I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2008/12/14
நான் 7,8 வயது சிறுமியாக இருக்கும்போதே இந்த கொடுமையை எதிர்த்துள்ளேன்.
எந்த ஜாதியினராக இருந்தால் என்ன, எல்லோரும் மனிதர்கள்தானே எங்கள்வயலில் வேலை செய்யும் அனைவரையும் " அக்கா, அண்ணா " என்ற உறவு முறையில்தான் அழைப்பேன்...அவர்கள் நெகிழ்ந்து விடுவார்கள்.
**** நான் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தபோது ' வேலன் ' என்ற ப்யூன் [ office assistant ] இருந்தார்.அவரை யாரும் பெயர் சொல்லியே கூப்பிட்டதில்லை. "டேய் " etc.தான்.
..........நானோ " வேலண்ணா " என்றுதான் அழைப்பேன். ஒரு நாள் வீட்டிற்கு வந்த அவர் " அம்மா, நீங்க்ள் வந்த பிறகுதான், பள்ளியில் என்னை ஒரு மனிதனாக பார்க்கிறார்கள்.இது வரை ஒரு நாயை அழைப்பது போல், 'ஏய், டேய் ' என்று அழைத்தவர்கள் இப்போதுதான் பெயர் சொல்லி கூப்பிடுகிறார்கள் " என்று கண் கலங்கிவிட்டார்.
யாராயிருந்தாலும் வீட்டிற்குள் அமர வைத்துதான் சாப்பாடு போடுவேன். [கொடுமை என்னவென்றால், அவர்கள் வெளியில் நின்று தேங்காய் மூடியில் அல்லது நெல் அளக்கும் "படி " [a vessel ,this present generation may not have even seen that ] யில்தான் பழையதை கரைத்து கொடுப்பார்கள். அந்த படியில்தான் நெல் , அரிசி அளப்பார்கள்.அப்போது 'தீட்டு ' கிடையாதா? என்று இந்த சிறுமிக்கு ஆச்சரியமாக இருக்கும்.
எனக்கு திருமணமான பின் , [மாமியார் வீடு பயங்கர பட்டிக்காடு.].
அங்கே போனால், ???? சினிமாவில் பார்ப்பது போல் இருக்கும். நானோ வழக்கம்போல் எல்லோரையும் "அண்ணா ".
அந்த கிராமத்திலிருந்து வருபவர்களுக்கும் வீட்டில்தான் சாப்பாடு. என் 'சக சகோதரி' [ ஓர்ப்படி, co-sister ] " கலா, மாமியாருக்கு தெரிந்தால் உன்னை வீட்டிற்குள்ளேயே விட மாட்டார்கள் " என்று எச்சரிக்கை மணி. அப்படியும் நான் 'திருந்தவில்லை '!' ..இது மாமியாருக்கு தெரியவர
" கலா , இது நம் சாமிக்கு ஆகாது, சாமி குத்தம் " என்று மிரட்டினார்கள்.
இது உண்மையிலேயே சாமி [ அப்படி என்று ஒன்று இருந்தால் ] , இது சாமி குத்தமா ? அதனால்தான் எனக்கு இவ்வளவு பெரிய இழப்புகளா ? எனக்கு வந்த இந்த இழப்புகள் எல்லாம் அவர்களுக்கு வெற்றிக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. ' ஆடினாள் பார். இன்று அனுபவிக்கிறாள் பார் ' என்று கொக்கரிப்பு வேறு.
சாமிக்கு என் மனித நேயம் புரியவில்லையா ? சாமியும் உயர் ஜாதிக்குதானா? சாமிக்கும் தீண்டாமை உண்டா ?
இது தண்டனையாகவே இருந்தாலும், இன்றும் நான் மாறவில்லை. இன்றும் அவர்கள் என் சக மனிதர்களே, என் உடன் பிறப்புகளே.
ஆனாலும், இழப்பு என்னை மிகவும் நோகடித்து விட்டது. மனம் கந்தலாக நைந்து விட்டது. கார்த்தி வருவானா, கதவை தட்டுவானா என்று கண்களும், காதுகளும் ஏங்கி செயலிளந்து விட்டன.
ஏக்கத்துடனும், துக்கத்துடனும்,
கார்த்திக் அம்மா
'
2008/12/09
ஷீலா தீக்ஷித் மேடம்
ஹாட் ட்ரிக்
ஹாட்ஸ் ஆஃப்
***** ******
TN jokers
பேரனின் பிறந்த நாள் விழாவிற்காக லண்டன் பறக்கும் தலைவர்.
இங்கே ஒரு வேளை உணவுக்கு அழும் எத்தனையோ பேரன்கள்..தன்னலமற்ற தலைவர் என்றால், [ மற்றவைகளை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள் ]
**** ***** *******
தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்லிய சோனியாஜியை
நிச்சயம் இங்கு நினைக்காமல் இருக்க முடியவில்லை...எங்கோ இருக்கும் இத்தாலியில் பிறந்தும், இந்த கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரி புடவை கட்டி வரும் அவர் எங்கே? இந்த மண்ணில் பிறந்து, ஒரு மாநில முதல்வராக ஆன பின், fashion show ல் கலந்து கொண்டு catwalk போகும் வசுந்தரா எங்கே?
2008/12/06
எண்ண சிதறல்கள்:
சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது
2008/12/05
Saluations
But more than them , the real heroes are those who have lost their dearest and behaved the 'best and the most courageous.
Yes, I mean the wife of Karkere who refused the one crore and gave a good lesson to the dirty politicians who would like to seek cheap popularity and mint money using this opportunity. Are we all politicians who would grab any dirty money coming by any dirty route.
Money may be an essential thing to our life. But money is not the only thing that can make life happy.
Next is Sandeep Unni 's father. Yes.. show them the doors.
What follows is my rumination.
1) I have always been wondering about the practice of calling one's wife as 'widow of so and so'.
Why? Till her death, any lady remains to be his wife only.So tell that 'wife of ex' .Stop this hurting ,piercing, foolish practice.
2) This is from my own life. Though extremely sad to explain this I would like to tell this. I (karthik's mother), was offered some sort of pension. But i sent a message saying, 'till now i don't accept that my karthik is not with me. If I accept this pension that would mean that I acknowledge his d****, which I am not ready to do in any situation and circumstance.
.... ......
What follows is an episode from my life. In 1971 the India pakistan war broke out. I was some 11 or 12 years old and my younger brother was 10 years old. We two underwent a fasting 'demanding ' permission from our mother to go and join army and sacrifice our lives for our country. Like the scenes in the movie ,Inaintha Kaikal , which came much later, we had dreams of going all alone to the war front and kill all the pakistanis!!!!!. ...Dear Sandeep joined the forces with the sole intention of saving our dear country. Never mind if it costs the dearest life. Exactly. my mind set up is also the same. I will die happily in the war to save my country. Even now , at the age of 50, I am ready to join the army. 1971 or 2008. No difference. Don't come digging saying 'mentally still I am 11 years old' .I am happy to accept it.
..... .....
anbilum anbana
karthik + amma
Z +
The next most important issue is, or the 100 billion dollar question is , DO WE NOT HAVE EQUALLY [ rather More ] CAPABLE " EXECUTIVES " [ erase the word 'Leader' , which is quite loathsome and nauseating in the present scenario ] to manage [ once again delete the OBSOLETE word "RULE " ] the country, Our GREAT INDIA.
There are lakhs and lakhs of 'youngies' in our country with more vigour, fire, intelligence, selflessness, and managing and conducting our country in a progressive route. Fire these 'OLDIES ' out .
Once [in 1990s when I was teaching in a class I told my students ' Make me the CM for just one day with all powers and see how much I change the whole thing.'....My students burst in to laughter and said " The next day the population will be half, because you would shoot the corrupt, the culprits etc '".Ironically, soon this movie 'Muthalvan ' was released and my students in a way felt elated and a sense of satisfaction [ because all of my students wished that corruption and all such non-sense should be eradicated. And when our hands are tied ,?] so they felt so happy about that movie.
And now i say this. Give this country to them. What if one BJP head or a PM or a CM or a would be CM die ? There are hundreds to take the charge and do better. So call back this "z" security.All are Indian citizens. All need protection.
As I have already written in a request to the so called terrorists kill those who are directly connected with you.PLEASE stop killing innocent people.
with luv and luv only
karthik+ amma
2008/11/14
Karthik's B'day--D'day--strange similarities
My birthday : 14.11.1958
marriage: 14.12.1980
karthik's birthday: 14.11.1981
As soon as i got married we [my hubby and i settled in TNEB quarters near Bhavani. ] my hubby was working as A.E .நான் கல்லூரி முடித்த உடன் திருமணம் . ஒன்றும் சரிவர புரியாத நிலை. தஸ் புஸ் என்று ஆங்கில இலக்கியம் M.A படித்துவிட்டு, டான்ஸ் , ட்ராமா, என்று காலேஜை கலக்கி விட்டு ,திடீரென சூழ்நிலை [ மாமனார், மாமியார் etc, etc ] என மாற சற்று தடுமாறிக் கொண்டிருந்த வேளை.
ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருந்தது போல், என் கணவர் ஒரு workaholic.புது மனைவி, தனிக் குடித்தனம் என்றவுடன், சினிமாவில் வருவது போல் ஆடல், பாடல் , etc எல்லாம் தெரியாது அவருக்கு.
சரி. பதிவின் விஷயத்திற்கு வருவோம்.
விடிந்தால் Nov.14 th. அன்று இரவு 12 மணிக்கு சுரீர் என வயிற்று வலி. [ தனிக் குடித்தனம்] flats exclusively built for EB staff in an isolated area 25 km away from nearest town and 75 km away from Salem.
அன்று என் பிறந்த நாள் என்பதால், 20 கி.மி.தூரத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு , சேலம் சென்று சினிமா பார்த்து விட்டு அங்கிருந்து என் அம்மா வீட்டிற்கு சென்று b'day celebration முடிப்பது என்று திட்டம். இதில் இன்னொரு மிகவும், மிகவும் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால், இந்த ஊர் சுற்றல் எல்லாம் by bike. [ 350 cc bullet. ]
இப்படி கூட ஒரு அறிவில்லாத பெண்ணை நீங்கள் பார்த்ததுண்டா? ஒரு நிறை மாத கர்ப்பிணி. பைக்கில் ஊர் சுற்ற திட்டம்.
மணி 12. இரவு. வயிற்றில் வலி ஆரம்பம். கணவரை எழுப்பி " என்னங்க " என்றேன். அரைத் தூக்கத்திலேயே 'happy birthday ' என்று சொல்லிவிட்டு தூகத்தை தொடர்ந்தார். ஒரு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவரை எழுப்பி ' என்னங்க " என்றேன். " என்ன " என கேட்டார். "எனக்கு வயிறு வலிக்குதுங்க " என்றேன்.
எழுந்து உட்கார்ந்தவர், " இப்போது என்ன செய்யலாம் ? " என்றார். [ மனைவிக்கு பிரசவ வலி. கூலாக கேள்வி. ] . " சரி. தூங்குங்கள்..சற்று நேரம் கழித்து பார்க்கலாம் " என்றேன். படுத்த மனிதர் அடுத்த வினாடி ஆழ்ந்த தூக்கம்.
மணி 1 a.m,,,2 a.m,,,,,,,3 a.m,,, நான் படுக்கை அறைகுள்ளேயே நடந்து கொண்டிருக்கிறேன். 4 மணிக்கு மேல் வலி அதிகரிக்க , மிக மிக புத்திச்சலித்தனமாக சுடுதண்ணீர் வைத்து குளித்து விட்டு, அவருக்கும் சுடுதண்ணீர் வைத்து எழுப்பினால், மனிதர் எழுந்து ஆசுவாசமாக குளித்தார்.
மணி 5a.m.... 5.30....5.45 ....அதற்கு மேல் முடியவில்லை. " ஏங்க , ஜீப் வர சொல்லுங்க " என்றேன். அது ப்ரொஜெக்ட் என்பதால், எல்லா A.E ஸுக்கும் ஒரு வண்டி [ஜீப் அல்லது வேன் ] கொடுத்திருப்பார்கள்.] [ 6 A.E s. in our flats there were 8 A.Es. so there would be 8 vechicles. *there's another episode about these jeeps which i will tell you later. ]
Phone செய்து ஜீப் ட்ரைவர் வந்து விட்டார். பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பாட்டி தானும் துணக்கு வருகிறேன் என்று கூறியும் வேண்டாம் என மறுத்து விட்டு நானும் என் கணவரும் மட்டும் ஜீப்பில் 75 கி.மீ. [ சேலம் ] செல்கிறோம். போகும் வழியில்தான் அம்மா வீடு. போய் அம்மாவையும் அப்பா்வையும் கூட்டிக் கொண்டு செல்வதாக திட்டம். அம்மா வீட்டிற்கு அடுத்த வீடே ஒரு மருத்துவ தம்பதிகள். ஜீப்பில் இருந்து இறங்கி, நான் " நீங்கள் போய் அம்மாவை அழைத்து வாருங்கள் " என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவரிடம் செக்கப்பிற்கு ? சென்றால் , அவர்கள் திகைத்து, மலைத்து, அலறி, "கலா, உனக்கு சீரியஸ்னே புரியவில்லையா? உடனடியாக சேலம் போ " என்று [ 30 k.m from there } பதற "சரி " என்று சொல்லிவிட்டு அம்மா வீட்டிற்குள் நுழைந்தால்,,,,மாமியார் [ ஒரு ஸ்கூல் H.M ] தன் செல்ல மருமகனுக்கு காபி போட்டுக் கொண்டிருக்கிறார்.
நிலைமை புரிய , கை கால் உதறலெடுக்க என் அம்மா போட்டது போட்டபடி ,ஓடி வந்து ஜீப்பில் ஏற [ என் தந்தை எங்கோ வெளியில் சென்றிருந்தார் .] ஜீப் ட்ரைவர் எமர்ஜென்சி விளக்கை போட்டுக் கொண்டு பறந்தார்.
மருத்துவ மனையை அடையும்பொழுது மணி 8.35. கார்த்தி பிறந்தது 8.45.மருத்துவ மனையே அலறிவிட்டது.
விஷயம் கேள்விப்பட்டு அலறிக் கொண்டு தந்தை ஓடிவர , எல்லாம் அவசர கதிதான்.
கார்த்தியின் பாதிப் பிறப்பு ரோட்டில்தான்.
NOW,
Aug.26. 2005. time 8.45. B'lore.
karthik and i have breakfast and karthik leaves home by 8.50,a.m the exact time ,,,i saw his face on 14.11 .1981.
travels by bike. accident at 9 a.m. taken in an auto. reaches hospital and ***********.
பாதி பிறப்பும் ரோட்டிலே. பாதி *றப்பும் ரோட்டிலே.
என்ன ஒரு வேதனையான ஒற்றுமை?
இன்று என் செல்ல மகன் பிறந்த நாள். ...... ........ஊமையாக நான்
2008/11/06
இந்த சர்ச்சை தீரவே தீராது.இதன் பிண்ணனி என்ன? இதன் தாத்பரியம் என்ன ? என்பது புரியாமல் ஒரு தாழ்வு மனப்பாண்மையில் இந்த நூலை பார்த்து பயந்து நாம் இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.
நான் ஒன்றும் மெத்தப் படித்தவளும் அல்ல . மேதாவியும் அல்ல. ஆனால் . எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். [ அனைத்து வகையான விமரிசனங்களும வாக்கு வாதங்களும் வரவேற்கப் படுகின்றன ]
முன்னொரு காலத்தில், மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற கல்லூரிகளும் இல்லை. இப்போது இருப்பது போல் கல்வித் துறை, மருத்துவ துறை, மின்வாரியம் என்று அரசாங்க அங்கங்கள் இல்லை. அதனால், ஒரு தொழிலுக்கு ஒரு குடும்பம் என்று வகைப் படுத்த பட்டனர்.
இந்த நிலையில்தான் அவரவர்க்கு உரிய பொறுப்பை நினைவில் நிறுத்த ஒரு கருவியாகத்தான் இந்த பூணூலை நடைமுறைப் படுத்தினர்.
பிராமணர்களுக்கு 5 நூல்.
அவர்களுடைய கடமைகள் 1] தன் குடும்பத்தை காத்தல், மன்னருக்கு ஆலோசகர், படிப்பு சொல்லித் தரும் ஆசான் [மந்திரங்கள் ], கோவில் கைன்கரியம், என 5 கடமைகள். எனவே அவர்கள் 5 நூல் கொண்ட பூணூலை அணிவர்.
அடுத்து சத்திரியன்: 4 நூல்: கடமைகள் 4: தலையாய கடமை நாட்டை காப்பது. நாட்டில் எந்த ஒரு குடிமகன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவனைக் காக்க தன் உயிரை தியாகம் செய்தாவது காப்பாற்றுதல் ,மற்றும் மேற் சொன்ன பிற கடமைகள்.
சத்திரிய பிரம்மசாரிக்கு மூன்று கடமைகள்.
அத்னால்தான், கந்த சஷ்டி கவசத்தில்,
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
என்று சொல்வது.
அடுத்த குலமாகிய வேளாண் பெருமக்கள். இவர்களுக்கு தாய் தந்தை குடும்பத்தை காத்தல் என்ற கடமையும், வேளாண்மை செய்து மற்ற குடிகளுக்கு உணவு தருவதும் ....ஆக அவர்கள் பூணூலில், இரண்டு நூல்கள்.
பெண்ணுக்கு மாங்கல்யமும் இதே கணக்குதான்.
ஆனால், காலப் போக்கில், பல பழக்கங்கள் மாறி விட்டன. என்னுடைய தாத்தா, பெரியப்பா இருவரும் இறுதி வரை பூணூல் அணிந்திருந்தனர். என் தந்தை மட்டும் தன் ஆங்கிலேய கல்லுரி கல்வியினால், பூனூல் அணிய வெட்கப் பட்டுக் கொண்டு கழ்ற்றி விட்டார். ஆனால், இன்னும் எங்கள் திருமண சடங்குகளில் ஒன்றாக வெள்ளி பூனூல் அணிவர். [ நான் ஜாதியை பற்றி சொல்ல விரும்பவில்லை. எனக்கும் கார்த்திகிற்கும் அது பிடிக்காத விஷயம் ]
ஆனால், காலம், பல விஷயங்களை மாற்றி விட்டது என் று கூறவருகிறேன்,.
இப்படி உண்மை ஒரு புறமிருக்க, பூணூல் ஒரு குலத்திற்கு சொந்தம் என்று அவ்ர்களும் '' ''பெருமையாக,, கர்வமாக '' '' நினைத்துக் கொள்ள , நாமும் அவர்களை பார்த்து ஒரு தாழ்வு மனப்பாண்மையில் மறுகுவதும்,,,
Gandhiji once said '' It's not that they feel superior, but that we feel inferior.''
என்ன ஒரு அருமையான பொன்மொழி.
அடுத்து திருநீறு:
இதுவும் நம் முன்னோர்களால் அறிவியல் பூர்வமாக ஒரு skin cream and powder என தோலை பாதுகாக்க பயன்படுத்தப் பட்டதே ஒழிய எந்த மத்மோ , கடவுளோ இதில் சம்பந்தப் படவேயில்லை.
காலம், + சில சுயநலவாதிகள செய்த தந்திரம் இது.
இன்றும் காயப் பட்ட இடத்தில் திருநீறை பூசி குணமாக்குதல வழக்கத்தில் உண்டு.
ஏற்கனவே குழம்பிக் கொண்டிருக்கும் நம் நாட்டில், இன்னும் புதுப்புது சர்ச்சைகளும் சண்டைகளும் வேண்டாமே என்பதற்கே இந்த பதிவு
அன்பிலும் அன்பான கார்த்தியுடன்+ கார்த்திக் அம்மா
2008/10/30
The Best Joke of the Year
" " நான் மத சார்பற்றவன்" "
ஐயோ, ஐயோ, என்ன சொல்வது????????
2008/10/07
அவசியம் இந்த பதிவை படித்து விட்டு முடிந்தவரை பிறருக்கும் அனுப்புங்கள்.
இது என் சொந்த கதை, ஆனால் , நாளை உங்கள் கதையாக மாறவேண்டாம் என்பதற்காகவே இந்த பதிவு.
நான் 1983 ல் ஒரு நிலம் வாங்கினேன். அந்த நிலத்தை " கிரயம்" [registration] செய்து பத்திரத்தை [documents], பத்திரமாக [ஜாக்கிரதையாக ] கொண்டுவந்து விட்டில் வைத்துக் கொண்டுவிட்டேன். இப்போது, சுமார் 25 வருடங்களுக்கு பிறகு, அந்த நிலத்திற்கு வேலி போட செல்லும் போது, சர்வேயர் வைத்து நிலம் அளக்க வேண்டும் என்று பக்கத்து நிலத்துக்கு உரியவர் [ இத்தனைக்கும் நெருங்கிய சொந்தம் ] சொன்னதால், வி.ஏ.ஒ. ஆபிஸ் போனால், அந்த வி.ஏ.ஒ. ஒரு காலண நோட்டைsome good old ,tattered record எடுத்து நான்கு பக்கங்கள் திருப்பி பார்த்து விட்டு, '' நிலம் உங்கள் பேரிலேயே இல்லை. '' என்று திருவாய் மலர்ந்தார். அதிர்ந்து போன நான், என் கிரய பத்திரம் இது என எடுத்து காட்டினாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. ''எங்கள் ரெகார்டில் இப்படித்தான் இருக்கிறது '' என்று அடித்து கூறி விட்டார்.
பிறகு ஈ.சிE.C [ENCUMBERANCE CERTIFICATE ]என்ற ஒன்றையும்Rs 4000 செலவு செய்து அதிலும் என் பெயர்தான் இருக்கிறது என்று வாதாடியும் அவர் காட்டிய தெனாவெட்டு !!
என்னை கேட்ட கேள்விகள் ???? ஒரு மடத்தனமான கேள்வியை கேட்டுவிட்டு ''உங்களுக்கு இது கூட புரியவில்லையா ?'' '' என்று நக்கல் வேறு. நீங்கள் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் ,எந்த கலெக்டரிடம் போய் சொன்னாலும் கடைசியாக என்னிடம்தான் வரவேண்டும் . நான்தான் ரெகார்டில் பெயர் மாற்றித் தர முடியும் '' என்று சவால் விட்டுள்ளார். அவர்களாகவே ஏதோ ஒரு பெயரை எழுதி கொள்வார்களாம். அதுதான் சட்டப் படியும் செல்லுமாம். ''''உண்மை.''
இந்த சமயத்தில்தான், விசுவின் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது .அதில் ஒருவர் இதே கதையை சொல்லி, '' இவர்களிடம் சட்டம் பேசினால் காரியம் நடக்கவே நடக்காது. செய்ய வேண்டிய ''பரிகாரங்களை '' [கொடுக்க வேண்டிய லஞ்சத்தை கொடுத்து ] பட்டா எண் [பட்டா நம்பர் ] பெற்றுக் கொள்ளுங்கள் .அப்போதுதான் நிலம் உங்களுக்கு சொந்தம் என்று சொன்னார்.
இந்த பதிவின் நோக்கமே இதுதான். கஷ்டப் பட்டு லோன் வாங்கி ஈ.எம்.ஐ. கணக்கு செய்து, வட்டி கட்டி நாம் வாங்கும் நிலத்திற்கு, இவ்வளவு பிரச்சினைகள் உள்ளன. இளைய சமுதாயமே, உங்களுடைய கணினி அறிவு எல்லாம் அந்த எஸ்.எஸ்.எல்.சி மட்டுமே படித்த v.a.o. விடம் செல்லாது. எனவே எடுக்க வேண்டிய , கொடுக்க வேண்டிய எல்லாம் முறைப் படி செய்து உங்கள் சொத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள். பி.கு.
இந்த லஞ்சம் கொடுப்பது , வாங்குவது என்ற விசயத்திற்கு நான் மிகப் பெரிய எதிரி. இன்னும் லஞ்சம் கொடுக்கவும் இல்லை. பட்டா நம்பர் என் பெயரில் மாறவும் இல்லை ..... so my dearest friends, please take all precautionary measures to ensure that the land is yours. Regarding flats, 'what must be done?' ...better get to know everything before you buy anything, be it land or flat. I guess there is little problem with flats and especially, with the reputed builders we have no problems at all.
Wishing you all the best
2008/10/03
IDBI--Ad
இரு சிறுவர்கள் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பந்து ஒரு புதருக்குள் விழுகிறது. எடுக்க போனால், ஒரு யானை. பையன் பயந்து பின்வாங்குகிறான். யானை அந்த பந்தை அவனிடம் தள்ளிவிட்டு காட்டுக்குள் போய்விடுகிறது. அப்பாடா, என்று ஆட்டத்தை தொடரலாம் எனும்போது மீண்டும் யானை.
இப்போது தன் செல்ல குட்டியுடன்......அவரும் பந்து விளையாடுவாராம்,,,, இவர்கள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். குட்டி யானையார் பின்காலால் வேறு பந்தை உதைப்பாராம்...ஆஹா ...என்ன ஒரு அருமையான விளம்பரம்.....அந்த தாய் யானை தன் குட்டி அந்த விளையாட்டை அனுபவிக்க எண்ணுவது ...அருமையான தாய்மை. இப்படியெல்லாம் விளம்பரங்கள் கொடுக்கலாமே .. அதை விட்டு, கையகல துணியுடன் , அரை நிர்வாண பெண்களை ஆட விட்டு.......
இனியாவது இது போன்று மனதை மெல்லிதாக தாலாட்டி செல்லும் விளம்பரங்களை தாருங்கள்
இனிமையிலும் இனிமையான
கார்த்திக்
2008/09/26
CHENNAI: A lecturer of Anna University was killed in a road accident here on Thursday.
Police said Prema Rajeshwari (39) of Velachery working in the Computer Science Department was riding a moped when a private bus knocked her down on the Sardar Patel Road. Though the victim was wearing a helmet, she suffered a head injury and died after admission to Royapettah Government Hospital.*******
No comments
karthik amma
2008/09/20
Sharma...PROUD TEARS
YES. i am really proud of his proud death.
Death comes to all. No doubt. But the way they die...make them immortal....And this hero has conquered " DEATH. "
I was pondering over two things :
Motivation:
See instead of being demotivated, strangely, we are all the more motivated. I am sure more youth will be wishing to join police force now and do some such heroic deeds.
NO Demotivation!!!!!! Not discouraged;;;;;; His juniors and colleagues will have added energy to fight and they will do it with more,,added vigour...
Bullet proof coat :
Now, my dear dear ...GENIUS.. friends :
one humble request...please, please don't ever come out super intellectual comments blaming dearest SHARMA for not having cared to wear bullet proof coat [ as you blamed my karthik ].
Every one value their life more than anything else and undoubetedly all want to live longer.
BUT it "HAPPENS " and it "HAPPENS "....
situations drive us. All the time we cannot act 'wisely '.Be it 'FATE ' or what ever it is , it may be a slip or might be SHARMA might not have liked to waste even a single second in conducting the operation. So stop all such great comments and unite together to salute this ''HERO ''
2008/08/31
இப்படியும் ஒரு மணப் பெண்
இது என்னுடைய [ கார்த்திக் அம்மா ] கல்யாண photo. எந்த மணப் பெண்ணாவது
தாலியை இப்படி எட்டிப் பார்த்துக் கொண்டிருப்ப்பதை பார்த்திருக்கிறீர்களா? ஒரு மணப் பெண்ணிற்குரிய நாணம், பதட்டம், பயம்.....ஏதாவது அந்த முகத்தில் இருக்கிறதா?....கொடுமை !!!!
வாழ்க்கை என்னும் பெரிய கடலில் போராடப் போகிறோம் என்பது போன்ற எண்ணங்கள் ஏதாவது ???
mentally retarded கூட இப்படியிருக்காது. இதில் ஒரு உலக மஹா கல்லூரியில் M.A படிப்பு வேறு.....
""பார்வைய்லே குமரியம்மா,
பழக்கத்திலே குழந்தையம்மா ""
என்பது எனக்குதான் பொருந்தும்.....[கழக அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற திருமணம் என்பதால் புரோகிதர் இல்லா திருமணம். ]
இப்படி ஒரு சிரிப்பு.....ஐயோ..ஐயோ..கொடுமை......
இது ஒரு மாநாட்டுக்கு வந்த கூட்டமல்ல.என் திருமணத்திற்கு வந்த மக்கள்.கீழ்தளம், மேல்தளம் என ....
எல்லா மகிழ்ச்சியும்,சிரிப்பும் நின்று போய் மூன்று வருடங்களாகி விட்டன.இன்று எல்லாமே சூனியம்தான்.
2008/08/13
My dearest Soniaji
How hurting it might have been to her when the GREAT "MEN" criticised her as a widow who should not become the Prime Minister of INDIA just because she ia widow.
I ask one question.
Hallo ;Great "men" ....will you recall her jubiliant face at the opening ceremony? After 28 years India won gold in Olimpics and it's because this 'widow' attended the function that luck smiled on India.
At least, hereafter, please pack your dirty superstitious beliefs and try to behave like rational human beings and learn to respect all human beings.
Soniaji, my hats off to you.
Gold Medal---OLIMPICS--A different outlook
It's everyone's right to be proud of winning the gold medal.
I differ a lot with you my friends. It's not India's victory. It's A.S Bindhra's victory. Not even Abinav's. If his father had not helped him so much,,,,,????????????
Right..
My point is this.
Millions and millions flow to his account.Remember, his father is gifting him with 200 crores.
Think for a moment....why should all gift him ? He is having abundant,,and he could afford.
If Saina or Rathore fails, it's not that they lack talent but because they could not afford to get the training.
My humble request to MITTAL AND OTHERS IS " Please adopt these talented sports stars and sponsor their training expenses"
Sure.They too will win in the next Olimpics..
I have experienced this in my life.when i was all successful and happy people praised me and danced around me. and now when i face the other side of the coin, when i face unhappy days, and ill luck nobody is by`my side.Leave the point , that they are not helping me, instead, they desert me and brand me as !!!!!!.
may be it's human nature. But I request again, to help those in need instead of trying to fill the already full jar.
will my request be heeded?
with lots of hope
2008/07/31
I undergo a lot of pain. I am not able to cry.It pains a lot physically. [ who said that I find pleasure in thinking of karthik and crying always.] I shudder at the very thought of crying.It is as if 1000 w electricity is passed through your limbo.All muscles and nerves shrink to nothing for a second then come back to normal.That one second is enough.
I am not able to cry.It pains a lot physically. All muscles ache. My eyes are heavy as if loaded with 1000 kilos.
Each second 1000 Tsunamis dash my shore fiercely.
Day by day, both physically and mentally I deteriorate rapidly.
I am afraid. Very much afraid.
Karthi, my dear karthimma, chellam,
come back.
I am not able to bear mental pain, physical pain. And I am not able to die.This is horrible, terrible.
Come back.
please come back
2008/07/27
Muslim Fraternity
என் அன்பு முஸ்லிம் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இந்து மதத்திலாவது சூர ஸம்காரம், ராவண வதம் என்று கடவுள்களே போர் தொடுப்பது கேள்விப் பட்ட ஒன்று.
ஆனால், கிறித்தவ மதமோ, புத்த மதமோ, முஸ்லிம் மதமோ " பழி வாங்கு " என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை.
" " பகைவனையும் மன்னிப்பாய் " " என்றுதான் சொல்கிறது
" காயம் பட்டவர்களுக்குதான் வலி தெரியும் " என்று நீங்கள் கூறினால் "பழி வாங்கினால்தான் எங்கள் மனக் குமுறல் அடங்கும் " என்று நீங்கள் கூறினால் [பழி வாங்குதல், ரத்தம் சிந்துதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லையெனினும் ] என்னால் உங்களை தடுக்க முடியவில்லை என்ற நிலையில்....... ..... நான் வைக்கும் வேண்டுகோள் இது.
யார் யார் உங்கள் மசூதியை இடித்து கோவில் கட்ட வேண்டும் என்று சொன்னார்களோ, சொல்கிறார்களோ, யார் யார் கர சேவைக்கு , பிற சேவைக்கு சென்றார்களோ அவர்களை மட்டும் தாக்குங்கள்.
எங்களைப் போன்ற அப்பாவிகள், இது எதிலும் சம்பந்தப் படாதவர்கள், பேருந்து நிறுத்தத்தில் நிற்பவர்கள் என்று ,, பாதுகாப்பற்ற, பரிதாபத்திற்குரிய மனிதர்களை ஏன் தாக்குகிறீர்கள் ?
நாங்கள் உங்களை புண்படுத்தவில்லையே..
இன்னும் சொல்லப் போனால்,, நாங்களே ஒரு வகையில் புண்படுத்தப் பட்டவர்கள்தான். புறக்கணிக்கப் பட்டவர்கள்த்கன்.
[ எளியோர் வணங்கும் மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் எல்லாம் LOWER GODS ...... என்று என்னிடமே ஒரு அம்மையார் கூறினார்.Lower Gods ..Lower people ....-அருமை]
மன்னித்தல் தெய்வ குணம்.
உங்கள் பழி வாங்கும் நடவடிக்கைகளை மீன்டும் ஒரு முறை பரிசீலனை செய்யுங்கள்
அன்பு சகோதரன்,
கார்த்திகேயன்.
அன்பு சகோதரி,
கலாவதி
2008/07/25
I like this IAS officer Iraiyanbu very much. A talented and admirable officer.
Long live Sir. my blessings.
This is from kumudham. where he has written about his experience.Because he is alive he had written this.Though he has tried to be comical, the real pain suffered by the concerned person can be understood only you experience it personally.
How many questions like this had I to answer when karthik met with his fatal accident. They tore me to pieces..It will take pages if I start narrating it.
Read this piece.
| ||||||||||||||||||
|
|
2008/07/19
will power--thy name is SUBRAM DUTTA
Was it guts?
Was it fate?
Was it his luck?
Was it just an accident?
Was it god?
[ GoD,,,,,,,reverse it,,,,DoG ]
(Why should a grateful animal be insulted ?because,give a day's food to any dog and you can see it following you gratefully, undertaking the responsibility of guarding you without any appointment order)....But do 100s of pujas, abishehams, and 101 offerings. ultimately,there is tragedy and there will be people giving all sorts of explanations that it 's fate, karma, past sins, previous birth's consequences.
WHAT kind of attribute be termed to the real hero Dutta. GREEEAAAT [Great*1oo]
It's nothing but his GRID, Tolerance ,and WILL POWER .As doctors said that there were so many chances of him dying either due to impact of the accident, bleeding, vital organs being damaged etc. It's not sheer luck that saved him. His phone calls, the friend who arrived immediately, and the DOCTORS ....
Its a real "FEAT ". A tremendous achievement.
[i want it to be posted by someone , the surgery, as i do not know the U Tube tech ].all must see it.what else can i say ? how shall i congratulate the DOCTORS except saying, "HATS OFF TO THEM.
2008/07/12
Possessiveness Humbly I wish to contradict Buddha who advocated Renunciation. A blasting statement? eh ! Please continue to read and find out whether this concept is justifiable. I f we follow the concept of 'no desire, no wishes ' lifestyle ,just sit awhile closed eyes imagining a world full of sages roaming around and people who have no wishes, no aims, living a life of prayer.Sure.It will be a land of robots. so Have Desires. BE POSSESSIVE. Possessiveness can be bifurgated into POSITIVE POSSESSIVENESS and NEGATIVE POSSESSIVENESS. Be Possessive.But Be Positive [ B+ ] One should have the right kind of possessiveness [ and you should religiously ],and this will help a human to be humane , and enables him to play the role of friend, philosopher and guide.You motivate your dears,encourage them,help them,serve them. And your nearness gives them comfort, safety and security.A sense of belongingness,which all human beings crave for at the heart of hearts. Be it demon or devil, every creature needs to belong. A LONGING for BELONGING. It will be quite apt to recall the Lord Shiva crying once for not having a mother and not getting the tender , affectionate hands holding him and caring him.If it's so for the Lord of LORDS ,it goes without saying that all creatures need to be possessive. [Take care not to be possessed ] What are the consequences of Negative possessiveness.Renounce this if you are determined to follow Buddha. This leads to all sort of family problems.The negatively possessed would want the life partner to be "mine and mine "only attitude which leads to all sorts of estrangements.If your wife has that kind of possessiveness,[ will it be synonomically right to say skewed ], the man is not allowed to perform the role of a sun, a brother,a friend and an employee.All will have to lose their peace. Leave that apart. Come back right to the right kind of possessiveness and belongingness which develops a bonding which is imperative .So inculcate this ,develop this and feel proud to be a character of possessiveness. |
2008/07/02
என்ன ஒரு அருமையான கீரை !
ஆனால் கொடுமை....இதை யாரும் இப்படி சொல்வதேயில்லை...
"கீரை " என்று கீரை விற்பவரின் குரல் கேட்டவுடன் 'மனத்தக்காலி,,மனத்தக்காலி ' என்று சொல்லிக் கொண்டே போனாலும், வாயைத் திறந்தவுடன் "மிளகுதக்காளி " இருக்கிறதா ? என்றுதான் கேட்க வரும்.
தலையில் 5,,6,,கொம்புகளுடன் வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு அதிசய பிறவியை பார்ப்பது போல் என்னைப் பார்க்க, நான் அவர்களை பார்க்க.............
இதை விட கொடுமை ......ஒரு கீரைக்காரம்மாவிடம் "மிளகுதக்காளி இருக்கிறதா ? என்று கேட்க அந்தம்மா " மொழவு " தக்காலிக் கீரையெல்லாம் இல்லை " என்று சங்கத் தமிழில் முழங்க...... ..... ....
நான் சீதையாக இல்லாததால்...... ..... ....
பூமித்தாய் இரண்டாகப் பிளந்து என்னை விழுங்காததால்..... ..... ....
நான் " வலையில் " மாட்டிக் கொண்டிருக்கிறேன
2008/06/28
TIT-BITS
2.Last Sunday , I chanced to view "RAMAYAN " in sun tv.
It was the marriage scene of Ram & Sita marriage. I sat glued with an inquisitive and analytical alert. And my intuition proved right.As expected it was a long narrative. All the Rishis and mahans were present and all the rituals carried out in detail.
But to my utter [ dismay ? ] amazement there was no such ritual as tying the " mangal sudra, the mangalyam, the thaali.
If it was not in practice then, when did it creep in ? By whom was it started?
3........RAM temple again ......
Our dear Advani has announced that Ram temple will be built.
Enough and more. It's we the common folk who suffered and bore the brunt.The so called great leaders will be given "A,B.C......X,Y,Z.." SECURITY.
what about us? should we face the same destruction and demolition of humanity again.
A hindu looks at a muslim suspiciously and scornfully.In the same way, muslims look at the hindus as their arch rivals. Finally, all move around fearing each other.
Bombs will blast here, there, in trains , in hotels, in temples killing the innocent and unprotected.
What's the need for more temples.?
More votes??/at the cost of more lives?
sweetest karthikeyan
2008/05/21
It's truly sad to see so many losing their lives.
But it's highly ironical to see a politician demanding 5 lacs as compensation to them.
Whose fault is it?
Did Govt ask them, or force them to drink ?
will it not be a bad precedence and it may encourage others also to drink.
Stop such grave demands.
sweetest karthikeyan
This soap gives an ad where a little girl goes ,closed eyes, and is particular about seeing her mom's face which would bring luck to her.
What a bad concept? Is it fair to inculcate such a foolish belief? All the kids ,seeing this ad, will unconsciously develop this idea.
We are living in 21 century. The NANO SPACE AGE. And we are taking the children to the 10 century.
I have seen even the highly educated believe in such idiocies.Will they realize that how much would it hurt the concerned person?
Please CHANGE.
Sweetest Karthikeyan
2008/05/12
பூனை குட்டியை துக்கிக் கொண்டு, [வாயில் கவ்விக் கொண்டு ] தன் குட்டியை பாதுகாக்க இங்கும் அங்கும் அலைவது போல்தான் என் மகன் கார்த்திக் இந்த தாயை இழுத்துக் கொண்டு அலைந்தான்.
மெனோபாஸ் எனும் கொடுமையில் தள்ளாடிய இந்த தாயை எத்தனை டாக்டர்களிடம் அழைத்து செல்வான். எனக்கு அறுவை சிகிச்சைக்காக அவன் பட்ட பாடு எத்தனை?
காரில் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென காரை நிறுத்தி விட்டு ஓடுவான். எதற்கு என பார்த்தால், கையில் ஐஸ்கிரீமுடன் வருவான். "இந்த கடை ஐஸ்க்ரீம் உங்களுக்கு பிடிக்கும் அல்லவா? " "
என்றாவது ஒரு நாள் போகிற போக்கில் சொல்லியிருப்பேன். அதை மறக்காமல், அந்த கடை பக்கமாக போய் வாங்கி தருவான்.
எனக்கு பிடித்த பாடல் சி.டி வாங்கி வருவான்.
தான் பெற்ற குழந்தை மீது ஒரு தாய் பாசம் காட்டுவது இயற்கையானது.
ஆனால், தன்னை பெற்ற தாய்க்கே தாயாக வாழ்ந்து காட்டிய என் கார்த்தியே " தாய்க்கெல்லாம் சிறந்த தாய்." "
அந்த தாயில்லாமல் வாடும் இந்த குழந்தைக்கு என்ன ஆறுதல்?
கார்த்தி என்னும் ஒப்பற்ற தாயின் அருமைப் புதல்வி.
2008/04/30
see, I used to see films very rarely. While Karthik used to see lot of movies, [he will bring CD s during weekends and see them ].He would like his mother to enjoy the film, while my sole worry would be about preparing food and sweets. And I will be enjoying his happiness. So i would never watch a movie completely.
But pathetically TIME has changed and i have no other choice to kill time, so i switch on the TV and now i come to understand that some movies are really worth .
And this film. MY !!!!!!!! Simply amazing.
My first impression was "oh, another love story ? "
I could have switched it off. Thank goodness. I did not do it.
This movie must be telecast in all schools compulsorily.
And the kids, hats off to them.
Will people understand this message?
And WE are born in a country where Gandhiji was born.
What ever the problem be, why don't we use AHIMSA?
The innocent people are targeted every time.
This should definitely change.
A peaceful nation should dawn.
Hopefully,
Karthik amma
2008/04/25
ஒரு கோர்ட்டில் கூட
நீதிபதி, "நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறுவதில்லை. "இந்த கோர்ட் ஆணையிடுகிறது " என்றுதான் கூறுகிறார். வேறு யாரும் இப்படி பேசுவதும் இல்லை. " எங்கள் ஆட்சியில் " என்றுதான் சொல்கிறார்கள்.
இந்த அம்மையார் ஆட்சியில் இருந்த போது, "அரசு உழியர்களுக்கு அகவிலைப் படி வழங்க "நான் " உத்தரவிடுகிறேன்''''' என்றுதான் சொல்வார். என்னவோ அவருடைய தாத்தா , பாட்டி சம்பாதித்த சொத்திலிருந்து கொடுப்பது போலத்தான் இருக்கும்.அதுவும் போனால் போகிறதென்று பிச்சை போடுவது போல!!!!
அரசு அலுவருக்கு உரித்தான ,உரிமையான ஒன்றை , அரசு கருவூலத்திலிருந்துதாந் தருகிறோம் என்ற நினைவே அவருக்கு வராதுதான் விசித்திரம். "தான்" என்ற சொல்லுக்கு என்ன மகிமை? யாராவது அவருக்கு புரிய வைப்பார்களா?
அட, அதற்கென்ன,
அதற்கும் ஒரு ஹோமம் வளர்த்தி, தமிழ் நாட்டு தாய்க் குலங்களை தீபம் ஏற்ற சொன்னால் முடிந்தது பிரச்சினை.
ஐயோ ,தமிழ் நாடே !!!!!!!!!!!!
2008/04/24
தொலைக் காட்சியில் ஒரு மதம் pidiththa யானை ஒரு மனிதனை காலால் மிதித்து கொள்ளும் காட்சியை காட்டினார்கள்.
எனக்கு நம் முண்டாசு முரட்டு புலவர் பாரதியார் நினைவுதான் வந்தது.
ஏன்? ஏன்?
அந்த கோவிலுக்கு தினமும் செல்லும் பாரதி ,தினமும் அந்த யானைக்கு பிரசாதம் தரும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி அவருடன் பழகியிருந்த அந்த யானைதான் அவரை காலால் மிதித்து கொன்றது.
அந்த நேரத்தில் அவருடைய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?
" காலா, வாடா , உன்னை காலால் உதைக்கிறேன் " " என்று பாடிய அந்த புலவன், அந்த தருணத்தில் உணர்ந்தது என்ன?
வாழ்க்கையில்தான் எத்தனை விடை தெரியாத கேள்விகள்.
பி.கு.
ஆனாலும் இந்த வீரப்பன் இல்லாமல் போனதும் இந்த யானைகளின் அட்டகாசம் அடக்க முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.
இனிமைக்கும் இனிமையான,
kaarththikeyan
2008/04/23
அடுத்த காட்சியில் அனைவரும் வயதாகி [ பேசத் தடுமாறும் அளவிற்கு ] வாதாடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு முடிந்த பாடில்லை. plywood மரம் அவ்வளவு நீடித்து உழைக்கும் என்பதற்கான விளம்பரம் அது.
அது சரிதான்.
ஆனால், ஒரு வழக்கு என்பது 20 அல்லது 30 வருடங்களாக இழுத்துக் கொண்டே இருக்கும் என்பதும் சரிதானோ?
சிரிப்புடன்,
இனிமைக்கும் இனிமையான
கார்த்திகேயன்
2008/04/20
வெறித் தனமாய், சுவரில் முட்டி மோதிக் கொள்கிறாள்.
ஓவென்று அலறுகிறாள்.
தக்காளி நறுக்க கத்தியை எடுத்தால், கை தன்னையுமறியாமல் கழுத்திற்கு செல்கிறது.
அல்லது, வயிற்றை மேலிருந்து கீழ் நீண்டகோடாக கிழிக்க ஆசைப்பட்டு, கத்தி வயிற்றை தொடுகிறது.
எங்காவது கெரோசின் கண்ணில் பட்டால், " இது உனக்காகத்தான்...எடுத்து ஊற்றிக் கொள் " என்று மனதில் ஒரு குரல் சத்தமாக கேட்கிறது.
தண்ணீரைப் பார்த்தால், " ஆ, இறங்கு, இறங்கு " என்று உந்துகிறது.
எத்தனை நாட்கள் அறிவு இவளைக் கட்டுப் படுத்தும் ?
தெரியவில்லை.....
ஆழ் மனதின் அபலைப் பெண் என்றாவது ஆக்ரோஷமாய் , ஆவேசமாய் வெளி வந்து விடுவாளோ என்ர பயத்துடனும், [ அதே அளவு ஆசையுடனும் ] நாட்களை கடத்துகிறாள் இவள்.
யாரோ புலம்பியது....
*************
2008/04/13
2008/04/08
please read this news clipping before reading my view.
have you read? As I have said in my previous posts, it's FATE which is the deciding factor. It's all HAPPENISM...If this has to happen this moment , it will happen. Why should his slippers be seen and why should someone guess that there might be one more person ?
அந்த நபர் பிழைக்க வேண்டும் என்பது விதி.இல்லையேல்,அவருடைய செருப்பை பார்க்காமலே சென்றிருக்கலாமே. அல்லது பார்த்தும் குட, இன்னொரு நபர் அந்த பைக்கில் வந்திருக்கலாம் என்று தோன்றாமல் போயிருக்கலாமே? அவர் உயிர் பிழைக்க வேண்டும் என்று விதியிருந்தால் எப்படியாவது பிழைப்பர்.
ஒரு சினிமா படத்தில், கதாநாயகி தன் டிரைவரிடம் கேட்கிறாள் "காதல் என்றால் என்ன? " என்று.
அதற்கு டிரைவர் சொல்கிறார் " காதல் என்பது ஒரு விபத்து போன்றது. நாம் எவ்வளவுதான் ஜாக்கிரதையாக வண்டி ஒட்டினாலும் நடக்க வேண்டும் என்று இருந்தால் "விபத்தை தவிர்க்கவே முடியாது"
இதுதான் உண்மை. கார்த்தி ஆறு வருடங்களாக அந்த Fiero பைக் ஒட்டியிருக்கிறான்.ஒரு சிறு விபத்து குட நடந்ததில்லை. முதல் விபத்தும் அதுவே.கடைசி விபத்தும் அதுவே.
அவன் சரியாக ஒட்டியும் சாலையில் ஓட்டும் அடுத்தவர் செய்த தவறுக்கு விதியைத் தவிர வேறு யாரை குறை சொல்ல முடியும்? ஆனால், அவன் விபத்தை ஒரு விவாதத்திற்குரிய விஷயமாக்குவதுதான் மிகுந்த வேதனையளிக்கிறது.
அம்மா
2008/03/28
ஒரு குடும்பத்தின் நம்பிக்கை விளக்காயிருந்திருக்கலாம் அந்த வாலிபர்...ஒரு 500 ரூ செலவு செய்து ஒரு ஹெல்மெட் வாங்கி போட்டிருந்தால் சாவை தடுத்திருக்கலாமே..//
அந்த வாலிபர் 500 ரூபாய் செலவுக்கு பயந்தாரா அல்லது ஹெல்மெட் எடுத்து சென்று விட்ட நண்பனிடம் முகத்தில் அறைந்தார் போல் எனக்கு ஹெல்மெட் வேண்டும் என்று கேட்க சங்கடப் பட்டு, ஹெல்மெட் அணியாமல் சென்றாரா என்ர உண்மை தெரியாமல் மனம் போன போக்கில் மற்றவர் மனம் புண்படும் படி எழுதுவது தப்பல்லவா?
2008/03/27
இந்த பணியில் பல பள்ளிகளிளுமிருந்து ஆசிரியர்கள் வருவர்.எல்லோரும் நண்பர்கள் ஆகி குடும்ப கதையெல்லாம் பேசிக் கொள்வோம்..நான் என் உயிர் கார்த்தி பற்றி சொல்வேன். அவன் பெருமைகளை பேசுவதுதானே என் முழு நேர தொழில்.
சென்ற வெள்ளியன்று, அப்படி பழகிய ஆசிரியை ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது. அவர்கள் என்னை பற்றி கூட கேட்கவில்லை. கார்த்திக்கு கல்யாணம் ஆகி விட்டதா எனறுதான் கேட்டார்கள். ""இன்னும் இல்லை """ என்று அவசரமாக சொல்லி vittu வேகமாக அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.அவர்களுக்கு திகைப்பாக இருந்திருக்கும்.""என்ன இது? எப்போதும் கலகலப்பாக பேசும் கலா ஏன் இப்படி ? ""....
அதே போல் இன்னொரு நண்பியை வங்கியில் பார்க்க நேர்ந்தது. அவரும் "கார்த்தி திபாவளிக்கு வருவானா? "" என்று கேட்டார்கள் .தலையை மட்டும் அசைத்து விட்டு ஓடி வந்து விட்டேன்.
என்ன முயன்றாலும் "கார்த்தி இல்லையென்று சொல்ல மட்டும் வாய் வருவதேயில்லை. அவன் இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதானே என் வெறி.
ஆனால், அவர்களிடம் அப்படி பதில் சொல்லி விட்டு வீடு வந்து சேர்வதற்குள் நான் பட்ட பாடு. சாலையிலேயே விழுந்து புரண்டு கதற வேண்டும் என்று ஏற்பட்ட வெறியை kattu படுத்திக் கொண்டு வீடு வருவதற்குள் ,,,போதும்..இன்னும் எத்தனை ஜென்மத்திற்கும் போதும்.போதும்.
2008/03/25
அன்பிலும் அன்பான கார்த்திக்.
2008/03/15
thank you for visiting my blog and registering your comment.it's a frantic,fanatic and a foolish effort of a grief ridden mother to make her son immortal.her aim in continuing my blog is that I will be remembered momentarily at least when the blog is read.my mother's grief is never diminishing and ever increasing .your kind words and sharing the grief is like the stars trying to brighten the world on a new moon day.though the result is feeble ,it's the most needed.please keep writing.
thankfully,
sweetest karthikeyan
2008/02/28
Writer Sujatha
An Excellent writer.
My salutes to him.
KIDNEY Oh kidney
முன்பெல்லாம் HIV test செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அனால், தற்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகுமுன் மணமக்கள் இருவருக்கும் இரு கிட்னியும் இருக்கிறதா என்றுதான் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்...காலத்தின் கொடுமை??????????????
ஜோக்:
ஏன் மாப்பிள்ளை கோபித்து கொண்டு போகிறார் ?
அவர் டாக்டர் மாப்பிள்ளையாம். நூறு கிட்னி வரதட்சினையாக கேட்டாராம். பெண்வீட்டார் 99 கிட்னிதான் தர முடிந்ததாம். அதனால்தான் கோபித்துக் கொண்டு தாலி கட்டாமல் ஓடுகிறார்...!!!! [கார்த்தி, உண்மையை சொல்..இது உன்னுடைய ஒரிஜினல் ஜோக்கா??
கார்த்தி:
பின்னே? மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்தார்களா என்ன?:
sweetest karthikeyan
2008/02/25
2008/02/15
I and Kushpoo
I wished to write this post long long back, but, since i could not scan and upload this photo, "though coming late, coming latest ".
As anyone would have guessed this is my [ karthik amma ] marriage photo. 14.12.1980.
what is the problem now? why? how is it related to kushpoo?....take a closer look at the photo....look at the bride entering the 'manavarai' wearing slippers.!!!!!!and it's 1980. I never realized that ....And none other also found it. It so happened ..It's a being used thing,, that's all...not a matter of insulting god or anything like that..
I feel one with Kushpoo who might have never realized the footwear.
What a lot of hue and cry was made over it ? Will anyone sue me too? ?
sweetest karthikeyan's
amma
2008/02/03
மிகப் பிரமாண்டமான அளவில் ஷங்கர் இயக்கத்தில், உருவாகவுள்ள ரோபோட் படத்தின் பெயர் ஆங்கிலத்தில் இருப்பதால், அதைத் தமிழ்ப்படுத்த முடிவு செய்யப்பட்டது. நல்ல தமிழ்ப் பெயரை செலக்ட் செய்யும் வேலையை சுஜாதாதாவிடமே ஒப்படைத்தார் ஷங்கர்.
சுஜாதாவும் தீவிர பரிசீலனைக்குப் பின்னர் இயந்திரன் என்ற பெயரை ஷங்கரிடம் பரிந்துரைத்துள்ளாராம்.
சுஜாதாவின் என் இனிய இயந்திரா, ஜீனோ ஆகிய கதைகளின் கலவைதான் ரோபோட் படத்தின் கதை. ஜீனோ என்பது கதையில் வரும் இயந்திர நாய். நாவலின் இரண்டாம் பகுதியில், ஜீனோதான் கிட்டத்தட்ட ஹீரோ போல இடம் பெறுகிறது.
இயந்திரன் என்ற டைட்டிலோடு, இயந்திரா என்ற பெயரையும் சுஜாதா பரிந்துரைத்துள்ளாராம். இதில் ஏதாவது ஒன்று படத்துக்கு பெயராக வைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்தப் பெயர் ரஜினிக்கும் பிடித்து விட்டதாம். இருப்பினும் இன்னும் கொஞ்சம் கேட்சி ஆன பெயராக இருந்தால் சொல்லுங்களேன் என்று சுஜாதாவிடம் கூறியுள்ளாராம் ரஜினி.
படத் தொடக்க விழாவுக்கு முன்னதாக பெயரை அறிவிக்க வேண்டும் என்பதால் விரைவில் டைட்டிலைப் பரிந்துரைக்குமாறு சுஜாதா கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளாராம்.////
dear jeevan,
look,what we have selected has been selected by Sujatha also.
but Rajini needs more catching name. shall we suggest " " MANINDRAN " "
or else, " " KANIPRIYAN"
MANINDRAN means manitha iyanthiram.
KANIPRIYAN means " kanini priyan "
what do u say jeevan ?
with luv and luv only,
SWEETEST KARTHIKEYAN
|
2008/02/02
MK vs JJ
She came , she talked, she walked as she had planned.
MK could have TURNED A DEAF EAR to her, pretending not to listen, and should have advised his party to do the same. What would have she done then but to bite the dust. And this 'grand lady' indulging in such cheap politics......and MK well known for his brilliance and tactful handling of the situation fell a prey to her net and subdued to her unethical offense . wasting time, energy and money [people's money ] as if they are playing some kid's game.
with luv and luv only,
sweeyest karthikeyan
2008/01/19
2008/01/17
Insulated
karthik amma
முன்பெல்லாம், நிறைவேற்றாத வாக்குறுதிகளை ''' தேர்தல் வாக்குறுதி போல் ''''என்று கேலி செய்வோம்.
இப்போது, முதல்வர் , எல்லா தேர்தல் வாக்குகளையும் நிறைவேற்றிக் கொண்டே வந்தால், சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர்களை, கேலி செய்ய என்ன சொற்றடொரை உபயோகிப்பது ? என்ன ஆயிற்று இந்த முதல்வருக்கு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக அல்ல நடக்கிறார்.
ரஜினி: : :
அது எப்படி இவரால் மட்டும் இப்படி பொன்மொழிகளாக உதிர்க்க முடிகிறது.
" " சாப்பிட்ட சாப்பாட்டை தானே வைத்துக் கொண்டால் , உடம்பு கெட்டு விடுவது போல் , ஒருவன் தான் சம்பாதித்த செல்வத்தை தானே வைத்துக் கொள்ளக் கூடாது " "
இதை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.
ஷ்ரேயா: :
அம்மணி ஆனாலும் படு கவர்ச்சியாகத்தான் வந்திருந்தார்....அதெல்லாம் தப்பில்லை. அவர் கால் மேல் கால் போட்டு, [அதுவும் ரஜினியின் முன்பு] என்பதுதான் தப்பாகிவிட்டது. அவருடைய கவர்ச்சி உடை சினிமாவில் வந்த போது எங்கே போயினர் இவர்கள் அனைவரும் ? சினிமாவில் வந்தால் , கலாச்சாரம் கெடாது. விழாவுக்கு வந்தால்தான் கெட்டு விடுமா? விசித்திரமாக இருக்கிறது.
பொங்கல்: :
அதென்ன , முதல்வர் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு கூடிக் கொண்டே போகிறது ? சமத்துவ பொங்கல் என்று சொன்னாலும் சொன்னார். சர்ச்சில் பாதியார்கள் முதல் எலோரும் பொங்கல் வைக்க கிளம்பி விட்டனர்.........புது பழக்கமாக பட்டாசு வேறு. எப்படியோ மக்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.
Sweetest Karthikeyan
2008/01/13
Truly Tamil
Aha, what a wonderful picture. Truly Tamil.But the SOCKS " "SHOCKS " ".Instead of the school uniform, they could have worn the saree or half saree which would have made everything magnificent. Don't chide me for writing in English.As Tamil font is not available at present ,this problem. sweetest karthikeyan |
2008/01/04
Dr ...vs...Er
Baffled is this simpleton karthikeyan.
Why should he ever compare the study period ?
Should doctors only earn in millions and others should get four digit salary only ?
This heart specialist wails that they have to pay rent and other expenses. Do they charge less? It's Rs.300 for a LONG SHOT and Rs. 500 for a close up.
Is any doctor poor? They own minimum two cars and a villa worth crores. If this doctor is reasonable he should think about the fact that not all doctors earn the same .There is high anomaly among themselves. One heart surgeon earns the highest where as his classmate [ course mate ] may be earning the least. For that matter, illiterates ,without high school study even , have become the business magnets. I can site two examples of "DEVI" theater owner and the Saravana bhavan Annachi.
If earning money is only the yardstick, what about our great scientists of ISRO who will be getting a simple salary for their mammoth task. What about our Forces who sacrifice their lives in their duty?
Dr, please ,i do honestly plead, not to compare on monitory terms. As you have pointed out in your letter , the corporate giants of hospitals may make treatment dearer, but as long as some good willed samaritan like you are there in the field, who will be willingly do free service, even the poor people will get good treatment..I am sure you will pledge an oath to serve the poor and prove that doctors are noble and service minded while 'these silly Engineers' only are running after money..
How crazy some people are?
sweetest karthikeyan