About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/05/06

நீட்டில் தோல்வியா

இப்போது தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அனைத்து மாணவர்களுக்காகவும் என் ஆசிர்வாதம்.
எத்தனையோ இன்னல்களுக்கு நடுவே வேறு மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களும்,உள்ளூரிலேயே எழுதுபவர்களும் சரி.
எல்லோருக்கும் இடம் கிடைத்து விடாது.
மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் சோர்ந்து விடாதீர்கள்.
நானும் ஒரு டாக்டராக வேண்டும் என்ற வெறியில் தான் இருந்தேன்.
அப்போது entrance கிடையாது.
interview என்று ஒரு கண்துடைப்புதான்.
அதற்கு 25 மதிப்பெண்கள் .
நான் மிக நல்ல மதிப்பெண் பெற்றிருந்தேன்.
என்னுடன் படித்த என் தோழி என்னை விட குறைவான மார்க்.
ஆனால் நேர்முகத்தில் அவளுக்கு 24.
எனக்கு 15.
அவளுக்கு ஸீட் கிடைத்தது.
நான் அழுதேன் .அழுதேன்.
தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற வெறி வந்தது.
ஆனால் தைரியம் வரவில்லை.
என் 50 வது வயதில் கூட மருத்துவ தேர்விற்கு சென்று விடை தெரியாமல் அழுவது போல் கனவு வரும்.
சரி.படித்து ஒரு ஆசிரியையாக வேலை பார்த்து அதில் மிக நல்ல பேர் பெற்றேன் .பல மாணவர்களை வாழ்வில் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தேன் .
அதையேதான் இப்போதைய மாணவர்களுக்கு சொல்கிறேன்.
தோற்றால் மனம் தளர வேண்டாம்.
தற்கொலை முயற்சியெல்லாம் வேண்டாம்.
சாதிக்க எத்தனையோ துறைகள் உள்ளன.
சாதிக்கலாம்.
அடுத்த வருடம் கூட எழுதலாம்.
தைரியத்தோடு எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள்.
கார்த்திக் அம்மா

No comments: