சாலையை கடந்த கோழி 6
இத்ற்கு முன் பதிவான காட்சி நான்கு, காட்சி ஐந்தினை படித்து விட்டு காட்சி ஆறுக்கு வருவோம்.சோடா பாட்டிலிடம் இருந்து கார்த்திக் ஆகிய நான் திருடிய
இந்த கோழி என்னை ஏமாற்றி விட்டு நவராத்திரி படம் சாவித்திரியை போல ஓடி, இல்லை இல்லை பறந்து பறந்து செல்வியால் வீசப்பட்டு தொப்பென ஒரு குடிசைக்குள் வந்து
விழுகிறது.அரை மயக்கத்தில் இருக்கு நம் குடிமகன்
"இன்னாம்மே கைய்தே, இன்னாது,தொபால்னு மேய வந்து வுயுந்துகின.ஏ கைய்தே[இந்த முறை கைய்தே என்பது அவர் மனைவி] இது ஆர் வூட்டு கோயிம்மே?
ஏ கொடாகு இன்னா கசுமாலத்துக்கு இத்த எம்மேல தூக்கி கடாசுன?
மனைவி:இதா உன் மூன்ச்சியில என் கைய வைக்க.இது ஆர் வூட்டு கோயியோ, ஆர் கண்டாங்க?
குடிமகன்:ஏம்மே,கோயி கொயம்பு துன்னு எம்புட்டு நாலாச்சிம்மே.இத அட்ச்சு கொயம்பு வைம்மே.
மனைவி:உன்னோட பெரிய ரோதனையா கீது.அப்பால இது எதுனாலும் சண்டைய வலிச்சுக்னு வந்தா இன்னா பன்றது?
குடிமகன்:கேவி கேவி ஐய்துகொண்டே,'இன்னாம்மே நம்ம புள்ள கூட அன்னைக்கு நைனா கோயி புட்சாந்து குடு எனக்கு ஆசையா கீதுன்னு
சொன்னாங் காட்டியும் மனசே பிகிலாயி போய்டுச்சும்மே.இன்னான்ர நீ?"
மனைவி தன்னை பிடிக்க துறத்தியவுடன் பறக்கிற கோழி சென்று விழுகிறது ஒரு காலில் .அது யார்? அட நம் ஷிட்னி ஷெல்டன்.அது அடுத்த பதிவு.இடைவேளை
No comments:
Post a Comment