என் மீது மிகவும் அன்புள்ள நல்ல இதயங்கள் போடும் அன்பு கட்டளை இது."அழுகையை நிறுத்துங்கள்.அவன் நினைவுகளை மாற்றுங்கள்.செந்திலை கார்த்திக்காய் நினைத்துக் கொள்ளுங்கள்"...அவர்களை குறை சொல்லவில்லை.ஆனால் என் மனம்தான் மாற மறுக்கிறது.இது ஒன்றும் சாம்பார் அல்ல.முருங்கைக் காய் இல்லையென்றால் முள்ளங்கி போட்டு சமாளிப்பதற்கு.இல்லாதவர்களை மறந்து இருப்பவர்களுடன் வாழ கற்றுக் கொள்வது சராசரி மனித வழக்கமாக.இருக்கலாம்.ஆனால் இப்படித்தான் வாழ வேண்டுமா?ஏன்?
இப்படியும் வாழ்ந்தாலென்ன?அவன் நினைவுகளில் என்னை கரைத்துக் கொள்வது,என்னை நானே அழித்துக் கொள்வது,சிறிது சிறிதாக தேய்வது, நான் என்ற ஒன்றே இல்லாமல் அவனில் நானாக மயங்குவது,இவை எல்லாம் எனக்கு பிடிக்கிறதென்றால் அப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன்.மற்றவர்களை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லையே.அதனால் என் கார்த்தியின் நினைவாக,அவனில் என்னை உருக்கி அவனுடன் கலந்த எண்ணங்களுடந்தான் இருக்கப் போகிறேன்..என் இறுதி மூச்சு வரை. karthik amma
2 comments:
என்னை நானே அழித்துக் கொள்வது,சிறிது சிறிதாக தேய்வது, ...//
இரண்டாவது இயற்கையின் விதி; முதலாவதற்குப் பதிலாக, இப்போது உங்களுக்குள் மட்டும் இருக்கும் அவனை நிரந்தரமாக்க முயற்சித்தால் என்ன?
"அழுகையை நிறுத்துங்கள்.அவன் நினைவுகளை மாற்றுங்கள்."... is something easy to say...but we can understand how difficult it would be.. :-((
Post a Comment