சாலையை கடந்த கோழி 5
அதற்கு முன்பதிவான காட்சி நான்கினை படித்து விட்டு காட்சி ஐந்தினை தொடர்க.
எச்கேப் ஆன கோழி பட பட என பயத்துடன் இறக்கைகளை அடித்துக் கொண்டு பறந்து வந்து...அடுத்த காரின் முன்னாலா விழ வேண்டும்?
கார் நிற்கும் கோபமான பிரேக்கிலேயே அது யாருடைய கார் என்று புரிந்திருக்க வேண்டும்." நான் போகும் சாலையில் குறுக்கே கோழியா? ஆ, இது எதிர் கட்சியினர்
என்னை சட்டசபைக்கு வராமல் இருக்க செய்வத்ற்கான சூழ்ச்சி.கோழி மீது கார் ஏற்றி கோழியை கொன்றதாக என் மீது வழக்கு போட அவர்கள்
நீண்ட நாட்களாக திட்டமிடுவதை நான் அறிவேன்.ஆனால் மக்கள் என் பக்கம்" அவர் சொல்லி முடிப்பதற்குள் ஒரே "ஆமாம்,ஆமாம்"சத்தம்.திரும்பி பார்த்தால்
பழைய முந்திரிகள் , ஜால்ரா. சசிகலாவின் கண் அசைவு கண்டவுடன் கருப்பு பூனைகள் கோழியை பிடிக்க ஆளுக்கொரு திக்காக பறப்பத்ற்குள்,செல்வியே கோழியை
பிடித்து வீசுகிறார்.
ஜால்ரா கூட்டம் "இனி தமிழ் நாட்டில் கோழியே இருக்க கூடாது.எல்லா கோழிகளையும் எரித்து விடுகிறோம்' என்று கூறிக் கொண்டே பொத் பொத் என்று அம்மாவின் காலில் விழுகிறார்கள்
No comments:
Post a Comment