கார்த்திக் கட்டிய வருமான வரி.
கார்த்திக்கின் விபத்து இழப்பீட்டு தொகையை தனி கணக்கில் வங்கியில் வைப்பு தொகையாக வைத்திருக்கிறேன்.
அந்த பணத்தை வைத்து கார்த்தி பெயரில் சேவை செய்ய வேண்டும் என்ற திட்டம்.
ஏனோ செயல் வடிவம் பெறாமல் தள்ளிக் கொண்டே போகிறது.
இந்த வருடம் அந்த தொகைக்கு நான் செலுத்திய வருமான வரி எவ்வளவு தெரியுமா ?????
ஹு ஹுங் .சொல்ல மாட்டேன்.
ஆடிட்டருக்கே மலைப்பு.
நான் சந்தோஷமாக வரி கட்டுகிறேன்.
இது என் கார்த்தி மகனின் பணம்.
இதற்கு வரி கட்டினால் கார்த்திக்கிற்கு எவ்வளவு சந்தோசம்.
ஒருவன் மறைந்த பிறகும் தன் தாய் நாட்டிற்கு தான் செய்ய வேண்டிய கடமையை செய்கிறான் என்பது எவ்வளவு பெருமையான விஷயம்.
கார்த்தியின் கண்களில் தெரியும் அந்த மின்னலை நான் உணர்கிறேன்.
அவன் ஒரு பெருமித பார்வை பார்ப்பான்
( எனக்கு ஆத்மாவில் நம்பிக்கை கிடையாது...ஆனால் இது போன்ற நேரங்களில் கார்த்தியின் ஆத்மா இருந்து அம்மாவின் அன்பையும் அவனை பெருமைப் படுத்தும் விதமாக நான் செய்யும் செயல்களையும் அறிந்து மகிழ வேண்டுமே என்று ஆதங்கமாக இருக்கிறது.)
கார்த்திம்மா
என் செல்லமே
சந்தோஷமா
திருப்தியா
நீ இருந்து செய்ய வேண்டிய வேலையை நான் செய்ய வேண்டி இருக்கிறதே என்ற
வேதனையுடன்
கண்ணீருடன்
அம்மா
கலாகார்த்திக்

2 comments:
one lac may be
உங்களின் சேவை எண்ணம் விரைவில் நிறைவேறட்டும் அம்மா...
Post a Comment