என் ஆருயிர் கண்மணி கார்த்தி ஆரம்பித்தது இந்த வலை (blog )
அவனின் பிரிவிற்கு பின் அவனை யாரும் மறந்து விடக் கூடாதே என்ற தவிப்பில் அவன் அம்மா நான், கலா கார்த்திக் அதை தொடர்கிறேன்.
என் தெய்வத்தைப் பற்றியே அதிகம் எழுத மனம் ஆசைப் படும்.
"""""""""ஒரே புலம்பல் """"""""""""
என்ற முத்திரை குத்தப் பட்டதால் வேறு சில செய்திகளை பற்றி எழுதினாலும்
கார்த்தியைப் பற்றி எழுதினால்தான் நிம்மதி கிடைக்கிறது.
கார்த்தி மகனுக்கு வரலாறு என்றால் அதிக ஈடுபாடு.
வரலாறு.காம் ஆரம்பித்தான் 2001ல்.
அப்புறம் வேலை சுமை
குடும்ப சுமை
18 வயதில் அம்மாவின் டிரான்ஸபர்
தம்பியின் படிப்பு
தந்தையின் மருத்துவ செலவிற்கு ஏற்பட்ட கடன்
என அவன் சிறிய தோளில் எத்தனை பெரிய சுமைகள்.
ஒரு சிறு முக சுழிப்பு இருக்காதே.
கணவர் இழப்பால் சோர்ந்து போகும் என்னை தேற்ற அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.
இத்தனைக்கும் நடுவில் தான் அவன் blog , வரலாறு .காம்
என அத்தனையும் செய்தான்.
தன்னை சுற்றியிருந்த அத்தனை பேரின் தேவைகளையும் பூர்த்தி செய்தான்.
தோளின் சுமையே அவனை அழுத்தியதால்தானோ என்னவோ
தாங்க முடியாமல் மகன் முடிந்து விட்டான்.
கார்த்தி போல் மகன் கிடைக்க
ஒரு 1000 ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
அதே 1000 ஜென்மங்கள் பாவம் செய்திருக்க வேண்டும்
அவனை 23 வயதில் பறிகொடுக்க ..
பாவி நான்.
சோகம் வற்றா நதியாகி விட்டது.
கண்ணீர் வற்றா கண்கள் .
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment