About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/12/13

படித்ததில் பாதித்தது:
இந்த வார விகடன் இரு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தியது.முதலில் ஒரு சிறுகதை. ப.ரா எழுதியது.ஒருவர் சாலையில் சந்திக்கும் ஒருவரிடம் தனக்கு 26 வயதில் ஒரு மகன் உள்ளதாகவும்,நல்ல கம்பனியில் வேலை பார்த்து 40000 சம்பளம் வாங்குவதாகவும் அவனுக்கு ஒரு நல்ல பெண்ணாக இருந்தால கூறும்படியும் கேட்கிறார்.நண்பரும் இரண்டு பெண்களின் ஜாதகத்தை அனுப்புகிறார்.மீண்டும் அவரை வழியில் சந்தித்து உங்கள் மகனின் ஜாதகத்தை கொடுங்கள் என்று கேட்கும்போது அவர் சரியான பதில் தராமல் செல்லவே ஒரு நாள் அவர் வீட்டிற்கே சென்று கதவை தட்டுகிறார்.கதவை திறக்கும் பெண் அழுது கொண்டே சொல்லும் விவரம்: "என் அண்ணாவிற்கு ஒரு விபத்து .அவன் இல்லையென்றாகி ஒரு வருடம் ஆகிறது,ஆனால் அப்பா பார்ப்பவர் அனைவரிடமும் இப்படித்தான் தன் மகனுக்கு பெண் கேட்டு பிரச்சினை செய்கிறார்.:".......எனக்கும் மனதில் அதே ஏக்கம்தான்.எனக்கும் அது போலத்தான் தோன்றும்.மிகவும் பிரயாசைப் பட்டு மனதை ஒரு நிலைப் படுத்துவேன்........
இரண்டாவது பாதிப்பு ஜக்கி வாசுதேவ்.....கொள்ளி போட பிள்ளையில்லை.எத்தனை கோவில்கள் ஏறி இறங்கிவிட்டேன்.அனைத்து பரிகாரங்களையும் செய்துவிட்டேன்.கடவுளுக்கு ஏன் என் மேல் கருணை இல்லை? என்ற ஒரு வாசகரின் கேள்விக்கு அவர் தந்த பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அந்த பதில்: உங்களுக்கு குழந்தை பிறப்பதற்கும் கடவுளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.குழந்தை பிறப்பு என்பது அருளும் அல்ல.ஒரு உடல் ரீதியான நிகழ்வு அது.: அவருடைய விளக்கம் தொடர்கிறது.சிந்திக்க வைக்கிறார்.



r


12/08/2006


3 comments:

Anonymous said...

ஜக்கிதேவின் அந்தக் கட்டுரையை நானும் படித்தேன். மிகவும் பிடித்தது. quite down to earth..

Jeevan said...

ஜக்கி வாசுதேவ் said right!

Jeevan said...

Ma u look so sweet in your childhood:) I have already added ur blog in mine, in the name of Ponniyinselvan, check it correctly ma:)

I can't seent mail to u, what is ur Email address?