About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2020/12/31

நன்றி சொல்வோம்

 இந்த கோவிட் கொடுங்கோலாட்சியில் மக்கள் பட்ட கஷடங்கள் சொல்ல முடியாதது.

கிட்ட நெருங்க ,தொட ,உணவளிக்க சொந்தங்களே பயந்த காலத்தில் தங்களுக்கு நோய் தொற்றி கொள்ளும் வாய்ப்புகள் 100க்கு 200 % இருப்பது தெரிந்தும் சிகிச்சை அளித்து நம் உயிரை  காப்பாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் ,செவிலியர்களுக்கும் மற்றும் மருத்துவ மனையில் பணி புரிந்த அனைவருக்கும் தலை தாழ்த்தி நன்றி தெரிவிப்போம் .

//இந்த துப்புரவு பணியாளர்கள் எப்பொழுதும் செய்யும் வேலையைத்தான் செய்தார்கள்.அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி,பாத பூஜை செய்த காமெடிதான் தாங்க முடியாததாக இருந்தது.//

இதில் இன்னொரு பாராட்ட வேண்டிய விஷயம் பல மருத்துவர்கள் வாட்ஸ் அப்பில் சிகிச்சை கொடுத்தது.என் டாக்டர் விவேக் போன்றோர் பணம் , வருமானம் என்றெல்லாம் கவலை படாமல் அவ்வளவு அன்பாக ,பரிவாக உடனடியாக மருந்து மாத்திரைகள் தந்து உதவினார்கள்.

அவர்கள் போன்ற நல்லவர்களுக்கும் என் நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.

கார்த்திக் அம்மா

 

ஒழியட்டும் 2020

 என் 62 வயது வாழ்க்கையில் இப்படி ஒரு கொடுமையான காலம் நான் கண்டதில்லை.

என்ன ஒரு பயங்கரமான ஆண்டு??????????

எத்தனை அழிவுகள் ......

எத்தனை துயரங்கள் ....

மக்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சம் அல்ல ...

சுனாமி என்றால் ஒரு 10 நாடுகள் .

காலரா  என்றால் ஒரு 10 நாடுகள் .

எரிமலை என்றால் ஒரு நாடு .

மழை என்றால் பெரு வெள்ளம் ஒரு சில நாடுகள் ...

ஆனால் 

உலகம் மொத்தத்தையும் புரட்டிப் போட்டு 

அத்தனை மக்களையும் பயத்திலும் துயரத்திலும் வீட்டிற்குள் முடங்க வைத்த 

....2020....நீ ஒழிந்து போ .

நீ ஒழிந்து போ .

2020/12/01

புயல்

அடடா .புயல் புயல் என்று பயமுறுத்தி கடைசியில் அதற்கு கண்ணில்லை (nucleus ) இல்லை .அதனால் அது சக்தி இல்லாத புயல் என்று சில சிறு வெடிகளுடன் கடந்து போய் விட்டது.

2020/11/16

 

 என் மகனே
என் மகனே
தங்கமே
தெய்வமே
செல்லமே
உன் பிறந்த நாள் இன்று
....(14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.).....

14.11.1981         இந்த நாள் தான்

நான் உயிர் கொண்ட நாள்.

என் உயிரை நான் கண்ட நாள்.

என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.

என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.

வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik

 

2020/10/22

நானும் மாணவர்களும்

நானும் ஒரு டீச்சர் என்று செய்த அலப்பறைகள் கொஞ்சமா நஞ்சமா ?

comparative degree பாடம் நடத்தும் போது .....

மாணவர்களேதான் வாக்கியம் அமைக்க வேண்டும்.

'' English teacher is ........than commerce tr '''என்று போர்டில் எழுதி விட்டு மாணவர்களை fill up செய்ய சொல்வேன் .

ஒருவன் 

stricter 

simpler என்று ஏதாவது சொல்வார்கள் .கொஞ்ச நேரம் விட்டு 

English teacher is more beautiful என்றவுடன் ஒரே ஆர்ப்பாட்டம் .ஏண்டா மகன்களா (மாணவர்கள் மகன்கள் ...கார்த்தி , செந்தில் குட்டிஸ் ) ஒருத்தரும் இதை சொல்லவில்லை.எல்லோருக்கும் 5 மார்க் மைனஸ் .என்றவுடன் மறுபடியும் சத்தம்.

என்னை மிஞ்சிய மாணவன் இருப்பானே.மிஸ் u r more beautiful than ஐஸ்வர்யா ராய் '' என்பான்.

இப்படி பொய் சொன்னதால் உனக்கு 10 மார்க் மைனஸ் ......

++++++

அடுத்தது ...மாணவர்கள் ''மிஸ் பேய் இருப்பது உண்மையா ?''

ஏண்டா தினமும் உங்கள் english டீச்சரை பார்க்கிறீர்கள் .அப்புறமும் சந்தேகமா ?

இன்னும் கதை சொன்னால் நீண்டு கொண்டே போகும் .அவ்வப்போது எழுதுகிறேன்.

2020/10/09

B.E COUNSELLING

 கார்த்தி கௌன்சலிங் கதை .

கார்த்தி எண்ட்ரன்ஸ் தேர்வில் மாநில அளவில்  23  வது ரேங்க் .(  எந்த கோச்சிங் வகுப்புகளுக்கும் செல்லாமல் அவனே படித்து அந்த ரேங்க் வாங்கியதால் எல்லோரும் அவனை கொண்டாட )    

 அவன் என் அம்மா வீட்டின் 3ம் தலைமுறை  முதல் மகன் .செல்லமோ செல்லம் .அவன் கௌன்சலிங்கிற்கு 

நாங்கள் நால்வர்,

 என் அப்பா ,

அம்மா ,

என் மாமனார் ,

கார்த்தியின் பெரியப்பா ,

அவரது இரு மகன்கள் 

,என் கணவரின் நண்பர் என எல்லோரும் வரிசை கட்டி நிற்க 

பல்கலைக்குள் நுழைந்தால் ஏதோ கல்யாண மண்டபத்திற்குள் நுழைந்து விட்டோமோ என்ற சந்தேகம் வந்து விட்டது ..(கார்த்தி முதல் நாள் , முதல் பேட்ச் )  அந்த மாணவர்களுக்கு ஸ்பெஷல் வரவேற்பு .நாதஸ்வர மேளம் முழங்க கல்யாண வரவேற்பு 

.ஒரே திகைப்பு, பெருமை ,சந்தோசம் . 

டி .வி கவரேஜ் வேறு .நானும் என் அம்மாவும் அமர்ந்திருக்க , படம் பிடிக்க ,ஒரே அமர்க்களம் .அது வரை பக்கத்தில் உட்கார்ந்திருந்த செந்தில் அப்போதுதான் தாத்தாவிடம் போய் அவரை கலாய்த்து கொண்டிருந்தான்.வந்து பார்த்தால் டி .வி வேறு பக்கம் போய் விட்டது.

அடுத்த நாள் பள்ளிக்கு வந்தால் ஒரே கோரஸாக '' ''நாங்கள் உங்களை டி .வி யில் பார்த்தோமே '' '' என்று ஆசிரியைகள் உற்சாக பாடல் .

வாழ்க்கை எவ்வளவு இனிமையாக , சந்தோஷமாக இருந்தது .

காட்ச்சிகள் மாற, செந்தில் +2 படிக்கும் போது அவன் தந்தை இறந்து விட குடும்பம் சோகத்தில் மூழ்கி விட ,செந்திலின் கௌன்சலிங் எப்படி இருந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும் ?

2020/09/14

NEET

நீட் தேர்வு வேண்டுமா .B .E க்கு என்ட்ரன்ஸ் வேண்டுமா?

ஆம் வேண்டும்.

இது போல் ஒரு தேர்வு இருந்திருந்தால் நான் டாக்டராகி இருப்பேன்.1974,75 ல் வெறும் நேர்முக தேர்வு மட்டுமே.

அன்று என்னிடம் கேட்கப் பட்ட கேள்வி ''உனக்கு வடை பிடிக்குமா ,இல்லை முறுக்கு பிடிக்குமா ?''.என் வகுப்பில் படித்த என் தோழி என்னை விட குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தும் M .B .B .S ஸீட் கிடைத்து டாக்டரானாள் .பணமும் ,பலவும்  துணை நின்றன.

பல பள்ளிகள் +2 வில் 100% மதிப்பெண்கள் பெற வைக்கின்றன.அந்த மார்க்குகளை கொண்டு அவர்கள் மட்டுமே ஸீட் வாங்க முடியும்.அப்போதும் அந்த கிராம புற  மாணவன் i .t .i  அல்லது பாலிடெக்னிக் ல் மட்டுமே சேர்ந்தான் .

அதே போல் 100% வாங்கிய மாணவன் ஏழ்மை காரணமாக மருத்துவம் படிக்க முடியாத கதையும் உண்டு.

10000 மாணவர்களை படிக்க வைக்கிறார் ஒருவர் என்று   ஆர்ப்பாட்டம் செய்யும் ஒருவர் தன் சொந்த செலவில் படிக்க வைக்கிறாரா என்ற விளக்கம் வேண்டும்..அவருடைய பணம் 10000 மட்டும் என்று சொன்னார்கள்.பிற பல நல்ல உள்ளங்கள் பணமும் கொடுத்து உழைப்பையும் தருகிறார்கள் என்பது உண்மையா?

சரி அவ்வளவு நல்லவர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி தரலாமே .

நம் தமிழ் நாட்டின் சிலபஸ் நல்ல தரமான ஒன்று.ஆனால் blueprint என்ற ஒன்றை மட்டுமே நடத்தி அதிக மார்க்குகள் வாங்கி கடமை முடித்து கொள்ளப் படுகிறது .ஆங்கில பாடத்தில் practical உண்டு.telegram ,money order ,cheque ,pay  in slip ,resume ,application form ,email i .d ,interview ,debate ,railway reservation form இத்தனை இருந்தது.எந்த பள்ளியில் எத்தனை பேர் நடத்தினார்கள் .மாநில சிலபஸ்ஸை குறை சொல்ல வேண்டாம்.இந்த பாடங்களை சரியாக படித்தால் நிசசயம் நீட் பாஸ் செய்ய முடியும் .

M .G .R ஆசிரியர் வேலைக்கு T N P S C தேர்வு நடத்தியதால்தான் எனக்கு வேலையே கிடைத்தது.

இல்லை  வயது மூப்பு அடிப்படையில் என்று இருந்திருந்தால் எனக்கு வேலை கிடைத்திருக்காது.

சந்திராஷ்டமம்

இந்த ஒற்றை சொல் இப்போது மக்கள் அனைவருக்கும் தெரியும்.பலர் இன்று எனக்கு சந்திராஷ்டமம் .என்று சொல்ல கேட்கிறோம்.

அது பற்றி ஒரு விளக்கம்.ஒரு நட்சத்திரத்திற்கு 4 கால்கள்.அதாவது 4 பாதங்கள் .உதாரணமாக முதல் நட்சத்திரமான அஸ்வினி எடுத்துக் கொள்வோம்.ஒரு நட்சத்திரத்திற்கு 24 மணி நேரம் என்று கணக்கு .அப்படியானால் அஸ்வினி முதல் பாதம் '' ''6  '' ''மணி நேரம் ...அதாவது சந்திரன் அஸ்வினி முதல் பாதத்தில் '' ''6  '' '' மணி நேரம் மட்டுமே இருப்பார்.ஒருவர் பிறக்கும் போது அந்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .

அப்போது அவர் மேஷ ராசியில் பிறக்கிறார்.அதாவது சந்திரன் அப்போது மேஷத்தில் இருப்பார்.

சந்திரன் தன் சுற்றை தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பார்.மேஷம் ,ரிஷபம் இப்படி வரும்போது மேஷத்திற்கு 8 வது ராசி விருசசிகம் .அப்போது அஸ்வினி நட்சத்திர முதல் பாதத்திற்கு சந்திராஷ்டமம் .

ஆனால்   ''6 '' மணி நேரம் மட்டுமே.

எல்லோரும் சொல்வது போல் 2.5 நாட்கள் அல்ல .அந்த 6 மணி நேரம் என்பது இரவு 10 மணி முதல்முதல் 4 a .m வரைஎன்றால் அப்போதுதான் சந்திராஷ்டமம்.தூக்கம் சரியாக இல்லாமல் இருக்கலாம் .கெட்ட கனவுகள் வரலாம் .லேசான தலைவலி இருக்கலாம்.

இப்படி ஏதோ ஒரு சிறிய அசௌகரியம் .அவ்வளவுதான் 

ஆஹா சந்திரன் 8 ல் இருக்கும்போது அறிவு சரியாக செயல்படாது .அதனால் சரியான முடிவு எடுக்க முடியாது என்பது ஜோசியர்கள் வாதம்.

ஐய்யோ ,அப்படின்னா எனக்கு எல்லா நாளும் சந்திராஷ்டமம்தான் .எப்போது அறிவு!!!!!! வேலை செய்தது???????????.பல பேர் என் போல்தான் 

ஹி ஹி (just  kidding ).அதனால் என் பிளாக் படிக்கும் அற்ப சொற்ப // வாசக பெருமக்களே //ஜோசியர்கள் பயமுறுத்துவது போல் இது ஒன்றும் பெரிய பூதமல்ல.

NEXT 

ராகு ,கேது .

உண்மையில் 7 கிரகங்கள் .

அதனால்தான் வாரத்திற்கு 7 நாட்கள்.

வானவில் 7 நிறங்கள் .VIBGYOR 

அதனால்தான் சூரியன் 7 குதிரை பூட்டிய வண்டியை வாகனமாக கொண்டார் .

அப்படியானால் ராகு ,கேது ?

INFRA RED  and ULTRA VIOLET .அக சிவப்பு +புற ஊதா .அம்புட்டுதாங்க .

காலங்காலையில முடிஞ்ச வர குழப்பிட்டங்க .சோளி முடிஞ்சுதுங்க .காஃபி போட போவோணுமுங்க .

கலாகார்த்திக் ..கார்த்திக் அம்மா

2020/09/10

நீட் ..தற்கொலை

 அரசு 7 லட்சம் நிதி ..

இது நிதி அல்ல அநீதி .

அரசு என் மீது கோபம் வேண்டாம் .

இந்த அரியலூர் மாணவன் நீட்டிற்கு தயாராகி வந்தான் .தோல்வி பயத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான் என்கிறார்கள் .

(  // என் பழைய பதிவு ஒன்றில் இப்படித்தான் சுஷாந்த் தற்கொலை பற்றி பாவம் என்று ஒரு பதிவிட இப்போது அவர் பற்றி வரும் செய்திகளை படிக்கும் போது வேதனையாக இருக்கிறது .//)

அதே போல் இந்த மாணவன் தற்கொலை பற்றி ஆராய வேண்டும் .

சரி, அப்படியே அவன் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டால் அதை ஏன் நியாய படுத்த வேண்டும் ?இந்த தேர்வை எதிர் கொள்ள முடியாத இவன் மருத்துவ தேர்வுகளை எப்படி எழுதுவான் ?

அதென்ன படித்தால் M .B .B .S மட்டுமே படிக்க வேண்டும்?

மற்ற படிப்புகளை படித்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாதா ?

யார் கிளப்பி விட்டார்கள் இந்த தப்பை ?

Flashback :நான் என் மாணவர்களிடம் கேட்பேன் ''நீங்கள் மேற்படிப்பு என்ன படிக்க விரும்புகிறீர்கள் ? ''

பல மாணவர்கள் M .B .B .S என்றுதான் சொல்வார்கள் .ஏனென்றால் அப்போதுதான் நிறைய சம்பாதிக்க முடியும் என்பது .

எத்தனைடாக்டர்கள் அப்படி 1001 கோடி சம்பாத்தித்து விட்டார்கள்?

நான் சொல்வேன்,  நீ 100 கோடி சம்பாதித்து 500அடி bedroom ல் 100 அடி படுக்கையில் படுத்தாலும்   உன் உயரத்திற்கும் அகலத்துக்கும் மட்டும்தான் படுக்க முடியும்....அப்போதும் நிம்மதியான தூக்கம் வர வேண்டும் ...

மருத்துவர்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற எண்ணத்தை வேறு உருவாக்கி வைத்துள்ளார்கள்.

நானும் மருத்துவம் படிக்க ஆசை பட்டேன்  .போதிய மார்க் இருந்தாலும் பெண்பிள்ளை என்பதால் தந்தை ஆர்வம் காட்டவில்லை .நான் சாதிக்கவில்லையா ?

NEXT :அரசு அறிவிக்கும் நிதி ./ இப்படியே எல்லா மாணவர்களுக்கும் நிதி தந்தால்  மாணவர்கள் தற்கொலை தொடரும் .

23 அரியர்ஸ் எல்லாம் என்ன செய்யும்? இது ஒரு தப்பு.மாணவர்கள் படிக்க உதவலாம் .அவனுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தரலாம் .அதை மீறி அவன் பெயில் என்றால் அது அவன் தப்பு .அந்த படிப்பை விட்டு அவனால் முடிந்த படிப்பை படிக்க வேண்டும்.

2020/09/08

arrears

 B.E  மாணவர்கள் அரியர் தேர்வு விவகாரம் குறித்து சில கருத்துக்கள்.மாணவர்களின் பிரசினை .

12ம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதில் படித்து 100%  மதிப்பெண்களை பெற்று விடுகிறான் .( இதற்கு காரணம் ''blue print '' )

அப்படி மதிப்பெண் பெட்ற  மாணவன் தன்னை மிக புத்திசாலியாக நினைத்துக் கொண்டு கல்லூரிக்கு வருகிறான் ,அங்கு M 1, M 2, M 3 என்ற 3 பூதங்கள் அவனுக்கு எதிரே நிற்கின்றன .+2 வில்  கணிதத்திற்கும்  இந்த கணிதத்திற்கு துளியும் சம்பந்தமில்லை .+1 ல் கணிதமே நடத்த மாட்டார்கள் .

M 1ல் fail .SHOCK .+2வில்  200 க்கு 200. இப்போ FAIL .மச்சி ,,,,நண்பனும் FAIL .அவமானம் .ஆத்திரம் .தோல்வி அடைந்த மாணவர்கள் ஒரு குரூப் .சிகரெட் ,தண்ணி ஆரம்பிக்கிறது .தோல்வி தொடர்கிறது.

.     அதுதான் ///23...///அரியர்ஸ் க்கு முதல் காரணம் .

2  வது ..பாடம் நடத்துபவர்கள் ...பாதி பேர் தகுதி குறைந்தவர்கள் .நடத்த தெரியாதவர்கள் ..நானே பார்த்தேன் ..ஒரு ஆசிரியர் 25 பக்க குறிப்புகள் கொண்டு வந்தார் .படிக்கத்தான் தெரிந்தது .சொல்லித் தர தெரியவில்லை.மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .மாணவர்களை பார்த்தால் பாவமாக இருந்தது .

மாணவர்களுக்கு புரியும்படி நடத்த தெரியவில்லை என்று ஒத்துக் கொள்ளாமல் மாணவர்கள் முட்டாள்கள் என்று பழி அவர்கள் மேல் .

பழைய கதை ....ஒரு நாள் கணித பாடம் முடிந்து அடுத்த பாடவேளை என்னுடையது .ஆங்கிலம் ...மாணவர்கள் கணித ஆசிரியர் போர்டில் எழுதி சென்றதை அவசரமாக எழுதிக் கொண்டிருந்தனர்.

.....மாணவர்கள் கேட்டனர் ..மிஸ் இதை படித்து எங்களுக்கு என்ன பயன்?...நான் அப்போதுதான்...M .B .A படித்து கொண்டிருந்தேன்.உடனே அந்த கணிதம் அடிப்படையில்தான் 8 வது E M I எவ்வளவு ,என்பது எல்லாம் கணக்கிட முடியும் என்று ஒரு விளக்கம் கொடுத்தேன் .மாணவர்கள் ''மிஸ் இப்படி சொல்லிக் கொடுத்தால் எங்களுக்கு புரியுமே என்றனர் ''

அதுதான் விஷயம்.no application based .வெறும் தியரி .

NEXT :அடனோமாஸ் கல்லூரிகள் ..இங்கு அனைவரும் பாஸ் .80%.அவர்களுக்கு புத்தகத்தை பார்த்து விடை எழுதும் வசதி.அவர்கள் ஆசிரியர்களே விடைத்தாள் திருத்தி மதிப்பெண் வழங்குவர் .

இவர்களின் தரம் என்ன ???

NEXT ...இப்போது வழக்கு போட்டிருக்கும் அந்த பதவிக்கு வருவதற்கு எத்தனை கோடி லஞ்சம் கொடுத்தார் தெரியுமா ????????

அவர் பேசுகிறார் தரம் பற்றி ...சரி 2018 ல் எத்தனை மாணவர்களுக்கு '0 ' மதிப்பெண் போட்டு அவர்களை போனில் அழைத்து பேரம் பேசி பாஸ் செய்ய வைத்த போது அந்த V .C என்ன செய்தார் ????அன்று fail ஆன மாணவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை .இவர்கள் பண வெறிக்கு ஆளான மாணவர்கள் ARREARS மாணவர்கள் .அந்த விடைத் தாட்களை எரித்து விட்டார்களே .அப்போது யார் V .C .

கேள்விகள் இங்கே ....பதில் எங்கே ...

இப்படி தர்ம பாஸ் பெரும் மாணவர்களுக்கு உடனே வேலை கிடைக்காது .கம்பெனி வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் . அங்கே திறமை உள்ளவனுக்குத்தான் வேலை கிடைக்கும்.

 

 

2020/08/26

karthik's bye bye

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.
.....
தன் அம்மாவை தவிர இந்த உலகில் எதுவுமே தேவை இல்லை என்று வாழ்ந்த மகன்.
2002ல்
ஒரு பெரிய U .S கம்பெனியில் வேலை வந்தும் அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
(அவன் நண்பர்கள் என்னைத்தான் திட்டினர்.நீங்கள்தான் கார்த்தியின் எதிர் காலத்தை கெடுக்கிறீர்கள். எங்களுக்கு எல்லாம் மைக்ரோ சாஃப்ட்டில் வேலை கிடைக்காதா என்று ஏங்குகிறோம்.)
நான் கார்த்தியிடம் ''போய் வா கார்த்தி.'' என்றுதான் சொன்னேன்.உறுதியாக மறுத்து விட்டான்.அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற வைராக்கியம்.அது எவ்வளவு பெரிய வேலை ,எவ்வளவு பெரிய சம்பளம் என்றாலும் சரி அம்மாவை விட்டு போக மாட்டேன் என்ற மகன்.
ஒரே அடியாக விட்டு விட்டு போய் விட்டான்.
எப்போதும் புலம்பல்.
அழுகைதானா
என்று குற்றம் சொல்பவர்களுக்கு ..
கார்த்தி போல் ஒரு மகன் கிடைக்க 100 கோடி ஜென்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அவன் அன்பு, அறிவு, அடக்கம் ...சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த அன்பு மகனை இழந்த நாள்.
ஒவ்வொரு நிமிடமும் அவன் நினைவால் தவிக்கும்
கார்த்திக் அம்மா 

 



(    hi aunty.. the day Karthik left us, but his memories. he was a wonderful human being, he was a well wisher of me, a confidant.. I miss him a lot.. many a times he has come alive in my dreams and has seen you and Karthik in the Bangalore apartment, I was only continuing to sleep since the dream will get stopped.. now.. we friends miss him a lot. he was witty, clever, and a loving person to be with.. naveen, gk, Arvind, vasanth, manikandan, AP, Vijayakumar.. we talk about him when we chat.. we miss him, wish he has stayed with us in our journey.
Send a message  )

Mail sent by Krishnaram, Karthik's best friend


1:08 AM (12 hours ago)



2020/08/03

Miracle:

:அழுகை

Miracle:
I think this piece had been written in 2006. Accidentally I came to see it when I was Searching for some other paper.
It goes like this.
......   .............
One of Karthik's friends while trying to comfort me said :
''I read in a book that  '' you should not encourage any person to cry. It's very bad.Somehow see to it that they stop shedding tears''
After he left I might have written this.
*********
May be if its a drama ,an acting ,an attempt to make belief  ,if I cry to create a scene , to get sympathy ,the tears will stop.
If you don't cry with me
I will cry alone
Will my tears stop
If you don't cry with me?
Will my tears stop?
Will it?
Its spontaneous and who can arrest the bubbling stream of Coorg, the Thalai Kaveri?
Do I expect you to cry with me?
If you cry thats up to you.
If you don't cry that's also up to you.
That 's not going to make any difference in my grief.
If at all I recover that will be a miracle.
அந்த நண்பன் சொன்னான் .அவன் என்னுடன் சேர்ந்து அழ மாட்டானாம்.அது தவறு என்று படித்தானாம்.
என்னை வந்து பார்ப்பதையும் ,என் சோகத்தை பகிர்ந்து கொள்வதிலும் இருந்து விலக அவனுக்கு ஒரு காரணம் தேவைப் பட்டது.
விலகிக் கொள் .
அதற்கு எதற்கு ஒரு மொக்கை தத்துவம்?
என் துக்கம் எனக்கு.அது நீங்கினால் அதிசயம்.
எதுவும் நடக்கலாம்.
நாம் யார் எதையும் தீர்மானிப்பதற்கு?
என் அழுகை நாடகமா ?
போதும் என்றவுடன் நிற்பதற்கு? அடி வயிற்றிலிருந்து வெடித்து கிளம்புகிறது.
பார்ப்போம்.

2020/08/01

1 August 2005

1 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.

இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.

இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இன்னும் 25 நாட்கள்தான் அவனுடன் இருப்பேன் என்று தெரியாமல் சந்தோஷமாக ....போனேன்.
26ம் தேதி எல்லாம் முடிந்து போனது.
எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2020.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2020/07/21

ஷஷ்டியும் சர்ச்சையும் 2

நேற்று ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டு விட்டேன்.பதிவின் நோக்கமே திசை திரும்பி விட்டது.
நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு.அது நம்மை ஆட்டுவிக்கிறது.அதற்கு கடவுள் என்று பெயர் சூட்டி அவரை வழிபட்டால் நம்மை காப்பார் என்ற நம்பிக்கை வளர்ந்துள்ளது.
ஆனால்....
ஒரு விஷயம் பாருங்கள் ...
எல்லா மதத்திலும் கடவுள் மனித உருவிலேயே காட்சி படுத்த பட்டுள்ளார்.
ஒரு டாக்டர் நம்மை காப்பாத்தினால் ''டாக்டர் நீங்கதான் என் தெய்வம் '' என்கிறோம்.
அப்படித்தான் நம் முன்னோர்களும்.நம்மை வாழ வைத்தவர்களை நன்றியுடன் நினைத்து (அப்போது  புகைப்படம் இல்லாததால் )சிலை வடித்து ,பிறகு பூஜையாக மாறி ,  இப்போதைய நிலைமைக்கு வந்துள்ளது.
எனக்கு பிடிக்காத விஷயம் என்ன என்றால் ...
இந்த மந்திரங்கள் , வேதங்கள், பாடல்கள் ,ஸ்தோத்திரங்கள்...
 எந்த கோவிலுக்கு போனாலும் அர்ச்சனை செய்வதில்லை.
அது என்ன ?
என் கடவுளிடம் நான் பேச கூடாதா?
என் மொழி அவருக்கு புரியாதா?
யாரோ ஒருவர் எனக்காக எனக்கு புரியாத மொழியில் சொல்லி எனக்கு வரம் வாங்கி தருவது?பசிக்கும் போது குழந்தை அழுகிறது.
''அது அம்மா எனக்கு பசிக்கிறது '' என்று செந்தமிழிலா சொல்கிறது?
அந்த தாய்க்கு அந்த அழுகை புரிகிறது.
அது போலத்தான் நானும் .கடவுளாகிய என் தாயிடம்
''முருகா '' என்ற ஒற்றை வார்த்தையை சொல்கிறேன்.
முருகனுக்கு என் வேண்டுதல்கள், குறைகள் ,கஷ்டங்கள் புரியும்.
இடை தரகர் தேவையில்லை.
இவ்வளவு சர்சசைகளும் தேவையில்லை.
இதுதான் என் கோவில்.
கார்த்திதான் என் தெய்வம் .
UNCONDITIONAL LOVE .
தூய்மையான அன்பு.
அதனால் என் தெய்வம் .
சிலை வடித்தேன் .
காலடியில் அமர்ந்து
''கார்த்திம்மா ''  என்றேன்.
ஜென்ம சாபல்யம் பெற்றேன் .

2020/07/20

ஷஷ்டியும் சர்ச்சையும்

நானும் இந்துதான்.
RELIGIOUS TOLERANCE அதிகம் உண்டு.எல்லா மதத்தையும் மதித்தாலும் என் மதம் மேல் பற்று அதிகம்.பக்கத்து  வீட்டுக்காரரை அம்மா  என்று கூப்பிட்டாலும் என் அம்மா என்பது கொஞ்சம் ஸ்பெஷல் போல...
நானும் தினமும் ஷஷ்டி பாடல் சொல்வேன். (36  உருக் கொண்டு)  என்று ஒரு விஷயம் நடக்க வேண்டும் என்று  எத்தனையோ நாட்கள் 36 முறை சொல்லி இருக்கிறேன்.
ஆனால் இது வரை ஒரு விஷயம் கூட நடக்கவில்லை.
32 பல்  காக்க என்று பாடினேன்.
6 பல்  பிடுங்கியதுதான்   பலன் .
............... கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
கட்டி  உருட்டு கைகால் முறிய...........
என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை .
ஆனாலும் பிறர்  நம்பிக்கையில் கை  வைக்கவில்லை.
இப்போது நடக்கும் சர்சசையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
கறுப்பர் கூட்டம் முருகனை பழித்ததா 
அல்லது 
அந்த பாடலை கேலி செய்ததா?
எதுவாக இருந்தாலும்
அவர்கள் சொல்லிய கருத்துக்களுக்கு பதில் சொல்லுங்கள் .
அதை விட்டு ஆஹா எப்படி சொல்லலாம் என்று குய்யோ முறையோ என்ற கூப்பாடு எதற்கு?
டி .வியில் 7 மணிக்கு ஆரம்பித்து ------4 பேர் உட்கார்ந்து -----அது போல்தான் இதுவும்..
பொறுமையாக பதில் சொல்லுங்கள்.அந்த பதிவை டெலிட் செய்யாமல் மீண்டும் பதிவேற்றுங்கள்.
எங்களுக்கும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்று தெரிய வேண்டும்.
ஆனாலும் மதங்களில் நடுவில் வந்த இடை செருகல்களும் ,நேரிலேயே கூட இருந்து பார்த்த மாதிரி (எல்லா மதங்களிலும் ) சொல்லும் நிகழ்வுகளும் ....
அப்பப்பா ..பொறுமையை சோதிக்கின்றன.

Karthik Karthik

this was posted by karthik in 2004
3 Names you go by:
Kuchi
Demi
Karthik

3 Screen names:
PonniyinSelvan
Neo
Aragon

3 Physical things you like about yourself:
Me
Me
Me

3 Physical things you don't like about yourself:
NA
NA
NA

3 Parts of your heritage:
Rich colorful history
Endurance
Honour

3 Things That Scare You:
Idiots
Theory Exams
MBA Assignments

3 Of Your Everyday Essentials
Music
Computer w/ net conn
Bike/Car

3 Things You Are Wearing Right Now
Shirt
T-Shirt (yeah, one on another)
Jean

3 Things You Want In A Relationship
Dependence
Independence
Sensibility

Two Truths and A Lie (in no particular order)
I am always logical
I am hyper-egoistic
I am in love

3 Physical Things About the Opposite Sex That Appeal To You
Liveliness
Dressing Sense
Eyes

3 Things You Want To Do Really Badly Right Now
Dance like crazy
Drive like crazy
Rock-climbing

3 Careers You Are Considering
Archaeologist
Director
Technical Architect

Three Places You Want To Go On Vacation
Hampi
Ladakh
Switzerland

Three Kids Name You Like
Ilaya Pallavan (I named my uncle's kid so. He will grow up to curse me, I guess)
Arun
Kayazhvizhi

Three Things You Want To Do Before You Die
Make a movie on Vijayanagar
Build Indian history database
Write a path-breaking AI application

People Who Have To Take The Quiz Now:
Mani@Balasubramani
Sudhakar
Kicha

No comments:

2020/06/27

Sushanth

Sushanth சிங் .
மன்னிக்கவே மாட்டேன் .ஆம்.சுஷாந்த் மேல் எனக்கு பாவம் ,பரிதாபம் வரவில்லை.
கோபம்தான் வந்தது.
உலகில் எத்தனையோ பேர் எவ்வளவு கஷ்டங்களுடன் வாழ்கின்றனர்.ஒவ்வொரு கஷ்டத்திற்கும் ,ஒவ்வொரு தோல்விக்கும், ஒவ்வொரு நோய்க்கும் தற்கொலைதான் முடிவு என்றால் ,
நானெல்லாம் எத்தனை முறை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்???????
நான் என்ன கல் நெஞ்சுக்காரியா???????
உயிருக்கு உயிரான மகனை,கணவனை,அண்ணனை ,தாய் தந்தை என இழந்து,நடை பிணமாக ,ஒரு எலும்பு கூடாக ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்???????
ஒரு கடமை (இளைய மகன்) ........
தூங்கும் போது கூட என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோட ,அதனால் தூக்கம் போய் ,விழித்து ,அழுது ,
........எதற்கு இந்த கொடுமையான வாழ்க்கை????????
அன்பு,பாசம் என்ற வார்த்தைகளை விடுங்கள்.
கடமை .....
சுஷாந்த் ,...உனக்கு அந்த கடமைகள் இல்லையா??
3 வருடம் தவம் இருந்து பெற்ற மகன் என்று அந்த தந்தை,(உன் அப்பா )அழுகிறாரே .அதற்கு என்ன பதில்?
உன் தங்கையின் எதிர்கால வாழ்க்கையை நல்ல படி அமைத்து கொடுக்க வேண்டிய அண்ணனின் கடமையில் தவறினாயே .சரியா?
உன் புகழ் ,உன் காதல்,உன் சினிமா என்று சுயநலமாக இருந்து விட்டாயே.
இப்படி ஒரு சுயநலவாதியை என்னால் மன்னிக்கவே முடியாது.உன் மேல் கோபம் தான் வருகிறது.

2020/06/11

karthik's post..16 th june 2005

Mustang, here I come! Montoya, here I come!

I am travelling to Austin tomorrow, for a month's stay. No body knows why I have to go to Austin to do the same work, I have been doing(or not doing) all the while here. Anyway, at least I will get to take that Ford Mustang for a spin again. That was the part I loved most in my last trip too.

But thats not all. We have to grow up. We gotta keep doing greater things. So I am gonna watch one Mr.Juan Pablo Montoya drive one car called Mclaren in one Indianapolis Motor Speedway in a event called Formula 1 U.S Grand Prix. Let me pinch myself again. 3 weeks ago I wasn't sure I will watch an F1 race in my life time. In two days time, its gonna be a reality. (if all goes well, that is)

What next? I am planning a vacation in London on my return journey, subject to the British Consulate in LA giving me a visa. What with my gang-mate NaveenRaj in London assuring complete sponsorship for the vacation and my company sponsoring my travel this is one helluva deal of a lifetime to tour London for free...

Have kept the rest of my schedule pretty open to accomodate any wacky ideas me and my friends there can generate(A visit to NYC is on the cards..) So stay tuned to hear my exploits.. (No. not like the one from my last visit where I banged my Mustang against a Dodge Ram! or that tumble down that ski slope without my skiing sticks!!)

2020/06/02

2005 june 3

JUNE 3 2005
மீண்டும் மீண்டும் அதே புலம்பல்
//...//இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..//..//
// //1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //

இது இன்று 03/06/2020
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம் என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு கட்டளை இட்டதால் பணி  மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்  இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல 
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி. 
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா..கார்த்திக் அம்மா

2020/05/29

1947 or 2020

poverty ..ஏழ்மை
ஏழைகள் .வறுமை என்றெல்லாம் இருக்கும் இந்த வார்த்தைகளை டிக்சனரியில் இருந்து எடுத்து விட்டு ஏதாவது புது வார்த்தை உருவாக்கலாம் .என்ன இந்த கொடுமை??????????
டி .வி யில் பார்க்கும் போது வயிறு வாயெல்லாம் பத்திக்கிது என்று கிராமத்தில் சொல்வார்கள் .அதுதான் உண்மை.
இவ்வளவு ஏழ்மையா ??
1200 கி.மீ நடக்கிறார்கள்.
ஒரு மாட்டு வண்டியில் ஒரு பக்கம் மாடு .அடுத்தது மனிதன்.வண்டி இழுக்கிறான்.
ஒரு தாய் சூட்கேசின் மேலேயே உறங்கும் மகனை இழுத்து செல்கிறாள்.
இப்படி எண்ணில் அடங்கா துயர காட்சிகள்.
ஒரு வேளை உணவின்றி தவிக்கும் மக்கள்.
''தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் ''என்றாயே முண்டாசு கவிஞா .
உன் மக்கள் இத்தனை பேர் இப்படி பசியால்,தாகத்தால் சாகிறார்களே .
எங்கே தவறினோம்???????
family planning நடைமுறையில் தமிழ் நாட்டில் முழுமையாக செயல் பட்டதின் விளைவு ,இங்கு வறுமை குறைவு.
வட மாநிலங்கள் என்ன செய்தன?
ஏன் வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை?
......
leave the past .இப்போதாவது அந்த மக்களுக்கு உணவு,போக்குவரத்து வசதி செய்து தந்து அவர்களை அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்க கூடாதா?
மனமெல்லாம் இருள் .....
நம்பினால் நம்புங்கள் ....
சாப்பாடு பிடிக்கவில்லை....
வேதனை மனதை பிராண்டுகிறது.
1947 ல் இப்படித்தான் கூட்டம் கூட்டமாக நடந்தார்கள்.
அப்போது நிலைமை முற்றிலும் வேறு.
இப்போது அப்படியா?
1947 black and white ல் பார்க்கும் போது ஏற்பட்ட வலி இப்போது 1000 மடங்காகிறது.

2020/04/23

America

என்ன ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு .எனக்கு எழுந்து நின்று அவர்களுக்கு சல்யூட் வைக்க வேண்டும் போல் இருந்தது.இயற்கை எய்திய ஒரு டாக்ட்டரின் மனைவிக்கு அவர்கள் காட்டும் நன்றி.இந்த விடியோ பாருங்கள் .
Apr 21, 2020, 10:22 PM (17 hours ago)



https://youtu.be/X65fFkuImvw
தலை தாழ்ந்து வணங்கும்
கார்த்திக் அம்மா

2020/04/17

பொன்குஞ்சு

இது ஒரு மீள் +..புது பதிவு.
2017ல் ......//
அதிசயம்
என் வீட்டருகே இருக்கும் மரத்தில் ஒரு காகம் கூடு கட்டி முட்டை வைத்திருந்தது.
அதை கவனித்துக் கொண்டிருந்தேன்.
முட்டையை உடைத்து குஞ்சு வெளியே வந்து கொண்டிருந்தது.
ஆச்சரியத்தின்  எல்லைக்கே சென்று விட்டேன். 
அந்த குட்டி காகம் அப்படி ஒரு தங்க (golden ) நிறத்தில் வெளி வந்தது.தக தக என்று மின்னியது .
அதனால்தான் காக்கைக்கும் தன்  குஞ்சு பொன் குஞ்சு என்று சொன்னார்களோ?????????
நேற்று இரவிலிருந்து மழை.
தாய் காகம் கூட்டில் அமர்ந்து சிறகால் குட்டியை காத்து வருகிறது.
தாய்க்கு ஏதாவது ஆகி விடுமோ என்று கவலையாக இருக்கிறது.
உணவு வைத்தாலும் சாப்பிடுமா என்று தெரியவில்லை.
ஒரு குடையை கூட்டின் மேல் வைக்கலாமா என்ற யோசனையும் வந்தது.எப்படி என்று தெரியவில்லை.
காகம் அசையாமல் உட்கார்ந்து இருக்கிறது.
கவலையாக இருக்கிறது.(குஞ்சுகளுக்கு ஒரு சேதமும் இல்லாமல் தாய் பறவை காப்பாற்றி விட்டது.).......
......    .........
இப்போது ஏன் இந்த மீள் பதிவு?
கொரோனாவில் இத்தனை பேர் இன்று உயிர் இழந்தனர் என்று ஒரு நம்பரை சொல்கிறார்கள்.
10000கணக்கில் மடிகின்றனர்.
எண்ணிக்கையை ஒரு நிமிட மௌனத்தில் கடந்து போகிறோம்.
ஆனால்
அந்த தாய்க்கு,
அந்த தங்கைக்கு ,
அந்த தம்பிக்கு
அந்த ஒருவன்தான் எல்லாம்.
அவன் இல்லாமை என்று மறையும்?
காலம் மாற்றும் என்று சொல்வார்கள்.
ஆனால் இது காலம் மாற்ற முடியாத சோகம் .
ஒவ்வொரு நிமிடமும் மனதில் கனன்று கொண்டிருக்கும் நெருப்பு.
இடைவிடாத சூறாவளி .
நித்தமும் வெடிக்கும்  சுனாமி.
........
அதுதான்
......காக்கைக்கும் தன்  குஞ்சு பொன் குஞ்சு 
இறைவா என்று கூப்பிடலாம் என்றால் அவரும் கதவை பூட்டிக் கொண்டார்.சாட்சிக் காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பார்கள்.
கொரோனா ,போதும்.
உன் பேய் ஆட்டத்தை நிறுத்திக் கொள் .மனம் வெடிக்கிறது.please ,please 
STOP YOUR ARROGANCE . 

2020/04/12

Vexed

ஒரே எரிச்சலாக இருக்கிறது.ஒரே ஒரு வார்த்தை.
உலகத்தையே புரட்டி போட்டு ,எல்லா வேலைகளையும் நிறுத்தி ...
அதை விட ஒரு பெரிய விஷயம்....பயம்..பயம்..பயம்
இப்படி பயத்திலேயே வாழ்வது கொடுமை.

2020/04/03

Happenism

மீள் பதிவு
 I   have instituted a new religion.
HAPPENISM
மீள்பதிவு.
HAPPENISM   HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as it happen.
இந்த பதிவு எழுதி பல ஆண்டுகள் ஆகி விட்டன.இருப்பினும் மீண்டும் புதுப்பித்தேன்
அன்புடன்
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா
இந்த பதிவு எப்போதோ எழுதியது.இப்போது மீள்பதிவு.
அப்போது தமிழ் டைப்பிங் தெரியாது.அதனால் ஆங்கிலத்தில் .

முதல்ல சோறு கொடுங்க

மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும்  செய்கிறோம்.
உணவும்  இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....no comments ....
அதை விட பெரிய கூத்து .
இந்த தன்னார்வளர்கள்.....சோறு கொடுக்கிறேன் என்ற காமெடியில்
கொடுப்பவர்களும் கையுறை அணியவில்லை .வாங்குபவர்களும் கையுறை அணியவில்லை.ஒரு போலீஸ் அதிகாரியே அப்படித்தான் செய்தார்.ஒரே touching touching தான்.
இன்னும் 5 நாட்கள் கழித்துதான் தெரியும்.அது வரை திக் திக் தான்.

2020/03/23

கோரோனோ isolation

இப்போதுதான் தனிமைப் படுத்துதல் பற்றி பேசுகிறோம்.
நான் சிறுமியாக இருந்தபோது அம்மை நோய் வந்து விட்டால் அந்த வீட்டின் முன் வேப்பிலை தோரணம் கட்டி விடுவார்கள்.
அதை பார்த்தவுடன் அந்த வீட்டிற்கு யாரும் செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் இருந்தும் யாரும் வெளியே செல்ல மாட்டார்கள்.
அந்த வீட்டில் நோய் சரியாகும் வரை துணி துவைக்க மாட்டார்கள்.
குப்பையை வெளியே கொட்ட மாட்டார்கள்.
அம்மை வந்தவரை தனியே படுக்க வைத்து தனி தட்டில் உணவு ,மோர் என்று கொடுப்பார்கள்.
முக்கியமாக கடுகு தாளிக்க மாட்டார்கள் .அக்கம் பக்க வீடுகளிலும் கடுகு தாளிக்க மாட்டார்கள்.(இதன் அறிவியல் உண்மை என்ன என்று தெரியவில்லை ).
ஒரு அண்டாவில்  வேப்பிலை போட்டு தண்ணீர் நிரப்பி வெய்யிலில் வைத்து பதமான சூட்டில் அம்மை வந்தவரை குளிக்க வைப்பார்கள்.
பிறகு வேப்பிலை,மஞ்சள் ,ஆமணக்கு சேர்த்து அரைத்த விழுதை உடம்பில் தேய்த்து விடுவர்.
ஊரிலேயே பெரியவர்கள் ஊர் முழுக்க மஞ்சள் நீராட்டுவார்கள்.
அதற்கப்புறம்தான் தடுப்பு மருந்து கண்டு பிடித்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
இன்றும் கூட என் வீட்டில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து மாதம் ஒரு முறையாவது புகை போடுவேன்.
அதையேதான்  ஹோமம் என்று வியாபாரமாக்கி விட்டார்கள்.
ஆனால் நேற்று நடந்த கொடுமை சொல்லி மாள முடியாது.
காலை 4 மணிக்கு இறைச்சி கடை ,பால் கடை என்று கூடிய கூட்டமும்,ஒருவர் மேல் ஒருவர் விழுந்து பிராண்டி கொண்டதும் ...திருந்தவே மாட்டார்கள்.
5 மணிக்கு நடந்த கொடுமை ...உச்சம் ....அபார்ட்மெண்டில் இருந்து எல்லாரும் ஒன்று கூடி ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு (கை  தட்ட சொன்னால் )பாத்திரம் தட்டிக் கொண்டிருந்த கண் கொள்ளா காட்சி ???????????
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர வேண்டாம் என்று சொன்னால் வந்து கை தட்டிய முதியோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.அதற்கப்புறம் குழந்தைகள்.....அவர்களை கூட்டி வந்து கை தட்ட வைத்து பெருமை பட்டு கொண்ட பெற்றோர்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.
ஆக நேற்று நடந்த isolation எந்த அளவு வெற்றி தந்தது என்பது கேள்விக்கு குறி.
HIGHLIGHT :
கடவுள்கள் ISOLATE செய்து கொண்டதுதான்.
கடவுள்களுக்கே இந்த பக்த கோடிகளை பார்த்து பயம் வந்து விட்டதோ ,அல்லது இவர்களின் அளப்பறைகளை பார்த்து எரிச்சலாகி விட்டாரோ கதவை சாத்திக் கொண்டாரோ?????விஜய் சேதுபதி சொன்னது சரியோ??

2020/03/17

சேதுபதி மதம்

என் அறிவு கம்மிதான்.
ஆனால் என் சிறிய அறிவிற்கு எட்டிய அளவில் எந்த மதத்திலும் மனிதன் கடவுளை காப்பாற்றுவதாக சொல்லவில்லை .கடவுள்தான் மனிதனை காப்பாற்றுவதாக எல்லா மதங்களும் சொல்கின்றன.
நடிகருக்கு தெரிந்தது எனக்கு தெரியவில்லை.
மனிதம்தான் உயர்ந்தது என்று மட்டும் சொல்லியிருக்கலாம்.
சக மனிதனை நம்பு என்று மட்டும் சொல்லி இருக்கலாம்.
இதில் மதத்தையோ, கடவுளையோ இழுக்க வேண்டிய அவசியம் என்ன ??

சத்துணவு

பெத்தவங்க :
31ம் தேதி வரைக்கும் எல்லாம் closed .பால்வாடி எனப்படும் அங்கன்வாடிக்கும் தடை.
ஆனால் அரசு என்ன சொல்கிறது என்றால் இந்த 15 நாட்களுக்கும் அந்த மாணவர்களுக்கு உண்டான உணவை தயாரித்து அவர்களுக்கு கொடுக்க வேண்டும் ....
டி .வி யில் பார்க்கிறேன் அரிசி,பருப்பு etc எல்லாம் ஒரு பையில் போட்டு கொடுக்கிறார் ஒரு பெண்.
அதை ஒரு தாயார் பெற்று செல்கிறார்.
என் கேள்வி :ஒரு 15 நாட்களுக்குகூட நான் என் குழந்தைக்கு உணவு தர மாட்டேன் ..... நான் பெற்ற குழந்தைக்கு அரசுதான் உணவு தர வேண்டும் என்றால் உங்களுக்கு வெட்கமாக இல்லை?
அப்புறம் எதற்கு ???????????
 

2020/03/16

கும்பிடுங்கள்

நம் நாட்டு பழக்க வழக்கங்கள்தான் சிறப்பு சிறப்பு சிறப்பு :
நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் கை  கூப்பி வணக்கம் சொல்வோம் .
......இன்று உலகமே அந்த பழக்கத்திற்கு மாறி விட்டது .
....வெளியிலோ ,வேறு ஊருக்கோ சென்று வந்தால் வாசலிலேயே தண்ணீர் கொண்டு கை ,கால்களை  சுத்தமாக சுத்தம் செய்து கொண்டுதான் வீட்டிற்குள்ளேயே நுழைவர் .
இன்று உலகமே அந்த பழக்கத்திற்கு மாறி விட்டது .
எனது பாட்டிகள் அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டிற்கு வந்தால் ...
தயிர் அல்லது மோர் தலையில் தேய்த்து  கொள்வர் .
சிறுமியான எனக்கு அது ஆச்சரியத்தை கொடுத்தது.
ஐயே ,இதை போய் தலையில் தேய்க்கிறார்களே என்றும் இருக்கும்.
ஆனால் அதெல்லாம் எவ்வளவு சரி என்று இப்போது புரிகிறது.
கார்த்திக் அம்மா

2020/02/27

இரும்பு கரம்

iron கரம் (ஐரன் )கரம் (the right pronunciation is 'ian' and not iran) அயன் கரம் கொண்டு அடக்க வேண்டுமாம்.
மக்கள் போராடினால் அவர்களை கூப்பிட்டு பேசி அவர்கள் குறைகள் என்ன ,தேவைகள் என்ன ,போராட்டம் எதற்காக அதற்கான தீர்வு என்ன என்று விவாதித்து மக்களின் பயமோ தேவையோ அதை போக்குவதுதான் நியாயம்.அதை விட்டு இரும்பு கரம் கொண்டு அடக்குங்கள் என்றால் ...என்ன சொல்வது என்று தெரியவில்லை.

2020/02/23

ஆக்ரா சுவர்

கொடுமையிலும் கொடுமை .
ட்ரம்ப்  வரும் வழியில் குடிசைகள் இருக்கிறதாம் .அதை அவர் பார்க்க கூடாதாம்.அதனால் 7 அடி  உயர சுவர் எழுப்புகிறார்களாம் .7 நாட்களில் ஒரு பெரிய மருத்துவ மனையையே கட்டி முடிக்கிறது சீனா .
இந்த சுவர் எழுப்பும் செலவிற்கு பதில் அந்த குடிசைகளை இடித்து விட்டு புது வீடுகளை கட்டி  தரலாமே .பூக்கள் கொண்டு அலங்கரிப்பதற்கு எத்தனையோ கோடி செலவு செய்கிறார்கள்.அதில் ஒரு 10% செலவு செய்தால் இந்த குடிசைகளை வீடுகளாக மாற்றி விடலாம்.
அடுத்த myth .அமெரிக்காவில் ஏழைகளே இல்லாதது போல ஒரு இமேஜ் இருக்கிறது.
அங்கும் ஏழ்மை ,வீடு இல்லாதவர்கள் ,சரியான சாப்பாடு கிடைக்காதவர்கள் இருக்கின்றனர்.
குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார்கள்.
கடைசியில் இதுதான் அதுவா ????????

2020/02/17

காலை சத்துணவு

காலை சத்துணவு :
24 கார்ப்பரேஷன் பள்ளிகளுக்கு காலை சத்துணவு கொடுக்க அக்சய என்ற நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்து கவர்னர்,முதல்வர் எல்லோரும் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
நானும் அந்த நிறுவனம் தன சொந்த காசில் உணவு தருகிறது என்று நினைத்தேன்.
ஆனால் அரசு 250 கோடி தருகிறது.
20000 சதுர அடி  சமையல் அறை ,நீர் ,மின்சாரம் எல்லாம் அரசு தருகிறது.
500 கோடி மதிப்புள்ள நிலம் தருகிறது அரசு.
அப்புறம் என்ன தொண்டு நிறுவனம்?
அதை விட பெரிய கொடுமை ...
சாத்விக உணவு மட்டும்தான் தருவார்களாம் .
வெங்காயம் ,பூண்டு இருக்காதாம் .
இது அசைவம் என்று யார் சொன்னது?
இது இரண்டும் உடலுக்கு மிக மிக நல்லது.ஆன்டி ஆக்சிஜன் அதிகமாக இருக்கும் .
அசைவம் சாப்பிடுபவர்கள் கொலைவெறி யுடன் திரிபவர்கள் போல சித்தரிக்கிறார்கள் .
சைவம் சாப்பிடுபவர்கள் உத்தமர்களா?
என்ன என்னவோ நடக்கிறது.
காலம் கலிகாலம் .

paint

ஒரு நாள் கார்த்தியுடன் ஒரு வங்கிக்கு சென்று இருந்தேன்.அங்கு மேனேஜருடன் பேசிக் கொண்டிருந்த போது திரும்பி பார்த்த பொழுது ஒரு பெரிய்ய்ய்ய ஹால் .அதை பார்த்தவுடன் கார்த்தியிடம் சொன்னேன் " "கார்த்திம்மா , ,எனக்கும் இவ்வளவு பெரிய bedroom வேண்டும் .நானும் என் பேரக் குழந்தைகளும் சந்தோஷமாக விளையாடுவோம் " "
........
சிறு வயதிலிருந்தே என் சின்ன சின்னஆசைகள் கூட எதுவுமே நடந்ததில்லை.ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்று நினைத்தால் ஒன்று கடை மூடியிருக்கும் .அல்லது எனக்கு பிடித்தது இல்லாமல் இருக்கும் .
வாழ்க்கையில் ஏமாற்றங்களையே சந்தித்த எனக்கு    இவ்வளவு    பெரிய ஆசை வரலாமா ???????????
இப்போது அந்த jenson  அண்ட் nicolsan விளம்பரம் பார்க்கும் போதெல்லாம்
  " " " ஏய் அதிர்ஷ்டம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டிய ஜென்மமே ,உனக்கு இப்படிப் பட்ட ஆசை வந்திருக்கலாமா ???  "" "'என்று என்னை நானே கேட்டு கொள்கிறேன் .
கண்ணீருடன்தான் .
கண்ணீர்தான் கண்ணில் நிரந்தரமாகி விட்டதே.
கார்த்திக் அம்மா                                                     '

2020/02/02

நீயா நானா

குழந்தை பிறப்பு :
இந்த கால இளைஞர்கள் +பெண்களும் ஏன் இப்படி குழப்பிக் கொள்கிறார்கள்???
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டுமாம் .அதற்கு 4 வருடங்கள் வேண்டுமாம் .
காலம் காலமாக நாங்கள் கல்யாணம் செய்யவில்லையா ?
எல்லோரையும் புரிந்து கொள்ளவில்லையா ?
ஒருவரை ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவில்லையா ?
in laws 'களை புரிந்து கொள்ளவே வேண்டாம் .
அன்பு செலுத்துங்கள் .போதும்.
எந்த பிரச்சினையும் வராது .என்னவோ நாங்கள் யாரும் படிக்காதது போலவும்,
வேலைக்கு போகாதது போலவும்
இந்த தலைமுறையினர் மட்டும்தான் சாதிப்பது போலவும் ...அலட்டல் ..அலட்டல்.
1930 களில் படித்து வேலையும் செய்தும்,சம்பாதித்தும் ,குடும்பத்தை எவ்வளவு அழகாக கொண்டு சென்றார்கள்.
குழந்தைக்கு தடுப்பு ஊசி க்கு மட்டும் 45000 செலவு செய்தேன்  என்கிறாள் ஒரு பெண் .
நம்பும்படி இருக்கிறதா ?
இளைஞர்களே பெண்களே
வாழ்க்கையை இயல்பாக வாழுங்கள் .
விதி வலியது.அது என்ன முடிவு செய்து வைத்திருக்கிறது என்று யாராலும் சொல்ல முடியாது.
ஆடாதீர்கள் .
அடங்கி வாழுங்கள் .carrier என்கிறீர்களே .கார்த்திக்காக நான் என் assistant professor ) English in 1981//வேலையை விட்டேன்.
குழந்தை தரும் சந்தோசம் வேறு எதுவும் தராது .
கேரியர் முக்கியம் எனும் பெண்களே .முட்டாள்கள் .

2020/01/17

அறிவாளி

தமிழ்நாட்டில் மொத்தம் 5000 அறிவாளிகள்தான் இருக்கிறார்கள்.
நான் முரசொலியும் வாங்குவதில்லை.
இன்னொரு முறையில் அறிவாளியும் இல்லை.
இவ்வளவு ஈஸியான முறையில் அறிவாளியாக ஆகலாம் என்று இது நாள் வரை தெரியாமல் போய்விட்டது.
உடனே புத்தக கடைக்கு ஓட போறேன் .
ஆஹா ஆஹா
நானும் அறிவாளியாக போறேன்.
நானும் அறிவாளியாக போறேன்.
ஜாலிதான்
ஜாலிதான் .
அறிவாளி கார்த்திக் அம்மா

2020/01/12

கட்டிட இடிப்பு

கட்டிட இடிப்பு
கேரளாவில் சில அடுக்கு மாடி கட்டிடங்கள் விதி மீறி கட்டப் பட்டதால் இடிக்க சொல்லி நீதி மன்றம் உத்தரவு இட்டதை அடுத்து அந்த கட்டிடங்கள் இடிக்கப் பட்டன .இதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடி ஒளிபரப்பு வேறு செய்தன .
மிக்க மகிழ்ச்சி .
அடுத்து
அதே நீதிமன்றம்
அந்த கட்டிட வரைபட அனுமதி அளித்த பொறியாளர்
மின் இணைப்பு கொடுத்த அதிகாரி
தண்ணீர் இணைப்பு கொடுத்த அதிகாரி
இன்னும் சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க சொல்லி உத்தரவிட்டதா?
இந்த அதிகாரிகள் அனுமதி இல்லாமல் இவ்வளவு பெரிய கட்டிடங்கள் எப்படி கட்டப் பட்டன?
கட்டிட உரிமையாளர்களும் builders ம் பேராசைக்காரர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.
அவர்கள் விதி மீற லஞ்சம் கொடுத்தது தப்பு என்பதும் சரியே.
ஆனால் அந்த லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை?
I accept that the flat owners and builders made an unforgivable crime(sin) .
RIGHT
WHAT ABOUT THE AUTHORITIES?
The civil er
the electricity department
the water and sewage department
the road department officers
who granted permission to these buildings
WERE THEY PUNISHED IN ANYWAY ???????????
நல்ல நியாயம் உங்கள் நியாயம் .

2020/01/10

10 பேர் ஓடி அந்த ஓட்டத்தில் முதல் பரிசு பெற்றால் வெற்றியை பாராட்டலாம்.மற்றவர்களை எல்லாம் மிரட்டியோ அல்லது எப்படியோ, தான் ஒருவன் மட்டுமே என்று ஓடி முதல் நாள் 100 கோடி வசூல் என்றால் பாவம், பரிதாபம் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.

2020/01/03

உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தல்
எனக்கு பாதி புரியவில்லை .தலைவர் பதவிக்கு சுயேட்சையாக நிற்க வேண்டுமாம் .
கவுன்சிலர் பதவிக்கு கட்சி சார்பாக நிற்க வேண்டுமாம் .
அடுத்த கொடுமை :
4 கலர் வோட்டு ஸீட்டுகளையும் ஒரே பெட்டியில் போடுகிறார்கள் .இன்று பார்த்தால் அந்த 4 கலர்களையும் பிரித்து கட்டுகிறார்கள் .
ஏன்
வோட்டு போடும்போதே 4 கலர் பெட்டிகள் வைத்து போட சொல்லியிருக்கலாமே .அதை பிரித்து தனித்தனியாக கட்டி ......அறிவின் உச்சம் ......அரசு ,தேர்தல் கமிஷன் இப்படித்தான் செயல்படுகிறது.
NO COMMENTS
கார்த்திக் அம்மா