About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/05/31

பள்ளி திறப்பு

திரு செங்கோட்டையன் பல நல்ல மாற்றங்களை கொண்டு வருகிறார்.
பாராட்டுக்கள்.
உறுதியாக பள்ளி நாளை முதல் செயல்பட துவங்கும் என்று சொல்லி விட்டார்.
ஆ 
இந்த வெய்யிலில் பள்ளியா என்ற கூக்குரல் 
ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டபோது இந்த கோடை வெய்யிலை தாங்க முடியாத காரணத்தால் 2 மாதம் விடுமுறை விட்டு அவர்கள் நாட்டிற்கு சென்று கோடை முடிந்ததும் திரும்பி வந்தனர்.
அவர்கள் செய்த பல விஷயங்களை அப்படியே காப்பி அடிப்பதில் வல்லவர்களான  நாம் இதையும் இன்னும் காப்பி அடித்துக் கொண்டே இருக்கிறோம்.
கோடை விடுமுறையில் மாணவர்கள் என்ன செய்கின்றனர்?
கிரிக்கெட் விளையாட போகிறேன் என்று அந்த கொளுத்தும் வெய்யிலில் அலைகின்றனர்.
கொஞ்ச நேரம் விளையாடி முடித்ததும் குழுவாக உட்கார்ந்து கதை பேசுகின்றனர்.
இங்குதான் விபரீதமே .
யாராவது ஒருவனிடம் இருக்கும் செல் போனில் இருக்கும் தவறான காட்சிகள் பல வேண்டாத விளைவுகளுக்கு வழி வகுக்கின்றன.
பெற்றோர்தான் எவ்வளவு நேரம் கண்காணிக்க முடியும்?
என்ன செய்யலாம்?
கோடை விடுமுறை இல்லாமல் அந்த நாட்களில் மாணவர்களுக்கு பல கைத்  தொழில் ஓவியம்,நடனம் போன்ற எத்தனையோ சொல்லிக் கொடுக்கலாம்.
அடுத்து வர போகும் மழையின் போது பள்ளி விடுமுறை விடலாம்.
கார்த்திக் அம்மா

தமிழ்நாடு ..சுடுகாடு

அட அவர் பேசிய மீதி எல்லாவற்றையும் விட்டு விடலாம்.
என்ன ஆக்ரோஷம்
என்ன ஒரு முக சுழிப்பு.
பெரிய ஆன்மிகவாதி.
மிக மிக நல்லவர்.????????????
அப்படிப் பட்டவர் வாயிலிருந்து இப்படி சாபம் வரலாமா ?????????
தண்ணீர் வரவில்லை.
குடிக்க தண்ணீர் இல்லை.
குழந்தை தாகத்தில் தவிக்கிறது.
உரியவர்களிடம் மனு கொடுக்கிறார்கள்.
அதிகாரிகள் உடனே வந்து பிரச்சினையை தீர்த்து விட்டால் மக்கள் ஏன் காலி குடங்களுடன் போராட போகிறார்கள்.
இதையெல்லாம் எந்த தீய சக்திகள் தூண்டி விடுகின்றன?
அப்படியே அவர்கள் தூண்டி விட்டுத்தான் போராடுகிறார்கள் என்றே  வைத்துக் கொள்வோம்.
அரசு பிரச்சினையை தீர்க்கட்டுமே.
மக்களுக்கு நல்லது செய்யட்டுமே.
இவருக்கு எல்லாம் நல்லதே நடக்கும்
மற்றவர்கள் உயிரை பறி கொடுக்க வேண்டும்.
அப்படி தமிழ்நாடு சுடு காடானால் இவருக்கு சந்தோஷமா ???????????
என்ன சொல்லியிருக்கலாம்.
ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் வாருங்கள்.
உரியவர்களிடம் பேசி உங்கள் பிரச்சினைகளை நான் தீர்த்து வைக்கிறேன்
என்று சொல்லி பிரச்சினைகளை தீர்த்து விட்டால் மக்கள் ஏன் போராடப் போகிறார்கள்.
சரி.
மக்கள்தான் முதலில் போலீசை அடித்தார்கள்.
சரி
அதற்காக மக்களை  சுட வேண்டுமா
அவருக்குத்தான் யார் தீவிரவாதிகள் யார் என்று தெரியுமே.போலீசிடம் அந்த லிஸ்ட் கொடுத்து அவர்களை கைது செய்து தண்டனை கொடுக்கட்டும்.
அதை விட்டு
சுடுகாடு ஆகி விடும் என்றால் எங்கள் உயிரையம் பறிக்க விடும் மிரட்டலா
கார்த்திக் அம்மா

2018/05/29

பஸ் எரிப்பு

பஸ் எரிப்பு தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைப்பு சம்பவம்: புதுவை நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 43 பயணிகள் பயணம் செய்தனர்.

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவை மாநில எல்லை அருகே காலாப்பட்டில் முகத்தை மறைத்து துணியை கட்டிக்கொண்டு காரில் வந்த ஒரு கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து கற்கள், தடிகளை வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அந்த கும்பல் பஸ்சின் முன்பக்க கதவை அடைத்து படிக்கட்டில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பஸ்சில் பிடித்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவத்தொடங்கியது. பஸ்சுக்குள் சிக்கிய பயணிகள், முன்பக்கம் உடைந்திருந்த கண்ணாடியின் இடைவெளி வழியாகவும், டிரைவர் இருக்கை அருகே உள்ள வழியாகவும் அவசர அவசரமாக இறங்கினார்கள். சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து தப்பினார்கள். சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே தமிழக அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதை பொதுமக்கள் சிலர் தங்களின் செல்போன் மூலமாக படம் பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பஸ்சுக்கு தீவைத்தவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் தமிழக அரசு பஸ்சுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக புதுவை 2-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் குயிலாப்பாளையம் லட்சுமிபுரம் அர்ஜூன் மகன் அருண், பெரிய காலாப்பட்டு சாமிநாதன் மகன் அகஸ்டின்ராஜ் (வயது 20), பொம்மையார்பாளையம் வேணு மகன் தருனேஷ், தந்திராயன்குப்பம் சந்திரசேகரன் மகன் சந்திரபோஸ் (19), புதுவை வெள்ளாளர் வீதி தாமோதரன் மகன் முத்துக்குமரன் (21) ஆகிய 5 பேர் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களை போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இளைஞர்கள் .
பஸ் எரித்தவர்கள் .
உண்மையில் இவர்கள் யார்? 
எந்த கட்சியை சேர்ந்தவர்கள்?
அது பா.ம.க 
அல்லது 
தி.மு.க 
அல்லது தூத்துக்குடி போராட்டக் களத்தினரா 
அல்லது வேறு யாராவது வேண்டுமென்றே இவர்களை கூலிக்கு அமர்த்தி நாடகத்தை அரங்கேற்றினார்களா ??????????
உண்மை வேண்டும் 

எதுவானாலும் போலீஸ் உண்மையை கண்டு பிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இவர்களுக்கு தரப்படும் தண்டனை மற்ற வெறியர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

2018/05/27

சர்க்கரை வியாதி

ஒரு சர்க்கரை வியாதி என்றால் டயட் சொல்லும்போது இவ்வளவு காய் ,கீரை ,எடுக்கக் கூடாத காய்கள் என்றெல்லாம் லிஸ்ட் தருவார்கள்.
நேற்றிலிருந்து
மறைந்த முதல்வரின் டயட் லிஸ்ட் ஒளிபரப்பு ஆகிக் கொண்டிருக்கிறது.
ஒரு 100 ஆயிரம் முறை காது குத்துகிறார்கள்.
காலை 5 மணிக்கே சாப்பிட வேண்டுமாம்.!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!!!!!!!
ஒன்னரை இட்லி
அதற்கு சாம்பாரா  சட்னியா
என்ன காய் பொரியல் இருக்க வேண்டும்
ஒரு கீரையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அது பற்றி எதுவும் இல்லை.
கதை விடுவதற்கும் ஒரு அளவு வேண்டும்.
கொடுமை.
கலா கார்த்திக்

2018/05/13

என் அன்னை



என் தந்தையானவன்.
என் மகனானவன்
என் உயிரானவன்.
இந்த தாய்க்கு தாயானவன்.
என் அன்னையும் இவனே.
என் அம்மாவும் இவனே.
என்ன செய்து என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு நான் பட்ட அன்பு கடனை தீர்ப்பேன்?
என் உயிரை உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி
என்னையே தீபமாக்குகிறேன்
இந்த தெய்வத் தாய்க்கு
என் அன்னையான கார்த்தி தெய்வமே உன்னை வணங்குகிறேன்
*****

இவர் என்னை பெற்ற அன்னை .இவரும் ஒரு சாதனையாளர்
பன்முக திறமை கொண்டவர் .ஒரு சிறந்த தலைமை ஆசிரியர்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2018/05/12

ஆசிரியை

*group discussion 
****ஸில்க் ஸ்மிதா 
&&&    interview 
சென்ற பதிவில் சொன்னேன்.
 செய்முறை வகுப்புகளில் பல கலாட்டாக்கள் நடக்கும் என்று.
படிப்பவர்களுக்கு போரடிக்குமோ என்று தெரியவில்லை.இருந்தாலும் எழுதுகிறேன்.
குரூப் டிஸ்கஷன் :
+2 மாணவர்களுக்கு ஆங்கில செய்முறையில் இதுவும் ஒரு பகுதி.
ஒரு வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த நாள்
பாகிஸ்தான் vs இந்தியா
என்ற தலைப்பில் விவாதம் என்று சொல்லி மாணவர்கள் தயாராக வர வேண்டும் என்று சொல்லியாயிற்று
வகுப்பை இரு பிரிவாக பிரித்து ஒரு பகுதி இந்தியா இன்னொரு பக்கம் பாகிஸ்தான் .
விவாதம் ஆரம்பித்தது.
முதலில் மாணவர்கள் என்னவோ பொறுமையாகத்தான் ஆரம்பித்தார்கள்.
கஷ்டப் பட்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள் .ஆனால் நானே எதிர்பாராத அளவு பாயிண்ட்ஸ் .சிறிது நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
நேரம் செல்ல செல்ல விவாதம் உக்கிரமாகி விட்டது.
கோபம்
ரௌத்திரம் .
தமிழுக்கு மாறி விட்டார்கள்.
இந்த பெஞ்சில் இருந்து அடுத்த பெஞ்சுக்கு குதிக்கும் அளவிற்கு கிட்ட தட்ட ஒரு சட்ட சபை ரேஞ்சுக்கு போய்விட்டது.
நான் சந்தோஷமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.
கூச்சலையும் குழப்பத்தையும் பார்த்த தலைமை ஆசிரியர் ஏதோ விபரீதம் என நினைத்து மூச்சு வாங்க ஓடி வந்தார் .
''என்ன பிரச்சினை ''என்கிறார்.
சார் ''பிராக்டிகல் ''என்றேன்.
''நல்ல பிராக்டிகல்'' என்று பெரு மூச்சு விட்டார்.
.......
ஸில்க் :
எனக்கு சினிமா அறிவு என்பது மிக மிக குறைவு .அதுவும் 1990 களில் சுத்த ஜிரோ .0 மதிப்பெண்.எதேச்சையாக டி .வியில் கிளியோபாட்ரா என்ற வார்த்தை காதில் விழுந்தவுடன் அந்த காட்சியை பார்த்து விட்டு அடுத்த நாள் வகுப்பில் ஏண்டா மகன்களா (மாணவர்களை மகன்களா என்றும் என் மகன்களான கார்த்தி,செந்திலை குட்டிஸ் என்றும்தான் சொல்வேன்)
கிளியோபாட்ராவுக்கு வந்த கொடுமை
 ஸில்க் ஸ்மித்தாவெல்லாம் கிளியோபாட்ராவாக நடிக்க வேண்டுமா என்று கேட்டு விட்டேன்.
ஐயோ என்று சொல்லிக் கொண்டு மாணவர்கள் அனைவரும் டெஸ்க்கில் தலை கவிழ்ந்து கொண்டனர்.
அழுகிறார்களாம் .
ஒரு மாணவன் சொன்னான்
டீச்சர் தயவு செய்து இனிமேல் சினிமா பற்றி பேசாதீர்கள் .எங்கள் ஸில்க் கை  இவ்வளவு கேவல படுத்தி  விட்டீர்கள் .என்று சொல்லி விட்டு மீண்டும் தலை கவிழ்ந்து கொண்டனர்.
அழுகிறார்களாம்.
பதிவு மிக நீள்கிறது .
நாளை சிந்திப்போம்.
கார்த்திக் அம்மா

 

2018/05/09

அண்ணா பல்கலை

அண்ணா பல்கலை online application
நீதி மன்றம் கேட்கிறது.
''தமிழ் வழியில் படித்த மாணவர்கள் எப்படி ஆங்கிலத்தில் இருக்கும் படிவத்தை நிரப்புவார்கள் ''
கொடுமை.
+2 வரை மாணவர்களுக்கு ஆங்கில பாடம் இருக்கிறது.
+2 வரை படித்த மாணவனுக்கு ஒரு படிவம் fill up செய்ய தெரியவில்லை என்பது ஒரு பெரிய தவறல்லவா ?
+2 ஆங்கில  பாடத்திற்கு செய்முறை ( practical ) உண்டு.
அதில் (நான் ஆங்கில ஆசிரியை 2006 ல் விருப்ப ஒய்வு பெறும் வரை.அரசு பள்ளி ஆசிரியை )....
அந்த செய்முறையில்
money order form,
railway reservation form
pay in slip
cheque
resume
application form filling
2 minutes speech
dictionary
encyclopaedia
group discussion
interview
என இத்தனை உண்டு.(  (  ஆரம்பித்து விட்டாளா சுய புராணம் என திட்ட வேண்டாம்.) )
உண்மையை சொல்கிறேன்.
என் மாணவர்களுக்கு 3 விதமான application form xerox எடுத்து கொடுத்து அவர்களே படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
3  resume (ரெசுமே )அவர்களுடையதே எழுத வேண்டும்.
tape recorder எடுத்து சென்று மாணவர்கள் பேசுவதை பதிவு செய்வேன்
interview  பற்றியும் குரூப் discussion பற்றியும் அதில் வகுப்புகளில் நடந்த ரகலைகளையும் எழுதினால் 20 பக்கம் வேண்டும்.
very lively classes .
useful classes.
என் மாணவர்கள் அவர்களேதான் படிவம் பூர்த்தி செய்தனர்.
இப்போது சிலபஸ் தெரியவில்லை.இப்போது செய்முறை பற்றி தெரியவில்லை.
ஆனாலும்
+2 வரை படித்த மாணவன் ஆங்கிலம் 2 தாள்கள் எழுதும் மாணவன் ஒரு படிவம் பூர்த்தி செய்ய தெரியாமல் இருக்கிறான் என்பது மிகவும் வேதனையான விஷயம்.
kalavathy teacher (English teacher )

2018/05/06

நீட்டில் தோல்வியா

இப்போது தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவும் என் ஆசிர்வாதம்.
எத்தனையோ இன்னல்களுக்கு நடுவே வேறு மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களும்,உள்ளூரிலேயே எழுதுபவர்களும் சரி.
எல்லோருக்கும் இடம் கிடைத்து விடாது.
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடாதீர்கள்.
நானும் ஒரு டாக்டராக வேண்டும் என்ற வெறியில் தான் இருந்தேன்.
அப்போது entrance கிடையாது.
interview என்று ஒரு கண்துடைப்புதான்.
அதற்கு 25 மதிப்பெண்கள் .
நான் மிக நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன்.
என்னுடன் படித்த என் தோழி என்னை விட குறைவான மார்க்.
ஆனால் நேர்முகத்தில் அவளுக்கு 24.
எனக்கு 15.
அவளுக்கு ஸீட் கிடைத்தது.
நான் அழுதேன் .அழுதேன்.
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி வந்தது.
ஆனால் தைரியம் வரவில்லை.
என் 50 வது வயதில் கூட மருத்துவ தேர்விற்கு சென்று விடை தெரியாமல் அழுவது போல் கனவு வரும்.
சரி.படித்து ஒரு ஆசிரியையாக வேலை பார்த்து அதில் மிக நல்ல பேர் பெற்றேன் .பல மாணவர்களை வாழ்வில் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தேன் .
அதையேதான் இப்போதைய மாணவர்களுக்கு சொல்கிறேன்.
தோற்றால் மனம் தளர வேண்டாம்.
தற்கொலை முயற்சியெல்லாம் வேண்டாம்.
சாதிக்க எத்தனையோ துறைகள் உள்ளன.
சாதிக்கலாம்.
அடுத்த வருடம் கூட எழுதலாம்.
தைரியத்தோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள்.
கார்த்திக் அம்மா

2018/05/04

கண்ணே கண்மணியே

கண்ணே கண்மணியே

அம்மா என்று அழைப்பாயோ
அமுத கீதம் கேட்பேனோ ?
தாயாய் எனைத் தாலாட்டிய என் தெய்வமே
தவிக்கவிட்டு போனதெங்கே
இடம் தெரிந்தால் வருவேன் அங்கே
மார்பினில் தலை சாய்த்து, தலைதனை வருடும் மகனே
பாரினில் யாரறிவார் பாங்கதனை ?
.... ....
ஆறடியென அழகாய் வளர்ந்தவனே
அதிரடியால், அழுகையாய் தளர்ந்தேனே
.... ...
ஒரு நாள் உனை எரித்த நெருப்பு
நாளெல்லாம் எனை எரித்தும்
சாம்பலாகாமல், சூம்பிப் போனேனே
கட்டையாகி, கரியாகி, கசியும் புகையாகி
புதைந்து போகின்றேன் என்னுள் நான்

உன்னுள் நான் என ஓடி வரும் நாள் எது ?
கண்ணே கண்மணியே பதில் ஏது?

அம்மா

நீட் தேர்வு

அடடா
ஏனுங்க
எதுக்கு ராஜஸ்தான் மாநிலம்
அது நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு மிகவும் மிகவும் பக்கம் ஆயிற்றே .
மொழி பிரச்சினையும் இல்லை.
போகவும் வரவும் எந்த செலவும் இல்லை.
அங்கு தங்கவும் ஒரு ராஜ மாளிகை இருக்கும்.ஒரு பென்ஸ் காரில் தேர்வு மையத்துக்கு அழைத்து செல்லப் படுவார்கள்.
இவ்வளவு ஈஸியா தமிழக மாணவர்களை விடலாமா???
அடுத்த வருடம்
ஒரு பாகிஸ்தானிலோ
அல்லது
ஆப்கானிஸ்தானிலோ
சென்டர் போட்டால் இன்னும் நன்றாக இருக்குமே .
நீட் தேர்வு நடத்துபவர்கள் என்னுடைய இந்த ஆலோசனையை
சிரமேற்கொண்டு ஆவண செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
வெறித்தனமான கோபத்துடன்
கார்த்திக் அம்மா