உரையாடல் [2]
மற்றுமொரு முறை நடந்த உரையாடலிது.
காக்க காக்க என்ற படத்திற்கு அழைத்து சென்றான்.அந்த படத்தில் ஒரு காட்சி.காதலி காதலனிடம் சொல்வாள்." நான் ஒரு கணித ஆசிரியை.என்னை கல்யாணம் செய்து கொண்டால் உங்கள் மகனுக்கு கணித ட்யூஷன் செலவு இல்லை'..அன்றிலிருந்து நான் ஆரம்பித்து விட்டேன்."செல்லம் நான் ஒரு ஆங்கில ஆசிரியை.உன் மகனுக்கு ஆங்கில ட்யூஷன் செலவு இல்லை.ஆனால் நீ ஒரு கணிப் பொறியாளர்.அதனால் உன் கொவ்ரவத்திற்கு தகுந்த மாதிரி எனக்கு ட்யூஷன் fஈச் நிறைய கொடுத்து விடு" என்று..'வம்பு பண்ணுவதே உங்களுக்கு வேலையாக போய்விட்டது 'என்று பெருமை பொங சலித்துக் கொள்வான் செல்லமாக.
ஒரு நாள் திடீரென 'ராஜா செலவுக்கு காசில்லை.ரூபாய் கொடு' என்று கேட்டேன்.சற்றே அதிர்ந்து விட்டான்.அம்மா கையில் காசில்லையா, எப்போதுமே கேட்காத அம்மா இப்போது கேட்கும் அளவிற்கு என்ன என்று குழம்பி போனான். நான் மெல்ல சிரித்துக் கொண்டே 'உன் மகனுக்கு தரும் ட்யூஷன் கட்டணத்திற்கு முன்பணமாக கேட்டேன்" என்றேன்.அதிர்ச்சியும் குழப்பமும் நீங்கி,அதே பெருமையான , பரவசமான புன்னகையோடு"உங்களுக்கு வம்பு செய்வதே வேலை' என்றான்." என் கண்மணியிடம் நான் அப்படித்தான் வம்பு செய்வேன்"என்றேன்.
எத்தனை விளையாட்டு பேச்சுகள்.எல்லாம் ஒரு நொடியில் மாயமான விந்தையென்ன? விதி கைகொட்டி சிரிக்க காத்து நின்றதை அறியாமல் நான் பூரித்திருந்த பெருமை என்ன? இன்று உலகமே இருண்டு கிடக்கும் கோலமென்ன?
No comments:
Post a Comment