About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/04/13

Election 2004 and I (karthik  amma )
 நான் (கார்த்திக் அம்மா ) வேலையில் சேர்ந்த போது  26 வயது.  (அதற்கு முன்பே 22 வயதில் கல்லூரியில் Asst Prof ஆக வேலை செய்து , கார்த்திக்கிற்காக அந்த வேலையை விட்டது ஒரு சிறுகதை )   அப்போது அந்த வயதில் அரசு வேலை அந்த வயதில் கிடைப்பது பெரிய விஷயம். M .G .R  புண்ணியம்.T .N .P .S .C  தேர்வு வைத்தார்.அதனால் நல்ல rank பெற்று லஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது.
அப்போது செய்முறை தேர்விற்கு என்னை ஒரு பள்ளிக்கு பணித்தனர்.அதே போல் +2 பொது தேர்விற்கும் என்னை மேட்டூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு நியமித்தனர்.எந்த வேலையையும் திறம்பட செய்வதுதான் என் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே.அந்த பள்ளிக்கு நான் என்பது போல் ஆகிவிட்டது.தேர்வு நடக்கும்போது  சுற்று வரும் அதிகாரிகள் என் தேர்வு மையத்திற்கு வருவதே இல்லை. எல்லாம் perfect ஆக இருக்கும் என்ற நம்பிக்கை.
இதில் என் சீனியர் களுக்கு காதில் புகை.
இந்த பள்ளி என்பதால் தான் நான் சிறப்பாக செய்வதாக அவர்கள் வாதம்.
சரி.சவால்.ஒரு மோசமான பள்ளி ,சேலம் மாவட்டத்தில் .அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பிளேடு ( அதாவது பிளேடால் கூடாத இடத்தில் வெட்டுவது ) போடுவதில்  வல்லவர்களாம்.
அந்த வருடம் எனக்கு அந்த பள்ளி. சவால்  சவால்தான்.
அந்த பள்ளிக்கு சென்றேன். என்னதான் வீரமாக சவாலை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் சிறிது உதறல்தான்.என்னவோ தெரியவில்லை.மாணவர்கள் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் பழகினர்.ஒரு பிரச்சினையும் இல்லை.
சென்றேன். .வென்றேன் .வந்தேன்.
vini ,vidi  visi
went .worked .won .
அட ,இது சின்ன பெண்ணாக தெரிந்தாலும் பெரிய ரௌடி  போல் ...என்பதாக பேராகி விட்டது.அதிலிருந்து எங்கு பிரச்சினையோ அங்கே எனக்கு பணி .
Election 1999.
எனக்கு ஒரு ரௌடி ஊரில் பணி .presiding officer .6 p .m . ஒரு கும்பல் வாக்கு சாவடி அருகே வர ஆரம்பித்தது..'' யாராவது ஏதாவது பிரச்சினை செய்தால் வாக்கு சாவடியை இழுத்து மூடி விடுவேன். தேர்தலே நடக்காது '' என்று ஒரு சிம்ம கர்ஜனை. எல்லோரும் ஓடி விட்டனர்.
2004. சென்னை ..அதிலும் வட சென்னையில் தேர்தல் பணி .
வாக்கு  பதிவிற்கு முதல் நாள் .VOTING  MACHINE  பற்றி நான் எதுவுமே கண்டு கொள்ளவில்லை.கார்த்தி, செந்தில், என்னுடன் பணியாற்றிய ஒருவரின் மகன் என மூவரும் எல்லாம் செட் செய்தாயிற்று .என் அருமை கண்மணி கார்த்தி ஒரு வார்த்தை ''அம்மா இது என்னுடைய academic project  என்று சொல்ல வேண்டுமே. இந்த VOTING  MACHINE என்னுடைய academic project என்று சொல்ல வேண்டுமே   ..(ref .karthik 's resume ).
அடுத்த நாள் ஓட்டு  பதிவு. கள்ள ஒட்டு போட  துடித்தது ஒரு கும்பல்." ஒரே ஒரு கள்ள ஓட்டு கூட போட அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டேன். முதலில் நட்பாக கேட்டார்கள். சிறிய கெஞ்சல் . அப்புறம் மிரட்டல்தான். எதற்கும் பயப்படவில்லை.
" உயிருடன் வெளியே போக மாட்டாய்" என்றார்கள்.
பக்கத்து சாவடிகளுக்கு பிரியாணி .எங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை. செந்தில் அனைவர்க்கும் சாப்பாடு வாங்கி வர ...என் செலவு.
D .S .P வந்தார். '' ''சார், வோட்டு பதிவு முடிந்து வெளியே செல்லும் பொது எனக்கு பாதுகாப்பு வேண்டும்". என்றேன் அவருக்கு ஆச்சரியம் இந்த சின்ன உருவம் .இவ்வளவு தைரியமா என்று. இந்த ஒரு வாக்கு சாவடியில்தான் ஒரு கள்ள வோட்டு கூட இல்லை என்று பாராட்டியவர் சொன்னது போலவே வந்தார். வாழ்க்கை வீரமாக ,சாதனைகளாகத்தான்  இருந்தது 2005 வரை . இப்போது புலி எலியாகி விட்டது. யானை பூனையாகி விட்டது.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா.

1 comment:

நாகா said...

Sorry Mom. Just noticed your blog and if I'm not wrong Karthi was my set (2002) BE. I don't know who is Karthi or you and no one can fill his shoes, but the world is full of Karthis like me. Karthi (God) bless you mam (mom) and let's live our life for others in the name of Karthi.

If you don't mind, I would like to meet you when I'm in India next month.

-Naga