About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2016/12/15

மிரட்சி :
இந்த சிறுமிதான் இன்றைய கார்த்திக் அம்மா .
இதோ 58 வயது .
இன்னும் 3 மாதங்கள்.
பதவியிலிருந்து ,
  பணியிலிருந்து ஓய்வு  பெற்று வீட்டிற்கு வந்திருக்க வேண்டியது .கார்த்தி மகனின் நினைவு மட்டுமே போதும் என்று v .r .s பெற்று 11 வருடங்கள் ஓடி விட்டன.
58 வயது ஆன  போதும் இன்னும் இந்த சிறுமியாகவே மனதளவில் இருக்கிறேன்.
பார்வையிலே கிழவியம்மா .
மனதினிலே ................
வாழ்வில் எத்தனை அடிகள்.
எத்தனை பேரிடிகள்.
எத்தனை சுனாமிகள்.
ஒவ்வொரு அடிக்கும் ,,இடிக்கும் இந்த மிரட்சியாக பார்வைதான்.
உலகம் இப்படியா?
உறவுகள் இப்படியா?
வாழ்க்கை இப்படியா?
என்று இந்த சிறுமி விக்கித்து நிற்கிறாள்.
திகைத்து நிற்கிறாள்.
பயந்து பார்க்கிறாள்.
பரிதவிக்கிறாள்.
படித்த படிப்போ,பணமோ,உறவோ எதுவும் பொருட்டில்லை.தெய்வமாய்,தாயாய்,உறுதுணையாய் ஆதரவாய் இருந்த அன்பு மகன்  இல்லையென்றான பின் மருட்சி  மட்டுமே.அடி  வாங்கும் போதெல்லாம் இப்படி மருண்ட பார்வையுடன் உலகை எதிர் கொண்டு ,அவர்கள் எதிரில் கண்ணீர் வராமல் வீட்டிற்கு வந்தவுடன் கதறி கண்ணீர் மழையால் தன்னை நனைத்து கொள்ளும் இந்த சிறுமி.
இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்?
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார்?
கார்த்தியால் மட்டுமே முடியும்.கார்த்தி வருவது சாத்தியமல்ல.
என் கண்ணீரும் கதறலும் நிற்பதும் சாத்தியமல்ல.
கார்த்திக் அம்மா
kalakarthik

                  

 

2016/12/06

ஜெ .ஜெ.
என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
ஆனால் ..சொன்னால் என்னை திட்டாதீர்கள்.
தவறு என்றாலும் ......
உண்மையை சொல்கிறேன் ....
ராணியாக வாழ்ந்தவர் ராணியாகத்தான் இறக்க வேண்டும்.
பக்க வாதம் வந்தோ ,அல்லது உடம்பு முடியாமல் ,தன்  தேவைகளுக்கு பிறர் தயவில் வாழாமல் ,......
இந்த முடிவு .நல்லது.
Fight like a soldier .
Die like a king.
the most befitting end.
don't curse me for saying this.
I used to admire her and a sympathy from 1973 when she started writing her bio.
Life full of struggles.
Highly misused.
Karthik and Senthil used to make fun of me for being on her side.
Its highly disturbing to see our beloved suffering and ailing.
With all love only i say that this is the most befitting end.
karthik amma
kalakarthik

2016/12/04

கடன் வேண்டும்
கடன் வேண்டும்.
யாராவது தாருங்களேன் :
விளையாட்டல்ல :
உண்மையான வேண்டுகோள்.
ஆதார் அட்டை எடுக்க பல முறை சென்றும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டிற்கு வந்து விட்டேன்.
30ம் தேதிக்கு மேல் ஆதார் இல்லையென்றால் பண பரிவர்த்தனை அம்பேல்.
இப்போதே கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளலாம் என்றால் வங்கிகள் கை  விரிக்கின்றன.
நண்பர்களே,
அன்பர்களே
உதவுங்கள்.
கார்த்திக் அம்மா
The BEST joke of the year:
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ விளம்பரத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை அனுமதியில்லாமல் வைத்ததாக நேற்று மத்திய அரசு கூறியது. இந்நிலையில், பிரதமரின் படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்தியதற்காக ரிலையன்ஸுக்கு அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.
முத்திரைகள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாடு தவிர்ப்பு) 1950 சட்டத்தின் கீழ் வரும் பிரிவின் 3-ன் படி, ரிலையன்ஸ் நிறுவனம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை விளம்பரத்துக்குப் பயன்படுத்தியதற்காக  சுமார் 500ரூபாய் வசூலிக்கப்படலாம் என்கிறது மத்திய அரசு.
Poor ambani.
how will he manage to pay such a huge amount of money? FIVE 100 .GOD!!!!!!!!!!!!!!!
Central govt.please spare him. or else he may commit suicide like our farmers.for want of money.
The GREAT India of the GREATEST people.
kalakarthik
karthik amma

2016/11/25

seythi  செய்தி.
தெலுங்கானா முதல் அமைச்சர் சந்திரசேகரராவ், ஹைத்ராபாத் நகரில் பேகம்பேட் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார். ரூபாய் 50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அந்த வீட்டில் வேத மந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை காலை சந்திரசேகரராவ் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். நக்சலைட்டுக்கள் அச்சுறுத்தல் இருப்பதால் குளியறைகள் உள்ளிட்ட அனைத்து அறைகளும் குண்டு துளைக்காதவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் சதுர அடி உள்ள இந்த வீட்டில் 250 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய திரையரங்கம், அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் அமர்ந்து கலந்துரையாட பிரம்மாண்ட அறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. 
இதற்கு என்ன சொல்வது????????????

2016/11/23

எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம்.
என் திருமணத்தின் போது  என் தந்தை எனக்கு நலங்கு இடுகிறார்.
ராஜாவான அவர் :
அவருடைய   கண்ணசைவில்   ஊரே அசைந்தது.செயல்பட்டது.
அப்படிப் பட்ட அவர் என் கண் பார்வைக்கு நான் நினைத்ததை செய்தார்.
என்  தாய்க்கும் , 4 சகோதரர்களுக்கும் நான்தான் உயிர் என்றாலும் 
ஊருக்கே நான் செல்ல இளவரசி என்றாலும்
அப்பா  ...அப்பாதான் .
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா

2016/11/17

இன்று மத்திய அரசு (இப்போது மட்டும் மத்திய அரசு ...மீதி நேரங்களில் பிரதமர்..) வெளியிட்டுள்ள அறிவிப்பு இது :
திருமண செலவிற்கு 2.5 லட்சம் வங்கிகளில் இருந்து எடுத்து கொள்ளலாம்.
.......1.முதலில் வங்கி கணக்கில் அவ்வளவு பணம் கொண்டு வர வேண்டும்.
2.அந்த பணம் எடுக்க ஆதாரம் சமர்ப்பிக்க்க வேண்டும்.
3.எல்லா கருப்பு பணமும் ஒழிந்து .....ஒளிந்து .....விட்டது.
சரி.சரி.சரி.
ஒரு மணப் பெண்ணின் புடவை மட்டும் 15 கோடி ரூபாய் என்று செய்தி படித்தேன்.
அந்த கல்யாண செலவு மட்டும் 650 கோடி என்றும் செய்திகள் சொல்கின்றன.நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும்.காட்சிகள் மயக்கத்தை வரவழைக்கின்றன.
4.கேள்வி .....இவர் எந்த வங்கி கணக்கில் இருந்து இந்த பணத்தை எடுத்து செலவு செய்தார்????????????????
வருமானம் கணக்கு காட்டப் பட்டதா?
வரி கட்டப் பட்டதா???????????????
சுரங்க தாதா  சிரிக்கிறார்.
முட்டாள்களா ..நீங்கள் இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியாதா ?
என் மருமகன் யார் ?????????????
அவர்தான் எல்லா செலவும் செய்தார் என்று கதை சொல்ல மாட்டேனா ?
உங்கள் காதில் முழம் முழமா பூ சுற்ற எனக்கு தெரியாதா ?
எங்களை போன்ற முதலைகளை காப்பாற்றவே ஒருவர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
எங்களுக்கு என்ன கவலை??????
கார்த்திக் அம்மா
இது செய்தி :::::::::::::::::::
இந்த பட்டியலில் ரூ.1,201 கோடி கடன் பெற்றுள்ள விஜய் மல்லையா பெயர் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக கேஎஸ் ஆயில் (ரூ.596 கோடி), சூர்யா பார்மாசூடிகல்ஸ் (ரூ.526 கோடி), ஜிஇடி பவர் (ரூ.400 கோடி) மற்றும் சாய் இன்போ சிஸ்டம் (ரூ.376 கோடிகளே) அடங்கும்.

மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி வருகின்றனர். மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை, வங்கிக் கணக்கில் இருந்தும் ஏ.டி.எம். மூலமாகவும் எடுப்பதற்கு பகீரத பிரயத்தனம் செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில், கோடீஸ்வரர்களின் ரூ.7,016 கோடி கடன் தொகையை தள்ளுபடி செய்ய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி, ‘ஸ்டேட் வங்கி தனது வாராக் கடன் குறித்த தகவல்களை புத்தகப் பதிவில் செயல்படாத சொத்து என்ற பெயரில் என்று பட்டியலிட்டுள்ளது. அவற்றை தள்ளுபடி செய்வதாக குறிப்பிடவில்லை. மத்திய அரசு அந்த கடனை வசூலிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது." என்றார்.:::::::::::::::
அப்பாடா .தாங்க முடியல எத்தனை 
குழப்பங்கள்?????????????????
சாதாரண மக்கள் படும் பாடு ???????????????
கார்த்திக் அம்மா



2016/11/14

14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2016/11/10

செய்தி ?><:::::: p="">
திருமணமான 4 நாளில் கணவரைப் பிரிந்து காதலனை கைப்பிடித்த காதலி....
இது போல் 1000 பெண்கள்.
எனக்கு ஒன்று புரியவில்லை.
காதலிக்கும் தைரியம் இருக்கும் பெண்கள் 
அந்த காதலனையே மண  முடிக்க எந்த போராட்டத்தையும் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது.
அப்படி வேறு ஒருவனை கல்யாணம் செய்து கொண்டால் 
காதலனை மறந்து 
கணவனுக்கு நல்ல மனைவியாக  இருக்க வேண்டும்.
இதில் பாவப்  பட்ட ஜென்மங்கள் இந்த திருட்டு பெண்களை கல்யாணம் செய்து கொள்ளும் அப்பாவிகள்தான்.
எனக்கு வேண்டப் பட்ட 3 வாலிபர்கள் இப்போது டைவர்ஸுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
பெண்களே கொஞ்சம் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.
கோபத்துடன் 
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்

 

2016/11/09

என்ன ஒரு அற்புதமான நாள்.
அமெரிக்காவில் ஒரு திருப்பம்.
அதை விட ஒரு பெரிய்ய்ய அதிர்ச்சி திருப்பம்.
புது 500 ரூபாய் நோட்டு.
மக்கள் தடுமாறுகிறார்கள்.
நல்ல வேளை .
கார்த்தியின் பிறந்த நாள் 14 திங்கள் அன்று வருவதால் கொஞ்சம் பணம் atm  ல் எடுக்க நினைத்தேன்.
ஆனால் எடுக்கவில்லை.
வங்கிக்கு சென்று வரிசையில் நின்றிருக்க வேண்டுமே.
கார்த்திக்கிற்கு 35 வயது நிரம்பியிருக்கும்.
எனக்கும்தான் 14.11 தான் பிறந்த நாள்.
கார்த்தி பிறந்ததை நினைத்து எல்லையில்லா மகிழ்ச்சி அடையும் மனது அழுது கொண்டே மகிழ்கிறது.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/10/31

மகாவீர் +கறிக்கடை
மகாவீர் பிறந்த நாள் என்பதால் இறைச்சி கடைகள் இருக்க கூடாது என்ற உத்தரவு பல அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியான விஷயமாக இருந்தது.
தீபாவளிக்கு அடுத்த நாள்.
ஞாயிற்றுகிழமை (sunday )
எல்லோருக்கும் பிரியாணி ஆசை .
நியாயம்தானே.
ஜைனர்கள் தங்கள் பூஜையை செய்யட்டும்.
அவர்கள் கோழி சாப்பிட வேண்டாம்.
ஆனால் எல்லோரையும் சாப்பிடக் கூடாது  சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.
ஜைனர்கள் இப்படி ஒரு வேண்டுகோள் கொடுத்ததாக செய்தி இல்லை.அவர்கள் இப்படி ஒரு பிரச்சினையையும் கிளப்பவும் இல்லை.
அப்படியென்றால்
இது யாருடைய உத்தரவு?
தனி மனித சுதந்திரம் இல்லையா?
எனக்கு பிடித்ததை நான் சாப்பிடுவேன்.
(நான் ஒரு காலத்தில் தீவிர கோழி பிரியாணி பிரியை.)
ஆனால் கார்த்தியின் மறைவிற்கு பிறகு அனைத்து சுவைகளையும் நிறுத்தி விட்டேன்.
இது என் முடிவு.
இது என் சுதந்திரம்.
நானாக சாப்பிடாமல் இருப்பது வேறு.
ஒருவர் என்னை கட்டாய படுத்துவது வேறு.
இந்த தவறுகள் இன்றோடு போகட்டும்.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/10/21

பயமாய் இருக்கிறது
என்ன நடக்கிறது நாட்டில்????????????
ஒரு பக்கம் டெபிட் கார்ட் குளறுபடி.
ஒரு பக்கம் முதல்வர் உடல்நிலை
பெட்ரோல் விலை
காவிரி பிரசினை
மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி என்றால்
தமிழ்  மக்களுக்கு எல்லா பக்கமும் இடி
++++ அடி .
.....................     .................
இந்த முறை பெங்களூருக்கு சென்ற போது ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன்.
மனிதர் பொங்கி விட்டார்.
வட நாட்டினர்   வந்து வேலை பார்த்து சம்பாதித்து விட்டு ஊருக்கு போய்விடுகிறார்களாம்.
தமிழர்கள்தான் கன்னடிகர்களின் முன்னேற்றத்தை  குறைத்து நாமே முன்னேறுகிறோமாம்.
ஓரளவு உண்மை என்றே தோன்றியது.
வேலைக்கு சென்ற இரு வருடங்களில் நம் இளைஞர்கள் வீடு வாங்கி விடுகிறார்கள்.( (கார்த்தி வேலைக்கு சேர்ந்து மூன்றே  மாதங்களில் வீடு வாங்கினான்.) )
பதவி உயர்வு  பெற்று விடுகிறார்கள்.
பொறாமை வரத்தானே செய்யும்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/10/07

நெஞ்சு பொறுக்குதில்லையே :
ஒட்டு போட்டவர்களுக்கு 100 %உரிமை இருக்கிறது.தன தலைவிக்கு என்ன நேர்ந்தது என்று தமிழக மக்கள் அனைவரும் கவலையுடன் உள்ளனர்.
இது தனி மனித பிரச்சினை அல்ல.
ஒரு மாநில பிரசினை.
அது எப்படி அவர் ஒரே ஒருவருக்கு சொந்தம் என்று ஆக முடியும்?
வேறு யாருக்கும் உரிமை இல்லையா?
வேறு யாருக்கும் தைரியம் இல்லையா?
அவர் நலம் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் வேண்டுதல்.
முதல்வரை முதல்வருக்காக மட்டுமே வழிபடும் பக்தர்கள் பல கோடி.
அண்ணன் எப்ப சாவான்
திண்ணை எப்ப காலியாகும்
என்பது பொய்.
திண்ணை வேண்டும்.என்று ஏங்குபவர்கள் கூட அவர் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பர்.
அவர் மீது பல குறைகள் சொன்னாலும் அடிமனதில் அவர் மீது ஒரு மதிப்பு, ஒரு அன்பு இருக்கிறது.
அந்த இரும்பு பெண்மணி நலம் பெற வேண்டும்.
ஆனால் அவர் உடல்நிலை பற்றி தெரிய வேண்டும்,

2016/09/29

'' ''இறந்தவரை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல முடியாத இந்தியாவை பாருங்கள் '''' ''என்று ஒரு நண்பர் பின்னூட்டம் இட்டிருந்தார்.
இது பற்றி எழுதினால் நிறைய விஷயங்களை விவாதிக்க ,அலச வேண்டி வரும்.
19ம் நூற்றாண்டு வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கும் வட (சில )மாநிலங்கள் பற்றி பேச வேண்டி வரும்.
தமிழ் நாட்டில் எங்கேனும் இது போல் நிகழ்வுகள்  கேள்வி படுகிறோமா?
நிறைய சர்சைக்குரிய விஷயங்கள்.எனவே அது பற்றி இப்போது வேண்டாம்.
நாணயத்தின் இரு பக்கம் மட்டுமல்ல
அதன் சுற்று வட்டத்தையும் (360*)பார்க்க வேண்டும்.
நண்பருக்கு நன்றி
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/09/26

அற்புதம்:
இன்று காலை நீண்ட நாட்களாக காண வேண்டும் என்று விரும்பிய காட்சியை கண்டேன்.
ஆம்.
I S R O  வின் P S L V  விண்ணில் பாயும் அறிய காட்சியை பார்க்க நானும் செந்திலும் தவம் இருப்போம். ஆனால் மேகம் மறைத்து விடும்.
வருத்தமாகி விடும்.
இன்றுதான் வானம் தெளிவாக இருந்ததால் மன  நிறைவாக கண்டோம்.
உள்ளம் குளிர்ந்து.
பெருமிதம் கொண்டது.
கார்கில் போரின் போது மாணவர்களை அந்த வீர செயலை பாராட்டி அந்த வீரர்களுக்கு கடிதம் எழுத செய்தேன்.
இன்று நம் விஞ்ஞானிகளை இவ்விடத்தில் பாராட்டுகிறேன்.
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/09/09

அம்மா உணவகம் :
செய்திகள் சொல்கின்றன .
அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குகின்றன என்று .:
பரவாயில்லை.
தப்பில்லை :
எத்தனை பேர் அதை நம்பி இருக்கின்றனர்.
அபார்ட்மெண்டுகளில் வாட்ச்மேன் வேளையில் உள்ளோர் 90 % அம்மா உணவகத்தையே நம்பி உள்ளனர்.
ஊரில் குடும்பத்தை விட்டு விட்டு இங்கு வேலை  செய்து கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் வயிறு நிறைய உண்ண  முடிகிறது என்றால் அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் இந்த திட்டமே காரணம்.
இத்தனை ஏழைகள் நிம்மதியாய் இருப்பதற்கு உதவும் இந்த திட்டம் நஷ்டம் என்றாலும் , அரசு பணத்தில் நஷ்டத்தை சரி செய்வதில் தவறே இல்லை.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/08/26

ஞாபகம் வருதா?
ஞாபகம் வருதா?

 
எனக்கு  ஒரே வார்த்தை 
ஒரே ஒரு வார்த்தை 
only one word 
ஒரே ஒரு வார்த்தை 
SORRY 
சொல்லியிருக்கலாமே .
உங்கள் வருத்தத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம் என்று ஒரு வார்த்தை எனக்கு மெயில் அனுப்பியிருக்கலாமே .

2016/08/18

மீனா ..கார்த்தி ...Packard bell
at the outset let me clarify that I like Meena the actor and this post has the least intention of hurting her in anyway.
It was 1999.
Karthik was doing his second year B.E comp sci in the prestigious Col.of Eng guindy.known as Anna Uni.
He was the first child of the third generation from my mother's side and was extremely petted  and ..child.He got state rank in entrance exam and joined eng.All his relatives gave him so many  presents. And when he became a second year student we wanted to give him a worthy gift.
my brother who was dealing with H.P had ordered a P.C set for him.The monitor  ordered was Packard bell (a big screen) Hewlett-Packard  which had to come from U.S.
We came from Metturdam  and went to the shop to purchase the computer.
Karthik was so excited of getting it.But to his greatest disappointment the shop owner told that the monitor  was not available as on the previous day actor Meena had visited the shop and was so firm in buying the screen.(How far this is true, I do not know.)Though the shop owner tried earnestly not to sell it he could not .he said.He offered another screen (which is still in his house in B'lore ) .We had to buy it.
But the pity is that the whole of Anna uni friends were also eagerly waiting to see the screen.
கார்த்தியை போட்டு கலக்கி எடுத்து விட்டார்கள்.
இன்றும் அந்த திரையை கார்த்தியின் வீட்டில் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்த நினைவுகளே நெஞ்சில் நிழலாடும்.
கார்த்தியின் ஏமாற்றமடைந்த அந்த முகம் என்னை வருத்தும்..
அதற்கப்புறம் என்ன வாங்கினால் என்ன?அதுவும் அவன் நண்பர்களின் கலாய்த்தல்?
யாருக்கு தெரியும்?எல்லாம் இப்படி பாதியில் முடியும் என்று?

2016/08/06

ராயபுரம்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் சென்ற அரசு பஸ் மீது நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பஸ்சின் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து ஜன்னல் ஓரத்தில் இருந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா (வயது 18) முகத்தில் கண்ணாடி துகள்கள் விழுந்து அவர் காயம் அடைந்தார்.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காயமடைந்த ஐஸ்வர்யாவை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணாடி துகள்களால் ஐஸ்வர்யாவின் முகத்தில் காயம் ஏற்பட்டதால் அங்கு அவருடைய முகத்தில் 9 தையல்கள் போடப்பட்டன.

மேலும் இந்த காயத்தால் அவருடைய முக அமைப்பு மாறியிருப்பதால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். 
.......     ........ .......
.......
இந்த பெண்ணின் புகை படத்தை ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும், ஒவ்வொரு கல்லூரியிலும் வைக்க வேண்டும்.
.......மாணவர்கள் என்பதால் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
.......யாரும் கேள்வி கேட்கக் கூடாது.
... நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
...ஆனால் இந்த பெண்ணின் துயரத்திற்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்????????????
கோபத்துடன் 
கார்த்திக் அம்மா

2016/08/01

01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.
இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
இன்று 01.08.2016.
எத்தனை வருடங்கள் ஓடினாலும் மனம் இன்னும் 2005 லியே இருக்கிறது .
மனம் ஓ என கத்திக் கொண்டே இருக்கிறது.
கதறிக் கொண்டே இருக்கிறது.
மகன் மீண்டும் வந்து விட மாட்டானா ?ஒவ்வொரு முறை காலிங் பெல் அடிக்கும் போதும் அது கார்த்தியாக இருக்கும் என்று மனம் பரிதவிக்கிறது.
என்ன சொல்ல?
தாள முடியா வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2016/07/22

பிற ஜாதியினர்??????
கடிவாளமிடா குதிரையாய் மனம் தறி கெட்டு ஓடி ஏதோதோ சிந்தித்துக் கொண்டிருக்கும் போது திடீர் திடீர் என சில சந்தேகங்கள் வரும்.
அப்படித்தான் இந்த சந்தேகமும்.
எப்போது பார்த்தாலும் காதல்,  கொலை எனற விவகாரத்தில் தலித்,வன்னியர் ,கவுண்டர் , பிராமின் ஜாதிகள் மட்டுமே பேசப் படுகிறதே.
ஏன் ,இந்த முதலியார், செட்டியார் ,ஆசாரியார் போன்ற ஜாதிகள் பெயரையே கேள்விப்படுவதில்லையே?
அவர்களின் பெண்கள் காதல் செய்வதில்லையா?
அல்லது அவர்களின் காதலை இவர்கள் அங்கிகரித்து பிரச்சினை இல்லாமல் முடித்து விடுகின்றனரா?
மண்டபத்திலே யாராவது வந்து என் தலையாய இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.
confused
கார்த்திக் அம்மா

2016/07/19

தலித் தலைவர்களே :
உங்களுக்கு ஒரு வேண்டுகோள் :
இன்று செய்தியில் C .A தேர்வில் ஒரு முற்படுத்தப் பட்ட இனத்தை சேர்ந்த இளைஞன் இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளான்.
மதம் மாறி திருமணம் செய். நம் கரு அனைத்து ஜாதி பெண்கள் வயிற்றில் வளர வேண்டும் என்ற மிக தப்பான ஒரு விஷ கருத்தை உங்கள் இளைஞர்கள் உள்ளத்தில் உருவேற்றி
இன்று அவர்கள் செயல் முழுக்க மதம் மாறி, இனம் மாறி காதல் என்பதோடு மட்டுமே நின்று விட்டதோ என்ற சந்தேகம் வருகிறது.
தலைவர்களே,உங்கள் இளைஞர்களுக்கு தகுந்த கல்வியை அளித்து,நல்ல வேலை வாய்ப்பை பெற்று தந்து சமூகத்தில் உயர் நிலைக்கு  செய்யுங்கள்.
நான் ஜாதி வெறி கொண்டவள் அல்ல.
சிறு வயதிலிருந்தே ஜாதி வித்தியாசம் பார்க்காதவள் .
இந்த ஸ்ரீராம் முதல் ரேங்க் வாங்கும் போது நாமும் அதே போல் சாதிப்போம் என்ற எண்ணத்தை உங்கள் இளைஞர்களுக்கு சொல்லுங்கள்.
நம் இனத்திலேயே திருமணம் செய்யலாம்.
கல்வி,வேலை,உயர் பதவி வந்தால் அனைத்து வேறுபாடுகளும் கண்டிப்பாக மறையும்.
உதாரணம்.
நம் சகாயம் I .A .S .
நல்லெண்ணத்தில்
அன்பின்பால்
சொல்லும் கருத்து இது.
செயவீர்களா?
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/07/18

விடுதலை ராஜேந்திரன் :==+கபாலி
HATS OFF ராஜேந்திரன் .
just now
இப்போதுதான் உங்கள் வாட்ஸ் அப் செய்தியை t .v யில் பார்த்தேன் .wonderful .அற்புதம் .
இதே போன்ற ஒரு பதிவை சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியிருந்தேன்.
என்னமா பில்ட் அப் கொடுக்கிறாங்க.இந்த படம் வந்தால் நீங்கள் சொன்னதில் ஏதாவது ஒன்றாவது நடக்குமா?
திருந்தாத நம் மக்களை என்ன சொல்வது?

2016/07/16

நீ ஒருவன்தான் அழகு :
இது ஒரு ரஜினி பட பாடல்.
எந்த படம்?
எந்த வருடம் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் அந்த நடிகை
பார்க்கும் எல்லோரையும் ரஜினியாகவே பார்ப்பார்.
இந்த பாடலை பார்த்த நான் கார்த்தியிடம் சொன்னேன்.
'' ராஜா ,நீ u .s போய் விடுவாய்.
இந்த பாட்டில் வரும் பெண் போல் பார்க்கும் எல்லோரையும் 
என் கார்த்தி 
என்று பைத்தியமாக அலைய போகிறேன் .'' ''
கார்த்தி எப்படியும் U .S ல் தான் வேலை செய்வான் .(அப்போது என் வேலையை விடும் எண்ணம் எனக்கு இல்லை.2017 ல்  தான் எனக்கு பணி ஓய்வு .retirement .).
அதனால் நான் இங்குதான் இருப்பேன். கார்த்தியை பிரிந்து பைத்தியமாக அலைவேன் என்ற எண்ணம் இருந்தது.
இப்போதும் அந்த பயம் உள்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது.
எத்தனை நாள் அறிவு அன்பை ஜெயிக்கும்?
அன்புதான் இறுதியில் வெல்லும்.
கார்த்திக் பைத்தியம்.
கார்த்திக் அம்மா 

2016/07/10

தேவாங்கு :
THE ONLY FACE I HAVE :
With the photographer :
இது ஸ்வாதி சம்பந்தப் பட்ட பதிவு அல்ல .
அந்த பெண் ராம்குமாரை தேவாங்கு என்று சொல்லியதாகவும் அதனால் கொன்றதாகவும் ......
1990களில்  +1படித்தவர்களுக்கு ஆங்கில முதல் பாடமே
"With the photographer "என்ற பாடம்தான். எனக்கு மிகவும் பிடித்த பாடம். ரசித்து நடத்துவேன் அந்த பாடத்தை..அதில் ஒருவர் தான் புகைப்படம் எடுக்க செல்வார்.எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம்தான். எப்போதும் எல்லா photographer ம் சொல்வது போல் ''  '' தலையை இப்படி சாய், கண்ணை மேலே பார்,வாயை நேராக வை ''  என்று சொலவதோடு நில்லாமல்'' ' உன் வாய் இன்னும் சற்று சிறியதாக இருந்திருக்கலாம் கண் சற்று பெரியதாக இருந்திருக்கலாம் ,'' என்ற ரீதியில் சொல்லிக் கொண்டே போவார் .பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியர் அந்த photographer இடம் சொல்வார்
THIS IS MY FACE. 
THE ONLY FACE I HAVE 
சொல்லி விட்டு புகைப் படம் எடுக்காமலே சென்று விடுவார்.
அற்புதமான கருத்து.
எத்தனை ஆசிரியர்கள் இந்த கருத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தினரோ தெரியவில்லை.
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை என்ற ரஜினியின் பாடல் வரிகளை (எழுதிய கவிஞர் யாரோ ) சொன்னவுடன் மாணவர்களுக்கு மின்னல் அடிக்கும்.
கருத்து இதுதான். .
ஒருவன் கருப்பாக பிறந்திருக்கலாம்.
சிறிய கண்களுடன் பிறந்திருக்கலாம்.
குட்டையாக  பிறந்திருக்கலாம்.
அந்த உருவத்தை மாற்ற முடியாது.
மாற்றவும் வேண்டாம்.
குணத்தை character ஐ மாற்ற முடியும்.
நல்லவன் மேலும் நல்லவனாக முடியும்.
அதுதான் ஒரு மனிதன் செய்ய வேண்டும்.
நீ அழகாக இல்லை என்று வருந்தாதே.
அது படைப்பு.
அதற்கு பதிலாக உன் ஆளுமையை வளர்த்துக் கொள்
என்பதுதான் ஆசிரியர் சொல்லும் சேதி.
மாணவர்கள்
மிஸ் அந்த கருப்பா ,குட்டையா இருப்பானே
என்று யாரை பற்றியாவது  சொன்னால் காட்டு கத்தல் கத்துவேன்.
ஏன் அப்படி சொல்கிறாய் ? வேறு விதமாக அவனைப் பற்றி சொல்ல முடியாதா ..அந்த 3வது வரிசையில் இருப்பானே
இந்த ஊரிலிருந்து வருவான் என்பது போன்ற வேறு விஷயங்களை சொல்லேன் '' என்று அறிவுரை சொல்வேன்.
இந்த செந்தில் காமெடியனை பண்ணி வாயா ,சட்டி தலையா என்றெல்லாம் உருவத்தை வைத்து காமெடி என்ற பேரில் அராஜகம் செய்வது கண்டு பொங்குவேண்.
காந்தி என்னஅழகு ?
நெல்சன் மண்டேலா என்ன அழகு?
காமராஜ் என்ன அழகு?
அவர்களை ஏன் போற்றுகிறோம்?
அவர்களின் குணம்.
செயல்.
இந்த ராம்குமாரும் அந்த பெண் சொன்னால் (அது உண்மையாய் இருந்தாலும்) அதை விட்டு விட்டு மேற்கொண்டு படித்து,ஒரு ஆராய்சசி ,ஒரு மக்களுக்கு உதவும்படியான கண்டுபிடிப்பு என்ற வழியில் சென்றிருந்தால் உலகம் அவனை எவ்வளவு போற்றியிருக்கும் ?
இளைஞர்களே சிந்தியுங்கள்.
காதல் தேவையில்லாத ஒன்று.
சினிமாக்களை பார்த்து அப்படி ஒரு மாயையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
காதல் என்ற இல்லாத ஒன்றிற்காக உங்கள் நேரத்தையும்,அறிவையும் வீணடிக்காதீர்கள் .
முன்னேறுங்கள் .
கார்த்திக் அம்மா
கலா கார்த்திக்

2016/06/26

மேட்டூர் அரசு மருத்துவமனை:
இங்கு நடந்த கண் அறுவை சிகிச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1990 களில் நான் அங்கு இருந்த போது மருத்துவமனை கண்காணிப்பு குழு ஒன்று  இருந்தது.M .L .A +சேர்மன் +உறுப்பினர்கள் சேர்ந்து ஆய்வு செய்வ ர்.அந்த ஊர் M .L .A +சேர்மன் என்ன நினைத்தனரோ.என்னை ஒரு கமிட்டி உறுப்பினராக நியமித்தனர்.35 வயதுதான் இருக்கும் எனக்கு.எல்லோருக்கும் ஆச்சரியம் .பொறாமை.அந்த வயதில் எனக்கு ஏகப் பட்ட பொறுப்புகள் கொடுக்கப் பட்டன.எதையும் சுறு சுறுப்புடனும் திறமையுடனும் (???????????) நேர்மையுடனும் செய்வதுடன் துணிச்சலும்  அதிகம் என்பதும் ஒரு காரணம் .யாருக்கும் பயப்படாமல் உண்மையை பட் பட்டென்று போட்டு உடைத்து விடும் குணம் எனக்கு.
என் நேர்மையும் ஒரு காரணம்.
பள்ளிக்கு அதிக உழைப்பை கொடுத்தவள்
எப்படியோ
அந்த கமிட்டி மருத்துவ மனை ஆய்விற்கு சென்றது.
நானும்தான்.
மருத்துவர்களை பல கேள்விகள்
நிர்வாகம் சரியாக நடக்கிறதா?
நோயாளிகளுக்கு கவனிப்பு சரியாக இருக்கிறதா?
சுத்தம் கவனிக்கப் படுகிறதா?
என்றெல்லாம் ஆய்வு செய்து குறை இருப்பின் களைய முயற்சி செய்தோம்.
NOW 2016:
இப்போது அப்படி ஒரு கமிட்டி இருக்கிறதா?இருந்தால் இப்படி தவறுகளை தவிர்த்திருக்கலாமே .
கார்த்திக் அம்மா

2016/06/25

நுங்கம்பாக்கம் கொலை :
பட்ட  பகலில் கொலை:
கூலிப் படை என்றெல்லாம் யாரும் கர்ஜிக்க வேண்டாம்.
கூலிப் படை கலாசாரத்தை யார் ஆரம்பித்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
இந்த சுவாதி பெண் காலை 6.30 க்கு ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.கொலை 7.30 க்கு நடக்கிறது.அந்த பையன் வரும் வரை இந்த பெண் ஏன் அங்கே நிற்க வேண்டும்?
அவனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டும்?
லாஜிக் சரியில்லையே?
அந்த பையன் கொலை (அது அவளின் காதலன் என்றெல்லாம் உறுதி படவில்லை.ஒரு யூகத்திற்கு ...90%அதுதான் உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது ) செய்ததை சரியென்று சொல்லவேயில்லை.
விஷயம் என்ன என்றால்
பொருந்தா காதல் 
கள்ளக்காதல் 
காதலன் மாற்றம் 
இவைதான் முக்கிய காரணங்கள்.
வக்கீல் ,4 பெண்கள், இப்படி பல கொலைகள் கள்ளக்காதல் விவகாரம் என உறுதி செய்யப் பட்டுள்ளன.
சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சசிகளை பாருங்கள்
பாதி கள்ள  காதல்
2 அல்லது 3 காதலன்கள்.
இந்த விஷயத்திலும்
//கொலையாளி இளம்பெண்ணுடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டார் .. கூலிபடை எனில் அவன் ஏன் வாக்கு வாதத்தில் ஈடு பட வேண்டும் ??ஒரு தலை காதலோ இல்லை இரண்டு தலை காதலோ.காதல்தான் பிரசினை.காதலன் பற்றி பேசாமல் கூலிப் படை பற்றி பேசுவது சரியல்ல //
முதல்வர் சட்ட சபையில் சொன்னார். பல கொலைகள் தனி மனித
பிரச்சி னையால் தான் நடக்கின்றன என்று.அதுதான் உண்மை.
சென்னையில் சட்ட ஒழுங்கு கெட்டு விடவில்லை.
பெண்கள்தான் மிக முக்கிய காரணம்.
ஓசூரில் பெண்தான் ஆட்களை ஏவி கொலை செய்கிறாள்.காரணம் கள்ள காதல்.
மீண்டும் சொல்கிறேன். இது சட்ட ஒழுங்கு பிரச்சினையல்ல
தனி மனித வக்கிரம்.
எடுத்தையெல்லாம் அரசியலாக்காதீர்கள்.

2016/06/24

இன்று வெள்ளிக்கிழமை.
முகமதியர்களுக்கும் புனித நாள்.
கிறித்தவர்களுக்கு புனித வெள்ளி.
நானும் என் ஆருயிர் மகனை பறிகொடுத்த கிழமை.
11 வருடங்கள் கடந்த பின்பும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொடுமையான நாளாகவே வயிற்றை கலக்குகிறது.
.......    .......
ஆறடி  உயர மகனை
 அரைப் பிடி சாம்பலாக்கி
காவிரியில் கரைத்த
கண்ணீர் மகள் நான் .......................
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/06/23

வெங்காயம் ++பருப்பு
ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெங்காய விலை அதிகமாக இருந்த போது டெல்லி முதல்வர் அம்மா சொன்னார்கள்:'' ''வெங்காயம் இல்லாமல் சாப்பாடு செய்யுங்கள்'' ?????
இப்போது பருப்பு விலை அதிகமாகும்போது ஒருவர் (அவர் மத்திய மந்திரியா ???????????) சொல்கிறார் ''சாம்பாரில்  நிறைய தண்ணீர்  சேர்த்துக் கொள்ளுங்கள் '''''''''''''
ஐயா உங்கள் வீட்டு சாம்பாரை சேம்பிளுக்கு அனுப்பினால் எவ்வளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் என்று நாங்களும் தெரிந்து கொள்வோம்.
அனுப்புகிறீர்களா ???????????????????

2016/06/22

இது செய்தி:
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
...................நான் மக்களின் சேவகன். நம்புங்கள்.
 ......................நான் மக்களின் சேவகன். நம்புங்கள். 
நான் மக்களின் சேவகன். நம்புங்கள்.
 

2016/06/19

பாவியின் வயிற்றில் பிறந்ததால்
பாதியில் போனாயோ?
உத்தமியின் வயிற்றில் உதித்திருந்தால்
உண்டென்று வாழ்ந்திருப்பாயோ?
பாவியெனக்கு உன்னை சுமக்கும்
பாக்கியம் கிடைத்ததால்
என் பாவமெல்லாம் நீங்கியதோ?
என் பாவத்தை நீ சுமந்ததால்
பரிதவித்து பரமனடி சேர்ந்தாயோ?

2016/06/07

என்ன சொல்வேன்????????
எப்படி சொல்வேன்??
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
11 வருடங்கள் ஓடி விட்டன.
மகனின் ஏக்கம் அதிகம்தான் ஆகிறதே அன்றி குறையவில்லை.
இது என்றோ எழுதியது.இப்போது மறு பதிவேற்றம்.
கார்த்திக் அம்மா
கலாகாத்திக்

2016/05/26

Dont postpone school reopening.
I read that parents want the school reopening to be postponed because the 40 degree hot days.My point is that at least if the children are in school they will be safe under a roof and under teacher, s control.Now we read so many instances of boys going to pools and beaches and get drowned.so please reopen the schools at the earliest and make children safe
.karthik amma
பள்ளி திறப்பு:
வெய்யில் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டுமென்று பெற்றோர்கள் வேண்டுகோள் வைத்ததாக படித்தேன்.(எந்த பெற்றோர்கள்?யாரிடம் கோரிக்கை வைத்தனர் என்பது தெரியவில்லை.) மீடியாவே இது போல் கொளுத்தி போடுகிறதோ ?
என் கருத்து:பள்ளிகள் திறப்பதே நல்லது.
மாணவர்கள் 8 முதல் 4 மணி வரை ஒரு அறையில் ,ஆசிரியர்களின் கண்காணிப்பில் இருப்பார்.
இப்போது பல மாணவர்கள் குளத்தில் ,கடலில் குளிக்க போய் நீரில் மூழ்கி இறந்தனர் என படிக்கிறோம்.
இதையெல்லாம் தவிர்க்க பள்ளிகளை ஜூன் முதல் தேதியிலேயே திறக்கலாம்
கார்த்திக் அம்மா


 

,


2016/05/22

தேர்தல் முடிவுகள்:
நடிகர்களை திரையில் மட்டுமே ரசிக்கிறோம்.என்பதே முக்கிய செய்தி.
முதல்வர் முழு நேர அரசியல் செய்பவர்.
விஜயகாந்தின் தோல்வி அவரின் பாதி பெயர் கொண்ட முதல்வர் கனவில் மிதக்கும் நடிகருக்கு விடப்பட்ட கடும் எச்சரிக்கை.
திறமையையும் ,அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
ஒரு ரசிகர் கூட்டத்தையே கட்டுப் படுத்த முடியாமல் பின்புறமாக சுவரேறி குதித்து ஓடியவர் எல்லாம் முதல்வராக ஆசைப் படுவது ?????????????/

2016/05/16

மலர்ச்சியான நினைவுகள்.
மலரும் நினைவுகள் :

2016/05/15

மெட்ராஸ் குடிகார பொம்பளங்க :
நானும் குடிகாரி:
நேற்று ஒரு அரசியல்வாதி (இவர்களை தலைவர்கள் என்று நான் சொல்வதே இல்லை )  பரப்புரையில் பேசுகிறார்.
இப்ப தமிழ் நாட்ல எல்லா பொம்பளைங்களும் குடிக்கிறாங்க.
(....அவரச் சுற்றி நிறைய பெண்கள்தான் நின்று கொண்டிருந்தனர்.வேறு ஊர் ....அதனால்தானோ என்னவோ ...சுதாரித்துக் கொண்டு ...சென்னை [ பெண்கள் என்று கூட சொல்லவில்லை.பொம்பளங்க : பொம்பளங்க :தான் ]
மெட்ராஸ் பொம்பளைங்க எல்லாம் குடிக்கிறாங்க
...பக்கத்தில் நின்ற பெண்ணிடம்.... 
நீ உன் பிள்ளைய  அனுப்பு.அதுவும் குடிக்கும் ........
நானும் ஒரு மெட்ராஸ்காரிதான்.
நானும் தினமும் குடிக்கிறேன்.தினமும் என் வீட்டிற்கு ஒரு பாட்டில் வந்து விடுகிறது.சப்ளை யார் தெரியுமா?
மேற்படி அரசியல்வாதிதான்.
அப்புறம் இன்னொரு விஷயம்.எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும் உண்டு.
அதற்கு  சப்ளை யார் தெரியுமா 
இவர் மகன்தான்.
இந்த ஆள் மைக் பிடித்தால் என்ன பேசுவது என்ற வரைமுறையே இல்லையா????????????? ????????????? ????????????? ?????????????
சிம்புவின் பீப் பாடலுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த மகளிர் குழுக்கள் இப்போது எங்கே????????????
இவனுக்கெல்லாம் ஓட்டு போடணுமா???????????????
ஆத்திரத்துடன் 
ஒரு மெட்ராஸ் பொம்பள 
கார்த்திக் அம்மா
பொன்னியின் செல்வன் அம்மா
 

2016/05/09

ஆச்சர்யம் :
நானும் ,கார்த்தியும் ,என் இளைய மகனும் 2004 ல் எடுத்த புகைப்படம் இது.
இன்று திரு.ஸ்டாலின் அவர்கள் தன அன்னையுடன் எடுத்துக் கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்தவுடன் ஆச்சரியப் பட்டு இந்த பதிவை இடுகிறேன்.
அம்மாவும் மகனும் என்ற உறவிற்கு ஈடு இணை எதுவுமில்லை.
  கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
பொன்னியின் செல்வன் அம்மா

2016/05/08

அன்னையர் தினம் :


என் தந்தையானவன்.
என் மகனானவன்
என் உயிரானவன்.
இந்த தாய்க்கு தாயானவன்.
என் அன்னையும் இவனே.
என் அம்மாவும் இவனே.
என் உயிரை உருக்கி நெய்யாக்கி விளக்கேற்றி
என்னையே தீபமாக்குகிறேன்
இந்த தெய்வத் தாய்க்கு .
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
இது என்னை பெற்ற அன்னை
என்ன செய்து என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு நான் பட்ட அன்பு கடனை தீர்ப்பேன்?

2016/05/03

YOU TOO BANGALORE     ?????????????
பெங்களூருவிலுமா      ??????????
இந்த மாதம் கார்த்தி (வீடு பெங்களூரு )  சென்ற போது ஏற்பட்ட புது அனுபவம்.
tap ஐ திறந்து தண்ணீரை பயன்படுத்த ஆரம்பித்த நான் திடிரென  வெருட்டென்று கையை இழுத்துக் கொண்டேன்.ஒரு shock .தண்ணீர் அவ்வளவு சூடாக கொதி நிலையில் வந்தது.சந்தேகப் பட்டு geyser ஐ பார்த்தேன் .இல்லை.அது off ல் தான் இருந்தது.
அட
பெங்களூரு மாநகராட்சியும் சென்னை போலவே சுடு தண்ணீர் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும்.
ஆமாம்.
நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுதான்.
பெங்களூருவிலும்  வெய்யில் வாட்டுகிறது.
காற்றே இல்லை.
இரவில் புழுக்கம் தாங்கவில்லை.
சென்னை மாநகராட்சியே உன்னை கேலி செய்ததற்கு மன்னிக்கவும்.
(சென்னை மாநகராட்சி இலவச சுடு நீர் தரும் என்று அடிக்கடி கலாய்ப்பேன்.)
garden city என்ற கர்வமெல்லாம் போய் காய்ச்சும் நகராகி விட்டது பெங்களூரு.
கார்த்திக் அம்மா

2016/04/21

சக்திமான்:
ஒரு m .l .a என்றால் கொம்பா ?
பாவம் சக்திமான் என்ற போலிஸ் குதிரை.
ஒரு போராட்டத்தின் போது குதிரை போலிசார் பணிக்கு வர அங்கு இருந்த எம்.எல்.ஏ அந்த குதிரையை அடிக்கும் காட்சி
 நெஞ்சை பதற வைத்தது.
கண்களில் கண்ணீர்
வேதனை.
ஒரு வாயில்லா ஜீவனை இரக்கமே இல்லாமல் ராட்சச தனமாக அடிப்பானா அந்த m .l .a.
அவன் மனைவி ,பிள்ளைகளை அப்படி அடித்து விடுவானா?

m .l .a  என்றால் 100 கொம்பா?
அந்த குதிரையும் வலியில் தவித்து,தவித்து
பாவம்
நேற்று இறந்தே போயிற்று.
இன்று வரை அவன் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை.
சரி.
மனித தண்டனைதான் இல்லை.
இந்த தெய்வம் தெய்வம் என்று ஒன்று இருக்கிறதாக சொல்கிறார்களே?
அதுவும் எந்த தண்டனையும் கொடுக்காதா?
சுலபமாக சொல்லி விடுவார்கள்.
அடுத்த பிறவியில்   இதற்கு தண்டனை உண்டு என்று.

அடுத்த பிறவியில்
சக்திமான் வந்து இவன் காலை உடைத்துவிட்டு ,
நான்தான் சக்திமான் என்று சொல்லுமாக்கும்.
இவன் அந்த குதிரை இறந்த பிறகு வந்து மரியாதை செய்தானாம்.
பரிகாரம் செய்து பாவ மன்னிப்பு பெற்று விடுவானா?????????????
போங்கடா
நீங்களும் உங்கள் வியாக்கியானமும்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/04/15

புத்தாண்டு திரைப்படங்கள்:
தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் வழக்கம் இல்லை.திருட்டு vcd யும் பார்ப்பதில்லை.
சினிமா பார்ப்பதே குறைவு.
சரி.தொலைக்காட்சியில் போடும் படம் பார்க்கலாம் என்று சேனல் திருப்பினால் கமல்ஹாசன் படம்.
பல்லைக் கடித்துக் கொண்டே பேசினார்.எவ்வளவு கேட்டாலும் ஒன்றும் புரியவில்லை.
சரி என்று அடுத்த சேனலுக்கு போனால் tiger ம் பல்லைக் கடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தது.
போடாப்பா .
எனக்குதான் (எனக்கு மட்டும்தான் )புரியவில்லையா?கிராமத்து மக்கள்,அதிலும் கிராமத்து பெண்களுக்கு புரியுமா?million dollar question .
அடுத்த சேனலில் தமிழ் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
கீழே தமிழாக்கம் ஓடிக் கொண்டிருந்தது.அப்போதுதான் பாட்டின் வார்த்தைகளே எனக்கு புரிந்தது .
அதே போல் இந்த ஹீரோக்களின் வசனங்களுக்கும் தமிழாக்கம் போட்டால் என்னைப் போன்ற ஞான சூன்யங்களுக்கும் புரியுமல்லவா.
ஒரு 15 நிமிடங்கள் கூட பார்க்க முடியவில்லை.
புரியவில்லை.
வழக்கம் போல் செய்தி சேனலுக்கு தாவி விட்டேன்.அங்குதான் அரசியல்வாதிகள் என்ற பெயரில் மக்கள் பணத்தில் ஒரு பெரிய கும்பல் கூத்தடித்துக் கொண்டிருக்கிறதே.
சீரியல்கள் தோற்று விடும்.
அதையே பார்த்து தொலைப்போம்.
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா
பி.கு.
சிவாஜி,சூர்யா மாதிரி லோ லோ என்று கத்தி கத்தி பேச  வேண்டுமா என்று ஒரு பெண் என்னைக் கேட்டது.

 

2016/04/14

ரசிகர்களா :
ராட்சசர்களா :
ரௌடிகளா :
நான் இந்த விஷயத்தை பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
இன்று என் கருத்து மேலும் உறுதிப்படுகிறது.
இந்த நடிகரின் திரைப்படம் வெளியாகும்போதெல்லாம் அவரின் ரசிகர்கள் வெறியாட்டம் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.
தொலைக்காட்சியில் பார்க்கிறேன்.
இந்த ரசிகர்கள் 25 வயதளவில்தான் உள்ளனர்.
ஒரு நடிகரை பிடிக்கலாம்.
அவரது நடிப்பை(????) ரசிக்கலாம் .
They can be fans ,but not FANATICS .
They  should not indulge in vandalism
எதை சாதிக்கிறோம் என்ற நினைப்பில் இந்த இளைஞர்கள் இதை செய்கிறார்கள்?
நடிகர் பணம் வாங்கிக் கொண்டு நடிக்கிறார்.
ரசிகர்கள் மேல் அக்கறையும் பாசமும் உள்ளவராக இருந்தால் ஒரு படம்
ஒரே ஒரு படம்
காசு வாங்காமல் நடிக்கட்டுமே பார்க்கலாம்.
இளைஞர்களே நமக்காகத்தான் அவர்கள்.
நம் வேலை, சாதனை,லட்சியம் இவற்றை அடைந்த பிறகு ஒரு இளைப்பாரலுக்குதான் இவர்கள்.
just to relax a bit .
நம் வாழ்க்கைக்காக அவர்கள்.
அவர்கள் வாழ்க்கைக்காக அல்ல நாம்.
நம் நெருப்பில் குளிர் காய்ந்து தங்கள் வாழ்க்கையை வளப் படுத்திக் கொள்ளும் இவர்களுக்காக உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
அன்புடன்
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

HAPPENISM

i have instituted a new religion.
HAPPENISM
மீள்பதிவு.
HAPPENISM   HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as it happen.
இந்த பதிவு எழுதி பல ஆண்டுகள் ஆகி விட்டன.இருப்பினும் மீண்டும் புதுப்பித்தேன்
அன்புடன்
கலாகார்த்திக்

2016/04/10

ஐவர் ..... அறுவர் 
குகனோடும் ஐவரானோம் என்பது மாறி  தர்மர் இறுதியாக சேர்ந்து ஐவராகி புது ராமாயணம் சொன்னவர்கள்
இப்போது அறுவர் ஆகியிருக்கிரார்களே .
ஆறாவதாக வந்தவர்
விபிஷணனா 
அனுமனா 
யார் என்பதை சொல்ல வில்லையே .சொல்லுங்கப்பா
மண்டை  வெடிக்குது                                                                  

2016/04/09

மேளம் அடிப்பவர்,
ஆதி தொழில்
என்றெல்லாம் பேசி   விட்டார்
என்று எல்லோரும் அலம்பல்  செய்கிறார்களே
இதற்கு ஆரம்பம் யார் ?
சட்டசபையிலேயே "  "பாவாடை நாடா ""'  ஆரம்பித்து இந்திரா காந்தி யில் ஆரம்பித்து அனைத்து பெண்களையும் எவ்வளவு கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு இடக்கலாக பேச கற்று கொடுத்தவரே   இவர்தானே.
மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி.
இவருக்கு வந்தால் ரத்தமா?  
கலாகார்த்திக்          

2016/04/08

 தமிழ் நாட்டு மக்கள் மீதுதான் இவர்களுக்கு எவ்வளவு      பாசம்.
நாம் கஷ்டப் படுகிறோம்.
நமக்கு நல்லது செய்ய வேண்டும்
நம்மை நன்றாக வாழ வைக்க   வேண்டும் என்றுதான் இத்தனை தலைவர்களும் (???????????? ) முதல்வராக வேண்டும்  என்று துடிக்கிறார்கள் ...
மற்றபடி இவர்களுக்கு   பதவி மேல் ஆசையில்லை.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்லை.கொள்ளை அடிக்க மாட்டார்கள்.
சொகுசு வாழ்க்கை வாழ மாட்டார்கள்.
மக்கள் நலனே அவர்கள் உயிர்   மூச்சு  .
இத்தனை தலைவர்களும் நம்மை காப்பாற்ற துடிக்கும் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ????
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/03/29

இப்போதெல்லாம் t .v போடவே (கீழே போட இல்லை ) on செய்யவே பயமாயிருக்கிறது.
ஒரு சைக்கோ உச்சஸ்தாயியில் கர்ஜிக்கிறது.
இப்போதே முதல் ஆகி விட்ட தோரணையில் அண்ணி (அண்ணனை காணவே காணோம்) ஆக்ரோஷமாக , அகங்காரமாக ஆர்ப்பரிக்கிறது.
தாங்க முடியவில்லை.
கார்த்திக் அம்மா

2016/03/27

விளம்பரமும் பெண்களும்:
ஒரு விளம்பரத்தில் ஒரு பெண் ஒரு வீட்டிற்கு வந்து அங்கு இருக்கும் வீட்டு சோபா ,மற்ற furniture பார்த்தவுடன் ''கல்யாணம் பண்ணிக்கலாமா? ''     என்று கேட்கிறாள்.
......
அடுத்து ஒரு விளம்பரத்தில்
ஒரு பைக்கிற்காக பெண்கள் ஓடி வருவது போல் வருகிறது.(அதில் பெண்களுக்கு பதிலாக சிறுவர்கள் ஓடி வருவது போல் வைத்திருக்கலாம் )
ஆக  ஒரு பைக்கினால் ,ஒரு furniture போன்ற அல்ப விஷயத்திற்காக பெண்கள் மயங்குவார்கள் என்பது எரிச்சலாக இருக்கிறது.
......அதே போல்
சிகப்பழகு க்ரீம் ,முடி வளர எண்ணெய் ,புடவை கடை என்பது போன்ற பொருட்கள் பெண்கள் அழகால் மட்டுமே  ஜெயிக்க முடியும் என்ற போதையை பெண்களிடம் உருவாக்குகிறதோ என்று தோன்றுகிறது.இவ்வளவு பெண்ணுரிமை பேசும் பெண்களுக்கு இவ்வளவு அலங்காரம் தேவையில்லையே.
தங்கள் அழகு பற்றி     இவ்வளவு கவலை தேவையில்லையே?
இன்னொரு விளம்பரத்தில்
'' என் மகன் ஒரு ஜர்னலிஷ்ட்டை கல்யாணம் பண்ணிகிட்டான் '' ''என்கிறது ஒரு தாய்குலம்.
அது என்ன மகன் கல்யாணம் பண்ணிக் கொள்வது ?
என் மருமகள் ஒரு journalist என்று சொல்லலாமே.
பெண்களை இன்னும் உயர்வாக காட்டலாம்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/03/26

ஒரு தொலைக் காட்சியில்
.......நாமக்கல் அருகே 2 பண மூட்டைகள் கிடந்தன .அவற்றை கண்ட ஒரு ஆசிரியரும் ஒரு பால்காரரும் போலிசுக்கு தகவல் கொடுக்க போலிஸ் அந்த பண மூட்டைகளை கைப்பற்றி சென்றனர் என்பதாக செய்தி சொல்லப் பட்டது .....
என் நினைவுகள் 1996 க்கு சென்றது.
அப்போது நாங்கள் மேட்டூர் (அணை ) யில் குடியிருந்தோம்.Govt வீடு.சுமார் 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும். வீட்டை சுற்றி பெரிய தோட்டம்.நெடிதுயர்ந்த பெரிய பெரிய மரங்களுடன் கூடிய வீடு.
கம்பி வேலி  போட்டு கேட் போட்டிருந்தோம்.
ஒரு நாள் இரவு சுமார் 2 மணி இருக்கும். யாரோ கேட்டை gate  பயங்கரமாக தட்டும் சத்தம். வீட்டு கதவை திறந்து நானும் என் கணவரும் வெளியே வந்தோம்.
வெளியே வர இருந்த கார்த்தி+செந்திலை வீட்டிற்குள் தள்ளி வெளிப்புறமாக கதவை சாத்திக் கொண்டேன்.(நான் பயங்கர முன்னெச்சரிக்கை முத்தண்ணா ).
கேட்டிற்கு வெளியே ஒரு கிராமத்து பெண்.
இடுப்பில் ஒரு ட்ரங்கு பெட்டி.
தலை மேல் ஒரு சாக்கு பை.
'' '' அம்மா , கதவை திறந்து என்னை உள்ளே விடுங்கம்மா .என்னை கொல்ல  துரத்தி வருகிறார்கள்.காப்பாற்றுங்கள்.'' '' என்று கதறல். படி இறங்க ஆரம்பித்த கணவரை தடுத்து நிறுத்தி ஒரு பெரிய மரத்தை காட்டினேன். அங்கே 3 பேர் நின்று கொண்டிருந்தனர்.
''மூட்டையில் என்ன ?'' என்றேன். அதற்கு முன்பே யூகம் செய்து விட்டேன். அது பண மூட்டை என்று.
அதே பதில்தான் கிடைத்தது.
'' அம்மா , நீ  அடுத்த பக்கத்தில் இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு செல். அங்கே நிறைய பேர் இருக்கின்றனர்.காவலாளியும் இருக்கிறார்'' என்று சொல்லி விட்டு கணவரையும் இழுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைநது கதவை தாளிட்டுக் கொண்டேன்.
HIGH LIGHT 
அடுத்த நாள் செய்தி:
ஒரு பெண்ணின் சடலம் காவிரி ஆற்றில் கிடைத்தது 
பல ரூபாய் தாள்கள் ஆற்றில் மிதந்தன .
......
உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ? அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கலாமே
...
என்று நீங்கள் கேட்பீர்கள்.
அந்த பெண்ணை வீட்டில் அனுமதித்திருந்தால் நாங்களும் வெட்ட பட்டிருப்போம்.
அதற்கு முதல் நாளே ஒரு அமைச்சரின் மாட்டு கொட்டகையில் இருந்து பணம் திருடப் பட்ட விஷயம் எங்களுக்கு தெரிந்தே இருந்தது.
.....ஆக விஷயம் என்னவென்றால் எப்போதுமே சாக்கு பையில்தான் பணம் வைப்பார்கள் என்பது தெரிகிறது.
அடுத்து ....
மேட்டூரில் இந்த கொலைகள் அப்போது அதிகம்.
ஒரு நாள் இரவு 4,5 பேர் எங்கள் வீட்டின் கூரை மேல் இன்னொருவனை துரத்திக் கொண்டு ஓடினார்கள்.
நாங்கள் கப் சிப் .
பணமும் பதவியும் என்ன சுகத்தை கொடுக்கும் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2016/03/25

SUPER NEWS:
ஜெர்மனி நாட்டின் உர்செலின் நகரைச் சேர்ந்தவர் கிளவுடியா. இவர் சிறுவயதிலிருந்தே ஏராளமான பூனைகளை வளர்த்து வருகிறார். நிறைய பூனைகள் இருந்தாலும், கிளவுடியாவின் செல்ல பூனை 'அல்ஜோஷா'. இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் அல்ஜோஷா சேட்டைக்கார பூனை. சமையல் அறையில் இருக்கும் தின்பண்டங்களை திருடி தின்றுவிட்டு, எங்காவது ஓடி ஒளிந்துக்கொள்ளும். கிளவுடியா வந்து கூப்பிடும் பட்சத்தில் தான், மீண்டும் வெளியில் வந்து தலைக்காட்டும். இப்படி இருக்க... ஓரிரு நாட்களாகவே அல்ஜோஷாவை காணவில்லை. கிளவுடியா வீட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தேடிப் பார்த்து விட்டார். ஆனால் பூனை கிடைத்தபாடில்லை. நாட்கள்...வாரங்களாக மாறின. வாரங்கள்...மாதங்களாக ஓடின.

ஒரு நாள் கிளவுடியாவின் பக்கத்து வீட்டுக்காரர், தன்னுடைய குடவுனில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒயின் பாட்டில்களை எடுப்பதற்காக திறந்தபோது, அங்கு அல்ஜோஷா இறந்த நிலையில் கிடந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த கிளவுடியா, அதை புதைப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

பள்ளத்தில் புதைப்பதற்கு முன் அல்ஜோஷாவை கையில் தூக்கி கொஞ்சியவாறு கண்ணீர் வடித்திருக்கிறார். அப்போது கையில் நெளிந்த பூனை, 'மியாவ்...மியாவ்...' என முனங்கி விட்டு, மீண்டும் இறந்தது போல கிடந்திருக்கிறது. இதனால் திடுக்கிட்டு போன கிளவுடியா உடனடியாக, கால்நடை மருத்துவரை வரவழைத்துவிட்டார்.

வந்த டாக்டரோ, 'அட.... பூனை உயிரோட தாங்க இருக்கு! ஆனால் போதை மயக்கத்திலே இருக்கு! ஓரிரு நாட்களில் போதை தெளிந்தவுடன் எழுந்துவிடும்' என்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டுக்காரார் 17 காலி ஒயின் பாட்டில்களுடன் கிளவுடியாவை தேடி வந்துவிட்டார். அந்த சேட்டைக்கார பூனை குடவுனில் மாட்டிக்கொண்ட சமயத்தில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த 17 ஒயின் பாட்டில்களை ருசி பார்த்திருக்கிறது. கண் விழிப்பது... ஒயின் குடிப்பது... மீண்டும் தூங்குவது என போதையிலேயே ஒரு மாதத்தை கழித்திருக்கிறது. மருத்துவர் சொன்னப்படியே மூன்று நாட்களுக்கு பின்னர், போதை தெளிந்து எழுந்திருக்கிறது அந்த பூனை.
SUPER
SUPER
SUPER
கார்த்திக் அம்மா 
கலாகார்த்திக்

2016/03/12

தர்மபுரி பஸ் எரிப்பு :
நல்லாத்தான் சொல்றாங்கையா :
நீதி....
தீர்ப்பு ....
அட கருமமே ...
மாணவிகள் சென்ற பேருந்தின் மேல் கெரசின் ஊற்றி ..
பஸ்சின் கதவுகளை மூடி தீ வைத்து விட்டு ,அந்த உலக மகா சாதனையை தலைமைக்கு பெருமையுடன் தெரியப்படுத்தியவர்கள் கொலை குற்றவாளிகள் இல்லையாம்.
emotional செயலாம்.
தாங்கள் செய்வது என்னவென்று அறியாமல் செய்துள்ளார்கள்
தேவனே இவர்களை மண்ணியும் :.......
என்ற  ரீதியில் அந்த அப்பாவிகள் மூவரின் மரண தண்டனையை நிறுத்தி விட்ட their highness அவர்களுக்கு என் ********************
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

2016/03/10

பாம்பே ஆட்டோக்களும் தலைவரும்:
மராட்டியர்கள் அல்லாதவர்கள் புதிதாக வாங்கும் ஆட்டோக்களை எரிக்குமாறு மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா உறுப்பினர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாணவன் பேசாததை பேசியதாக சொல்லி நாட்டை பிளவு படுத்தும் செயல் என்றெல்லாம் சொல்லி கன்னையாவை சிறையில் அடைத்தவர்களே  தைரியம் இருந்தால் இவரை சிறையில் அடையுங்களேன் பார்க்கலாம்.
இவர் பேசுவதெல்லாம் வன்முறையை தூண்டாதா?
நாட்டில் பணமும் பதவியும் உள்ளவர்களுக்கு ஒரு நீதி 
மற்றவர்களுக்கு ஒரு நீதியா?
இதற்கு இன்னொரு உதாரணம்:
மல்லையாவும் ஏழை விவசாயியும்.
9000 கோடி கடன் வாங்கிய மல்லையாவின் சொத்துகள் மீது கை வைப்பார்களா போலிஸ் ?
ஆனால் இரண்டு தவணை கட்டாத விவசாயியின் ட்ராக்டரை பறிமுதல் செய்யப் போவார்களாம்.
அந்த விவசாயியை அடிப்பார்களாம் 
யாருடைய நாடு இது??????????????
கோபத்துடன்,
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா   

 

2016/03/07

சேலம்,
சேலத்தை சேர்ந்த என்ஜினீயரை இத்தாலி நாட்டு பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடந்தது.
சேலம் என்ஜினீயர் சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த செங்குட்டுவன் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 28). இவர் இத்தாலியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இந்த நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இத்தாலி பேனோ நகரை சேர்ந்த எலிஸாசெஷா என்பவரை பார்த்திபன் சந்தித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமண நாளும் நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று காலை பார்த்திபன்–எலிஸாசெஷா ஆகியோரின் திருமணம் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க மணமகளின் கழுத்தில் பார்த்திபன் தாலி கட்டினார்.
மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இத்தாலி நாட்டில் இருந்து வந்திருந்த பெண்ணின் உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர். சிலர் மணமக்களுடன் ‘செல்பி’ எடுத்துக்கொண்டனர். திருமணத்திற்கு முந்தின நாள் நடைபெற்ற சடங்குகளும் தமிழ் கலாசார முறைப்படி நடைபெற்றது.
தமிழ் கலாசாரத்தை நேசித்தார் மணமகன் பார்த்திபன் கூறும்போது, ‘‘எலிஸாசெஷாவிடம் தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பற்றி பேசினேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரை தமிழகத்திற்கு அழைத்து வந்தேன். அப்போதே அவர் தமிழ் கலாசாரத்தை நேசித்தார். அதன்பிறகு தான் எங்களது நட்பு காதலாக மாறியது. 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நாங்கள் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் செய்து கொண்டோம்’’ என்றார்.//   ///  //
aahaa ஆஹா 
என்ன ஒரு அழகான மணப்பெண் 
நம் உடையில் எவ்வளவு பாந்தமாக இருக்கிறார் .
இன்னொரு இத்தாலி மருமகள்.
வாழ்க.

2016/03/05

அப்பாடா :
ஒரு வழியாக தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது.
கிடைத்தது நமக்கு நிம்மதி.
திரும்பிய பக்கமெல்லாம் 4 முகங்களின் படங்கள்.
வெறுப்பாய் இருந்தது.
இனி இந்த ஆட்டமெல்லாம் அடங்கும்.
குறையும்.
கார்கள் பறப்பதென்ன ?
அதெப்படி இந்த அரசியல்வாதிகளின் வேட்டி  சட்டை மட்டும் அப்படி வெள்ளை வெளேரென்று மின்னும்?
யார் கட்டும் வரிப் பணம்?
எல்லோரும் பணம் சம்பாதிக்க அவ்வளவு கஷ்டப் படும் போது இவர்களுக்கு மட்டும் எந்த மரத்தில் காய்க்கும்?
குறையட்டும் இவர்கள் எதேச்சதிகாரம்.இன்னும் 70 நாட்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம்.
கார்த்திக் அம்மா

2016/02/22

பாராட்டுகள்:
ஒரு வார்த்தை ஒரு லட்சம்.:
அற்புதம்.என்னமாய் சொல்கிறார்கள் பள்ளி மாணாக்கர்கள்.
அப்பப்பா
திருக்குறளை தலைகீழாய் கவிழ்த்துப் போடுகிறார்கள்.பிரமிப்பாய் இருக்கிறது.
அந்த தமிழ் ஆசிரியர்களின் புகைப் படங்களையும் காட்டி அவர்களையும்
கவுர படுத்தலாமே.
மாணாக்கர்களுக்கு அன்பு வாழ்த்துகள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/02/16

கார்கில் வீரர்கள்:
வணக்கங்கள் :
4 வீரர்களின் பெருமை மிகு உடல்கள் வந்தன.என் பணிவான வணக்கங்கள் :
ஆதங்கம் :
அண்டை மாநில முதல்வர்கள்,அமைச்சர்கள் என் அனைவரும் நேரில் சென்று மரியாதை செலுத்துகின்றனர்.
நம் தமிழ்நாட்டில் ??????????
ஒரே ஒரு கட்சி தலைவர்?
நாடு முழுவதும் சுற்றுகிறார்கள்.
ஒரு நடிகைக்கு அனைவரும் நேரில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
திருமண விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
எனக்கு நானே
மற்றம் பற்றம்
என முழங்குகிறார்கள்.
ஏன் ?
ஏன் ???????
பேருக்கு ஓர் அமைச்சர்.
10 லட்ச ரூபாயை அந்த இறந்த உடலின் மேல்( ஒரு 10 கேமராக்கள் படம் எடுக்க )கொடுத்து விட்டால் முடிந்து விட்டது.
கர்நாடக முதல்வர் 6 ஏக்கர் நிலம் ,அரசு வேலை ,பண உதவி என அனைத்தையும் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பின் தருகிறார்.
ஒரு ATM ல் தன மாநில பெண் தாக்கப் பட்டாள் என்றவுடன் அங்கே விரைகிறார்..அம்மாநில  முதல்வர்.93 வயதில் தன் சொந்த ஊருக்கு சென்றவர்...
மாநிலம் முழுதம் சூறாவளி சுற்று பயணம் செய்த அனைத்து
  கட்சியினரும் சென்றிருக்கலாம்.
ஆதங்கம் தாங்கவில்லை.
கார்த்திக் அம்மா

2016/02/13

மகாமகம்:
இன்றிலிருந்து 
1000 கொலைகள் செய்யலாம்.
1000  பெண்களை கற்பழிக்கலாம்.
1000 குழந்தைகளை கடத்தி கைகால் அறுத்து பிச்சை எடுக்க விடலாம்
இன்னும் என்ன என்ன பாவங்கள் உள்ளதோ அத்தனையும் செய்யலாம்.
22  தேதிக்குள்.
அப்புறம்?????????
22 தேதி மகாமகம் அன்று குளத்தில் புனித நீராடி விடலாம்.
பாவங்கள் அனைத்தும் போய்விடும்.
சில ஜன்மங்கள் பாவம் என்றால் என்ன (how do you define it ?) என்று கேட்கின்றன.
யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பாவங்கள் போய்விடும் என்று அந்த நாளில் ஒரு 10 லட்சம் பேர் நீராடப் போகிறார்கள். அப்படிஎன்றால் அந்த 10 லட்சம் பேர் தாங்கள் பாவம் செய்துள்ளதாக ஒத்துக் கொள்கிறார்கள்.
என்னவோ ஒரே குழப்பமாக இருக்கிறதே.
confused
karthik amma
இது செய்தி :
இது செய்தியா ?????????


தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதல்வராக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர்: புகைப்படத்தை வெளியிட்டார் மனைவி



VIDEO : Jason Wu shows latest collection at New York Fashion Week
காடையாம்பட்டி: மருத்துவ கல்லூரி முதல்வராக வேண்டும் என்பதற்காக, வீட்டில்  நிர்வாண பூஜையில் ஈடுபட்டதோடு, மனைவிக்கும் டார்ச்சர் கொடுத்ததாக தர்மபுரி  மருத்துவ கல்லூரி பேராசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.தர்மபுரி அரசு மருத்துவ  கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அபிஷேக். (பெயர்  மாற்றப்பட்டுள்ளது). இவர், உடற்கூறு இயக்கவியல் துறைத்தலைவராக உள்ளார்.  இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் கடந்த 2 ஆண்டுக்கு முன், சேலம்  மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த, கணவனை இழந்த இளம்பெண்ணை  இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னை கணவர் தாக்கியதாக கூறி, ஓமலூர் அரசு  மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இது குறித்து  அவர் கூறியதாவது: எனது கணவர் வீட்டில் நிர்வாண பூஜை செய்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தேன். அது மட்டுமின்றி, என்னையும் நிர்வாண பூஜையில் கலந்து  கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் ஒப்புக்கொள்ளாததால் தகராறில் ஈடுபட்டார்.   இதனால் எனது தாய் வீட்டுக்கு சென்று விட்டேன். இந்நிலையில் திடீரென எனக்கு  விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். அதிர்ச்சியடைந்த நான், எனது தாய் மற்றும்  பாட்டியை அழைத்து கொண்டு தர்மபுரி சென்றேன். அப்போது, “என்னுடன் வாழ  வேண்டும் என்றால், நீயும் நிர்வாண பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன்” என கூறி,  என்னை தாக்கினார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் ஆக  வேண்டும் என்பதற்காக  நிர்வாண பூஜை செய்து வருகிறார். இது தொடர்பாக  போலீசில் புகார் அளிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். மேலும் அந்த பெண்,  தனது கணவர் நிர்வாணமாக பூஜை செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை  வெளியிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.......              ...................         ..................
கொடுமைடா இதெல்லாம்.
************
இவனெல்லாம் அறுவை ஆபரேஷன் செய்யும்போது என்ன செய்வார் .
கொடுமை.
கலாகார்த்திக் 
கார்த்திக் அம்மா.

2016/02/10

HANUMANTHAPPAA:
Today my whole day will be for praying Hanumanthappa the miracle survivor of Siachan .Earnest prayers. If there is a god so far he hadn't answered any of my prayers. Hope he grants atleast this prayer.
AND
Hats off to our ARMY and Govt for having taken such mountainous efforts to save the soldiers.
after all soldiers தானே என்று விட்டு விடாமல் அவர்களை தேடுவதற்கு இவ்வளவு முயற்சி செய்த அனைவருக்கும் என் வணக்கங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக் 

2016/01/28

மீள் பதிவு 

I AM MAD

நான் ஒரு பைத்தியம்
எனக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றார்கள்.ஆம் . நான் ஒரு பைத்தியம்தான்.யார்தான் பைத்தியம் இல்லை? விஜய் என்ற நடிகர் கல்யாணம் செய்தபோது அழுதவர்கள் பைத்தியம் இல்லையா? குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்கள் பைத்தியம் இல்லையா?சந்த்ரமுகி படம் அமெரிக்காவில் திரையிடப் பட்டபோது பட்டாசு வெடித்து அமர்க்களம் பண்ணிய எண்ணற்ற படித்தவர்கள் பைத்தியம் இல்லையா?
னான் ரஜினி பைத்தியம், நான் கமல் பைத்தியம், நான் அசின் பைத்தியம் என்று சொல்லிக் கொள்வதில் இவர்கள் எல்லாம் பெருமைப் படும் பொழுது
இவர்களில் எந்த வகையிலும் குறைந்து விடாத,எனக்கே எனக்கென வாழ்ந்து , என்னிடம் அபரிமிதமான அன்பை பொழிந்த என் செல்லக் கண்மனியின் பைத்தியம் நான் என்று சொல்லிக் கொள்வதில் நானும் அளவு கடந்த பெருமை கொள்கிறேன் Yes
I AM PROUD to say that
I AM MAD
KARTHIK AMMA

my tiger

My Tiger

Last year,this same day,i.e,15.08.2005,my younger brother and his family,with my mom, came to bangalore,to stay in my house and enjoy two days holiday.Karthik and i took them to Bannargatta,the Lion safari.when we reached there,to our dismay we found a huge crowd.We were waiting for the tickets, but it was said that due to lack of vehicles tickets would not be issued and the people were requested to return.Most were disappointed.But I wasn't.I told my brother and his family "oh,i have a TIGER at home and I see the tiger everyday."
Do you understand? Yes.It's my KARTHIK. Hearing this he was beaming with happiness and his smile and the expression of enjoying his mother's admiration was so wonderful which made my relatives wonder at us.It was beyond their imagination that a mother and son could be so intimate and mutual admiration and respect.
The happy rememberances.
karthik amma

2016/01/26

இது என்ன தற்கொலை வாரமா?
சாலை பாதுகாப்பு வாரம்....நீர் சேமிப்பு வாரம் போல் பல வாரங்கள் உண்டு.
ஆனால் இந்த வாரம் தற்கொலை வாரமா?
ஆனால் இந்த வாரம் மட்டும் 3 svs கல்லூரி மாணவிகள்
அண்ணா பல்கலை மாணவி
நர்சிங் கல்லூரி மாணவி
கலைக் கல்லூரி மாணவி
என வரிசை கட்டுகின்றனர்
******
மனம் வேதனைப் படுகிறது.
பெற்றோருக்கு தன குழந்தைகள் உயிர்.
இப்படி அவசரப் பட்டு உயிரை விடாதீர்கள்.
வாழ எத்தனையோ வழி உண்டு.
இந்த படிப்பு இல்லையென்றால் வேறு ஒன்று.
படிப்பே இல்லாமல் வாழ்ந்து சாதித்து காட்டியவர்கள் எத்தனை பேர்.
இப்படி தவறான முடிவிற்கு போகாதீர்கள்.
அன்புடன்,
கார்த்திக்  அம்மா

2016/01/25

மாணவிகள் தற்கொலை:
3 மாணவிகள் தங்கள் கைகளை பின்புறம் சேர்த்து கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து விட்டனர் என்றுதான் முதல் செய்தி வந்தது. அதன் பின் அந்த விஷயம் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டது.
naturopathy  இயற்கை வைத்தியம் படிக்கும் மாணவிகள் அல்லது சித்த வைத்தியம் படிக்கும் மாணவிகளா என்பதையும் ஊடகங்கள் மாற்றி மாற்றி சொல்கின்றன.
பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன.
ஒரு கல்லூரியில் சேர்க்கும் முன் அவர்கள் உண்மையான அனுமதி பெற்றுள்ளார்களா  என்று பார்க்க வேண்டும் என்று சொல்கின்றனர்.கல்லூரி காட்டும் அனுமதி உத்தரவு போலி என்று எப்படி கண்டு பிடிப்பது?
இந்த கல்லூரியில் ஏற்கனவே ஓரின சேர்க்கை விவகாரம் என்று 2 ஆண்டுகளுக்கு  முன்பு வதந்தி கிளம்பி அமுங்கியது.
அதிகாரிகள் மெத்தனமா?
எது காரணம்?
*****
இன்று அண்ணா பல்கலையில் ஒரு மாணவி தற்கொலை :
இதையும் ஒரு தொலைக் காட்சி மாணவி தவறி விழுந்து இறந்தாள் என்றுதான் செய்தி சொல்லியது.
**
விடையில்லா கேள்விகள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2016/01/24

பணம் எதையும் சாதிக்குமா?

ரோஹித் வேமுலா வின் பெற்றோருக்கு என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் அவர்களுக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
6 லட்ச ரூபாய் கொடுக்கிறது அரசு.
அவரின் உயிரின் விலை கேவலம் 6 லட்சம்தானா ?
அவர் படித்து முடித்து வேலையில் சேர்ந்திருந்தால் எவ்வளவு சம்பாதித்திருப்பார் ?
இதையெல்லாம் தாண்டி  ஒன்று இருக்கிறது.
 நேரில் வந்து '' '' அம்மா '' '' என்று அழைக்கும் அந்த ஒரு வார்த்தையை கேட்பதற்கு அந்த தாய்  எவ்வளவையும் கொடுப்பாள்.
எல்லோரையும் பணத்தாலேயே விலைக்கு வாங்கிவிட முடியும் என்ற எண்ணத்தை உடைத்த அந்த பெற்றோருக்கு என் வந்தனம்.
ஏழை என்றால் அவ்வளவு இளக்காரம்.!!!!!
பாராட்டுகள்.
****     *****
இப்படியும் ஒரு கேனம் .(ignorance...innocence ....???)

இது என் கல்யாண போட்டோ .தாலியை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு மணப்பெண் .என்ன பிறவியோ?
ஒரு குழந்தை உள்ளத்திற்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை மிக மிக அதிகம்.
என் கார்த்தி மகன் என்று வருவான்?
இந்த குழந்தைக்கு, தாயாய் இருந்தான்.
தாயை இழந்து வாடும்
 கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்






 

2016/01/07

THE  BIGGEST EVE TEASING :
என்னப்பா,கேள்வி கேட்க ஆளே இல்லையா?
REST எடுக்க போனா போன இடத்துல நம்ம city girls அ பேட்ட ரௌடிங்க ,மண்ணின் மைந்தர்கள் துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்தால் எப்படிங்க?
யானைகள் முகாம் பற்றிதான் சொல்கிறேன்.போன வருடமே லோக்கல் தாதாக்கள் பெண்களை (பெண் யானைகளை )பிராக்கெட் போட  பார்த்ததால் இந்த வருடம் இரட்டை மின் வேலி  அமைத்தனர் அதிகாரிகள்.
ஆனால் எப்படியோ டிமிக்கி கொடுத்துவிட்டு ,இரண்டு காட்டு  (ஆண்  ) யானைகள் முகாமுக்குள் நுழைந்து நம் கோவில் யானைகளை மடக்க முயற்சித்தன.தொலை காட்சியில் நேரடி ஒளிபரப்பாக பார்த்தேன்.அங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா.????????????
பாகன்களே உங்கள் யானைகளை பத்திரமான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்று மைக்கில் எச்சரிக்கை செய்யவும், பாகன்கள் தங்கள் செல்லங்களை அவசர அவசரமாக ஓட்டிக் கொண்டு சென்றதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பேட்டை ரௌடிகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் துரத்தினர்.
எதற்கும் சம்பந்தப் பட்டோர் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும்.
நாளைக்கே நாலு லாரி நிறைய அடியாட்களுடனும், மாலையுடனும் வந்து கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டலாம்.
வாழ்க காதல் (அ )நட்பு.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்