பல விளம்பரங்கள் மொக்கையாக இருக்கின்றன.
சில கொடுமையாக இருக்கின்றன.
ஒரு சோப்பு விளம்பரத்தில் சில சிறுமிகள் ஒரு பெண் முகத்தில் அதிர்ஷ்டம் இருக்கிறது எனவும் அந்த முகத்தை பார்த்து விட்டு சென்றால் வெற்றிதான் எனவும் சொல்கிறது.
எப்படிப்பட்ட மூட நம்பிக்கையை சிறுமிகளின் மனதில் விதைக்கின்றன .விதவைகள் எதிரில் வர கூடாது.
அவர்கள் முகத்தில் விழித்து சென்றால் போகும் காரியம் தோல்வி என்று ஏற்கனவே இருக்கும் மூட நம்பிக்கையை இது இன்னும் அதிகரிக்கிறது.சம்பந்தப் பட்ட சோப்பு கம்பெனி இந்த விளம்பரத்தை மாற்றுமா ?
ஹார்லிக்ஸ் :
இந்த விளம்பரத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
ஒரு சிறுமி டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடனும் ,உறுதியுடனும் படிக்கும் போது அம்மா ஊட்ட உணவாக ஹார்லிக்ஸ் தருவதாக உள்ளது.
அதிலும் ஒரு பெண் பிள்ளையை ஒரு லட்சிய பெண்ணாக காட்டுவது எவ்வளவு நல்ல விஷயம்.
பாராட்டுக்கள்.
சில விளம்பரங்கள் புரியவில்லை.
பீட்ஸாவிற்கு வருகிறதே.இரண்டு பெண்கள் .''I DOUBT HIM '' என்ன அர்த்தம்?
அதே போல்
அண்ணன் தம்பி சாக்லெட் கேட்டு கடவுளிடம் வேண்டுதல் விளம்பரமும் புரியவில்லை.
என் அறிவு சொல்ல முடியாத அளவு..
யாராவது விளக்கம் சொல்லுங்களேன்.
கார்த்திக் அம்மா