About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2018/05/29

பஸ் எரிப்பு

பஸ் எரிப்பு தமிழக அரசு பஸ்சுக்கு தீ வைப்பு சம்பவம்: புதுவை நீதிமன்றத்தில் 5 பேர் சரண்

புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தமிழக அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 43 பயணிகள் பயணம் செய்தனர்.

புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுவை மாநில எல்லை அருகே காலாப்பட்டில் முகத்தை மறைத்து துணியை கட்டிக்கொண்டு காரில் வந்த ஒரு கும்பல் அந்த பஸ்சை வழிமறித்து கற்கள், தடிகளை வீசி தாக்கினார்கள். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. பின்னர் அந்த கும்பல் பஸ்சின் முன்பக்க கதவை அடைத்து படிக்கட்டில் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பஸ்சில் பிடித்த தீ மளமளவென பஸ் முழுவதும் பரவத்தொடங்கியது. பஸ்சுக்குள் சிக்கிய பயணிகள், முன்பக்கம் உடைந்திருந்த கண்ணாடியின் இடைவெளி வழியாகவும், டிரைவர் இருக்கை அருகே உள்ள வழியாகவும் அவசர அவசரமாக இறங்கினார்கள். சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து தப்பினார்கள். சிறிது நேரத்தில் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே தமிழக அரசு பஸ்சுக்கு தீவைக்கப்பட்டதை பொதுமக்கள் சிலர் தங்களின் செல்போன் மூலமாக படம் பிடித்தனர். அந்த வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. அந்த வீடியோவில் பஸ்சுக்கு தீவைத்தவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து பஸ்சுக்கு தீவைத்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் தமிழக அரசு பஸ்சுக்கு தீவைத்த சம்பவம் தொடர்பாக புதுவை 2-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் குயிலாப்பாளையம் லட்சுமிபுரம் அர்ஜூன் மகன் அருண், பெரிய காலாப்பட்டு சாமிநாதன் மகன் அகஸ்டின்ராஜ் (வயது 20), பொம்மையார்பாளையம் வேணு மகன் தருனேஷ், தந்திராயன்குப்பம் சந்திரசேகரன் மகன் சந்திரபோஸ் (19), புதுவை வெள்ளாளர் வீதி தாமோதரன் மகன் முத்துக்குமரன் (21) ஆகிய 5 பேர் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களை போலீசார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இளைஞர்கள் .
பஸ் எரித்தவர்கள் .
உண்மையில் இவர்கள் யார்? 
எந்த கட்சியை சேர்ந்தவர்கள்?
அது பா.ம.க 
அல்லது 
தி.மு.க 
அல்லது தூத்துக்குடி போராட்டக் களத்தினரா 
அல்லது வேறு யாராவது வேண்டுமென்றே இவர்களை கூலிக்கு அமர்த்தி நாடகத்தை அரங்கேற்றினார்களா ??????????
உண்மை வேண்டும் 

எதுவானாலும் போலீஸ் உண்மையை கண்டு பிடித்து மக்களுக்கு சொல்ல வேண்டும்.
இவர்களுக்கு தரப்படும் தண்டனை மற்ற வெறியர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

No comments: