About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/08/30

kannagi

கண்ணகி
கண்ணகிக்கு மட்டும் சிலை ஏன் என்று கேட்பவர்களுக்கு என் பதில்.
கற்பில் சிறந்தவள் மாதவி என்பதில்மாறுபட்ட கருத்து இல்லை.கண்ணகி பாதுகாப்பான இடத்தில் பிறர் நெருங்க முடியாத அரணுக்குள் வாழ்ந்தவள்.ஆனால், மாதவி கற்பு என்ற நெறி தேவையற்ற குலத்தில் பிறந்து யாரும் நெருங்கலாம் என்ற சூழலில், கோவலனை மட்டுமே வரித்து வாழ்ந்த காரணத்தினால், ஐயமற மாதவியே கற்புக்கரசி.
சரி. சீதையை பார்ப்போம்.ஒரு புல்லை கொண்டே ராவணனை பயமுறுத்தி,கற்பு காத்தவள்..கண்ணா என கதறி ,சேலை பெற்று அவையில் தன்மானம் காத்துக் கொண்டவள் பாஞ்சாலி..யமனை பின் தொடர்ந்து சென்று தன் கணவன் உயிரை மீட்டவள் சாவித்திரி. ஆக இவர்களும் கற்புக்கரசிகள்தான்.ஆனால், இவர்கள் அனைவரும் வெளி உலகம் அறிந்தவர்கள்.அப்படியிருந்தும் சோதனை என்று வந்த போது கெஞ்சியோ, அழுதோ,பிற ஆண்மகனின் உதவி பெற்றோ வாழ்ந்தவர்கள்.யாரோ ஒரு குடிமகன் சந்தேகப் பட்டதால் தன் மனைவியை தீ குளிக்க சொல்லிய ராமனிடம் "என் மனைவி பற்றி எனக்கு தெரியும் என்று ஆணித்தரமாக சொல்ல உன்னால் முடியவில்லையே.தீகுளித்து என் கற்பினை நிரூபிக்க சொன்னது எப்படி சரி?"என்று வாதிடாமல்,தீயில் இறங்கி "மண்மகளே, இரண்டாக பிளந்து என்னை விழுங்கு" என்று பேத்லித்தவள் சீதை."உன்னுடன் வாழ்வதை விட பிரிவதே மேல்" என்று சொல்ல துணிவற்றவள்.
"பீமா, எப்போது எனக்கு துரியோதனின் ரத்தம் தருவாய்?" என்று மன்றாடியபடி பீமனின் பின் அலைந்தவள் பாஞ்சாலி..ஆனால் கண்ணகி "வண்ண சீரடி மண்மகள் அறிந்த்லள்" என்று கவுந்தியடிகளால் சிலாகிக்கப்படும் அளவுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் வளர்ந்தவள்.ஆனால் தன் கணவன் கள்வன் என்று குற்றம் சாட்டப் பட்ட போது சீறி எழுந்து ,[அது வரை வீட்டை விட்டு வெளி வராத்வள், மன்னனை காண செல்கிறாள். நாடாளும் மன்னன் என்ற பயம் சிறிதும் இல்லாமல், அவனிடம் வாதிடுகிறாள்.மதுரையை தீக்கிரையாக்குகிறாள்.
இந்த வீரம், போராடும் குணம், தைரியம் ஆகிய குணங்களே கண்ணகிக்கு சிறப்பு சேர்க்கின்றன.பெண்ணுரிமை என்பது இன்று பேசப்படுகிறது.ஆனால் அன்றே பெண்குலத்தின் பெருமையை நிலை நாட்டியவள் வீரம் செறிந்தவள் என்பதாலேயே கண்ணகிக்கு சிலை.

No comments: