About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/03/14

மலை ஏற்றம் Karthik Trekking

கார்த்திக் ஒரு one  man  army என்று அவன் நண்பர்கள் சொல்வர்.எந்த சவாலான விஷயமாக இருந்தாலும் அதை  செய்து பார்த்தாக வேண்டும்.பாட்டு,நடனம்,, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா ,கிடார் ,கிரிக்கெட் என அனைத்திலும் போட்டியிடுவான் .
இன்னும் இது போன்ற எத்தனை  எத்தனை விளையாட்டுகள்.
தென்னை மரம் ஏறி காய் பறிப்பான்.
இன்று காலை கூட செந்தில் சொல்லிக் கொண்டிருந்தான்.
கார்த்தி 2002 லியே கூகிள் மேப் போல தமிழ் நாடு மேப் உருவாக்கிக் கொண்டிருந்தான்.
கார்த்தியின் சிந்தனை ஓட்டம் ஒரு தனி பரிமாணம்.அன்றே multi lingual translation
hand writing recognition போன்ற பல விஷயங்களை முயற்சி செய்து கொண்டிருந்தான்.இன்று இருந்திருந்தால் என்ன என்ன செய்திருப்பான் என்று ஊகிக்க கூட முடியவில்லை என்று சொல்லி செந்தில் வருத்தப் பட்டு கொண்டிருந்தான்.
உண்மையிலேயே கார்த்தியின் மறைவு நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
இத்தனைய சாகச விளையாட்டுகளில் எல்லாம் தப்பித்தவன் ஒரு வெள்ளி காலை 9 மணிக்கு பைக் விபத்தில் என்னை விட்டு பிரிந்த கொடுமையை என்ன சொல்வது.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா
kala கார்த்திக்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் நினைவினில் வாழ்கிறார் அம்மா...