About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/06/26

இந்த  சிறுமியின் இழப்பு  ஒரு சோகம்தான்.
ஆஆனால்,  அதை விட பெரிய சோகம்,  சேலம் மாவட்டடத்தில்  இருந்த யானைக்  கூட்டத்தை  மக்கள்  துரத்திய  துரத்தில், அவைகள் எங்கு போவது எப்படி  போவது என்ற தடுமாற்றத்தில்  ,ஒரு யானை கூட்டத்தை  விட்டு  பிரிந்து விட்டது.
அதை விட பெரிய சோகம் ஒரு குட்டி யானை உயிர் இழந்தது.
நான் bus ல் வரும் பொது 4 ம தேதி  அந்த  யானைக் கூட்டம் தருமபுரி அருகே இருந்தன. ஒரே கூட்டம். அட, அதை  விட கொடுமை  [  இந்த செல் போனில் கேமரா  வந்ததும் போதும் ] ஆளுக்கு ஆள் போட்டோ எடுத்துக்  கொண்டிருந்ததுதான். பாவம்  அந்த  யானைகள்  மிரண்டு  போயிருந்தன.
என் வருத்தம் இதுதான். ஏன்  யாருக்குமே  அந்த யானைகள்  பசியோடிருக்கும்  என்றோ  அவைகளுக்கு  உணவு  கொடுக்க  வேண்டுமென்றோ தோன்றவேயில்லை. அந்த போட்டோவை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு பந்தாவுக்கு  அலையும்  இவர்கள்  அந்த  யானைகளின்  மன நிலையை ஒரு நிமிடம் கூட சிந்தித்து  பார்க்காததேன் ?
பயத்திலும் பசியிலும் அந்த  யானைகளின் தவிப்பை  T V யில் பார்த்த பொது  மனம் மிக வேதனைப் பட்டது.  அதை விட அந்த யானைக் குட்டி இறந்து விட்டது என்ற செய்தி துக்கத்தை அதிக படுத்தியது.
இதற்காகத்தான், இந்து மதத்தில் ஒவ்வொரு  கடவுளுக்கும்  ஒவ்வொரு  விலங்கை  specify  செய்தனர். முருகனுக்கு மயில், யமனுக்கு  எருமை, ராமருக்கு அணில் ,சிவனுக்கு  காளை , விநாயகர்  யானை  என்று  வைத்து தொடர்பு படுத்தி  ,அவைகளுக்கு  மனிதர்கள்  தொந்திரவு  கொடுக்காமல்  இருக்க  வழி செய்தனர்  .
  
    ஆனால்  இப்போதுதான்  மனிதர்கள்  தலை கீழாக  மாறிக் கொண்டிருக்கிறார்களே.  கலிகாலம்.   அவ்வளவுதான்  சொல்லலாம்.
கார்த்திக்+அம்மா        

 
 Who S Responsible Mahis Death

குர்கான்: கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் 70 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுமி மஹி வியாழக்கிழமை அதிகாலையிலேயே இறந்துவிட்டது தற்போது தெரிய வந்துள்ளது.
ஹரியானா மாநிலம் குர்கான் அருகே உள்ள மானேசர் பகுதியில் இருக்கும் கோ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மஹி கடந்த புதன்கிழமை தனது 4வது பிறந்தநாளைக் கொண்டாடினாள். அன்று இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவில் ஏறி விளையாடியபோது எதிராபாராவிதமாக 70 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டாள். குறுகிய அந்த குழிக்குள் விழுந்த சிறுமி சுமார் 15 நிமிடமாக அலறியுள்ளாள்.
இது செய்தி.
இரவு 11  மணிக்கு  ஒரு  குழந்தை வெளியில்  விளையாடுமா ? அந்த நேரத்தில் அந்த தாயும்  தந்தையும்  வேலைக்கு  சென்றிருக்க  வாய்ப்பில்லை. அந்த காலத்தில் 6 மணிக்கு மேல் குழந்தைகளை  வெளியேவே அனுப்ப மாட்டார்கள்.
இப்போது   கால நேரம் இல்லைஎன்றாகி  விட்டது. அந்த சிறுமி  விழுந்தது பெற்றோருக்கு தெர்யா வந்து அதன் பின் அவர்கள்  தீ அணைப்புக்கு சொன்னார்களாம்  அவர்கள் ஒரு மணி நேரம் கழித்துதான்  வந்தார்களாம். நள்ளிரவில் அவர்களும் அங்கு வந்து சேர வேண்டுமல்லவா .
இவர்கள் பக்கம் தப்பிருப்பதை ஒத்துக் கொள்ளவே  மாட்டார்கள். எதற்கெடு , அரசாங்கம், அரசாங்கம் என்று கூப்பாடு.
இதில் T .V channels  தன பங்கிற்கு  ஓலம் இடும்.
மக்கள்  திருந்தவே  மாட்டார்கள்.
168 Gas சிலிண்டெர்கள் ஒரு வீட்டிற்கு ஒரு  வருடத்திற்கு  கொடுக்கப் பட்டிருக்கிறது. ஐய்யா  நான்  ஒரு [ ஆம் ஆத்மி ] சாதாரண குடிமகன் நானெல்லாம் 21 நாட்கள்  கழித்துதான் பதிவே செய்ய முடியும் அதற்கப்புறம்  காஆஆத்திருக்க  வேண்டும். வந்து விட்டால்  வைரப் புதையல்  கிடைத்தது போல் சந்தோஷப் பட்டு கொள்ள  வேண்டும்.இந்தியா  என்ற  ஒரு நாடு ஒரு சில  100  பேர்களுக்கு என்று மட்டுமே ஆகி விட்டது. நம்மையெல்லாம்  ஒட்டு மொத்தமாக கொன்று விட்டு  அந்த முக்கியஸ்தர்கள்  மட்டுமே  நாட்டை  பங்கு போட்டு கொள்ளும் காலம் சீக்கிரம்  வந்து விடும் என்று தோன்றுகிறது.
கார்த்திக்+அம்மா 

2012/06/19

இன்று இரண்டு பதிவுகள்.
1.தாய்மை :
இந்த செய்திகள்  எனக்கு மிகவும்  மகிழ்ச்சி  அளித்தது.
தேவயாணி  சொல்லியது.  எனக்கு  என் குழந்தைகள்தான்   முக்கியம். நடிப்பு  அதற்கப்புறம்தான்.
the great ஐஸ்வர்யா ,
'' நான் சினிமாவை  மறந்து விட்டேன். என் தாய்மை எனக்கு  மிகவும் சந்தோஷத்தை  கொடுக்கிறது ''
அதே போல் குஷ்பூ , இவர்களை மிகவும்  பாராட்டுகிறேன்.மிக அருமையான முடிவு.
தாய்மையை  போல் இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அதுவும்  அந்த குழந்தை பருவம்.
நானும் கார்த்தி  பிறந்தபோது  என் Assistant  Professor  [இங்கிலீஷ் ]  வேலையை  விட்டவள்.  இன்று அந்த வேலையிலேயே   இருந்திருந்தால்  2020 யில் [  university  சர்வீஸ்  62 வயது ]  நான் ஒய்வு  பெறும்போது என்ன சம்பளம்  வாங்கியிருப்பேன்.
ஆனால் இன்று வரை ஒரு நிமிடம் கூட  நான்  அதைப் பற்றி  வருத்தப் பட்டதில்லை.
ஏனென்றால்  கார்த்தியும்  நானும்  அப்படி ஒரு சொர்க்கத்தை  அனுபவித்தோம்.
கார்த்தியின்  குழந்தை பருவம்  ,எவ்வளவு சந்தோசம்...எத்தனை கோடி வேண்டுமானாலும்  கொடுக்கலாம்.
இன்றும்  அந்த நினைவுகளில்தான்  நான் சுவாசித்துக்  கொண்டிருக்கிறேன்.

2 ம்   பதிவு  A .P .J  அப்துல் கலாம்  பற்றி.

என்  மானசிக  காதலர்  அவர். இந்திரா காந்திக்கு  SCIENTIFIC  ADVISOR  ஆக இருந்த போதிலிருந்து   [1982  ] அவர் மேல்  பைத்தியம். என் கணவரிடம்  சொல்வேன் '' உங்களுக்கு முன் அவரை பார்த்திருந்தால்  அவரைத்தான்  கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று. மனிதன் ஒரு முறைப்பு பார்வை பார்ப்பார். என் மாணவர்கள்  என் பிறந்த நாளன்று  அவருடைய photo வை கொடுத்து  ''miss your  lovers photo '' என்று சொல்லி  கொடுப்பார்கள்.  வேறு எந்த  பொருளாக  இருந்தாலும்  birthday gift  ஆக  நான்  வாங்க மாட்டேன் ...இதை  கண்டிப்பாக  மறுக்க  மாட்டேன்  என்றும் என்  மாணவர்களுக்கு  தெரியும்  .அவ்வளவு  பைத்தியம் .
In the English paper  +2  ,for practical  [in the  years 1965 to 1999 ]   students  have to fill  up  Railway  reservation  form .And it  will be like this :
1.A .P .J .Abdhul Kalam ..Scientist  age 56
2.S .Karthikeyan ..research assistant .age 16
3.K .S .Senthilkumar ..research  assistant .age 14

மாணவர்களுக்கு தெரியும்  .நம்  ஆங்கில  ஆசிரியை  ஒரு  வித்தியாசமான  character  என்று.
கார்த்திக்கிற்கு  அவர் 2002 ல் ஆசிரியராக  பாடம்  நடத்திய  போது  இவ்வளவுதான்  சந்தோசம்  என்றே சொல்ல  முடியாது. மதிய  உணவிற்கு  late  ஆக  வந்தால்  ,'' ஏன் கண்ணம்மா  late '' என்று கேட்டால்  ''அவர்தான்மா  class  எடுத்துக்  கொண்டே  இருந்தார் ''  என்று பதில்   சொல்வான்.  அவர்  என்றால்  அது  கலாம்தான்.
அவரிடம்  ஒரு peon  வேலையாவது  கேட்டு பெற்று  அவரிடம்தான்  வேலை  செய்ய வேண்டும்   என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
பேரதிர்ச்சியாக  அவர்  ஜனாதிபதியாகி  விட்டார்.  எல்லோரும் சந்தோஷப் பட்ட போது   நான்,  கார்த்தி,  செந்தில்  மூன்று  பெரும்  பெரிய  சோகத்தில்  ஆழ்ந்தோம். செந்தில் ''அவர்தான்  என் project  guide  '' என்ற  கனவில் இருந்தான் .எங்கள் Godfather  எங்களை விட்டு  பிரிந்த  சோகம்  எங்களுக்கு.
....  ... இந்த  பதிவை  எழுத  வேண்டும்  என்று  நிறைய நாட்கள்  நினைத்ததுண்டு.  இப்போது அவர்  போட்டியில்  இருந்து  விலகிய பின் எழுதினால்  தவறில்லை.  இல்லையென்றால்  அவருடைய  பதவியின்  மூலம்  ஏதாவது  ஆதாயம்  தேடத்தான்  இந்த  பதிவு  என்று  யாரேனும்  நினைக்க  கூடும்.   அவர்  போட்டியில்  இருந்து  விலகியதுதான்  எனக்கு பிடித்தது. இந்த  அரசியல் வாதிகள்  சகவாசமே  வேண்டாம்.
கார்த்தி  அவருடைய  மாணவனாக  இருந்த போது  அவரைப்  போலவே  தலை  சீவ மாட்டான்.  socks  போடாமல்  shoe  போடுவான்  .dress iron  செய்து போட மாட்டான். அப்படியே  அவர் போல்  .
அவனை விபத்தில் இழந்த போது  , அவரிடம்  சென்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது.  2002  APRIL மாதத்தில்  அவரை சந்திக்க வேண்டுமென்று  அவரிடம்  கார்த்தி சொன்ன  போது  எப்போது வேண்டுமானாலும்  அம்மாவை அழைத்து  வா  என்று சொல்லியிருந்தார். இப்போது  அவருக்கு கண்டிப்பாக  நினைவு இருக்க முடியாது.  ஏனென்றால்  ஆசிரியர்களாகிய  நாங்கள்  1000 கணக்கான  மாணவர்களை  பார்ப்பதால்  எல்லோரையும்  நினைவில்  கொள்வது  சாத்தியமில்ல. என்றாவது  ஒரு நாள் அவரை சந்தித்து  கார்த்தியை பற்றி  சொல்ல வேண்டும்.
கார்த்திக்+அம்மா 

2012/06/15

remember me

once i happened to view a scene from an english movie.
the scene is this.
''a lover is fighting with his enemy while his ladylove comes there.seeing her he pushes her into the elevator and closes the door.his ladylove refuses to leave him.she struggles to come out of the lift.but it starts going down.
that time he says 'PLEASE REMEMBER ME'
HIS EXPRESSION WAS SIMPLY SUBERB.
he wants his lady love to live.but he wants to live in her memory for ever.
Don't u think i too might have the same wish?
will u remember me?
forget august 26
remember NOVEMBER 14.
THIS SAELM SINGAM WAS BORN TO LIVE FOR EVER.
so no such date as august 26 came in the calender.
i will live for ever. i have made enough arrangements for that.
with luv and luv only,
karthik[KUCHI].DEMI
i wish to be called as karthik and not as kuchi.
contact me with my new mail i.d
ponniyinselvi_kartik@yahoo.co.in 
இந்த  பதிவு  2006ல்  நான்  எழுதியது.. அப்போது  இந்த  பதிவுகள்  அனைத்தும்  கார்த்தி  எழுதுவது  போலவே  இருக்க  வேண்டும்  என்றுதான்  அவன்  வலைப்பதிவை  தொடர்ந்தேன்.
ஆனால் இப்போது
அவனைப்  பற்றி  எழுதும்  blog ஆகி  விட்டது.

2012/06/07

 அப்பப்பா ,நானும் பார்த்திருக்கிறேன் ,எத்தனையோ பேர் எப்படி எப்படியோ  சிரித்திருக்கிறார்கள் .  ஆனால்  இன்றைய  ''நீங்களும்  வெல்லலாம்  ஒரு கோடி  ''  ஒரு பெண்  சிரித்தது  பாருங்கள். சிரிக்கிறது.சிரிக்கிறது.சூர்யாவும்  என்ன என்னவோ  சொல்லிப் பார்த்தார்.பைத்தியம்  போலும் இருந்தது.பாவமாகவும் இருந்தது.
நிறைய  கேள்விகளுக்கு பதில் தெரிந்த அந்த மீனவ  பெண்ணுக்கு  ''நண்டின்  வீடு வளை ''  என்று மட்டும்  சொல்லத் தெரியவில்லை.
  இன்னொரு  பெண்  கூடை ''முடைதல் ''  என்ற  வார்த்தையை  கேள்விப்பட்டதே இல்லை என்று தன  தமிழ்  நாட்டு பிறப்பை  பெருமைப் படுத்திக்  கொண்டிருந்தார்.

ஏண்டாப்பா வேலையை  விட்டு வீட்டில் உட்கார்ந்தோம்  என்று வருத்தப்பட வைப்பது   இந்த  டி வி  பார்க்கும் கொடுமைதான்.

யார்  ஆரம்பித்தார்கள்  ...இந்த கீச்சு  குரல்  விஷயத்தை ...விளம்பரங்களில்  வரும் பெண் குரல்கள்   ஒரே கீச்சு  கிச்சுதான் ,  தாங்கவே  முடியவில்லை.
....  ......
டோனி பற்றி ஒரு விஷயம்  .விளையாடும்  களத்தில்  எச்சில்  துப்பிக்  கொண்டே இருந்தார்.  பார்க்கவே  சங்கடமாக  இருந்தது.
.... ...   .....மீண்டும்  டி .வி  விஷயம்
சமையல்  நிகழ்ச்சிகளை  பாருங்களேன் .நன்றாக  படித்தவர்கள்,  சாதனை  செய்தவர்கள்  அமைதியாக  பொறுமையாக  பேசுகிறார்கள்.
ஆனால்  இந்த  இல்லத்தரசிகள்  வந்தால்  ஒரே அழும்புதான். பாதி  ஆங்கிலம் ,கடித்து குதறுகிறார்கள்.   அதுதான்  போகட்டும்.எதோ  பத்து  P .h d
 ஒன்றாக  படித்தவர்கள்  போல் இதில்  வைட்டமின்  a ,b ,h ,m ...x ,y  இருக்கிறது  என்று அளக்கிறார்கள்  பாருங்கள் ,,அப்பப்பா  B .P  எகிறுகிறது .
  அதிலும்  அந்த  RAJ  டி வி யில் வரும்  அன்னையார்,சொல்வார்  பாருங்கள்
.....one table spoon  of   கடுகு , [ ஏனம்மா, உனக்கு தமிழ்  தெரியாது என்றால் English  channels போய்  program  கொடுத்து உங்கள்  ஆங்கில  வள்ளன்மையை  நிலை  நாட்டுவதுதானே.

அடுத்தது  Z  டி .வி யில் வரும்  ''சொல்வதெல்லாம் உண்மை ''.எல்லாம்  4 கல்யாணம்  ,7 கள்ள  உறவு ,  பாவம்  நிர்மலா பெரியசாமி,   நாம் தமிழ் நாட்டில்தான்  இருக்கிறோமா  என்று  ஆதங்கப்படுகிறார்..
என்னவாயிற்று  நம்  பண்பாடு  என்று கேட்கிறார்.
நான் ஒன்று சொல்கிறேன்
நான் படித்தது  ஆங்கில இலக்கியம் .
ஆனால்  என் அம்மா  தமிழ் M .A  படிப்பதற்கு  நான்  நிறைய உதவி செய்த  வகையில்  தமிழ்  இலக்கியமும்  நன்றாக தெரியும்.
ஆங்கில இலக்கியத்தில்  காமம்  பற்றி 10% கூட  இருக்காது.american literature   வேறு.அதில்  படிக்க  முடியாத  பல இருக்கும்.
அதே  போல் தமிழ்  இலக்கியத்தில்  காமத்துப்  பால் இருக்கும்.
அப்போதிருந்தே   கந்தர்வ  [ களவு ] திருமணம், கல்யாணத்திற்கு முன்பே உறவு  என்பதெல்லாம்  இருக்கும்.
அதனால்  கற்பு  ,கண்ணியம் என்பதெல்லாம்  குறைவே.
கார்த்திக்+அம்மா 
மறுபடியும் மறுபடியும்    பழைய நினைவுகளே..ஜூன்  மாதம்  3ம  தேதி சென்னையிலிருந்து  நானும்  செந்திலும் பெங்களூருக்கு  கிளம்பி  சென்றோம்.என் இனிய, இனிய மகனின் அன்பிலும், ஆதரவிலும்  நிம்மதியான  வாழ்க்கை  வாழ போகிறோம்  என்று சந்தோஷமாக  சென்றேன்.அதிர்ஷ்டம்  தலை விரித்தாடியது. போன வேகத்தில் சென்னை திரும்பி விட்டேன். மகனை பறி  கொடுத்து.விதி. விதி. கொடுமையான விதி.
கலா கார்த்திக் .

2012/05/22

ஷாருக் கான்  விவகாரம் , ,
ஒரு எம்.பி  ''நான்  வராமல்  விமானம்  புறப்பட்டால்  உன்னை  கொன்றுவிடுவேன்  என்று மிரட்டுவதும்''
'' மம்தா  நீங்கள்  எல்லோரும் மாவோயிஸ்ட்டுகள் '' என்று  மாணவர்களை  பார்த்து  கத்துவதும் 
ஒருவர்  தை ஒன்றுதான்  வருடப் பிறப்பு  என்பதும் 
அடுத்தவர்  சித்திரை ஒன்றுதான்  வருடப்  பிறப்பு 
என்று நமக்கு  ஆணையிடுவதும் //  //
எல்லோரும் இந்நாட்டு  மன்னர்கள்  என்று  சுதந்திரம்  வாங்கிய போது  ஏற்பட்ட நம்பிக்கை  இன்று  பரிதாபமாக   காணாமல் போய்விட்ட பரிதாபமென்ன???
ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நாடு சொந்தமாக  போய் 
 விட்ட கொடுமை  என்ன ???
இதற்கு  காரணம்  நாமேதான்.இவர்களை  கடவுளுக்கும்  மேலாக  அல்லவா  கொண்டாடுகிறோம்.நூறு  வயது கிழவனாக  இருந்தாலும், மேக்கப்  போட்டு  இருபது  வயது பெண்ணுடன்  டான்ஸ்  ஆடினால்  ஆ  என்று பூரித்து  போகிறோமே.
ஒரு கிரிக்கெட்  வீரர்  நம்மை செருப்பால்  அடித்தால்  கூட  ஜன்ம சாபல்யம் அடைந்த  சந்தோசம் அடைகிறோமே .பெற்ற  குழந்தைக்கு  பால் இல்லை என்றாலும், அந்த  காசில்  சினிமா  முதல்  காட்சி  பார்க்கிறோமே  அதன் பலன்தான்  அவர்களுக்கு  வரும் இந்த திமிர் ...
கார்த்திக்+அம்மா 

2012/05/14

நீங்களும்  வெல்லலாம்  நிகழ்ச்சியில்  சூர்யா சொன்னார் : எனக்கு  பிடித்த பாரதியார்  பாட்டு :
தேடி  சோறு  நிதந் தின்று .....
.....    ......   ....
சொல்லடி  சிவசக்தி 
       இது கார்த்திக்கிற்கு  மிகவும் பிடிக்கும்.அவனுடைய  கேபினின் மேசையில் இந்த பாட்டு ஓட்டப்  பட்டிருக்கும் This was in the year 2002.Karthik used to have Bharathiyar's book with him.
Its  GREAT  IRONY that as in the poem HE NEVER GREW OLD.

What to say?

2012/04/24

அக்ஷய  திரிதியை:

எத்தனையோ  நாட்களாக  தேடிக்  கொண்டிருந்த  கேள்விக்கு  இன்றுதான்  பதில்  கிடைத்தது.

நன்றி .ஹரிகேசவ  நல்லூர்  ஐய்யா ..ஜி  தொலைக்  காட்சியில்  அவர் அளித்த விளக்கம்.:
சூரியன்  +சந்திரன்  இரண்டும் உச்சம்  பெரும்  நாள்  இது. இது வானவியல்  அறிவியல்  படி கூட  மிக  முக்கியத்துவமான  நாள்தான். இந்த  இரண்டு  கிரகங்கள்  [  ஒன்று நட்சத்திரம்,  மற்றொன்று  துணைக் கோள். ].  ஆனால்  இவை இரண்டும்   பூமியின்  மேல் அதிக  தாக்கத்தை ஏற்படுத்தும்.  ஆக  இந்த  நாளில்  வேறு   ஏதோ  நிலவியல்  உண்மை  இருக்கக் கூடும்.  ஒரு வேளை ,  சமீபத்தில்  ஏற்பட்ட  நிலநடுக்கங்களுக்கும்       ஏதாவது  சம்பந்தம்  கூட இருக்கலாம்.இதன் தாக்கம்  அல்லது  உண்மை ,அதன்  சக்தி பூமி  மேல்  ஏதோ  ஒரு மாற்றத்தை  உண்டாக்கலாம்.

அது என்னவென்று  நம் முன்னோர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால்,  இடைப்பட்ட  காலத்தில்  நாம்தான்  எல்லாவற்றையும்  நமக்கு தகுந்த  மாதிரி  மாற்றிக் கொண்டு, எல்லாவற்றையும்  வியாபாரமாக்கி  விட்டோமே.
யாராவது , [ ஒரு வானவியலாளர்  அல்லது  ஒரு ஜோதிடர்  ] இதன்  உண்மைகளைப் பற்றி இன்னும்  அதிகம்  சொல்லலாம்.  அல்லது  ஆராய்ச்சி  செய்யலாமே.
Whatever  our ancestors did ,had a scientific reason.For so many years  ,i have been  searching for an answer to the importance given to this 'AKSAYA  THIRITHIYAI.'.
And  today  i got a reasonable explanation. Thanks to HARIKESAVA  NALLUR VEKATRAMAN JI.
in Z t.v he said that this day both sun and Moon  are in peak position.
Both the astronomical bodies surely have a strong effect on Earth.
What will be the impacts of this position on earth?
Definitely  there should be some changes.
May be the recent earthquakes are due to this conjunction.
I request  any scientist or an astronomer to make a study and give  a right explanation.
ONE THING   for sure,  is that our ANCESTORS had a very deep knowledge about everything. We should really feel proud of our ancestry.
karthik+amma

2012/04/15

நான் எழுத நினைத்ததை இவர் எழுதியுள்ளார்.
http://sivathy.blogspot.in/2012/04/blog-post_15.ஹ்த்ம்ல்
நன்றி.
கார்த்திக்+அம்மா

2012/04/11

புத்தாண்டு :
அது தை மாதமாக இருந்தால் என்ன , சித்திரை மாதமாக இருந்தால் என்ன? இந்த தலை முறை இதைப் பற்றி யோசிக்கக் கூடப் போவதில்லை . அவர்களுக்கு தமிழ் மாதங்கள் தெரியுமா , கண்டிப்பாக 25 % பேருக்கு கூட தெரியாது.
அவர்களுக்கு ஐ.பி.எல் போதும். கார்டூன் போதும்.
இந்த நாட்கள் எந்த பெர்ய வித்தியாசத்தையும் தருவதில்லை.
அரசு ஊழியர்களுக்குத்தான் கொண்டாட்டம். இன்னொரு விடுமுறை நாள். தொலைக் காட்சியில் அவர்களின் இஷ்ட தெய்வங்களான நடிகர்கள் பேட்டி தருவர். பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.
ஒரு முதல்வர் தை ஒன்றை கொண்டாடுவதா , சங்கமமா , நாங்கள் என்ன இளைத்தவர்களா , எங்கள் கொண்டாட்டத்தை பாருங்கள் என்ற சவால்தான். யாருடைய வரிப் பணம் ???
சும்மா புலம்புவதை தவிர வேறு என்ன கிழிக்க போகிறோம் ??????
கார்த்திக் +அம்மா

2012/04/07

பகவத் கீதை :
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று ஆத்திகர்கள் கோபப் படலாம்.
ஆனால் யாராவது இந்த கேள்விக்கு சரியான பதில் தாருங்கள்.
கேள்வி:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன் .
அப்படியானால், சுனாமியில் லட்சக் கணக்கானவர் இறந்தனரே ,அது நன்றாக நடந்ததா ? பெற்றவள் பிள்ளைகளை இழந்து, குழந்தைகள் பெற்றோரை இழந்து, உடமைகளை இழந்து சோகத்தில் பரிதவித்து நின்றனரே ,அது நன்றாக நடந்ததா?
ஒரு விமானத்தில் பயணித்த அனைவரும், இன்னும் சற்று நேரத்தில் ,நம் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், நம் தாய் நாட்டு மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் இருந்த போது விமானம் வெடித்து கரிக்கட்டையாயினரே அது நன்றாக நடந்ததா?

ஓடும் பேருந்தில் தீ பிடித்து அடையாளம் காண முடியாத அளவுக்கு பயணிகள் கருகிப் போயினரே , அது நன்றாக நடந்ததா?
இதை எல்லாம் எப்படி நியாயப் படுத்துகிறது இந்த மதம், ''இந்து மதம் ? ''
மீறிக் கேட்டால். முற்பிறவி, கர்மா என்று கதை சொல்வார்கள்.
வந்தவர்கள் எல்லாம் போக வேண்டியவர்கள்தான் , பிறந்தவர்கள் எல்லாம் இறப்பவர்கள்தான் என்றெல்லாம் உபதேசம் செய்வார்கள்.எல்லோரும் இறக்கப் போபவர்கள்தான். ஆனால் யார் ,எப்போது என்ற கேள்வி இருக்கிறதே.
அதையும், தாண்டி , கடவுளுக்கு நல்லவர்களை நிறைய பிடிக்கும், அதனால் இவர்களை சீக்கிரம் அழைத்துக் கொண்டார் என்பார்கள்.
அப்படியானால், உயிருடன் இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களா ?
என் கேள்விக்கென்ன பதில்?

கார்த்திக்+அம்மா

2012/03/19

Mayavathy &security

I am stunned to read the news that Mayavathy had been provided a security of 400 cops so far.And now after losing the polls ,she becomes an ordinary citizen. But even now she is given '' Z '' security with 100 cops.What risk does she have? !!!!
At whose money ????????????
It's our tax. We save each rupee losing or foregoing so many of our basic needs.
And with this money, she is given a 'protection'.
She has amassed a wealth worth 120 crores. How did she earn this money?
So its well known that she is RIIIICH ,rich.So she can afford to have her own security.,at her own money.
And the tax payers are fooled to a maximum extent. What protection does a tax payer gets?
And for this only we got freedom.?????????
This is a democracy meant for the politicians who rule us in a dictatorial manner.
Come to Chennai and see how many employees wait in the scorching sun, just for a politician to pass by.
And these poor,pitiable tax payers, the so called 'I.T ' people are the most exploited.
Once these people start a protest then only everything will fall in line and get set.

2012/03/13

power Dr.actor

accidentally I happened to see this Power STAR and I wondered why everyone were making fun of him.
He seems to be innocent, plain spoken, and simple.
Many argue that he doesn't know acting. For that matter, atleast 90 % don't act good.
More over it's his money, and he does not cheat anyone.With his money he can do whatever he wishes as long as it does not do any harm to anybody.
Reading blogs which made fun of him , I had a strange figure in my mind.
But, after seeing him in 'ATHU, ITHU,,ETHU,'' and in Kovai Sarala's program, I felt really bad.Unless like the greatest hypocrites, the so called ''GREAT '' actors , he is far far better.
Those who make fun of him, 'do you really have guts to do the same treatment to the other actors?'
power star, go ahead with your plans as you said in that program.
of course, i did not see the program fully.
Anyhow , all the best,power star.
kalakarthik

2012/03/12

ஒரு தொலைகாட்சியில் 12 ம வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கு தயாராவது பற்றி குறிப்புகள் கொடுத்தனர். அதில் நிறைய மாணவர்கள் கேள்வி கேட்டனர்.
நாளை தேர்வு. இன்று கேள்வி கேட்பது ஒரு புறம் .இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்தால் போதும் என்று ஆசிரியர் சொல்கிறார்.சராசரி தேர்ச்சிக்கு போதும் என்ற அளவில் அது சரி.
ஆனால்,
மேல் படிப்பில் எத்தனை தடுமாற்றம் தரும் என்பதை ஏன் எல்லோரும் உணரவில்லை?
ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடிக்காமல் அவதிப் படுவதற்கு இது போன்ற தவறே காரணம். 11 , 12 வகுப்புகளில் கணிதப் பாடத்தில் சுலபமான [ஆசிரியருக்கும் ] பகுதிகளை மட்டும் நடத்திவிட்டு, மற்ற சேப்டர்களை '' 'ஒமிட் '' ' செய்வது என்பது அந்த நேரத்திற்கு சரியாக இருக்கலாம்.
ஆனால், பொறியியல் படிப்பில் 75 % மாணவர்கள் அந்த கணிதப் பாடத்தை முடிக்க முடியாமல், first செமஸ்டர் ல் தோல்வியடைந்து ,அந்த அதிர்ச்சியில், அவமானத்தில், மேலும் மேலும் அர்ரியர்ஸ் சேர்த்து ,இறுதியில் படிப்பை முடிக்காமலே வெளி வருகின்றனர்.
இதில், இன்னொரு தவறு என்னவென்றால், எத்தனை பேப்பர் அர்ரியர் இருந்தாலும் அடுத்த வருடத்திற்கு சென்று விடலாம்.
ஆனால், மருத்துவ படிப்பில் அர்ரியர் இருந்தால் அந்த வருடத்திற்கான வகுப்புகளை அட்டென்ட் செய்து அரியர் முடித்தால்தான் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம்.
பொறியியல் படிப்பிலும் இதே நடைமுறை பின்பற்றப் படுமாயின் பொறியியல் மாணவர்கள் பட்டம் பெற்று வெளி வருவார்கள்.
அதனால் ஆசிரியர்களே ,அனைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தி பயிற்சி அளியுங்கள் .அதற்கப்புறம் படிப்பது விடுவதும் , மாணவன் திறமை, விருப்பம்

2012/03/08

Woman's day

I think its 1976. the way I celebrated it was that I added my mother's name with my initial .My mother's name is 'Parvathi'. So i changed my initial as VP.kalavathy ,thusby honoured my mother.But now everything else is gone and i have become kala karthik. ''karthik amma'

2012/03/07

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில்,
ஐயோஓ ஒ ஒ பாவமான ராகுலை எல்லோரும் விமர்சிக்கின்றனர்.

என்னுடைய எரிச்சலெல்லாம் மன்மோகன் சிங் மேல்தான். வெளிநாட்டிற்கு போகும்போது மட்டும் மனைவி, மற்றும் பலர் என ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு தனி விமானத்தில் தனி ஆவர்த்தனம் செய்யத் தெரிகிறது.
ஆனால், எலெக்சன் தேர்தல் என வந்து விட்டால் மட்டும் ஆள் காணாமல் போய்விடுவார்.
ஒரே ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட வர மாட்டார்.
அறுவை சிகிச்சை வலியுடன் சோனியா , வெய்யில் , மழை, இருட்டு என நேரம் காலம் பார்க்காமல் ராகுல், பிரியங்கா என குடும்பமே அலையும். இப்போது யாராவது இது குடும்ப அரசியல் என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் ?
பிரணாப், ப.சிதம்பரம் இன்னும் மற்ற எல்லோரும் எவ்வளவு அலைந்தார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம் இந்த மாமேதை மன்மோகன் சிங் தான்
அவருடைய நிர்வாகத் '' '' திறமை '' '' !!!!!!!!!!! தான் காரணம். தனுஷ், ஸ்ருதி எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைத்து கும்மாளமடித்துக் கொண்டிருந்தால் எப்படி கிடைக்கும் ஒட்டு ?
எரிச்சலாக வருகிறது.

கார்த்திக்+அம்மா

2012/02/13

ஓசூர் : ஓசூர் அருகே ஐந்து யானைகள் ஊருக்குள் புகுந்தது. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தை, யானைகள் விரட்டியதில், வனத்துறை ரேஞ்சர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கெலமங்கலம் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 யானைகள், கடந்த ஒரு வாரமாக ராயக்கோட்டை மலைக்கிராமங்களில் புகுந்து, அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 9ம் தேதி பாவாடப்பட்டி கிராமத்தில் புகுந்த யானைகள் கூட்டம், பயிருக்கு காவலுக்கு இருந்த முனியப்பனை ,50 மிதித்துக் கொன்றன. நேற்று முன்தினம் முத்தம்பட்டி கிராமத்தில் புகுந்து யானைகள் துரத்தியதால், விவசாயி நஞ்சன், 50 படுகாயமடைந்து இறந்தார்.

நேற்று முன்தினம் இரவு, சூளகிரி அடுத்த உள்ளட்டி தென்பெண்ணை ஆற்றுக்கரையில், ஐந்து யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன. அதன் பின், இரவு முழுவதும் சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்தன. அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன் மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, இரவு முதல் யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை வரை, சூளகிரி அடுத்த உள்ளட்டி, கரகம்பட்டி, முத்தம்பட்டி, அலேசீபம் கிராமங்களை மையமாக கொண்டு யானைகள் சுற்றித் திரிந்தன. உள்ளட்டியில் இளைஞர்களுடன் இணைந்து யானைகளை விரட்டமுயன்ற வனத்துறையினரை, யானைகள் துரத்தியடித்தன. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், இளைஞர்களும் நாலாபுறமும் சிதறிஓடினர். அப்போது, ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன், யானையை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன், மற்ற ரேஞ்ச் வனத்துறையினரை வரவழைத்து, ஊருக்குள் புகுந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கற்களை வீசியும், பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்தினர். மிரண்ட யானைகள் கூட்டம், கரகம்பட்டி, முத்தம்பட்டி, உத்தனப்பள்ளி வழியாக ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் சென்றன. காட்டிற்குள் சென்ற யானைகள் கூட்டம், மீண்டும் திரும்பி வரும் என்ற அச்சத்தில் விவசாயிகள், இரவு காவலுக்கு தோட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர்.

மூன்று மாதத்தில் ஏழு விவசாயி பலி : ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், இதுவரை யானைகள் தாக்கி, 52 விவசாயிகள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும், ஆறு பேர் இறந்துள்ளனர். கடந்த மூன்று மாதத்தில், ஏழு பேரும், கடந்த மூன்று நாளில் இரு விவசாயிகளும் பலியாகியுள்ளனர்.

கடந்த 2 ஆண்டில், 228 முறை யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்துள்ளன. வனத்துறையினர், யானை வரும்போது மட்டும் விரட்டுவதற்கு செல்கின்றனர். மற்ற நேரத்தில் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடாததால், யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

யாரப்பா , உங்களை அவசரப்பட்டு வீரப்பனை கொல்ல சொன்னது? அவர் இருந்த வரை அடங்கி கிடந்தன. இப்போது கேட்பதற்கு ஆளில்லாமல் யானைகள் அவை இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்றன.தேவையா?