சர்க்கரை கட்டி
கார்த்திக்கிற்கும் எனக்கும் நடக்கும் உரையாடல்கள் பலவிதம்.
ஒரு முறை நான் காfஇ டம்ளர் எடுத்துக் கொண்டு கார்த்தியின் அருகில் அமர்ந்து,"கண்ணம்மா,காfஇக்கு சர்க்கரை போதவில்லை" என்றேன்.என் தங்க மகன் உடனே "சர்க்கரை எடுத்து வரட்டுமா அம்மா" என்றான்."வேண்டாம் கண்ணம்மா, உன் கைவிரலை மட்டும் இந்த காfஇயில் ஒரு நிமிடம் விடு" என்றேன். புரியாமல் விழித்தான். நான் சொன்னேன் "என் மகன் சர்க்கரை கட்டி.அவன் விரல் பட்டால் போதும்.காfஇ இனிக்கும்" அவன் முகத்தில் மந்தகாஷம் ,பெருமிதம் கலந்த புன்னகை.அம்மா தன்னை ரசிப்பது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்.
No comments:
Post a Comment