மாலை 5.25 நிமிடத்திற்கு வானில் சூரியன் ரத்த சிகப்பு நிறத்தில் அமர்க்கள படுத்துகிறார்.
பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
வானில்தான் எத்தனை ஜாலங்கள் .நமக்குத்தான் ரசிக்க நேரமும் இல்லை .பொறுமையும் இல்லை
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
மாலை 5.25 நிமிடத்திற்கு வானில் சூரியன் ரத்த சிகப்பு நிறத்தில் அமர்க்கள படுத்துகிறார்.
பார்க்க பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
வானில்தான் எத்தனை ஜாலங்கள் .நமக்குத்தான் ரசிக்க நேரமும் இல்லை .பொறுமையும் இல்லை
எலி தின்ற குட்கா /
உ .பி மாநிலத்தில் போலீசார் 500 கிலோ குட்காவை பிடித்துள்ளனர்.
அந்த கேஸ் நீதிமன்றத்திற்கு வந்த போது நீதிபதிகள் ''அந்த குட்கா எங்கே '' என கேட்க ''MY LORD அத்தனையையும் எலிகள் சாப்பிட்டு விட்டன ''என்று பதில் கொடுத்துள்ளார்கள்.
5 கிராம் போதை பொருளை மனிதன் தின்றாலே out .இவ்வளவு குட்காவையும் எத்தனை எலிகள் சாப்பிட்டன ???????????
அவைகளுக்கு ஒன்றுமே ஆகவில்லையா??????
இவர்கள் அந்த எலிகளை பிடிக்க முயற்சி செய்யவில்லையா??
ஒரு எலியை மட்டுமாவது பிடித்து FIR போட்டு நீதிபதியின் முன் நிறுத்தி இருக்கலாம்....
எலியை தொட்டால் எலி காய்சசல் வந்து விடும் என்று பயந்து விட்டார்களோ ?????????
போலீசின் இந்த பதிலுக்கு என்ன பேர் வைக்கலாம் ????
திமிர்,தெனாவெட்டு ,???????????
ஏதாவது புது வார்த்தை கண்டுபிடிக்க வேண்டும்.
ஒன்று மட்டும் உண்மை.
'' இந்தியா ஒளிர்கிறது'''
கொடுமையிலும் கொடுமை இந்த இளம்பெண்ணின் முடிவு.
என்ன மாதிரி விளையாடுகிறாள். நடனம் ஆடுகிறாள்.
இறப்பிற்கு முன்னாள் status வைக்கிறாள்.(அப்போதே அவள் கால் எடுக்க பட்டுள்ளது.)
ஆனால் நம்பிக்கை.தைரியம்.
அவ்வளவு வலி.
கதறி இருக்கிறாள்.
மயக்க மருந்து கொடுத்து கொடுத்து நேரத்தை கடத்துகிறார்கள்.
' என்னால் முடியவில்லை. வீட்டிற்கு கூட்டி போங்கள் ''என்கிறாள்.
அடுத்த நாள் ''அவள்'' என்பது ''அது''வாகி விட்டது.
திக்கென்றாகி விட்டது. இரவில் கெட்ட கெட்ட கனவுகள்.
இதயம் கண்ணா பின்னாவென்று துடிக்கிறது.
இறப்பு கொடிது .
ஆனால் இவ்வளவு வலி.இவ்வளவு கொடுமை அனுபவித்தா இறக்க வேண்டும்?
மனது வலிக்கிறது .
இனி என்ன செய்து என்ன ஆகும்.
வெறுமை. கண்ணீர் .
1990 களில் மருத்துவ மனைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய ஒரு குழு இருந்தது.
நானும் அந்த குழுவில் இருந்தேன்.
மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகளை சந்தித்து குறை கேட்பது,மருந்துகளின் இருப்பை செக் செய்வது என்றெல்லாம் முடித்து விட்டு மருத்துவர்களுடன் கலந்துரையாடல் செய்து குறைகளை நிவர்த்தி செய்வோம்.
இது கதையல்ல.உண்மை.
இப்போது நடைமுறை என்ன என்று தெரியவில்லை.
ஒரு சின்ன கண்காணிப்பு அவசியம் .
ராமனும் சீதையும் :
சீதையை ராவணனின் அசோக வனத்தில் இருந்து மீட்ட ராமன் அயோத்திக்கு அழைத்து வந்து அரசராக ஆட்சி நடத்துகிறார். சிறப்பான ஆட்சி செய்கிறோமா மக்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள இரவில் மாறுவேடம் அணிந்து நகர் உலா வருகிறார்.
அப்போது ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் பேசி கொள்வதை மறைந்திருந்து கேட்கிறார்.
அவர்கள் பேசி கொள்வது :'' சீதை இத்தனை நாட்கள் வேறு ஒரு ஆண்மகன் வீட்டில் இருந்திருக்கிறாள்.அவள் உத்தமிதானா? பத்தினிதானா?'' என்ற கோணத்தில் போகிறது பேச்சு.
அடுத்த நாள் அரசவையை கூட்டிய ராமன் சீதையை நாடு கடத்துகிறான்.
ஒரு நல்லவனாக , ,நல்ல கணவனாக இருந்திருந்தால்
'' என் மனைவியை பற்றி எனக்கு தெரியும்.அவள் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது '' ''என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் .
அதிலும் இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம் .''பேசி கொண்ட தம்பதி தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர்களாம் . ''
அற்புதம்.ஆணாதிக்கம்.ஆணவம்.
தான் உத்தமன் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்ற மமதை.
ராமனை தெய்வமாக கொண்டாடுவோம்.
சூர சம்ஹாரம் :
டி .வி க்களின் புண்ணியத்தால் தமிழக மக்கள் அனைவரும் பரலோக பிராப்தி அடைந்து விட்டனர்.
ஒரே சேனல் விடாமல் எல்லா சேனல்களும் சூர சம்ஹார நிகழ்சசியை நேரடி ஒளி பரப்பு செய்தன.
'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்'.
சூரன் கெட்டவன் .அரக்கன்.
எல்லாம் சரி .
அப்படிப்பட்ட நல்ல கடவுள் அந்த அரக்கனை திருத்தி மனம் மாற்றி எல்லோருக்கும் நல்லது செய்யும் ஒரு நல்லவனாக மாற்றி இருக்கலாமே.
தன் தவறை உணர்ந்த சூரன் 'என்னை ஆட்கொள்ளுங்கள் ' என்று கேட்டவுடன் சேவலாக மாற்றி தன் கொடியில் வைத்து கொண்டாராம்.
கொஞ்சமா கதை சொல்லுங்கடா .
முருகன் வேல் எடுத்து வருகிறார்.சூரன் ஆடியபடி வருகிறார்.வேல் பட்டவுடன் ஒருவர் அந்த தலையை எடுத்து விடுகிறார்.
கேட்டால் நல்லவர்களை காப்பாற்ற இறைவன் எந்த எல்லைக்கும் செல்வார் என்று நியாய படுத்துகிறார்கள்..
எத்தனை கதைகள்?????
இன்னொரு கதை.
யாரோ ஒருவனை கொல்ல ஒரு கடவுள் மோஹினி வடிவம் எடுக்கிறார்.மோகினியின் அழகில் மயங்கிய இன்னொரு கடவுள் அவரை ஒரு புதருக்குள் வைத்து கற்பழித்து விடுகிறார்.கர்ப்பம் அடைந்த மோகினிக்கு குழந்தை பிறக்கிறது.
அந்த முறை தவறி ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த குழந்தை பெரிய தெய்வமாகி விடுகிறது.
ஏனுங்கோ
அந்த சாமிக்கு அந்த மோகினி ஒரு ஆண் என்பது தெரியாதுங்களா?
அப்பெல்லாம் போக்ஸோ சட்டம் இல்லைங்களா?
என்ன ஒரு அபத்தமான கதை.இது போல் ஒரு 100 கதைகள்.கதை சொல்பவர்கள் எல்லாம் அந்த சாமிகளுடன் கூட இருந்து எல்லாவற்றையும் பார்த்த மாதிரியே வர்ணிப்பார்கள்.
நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் ஏதோ ஒரு அறிவியல் அடிப்படையில்தான் ஆரம்பித்தார்கள்.
நடுவில் வந்த சிலர் இப்படி கதைகள் சொல்லி அப்பாவி மக்களை அடிமை படுத்தினர்.
இனிமேலாவது மதம் சொல்லும் அறிவியல் என்ன என்பதை சிந்திப்போம்.
ஜாதியும் இளைஞர்களும் :
நேற்று லேடி டோக் பெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் 5 பைக்குகளில் வந்த 'so called ' இளைஞர்கள் எல்லை மீறிபெண்கள் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர். மாணவிகள் பதறி அடித்து ஓடுகின்றனர்.
டோல் கேட்டில் ஒரு கும்பல் அட்டகாசம்.
சில மாதங்களுக்கு முன் ரயில் மீது தாக்கும் ஒரு கும்பல்.
இவர்களுக்கு இந்த தைரியமும் திமிரும் எங்கிருந்து வருகிறது ?
ஜாதியின் பெயரால் கட் சி வைத்துக் கொண்டு இப்படிப் பட்ட இளைஞர்களை தங்கள் சுயநலத்திற்காக மூளை சலவை செய்து அடிமை படுத்தி அடிதடிக்கு பயன்படுத்துகின்றனர்.
உண்மையில் இவர்கள் செய்ய வேண்டியது என்ன .
அந்த இளைஞர்களுக்கு free coaching கொடுத்து போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வைக்கலாம்.
செல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.
எத்துணை பேர் I A S தேர்விற்கு தயாராகிறார்கள்?
தயார் படுத்த படுகிறார்கள்?
பஸ்ஸின் படிக்கட்டிலும் மேற்கூரையிலும் ஆடுகிறதுகள்.
கையில் பட்டாக்கத்தியுடன் ரயிலில் தண்டவாளத்தில் தேய்க்கிறதுகள்.
பைக் சாகசம் செய்கிறேன் என்று ஒரு குரூப் .
போதிய அளவு பஸ் விடவேண்டும் என்று ஒரு பேட்டி கொடுக்கிறது இன்னொரு ஜந்து .
ஒரு மாணவனுக்கு ஒரு பஸ் என்று விட்டாலும் இந்த விசித்திர ஜந்துக்கள் ( அவதார் படத்தில் வரும் ஏலியன்கள் போல் ) படிக்கட்டில்தான் தொங்கும்.
குரங்குகள்தான் மர கிளையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொங்கும்.எனக்கு அந்த காட்சிதான் நினைவிற்கு வரும்..யாரும் இவர்களை திருத்த விரும்பவில்லை.
இந்த ஜந்துக்களும் திருந்த விரும்பவில்லை.
காலம் கலிகாலம்
விளம்பரங்கள்:
எனக்கு மிக மிக பிடித்த விளம்பரங்கள் :
BRU :and GOOD NIGHT :
இரண்டுமே குழந்தையை மைய படுத்திய விளம்பரம்.
BRU
'' தூங்கறான் ''
இது ஒரு அற்புதமான விஷயம்.நிறைய பேர் வீட்டில் நடக்கும் விஷயம்.குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் எந்த சத்தமோ , செயலோ இருக்க கூடாது என்பதில் கவனம் அதிகம்.
அதுவும் அந்த காலத்தில் ஹாலில்தான் குழந்தையின் தூளி இருக்கும்.எல்லோரும் அந்த தூளியை ஆட்டி விட்டு செல்வர்.குழந்தையின் பாதுகாப்பையும் உறுதி செய்து கொள்வர்.
இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி இருவரின் அக்கறை 'wonderful '.
செயற்கையாக இல்லாமல் இயல்பாக இருந்தது.அவர்களின் உடை, பேசசு எல்லாமே 'decent '.
அடுத்தது இன்னும் அருமை.
GOODNIGHT கொசு விரட்டி.
அந்த சின்ன மகாராணியை கன்னத்தில் கிள்ள வேண்டும் போல் துடிப்பு.
இந்த விளம்பரத்திலும் கணவன் மனைவி உடை ,செயல் அனைத்தும் அவ்வளவு நேர்த்தி.
ஒரு நைட்டியோ ,ஷார்ட்ஸ் அப்படி இல்லாமல் பார்க்கவே நிறைவாக இருந்தது.
அடுத்து,Hamam சோப்பு .ஒரு பொருள் கொண்டு வருவார் டெலிவரி நபர்.அந்த சிறுமி அவருக்கும் சோப் கொடுக்கும்.கோவிட் காலத்தில் வந்த விளம்பரம்.அந்த மனிதாபிமானம் அந்த பெண் ,அம்மா எல்லோரும் சிறப்பு.
இந்த விளம்பர டைரக்ட்டர்களுக்கு என் பாராட்டுக்கள்.
எனக்கு பிடிக்கவே பிடிக்காத விளம்பரங்கள்.இந்த உள்ளாடை விளம்பரங்கள்.
காலங் காலையில்பக்தி பாடல் பாடும் போது ஆரம்பித்து இரவிற்குள் அனைத்து சேனல்களிலும் சேர்த்து ஒரு 100 முறையாவது ஒளி பரப்பாகிறது.
எத்தனை ஆண்கள் அவஸ்தை படுகிறார்கள்.
குடும்பமாக உட்கார்ந்து பார்க்க முடியவில்லை.
அனைவருக்கும் தர்ம சங்கடம் .இப்படியான விளம்பரம் அவசியமா???????????
இதற்கெல்லாம் சென்சார் கிடையாதா?????????
எல்லா சேனல்களுக்கும் வேண்டுகோள்.
உணர்சசிகளை தூண்டுவது போன்ற இந்த மாதிரி விளம்பரங்களை நிறுத்துங்கள்.
காதலும் கொலையும்.
இன்று படபடக்கும் செய்தி.போலீஸ்குடியிருப்பில் 20 வயது பெண்ணும் 23 வயது பையனும் காதலித்துள்ளனர்.
''காதலித்தால் விட்டு தொலையுங்களேன் பெற்றோர்களே''...
( எனக்கு காதல் சுத்தமாக பிடிக்காது. 6 வருட கல்லூரி படிப்பில் காதல் என்ற வார்த்தை வரவே இல்லை.இத்தனைக்கும் என் அண்ணா படித்த மெடிக்கல் கல்லூரியில் அண்ணாவின் நண்பர்கள் பலருக்கு என்னை பிடிக்கும்.மனதுக்குள் காதல் தோன்றி இருக்கலாம்.ஆனால் ''மம்முட்டி sister '' என்ற ஒரே வார்த்தையில் பண்பாடு மேலோங்கியது.).
இப்போது என்னவோ 2 வயது, 3 வயது எல்லாம் காதல்தான்.
ஒரு சினிமாவில் பிறந்த கைக்குழந்தைகள் இரண்டு கையை பிடித்து கொள்கிறதாம்.அப்போதே காதல் வந்து விட்டதாம்.
இந்த கொடுமையை எல்லாம் பார்க்கும் இந்த கால பைத்தியங்கள் காதலிக்கா விட்டால் நாடு கடத்தி விடுவார்கள் என்ற ரேஞ்சுக்கு காதலிப்பதை மட்டுமே செய்கிறார்கள்.
அதிலும் பெண்கள்??????????
சொல்லவே வேண்டாம்.
தங்கள் வசதிக்கு ஒரு அடிமை கிடைத்தான் என்ற கணக்கில் எவனையாவது time pass காதல் செய்வது. பெற்றோரும் கண்டு கொள்ளாமல் விடுவது.
ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் கல்யாணம் செய்வது என்ற முடிவு எடுக்கிறார்கள்.
காதலனுக்கு கோபமும் வெறியும் தலைக்கு ஏறுகிறது .
கொலை, தற்கொலை என கதை முடிகிறது.
நேற்று அந்த காதலன் அந்த பெண்ணை ரயிலின் முன் தள்ளி விட்டான்.பெண் காலி.
பெண்ணின் அப்பா மாரடைப்பில் காலி. பெண்ணின் அம்மா கேன்சர் நோயாளி.
அந்த குடும்பம் அவுட்.
பையனின் குடும்பம் கோர்ட் ,கேஸ் என்று நொடிந்து போய் விடும்.
எங்க இருந்து இவர்களுக்கு காதல் வருகிறது?????
மேற்கொண்டு ஏதாவது படிக்கலாம்.ஒரு newspaper படிக்கலாம்.
போட்டி தேர்வு எழுதலாம்.
எந்த குறிக்கோளும் இல்லை.
அப்பா அம்மா எதுவும் சொல்ல கூடாது.
கலிகாலம்.
சைவமா.வைணவமா.இந்துவா.இப்போது ஏன் இந்த பிரச்சினை????.ராஜ சோழன் என்றால் அல்லது 'ஜ' சொல்லக் கூடாது.ரா ச ' என்று தான் சொல்ல வேண்டும் என்ற சண்டை எதற்கு இப்போது.இன்றைய பிரச்சினைகள் 1000 இருக்கிறது.என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்.
'சுந்தர சோழன் அரண்மனையின் குந்தவை தேவி'என்று தான் என்னை சொல்வார்கள். என் தாத்தா 'நாம் சோழ வம்சம்'என்று சொல்லி சொல்லியே என்னை வளர்த்தார்.துர்கைக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது குருக்கள்சொன்னார்' அம்மா நீ போன பிறவியில் ஒரு அரசியாக இருந்திருக்க வேண்டும்.ஏனென்றால் துர்கைக்கு கோவில் கட்ட ஒரு அரசியால்தான் முடியும்.போன பிறவியில் விடுபட்டதை இப்போது செய்கிறாய்'என்றார்.
இருக்கட்டும்.
நான் சோழ குலத்தில் பிறந்து பல்லவ குலத்தில் வாழ்க்கை பட்டவலாக இருக்கட்டும்.அந்த பழம் பெருமை இன்றைய என் வாழ்விற்கு எந்த வகையில் உதவுகிறது.இன்று நான் 'கலா கார்த்திக்' அவ்வளவுதான்.
நாளை என்ன நடக்கும்.எந்த pandamic வரும்.எந்த சுனாமி வரும்.சைனா எப்படி தாக்கி எப்படி அழிக்கும்be it India or Bharath .இருக்குமா.உலக வரைபடத்தில் கானாமலே போய் விடுமா?
எதுவும் தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கையில் இந்த சண்டைகள் அவசியமா.
துர்க்கைக்கு
ஆயுத பூஜையும் ,சரஸ்வதி பூஜையும்.
முதலில் இந்த பண்டிகை எதற்கு?அந்த காலத்தில் ஓலை சுவடிகள்.
ஒரு வருடத்திற்கு ஒரு முறையாவது புதுப்பிக்க வேண்டும்.
கரையான் அரிக்கலாம் .ஈரம் பட்டு கெட்டு போகலாம்.அதனால் அவற்றை சரி செய்து ,புதுப்பித்து பயன்படுத்தினர்.
இதை அப்படியே சொன்னால் 'வந்துட்டான் அறிவாளி' என்று கடந்து போய்விடுவார்.
அதையே ஒரு தெய்வம், அதற்கு செய்ய வேண்டிய பூஜை என்று சொன்னால் பயந்து சரியாக செய்வர் .(பயம்தான்.பக்தி எங்கே என்று தேட வேண்டும் ).
அதனால் சரஸ்வதி பூஜை.
அப்படியானால் ஆயுத பூஜை?????
அக்கால அரசர்கள் போருக்கு சென்று வந்த பின் படைக்கலங்கள் (கத்தி,ஈட்டி,வாள் ,கேடயம் )போன்ற கருவிகளை சரி செய்ய என்று ஒரு வாரம் ஒதுக்கி அவற்றை சரி செய்து அதற்கு ஒரு பூஜை என்று வைத்தனர்..எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் சரஸ்வதி பூஜை அஷ்டமியிலும் ,ஆயுத பூஜை நவமியிலும் வரும்.சுவடிகள் குறைவு என்பதால் 8 நாட்களில் வேலை முடிந்து விடும்.ஆயுதங்கள் அதிகம் என்பதால் 9 நாட்கள்.10ம் நாளாகிய தசமியில் நிறைவு பூஜை.
ஆனால் இப்போது இரண்டு பூஜையும் ஒரே நாளில்.
கேட்டால் அதற்கு ஒரு புது கதை சொல்கிறார்கள்.ஒரு அரக்கனுடன் காளி தேவி 9 .நாட்கள் போர் செய்து 10ம் நாள் வெற்றி விழா கொண்டாடுகிறாள் .தேவி மஹாத்மியம் என்ற புத்தகம் இந்த போரை பற்றியது.தயவு செய்து யாரும் படித்து விடாதீர்கள்.ஒரே 'A 'தான்.அதுவும் அல்லாமல் ஒரு அரக்கனை கொல்ல ஒரு சாமிக்கு 10 நாட்கள் எதற்கு????????????
கதை....கதை.
I BEG THE SO CALLED 'சமய பிரச்சாரகர்கள் 'TO STOP TELLING SUCH UTTER NONSENSE STORIES '
போதும்.மக்களின் அறியாமையில் குளிர் காய்ந்தது.இப்போது எந்த கருவியையும் ..அது பைக்கோ , காரோ ..மிக்சியோ என எதுவாக இருந்தாலும் உடனடியாக சரி செய்ய முடியும்.SERVICE CENTERS இருக்கின்றன.
அப்படி இருக்கும்போது இந்த பூஜைகள் ஒரு சம்பிரதாயமாக ..சடங்காகவே செய்ய படுகிறது.
நான் எப்போதும் சொல்வேன்.
'' '' I AM ''SCIENTIFICALLY RELIGIOUS ''..
எந்த ஒரு பண்டிகையும் மூட நம்பிக்கையில் உருவாக்க படவில்லை.WHATS THE SCIENCE BEHIND IT என்பதை இளைய தலைமுறைக்கு சொல்லி கொடுங்கள்
A C யில் பாம்பு இருந்தது என்று செய்திகளில் வந்தது.எப்படி வரும்?
வர முடியும் என்று கேள்வி இருந்து கொண்டே இருந்தது.
Finally I guessed the answer .
I may be right or wrong.
one day i saw a bird building a nest in the outer unit of the AC.
It was a very good place.the gap between the wall and the ac unit was comfortable enough .It safeguarded the birds from sunlight,rain and wind.
OK.Let them build.But the problem started when the birds brought tiny insects to the nest to feed the chicks.All type of insects(and that might have included a snake puppy.And it could have escaped into the unit and stayed safe there).
ஆம். அப்படியாகத்தானே இந்த பாம்பு குட்டி உள்ளே போயிருக்க வேண்டும் .அங்கேயே வளர்ந்திருக்க வேண்டும்.
so my suggestion is that, remove any nest not bothering about being a sin or curse .
ஆம் .உடனடியாக கூட்டை எடுத்து விடுங்கள் .பாவம் ,சாபம் என்றெல்லாம் இல்லை.அப்படி பார்த்தால் அந்த பறவைகள் அந்த பூசசிகளை கொல்வதும் பாவம்தானே .
சில பல செய்தி சேனல்கள் தரும் செய்திகள்.
ஒரு 1/2 மணி நேர நிகழ்ச்சி :
ஆரம்பம்.
முதல் 5 நிமிடங்கள் பெண்களின் உள்ளாடை விளம்பரங்கள் .(மகனோ ,மகளோ அல்லது வேறு யாராக இருந்தாலும் ,பக்கத்தில் இருந்தால் அவ்வளவுதான்.)
அதற்கடுத்தது ஒரு சாக்லேட் விளம்பரம்,அப்படி ஒரு மொக்கையாக இருக்கும்.
இப்படியாகத்தான் விளம்பரங்கள் முடிந்த பிறகு
முதல் செய்தியாக 2 மகன்களுக்கு தாயான 40 வயது பெண் 20 வயது கள்ள காதலனுடன் ஓட்டம்.
2வது செய்தியாக 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிர்இழப்பு.
3 வது செய்தியாக பின்னால் வந்த லாரி பேருந்து மீது மோதி 6 பேர் " "பரிதாபமாக உயிர் இழந்தனர் " ".
உயிர் இழப்பதே பரிதாபமானதுதான்.அதில் இந்த அடைமொழி வேறு.
4வது செய்தி.70 வயது முதியவர் பெண்ணின் வயிற்றில் இருக்கும் 6 மாத குழந்தைக்கு பாலியல் தொந்திரவு.
''சிறிய இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்.''
இடைவேளையில் மீண்டும் சட்டி,பனியன்,மிளகாய்த் தூள் விளம்பரங்கள்.
5 வது செய்தி :ஒரு தலைவர் ஒரு நிகழ்சசியை தொடங்கி வைத்து உரை ''ஆற்றுவார் "(சூடாக இருக்கிறதாம்.) அதனால் ஆற்றுகிறார்.
நமக்குத்தான் சுகர் ,பி .பி எகிறி உடல் சூடாகிவிடும்.
6வது செய்தி. நாளை மழை வரும் என்று நாங்கள் சொல்வதால் அதை நம்பி குடையோ ,ரெய்ன் கொட்டோ எடுத்து செல்ல வேண்டாம்.
7 வது செய்தி :இத்துடன் இந்த செய்தி அறிக்கை முடிவடைந்தது.
ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும்இடையில் பாகிஸ்தானிலிருந்து நாலைந்து பாம் போட்டது போல் வெடி சத்தம்.
அது ஒன்றும் இல்லைங்க.BGM .
முன்பெல்லாம் செய்திகளுக்கு இடையேதான் வெடிகுண்டு.
இப்போதெல்லாம் செய்திகள் வாசிக்கும்போதே குண்டுமழைதான்.
இந்த சேனல்களுக்கு எத்தனை முறை சொன்னாலும் எந்த மாற்றமும் கிடையாது.
தலைவிதியே ..தலைவிதியே ..என்று விதியை திட்டிக் கொண்டே பார்க்க வேண்டியதுதான்
ஹார்லிக்ஸ் விளம்பரம் .
அண்ணன் ஹாஸ்டலுக்கு செல்கிறான்.
தம்பி சொல்கிறான்
'' நீ இல்லாமல் வீடே போரடிக்கும்''
செந்திலும் இதைத்தான் சொன்னான்.
நிரந்தரமாக அண்ணன் (கார்த்தி ) பிரிந்து விடுவான் என்று நினைத்தானா .
இன்று தன் அண்ணனை எவ்வளவு miss செய்கிறான்?????
எந்த ஒரு சந்தேகம் கேட்கவோ
எந்த ஒரு ஆலோசனை கேட்கவோ
ஒரு moral support க்காகவோ
அண்ணன் .அண்ணன் .
என்னிடம் மறைத்தால் எனக்கு புரியாதா ???
அதுவும் அவன் VFX project க்கு அண்ணன் இருந்திருந்தால் துள்ளி குதித்துக் கொண்டிருப்பான்.
இப்போது ஏகலைவன் மாதிரி தானே கற்றுக் கொண்டு தானே தடுமாறிக் கொண்டுள்ளான்.
கார்த்தி முகத்தை பார்த்தால் போதுமே 100 யானை பலம் வருமே.
கார்த்தியின் நண்பர்களோ ,
உறவினர்களோ
எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.
செந்திலை பார்த்தால் அடி வயிறு வெடிக்கிறது.
வேதனை அவனை சோதிக்கிறது.
இதையெல்லாம் தாண்டி செந்தில் வெற்றி பெற வேண்டும்.
நானும் செந்திலும் தவிக்கும் தவிப்பு வார்த்தையில் சொல்ல முடியாது.
எதை எழுதுவது .
செஸ் ஒலிம்பியாட் பற்றியா?
உலகமெங்கும் எல்லா நாடுகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தவிக்கிறார்களே
அது பற்றியா
அல்லது காட்டு தீயாய் பற்றி எரிகிறதே
அது பற்றியா
எதையும் எழுத முடியாத அளவிற்கு மனம் விரக்தியில் இருக்கிறது.
ஜாதி வேண்டாம் என்று சொன்ன பெரியார் பேரில் உருவாக்கப் பட்ட பல்கலை.
M .A இரண்டாம் ஆண்டு கேள்வித்தாளில் ஒரு கேள்வி.
கீழ்கண்ட ஜாதிகளில் எது தாழ்ந்த ஜாதி?
4 பதில்கள்.(options ).
கோபம்.
ஆத்திரம்
ரௌத்திரம்.
கொலைவெறி
வருகிறது எனக்கு.
ஜாதியே இல்லை என்று ஆகிவிடாது.
எத்தனை கலப்பு திருமணங்கள் வந்தாலும் lurking factor ஆக ஒளிந்து வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இந்த ஜாதி எண்ணம்.
இருந்து விட்டு போகட்டும்.
ஆனால் உயர் ஜாதி ,தாழ்ந்த ஜாதி ,ஆண்ட ஜாதி போன்ற பாகுபாடுகள் வேண்டாமே.
2000 களில் ஜெயந்தி சிக்னலில் ஒரு பெரிய பேனர் இருக்கும்.
'''' கிருஷ்ணசாமி பறையனார்'''' என்று .
அவ்வளவு பெரிய பேனர்.
எவ்வளவு ரசித்தேன் நான்.
ஒரு இசை அமைப்பாளர் ஒரு மேடையில் அழுதார்.
'' நான் பிராமணனாக பிறக்கவில்லையே '' என்று.
அவர் எங்கே ?
ஆமாம் . நான் இவன்தான் என்று சொல்லும் கிருஷ்ணசாமி அவர்களின் தன்னம்பிக்கை,ஈகோ , கெத்து எங்கே?.
இப்போது ஜாதி பற்றி பேச வேண்டிய அவசியம் பெரியார் பல்கலைக்கு ஏன் வந்தது.
அந்த பல்கலையில் குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கம் அதிகம் என்று சொல்கிறார்கள்.
இந்த கேள்வி தாள் என் கவனத்திற்கு வரவில்லை என்கிறார் v .c .எவ்வளவு சிறிய வி .சி .
துறை தலைவர் என்ன செய்து கொண்டிருந்தார்?
கண்ட்ரோலர் of exams கவனத்திற்கும் வரவில்லையாம்.
அப்போது பல்கலையில் யார்தான் எதற்குத்தான் பொறுப்பு?
இந்த போக்ஸோ சட்டத்தில் பிடிபட்டவர்கள் பற்றி செய்தி போடும்போது கமெண்டில் ''இவனை நடு தெருவில் நிறுத்தி சிர சேதம் செய்ய வேண்டும் என ஒரு 100 பேர் சொல்வார்கள்.
இந்த கேள்வி தாள் தயாரித்த அந்த வக்கிரம் பிடித்த
ஜாதி வெறி பிடித்த ,திமிரின் மொத்த உருவமான அந்த அரக்கனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?????????
இப்படி செய்யலாம்.
அண்ணா பல்கலை.----ஜாதி.
பாரதியார் பல்கலை ---ஜாதி
என்று ஒவ்வொரு பல்கலைக்கும் ஒரு ஜாதி பெயர் கொடுத்து விடலாம்
யார் அந்த வாசன்?
10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்களாமே ?
என்ன செயல்?
பைக்கில் 243 கி.மீ வேகத்தில் பறக்கிறாராமே .
இந்த பதிவை வலிமை படம் வந்த போதே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த படத்தில் பைக் சாகசங்கள் என்ற பெயரில் இளைஞர்களை உசுப்பேத்தி இன்று எத்தனை பேர் விபத்தில் சிக்குகிறார்கள் .
இப்போது இந்த வாசன்.
கட்டாயம் இதை கண்டிக்க வேண்டும்.
என்ன அது KMK ?
கலாகார்த்திக் முன்னேற்ற கட்சி
{அது என்ன கட்சி????????..எல்லோரும் கழகம் என்றுதானே பேர் வைப்பார்கள்.இங்கே ஏன் கட்சி என்று பேர்????????}
கழகம் னு பேர் வைத்தால் பாதி பேர் 'கலகம் ' என்று படிப்பார்கள்.சொல்வார்கள்.
எனக்கு கலகம் என்பதே பிடிக்காது.
சரி .விஷயத்துக்கு வருவோம்..
கட்சி ஆரம்பித்து விட்டேன்.
எல்லோரும் ஓட்டு போட்டு அமெரிக்க ப்ரெசிடெண்ட் ஆக்கி விடுங்கள்.
அல்லது கனடா பி.எம்
அல்லது சைனா நாட்டின் தலைவர்
அல்லது ஜப்பான் நாட்டின் ( நான் என் பெயரை கிஷி மூஷி புஷி என்று மாற்றி கொள்கிறேன் )
இப்படிஏதோ ஒரு நாட்டுக்கு தலைவனாக்கி விடுங்கள்.
அம்மணி
நம் நாட்டுல ஏதும் எண்ணம் இல்லையா ???
ஐயோ சாமி மாட்டி உடாதீங்கோ சாமி.
நான் வேறு நாட்டையே பார்த்து கொள்கிறேன் .
2005.
ஜூன் 4ம் தேதி .நானும் செந்திலும் சென்னையில் இருந்து பெங்களூரு வந்து சேர்ந்தோம்.
கார்த்தி மகனுடன் வாழ போகிறோம் என்ற சந்தோசம் மிக மிக அதிகமாக இருந்தாலும்
புது ஊர் ,
transfer கிடைக்கவில்லை
பல குழப்பங்கள்
ஆனால்
மகனுடன் ..
வேறு என்ன வேண்டும் .
ஒரு % கூட எதிர் பார்க்கவில்லை.
உலக மகா சுனாமி காத்து கொண்டிருக்கிறது என்று.
விதி விளையாடும் என்பது உண்டு.
ஆனால் இப்படியா விளையாடும்???????
ரோம் பற்றி எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று சொல்வார்கள்.
இதற்கு மேல் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.
ஆஹா ,தேர்தல் வந்தால் அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் எவ்வளவு அக்கறை வருகிறது ?
வடை சுட்டு கொடுப்பதென்ன?
குழந்தைகளை குளிக்க வைப்பதென்ன?
குப்பை எடுப்பது என்ன?
காலில் விழுவது என்ன?
என்ன ..என்ன..என்ன
தேவை இல்லாத புல் செடிகளை வெட்டுவது என்ன?( யாரையும் பழிப்பது எனக்கு பிடிக்காத விஷயம்) ஆனால் அந்த பெண் அந்த வேலைக்கு மட்டுமே தகுதியாக தெரிந்தார்.
இத்தனை நாட்கள் அந்த குப்பை கழிவுகள் கண்ணுக்கு தெரியவில்லையா?
இத்தனை நாட்கள் அந்த தெருவில் தண்ணீர் வருவதில்லை என தெரியவில்லையா?
ஒரு தன்னார்வலர் அமைப்பை வைத்து இதையெல்லாம் சரி செய்திருக்கலாமே ?
ஒரு வேட்பாளர் '' நான் உங்கள் வீட்டிற்கு தண்ணி கேன் போட்டேன்.அதனால் எனக்கு ஓட்டு போட்டு கவுன்சிலர் ஆக்குங்கள்'' என்று வோட்டு கேட்டாராம்.
இதெல்லாம் ''சரி'' என்று ஒத்து கொண்டாலும் ???
ஜெயித்த பிறகு மக்கள் அவர்கள் வீட்டில் காத்து கிடக்க வேண்டுமே.
தண்ணீர் வரி
வீட்டு வரி
வீடு கட்ட வரி
பைப் லைன் வரி
எல்லை இல்லா அதிகாரம்.
'' '' சிஸ்டம் சரி இல்லப்பா'' ''
இன்னும் 5 வருடங்களுக்கு ராஜாங்கம்தான்.
மக்கள் நிசசயமாக இந்த நாடகங்களை நம்புகிறார்களா?
அல்லது இன்றைக்குத்தானே காலில் விழுகிறான் என்று ரசிக்கிறார்களா?
நாடகம் ,நாடகம் நடக்கிறது.
யாரை குறை சொல்வது??????
it should be 1999.கலைஞர் முதல்வராக இருந்த போது அந்த ஊர் M .L .A க்களை வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்க சொல்லி உத்தரவிட்டார்.
அதன்படி எங்கள் ஊர் எம்.எல்.ஏ ஒரு 25 பேர் புடை சூழ வந்து கொண்டிருந்தார்.என் வீட்டை தாண்டி போகும்போது ஓடிப் போய் அவரை மறித்து நின்று கொண்டேன்.'' 'அதெப்படி ? என் வீட்டில் எதுவும் கேட்காமல் போகலாம்???'' என்று அவரை வம்பிற்கு இழுக்க (யாரை விட்டு வைத்தேன்???? )
அவரோ '' டீச்சர் ,உங்கள் வீட்டில் என்ன குறை இருக்கிறது????????? நான் என்ன கேட்ப்பது?''என்கிறார்.''சரி.வாருங்கள்.coffee சாப்பிட்டு விட்டு செல்லுங்கள்.''என்றேன்.என்னுடன் 25 பேர் இருக்கின்றனர்.உங்களுக்கு சிரமம் வேண்டாம் '' என்று சொல்லி சென்றார்.
இப்போது வாழ்க்கையில் குறைகள் மட்டுமே.nothing positive has happened .Not even a single positive ,happy thing has happened .செந்திலின் கல்யாணம்?????
அவன் தொழில்?
என் உடல் ஆரோக்கியம்?
எதுவுமே சந்தோஷமாக இல்லை.
என்று தீரும் கஷடங்கள் ?
என்று மாறும் இந்த துக்க நிலை?
கண்களில் நிரந்தரமான கண்ணீருடன்
1971 ம் ஆண்டு நடை பெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்ற 50 ம் ஆண்டு நினைவு நாள் பெரிய விழாவாக கொண்டாட பட்டது.மகிழ்ச்சி .ஆனால் இந்த போரின் கதாநாயகி பற்றி ஒருவர் கூட பேசவில்லை.ஜாதி மதம் அரசியல் தாண்டி அவறின் வீரத்தை தைரியத்தை திறமையை பாராட்டி இருக்க வேண்டாமா?.அத்தனை படை தளபதிகளும் தடுத்தும் என் படை வீரர்களுக்கு என்ன ஆகிறதோ அது எனக்கும் ஆகட்டும் என்று சொல்லி விட்டு போர்க்களத்திற்கு சென்று அவர்களிடம் உற்சாகமாக பேசிய அந்த மாண்பை பாராட்டி இருக்க வேண்டாமா?.பங்களாதேஷ் உருவாக்க பட்ட போது அந்த நாட்டு மக்கள் இவர தெய்வமாக வணங்கினார்களே அதை நினைவு கூர்ந்திறுக்க வேண்டாமா?. emergency நான் செய்த மிக பெரும் தவறு என்று ஒப்பு கொண்டதை சொல்லி இருக்க வேண்டாமா?.1971 போரில் வென்றதை உலகமே வியந்து பார்த்ததே..இந்தியா ஒரு வல்லரசு நாடு என்று உலகிற்கு தெரிய படுத்தினாரே அதை பற்றி பேசி இருக்கலாமே .
எதை எழுதுவது என்று தெரியவில்லை.எந்த செய்தியும் நல்ல செய்தியாகவே இல்லை.வாழ்க்கையிலும் எந்த நல்ல செய்தியும் இல்லை. காலம் வேகமாக ஓடுகிறது.
மக்களின் துன்பங்கள் நீங்கி நல் வாழ்வு பெறட்டும்.
இன்றைய நீயா நானாவில் young grandma (இள வயது பாட்டிகள் )என்பது பேசுபொருள்.
பாட்டிகள் இத்தனை வருடம் குடும்பத்திற்காக உழைத்து விட்டோம்.
now we want to enjoy our life .எனக்கே எனக்கான வாழ்க்கையை நாங்கள் வாழ வேண்டும் என்று பேசினார்கள்.
We look young , we feel young அப்படி இருக்க எங்களை ;ஆயா ,பாட்டி, அப்பத்தா என்று கூப்பிட்டு ஏன் ஓரம் கட்டுகிறீர்கள் என்று வாதம் செய்தனர்.
எனக்கும் இந்த எரிச்சல் வரும்.எங்காவது கடைகள்,பஸ்ஸில் ஒரு 35 வயது மதிக்க தகுந்த பெண்கள் ''பாட்டி'' என்று கூப்பிடும்.
எனக்கு 50 வயது.அவர்களுக்கு 35 வயது.
பெண்பிள்ளைகள்தான் இந்த அக்கிரமம்.
அதுவே அந்த வயது பையன்கள் ''அம்மா'' என்றுதான் சொல்வார்கள்.
ஹரிகேச நல்லூர் ஐயா பேசுகையில் ஒரு முறை இதைத்தான் சொன்னார்.40 வயதுள்ளவர்கள் எல்லாம் என்னை ''தாத்தா '' என்கிறார்கள்.கோபம் கோபமாக வருகிறது என்கிறார்.
யாருக்குமே தனக்கு வயதாகி விட்டதோ என்ற பயம் வந்து விடுகிறது
என் பிரச்சினை வேறு.
இந்த நிகழ்சசியில் பேசிய பெண்கள் சொன்னது போல் எனக்கு modern dressing etc ஆசை எல்லாம் கிடையாது.
வயது தெரிந்து விடும் என்ற எண்ணம் கிடையாது.
என் கார்த்தி மகனுடைய மகனோ, மகளோ வந்து என்னை பாட்டி என்று கூப்பிட வேண்டும்.
எத்தனை கனவுகள்????
எத்தனை கற்பனைகள்?????
கார்த்தியுடன் எத்தனை விளையாட்டு பேச்சுக்கள் ?????????
அத்தனையும் கற்பனையாகவே போய்விட்டதே ....
அதனால் இந்த பாட்டி என்ற வார்த்தை என் உயிரையே உலுக்குகிறது.
4 மணிக்கு ஆரம்பித்து 6 மணி வரை எல்லா சேனல்களும் தீப நிகழ்ச்சியை ஒளி பரப்பின.
நன்றி.
ஆனால் வெறுப்பேத்திய விஷயம் என்ன என்றால் அங்கங்கே ஒருவர் உட்கார்ந்து கொண்டு கதையாய் சொன்னார்கள் பாருங்கள் ULTIMATE ...இவர்களே கடவுள் கூட இருந்த மாதிரி என்ன டயலாக்.
சொல்லுங்க .
ஆனால் நம் முன்னோர்கள் எந்த ஒரு விழாவையும் காரணமில்லாமல் செய்யவில்லை.
ஏதோ ஒரு அறிவியல் காரணமாகவே இந்த மத சம்பிரதாயங்கள் .
இந்த மலை பற்றி கேட்டால் ஒரே வார்த்தை ''இது அக்னி ஸ்தலம் ''.அப்படி என்றால் அந்த மலையின் கல் என்ன வகை?
whats the radiation?
whats the influence of the moon's rays on the stone ?
how does it affect and effect human being?
somewhere long long ago i read that when we light lamps lakhs and lakhs together its heat and the gas released from the oil nullify the storm effect.
MAY BE TRUE or may not.
இத்தனை கதை சொல்பவர்கள் கொஞ்சம் அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் படித்து ஆராய்ந்து அதையும் விளக்குங்கள்.
நம் வாரிசுகளுக்கு தெரியட்டும்
EXAGGERATION TO THE EXTREME
அப்பப்பா இந்த {சில} டி .வி சேனல்கள் செய்யும் அட்டகாசம் ,atrocity ,அலம்பல் ..அளவே இல்லை.
எங்கேயாவது தண்ணீர் வீட்டிற்குள் வந்து விட கூடாது.
நெல் தண்ணீரில் நனைந்து விட கூடாது.
மீனவ பெண்ணுக்கு script கொடுத்து அது திணறும்போது prompt செய்து
காஞ்சிபுரம் நெசவு பெண்ணை பேச வைத்து என நாடும் ,மக்களும் துன்பத்தில் மட்டுமேஇருப்பது போல் காட்டி மக்களை பதை பதைக்க வைத்து ,வெறுப்பாக வருகிறது.
ஐப்பசி அடைமழை.தெரிந்ததுதான்.
என்னவோ இப்போது மட்டும்தான் மழை வருவது போலவும் மக்கள் கஷ்ட படுவது போலவும் பேசியே தீர்க்கிறார்கள்.நான் பிறந்த ஊர் மேச்சேரி.50 % நெசவாளர்கள்.அந்த பகுதியே சாம்ராஜ்பேட் என்றுதான் பேர்.
மழை வந்தால் நெசவு இல்லை.
கஞ்சி அல்லது பாகு போடுவது என்பார்கள். மழையில் செய்ய முடியாது.
என்ன அரசுக்கு மனு போட்டார்களா? நிவாரணம் கேட்டார்களா?
அதே போல் விவசாயிகள். கன்று குட்டிகளை வீட்டிற்குள் கொன்டு வந்து வைத்து கொண்டு கஷ்டப்படுவார்கள்.
பயிர்கள் நீரில் மூழ்கி விடும் .தக்காளி பறிக்க முடியாது.காய்கள் செடிகளிலேயே வீணாகி விடும்..
அவர்கள் ஐயோ கஷ்டமே என்றுபுலம்பினார்களா?
மழை வரும் என்று தெரியும்.கஷ்டம் என்று தெரியும்.
''இந்த கஷ்டம் வாழ்வின் ஒரு பகுதி என்று தெரியும்.''
அப்போதெல்லாம் ஊட்டியில் இடி இடித்தால் சேலத்தில் கரண்ட் கட் செய்து விடுவார்கள்..விபத்து எதுவும் நடக்க கூடாது என்ற காரணத்தினால் .தமிழ் நாட்டில் எங்கே கரண்ட் கட் ஆனாலும் மேட்டூர் தெர்மல் குடியிருப்பில் மின்சாரம் .இருக்கும்.
ஆனால் அங்கும் சில விபத்துகளுக்கு பிறகு மழை என்றவுடன் மின் இணைப்பை துண்டித்தனர்.
இப்போது 30 நிமிடம் கரண்ட் இல்லையா .அவ்வளவுதான்.p .m ..c .m என்று காய்ச் சி எடுக்கிறார்கள்.
என்ன மனப்பான்மை இது?????????
புனீத் ராஜ்குமார் :
எவ்வளவு பேர் இறுதி மரியாதை செலுத்துகிறார்கள்.
எவ்வளவு பேருடைய அன்பை சம்பாதித்து இருக்கிறார் .
எத்தனை அநாதை ஆசிரமங்கள்
முதியோர் இல்லங்கள்
எண்ணற்ற சேவைகள் .மலைப்பாக இருக்கிறது.
நடிகர்கள் என்றாலே ஒரு வித எதிர்மறை எண்ணத்தில் இருந்த நான் இவரின் சேவை லிஸ்ட்டை பார்த்து அசந்து விட்டேன்.
....
ஆனால் இவரின் ஜிம் உடற்பயிற்சி பார்த்து பயந்தே விட்டேன்.
என்ன மனிதர்.
தரையில் இருந்து 4 அடி உயரம் எழும்புகிறார்.தாவுகிறார்.குதிக்கிறார்.
ஐயோ .திகீர் என்றாகி விட்டது எனக்கு.அதிர்ந்தே விட்டேன்.
இவ்வளவு கடுமையான பயிற்சிகள் தேவையா?
..செந்திலின் நண்பன் வினோத்.L .K .G யில் இருந்து ஒன்றாக படித்தவர்கள்.
படித்து முடித்து நல்ல வேலை.அடுத்து என்ன பெண் பார்க்கும் படலம்தானே.சற்று குண்டு உடம்பு.
சில பெண்கள் மறுத்து விட்டன.
உடம்பை குறைக்கிறேன் என்று ஜிம்முக்கு போக ..அங்கு ஏதோ டயட் ..ஒரு நாள் மாலை நேரத்தில் வீடு திரும்பி இருக்கிறான்.நண்பர்கள் சேர்ந்து தங்கி இருந்தனர்.எனக்கு சோர்வாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறான்.நண்பர்கள் ரெஸ்ட் எடு என்றிருக்கிறார்.சிறிது நேரம் கழித்து நெஞ்சு வலிக்கிறது என்றிருக்கிறான்.
நண்பர்கள் பயந்து ஆட்டோவிற்கு தேட ,ஆம்புலன்ஸ் வராமல் போக ,மருத்துவமனைக்கு செல்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
அப்பா மேட்டூரில் இருந்து வந்து கதறி என்று வழக்கமான நடைமுறைகள்.
என் கேள்வி :
என்ன அழகு?
என்ன குண்டு ,ஒல்லி என்ற வார்த்தைகள்?
ஆரோக்கியம் முக்கியம்.
ஒரு காலத்தில் எனக்கு அநாமதேய கடிதங்கள் வரும்.
என்னுடைய 36 வது வயதில் ஒரு கவிதை வந்தது.
..'' ''அக்கறை எடுத்து அலங்கரித்து கொண்டால் ,
ஆரணங்கு நீ என அறிவாயோ?'' ..எனக்கு தெரியும்.அது என் சக ஆசிரியை எழுதிய கவிதை.ஏனென்றால் எந்த காலத்திலும் என்னை அழகு படுத்தி கொள்ள ஆர்வம் காட்டியதில்லை.
என் மிக நெருங்கிய உறவினர் தன் மகனுக்கு என்னை திருமணம் செய்ய விரும்பியும் ''பெண் style ஆகவே இல்லை'' என்று சொன்னான்.
அழகு என்ன அழகு?
ஆயுள் வேண்டும்.
46 வயதில் இவர். இவரின் பாதி வயதில் KARTHI . 30 வயதில் வினோத். இன்னும் எத்தனை பேர்??
நெஞ்சம் சுய நினைவை இழந்து நிற்கிறது.
நானும் ஏதாவது புதிய , சுவையான விஷயம் பற்றி எழுதலாம் என்று பார்க்கிறேன்.
ஆனால் 21 கிலோ தங்கம் ,500 கிலோ வெள்ளி என்ற ஊழல் செய்திகள்தான் டி .வி சேனல்களில் ஓடுகின்றன.
இல்லையேல் யார் யாருடன் ஓடி போனார்கள் ,கள்ள காதலால் மனைவி கணவனை கொலை செய்வது, நடு ரோடில் 6 பேர் சேர்ந்து ஒருவரை வெட்டி சாய்ப்பது போன்ற செய்திகள்தான்.
மக்கள் மக்களாகவே இல்லை.
ஏன் இந்த பேராசை ?
எதற்கு இந்த வெறி ?
பணத்தாசை
பெண்ணாசை
குறுக்கு வழியில் வரும் அளவு கடந்த பணம் ,தவறான அதிகாரம் தரும் திமிர் ...எல்லாம் ..ஆர்தர் போன்ற இடங்களில் ...
அரசியல் வாதிகள் பற்றி சொல்லவே வேண்டாம் .
நாடு நாடாகவே இல்லை.
ஊழல் ..ஊழல் ..ஊழல்
காவிரி ஓடும் ஊர்களில் எல்லாம் பெரிய விழா இந்த ஆடி 18.
புது நீர் ஓடி வர ,பொங்கும் காவிரியில் நீந்தி,எதிர் நீச்சல் என்று பல கோலாகலம்.
சாமி ஆத்துக்கு போகுது (அகத்துக்கு என்பது ஆத்துக்கு ...என்றாகி விட்ட ஆத்துக்கு இல்லை....இது காவிரி ஆறு.) .....என்று கிராம கோவில்களில் இருக்கும் உற்சவர்களை ஆற்றுக்கு கொண்டு சென்று புனித நீராட்டி எடுத்து வருவார்கள்.
இன்று என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. போன் செய்து பேசவில்லை.எப்படியும் திருட்டு தனமாக சாமியை காவிரிக்கு கொண்டு சென்று விடுவார்கள்.
நான் திட்டுவேன் என்பதால் என்னிடம் பொய் சொல்லி விடுவார்கள்.
அவர்களுக்கு ஏன் தர்ம சங்கடம் என்பதால் பேசுவதை தவிர்த்து விட்டேன்.
என் தாய் வீடு தெருவில் பாதிக்கு மேல் இருக்கும்.அவ்வளவுக்கும் கோலம் போட்டு ஆடி 18 என்று எழுதுவேன்.
கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் அந்த சுழி அழிக்கப் பட்டு அடி 18 என்றாகி இருக்கும்.
என் அண்ணாவின் வேலை.இப்படி ஏதாவது செய்து என்னை வம்புக்கு இழுத்து மகிழ்வதில் அவருக்கு பேரானந்தம்.(இப்போது இல்லை.)
இன்றுதான் நெல் விதைப்பார்கள்.
எல்லா பண்டிகைகளும் களை இழந்து வருகின்றன.
1 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
01
August 2005 அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும்
கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன்
நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு
விட்டு மகாலிபுரம் சென்றான்.
( வாழ்க்கையின் ஒரு நொடி கூட வீணடிக்க மாட்டான்.வாழப் போகும் நாட்கள் குறைவு என்றதாலோ என்னவோ not even a single minute will he waste .மகனாக, அண்ணனாக,DELL ல் SENIOR SOFTWARE ER ஆக ,வரலாறு .COM என்பதாகட்டும் எத்தனை பரிமாணங்கள் )
தேங்கா சுடுற நோம்பி::
இது என்ன கமல் பாஷை மாதிரி இருக்கா ...இது எங்க சேலத்து மொழி.
நோன்பு என்பதுதான் '''நோம்பி''' என்று ஆகி விட்டது.வாழ்க எம் சேலம் மக்கள்.
அது என்ன பண்டிகை என்றால் ஹி ஹீ ...எல்லா டி .வி சேனல்களும் சொல்லி விட்டன.தேங்காயில் அரிசி,வெல்லம் ,எள் ,கடலை அடைத்து நெருப்பில் சுட்டு சாமிக்கு ''படைத்து'' சாமியின் represntative ஆக நாமே சாப்பிட்டு விடுவது.
HERE COMES THE SCIENCE BEHIND IT :
என்ன விஷயம் என்றால் ,
ஆடி மாதம் புது புனல் (அதாங்க தண்ணீர் ) காவிரியில் புது தண்ணீர் (ஒரு காலத்தில் கரை புரண்டு ஓடும் ...இப்போது சிலர் தயவு செய்தால் மட்டுமே ) .புது நீர் என்பதால் நோய் தாக்கம் அதிகம் இருக்கும்.
..அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்த வேண்டும்.
தேங்காய் பாலில் அந்த சக்தி அதிகம் .+எள் +etc .மக்களை இது நல்லது என்று அறிவியல் பேசினால் கேட்க மாட்டார்கள்.
அதனால் ''சாமி'' பேரை சொல்லி பண்டிகை ஆக்கி விட்டால் ,கேள்வி கேட்காமல் செய்வார்கள்.
இதனால் அனைவருக்கும் தெரிய படுத்துவது யாதெனில் இந்த மாதம் தேங்காய் அதிகம் பயன் படுத்துங்கள் .நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவை உண்ணுங்கள் .எளிதில் சீரணிக்கும் உணவை உண்ணுங்கள்.
(இதனால் பலர் இந்த மாதம் அசைவம் தவிர்ப்பர் ).
'' சொல்றத சொல்லிட்டேன் ''
பி .கு.
என் அப்பாவிற்கு ஆடி மாதம் என்றால் சந்தோசம்.ஏன் என்றால் சளி காய்சசல் என்று நோயாளிகள் எண்ணிக்கை என் அண்ணாவின் மருத்துவ மனைக்கு அதிகரிக்கும்.அண்ணாவின் வருமானம் அதிகரிக்கும் என்பது அவர் கணக்கு.
மற்றவரின் துன்பத்தில் இப்படி ஒரு கணக்கா என்று அவரிடம் கேட்டு விட்டால் எனக்கு திட்டு.
இன்னொரு பி .கு
சேலம் விட்டு சென்னை வந்து 21 வருடங்கள் ஆகி விட்டது.சேலம் பாதி மறந்து விட்டது.
இன்று ஒரு பெண்ணை பார்த்தேன்.வறுமை.வறுமை.ஏதாவது வேலை கொடுங்கள் என்று கேட்டது அந்த வறுமையின் திரு உருவம்.வேலை இல்லை என்று சொல்லி விட்டு ஒரு சிறு தொகையை கையில் கொடுத்தேன்.அந்த பணம் கிடைத்ததே என்று மகிழ்ச்சி இல்லை அந்த .வேலை இல்லை என்ற வேதனைதான் . இப்படி மக்கள் உணவிற்காக தவிக்கும் வேளையில் 100 கோடி என்று சம்பளம் வாங்குவதாக சொல்லப் படும் பிரபலங்கள் செய்யும் தவறுகள் மனதை வேதனை படுத்துகிறது.
சச்சின் வாங்கிய காருக்கு வரி விலக்கு கொடுத்தது நியாயமா?
அவர் காசு வாங்காமல் விளையாட வில்லையே?.பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடினார்.பணம் வேண்டாம் .நாட்டுக்கு நான் செய்யும் சேவை என்று சொல்லியிருந்தால் பாராட்டலாம் .வரி விலக்கு தரலாம்.
அதே போல் அவர் மகன் பயிற்சிக்கு சென்ற போது தனி வீடு எடுக்கும் அளவிற்கு வசதி இல்லை என்று சொல்லி அரசு விடுதியை 18 ரூ வாடகைக்கு அபகரித்தார்.அதை ஒரு ஏழை க்கு கொடுத்து இருக்கலாம்.
இப்போது நடிகர்கள்.தன் கடைக்கு வாடகை கட்ட முடியாது என்று ஒருவர்.
ஏழைகள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு வாடகை தரவில்லை .
இப்போது இவர்.
அவர் வீட்டையும் கார்களையும் காட்டுகிறார்கள்.மலைப்பாக இருக்கிறது.150 கோடியில் வீடு கட்டிக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.அதில் 10ல் ஒரு பங்கு கூட இல்லை இந்த வரி.
இவர் இந்த வரியை கட்டினால் பல பள்ளிகள் ,மருத்துவ மனைகள் ,சாலைகள் என்று எத்தனையோ செய்யலாம்.
1986ல் பணியில் சேர்ந்தேன்.2 வருடம் வரி கட்டவில்லை.NSC BONDS வாங்கினால் வரி கட்ட வேண்டாம் என்று வரி கட்ட விடாமல் செய்தார்கள்.......3வது வருடம் சிங்கம் சிலிர்த்து கொண்டது.
வரி கட்டுவேன் என்று (ஒற்றை காலில் அல்ல ) 2 காலிலும் நின்றேன்.அன்றிலிருந்து இன்று வரை தவறாமல் வரி கட்டுகிறேன்.
அதனினும் கொடுமை ...என்னுடன் பணி புரிந்தவர்களை மிரட்டி, உருட்டி,கெஞ்சி , கொஞ்சி எல்லோரையும் வரி கட்ட வைத்தேன்.
அப்போதெல்லாம் சம்பளம் மிகவும் கம்மி .ஆனாலும் சந்தோஷமாக வரி கட்டினோம்.5கோடி கார்,150 கோடி வீடு என்றெல்லாம் பார்க்கும் போது ??????????.
இத்தனை கேள்விகள் கேட்ட நீதிபதிக்கு வணக்கங்கள்.
ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் speaker கட்டி துண்டு சீட்டு கொடுத்து என்ன சினிமா என்று தெரிய படுத்துவார்கள்.
பெட்டி வந்துடுச்சு என்று உற்சாகமாக படம் பார்த்த காலம் போய் ,
டிஜிட்டல் vfx என்று ஏதோ தோ வந்து விட்டது.
ஆனால் இந்த firstlook ,டீஸர்,போஸ்டர் ,மோஷன் போஸ்டர் என்ற அலப்பறைகள் எல்லை மீறி போகிறது.
update என்ற வார்த்தை உலகத்தையே ஆட்டி படைக்கிறது.
கொண்டாட்டம் ,வைரல் ,ட்ரெண்டிங் என்று 10 மில்லியன் பார்வை ,உலக சாதனை என்று இந்த வியாதி அதிசயமாக இருக்கிறது.
இப்படி ஒரு teaser வந்து விட்டதால் தங்க விலை குறைந்து விடும்.
கொரோனா ஓடியே போய்விடும்.மக்கள் அனைவருக்கும் எல்லா கஷ்டங்களும் தீர்ந்து சொர்க்க வாழ்க்கை வாழ போகிறார்கள்.
இந்த பைத்தியக்கார வியாதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.
பல வருடங்களாக சிவாஜி கணேசன் என்ற சிறந்த நடிகரை எனக்கு பிடிக்கவே பிடிக்காது.அவரை பார்த்தாலே ஒரு கோபம், ஒரு அருவெறுப்பு வரும்.
என்ன காரணம் என்று புரியவே இல்லை.
அப்புறம் ஒரு நாள் திடீரென அறிவுக் கண் (அப்படி எதுவும் எனக்கு இருக்கிறதா என்ன) திறந்தது.சிறு வயதில் காந்தி நேரு போன்ற பலரையும் ஆராதித்த காரணத்தால் smoking ,drinking என்பதெல்லாம் மிக மிக கெட்டவர்கள்தான் செய்வார்கள் என்று மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
எனக்கு விவரம் தெரிந்து நான் சினிமா பார்த்த போது சிவாஜி எப்போதும் ஒரு கையில் சிகரெட்டும் இன்னொரு கையில் மது டம்பளருமாகவே வருவார்.புதிய பறவை, பாசமலர் , வசந்த மாளிகை போன்ற படங்களை சொல்லலாம்.
இப்போது பார்க்கும் போது இவர் மேல் இத்தனை நாட்களாக கோப பட்டிருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது
JUNE 3 2005
மீண்டும் மீண்டும் அதே புலம்பல்
//...//இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.அப்போது எழுதியது..//..//
// //1st June 2005
I had sent all my household articles to my
dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on
THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts
that I was going to my son's house.I did not get a transfer. BUT the
LEAST WORRIED about my job.The only thought that was haunting me was
that, I am going to be with my dearest dearest son.
June third I
left Chennai to Bangalore very very happily without knowing the fact
that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)// //
இது இன்று 03/06/2021
தம்பி செந்திலின் படிப்பு முடியும் வரைதான் நீங்கள் சென்னையில் இருக்க வேண்டும்.
அப்புறம்
என்னுடன் இருக்க பெங்களூரு வந்து விட வேண்டும் என்று கார்த்தி அன்பு
கட்டளை இட்டதால் பணி மாறுதலுக்கு விண்ணப்பித்து விட்டு (கொடுத்தால்
கொடுங்கள் இல்லையேல் long leave ) என்று சொல்லி விட்டு வேளச்சேரியில்
இருந்து வீட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு பெங்களூரு கிளம்பி விட்டேன்.
இனி வாழ்நாள் முழுக்க பெங்களூருதான் என்பது திட்டம்.
எனக்கு பெங்களூரு பிடித்த நகரம் அல்ல
சென்னை பிடிக்காத ஊரும் அல்ல .
மகன் இருக்கும் இடம் என் சொர்க்கபுரி.
அவனுடன் சேர்ந்து வாழ்வது தலையாய இன்பம்.
அவ்வளவுதான்.
நான்+கார்த்தி+செந்தில் ...போதும்.
வேறு என்ன வேண்டும் ஒரு தாய்க்கு .
விதி இவ்வளவு கோரமாக விளையாடும் என்று தெரியவில்லை.
போன வேகத்தில் திரும்ப
வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை
வார்த்தையில் பறி கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக
இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா..கார்த்திக் அம்மா
நன்றி.நன்றி.
முதல்வருக்கு நன்றி.
2020ல் கோவிட பரவ தொடங்கிய போது நான் தனியாக புலம்பி கொண்டிருந்தேன்.
எல்லா காய்கடைகளையும் மூடுங்கள்.
ஒரு வண்டியில் கொண்டு வந்து ஒரு குடியிருப்பில் நிறுத்துங்கள்.அந்த வீடுகளில் உள்ளவர்கள் அவர்கள் வீட்டு எண் படி வந்து வாங்கி செல்லட்டும்.
உதாரணமாக முதல் தளம்.எண் 1.என்று சத்தம் கொடுத்தவுடன் அந்த வீட்டு நபர் வந்து காய் வாங்கி செல்லட்டும்.
அடுத்து 2ம் தளம்.
இப்படி வாங்கும் போது கொரோனா பரவலுக்கு வாய்ப்பே இல்லை.
அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது.
....ஆனால்
இப்போதைய முதல்வர் அதை செயல் படுத்தி உள்ளார்.
நல்ல செயல்.
நன்றி.
நன்றி
முதல்வருக்கு நன்றி
மருத்துவ மனை கொடுமை .கொடுமையிலும் கொடுமை என்பது மருத்துவ மனையில் தன் உயிருக்கு உயிரான ஒருவரை சேர்த்து விட்டு அவர் படும் கொடுமைகளை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் ...
அவர்கள் முன்னால் அழவும் முடியாமல் நிற்கும் நிலை இருக்கிறதே.
என்ன வேதனை.
நான் பட்டேனே
கணவரை அப்போல்லோவில் வைத்துக் கொண்டு நான் பட்ட வேதனை.அவர் இறந்து விடுவார் என்று அறிவு சொல்லியும்
அன்பு அதை ஏற்க மறுத்து
நாம்தான் இவ்வளவு புண்ணியம் செய்திருக்கிறோம்
கோவில் கட்டி இருக்கிறோம்
ஏழை மாணவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம்
உறவு அனைத்துக்கும் கடமையை அன்பாக செய்திருக்கிறோம்
அதனால் நமக்கு கெட்டது நடக்கவே நடக்காது என்று நம்பி
நம்பி
அவரை உயிரற்ற உடலாக ஆம்புலன்சில் கொண்டு வந்த கொடுமை
........
இப்போது கோவிட் பிரசினையில் மக்கள் படும் கஷ்டங்களை பார்க்கும் போது மனம் பரிதவிக்கிறது.
என்னடா இந்த உலகத்துக்கு வந்த சோதனை?
மரணம் அடைபவர்களின் உறவினர்கள் படும் பாடுதான் கொடுமையிலும் கொடுமை.
இறப்பிற்கு அழக் கூட முடியாமல் அவர்களை நல்லடக்கம் செய்ய மக்கள் படும் பாடு ...அப்பப்பா ....
இது என்ன வேதனை.
வர வர சமையல் செய்ய பிடிக்கவில்லை.சாப்பிட பிடிக்கவில்லை.
ஏற்கனவே அப்படி இப்படித்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது
.யாருக்கோ வரும் துன்பம்தானே என்று நினைக்க முடியவில்லை.
மனது அல்லாடுகிறது.
இந்த கொடுமை விரைவில் முடியட்டும்.
இது புது பதிவு அல்ல .ஏப்ரல் 2020 யில் எழுதியது .மறுபடியும் இதை பற்றியே எழுதுவேன் என்று நினைக்கவே இல்லை ,//
மஹாராஷ்டிராவில படித்துக் கொண்டிருந்த ஒரு 22 வயது மாணவன் அங்கிருந்து நடந்தே வந்திருக்கிறான் .350 கிலோ மீட்டர் ...
சாத்தியமா ?
ஏன் நடக்க வேண்டும் ?
அந்தந்த மாநில முதல்வர்கள் சொல்லி இருக்கலாம் .எல்லோரும் அவரவர் இடத்திலேயே இருங்கள்.
உங்களுக்கு நாங்கள் எல்லா உதவிகளையும் செய்கிறோம்.
உணவும் இருக்கும் இடமும் இருந்தால் போதும் .
உணவு கொடுக்க வேண்டியது அரசு.
இதை உடனடியாக செய்து இருந்தால் இத்தனை பேர் புலம் ,இடம் விட்டு இடம் போயிருக்க மாட்டார்கள்.
காசு கொடுங்க என்று மட்டும்தான் கேட்க வேண்டுமா .
மக்களும் கொஞ்சம் அறிவு பூர்வமாக செயல் பட வேண்டும்.
உணர்வு பூர்வமாகவே நடப்பதே நம் பழக்கம்.
..... 9 மணிக்கு செய்தி ....emergency declare ....என்ற பயத்தில் பலர் உறைந்து போயிருக்க ....
no comments ....
இப்போது மறுபடியும் அதே கதை.
எல்லோரும் சொந்த ஊர் திரும்புகிறார்கள் .மீண்டும் நடை.
தன் உரையில் கொரோனாவை ஜெயிப்போம் என்றுதான் சூளுரைக்கிறார் தலைவர்.
இப்போதும் உங்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்ற உத்தரவாதம் இல்லை.
நிறுவனங்கள் தன்னை நம்பி வந்த தொழிலாளர்களை காப்பாற்ற மனமில்லாமல் கையை விரிக்க ....மீண்டும் ஊர் நோக்கி நடக்கிறார்கள் .
குறைந்த பட்சம் அவர்களுக்கு ஒரு ரயில் ஏற்பாடு செய்யலாம் .
என் மாணவன் ஒருவன் போன லாக் டௌனிலேயே அத்தனை தொழிலாளர்களையும் கம்பெனியிலேயே வைத்து சோறு போட்டு நல்லது செய்திருக்கிறான்.
அவன் சொன்னான்.''உங்களிடம் படித்த நாங்கள் எப்படி இருப்போம் ...என்றாலும் இதில் ஒரு சுயநலமும் இருக்கிறது.சகஜ நிலை திரும்பும் போது இவர்கள் திரும்பி வராமல் போனால் புதியவர்களை வேலைக்கு எடுத்து பயிற்சி கொடுத்து ....என்ற பிரசினைகள் ...''
என்று சொன்ன போது மனம் நிறைந்தது.
ஒரு நண்பியிடம் போன வருடம் பேசிய போது சொன்னாள் .''இவர்கள் எல்லாம் சாகட்டும் .இவர்களுக்கு சோறு போடுவதற்கு அரசிடம் காசு இல்லை.''
அரசின் ஒரு ஆண்டு வருமானம் என்ன .இது போன்ற பேரிடற்கு ஒதுக்கப் படும் தொகை பற்றி எல்லாம் அவளிடம் பேசவில்லை .செத்து ஒழி என்பவளிடம் என்ன பேச முடியும்?
அதுவும் இந்த பி * பி ஆட்களிடம் பேசவே முடியாது.
ITS FOOLISH TO ARGUE WITH FOOLS என்று சொல்வார்கள்.
எல்லோரும் ஜனநாயக கடமை ஆற்றி யாகி விட்டிர்களா .
நான் காஃபி மட்டும்தான் ஆற்றினேன்.
வோட் போட்டிர்களா என்று சொல்லலாம்.என்ன ஜனநாயக கடமை?
வர வர கடு கடு தமிழ் .சனாதன தர்மம்..என்பது போல் பல தமிழ் சொற்கள்..ஆக தமிழ் நாட்டில் தமிழும் தெரியவில்லை.ஆங்கிலமும் தெரியவில்லை .இதுல இந்தி படி என்ற காமெடி வேறு.
ஒரு புலி இதோ பாரு நான் வர்றேன் பாரு என்று கேட்டை திறந்த நேரத்தில் இருந்து கேமரா பக்காவா செட் செய்து வந்து சீறி விட்டு மேலே இருந்து வந்த காற்றில் அசைந்த இலையை பார்த்தவுடன் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அங்க பிரதட்சணம் செய்து அப்படி எல்லாம் இல்லங்கன்னா என்று வாலை சுருட்டி கக்கத்தில் வச்சுட்டு போய் ஒளிஞ்சுக்கிச்சு .
அட நாட்ல நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா .இவர் வந்தார்.அவர் வந்தார்.என்று நாள் முழுக்க அந்த முகங்களையே பார்க்க வைத்தார்கள்.
யாரோ '' வேசி ஊடகங்கள் '' என்று சொன்னது நினைவிற்கு வந்து போனது.
....கொரோனா காலத்தில் குழந்தைகளை வெளியே கொண்டு வராதீர்கள் என்று உலகமே அலறிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாச மிகு தாத்தா தன் பேரனுடன் வந்து ''ஜனநாயக கடமை ''ஆற்றி '' விட்டு சென்றார்.
இவன்தான் பணம் கொடுத்தான் என்று A சொல்ல இல்லை இல்லை இவன்தான் கொடுத்தான் B சொல்லி உத்தமர்கள் ஆகிக் கொண்டிருந்தார்கள்.
அம்மியில் அரைத்து,டான்ஸ் ஆடி, ''பூ வைத்து விட்டு '' துணி துவைத்து ETC நாடகங்களை நடத்தி மக்களை வாழ வைக்கவே இதையெல்லாம் செய்கிறோம் என்று டன் டன்னாக பூ சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
ஆஹா இந்த தொகுதியில் குப்பை கூட அள்ளவில்லை .10 வருடமாக இந்த தொகுதி M .L .A என்ன செய்தார் என்று எம் .எல்.ஏ வை பக்கத்தில் வைத்துக் கொண்டே முழங்கினார் ஒரு அம்மணி.
இன்னொரு தேவதை ஜி எல்லா பேய்களுக்கும் சேவை செய்திருக்கிறார் என்று மக்களை எல்லாம் பேய்களாக்கி விட்டு சென்றார்.
ஒரு வழியாக எல்லா DRAMAA வும் முடிந்து விட்டது.
காமெடி போதும்.''வேதனையான விஷயம் ''
கழுதை மேல் EVM எல்லாம் ஏற்றி கொண்டு போகும் காட்சியை பார்த்த போது மனம் மிக மிக வேதனை பட்டது .
சுதந்திரம் வாங்கி 73 வருடங்கள் ஆகி விட்டது.இன்னும் அந்த மக்களுக்கு ஒரு சாலை வசதி கூட செய்து தரவில்லை என்பது எவ்வளவு அவலமான அவமானமான விஷயம்.
8 வழி சாலை, 8000 கோடி விமானம் , 3000 கோடி சிலை .....
2024ல் எல்லோருக்கும் rest room என்று சொல்லும் போது ஒரே ஒரு நொடி மனம் இடித்துரைக்காதா .
போதும் புலம்பல்.
BYE
எ .மு .கே :
என்னங்க .ங்கே என்று முழிக்கிறிங்களா :
நிறைய நேரம் செய்தி பார்ப்பதால் வந்த வினை.
ஆளாளுக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கறாங்க .
நான்தான் முதல்வர் .
நீதான் துணை முதல்வர் .என்று இப்போதே பத்திர பதிவு அலுவலகத்தில் தமிழ் நாட்டை தங்கள் பெயருக்கு பதிவு செய்ய நேரம் கேட்டு விண்ணப்பித்து விட்டார்களாம்.
அட நானும் ஒரிஜினல் ,ஒரிஜினல் தமிழச்சிதானே .நான் மட்டும் சும்மா இருப்பேனா .
நானும் ஒரு கட்சி ஆரம்பித்து விட்டேன்.
எ .மு.க.
என் முன்னேற்ற கட்சி .
ஆமாங்க .என்னை மட்டுமே முன்னேற்றிக் கொள்ளும் கட்சி .
நானே 234 தொகுதிகளிலும் வேட்பாளர்.
நானே முதல்வர்.நானே துணை முதல்வர்.எல்லாம் நானே.
விருப்பம் இருப்பவர்கள் வோட் பதிவு செய்யலாம்.
பண பட்டுவாடா விற்கு ஆளுக்கொரு நாமக் கட்டி கொடுக்கப் படும்.
இலவசம் எல்லாம் இல்லைங்க .காசுக்குத்தான்.
மறக்காம வோட் போடுங்க .
கார்த்திக் அம்மா
ஆரம்பித்ததோ எந்த அரசு ஆரம்பித்ததோ இந்த இலவசம் என்ற ஒரு தீராத ஒரு நோய் .
எல்லாம் இலவசம்.குழந்தை கருவில் உருவான நாளில் இருந்து சத்துணவு ,இலவச பிரசவம் ,பால்,தொட்டில் என்று ஆரம்பித்து படிப்பு முடியும் வரை இலவசம்.
பிரசினை என்ன என்பதை புரிந்து கொள்ளவில்லை.ஆண்மகன் தன பெருமையை,குடும்ப தலைவன் ,கணவன் ,தந்தை என்ற அத்தனை பெருமைகளில் இருந்தும் ,பொறுப்புகளில் இருந்தும் ஒதுக்க படுகிறான்.
'' அப்பா,எனக்கு பேனா வாங்கி தருகிறாயா '' என்ற மகளின் கொஞ்சலான வேண்டுகோள் இல்லை.
அப்பா எனக்கு சைக்கிள் வாங்கி தருகிறாய் என்று மகனிடம் இருந்து அன்பு கட்டளை இல்லை.
மாறாக ''நீ யார் ?உன்னிடம் நான் என்ன கேட்க வேண்டும் '' என்ற விட்டேத்தி குணம் வளர்கிறது.
மனக் குமுறல் ஆரம்பிக்கிறது.
it leads to depression .
குடும்பம் பின்னி பிருகும் பந்தத்தை இழக்கிறது.
அப்படியானால் ஏழை மக்கள் கஷ்ட பட வேண்டுமா .இல்லை ...
நிசசயமாக இல்லை.
அவர்களை ஏழைகளாகவே வைத்திருக்காதீர்கள் .
அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துங்கள்.
வேலை கொடுங்கள்.
சம்பளம் அதிகம் கொடுங்கள்.
அவர்களுக்கு வேண்டியதை அவர்களே வாங்கிக் கொள்ளும் வசதியை செய்து தாருங்கள்.
தொழிற்சாலை கட்டுங்கள்.
விவசாயத்தை விரிவு படுத்துங்கள்.
இலவசம் கொடுத்து அவர்களை அவமானப் படுத்துவதை நிறுத்துங்கள்.
அது எந்த அரசாக இருந்தாலும் சரிதான்.