பேசாமல், பாலியல் பலாத்காரம் Sex harassment என்ற ஒரு channel இதற்கென்றே பிரத்தியேகமாக ஆரம்பித்துவிடலாம்.
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2012/12/26
பெண்ணை ஆணின் அடிமையாக இருக்கும் நோக்கிலேயே வளர்க்கப் பட்டார்கள் என்கிறார்.
கிடையவே கிடையாது.
பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது.தாய்மை பெண்ணிற்கு கொடுக்கப் பட்ட வரமோ சாபமோ தெரியாது.ஆனால் உடல் ரீதியாக அது அவளுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரு ஆண் சிகரெட் குடிக்கலாம். பெண்ணுக்கு மட்டும் ஏன் கண்டிஷன் என்கிறார்.
ஒரு பெண் சிகரெட் பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ அவளுக்கு பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்பது ஞானிக்கு தெரியாதா?
தன குழந்தைக்கு பால் புகட்டும் சமத்தில் அந்த தாய்க்கு உணவு கட்டுப்பாடுகள் உண்டு. இல்லையென்றால் சிசு கஷ்டப்படும்.
மேலை நாட்டுப் பெண்களே [ மது சிகரெட்டில் அவர்களுக்கு எந்த கட்டுப் பாடும் இல்லை.] ஆனால் அவர்களே தாய்மை அடைந்திருக்கும் சமயத்தில் இந்த விஷயங்களை தவிர்க்கிறார்கள்.
பிறக்கும் குழந்தை எப்படி வேண்டுமானாலும் பிறக்கட்டும்.அடுத்த தலைமுறை எப்படி வேண்டுமானாலும் கஷ்டப் படட்டும் என்று நினைத்தால் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் குடிக்கட்டும்.
உடல் உறவில் ஆணுக்கு பாதிப்பில்லை. அவன் கை வீசி நடக்கிறான். பெண் சுமக்கிறாள்.
இதுதான் பிரச்சினையே.
அதனால்தான் அவளை பாதுக்காக்க வேண்டியுள்ளது.
அது அடிமைத்தனம் அல்ல.
குந்தி செய்த தவறால்தான் மகாபாரதமே.
கர்ணன்தான் மூத்தவன் என்ற உண்மை சொல்லப் பட்டிருந்தால் குருசேத்திர போரும் இல்லை. அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்க வேண்டியது இல்லை. குந்தியின் தப்பான கர்ப்பம் நாட்டையே ஆட்டி வைத்தது.
அதுதான் விஷயமே.
ஞானியை விட நான் அறிவு குறைந்தவள்தான் .
தோன்றியதை எழுதினேன்.
கார்த்திக்+அம்மா
2012/12/12
எனக்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது .அதில் அதிக விருப்பமும் இல்லை. அதிலும் நடிகர்களை அவ்வளவாக ரசிப்பதில்லை.
ஆனால் என் அன்பு மகன் கார்த்திக்கிற்கு சினிமா பிடிக்கும்.
இன்று அவன் இஷ்ட நடிகரின் பிறந்த நாள்.எனக்கு இது பெரிய விஷயமில்லை.ஆனால் கார்த்தி இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பான்.
கார்த்திக் அம்மா ..
2012/11/27
phone bill கட்ட போனேன்.கட்டணத்தை கொடுத்து விட்டு ரிசீட் [risi :t ]கொடுங்கள் என்றேன்.அவர் காது கேளாதவர் போல் இருந்தார்.எனக்கு லேசான கோபம்.ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக ரசீது கொடுக்க மறுத்ததாக செந்தில் சொல்லியிருந்ததால், ஒரு ரூபாய் மிச்சப் படுத்தப் பார்க்கிறாரே என்று.
மறுபடியும், பிரிண்டரைக் காட்டி ரிசீட் கொடுங்கள் என்றேன்.பிரிண்டரைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்தவர் ரசீது புத்தகத்தை எடுத்து ரசீது எழுதிக் கொடுத்தார்.பெரிதாக சாதித்து விட்ட பெருமையில் வீட்டிற்கு வந்த பின் எண்ண ஓட்டங்களில் ஒரு விஷயம் புரிந்தது என் மரமண்டைக்கு.நான் ரெசிப்ட் என்று கேட்டிருக்க வேண்டும் என்று.ஹையோ phonetics teacher ????????.
....... ...... ......
ஆங்கில உச்சரிப்புதான் அப்படிஎன்றால் தமிழும் அப்படித்தான்.
'மிளகு தக்காளி கீரை இருக்கிறதா ?'' என்று கேட்டு நிறைய பேரை குழப்பியிருக்கிறேன்.
**** *****
நிப்பாட்டு :
நிறைய முறை ஆட்டோவில் போகும்போது இறங்கும் இடம் வந்தவுடன் ''நிறுத்துங்கள் '' என்பேன். ஆட்டோ நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். '' நான் இறங்கும் (எறங்கும் ) இடம் வந்து விட்டது.நிறுத்த சொல்கிறேன் .போய்க் கொண்டே இருக்கிறீர்களே '' என்று சத்தம் போட்டவுடன் தான் ஆட்டோ நிற்கும்.
இப்போதுதான் புரிகிறது ( அய்யோ மரமண்டை ,உனக்கு எதுதான் புரிந்திருக்கிறது?) நிப்பாட்டு என்று சொல்லாமல் 'நிறுத்து' என்று சொல்லி அவர்களை குழப்பியிருக்கிறேன் என்று.
constitutionally நிப்பாட்டு என்பதுதான் சரி என்று ஆகி விட்டது.
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் நிப்பாட்டு என்றே சொல்கிறார்களே, பஸ் நிறுத்தம் என்ற வார்த்தை இவர்கள் கண்ணில் படவே படாதா ?
**** *************
நான் பணி புரிந்து கொண்டிருந்த பொது, என் சக ஆசிரியர் என்னிடத்தில் ஓடி வந்து'' டீச்சர் கட்ச்டுச்சி டீச்சர் '' என்றார்.நான் எதோ பூரான்,பல்லி ,தேள் தான் கடித்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டு ''என்ன சார் கடித்தது ?' என்றேன்.''இல்லை டீச்சர் ,நான் தேடிய file கட்ச்டுச்சி'' என்றார்.
ஆஹா ,file கிடைத்து விட்டது என்பதைத்தான் அப்படி சொன்னார் என்பது புரிந்த போது , எஸ்,வி.சேகர் சுவற்றின் மேல் கையை வைத்துக் கொண்டு தலை முட்டிக் கொள்வார்.அது போல் ஒரு தலையணையை [ அதுதாங்க அந்த தலவாணி ] வைத்து முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
**** ***
நான் ஆங்கில ஆசிரியையாக அரசு பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாத மொழி என்று நினைத்துக் [wet ] கொள்வார்கள் .[ காயப் போடவே மாட்டார்கள் ].
நான் சொல்வேன் உங்களுக்கும் நிறைய words தெரியும் .உதாரணமாக 'உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகளை சொல்லுங்கள்.face .nose ,mouth etc ''என்று அவர்களை சொல்ல வைத்து ''பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரிகிறது.I know that you do not know that you know so many words ''என்பேன்.
விகடம்? ஹும் ?
**************
பள்ளி ஆண்டு விழாக்கள் போன்ற விழாக்களில்( 90 s ) என் compering மிகவும் பிரபலம்.
ஒரு பாடலுக்கு மாணவர்கள் நடனமாட வந்த போது நான் கொடுத்த intro .
'' A problem becomes no problem if the problem is approached in a non problematic manner .
பிரச்சினை என்பது பிரச்சினையே அல்ல, பிரச்சினையை பிரச்சினை அற்ற முறையில் அணுகினால் ....மாணவர்களே என்ன தேடுகிறீர்கள்? கல்லா?.....அடிப்பதற்கா? ..no problem என்று ஆட வருகிறார் சம்பத் +2 மாணவர் '' என்றவுடன்
மாணவர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் ஒரே (ஒன்றே ஒன்றுதான் )கைதட்டல்
கலா கார்த்திக்
இந்த build up உனக்கே கொஞ்சம் over ஆக தெரியவில்லை?
இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள், (ஒரு 1000 பேர் ) தலையைப் பிய்த்துக் கொண்டு அண்ணா சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடி, கடி, அடிக்கடி கடி.
வலிக்காமல், சலிக்காமல் அடிக்கடி கடி.
பி.கு.
ஆட்டிற்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி.
இந்த 2 இழப்புகளும் இல்லையென்றால் என் வாயாடித்தனத்திற்கு எல்லை ஏது ?
பி.பி.கு .
இந்த வாயாடி இப்போது ஊமையாகி விட்டாள் .
கார்த்திக்+அம்மா
2012/11/24
''நீங்கள் நல்லவரா கெட்டவரா " என்று நாயகன் படத்தில் வரும் வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
அவருடைய உறவினள் என்ற முறையிலும் ,சேலத்து மகள் என்ற முறையிலும் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள்,[பூலாவரி சுகுமாரன் ,மிசா சிறையில் ice முள் படுக்கையில் வைத்து அவரை விசாரித்த விவகாரத்தில் இருந்து ]எழுத ஆரம்பித்தால் 4,5 பக்கங்கள் எழுதலாம்.ஆனால், நல்லவரோ, கெட்டவரோ நமக்கு தெரிந்த ஒருவர்,பழகிய ஒருவர் ,உறவினரோ ,யாராயிருந்தாலும் எந்த இழப்பும் மனதை மிகவும் பாதிக்கிறது.
சமீபத்தில் மும்பையில் போல் சேலத்தில் கூடிய கூட்டமும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
அவரைப் பற்றி நிறைய எழுதலாமா என்று தோன்றுகிறது.
பார்க்கலாம்.அடுத்த பதிவில்.அவருக்கு என் அஞ்சலி.
அவரை சேலத்து சிங்கம் என்று சொல்வார்கள்.
கார்த்தியும் தன்னை அப்படித்தான் சொல்லிக் கொள்வான்.
என் அஞ்சலி.
கார்த்திக்+அம்மா
2012/11/21
Who ever it is, be them terrorists or godfathers ,life is life.I really sympathize this young fellow being hanged.
But it is really justifiable that he should be hanged.Unless otherwise more and more people will get ready to do more such cruel acts .This act would instill a fear in those who plan to indulge in terrorism .
And the most pathetic fact is that ''PAKISTHAN DISOWNED HIM ''.and this is the most important lesson that they should learn.Dying in a foreign land without the dear ones near.
This was the post I wrote on 26.11.2008
// சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது6/11.// //
இன்றும் என் மனம் அதே நிலையில்தான் உள்ளது.சந்திப்பை என்னால் மறக்க முடியவில்லை.His height and posture resembled karthik very much .அந்த உயரமும் கம்பீரமான நடையும் என் கார்த்திக்கை போலவே இருந்தது.அந்த தாயைப் போல்தான் வெறித்த பார்வையுடன் இருந்தேன்.'அவன்' என்ற வார்த்தை ''அது ''என்றான கொடுமை????????கார்த்தி என்று அன்புடனும் admiration உடனும் சொன்னவர்கள் ஒரு பார்சல் ஆக அவனை பார்த்த கொடுமை .
அன்று இறந்த 166 பேர் வீட்டிலும் இதே சோகம்தான் இருந்திருக்கும்.அதனால் கசாப்பை மன்னிக்க முடியவில்லை.அனாலும் ஒரு உயிர் இல்லாமல் போவது வேதனையான விஷயம்தான்.
அவனை பயிற்றுவித்து அனுப்பியவர்களை என்ன செய்வது ?கசாப்பின் தாயின் நிலையை பற்றி யார் நினைத்தார்கள்?
Will this terrorism stop ? SHOULD .
கார்த்திக்+அம்மா
2012/11/17
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.// // //
Who is this genius who is sitting there on the CBSC syllabus committee?
யார் இந்த அதி மேதாவி ?
எத்தனை பொய்யான தகவல்கள் . அதிலும் தமிழ் நாட்டைப் பற்றியே குறி வைத்து தமிழ் நாட்டை கேவலப் படுத்துவது ஒன்றே குறிக்கோள் போல் எழுதும் இவர் யார் ?
ஒரு விஷயம் சொல்லாமலே புரிகிறது கண்டிப்பாக இவர் அந்த உயர் ஜாதி சார்ந்தவர் .
எத்தனை முறை iஇப்படி நம்மை கேவலப் படுத்துவார்கள்
அசைவ உணவு உண்ணாத இவர்கள்தான் கோவிலின் கருவறையை படுக்கையரையாக மாற்றி அதையும் செல்போனில் படம் pபிடித்து மகிழ்ந்தவர்கள். இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் இந்த விளையாட்டை இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது .
2012/11/14
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன் கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக் அம்மா
2012/11/12
வந்து விட மாட்டானா
ஏதாவது அதிசயம் நடந்து
அம்மா , என் அம்மா
என்று செல்லமாக சொல்லிக் கொண்டு
ஓடோடி வந்து என் கன்னத்தோடு
கன்னமாக இழைத்து கொஞ்சுவானே
... ....
வந்து விட மாட்டானா என்று மனம் ஏங்கி
வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறது.
1999 தான் நாங்கள் இறுதியாக கொண்டாடிய தீபாவளி .
அப்போது மேட்டூர் [mettur dam ] ல் இருந்தோம். கார்த்தி அண்ணா பல்கலையில் , கிண்டி ,hostel ல் .
தீபாவளிக்கு அடுத்த நாள் semester exam .கார்த்திக் வீட்டிற்கு வருவதா ,தேர்வு அடுத்த நாள் என்ற குழப்பம்.
ஆனால் அண்ணன் வந்தே ஆக வேண்டும் என்று செந்தில் பிடிவாதம்.தம்பியின் ஆசை எதுவானாலும் அதை at any cost செய்து தருவதுதானே கார்த்திக்கிற்கு பழக்கம் .அதனால் 1999 தீபாவளிக்கு வந்தான்.
2000 ல் என் கணவர் மறைந்த பிறகு தீபாவளி கொண்டாட்டம் நின்று விட்டது .
ஆனால் 3 பேரும் , நான், கார்த்தி, செந்தில் என 3 பேரும் சேர்ந்திருப்பதே பெரிய தீபாவளியான சந்தோசம்.ஆனால் அதுவும் இல்லை என்று ஆனது தாஆஆஆந்க தாங்க முடியாத , வேதனை, வேதனை.. வேதனை தரும் விஷயம்.சோகம் .கஷ்டம் .
2004 ம வருடம் தீபாவளிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வர train ,bus ticket எதுவும் கிடைக்காமல் driver சீட்டீற்கு பின்னால் இருக்கும் சீட்டில் 6 பேருடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டே வந்து அவ்வளவு சோர்வுடன் வந்தான்.அதுதான் கடைசி தீபாவளி .
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?
2012/10/25
// // இந்த நிலையில் தற்போது அந்தக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, கலா, நீலா, மாயா என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இதையடுத்து அம்மா பெயர் வைத்த சிங்கக் குட்டிகள் என்று பலரும் அந்த சிங்கக் குட்டிகளை ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துச் செல்கின்றனரா// //..ஹ ஹ ,
கலா [கலா கார்த்திக் ]என்றாலே சிங்கம்தானே.
வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் பிறந்த சிங்கக் குட்டிகள் மூன்றிற்கு முதல்வர் வைத்த பெயர்.
கார்த்தி எப்போதும் சொல்வான். ''நான் சேலத்து சிங்கம் ''.என்று.
முதல்வருக்கு நன்றி.
கார்த்திக் அம்மா
HATS off மனுஷ்யபுத்திரன்.
அவர் கேட்கிறார்.சின்மயி நேரடியாக I .G யை பார்த்து புகார் கொடுக்கிறார். மற்றவர்கள் அப்படி செய்ய முடியுமா ? என்று ....எனக்கும் இது போல் ஆபாச s .m .s ,தொலைபேசி தொல்லைகள் வந்தன. போலீசில் புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.எனக்குதான் அரைமணி நேர உபதேசம் .
அதே போல் என் கைப்பை [purse ]திருடப்பட்டது. police station சென்றேன்.புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.
சாதாரண police station லியே இப்படி என்னை நடத்தினார்கள் என்றால், I .G ..ha ,ha நினைத்துப் பார்க்க கூட முடியாது.
ஜாதி, செல்வாக்கு என்று நான் சொல்ல வரவில்லை.ஏனென்றால் ''பயம்தான்.''
கார்த்திக் அம்மா
2012/10/18
தருமி ஐய்யா சொன்னாரே என்று சரவணன் மீனாட்சி ஒரு 10 நிமிடம் பார்த்தேன். என்னப்பா ,அந்த பெண் கணவனை அத்தனை 'டா ' போடுவதும் சரவணன் 100 '' டி '' போடுவதும், அவன் தன அப்பாவை அது இது,யோவ் என்று சொல்வதும்,
தாங்கவில்லை.
*ஆச்சி சாம்பார் பொடி :
எங்கிருந்து பிடித்தார்கள் சிநேகாவிற்கு மகளாக வரும் அந்த குட்டிப் பெண்ணை? ஜோர். அப்படியே சினேகா ஜாடை. தன் தந்தை வந்தவுடன் அம்மாவின் சாம்பார் மணத்தை பற்றி அவர் கேட்பார் என ஆசையோடு ஓடி வருவதும் ,அவர் அதைப் பற்றி கேட்காமல் போனவுடன், முகத்தில் தெரியும் அந்த ஏமாற்றம் ...இயல்பாக உள்ளது. ஏதோ ஒரு குழந்தை ஏதோ ஒரு சினிமாவில் நடித்ததைப் பற்றி மூச்சு விடாமல் பாராட்டியவர்கள் ,இந்த பெண்ணையும் சிறிது பாராட்டலாமே.
*சொல்வதெல்லாம் உண்மை:
இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள் 90% கள்ள உறவு.திருமணத்திற்கு முன்பே உறவு என ...இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த சில இளைஞர்கள் ''திருமணம் செய்யவே பயமாயிருக்கிறது '' என்றனர்.நேற்று நிகழ்ச்சியில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண் 7 மாதம் வரை தான் கருவுர்ரிருப்பதே தனக்கு தெரியவில்லை என்று சாதித்தார் .அந்த பெண்ணிற்கு ஆதரவாக எத்தனை பேர்.
இப்படியே போனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கட்டாயம் என்று ஆகி விடும் போல இருக்கிறது.Something undigestable
* பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் K .R விஜயா பாடும் 'அத்தை மடி மெத்தையடி '' பாட்டும்,
கண்ணன் வருவான் பாட்டும் பார்த்த போது 1981+1982ல் ல் இருந்த என்னை நானே பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது.அந்த hairstyle ,மாட்டல் ,பூ ,அதே design புடவை என [ நானும் அப்படி ஒல்லியாக இருந்தேன் ],கார்த்தியை எடுத்துக் கொண்டு இப்படித்தான் ஆடல் ,பாடல் என்று சிறகடித்துப் பறந்தேன்.
அதே போல் ஜெமினி +விஜயா குழந்தையை குளிக்க வைக்கும் காட்சியும்.அப்போது நானும் என் கணவரும் கார்த்தியும் என பெரயவர்கள் உடன் இல்லாத தனிக்குடித்தனம்.நான் கார்த்தியை மடியில் வைத்துக் கொள்ள அவன் தந்தை தண்ணீர் ஊற்ற என அவனை குளிக்க வைப்பதே ஒரு பெரிய இன்பமான வைபவம்.
அந்த பாடல்கள் எனக்கு குளுக்கோஸ் .
கார்த்திக்+அம்மா
2012/10/14
நான் டீச்சர் ஆக இருந்தபோதே இந்த discussion வந்தது. ஏன் The U .S .A and why not the India .
Here we to consider some grammatical rules . the word THE is pronounced both as thi and as tha .When the word that follows the article 'the ' starts with a,e,i,o,u sounds [take note , its the sound and not the letters ] then the should be pronounced as'' thi ' 'and if it is followed by other words it should be pronounced as'' tha ''.
*The second rule is :if the thing referred to is 'unique ' ..only one ..then the article 'the ' is added before the word even if the word starts with other than a,e,i,o,u sounds. For example, 'the sun ' the moon''...
I and my students would get into an inter action and I would vehemently, passionately and PATRIOTICALLY say that it should be THE India , because it is unique,special to us and the greatest.
Suddenly one student came with the question ''why do they advertise as 'The Chennai Silks ?'',
My reply was that ''they might (the chennai silks ) owners , knowingly or unknowingly might have tried to assure the customers that their shop is unique.
Anyhow ,in the film English, Vinglish actor SriDevi asks why not the [tha ]India.As for as knowledge goes it should be 'thi ' India.
*If at all any student by mistake had written india [in small letters , lower case ] instead of capital 'I' i would give him a 0/100.And that student would realize his mistake.
*a,b,c....z are letters of the alphabet and it should not be said as 'alphabets' all the 26 letters constitute English alphabet.
only if the letters of different languages are referred to then we can say alphebets.
Grammar என்பது மிகவும் இனிமையான பாடம். நடத்த நடத்த நிறைய விஷயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கு மனப்பாடம் செய்வதே பிடிக்காத விஷயம். வருட முடிவில் என் மாணவர்களும் என் வழிக்கு வந்து விடுவார்கள்.
இன்னும் பல அனுபவங்கள் அடுத்த பதிவில்.for eg debate
இதுவே மாற்றான் பட அளவிற்கு நீளமாக இருக்கிறது ,தாங்கவில்லை ,போதும் ,bore என்கிறிர்களா ,
விடுவதாயில்லை நான்
அன்புடன்,
கார்த்திக்+அம்மா
2012/10/09
I am BELOW POVERTY LINE
so long i have been thinking that i belonged to the so called upper middle class.Switch on the T.V all channels talk about so many having accumulated not 10 or 20 crores but simply just 1000 or 10000 or 32000 crores.Be it Emu or redsoil or online or lottery and the list is endless.Somehow many persons have money more than 100 crores.
I feel ashamed to have been thinking that I am rich .Now i realize compared to these people i am below, below , below poverty line.
மக்களே ,என் இனிய தமிழ் மக்களே
என் சோகக் கதையை கேளுங்களேன் .
இது நாள் வரை நான் ஏதோ ஒரு குட்டி [ குட்டியூண்டு ]செல்வந்திரி என்று நினைத்திருந்தேன்.இந்த உயர் மத்திய வர்க்கம் என்று நினைத்திருந்தேன்.ஆனால், இப்போது வரும் செய்திகளை பார்க்கும் போது ,ஒரு பக்கம் ஈமு ,ஒரு பக்கம் செம்மண், ஒரு பக்கம் தங்க நகை திட்டம், [அடேயப்பா , எத்தனை ரூம் போட்டு யோசிப்பார்கள் ? ஆனாலும் சும்மா சொல்லக் கூடாது , அறிவுப்பா அறிவு , அறிவோ அறிவு,] எத்தனை வகையான திட்டங்கள், எவ்வளவு பணக்காரர்கள்? அதுவும் ஒரு கோடியா அல்லது 2 கோடியா ?மினிமம் 100, 32000,160000 கோடி.
எனக்கு அழுகை அழுகையாக வருகிறது.இவர்களை பார்க்கும் போது நான் வறுமைக் கோட்டிற்கு கிழே தான் இருக்கிறேன்.
வாழ்க பணக்கார தமிழ்நாடு
கார்த்திக்+அம்மா
2012/10/02
2012/09/19
என்னை கவர்ந்த விஷயங்கள் :
*பெண்கள் அனைவரும் படு பாங்காய் புடவை அணிந்து பாந்தமாய் ,பவ்யமாய் இருந்தது. இங்கு வந்த சிலர் மற்ற அரங்குகளில் கொடுமையான உடை அணிந்து படு கவர்ச்சியாய் வந்துள்ளனர்.
முதல்வர் இந்த உடை விஷயத்தில் கவனம் செலுத்துவதாக அறிந்து அதற்காக அவரை பாராட்ட வேண்டியது அவசியம்.
*யாரும் தவறாகவோ ,அலட்டலாகவோ, இல்லாமல் ,தன ஆசிரியையின் முன்பு பயபக்தியுடன் இருக்கும் மாணவர்கள் போல் இருந்தது போல் தோன்றியது.
*நிறைய பழைய நடிகர்கள் ,நடிகைகள் மனம் நெகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.பரபரப்பான அரங்கம் அதிரும் கைதட்டல்கள் இல்லை.மற்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யாரோ கைதட்டிக் கொண்டே இருப்பார்கள்.விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.ஊய் என்ற சத்தம் காதை கொல்லும் .
ஆனால் அது எதுவும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி .After so long a time a program , a decent program without dirty dances and irritating comedy ,made me write this post even as the program continues and has not ended .
முதல்வருக்கு ice , காக்கா என்று யாரும் கூவ வேண்டாம்.மனதிற்கு சரியென்று தோன்றியது. எழுதினேன்.
கார்த்திக்+அம்மா
இது ஒரு துணைவேந்தர் சொல்வது.
ஒரு ஆசிரியராக இருப்பவரே மதத்தை பற்றி பேச கூடாது.மாணவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள் வரும். அப்படியிருக்க பல ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் உள்ள பதவியில் அமரும் இவர் தன மதத்தை நிலை நாட்டுவது எந்த வகையில் நியாயம்?
இவர் ஜெயிலில் இருந்துள்ளார் ,பணம் கையாடல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கு இவர் சொல்லும் பதில் இது.
ஏற்கனவே ஒரு திரைப் படம் நேற்று அண்ணா சாலையில் ஏற்படுத்திய களேபரம் போதாதா ?
மதம் ஒரு அபின், சாராயம், விஸ்கி என எல்லாம் கலந்த எல்லை கடந்த போதை தரும் ஒரு கொடிய விஷம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே இவரை இந்த பதவியில் இருந்து விலக்கலாம் .
..... ....... ......
இந்த T .V channels பிள்ளையாரை ஒரு வழிப் படுத்திவிட்டன. Too much of anything is good for nothing .மிகைப் படுத்தல் ,ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசினாலும் அதன் ஈர்ப்பு குறைந்து விடும்.T .V channels எந்த காரணம் கிடைக்கும் ,program போடலாம் என்று அதிக ஊட்ட சத்து கொடுத்தால் அதிக ஆபத்துதான்.
கார்த்திக்+அம்மா
2012/09/15
Central Govt has given the freedom to States to decide as to their wish.If Tamil nadu wishes it can permit FDI .Once it decides not to allow , well and good, you need not have.
T.N C.M has announced that she is against it.
Well , the matter is over.
But all the T.V channels are enjoying the chance to have programs on it.
அப்பப்பா , பேசுபவர்கள் எதற்காக இப்படி கத்துகிறார்கள்?
தமிழிசை கத்தும் சத்தம் காதை கிழிக்கிறது.
அவருடன் பேசும் அமெரிக்கை நாராயணன் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார்.
சொல்லும் விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்வதே சரியான முறை.
அடுத்தது,
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு பேசுவது....அவர் பேசி முடிக்கட்டுமே.அவருடைய கருத்து என்ன அன்று தெரிந்து கொண்டு , அந்த கருத்துகளுக்கு பதில் சொல்லுங்களேன்.
எவர் ஒருவர் தன மீதும் ,தன கருத்துகளின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ , அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள் .
நானும் ஒரு மேடைப் பேச்சாளிதான் .நானும் பல பட்டி மன்றங்களில் பேசியுள்ளேன்.need it be said that i would always be the winner .
ஒரு பட்டி மன்றத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கிய பிறகும் ஒரு பேச்சாளர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசரம். கார்த்தி , செந்தில் தனியாக இருப்பார்கள். அவர்களுக்கு உணவு தயாரித்து தர வேண்டும் என்ற என் அவசரம் எனக்கு.
மேடைப் பேச்சும் , அந்த நடுவரின் தீர்ப்பும் என்ன supreme court judgement ஆ ?
ஏன் மக்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவார்களோ?
சரி, இந்த FDI விஷயத்திற்கு வருவோம்.
நான் வேளச்சேரியில் இருக்கிறேன்.மாலை ஒரு 5 மணிக்கு விஜயநகர் சிக்னலில் வந்து பாருங்கள்.ஒரு 15 சிறு வியாபாரிகள் சாலையின் ஓரத்தில் 10 ரூபாய் ஒரு கவர் என அனைத்து காய்களும், கீரைகளும் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அருகிலேயே, ஊட்டி ,பொன்கவிதா ,Daily fresh என ,+Reliance ,Cee Dee Yes என்ற கடைகளும் இருக்கின்றன.
ஆனாலும், இந்த சிறு, (மிக சிறு ) கடைகளிலும் வியாபாரம் நன்றாகத்தான் நடக்கிறது .
Customers are not fools .அவர்களுக்கு தரமான பொருட்கள், சரியான விலையில் விற்கும் கடைகள்தான் தேவை.
எனவே ஆயிரம் Wall Mart வரட்டுமே.நம்மூர் அண்ணாச்சிகளும் அதே தரத்தில் , அதே விலையில் கொடுக்கட்டுமே.நாங்கள் உங்கள் கடையை விட்டு வேறு கடைக்கு ஏன் போகிறோம்?
அடுத்த விஷயம்,
நான் அனுபவித்த விஷயம்,
the treatment that one gets at these shops .ஏதாவது கேளுங்கள், காது கேட்காத போல இருப்பார்கள்.
அதுவே பெரிய mart களில் , madam என்ற மரியாதை இருக்கும்.
ஆக, இந்த FDI வரமா, சாபமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பார்ப்போம்.
கார்த்திக்+அம்மா
2012/09/06
அம்மாவிற்கு அஞ்சலி
Today is September 5 th..Teacher's day.
My mom was a very good teacher and Head Mistress of a Govt.high school.She joined duty at the age of 17 and worked till 59. just can't guess. 42 years of service.
A very dynamic lady. Multi talented, versatile, boldest,and a dedicated and devoted teacher.
And there's no other testimony that she was the best of the best teachers , that she died on September 5 th last year.
இந்த கவிதை (??) எப்போதோ எழுதியது.இப்போது எதேச்சையாக கண்ணில் பட்டது.என் தாய்க்கு இது எவ்வளவு பொருத்தம் என்று அதிசயமாக இருந்தது.
2012/08/28
இவரைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது பெருமைப் படுவதா ?
ஆனாலும் ஒரு xerox copy என்றால் இப்படியா ?
சூர்யா அப்படியா அப்பாவை உரித்து கொண்டு பிறப்பார் ?
என்னைப் போன்று அந்த காலத்தில் இருந்தே சிவக்குமாரை பார்த்தவர்கள் கூட குழம்பிப் போய்விடுகிறோம்.
பாடிக் கொண்டிருப்பது சூர்யாவா அல்லது சிவக்குமாரா என்று யோசிக்க வேண்டியுள்ளது.
அப்படியானால் , இந்த தலைமுறை ரசிகர்கள் ,????????????
பாவம் சிவக்குமார் .
பெருமைப் படுவதா, இல்லையா என்று தெரியாமல் ??????????
கார்த்திக்+அம்மா
2012/08/25
தேறியவர்கள் 1650 பேர்.
.036%:
அதாவது 5.99 லட்சம் பேர் தோல்வியைந்துள்ளனர் .
எல்லோரும் ஒரு கோணத்தில் இதை அலசுகிறார்கள்.
ஆனால், நான் சொல்லும் விஷயத்தையும் சிறிது யோசித்து பாருங்கள்.
இந்த 6 லட்சம் பேரும் முட்டாள்கள் அல்ல. படிக்க விரும்பாதவர்களோ , அல்லது தங்கள் தகுதியை அதிகரித்துக் கொள்ளவோ விரும்பாதவர்களோ அல்ல. எல்லோருக்கும் படிக்க வேண்டும் ,நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஒரு 10% வேண்டுமானாலும் குறுக்கு வழியை நாடலாம்.
ஆனால் 90% அப்படியில்லை.
அப்படியானால் அவர்கள் இவ்வளவு மோசமாக தேர்வில் தவறியதற்கு என்ன காரணம்.
கண்டிப்பாக ஆசிரியர்கள்தான் .50% ஆசிரியர்கள் பாடத்தை படித்து காட்டுவார்கள். அதுதான் teaching .இன்னும் சிலர், ஒரு மாணவனை படிக்க சொல்லி விட்டு பாடம் நடத்தியதாக கணக்கு சொல்லுவர்.
இதெல்லாம் நான் பார்த்ததைத்தான் சொல்லுகிறேன்.முதலில் ஆசிரியர்களுக்கென்று ஒரு தார்மிகம் இருக்கிறது.அணியும் உடையிலிருந்து, பேசும் சொற்களில் இருந்து அவர்களிடம் ஒரு கண்ணியம் வேண்டும்.
அடுத்து தான் நடத்தும் பாடங்களில் வல்லவராக இருக்க வேண்டும். அதுவே மாணவனுக்கு அந்த பாடத்தில் ஒரு பிடிப்பையும் ஆர்வத்தையும் தரும்.தானாக படிப்பான்.
சொல்லித் தெரிய வேண்டியதில்லை.இப்போது நிலை என்னவென்று..
நானும் ஆசிரியையாக இருந்திருக்கிறேன் .அடித்திருக்கிறேன். ஆனால் மாணவர்கள் என்னிடம் பாசமாகத்தான் இருந்தார்கள். பயம் இல்லை. மரியாதை இருந்தது.Admiration ,affection ,adoration இருந்தது.என் கண்டிப்பு அவர்கள் நலனுக்குகாகத்தான் என்று அவர்களுக்கு புரிந்திருந்தது.+2 மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆசைகள் , லட்சியம் என்ற கனவுகளோடுதான் வருகிறார்கள்.
ஆசிரியர்கள் அந்த லட்சிய ஜோதியை நீர் ஊற்றி அனைத்து விடுகிறார்கள்.
இல்லையென்றால் 1.60 லட்சம் engineering மாணவர்கள் degree முடிக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பார்களா?
யார் சொல்லி யார் திருந்தப் போகிறார்கள்.?
ஆனாலும் ஊதும் சங்கை ஊதி வைப்போம் .
கார்த்திக்+அம்மா
2012/08/20
Need it be said ,that I would be dancing on the clouds,having my dearests with me.
Happy,happy,happy was I,without least realizing the impending TSUNAMI, the greatest disaster.
எல்லா சினிமாவிலும் வருமே, ஒரு குடும்பம் உச்ச கட்ட சந்தோஷத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும். அது போல்தான் என் வாழ்க்கையும் ஆகி விட்டது.20,21,22 ஆகஸ்ட் 2005 என்ன ஒரு சந்தோசம்.பெங்களூர் to கரூர் வழியில் சேலம் சென்று என் அம்மா, அப்பா, சகோதரர்கள் என அனைவருடனும் சந்தோஷ சந்திப்பு.கரூரில் கார்த்தியின் அனைத்து நண்பர்களும்.கார்த்திக்கிற்கு ஒரே சந்தோஷம் .அவனுக்கு அம்மா ,நண்பர்கள் கூட இருப்பது போல் வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்.
22 பெங்களூரு திரும்பினோம்.
23,24,25 என 3 நாட்கள்தான்.
வரக் கூடாத அந்த நாள் வந்தது.
2012/08/19
How can this be justified?
The whole State cries it being COMMUNAL partiality ,the concerned person seems to care the least for it..No one has the Guts to open their mouth and air their views.
What to say?
karthik+amma
2012/08/09
பாவமையா ,பாவம் .நடிகர்கள் இருவர் கொடுத்த காசுக்கு சங்கு ஊதப் போய் , இவர்களை நம்பித்தான் நாங்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம் அதனால் அவர்களையும் அர்ரெஸ்ட் செய்ய வேண்டும் என்று போர்க் கோடி உயர்த்தியுள்ளனர் ஈமு பண்ணையில் முதலீடு செய்தவர்கள் .இந்த சட்டை ,பனியன் ,விளம்பரங்களில் வரும் சட்டை கிழிந்து விட்டால் அதற்கும் அந்த நடிகர்கள் மேல் கேஸ் போடுவார்களோ ?
நல்ல மக்கள்
The next announcement will be that Christmas has to be celebrated on Deepavali day and pongal has to be celebrated on christmas day and Deepavali on pongal day.
தமிழக அரசின் அறிவிப்பு :இன்று கிருஷ்ண ஜெயந்தி :
அடுத்த அறிவிப்பு இதுவாக இருக்கலாம் :
பொங்கல் பண்டிகை கிருஸ்துமஸ் அன்றும் கிருஸ்துமஸ் தீபாவளி அன்றும் கொண்டாடப் பட வேண்டும் என்றும் ....கிர்ர் , கிர்ர் , ஆஆ தலை சுற்றுகிறது .
இதில் பாவமான விஷயம் என்னவென்றால் , எல்லோருக்கும் லீவ் .ஆனால் இந்த so called I.T people. They have to work today.Solid condolence you I.T guys.
2012/08/08
The greatest economist Singh government's new announcement:
2012/08/07
I still live in the thoughts of 2005.
This day that year, I and Karthik started from Bangalore to Salem regarding land lease.
If with Karthik I will be the happiest.
We went to my brothers' houses and then to land at Metturdam.And exactly at this time we left Salem to Bangalore.Reached Bangalore by about 9.30 p.m and Karthik wanted to take me to one hotel where he had tasted aappam and chicken kuruma .Having found it so tasty, he wanted his mom to taste it.Though I felt very tired and wanted to go home and take rest, I went to the hotel to oblige Karthik's wish.
தான் எதை அனுபவித்தாலும் அதை அம்மாவும் ரசிக்க வேண்டும் என்ற அவன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வேண்டாமா ?
எவ்வளவு சந்தோசம் ....
அந்த நினைவுகள்தான் என் சுவாசமாக உள்ளது .
I breath his thoughts .
my blog may be boring.But how ever much I try to change myself I fail miserably.
karthik amma
2012/07/04
'' // It was the demise of my beloved friend who met with accident at inner ring road. Being an excellent driver, a man with great reflex, the accident still remains a mystery for us. The one who admitted to hospital, also disappeared and not able to track.
He has been my inspiration right from my college days. He is the one who taught me programming, taught me histories, taught me philosphies, etc, and the list is long.
2005 is a black year in my life, missed him, being my role model... Though I dont believe in souls and re-birth, sometimes I feel that the concept of souls should be true, and he should appear in my life, at some point.'' // //
ஆம்..ஒரு expert driver .
ஒரு சின்ன accident கூட நடந்ததில்லை..அவனுடைய 12 வயதிலிருந்து கார் ,பைக் ஒட்டியவன் .
அன்று மட்டும் என்ன நடந்தது .still remains a mystery .அது ஒரு விபத்து என்று இன்று வரை நான் நம்பவில்லை..
எப்படியாயினும் , விதி அல்லது கடவுள் அவனை காப்பாற்றி இருக்கலாம்..
தர்மம் தலை காக்கும் என்ற சொல்படி பார்த்தாலும் நான் செய்த தர்மம் 10 உயிர்களை காப்பாற்ற முடிந்திருக்கும்..
எதை சொல்வது ?
2012/06/26
ஆஆனால், அதை விட பெரிய சோகம், சேலம் மாவட்டடத்தில் இருந்த யானைக் கூட்டத்தை மக்கள் துரத்திய துரத்தில், அவைகள் எங்கு போவது எப்படி போவது என்ற தடுமாற்றத்தில் ,ஒரு யானை கூட்டத்தை விட்டு பிரிந்து விட்டது.
என் வருத்தம் இதுதான். ஏன் யாருக்குமே அந்த யானைகள் பசியோடிருக்கும் என்றோ அவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டுமென்றோ தோன்றவேயில்லை. அந்த போட்டோவை என்ன செய்யப் போகிறார்கள்? ஒரு பந்தாவுக்கு அலையும் இவர்கள் அந்த யானைகளின் மன நிலையை ஒரு நிமிடம் கூட சிந்தித்து பார்க்காததேன் ?
பயத்திலும் பசியிலும் அந்த யானைகளின் தவிப்பை T V யில் பார்த்த பொது மனம் மிக வேதனைப் பட்டது. அதை விட அந்த யானைக் குட்டி இறந்து விட்டது என்ற செய்தி துக்கத்தை அதிக படுத்தியது.
இதற்காகத்தான், இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு விலங்கை specify செய்தனர். முருகனுக்கு மயில், யமனுக்கு எருமை, ராமருக்கு அணில் ,சிவனுக்கு காளை , விநாயகர் யானை என்று வைத்து தொடர்பு படுத்தி ,அவைகளுக்கு மனிதர்கள் தொந்திரவு கொடுக்காமல் இருக்க வழி செய்தனர் .
ஆனால் இப்போதுதான் மனிதர்கள் தலை கீழாக மாறிக் கொண்டிருக்கிறார்களே. கலிகாலம். அவ்வளவுதான் சொல்லலாம்.
கார்த்திக்+அம்மா
2012/06/19
1.தாய்மை :
இந்த செய்திகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
தேவயாணி சொல்லியது. எனக்கு என் குழந்தைகள்தான் முக்கியம். நடிப்பு அதற்கப்புறம்தான்.
the great ஐஸ்வர்யா ,
'' நான் சினிமாவை மறந்து விட்டேன். என் தாய்மை எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது ''
அதே போல் குஷ்பூ , இவர்களை மிகவும் பாராட்டுகிறேன்.மிக அருமையான முடிவு.
தாய்மையை போல் இன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. அதுவும் அந்த குழந்தை பருவம்.
நானும் கார்த்தி பிறந்தபோது என் Assistant Professor [இங்கிலீஷ் ] வேலையை விட்டவள். இன்று அந்த வேலையிலேயே இருந்திருந்தால் 2020 யில் [ university சர்வீஸ் 62 வயது ] நான் ஒய்வு பெறும்போது என்ன சம்பளம் வாங்கியிருப்பேன்.
ஆனால் இன்று வரை ஒரு நிமிடம் கூட நான் அதைப் பற்றி வருத்தப் பட்டதில்லை.
ஏனென்றால் கார்த்தியும் நானும் அப்படி ஒரு சொர்க்கத்தை அனுபவித்தோம்.
கார்த்தியின் குழந்தை பருவம் ,எவ்வளவு சந்தோசம்...எத்தனை கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
இன்றும் அந்த நினைவுகளில்தான் நான் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்.
2 ம் பதிவு A .P .J அப்துல் கலாம் பற்றி.
என் மானசிக காதலர் அவர். இந்திரா காந்திக்கு SCIENTIFIC ADVISOR ஆக இருந்த போதிலிருந்து [1982 ] அவர் மேல் பைத்தியம். என் கணவரிடம் சொல்வேன் '' உங்களுக்கு முன் அவரை பார்த்திருந்தால் அவரைத்தான் கல்யாணம் செய்து கொண்டிருப்பேன் '' என்று. மனிதன் ஒரு முறைப்பு பார்வை பார்ப்பார். என் மாணவர்கள் என் பிறந்த நாளன்று அவருடைய photo வை கொடுத்து ''miss your lovers photo '' என்று சொல்லி கொடுப்பார்கள். வேறு எந்த பொருளாக இருந்தாலும் birthday gift ஆக நான் வாங்க மாட்டேன் ...இதை கண்டிப்பாக மறுக்க மாட்டேன் என்றும் என் மாணவர்களுக்கு தெரியும் .அவ்வளவு பைத்தியம் .
மாணவர்களுக்கு தெரியும் .நம் ஆங்கில ஆசிரியை ஒரு வித்தியாசமான character என்று.
கார்த்திக்கிற்கு அவர் 2002 ல் ஆசிரியராக பாடம் நடத்திய போது இவ்வளவுதான் சந்தோசம் என்றே சொல்ல முடியாது. மதிய உணவிற்கு late ஆக வந்தால் ,'' ஏன் கண்ணம்மா late '' என்று கேட்டால் ''அவர்தான்மா class எடுத்துக் கொண்டே இருந்தார் '' என்று பதில் சொல்வான். அவர் என்றால் அது கலாம்தான்.
அவரிடம் ஒரு peon வேலையாவது கேட்டு பெற்று அவரிடம்தான் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
பேரதிர்ச்சியாக அவர் ஜனாதிபதியாகி விட்டார். எல்லோரும் சந்தோஷப் பட்ட போது நான், கார்த்தி, செந்தில் மூன்று பெரும் பெரிய சோகத்தில் ஆழ்ந்தோம். செந்தில் ''அவர்தான் என் project guide '' என்ற கனவில் இருந்தான் .எங்கள் Godfather எங்களை விட்டு பிரிந்த சோகம் எங்களுக்கு.
.... ... இந்த பதிவை எழுத வேண்டும் என்று நிறைய நாட்கள் நினைத்ததுண்டு. இப்போது அவர் போட்டியில் இருந்து விலகிய பின் எழுதினால் தவறில்லை. இல்லையென்றால் அவருடைய பதவியின் மூலம் ஏதாவது ஆதாயம் தேடத்தான் இந்த பதிவு என்று யாரேனும் நினைக்க கூடும். அவர் போட்டியில் இருந்து விலகியதுதான் எனக்கு பிடித்தது. இந்த அரசியல் வாதிகள் சகவாசமே வேண்டாம்.
கார்த்தி அவருடைய மாணவனாக இருந்த போது அவரைப் போலவே தலை சீவ மாட்டான். socks போடாமல் shoe போடுவான் .dress iron செய்து போட மாட்டான். அப்படியே அவர் போல் .
அவனை விபத்தில் இழந்த போது , அவரிடம் சென்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. 2002 APRIL மாதத்தில் அவரை சந்திக்க வேண்டுமென்று அவரிடம் கார்த்தி சொன்ன போது எப்போது வேண்டுமானாலும் அம்மாவை அழைத்து வா என்று சொல்லியிருந்தார். இப்போது அவருக்கு கண்டிப்பாக நினைவு இருக்க முடியாது. ஏனென்றால் ஆசிரியர்களாகிய நாங்கள் 1000 கணக்கான மாணவர்களை பார்ப்பதால் எல்லோரையும் நினைவில் கொள்வது சாத்தியமில்ல. என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து கார்த்தியை பற்றி சொல்ல வேண்டும்.
கார்த்திக்+அம்மா
2012/06/15
remember me
the scene is this.
''a lover is fighting with his enemy while his ladylove comes there.seeing her he pushes her into the elevator and closes the door.his ladylove refuses to leave him.she struggles to come out of the lift.but it starts going down.
that time he says 'PLEASE REMEMBER ME'
HIS EXPRESSION WAS SIMPLY SUBERB.
he wants his lady love to live.but he wants to live in her memory for ever.
Don't u think i too might have the same wish?
will u remember me?
forget august 26
remember NOVEMBER 14.
THIS SAELM SINGAM WAS BORN TO LIVE FOR EVER.
so no such date as august 26 came in the calender.
i will live for ever. i have made enough arrangements for that.
with luv and luv only,
karthik[KUCHI].DEMI
i wish to be called as karthik and not as kuchi.
contact me with my new mail i.d
ponniyinselvi_kartik@yahoo.co.in
ஆனால் இப்போது
அவனைப் பற்றி எழுதும் blog ஆகி விட்டது.
2012/06/07
நிறைய கேள்விகளுக்கு பதில் தெரிந்த அந்த மீனவ பெண்ணுக்கு ''நண்டின் வீடு வளை '' என்று மட்டும் சொல்லத் தெரியவில்லை.
இன்னொரு பெண் கூடை ''முடைதல் '' என்ற வார்த்தையை கேள்விப்பட்டதே இல்லை என்று தன தமிழ் நாட்டு பிறப்பை பெருமைப் படுத்திக் கொண்டிருந்தார்.
ஏண்டாப்பா வேலையை விட்டு வீட்டில் உட்கார்ந்தோம் என்று வருத்தப்பட வைப்பது இந்த டி வி பார்க்கும் கொடுமைதான்.
.... ......
டோனி பற்றி ஒரு விஷயம் .விளையாடும் களத்தில் எச்சில் துப்பிக் கொண்டே இருந்தார். பார்க்கவே சங்கடமாக இருந்தது.
.... ... .....மீண்டும் டி .வி விஷயம்
சமையல் நிகழ்ச்சிகளை பாருங்களேன் .நன்றாக படித்தவர்கள், சாதனை செய்தவர்கள் அமைதியாக பொறுமையாக பேசுகிறார்கள்.
ஆனால் இந்த இல்லத்தரசிகள் வந்தால் ஒரே அழும்புதான். பாதி ஆங்கிலம் ,கடித்து குதறுகிறார்கள். அதுதான் போகட்டும்.எதோ பத்து P .h d
ஒன்றாக படித்தவர்கள் போல் இதில் வைட்டமின் a ,b ,h ,m ...x ,y இருக்கிறது என்று அளக்கிறார்கள் பாருங்கள் ,,அப்பப்பா B .P எகிறுகிறது .
அதிலும் அந்த RAJ டி வி யில் வரும் அன்னையார்,சொல்வார் பாருங்கள்
.....one table spoon of கடுகு , [ ஏனம்மா, உனக்கு தமிழ் தெரியாது என்றால் English channels போய் program கொடுத்து உங்கள் ஆங்கில வள்ளன்மையை நிலை நாட்டுவதுதானே.
அடுத்தது Z டி .வி யில் வரும் ''சொல்வதெல்லாம் உண்மை ''.எல்லாம் 4 கல்யாணம் ,7 கள்ள உறவு , பாவம் நிர்மலா பெரியசாமி, நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா என்று ஆதங்கப்படுகிறார்..
என்னவாயிற்று நம் பண்பாடு என்று கேட்கிறார்.
நான் ஒன்று சொல்கிறேன்
நான் படித்தது ஆங்கில இலக்கியம் .
ஆனால் என் அம்மா தமிழ் M .A படிப்பதற்கு நான் நிறைய உதவி செய்த வகையில் தமிழ் இலக்கியமும் நன்றாக தெரியும்.
ஆங்கில இலக்கியத்தில் காமம் பற்றி 10% கூட இருக்காது.american literature வேறு.அதில் படிக்க முடியாத பல இருக்கும்.
அதே போல் தமிழ் இலக்கியத்தில் காமத்துப் பால் இருக்கும்.
அப்போதிருந்தே கந்தர்வ [ களவு ] திருமணம், கல்யாணத்திற்கு முன்பே உறவு என்பதெல்லாம் இருக்கும்.
அதனால் கற்பு ,கண்ணியம் என்பதெல்லாம் குறைவே.
கார்த்திக்+அம்மா
கலா கார்த்திக் .
2012/05/22
2012/05/14
2012/04/24
எத்தனையோ நாட்களாக தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு இன்றுதான் பதில் கிடைத்தது.
நன்றி .ஹரிகேசவ நல்லூர் ஐய்யா ..ஜி தொலைக் காட்சியில் அவர் அளித்த விளக்கம்.:
சூரியன் +சந்திரன் இரண்டும் உச்சம் பெரும் நாள் இது. இது வானவியல் அறிவியல் படி கூட மிக முக்கியத்துவமான நாள்தான். இந்த இரண்டு கிரகங்கள் [ ஒன்று நட்சத்திரம், மற்றொன்று துணைக் கோள். ]. ஆனால் இவை இரண்டும் பூமியின் மேல் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஆக இந்த நாளில் வேறு ஏதோ நிலவியல் உண்மை இருக்கக் கூடும். ஒரு வேளை , சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் கூட இருக்கலாம்.இதன் தாக்கம் அல்லது உண்மை ,அதன் சக்தி பூமி மேல் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டாக்கலாம்.
அது என்னவென்று நம் முன்னோர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் நாம்தான் எல்லாவற்றையும் நமக்கு தகுந்த மாதிரி மாற்றிக் கொண்டு, எல்லாவற்றையும் வியாபாரமாக்கி விட்டோமே.
யாராவது , [ ஒரு வானவியலாளர் அல்லது ஒரு ஜோதிடர் ] இதன் உண்மைகளைப் பற்றி இன்னும் அதிகம் சொல்லலாம். அல்லது ஆராய்ச்சி செய்யலாமே.
Whatever our ancestors did ,had a scientific reason.For so many years ,i have been searching for an answer to the importance given to this 'AKSAYA THIRITHIYAI.'.
And today i got a reasonable explanation. Thanks to HARIKESAVA NALLUR VEKATRAMAN JI.
in Z t.v he said that this day both sun and Moon are in peak position.
Both the astronomical bodies surely have a strong effect on Earth.
What will be the impacts of this position on earth?
Definitely there should be some changes.
May be the recent earthquakes are due to this conjunction.
I request any scientist or an astronomer to make a study and give a right explanation.
ONE THING for sure, is that our ANCESTORS had a very deep knowledge about everything. We should really feel proud of our ancestry.
karthik+amma
2012/04/15
2012/04/11
அது தை மாதமாக இருந்தால் என்ன , சித்திரை மாதமாக இருந்தால் என்ன? இந்த தலை முறை இதைப் பற்றி யோசிக்கக் கூடப் போவதில்லை . அவர்களுக்கு தமிழ் மாதங்கள் தெரியுமா , கண்டிப்பாக 25 % பேருக்கு கூட தெரியாது.
அவர்களுக்கு ஐ.பி.எல் போதும். கார்டூன் போதும்.
இந்த நாட்கள் எந்த பெர்ய வித்தியாசத்தையும் தருவதில்லை.
அரசு ஊழியர்களுக்குத்தான் கொண்டாட்டம். இன்னொரு விடுமுறை நாள். தொலைக் காட்சியில் அவர்களின் இஷ்ட தெய்வங்களான நடிகர்கள் பேட்டி தருவர். பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விடலாம்.
ஒரு முதல்வர் தை ஒன்றை கொண்டாடுவதா , சங்கமமா , நாங்கள் என்ன இளைத்தவர்களா , எங்கள் கொண்டாட்டத்தை பாருங்கள் என்ற சவால்தான். யாருடைய வரிப் பணம் ???
சும்மா புலம்புவதை தவிர வேறு என்ன கிழிக்க போகிறோம் ??????
கார்த்திக் +அம்மா
2012/04/07
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி என்று ஆத்திகர்கள் கோபப் படலாம்.
ஆனால் யாராவது இந்த கேள்விக்கு சரியான பதில் தாருங்கள்.
கேள்வி:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று சொல்கிறார் கிருஷ்ணன் .
அப்படியானால், சுனாமியில் லட்சக் கணக்கானவர் இறந்தனரே ,அது நன்றாக நடந்ததா ? பெற்றவள் பிள்ளைகளை இழந்து, குழந்தைகள் பெற்றோரை இழந்து, உடமைகளை இழந்து சோகத்தில் பரிதவித்து நின்றனரே ,அது நன்றாக நடந்ததா?
ஒரு விமானத்தில் பயணித்த அனைவரும், இன்னும் சற்று நேரத்தில் ,நம் குடும்பத்தை பார்க்கப் போகிறோம், நம் தாய் நாட்டு மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற ஆனந்தத்தில் இருந்த போது விமானம் வெடித்து கரிக்கட்டையாயினரே அது நன்றாக நடந்ததா?
ஓடும் பேருந்தில் தீ பிடித்து அடையாளம் காண முடியாத அளவுக்கு பயணிகள் கருகிப் போயினரே , அது நன்றாக நடந்ததா?
இதை எல்லாம் எப்படி நியாயப் படுத்துகிறது இந்த மதம், ''இந்து மதம் ? ''
மீறிக் கேட்டால். முற்பிறவி, கர்மா என்று கதை சொல்வார்கள்.
வந்தவர்கள் எல்லாம் போக வேண்டியவர்கள்தான் , பிறந்தவர்கள் எல்லாம் இறப்பவர்கள்தான் என்றெல்லாம் உபதேசம் செய்வார்கள்.எல்லோரும் இறக்கப் போபவர்கள்தான். ஆனால் யார் ,எப்போது என்ற கேள்வி இருக்கிறதே.
அதையும், தாண்டி , கடவுளுக்கு நல்லவர்களை நிறைய பிடிக்கும், அதனால் இவர்களை சீக்கிரம் அழைத்துக் கொண்டார் என்பார்கள்.
அப்படியானால், உயிருடன் இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்களா ?
என் கேள்விக்கென்ன பதில்?
கார்த்திக்+அம்மா
2012/03/19
Mayavathy &security
At whose money ????????????
It's our tax. We save each rupee losing or foregoing so many of our basic needs.
And with this money, she is given a 'protection'.
She has amassed a wealth worth 120 crores. How did she earn this money?
So its well known that she is RIIIICH ,rich.So she can afford to have her own security.,at her own money.
And the tax payers are fooled to a maximum extent. What protection does a tax payer gets?
And for this only we got freedom.?????????
This is a democracy meant for the politicians who rule us in a dictatorial manner.
Come to Chennai and see how many employees wait in the scorching sun, just for a politician to pass by.
And these poor,pitiable tax payers, the so called 'I.T ' people are the most exploited.
Once these people start a protest then only everything will fall in line and get set.
2012/03/13
power Dr.actor
He seems to be innocent, plain spoken, and simple.
Many argue that he doesn't know acting. For that matter, atleast 90 % don't act good.
More over it's his money, and he does not cheat anyone.With his money he can do whatever he wishes as long as it does not do any harm to anybody.
Reading blogs which made fun of him , I had a strange figure in my mind.
But, after seeing him in 'ATHU, ITHU,,ETHU,'' and in Kovai Sarala's program, I felt really bad.Unless like the greatest hypocrites, the so called ''GREAT '' actors , he is far far better.
Those who make fun of him, 'do you really have guts to do the same treatment to the other actors?'
power star, go ahead with your plans as you said in that program.
of course, i did not see the program fully.
Anyhow , all the best,power star.
kalakarthik
2012/03/12
நாளை தேர்வு. இன்று கேள்வி கேட்பது ஒரு புறம் .இரண்டாவது, ஒரு குறிப்பிட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்தால் போதும் என்று ஆசிரியர் சொல்கிறார்.சராசரி தேர்ச்சிக்கு போதும் என்ற அளவில் அது சரி.
ஆனால்,
மேல் படிப்பில் எத்தனை தடுமாற்றம் தரும் என்பதை ஏன் எல்லோரும் உணரவில்லை?
ஒரு லட்சத்து அய்ம்பதாயிரம் பொறியியல் மாணவர்கள் படிப்பை முடிக்காமல் அவதிப் படுவதற்கு இது போன்ற தவறே காரணம். 11 , 12 வகுப்புகளில் கணிதப் பாடத்தில் சுலபமான [ஆசிரியருக்கும் ] பகுதிகளை மட்டும் நடத்திவிட்டு, மற்ற சேப்டர்களை '' 'ஒமிட் '' ' செய்வது என்பது அந்த நேரத்திற்கு சரியாக இருக்கலாம்.
ஆனால், பொறியியல் படிப்பில் 75 % மாணவர்கள் அந்த கணிதப் பாடத்தை முடிக்க முடியாமல், first செமஸ்டர் ல் தோல்வியடைந்து ,அந்த அதிர்ச்சியில், அவமானத்தில், மேலும் மேலும் அர்ரியர்ஸ் சேர்த்து ,இறுதியில் படிப்பை முடிக்காமலே வெளி வருகின்றனர்.
இதில், இன்னொரு தவறு என்னவென்றால், எத்தனை பேப்பர் அர்ரியர் இருந்தாலும் அடுத்த வருடத்திற்கு சென்று விடலாம்.
ஆனால், மருத்துவ படிப்பில் அர்ரியர் இருந்தால் அந்த வருடத்திற்கான வகுப்புகளை அட்டென்ட் செய்து அரியர் முடித்தால்தான் அடுத்த வகுப்பிற்கு செல்லலாம்.
பொறியியல் படிப்பிலும் இதே நடைமுறை பின்பற்றப் படுமாயின் பொறியியல் மாணவர்கள் பட்டம் பெற்று வெளி வருவார்கள்.
அதனால் ஆசிரியர்களே ,அனைத்து பாடங்களையும் மாணவர்களுக்கு நடத்தி பயிற்சி அளியுங்கள் .அதற்கப்புறம் படிப்பது விடுவதும் , மாணவன் திறமை, விருப்பம்
2012/03/08
Woman's day
2012/03/07
ஐயோஓ ஒ ஒ பாவமான ராகுலை எல்லோரும் விமர்சிக்கின்றனர்.
என்னுடைய எரிச்சலெல்லாம் மன்மோகன் சிங் மேல்தான். வெளிநாட்டிற்கு போகும்போது மட்டும் மனைவி, மற்றும் பலர் என ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு தனி விமானத்தில் தனி ஆவர்த்தனம் செய்யத் தெரிகிறது.
ஆனால், எலெக்சன் தேர்தல் என வந்து விட்டால் மட்டும் ஆள் காணாமல் போய்விடுவார்.
ஒரே ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட வர மாட்டார்.
அறுவை சிகிச்சை வலியுடன் சோனியா , வெய்யில் , மழை, இருட்டு என நேரம் காலம் பார்க்காமல் ராகுல், பிரியங்கா என குடும்பமே அலையும். இப்போது யாராவது இது குடும்ப அரசியல் என்று சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் ?
பிரணாப், ப.சிதம்பரம் இன்னும் மற்ற எல்லோரும் எவ்வளவு அலைந்தார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?
காங்கிரசின் தோல்விக்கு முக்கிய காரணம் இந்த மாமேதை மன்மோகன் சிங் தான்
அவருடைய நிர்வாகத் '' '' திறமை '' '' !!!!!!!!!!! தான் காரணம். தனுஷ், ஸ்ருதி எல்லோரையும் கூப்பிட்டு விருந்து வைத்து கும்மாளமடித்துக் கொண்டிருந்தால் எப்படி கிடைக்கும் ஒட்டு ?
எரிச்சலாக வருகிறது.
கார்த்திக்+அம்மா
2012/02/13
ஓசூர் : ஓசூர் அருகே ஐந்து யானைகள் ஊருக்குள் புகுந்தது. வேடிக்கை பார்க்க குவிந்த கூட்டத்தை, யானைகள் விரட்டியதில், வனத்துறை ரேஞ்சர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கெலமங்கலம் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 15 யானைகள், கடந்த ஒரு வாரமாக ராயக்கோட்டை மலைக்கிராமங்களில் புகுந்து, அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 9ம் தேதி பாவாடப்பட்டி கிராமத்தில் புகுந்த யானைகள் கூட்டம், பயிருக்கு காவலுக்கு இருந்த முனியப்பனை ,50 மிதித்துக் கொன்றன. நேற்று முன்தினம் முத்தம்பட்டி கிராமத்தில் புகுந்து யானைகள் துரத்தியதால், விவசாயி நஞ்சன், 50 படுகாயமடைந்து இறந்தார்.
நேற்று முன்தினம் இரவு, சூளகிரி அடுத்த உள்ளட்டி தென்பெண்ணை ஆற்றுக்கரையில், ஐந்து யானைகள் தண்ணீர் குடிக்க வந்தன. அதன் பின், இரவு முழுவதும் சுற்றுப்பகுதி விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்தன. அதிர்ச்சியடைந்த விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன் மற்றும் வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, இரவு முதல் யானைகளை ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று காலை வரை, சூளகிரி அடுத்த உள்ளட்டி, கரகம்பட்டி, முத்தம்பட்டி, அலேசீபம் கிராமங்களை மையமாக கொண்டு யானைகள் சுற்றித் திரிந்தன. உள்ளட்டியில் இளைஞர்களுடன் இணைந்து யானைகளை விரட்டமுயன்ற வனத்துறையினரை, யானைகள் துரத்தியடித்தன. அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், இளைஞர்களும் நாலாபுறமும் சிதறிஓடினர். அப்போது, ராயக்கோட்டை ரேஞ்சர் (பொ) விமலன், யானையை வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன், மற்ற ரேஞ்ச் வனத்துறையினரை வரவழைத்து, ஊருக்குள் புகுந்த யானைகளை மீண்டும் வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கற்களை வீசியும், பட்டாசு வெடித்தும் யானைகளை துரத்தினர். மிரண்ட யானைகள் கூட்டம், கரகம்பட்டி, முத்தம்பட்டி, உத்தனப்பள்ளி வழியாக ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் சென்றன. காட்டிற்குள் சென்ற யானைகள் கூட்டம், மீண்டும் திரும்பி வரும் என்ற அச்சத்தில் விவசாயிகள், இரவு காவலுக்கு தோட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்துள்ளனர்.
மூன்று மாதத்தில் ஏழு விவசாயி பலி : ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், இதுவரை யானைகள் தாக்கி, 52 விவசாயிகள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும், ஆறு பேர் இறந்துள்ளனர். கடந்த மூன்று மாதத்தில், ஏழு பேரும், கடந்த மூன்று நாளில் இரு விவசாயிகளும் பலியாகியுள்ளனர்.
கடந்த 2 ஆண்டில், 228 முறை யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்துள்ளன. வனத்துறையினர், யானை வரும்போது மட்டும் விரட்டுவதற்கு செல்கின்றனர். மற்ற நேரத்தில் வனப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடாததால், யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
யாரப்பா , உங்களை அவசரப்பட்டு வீரப்பனை கொல்ல சொன்னது? அவர் இருந்த வரை அடங்கி கிடந்தன. இப்போது கேட்பதற்கு ஆளில்லாமல் யானைகள் அவை இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்றன.தேவையா?