாவிடம் கொடுக்க, அவர் அந்த ஆட்டை வாயில் வைத்து அதன் ரத்தத்தை உறிஞ்சி துப்பினார்.அத்தனை மக்களும் அதை கையிலேந்தி (அதற்கு அவ்வளவு தள்ளு முள்ளு ,அடிதடி,) குடிக்க,.....
அதை குடித்தால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம்.நோயுள்ளவர்களுக்கு நோய் பஞ்சாய் பறந்து விடுமாம்.ஊரே ரத்த மயமாக காட்சியளித்தது.ஒரூ  1000 ஆடு ,கோழிகள் இருக்கும்.
ஏற்கனவே பெரியப்பாவிற்கு கள்ளை ஊற்றி அரை மயக்கத்தில்தான் கொண்டுவந்தார்கள்.இல்லையென்றால் அந்த ரத்தத்தை குடிக்க முடியாதாம்.கள்  மயக்கம்+ரத்தமும் சேர்ந்து கொள்ள பெரியப்பா முழு மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தார்.
.......   ..... பார்த்து கொண்டிருந்த நான்,+ என் அண்ணா,+ அவரது நண்பர்களும்தான்   மயக்க நிலை. .....விதிர் விதிர்த்து போய்  விட்டோம். ...சத்தியமாக இப்படி  ஒரு நிகழ்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
'' டேய் மம்முட்டி ( என் அண்ணாவை அப்படித்தான் அழைப்பார்கள்...நாங்கள் மம்மட்டியான் ஊர் என்பதால்.) டேய் மம்முட்டி, இன்னொரு முறை பண்டிகை, பொங்கல்  என்று ஊருக்கு கூப்பிட்டால் மவனே '' என்று தலை தெறிக்க பறந்தோடியவர்கள்தான் ......அப்புறம் என் திருமணத்திற்குதான்,(அதுவும் சேலத்தில் நடந்ததால்)வந்தார்கள். இன்று அவர்கள் பெரிய மருத்துவர்கள்.
......     .....   ......  
இப்போது நிகழ்காலத்திற்கு  வருவோம். ஒட்டகம் வெட்டக் கூடாது என்பவர்கள், இது போல் ஆடுகளையும் வெட்ட கூடாது என்று போராடலாமே . நகரில் உள்ள இறைச்சி கடைகளின் முன் போய்  தர்ணா செய்யலாமே.
அன்புடன்,
கலா கார்த்திக் (கார்த்திக் அம்மா )


No comments: