சாலையை கடந்த கோழி- 4
தூக்கம் வராமல் என்ன எழுதலாம் என்று கிண்டி கிளறி ...ஆ, கிண்டி கிளறி என்றவுடனே ஆகா மறந்து போனேனே, கைவசம் ஒரு உடான்சு
இருக்கவே இருக்கிறது.உடாப்பு [அது என்ன உடாப்பு?..உஷ்.உடாப்புன்ன உடாப்புதாங்கண்ணே.[மனசில் பெரிய ...என்று நினைத்து கொண்டு கேள்வி கேட்டு கொண்டே இருந்தால்
கோழி முட்டை போட்டு அப்புறம் சேவல் வந்து கொக்கரக்கோ தான்]
இப்பொது கோழிக்கு வருவோம்.
காட்சி 1.
ஒரு கார் சாலையில் வந்து கொண்டிருக்கிறது.காரின் உள்ளே தாத்தாவும் பேரனும்.அப்பொது கோழி சாலையை கடக்கிறது. கார் கிரீச்சிட்டு நிற்கிறது.
தாத்தா:ஆ, இது கண்டிப்பாக அம்மையார் வளர்க்கும் கோழிதான்.என் சாலையில் விபத்து ஏற்படுத்துவதற்கென்றே அந்த அம்மையார் இந்த கோழிக்கு மாடு , எருமை சுரா, புறா
எல்லாம் போட்டு வளர்த்து விட்டுள்ளார்கள்.அந்த அம்மையார் வளர்த்த கோழி என்பதால்தான் அதுவும் Hஇட்லர் போல, கோயபல்சு போல திமிராக சாலையை கடக்கிறது.
இது என்னை கொல்ல நடந்த சதி.என்னையும் என் மகனையும் என் பேரனையும் கொல்ல நடந்த சதி.முடியாது.
அந்த அம்மையார் கோழி வளர்த்தால் நாங்கள் சேவல் வளர்ப்போம்.எப்படியும் 5 ஆண்டுகல் நான் தான் ஆட்சியில் இருப்பேன் அப்புறம் தளபதி அப்புறம், என் கண்மணி.
ஆனால் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே,உங்களுக்காகவே, தமிழை காக்கவே, தமிழ் மண்ணை காக்கவே நான் போராடுகிறேன் என்பது
தாங்கள் அறியாததா? இந்த அராஜகத்தை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்பதை பேனாவால் அல்ல , என் கண்ணீரால்
எழுதுகிறேன்.
இதற்குள் பேரன் உணர்ச்சி வசப்பட்டு காரை விட்டு கீழிறங்கி,கோழியிடம்"ஒண்டிக்கு ஒண்டி வர்ரியா"என்று முஷ்டி உயர்த்த... கோழி escape.
No comments:
Post a Comment