என் கார்த்திக்
ஒல்லி என்றும் குcசி என்றும் அழைக்கப்பட்ட என் மகனின் உருவ அமைப்பு மிகவும் நேர்த்தியானது.சாண்டில்யணின் வர்ணனையில் வரும் இளையபல்லவன் போல் பரந்த மார்பு, குறுகிய இடுப்பு, இடுப்புக்கு கீழ் வரும் நீண்ட கைகள்,னீண்ட விரல்கள்.இவ்வளவு மெல்லிய கரங்களுக்கு இவ்வளவு வலிமையா என்று மஞ்சள் அழகி வியப்பது போல் நானும் வியப்பதுண்டு.இளைய பல்லவன் கைகளில் வாளை சுழற்றும் லாகவம். என் கார்த்திக் கைகள் கணிணியில் விளையாடும் லாகவம்.
அந்த நீண்ட கால்களும் அளவாக பொருந்தும் ஜீன்சும், நடையின் துள்ளலும், படியிறங்கும் மானரிசமும், தாவி படியேறும் வேகமும் என் கண்ணனுக்கே உண்டான தனி சிறப்பு.
No comments:
Post a Comment