About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/06/23

திருந்தவே மாட்டார்கள்:
உத்தரகாண்ட் மாநிலம் :
இப்படி ஒரு கொடுமை ,மக்களின் உயிர் போராட்டம்.அப்பப்பா ....டி .வி .யில் பார்க்க பார்க்க  மனம் பதைபதைத்து  போகிறது.
ஆனால் பல கேள்விகள்.
அங்கே போய்தான் சாமி கும்பிட வேண்டுமா ?
வீட்டிலிருந்து கும்பிட்டால் சாமி ( அப்படியென்று ஒன்று இருந்தால் ) வரம் கொடுக்காதா
தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத சாமி பக்தர்களை எப்படி காப்பாற்றும்?
பக்தர்கள் ..என்ன வகையான பக்தி ?...ஒரு உல்லாச பயணத்தை கடவுளின் பெயரால் அனுபவிக்கிறார்கள்.
அதுவும் ஒரு பிரபலம் இமயமலை செல்வதால் எல்லோரும் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் .
அதே பிரபலம்தான்  திருவண்ணாமலை  கிரி வலத்திற்கும் காரணம்.
அதே போல்தான் பிரதோஷம் .ஒரு டி .வி தொடரில் கதாநாயகி பிரதோஷ விரதம் கடைபிடிப்பது போல் காட்டினார்கள் .அவ்வளவுதான்.இன்று பிரதோஷம் அன்று கோவில் தள்ளாடுகிறது.
அதற்கு மேல் டி .வி யில் வரும் ஜோதிடர்கள்.இந்த கோவிலுக்கு போனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் நீங்கள்தான்.
அடுத்த கோவிலுக்கு போனால்  நீங்கள்தான் அமெரிக்காவின் அடுத்த president என்ற ரேஞ்சுக்கு ஏத்தி விடுகிறார்கள்.
காசி கயா  போனால் முக்தி கிடைக்கும் என்றால்  அங்கு பிறந்தவர்கள் எல்லாம் முக்தி அடைய வேண்டும் (முக்தி  என்றால் என்ன ?  அதை அடைந்தவர்கள் யாராவது வந்து சொன்னார்களா ?)
மக்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொன்னவை எல்லாம் வியாபாரமாக்கி விட்டார்கள்.
இதையெல்லாம் விட கொடுமை.
POLITICS :
அட ஒரு உயிரை காப்பாற்ற 10 பேர் போராடிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கோவில் கட்ட உதவுகிறேன் என்று திருவாய் மலர்ந்திருக்கிறது ஒரு ****.....********** எத்தனை வார்த்தைகளினாலும் திட்டலாம் என்று ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது.முதலில் உயிர்களை காப்பாற்றுங்கள்.அவர்கள் தமிழர்களா, குஜராத்திகளா ,கன்னடிகர்களா என்பதில்லை. அவர்கள் மனிதர்கள் .
காப்பாற்றியவர்கலுக்கு  உணவு, வீடு கொடுங்கள்.
அப்புறம் ,அவர்களுக்கு சம்பாதிக்க வேலை கொடுங்கள். அதற்கு ஒரு தொழிற்சாலை கட்டுங்கள்.இதெல்லாம் முடிந்த பிறகு கோவில் கட்டுவது பற்றி யோசியுங்கள்.
DONATION 
இது அடுத்த விஷயம்.இந்த மக்களை காப்பாற்ற போய் உயிரிழந்த அந்த வீரர்களின் குடும்பத்திற்கு உதவுவது மிக மிக முக்கிய விஷயம்..
அவர்களின் குடும்ப இருப்பிடம் அறிந்து அங்கு செல்ல யாராவது முன்வந்தால் அவர்களுடன் சென்று உதவ நானும் தயார்.
ஒரு அதிகாரி சொன்னார் .
'' பணம் நிறைய இருக்கிறது.ஆனால் பணம் இப்போது எதுவும் செய்ய முடியாது.''
எவ்வளவு உண்மையான  வார்த்தைகள்.
மனிதர்கள் உணர வேண்டிய விஷயம்.
நம் முப்படை வீரர்களுக்கு நன்றி சொல்லாமல் பதிவை முடித்தால் 100 கோடி பாவம் வந்து சேரும்.நன்றி.நன்றி.சகோதரர்களே.
கார்த்திக+ அம்மா 

2013/06/19

Today there was a news about +2 students not getting hall ticket for the arrears exam  and are not able to write their exam.
 எனக்கு ஒரு பழைய நிகழ்ச்சி நினைவு வந்தது.
When I  was working in Metturdam ,இதே போல் ஒரு நிகழ்வு.
என் தலைமையாசிரியருக்கு என் மேல் ஒரு நெருடல் இருந்தது.என்னடா ,இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு திறமையாக இருக்கிறது இந்த பெண் .எந்த வேலை கொடுத்தாலும் perfect ஆக முடித்துவிடுகிறதே .யானை எப்போது சறுக்கும் என்று எதிர்பார்த்து ஏதோதோ முடிக்க முடியாத tasks ,(tough tasks ) கொடுப்பார்.ஆனால் எனக்கு சூது தெரியாது.எனக்கு பின்னால் திரை மறைவில் நடக்கும் சதிகள் பற்றி தெரியாது.தெரிந்து கொள்ளவும் விரும்பியிருக்க மாட்டேன்.சித்தம் போக்கு சிவன் போக்கு என்று நான் பாட்டிற்கு கொடுத்த வேலைகளை செய்வேன்.
இப்படியாகத்தானே
.... .....
ஒரு துணைத் தேர்விற்கு என்னை முதன்மை கண்காநிப்பாளாராக நியமித்தார்.வழக்கம்போல் காலையில் பள்ளிக்கு வந்த என் கையில் ஒரு file கொடுத்து ,'' நீங்கள் இந்த தேர்வை நடத்துங்கள் '' என்றார்.
எப்போதும் போல் நான் இந்த பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன்.அரங்கிற்கு வந்து பார்த்த போது 120 மாணவ மாணவிகள்  நின்று கொண்டிருந்தனர்.அவர்களுக்கு அறை எதுவும் ஒதுக்கப்படவில்லை.தேர்வு எண்களுக்குண்டான அறை ,bench desk ல் அவர்கள் தேர்வு எண்  எழுதப் பட்டிருக்க வேண்டும். இது எதுவுமே செய்யவில்லை என் தலைமை  ஆசிரியர்.
.....
இந்த மாணவர்களுக்கு hall ticket  வரவில்லை.இவ்வளவு குழப்பங்கள் இருந்ததால் most junior ஆன என்னிடம் இந்த பொறுப்பை கொடுத்திருக்கிறார்.பாதி மாணவிகள் அழுகையோ அழுகை..நீங்கள் தேர்வு எழுத முடியாது என்று அங்கு ஒருவர் அந்த மாணவ, மாணவிகளை மிரட்டிக் கொண்டிருந்தார்..நான் அவர்களை( 4 அறைகள் ) போய் உள்ளே எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காருங்கள்.ஒரு பேப்பரில் ''நான் இந்த தேர்வு எழுத வந்தேன்,hall ticket கிடைக்கவில்லை..இன்று எழுதும் தேர்விற்கு பிறகு அரசு எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுகிறோம்'' என்று எழுதிக் கொடுங்கள் ''என்று எழுதி வாங்கிக் கொண்டு கேள்வித் தாள்,விடைத்தாள் கொடுத்து,''தைரியமாக எழுதுங்கள் '' என்று தைரியமளித்து அவர்களும் உற்சாகமாகி தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர்.
.....அப்போது Joint Director வந்தார்.என்னை பார்த்து குழம்பி ''நீங்கள் இங்கு என்ன செய்கிறீர்கள் ?''என்றார்.
Sir ,I  am the chief ,for the arrears exam ''
அவர் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்று விட்டார்.இந்த பெண் (ஒரு மாணவி போல்தான் இருப்பேன்.அது பற்றி சுவையான நிகழ்ச்சி பற்றி இன்னொரு பதிவில் சொல்கிறேன்.).உள்ளே சென்றார்..தேர்வு சிறப்பாக குழப்பம் எதுவும் இல்லாமல் நடந்து கொண்டிருந்தது..ஏதோதோ குழப்பங்களை எதிர்பார்த்து வந்தவர் தேர்வு அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்து கொண்டிருந்ததை பார்த்து வாய் பேசாமல் சென்று விட்டார்.
நான் என்ன செய்தேன் என்பதே எனக்கு தெரியாது.இந்த hall ticket வராதது பற்றி யாரிடமும் எதுவும் கேட்கவில்லை.மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.ஒரு வாய்ப்பு தவறினாலும் வாழ்க்கை பாதையே மாறிவிடக் கூடும்.அதனால் அவர்களை எழுத வைத்து விட்டேன்.என் தலைமை ஆசிரியர்தான் பாவம்.யானை எப்போதுடா சறுக்கும் ,பட்டாசு வெடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.என் மேல் department action வரும் .மாட்டினாயா மகளே என்று குதூகலித்துக் கொண்டிருந்தவருக்கு ,பாவம்.
அடுத்த நாள் சக ஆசிரியைகள் பொறாமையுடன்  கிண்டல்.''இந்த குழந்தையை விட்டால் வேறு யாரும்  தேர்வு நடத்த மாட்டார்களா ?''
வெகு நாட்களுக்கு அப்புறம்தான் தலைமை ஆசிரியரின் சதி தெரிந்தது.பாஆ ஆ ஆ வம் .
பி.கு.
யானை சறுக்கவில்லை தூள் தூளாகி விட்டது.
...... ....
தான் இறந்தாலும் தன மகனை காப்பாற்ற போராடும் இந்த தந்தையின் முன் நான் மனம் வெதும்பி நிற்கிறேன்.
கார்த்திக் அம்மா 

2013/06/18

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
   ஒருவர் எழுதியிருந்தார் ..பிரகாஷ்ராஜ் ஏதோ கடமைக்கு செய்வது போல் இருக்கிறது.முகத்தை கடுமையாக வைத்து கொள்கிறார்....
......
நானே உலக அழகன் .எல்லோரும் ( கல்யாணமான 45 வயது ,16 வயது  என )வயது வித்தியாசமில்லாமல் ,கணவன் பார்த்துக் கொண்டிருக்கவே உன்னை ஒரு முறையாவது கட்டி பிடிக்க வேண்டும் என்று ஒரு பெண் உருக ,இப்படி கலாச்சாரம் கண்றாவியாக இருந்த நிகழ்ச்சிக்கு ,இவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்.அந்த hot seat ல் ஏறுவதற்கு உதவி செய்வது போல் நடிப்பு இல்லை இவரிடம்.
அமிதாப் எப்படி செய்தார்?
பி.ராஜ் சரியாகத்தான் செய்கிறார்.ஆரம்பத்தில் அவருடைய வில்லன் image அவருக்கு பின்னால் பெரிய மேகமாக பயமுறுத்தியது.அனால் இப்போது பழகி ஒரு நல்ல குடும்ப நண்பருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு  ஏற்படுகிறது.

2013/06/17

காணாமல் போய்விட்ட English Teacher :
வீட்டை காலி செய்யும் போது வேண்டாம் என்று தூக்கி போடும் பொருட்களில் முதல் இடம் பிடிப்பது புத்தகங்கள்தான் .எங்கள் பக்கத்து வீட்டு அன்பர் வீடு மாற்றினார்.அப்போது பல books  என் flat watchman  கையில் இருந்தது.நான் ஒரு book  பைத்தியம் .நானும்  கார்த்தியும் எங்கு bookstall பார்த்தாலும் உள்ளே போய்விடுவோம்.
அதே போல் எங்காவது ஏதாவது சிறிய தாள் anything printed  பொறுக்குவதுதான் ( சரியான பொறுக்கி )என் வேலை.அப்படியிருக்க watchman கையில் பார்த்தால்  விடுவேனா? நின்று விட்டேன்.  '' ஏதாவது book இருக்கா ,நான் படிக்கிற மாதிரி ?'' என்று கேட்டேன் .
அவர் சொன்னார் ,'' அதெல்லாம் இங்க்ளிஷ்ல இருக்கு ,நீ படிக்க மாட்ட ''
The Great English Teacher கலாவதிதான் காணாமல் போய்விட்டாளே . 

2013/06/10

Tit  Bits :
சோம்பேறித் தனமா ,lack  of  interest எது என தெரியவில்லை ,பதிவு எழுத விஷயம் இல்லையா ,
எழுதும் விஷயங்கள் படிக்கப் படுகிறதா
எதையாவது எழுதப் போய்  யாராவது வழக்கு போட்டு விடுவார்களா
என்றெல்லாம் யோசனை.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையில் எதிலும் ஆர்வம் ,பிடிப்பு இல்லாத ஒரு மன நிலை.
  கார்த்தி கண்ணுக்குள் களி நடனம் ஆடிக் கொண்டேயிருக்கிறான்.வேதனை குறையவில்லை.வருத்தம் மறையவில்லை.
......     .......
பிரதமர் மன்மோகன் சிங் கடந்த 9 வருடங்களில் வெளிநாட்டுச்சுற்றுப்பயணங்களுக்காக  ரூ.642 கோடி செலவழித்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது
 இவர் மேல் எனக்கிருந்த மதிப்பு போயே போய் விட்டது.The instance  of  his adamance of  not accepting to fire out  the tainted  ministers increased the bitterness .இந்த முறை சைனா சென்ற போதும் அவர் மனைவி கையசைத்த பிறகுதான் நகர்கிறார்.  ஒரு பேட்டியில்  என் மனைவிதான்  என்னுடைய பிரதான adviser , அவர் சொல்படிதான் நான்  நடக்கிறேன் என்கிறார்.
வெறுத்து விட்டது .
....  .......
BANKS :
இவர்கள் கதை அதை விட பெரியது.
லீனா+காதலன்  சொன்ன நபர்களுக்கு கோடி கோடியாய்  கொடுத்திருக்கிறார்கள். நானோ , நீங்களோ போய்  கேட்டு பாருங்கள்.100 முறை அலைய வைப்பார்கள். கொடுத்த அடுத்த நாளில் இருந்து எப்போது திருப்பி செலுத்துவீர்கள் என்று நச்சரிப்பார்கள்.Fine  போடுவார்கள்.
மல்லையாவிற்கு கொடுத்தீர்களே என்று ஒரு ஆங்கில தொலை காட்சியில்  கேட்டால் அது எங்கள் வங்கி சொத்து மதிப்பில் 1% என்கிறார். அதனால் வங்கிக்கு பெர்ய பாதிப்பில்லை என்கிறார்.
நம் F .D க்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் அதே வங்கி இந்த பெரிய corporate களிடம் மண்டியிடுகின்றன.
...... ......
பிரதான ,முக்கிய  முக்கிய பிரச்சினை  காய் கறி  (காய் சரி ...அது என்ன கறி ?Its curry ,தங்க்லீஷ் )
காய் விலை.  
காய் கடைக்கு போய் விட்டு வீட்டிற்கு திரும்பும் போது பயமாய் இருக்கிறது.மக்கள் பையை வெறித்து வெறித்து பார்க்கிறார்கள். இப்போது நகையை திருடுவதை விட காய் பையை பறித்துக்கொண்டு  ஓடுவார்கள் என நினைக்கிறேன்.அப்படியே காய் பையை பத்திரமாக கொண்டு வந்து விட்டால் ,ஒரே உடம்பு வலி  '' ''திருஷ்டி '' ''
ஏன் என்றால் நான் சின்ன (சாம்பார் ) வெங்காயம் ஒரு கிலோ ,தக்காளி ஒரு கிலோ வாங்கி வந்தேன்.
ha ,only millionairess  can buy .
இதற்கு தீர்வு என்ன ?
நம் விவசாயிகளின் சோம்பேறித்தனம்தான். நானும் ஒரு விவசாயி. என் கிராமத்தில் நான் சொல்கிறேன்.''வருடம் முழுதும் விளையும் தக்காளி போன்ற செடிகளை நடலாம்   . புது techniques  பயன்படுத்தலாம் .Compound farming  செய்யலாம் '' 
எது சொன்னாலும் கேட்பதில்லை.ஒரு எள் ,ஒரு நெல் என்று பழைய நடைமுறை தான் . தண்ணீர் இல்லை என்று ஒரு ஒப்பாரி. இருக்கும் நீரில் செய்ய முடிந்தவற்றை செய்ய முயற்சி செய்வதில்லை.சுலபமாக  பணம் வர வேண்டும். 
இப்போது பக்கத்து மாநிலங்களில் இருந்து வாங்குகிறோம் .அப்புறம் பக்கத்து நாடுகளில் இருந்து வாங்குவோம்.
தமிழ் நாடுதான் பணக்கார நாடாயிற்றே.
வாழ்க 

2013/06/01

1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)

2013/05/17

வலையுலகில்  '' பட்டாப்பட்டி '' என்ற வலைபதிவர் சென்ற வாரம் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வலை உலகில் பலருக்கு வருத்தத்தை அளித்தது. நான் அவரின் பதிவுகளை அதிகம் படிக்கவில்லை. ஏன்  என்று தெரியவில்லை.
அவரின் மறைவு பற்றிய பதிவில் ஒரு பதிவர் ஒரு  விஷயம் பற்றி மிகவும் வருந்தியிருந்தார்.
அங்கு வந்திருந்த ஒருவர், ''இதனால்தான்  யாரும் தண்ணி அடிக்க கூடாதென்று சொல்வது '' என்று மிக மிக பெரிய அறிவுரையை வழங்கியுள்ளார்.
பட்டா பட்டியின் நண்பர் சொல்கிறார்,
பட்டாப்பட்டி மது அருந்துபவரும் அல்ல, சிகரெட் கூட பிடிக்கமாட்டார்.அப்படியிருக்க இவர் அப்படி சொன்னது அங்கிருந்த அனைவரின் மனதையும் பாதித்தது.
.....      ....
ஒருவரின் இழப்பின் போது அடுத்தவர்கள் எல்லாம் பெர்ய உத்தமர்கள் ஆகி கொடுக்கும் அறிவுரையும் ,ஆலோசனையும் இருக்கிறதே.
அப்பப்பா ,
எதோ விதி ,
இழப்பு நேர்ந்து விடுகிறது.அதுதான் நேரம் .இவர்களுக்கெல்லாம்.
மொடாக் குடியர்கள் எல்லாம் 100 வயது வாழ்வதை பார்க்கிறோம்.
இந்த பட்டாப்பட்டி ஒரு கடையில் பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது ,கீழே விழுந்த பொருளை எடுக்க குனிந்த போது  மாரடைப்பு ஏற்பட்டு அந்த நிமிடமே உயிர் பிரிந்திருக்கிறது.
இதை விதி என்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியாது.
.....  .....
கார்த்தியின் விபத்தின் போதும் இப்படித்தான் ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.
ஹெல்மெட் போடவில்லையா '' என்ற கேள்வி.
வேகமாக போனான் '' என்ற குற்றசாட்டு.
மொபைல் பேசிக் கொண்டே வண்டி ஓட்டினான் '' என்றார்கள்.
நீங்கள் என்ன பொறுப்பில்லாத அம்மா ,அவனை ஹெல்மெட் இல்லாமல் எப்படி அவனை அனுப்பினீர்கள் '' என்றார்கள்.
அவன் விபத்திற்கு முதல்  நாள் வரை ''  கார்த்தி  போல் உண்டா என்று அவனை வானளாவாக புகழ்ந்தவர்கள், ஒரு நிமிடத்தில் அவனை பற்றி குறை கூறியது அவன் இழப்பை விட பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு.
அன்பர்களே,
நீங்கள் ஆறுதலாக  இல்லையென்றாலும் பரவாயில்லை. இப்படி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள்.
உங்களுக்கு கோடி நமஸ்காரம்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா 

2013/05/15

செய்தி 
பு துச்சேரி இளங்கோ நகரில் தற்போது குடியிருக்கும் மத்திய இணையமைச்சர் வே.நாராயணசாமியின்  மனைவி கலைச்செல்வி (53).
 இவர், விழுப்புரம் மாவட்டம் மொரட்டாண்டி கோயிலுக்குச் சென்றுவிட்டு, உறவினர் சதீஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முருகா திரையரங்கு சிக்னல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தும்போது, பின்னால் வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், நிலைத்தடுமாறி கீழே விழுந்த கலைச்செல்விக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆட்டோ ஓட்டுநர் மதிவாணனை போலீஸார் கைது செய்தனர். 

 அட இப்படியும் இருக்கின்றனரா?
ஒரு கவுன்சிலர் மனைவி கூட 10(.அ )15 லட்ச ரூபாய் காரில் போகும்போது ,...ஒரு மத்திய அமைச்சரின் மனைவி ...இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்தாரா?
இது  உண்மையிலேயே வியப்பான செய்திதான்.
அவர் நலம் பெற வேண்டுகிறேன்.
கலாகார்த்திக்
Jeevan's comment to the post.
 You know, NarayanaSamy’s own brother family is renting in my grandmother’s house in Thiruvanmyuir. My granny used to say that no one would believe if they say he is a own brother of central minister. They are very simple citizens of Pondicherry.
ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.திரு  நாராயணசாமி அமைச்சரை நிறைய பேர் கிண்டல் செய்து பார்த்திருக்கிறேன். உண்மையிலேயே என் மதிப்பில் பல மடங்கு உயர்ந்து விட்டார்.
கலாகார்த்திக்  

2013/05/08

Karnataka  assembly polls 2013
Congress has won a good victory. Poor Rahul, what a lot of ironical comments did he face. Good.Patience wins.
When I was a Govt school teacher , I used to have tough arguments with the matriculation school teachers. They will be very proud of getting good results.I would challenge ''give your students to us, and take our students ( a kind of bartering ) , and see the results. You can give 100% result with your students but I can make them get 1100/1200 .Try and prove that you can make all our students get a pass.
எங்கள் அரசு பள்ளி மாணவர்கள் கீழ் ,கீழ் தட்டு மாணவர்கள். படிப்பறிவில்லாத பெற்றோர்கள். ''நாளைக்கு exam fee கட்டு என்று சொன்னால் அடுத்த நாள் அந்த மாணவன் பள்ளிக்கு வர மாட்டான்.Absent .எங்கே அவன் என்று கேட்டால்'' Tidal Park போயிருக்கிறான் மிஸ் .''
எதற்கு என்றால் அங்கு போய் window cleaning ,painting  போன்ற வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வந்து fees  கட்டுவான்.
Matriculation  மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. அவர்களையும் எங்கள் மாணவர்களையும் compare செய்வது எவ்வளவு சரியில்லையோ
அவ்வளவு சரியில்லை  குஜராத்தையும் மற்ற மாநிலங்களையும் ஒப்பிடுவது.அந்த மாநில முதல்வரை வடகிழக்கு (மணிப்பூர் etc ) மாநிலங்களுக்கு அனுப்புங்கள். அங்கேயும் இதே வளர்ச்சியை அவர் காட்டினால் உண்மையிலேயே மிக சிறந்த முதல்வர், அடுத்து பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று சொல்லலாம்.
எதற்கு இத்தனை கதை என்ற யோசனையா?
பின்னே என்ன,
*** மஸ்தான் வந்து விட்டார் பிரசாரத்திற்கு,ஆஹா ,ஓஹோ என்றார்கள் .இரண்டாம் முறையும் வர வேண்டும் என்று கெஞ்சியதாகவும்  செய்திகள் வந்தன.
அவர் வேறு ராகுல் கைக்குழந்தை என்றெல்லாம் கேலி பேசினார்
    இப்போது என்ன நடந்தது?
இது பற்றி :

// //தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், ஆளுகிற பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. நாளைய மத்திய அரசு எங்களது தான் என்று மார்தட்டிய பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. மோடிமஸ்தான் வேலைகள் கர்நாடகத்தில் எடுபடவில்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையப் போவதற்கு கட்டியம் கூறுகிற வகையில் கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது.
மத்திய அமைச்சர்கள் மீதும், பாரத பிரதமர் மீதும் சேற்றை அள்ளி வீசி பாராளுமன்றத்தை நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு இதுதான். கர்நாடக மாநிலத்தின் இந்த தீர்ப்பு 2014-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு அளித்த தீர்ப்பாகவே கருதுகிறோம்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டு, நாடாளுமன்றத்தை முடக்குவதும், போராட்டங்களை நடத்துவதும், காங்கிரஸ் அரசைகாயப்படுத்துவதையும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை பாரதிய ஜனதாகட்சியும், மற்ற கட்சிகளும் இனியாவது உணர வேண்டும். கர்நாடக காங்கிரஸ் வெற்றி என்பது தமிழகத்திலும் 'நம்மால் முடியும்" என்கிற நம்பிக்கை விதையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் நண்பர்கள் மனதில் விதைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடின உழைப்பும், ஒற்றுமையும் இருந்தால் வெற்றிக் கனியை பறிக்கமுடியும் என்பதற்கு கர்நாடக தேர்தல் நமக்கு ஒரு சான்றாக இருக்கட்டும். இந்த வெற்றிக்குவித்திட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்திக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தவெற்றிக்கு மிகக் கடுமையாக உழைத்த கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தனது அறிக்கையில் கூறியுள்ளார்.// //

பிஜேபி பாராளுமன்றத்தை முடக்குவதே வெற்றி என நினைத்து கொள்கிறது.ஒரு நாளும் பாராளுமன்றத்தை நடத்த விட போவதில்லை என சூளுரை வேறு.இதுதான் வெற்றியா ?மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். இனியாவது திருந்துங்கள்.

...........110 விதி ..........என்ற வார்த்தை தலைக்குள்  நடனமாடிக் கொண்டேயிருக்கிறது .
.......
ராமதாசை பின்னின்று இயக்கி   இத்தனை பிரசினைகளுக்கும் காரணமான 'மனி 'தரை அகற்ற வேண்டும் என்று அந்த கட்சிக்குள் ஒரு கூட்டம் புலம்புவதாக கேள்வி.
.........
மழை இல்லை, தண்ணீர் இல்லை. என் தென்னை மரங்களெல்லாம் காய்கின்றன.எந்தெந்த  இழப்புகளுக்காக வருந்துவது?  வாழ்க்கையில் சோகங்கள் மட்டுமே என்றால், மனம்  வெதும்பி வாடிப் போகிறது 
அன்புடன்,
கார்த்திக்+அம்மா 
.


 

2013/05/06

சென்னை :
அட சென்னையே சென்னைதான்.
நங்கநல்லூர் =  நங்கை நல்லூர் 
தாடண்டர் நகர் = Toad Hunter  nagar
பல்லாவரம்  = பல்லவ புரம்
LIST பெரிதாக இருக்கிறது.இது சின்ன sample தான்.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி அவ்வப்போது பார்ப்பதுண்டு. இ ன்று 06/05 பார்க்க நேர்ந்தது. வழக்கமான கதைதான். ஒரு பெண் ''காதலித்தேன், உறவு கொண்டேன் , அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் ''என்கிறாள்
அவள் காதலனுக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் நடந்து விட்டது.இப்போது அவனை பழி வாங்குவேன்  என்று சவால் விடுகிறாள்.
HIGH LIGHT  இதுதான்.அந்த பெண்ணின் தாய் சொல்லியதுதான்.   '' ''என் பெண்ணை ஏமாற்றிய உன்னை துண்டு துண்டாக வெட்ட வேண்டும் '' '' என்று வீராவேசமாக பேசினார். எனக்கு அதிர்ச்சியாகவும் இருந்தது .அதிசயமாகவும் இருந்தது. தன பெண் தவறு செய்ததாகவே அந்த அம்மாவுக்கு தோன்றவேயில்லை. தன பெண் கல்யாணத்திற்கு முன்பே ஒருவனுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டது, அதுவும் முஸ்லிம் +இந்து   இது எதுவுமே தெரியாத மாதிரி பேசியது அந்த அம்மா. தன் மகளை கல்யாணத்திற்கு முன்பே இப்படி செய்து விட்டாயே என்பது போன்ற உணர்வுகள் எதுவுமே இல்லாமல் ...மிகவும் விவரம்தான்.பையனின் தந்தை எதோ பேசி எதோ அழுதார். நடிப்பா   உண்மையா ?ஒன்றுமே புரியவில்லை.
கார்த்திக்+அம்மா 

2013/04/26

வெள்ளிக்கிழமையும்  26 ம் தேதியும் சேர்ந்த நாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் என் மனதில் 1000 லிட்டர் பெட்ரோலை  ஊற்றியது போல்  இருக்கிறது. தீயின் தகிப்பு தாங்க முடியவில்லை.
என் நண்பர் ,50 வயது , பைக் ஊட்டி சென்றபோது சாலையில் oil கொட்டியிருந்திருந்திருக்கிறது .அதனுடன் தண்ணீர் சேர்ந்துள்ளது .அதனால் பைக் skid ஆகி அப்படியே விழுந்து விட்டேன் .சின்ன surgery  செய்ய வேண்டி வந்தது என்றார்.
கார்த்தியின் accident  பற்றியும் இப்படி ஒரு காரணம் சொன்னார்கள்.கார்த்திக் மட்டும் ஏன் நிமிடத்தில் உயிரை இழக்க வேண்டும்?
என்னை இப்படி எரியும் தணலில் வீச வேண்டும்?
விதியா?
சதியா?
கடவுளா?
என்றும், எந்த நிமிடமும் நிற்காத கண்ணீருடன்
கலாகார்த்திக் 

2013/04/22

//புதுடெல்லி: தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் அலுவலகத்துக்கு, இந்தியன் முஜாகிதீன் அமைப்பிடம் இருந்து சமீபத்தில் மிரட்டல் கடிதங்கள் வந்தன. இது குறித்து மும்பை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பை அல்டா மவுன்ட் ரோட்டில் உள்ள முகேஷ் அம்பானியின் நவீன அடுக்கு மாடி மாளிகைக்கு(அன்டிலியா) உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் முகேஷ் அம்பானிக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு ஏஜன்சி, உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. இதை பரிசீலித்த உள்துறை அமைச்சகம், முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மத்திய ஆயுதப்படை(சிஆர்பிஎப்) பட்டாலியனிலிருந்து 28 போலீசார் கொண்ட குழுவினர், முகேஷ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அவர் மும்பை மற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்கு செல்லும் போது மத்திய ஆயதப்படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்குவர். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் முகேஷ் அம்பானி செல்லும் வாகனத்துக்கு முன்பு பைலட் வாகனமும், பின்னால் நவீன ஆயுதங்கள் ஏந்திய கமாண்டோக்களின் வாகனமும் செல்லும். தொழிலதிபர் ஒருவருக்கு மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை.//
இது இன்றைய செய்தி.
இவருக்கு இருக்கும் செல்வத்திற்கு இவர் தன் சொந்த செலவிலேயே பாதுகாப்பு செய்து கொள்ளலாம். இதில் நம் முதல்வரை பாராட்ட வேண்டும். அவரின் பூனை படை அவரின் சொந்த செலவிலேயே செய்து கொண்டார்.அம்பானிக்கு அரசு செய்யும் செலவிற்கு பதிலாக 4 borewell போட்டு கொடுத்தால் 40 விவசாயிகள் பயன் பெறுவர் .ஹும் . தனியே புலம்புதல் என்பது இதுதான்.

2013/04/17

அர்விந்த் சாமி -ஆச்சரிய சாமி :
நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி :
கமலஹாசன் பற்றி நிறைய தெரிந்திருந்தவர்களுக்கு அவரின் பதில்கள் பெரிய ஆச்சரியமல்ல.
ஆனால் அரவிந்த்சாமி இப்படி ஒரு ஆச்சரியமான ,அறிவார்ந்த நபராக இருப்பார் என்பது எதிர்பாராத ஒன்று.
Hats off .
A caution to the pro grammar :
For a question about  chess  4 options given and one is tortoise ,which should be pronounced as tartis (டார்டிஸ் ).ஆனால் டார்ட்டாய்ஸ் என்ற வார்த்தை இருந்தது.இன்னும் சற்று கவனம் கொள்ளலாமே.
 இந்த சஞ்சய் தத் ''நான் செய்தது தவறுதான்.நான் தண்டனையை அனுபவிக்கிறேன் '' என்று சொன்னவரை மக்கள் உசுப்பி விட்டு இன்று அவர் மேல் முறையீடு செய்து 4 வார கால அவகாசம் பெற்றிருக்கிறார்.கோர்ட் எல்லோருக்கும் இது போல் சலுகைகள் தருமா ?நாட்டில்  என்ன நடக்கிறது?

2013/03/31

இது கார்த்தி August  01/ 2004 ல்
வலைப் பூ ஆசிரியராக இருந்து எழுதியது.
அதை அப்படியே copy  செய்கிறேன்.
****    *****

விஜயநகரத்து இளவரசர் 'நியோ 'வருகிறார் பராக்!பராக்!!

இவ்வாரம் ஆசிரியராக வரவிருப்பவரை நான் சந்தித்தது 'பொன்னியின் செல்வன் ' யாகூ குழுமத்தில் வரலாற்றின் மீது ஆர்வமுள்ள அவர் கொஞ்சம் வித்தியாசமாக 'விஜயநகர் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இருக்கிறார்.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு (2003 ) முன்பே வலை பதிய ஆரம்பித்திருந்தாலும் , சமீபத்தில்தான் தூசி தட்டி எழுத ஆரம்பித்திருக்கிறார்....(இது கார்த்தியை பற்றி வலைப்பூ அளித்த அறிமுக உரை.)
***
இனி வருவது கார்த்தியின் அட்டகாசம் :
....'நான் நல்லவன்.வல்லவன்.நாலும்  தெரிஞ்சவன் .
ஏழைகளின் பாவங்களை தாங்கும் சுமைதாங்கி ', இப்படி எல்லாம் 
சொல்லணும்தான் ஆசை. ஆனா என்னை பத்தி தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க.  அதனால வேற வழி  இல்லாம உண்மையை சொல்றேன்.என்னோட  philosophy ரொம்ப  சிம்பிள் .நாம  நம்மள  பாத்துப்போம் . ஒலகம்  அது தன்ன தானே பாத்துக்கும்.' --இதுதான்   நான்  ...
ஆயுத எழுத்து அர்ஜுனுக்கும்  எனக்கும் உள்ள வித்தியாசம் - அவனுக்கு girl friend  இருக்கு. எனக்கு இல்ல ( இது வரை ) அப்புறம், அவன் எ$$மெரிக்கா போவான்.  நான் பெங்களூர் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கேன்.

நான் கொஞ்சம் வராற்று பைத்தியம்.ஸ்கூல்ல , காலேஜுல  கல்கி , சாண்டில்யன்  நாவல்கள்  எல்லாம் படிச்சதினால வந்தது.( நான் படிச்ச தமிழ் நாவல்கள் , வரலாற்று நாவல்கள்  மட்டும்தான்.)  இப்போதைய  பொழுது போக்கு , வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு போய் photo பிடிப்பது. (கல்லையும் மண்ணையும் போட்டோ எடுத்துகிட்டு திரியறான்னு  வீட்ல திட்றாங்க )
{இது நான் ,கார்த்திக் அம்மா ,அவனை செல்லமாக சொன்னது }
அப்போ அப்போ வரலாற்று புத்தகங்களை படிப்பேன். (நாவல்கள் இல்ல.History of Tanjore Nayaks , Vijayanagar Inscriptions மாதிரி.
இது இல்லாம மைக்கேல் கிரைட்டன் ,ப்ரெடரிக் பார்சித் நாவல்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் ,அயன் ரேண்டின் 'objectivism தத்துவம்  பிடிக்கும் .
Neo 
( இதுவும் வலைப்பூவின் வாசகம்.....இவருடைய புனைப் பெயரும் வித்தியாசமானதே! 'நியோ' - முதலாவது மேட்ரிக்ஸ் படத்தில் அசத்திய நாயகனுடைய பெயர் இவரும்  இங்கே  அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாரம் உங்களுடன் ' நியோ ' என்கிற கார்த்திகேயன் .

இது அடுத்த நாள் பதிவு.
வணக்கம் !வெல்கம்!வந்தனம்!ஸ்வாகதம் !லலிதா ஜுவல்லரி வழங்கும் ...'
சே ! முதல்ல இப்படி ஓவரா டி .வி  பாக்கறத நிறுத்தனும்.
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வலை பதிய ஆரம்பிச்சே கொஞ்ச நாள்தான் ஆகுது.அதுக்குள்ளே இப்படி ஒரு பொறுப்பான வேலை !சரி, வலைப்பூவிற்கு போறாத காலம்  நாம என்ன செய்ய முடியும்!
இந்த வாரம் என்கிட்டே இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? எனக்கே தெரியாது !
எதுவும் எதிர்பார்க்காதீங்க ! மனம்  போன போக்கில போகப் போறேன்..ஒரு  வெட்டிப் பையனோட மனம் எந்த போக்கில போகப் போகுதுன்னு பார்ப்போம்.
'நியோ ' கார்த்திகேயன் - பேரு நல்லா இருக்கு. ஒரு வகையில  பொருத்தமாகவும் இருக்கு. நியோ மாதிரியே 3,4 மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டு  காலையில 11-12 மணிக்கு ஆபீஸ் வந்து மேனேஜர்  கிட்ட திட்டு வாங்கற சீன்ல மட்டும் 
நியோ 
posted by Editor at 02.28 PM 
******
Aug 02/2004

இனிய நண்பர்கள் தினம்! 

இன்னைக்கு எனக்கும்  எனக்கும் நடந்த ஒரு உரையாடல்.
நான்-1:இனிய நண்பர்கள் தினம்!
நான்-2:இன்னைக்கு  எண்டா இத சொல்ற?
நான்-1:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல?
நான்-2:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்லையே!
நான்-1:அதான் நானும் சொன்னேன்.!இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல .அதுக்காக நண்பர்கள மறந்து ட முடியுமா?
நான்-2:இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற ?
நான்-1:ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்.நேத்து இந்த மாதிரி 10,15 s .m .s ,ஈ -மெயில். கடுப்பாயிட்டேன்.அப்புறம் ஒரு நண்பன் பண்ணினான்.'happy friendship  day ' ன்னான் .'அப்படின்னா என்னடா?ன்னேன் 
''அதெல்லாம் தெரியாது.இன்னிக்கு friedship day .எல்லா friends ம்  வாழ்த்து சொல்லிக்கிறாங்க .நானும் சொன்னேன்.:''சரி ஒழிஞ்சு போ !''
****
அடுத்து என் தம்பி அம்மா கிட்ட பாக்கெட் மணி  கேட்டுட்டு  இருந்தான். ''எதுக்குடா? 
இன்னைக்கு பிரண்டஸ் டே ! அதுக்காக friends எல்லாம் கேக் வெட்ட போறம் '

ஏன்டா ,தினமும் அதே வெட்டிப் பசங்க கூட தான  சுத்தற.இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் வந்தது.?
சே !ஐம்பது ரூபா குடுக்கறதுக்கு  இவ்வளவு லெக்சரா?'
**** ***
அதான் யோசிச்சிட்டு இருந்தேன் .இந்த நண்பர்கள் தினம்.காதலர் தினம்.அன்னையர் தினம். தந்தையர் தினம்.பெண்கள் தினம்.ஆண்கள் தினம். இதெல்லாம் ரொம்ப அவசியமா? குறிப்பா அன்னையர் தினம் ...தினமும் அம்மா கிட்ட சண்டை போட வேண்டியது.அன்னையர் தினத்தன்னிக்கு மட்டும்,''மம்மி வி ஆல் லவ் யூ 'ன்னு  கார்டு வாங்கி குடுத்துட்டா சரியா போச்சா ?'' தினமும் இருக்க வேண்டிய அன்பு வருஷத்துக்கு ஒரு நாள் மட்டும் வந்துட்டு மத்த நாள் எல்லாம் காணாம போறதுல அர்த்தம் இல்ல. பல பேர் வாழ்த்து சொல்லணும் சொல்றாங்க .
நான்-2: எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாதுடா.அதுவும் இல்லாம ,உன் கூட ஸ்கூல்ல ,காலேஜ்ல எல்லாம் படிச்சவங்கள எல்லாம் நீ தினமுமா ஞாபகம் வெச்சுகிட்டு இருக்க?அவங்கள வருஷத்துக்கு ஒரு தடவையாவது நினச்சு பாக்க இது ஒரு reminder ஆ இருக்கு இல்ல!
நான்-1:ஆ.ஸ்கூல் நண்பர்கள்,காலேஜ் நண்பர்கள் !"ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..!
நான்-2:டேய் ! கண்ட்ரோல் !! பேச்ச மாத்தாதே!
நான்-1:சரி.இந்த மாதிரி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை ஞாபகத்துக்கு வர்றவங்க ஓ .கே ! மே  தினம், போங்கள் இதெல்லாம் ஓ .கே .மத்தபடி இந்த காதலர் தினம் அன்னையர் தினம் பெண்கள் தினம் எல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலை.அதுக்கு ஒரு கிரீட்டிங் கார்டு,கிப்டுன்னு   தேவை இல்லாத தண்டம்.அம்மா,அப்பா,நண்பர்கள், காதல் கிட்ட எல்லாம் அன்பை சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.
நான்-2;உன்கிட்ட என்னால பேசி புரிய வைக்க முடியாது.நம்ம வலைப்பூ நண்பர்கள் கிட்டவே  நியாயம் கேட்போம்.
எங்களுக்கு [கார்த்தி+கார்த்தி] ஒரே குழப்பமா இருக்கு.நீங்க என்ன நினைக்கிறீங்க? இதெல்லாம் தேவையா? இல்ல வெட்டி வேலையா?
Posted by Editor 
August 03/2004
சிக்கன் சாலையை கடந்தது ஏன் ?-  4
இத்தனை நாள் இது எப்படி தோணாம போச்சுன்னு தெரியேலை. காலங் காலமா நாம நம்ம சினிமாவையும் நடிகர்களையும்தான் ஓட்டிட்டு இருப்போம் ? இந்த சிக்கன் சாலையை ஏன்ல  மட்டும் அவங்களை விட்டுவிட்டு யாரோ சாண்டில்யன், தினத்தந்தி ,ஹிந்துன்னு யார் யாரையோ ஓட்டிட்டு இருக்கோம்.சரி,,நம்ம பாரம்பரியத்தை காப்பாத்துவோம்!பழையன:1 2 3 
நாட்டாமை:
பஞ்சாயத்து சீன் 
நாட்டாமை சரத்குமார் தீவிரமாக  யோசித்துக் கொண்டிருக்கிறார்.
கிராமத்தான்:1 சரி,சரி, எல்லாம் இப்படியே பாத்துட்டே இருந்தா எப்படி .சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. 
கிராமத்தான்-2:இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு.நம்ம சின்னப்பம்பட்டி சின்னாயியோட கோழி சாலையை கடக்கறப்போ , புளியம்பட்டி ஜமீன்தார் மகன் அத புடிச்சிட்டு போய் குழம்பு வச்சு சாப்புட்டுட்டார். அந்த பொண்ணு  இப்ப நியாயம் கேக்குது. என்ன புள்ள நான் சொல்றது சரிதான ?
பெண்:( கண்ணீரும் கம்பலையுமாய் ): உண்மைதானுங்கோ 
ஜமீந்தார் மகன்:என்னமோ ஒரு கோழி போனதுக்கு இப்படி புலம்பறியே!இந்த கோழிய விட்டா ஊர்ல வேற கோழியே இல்லையா?
( நாட்டாமை பொங்கி எழுகிறார்)
நாட்டாமை:என்றா பேசற?கோழின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா?உன்ன ஒன்னும் கோழிய சாப்பிட  வேணாம்னு சொல்லல. காசு குடுத்து வாங்கி சாபிடுன்னுதான்  சொல்றேன்.உன்ன ஒன்னும் சாலைய கடக்கிற கோழிய புடிக்க வேணாம்னு சூழல. எனக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டு சாப்பிடுன்னுதான் சொல்றேன்..இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்பு ..(தீர்பு ...) (தீர்பு ...)

மணிரத்தினம் பாதாம்- மதவாதம்-தீவிரவாதம் பாதாம்:
(எல்லாம் low pitch ல )
ட்ராபிக் போலீஸ் :ஏன் ?
அரவிந்த் சாமி:கோழி...சாலை...கடக்கணும்...
ட்ராபிக் போலீஸ்: முடியாது 
அரவிந்த் சாமி:ஏன் ?
 ட்ராபிக் போலீஸ்:சிக்னல் .உனக்கு இதெல்லாம் புரியாது.
pitch கொஞ்சம் அதிகரிக்க 
 அரவிந்த் சாமி:ஏன் ?எதுக்காக இதெல்லாம் எப்ப நிறுத்துவீங்க.உங்க லஞ்ச வெறி எப்போ அடங்கும?இந்த சின்ன கோழிய பாருங்க.இதுக்கு என்ன தெரியும்?இது கைல லஞ்சத்த கொடுக்குறீங்களே.இது என்ன நியாயம்?
ட்ராபிக் போலீஸ்:மாத்திட்ட.ஒரு  ட்ராபிக் போலிஸ நல்ல போலீஸா  மாத்திட்ட. போ. கோழிய கூட்டிட்டு போ.
3:அலை பாயுதே:
கோழி :  கார்த்திக்  நீ நான் வெஜிடேரியனா ? கசாப்பு கடையில வேலை பாக்கிரவனா?ஏன்னா  கசாப்பு கடையில வேலை பாகிரவங்கதான் இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு கோழி பின்னால சுத்திட்டி இருப்பாங்க 
மாதவன்:கோழி, நீ சாலைய கடப்பன்னு நான் நினைக்கல.உன்ன சிக்கன் 65 பண்ணினா டேஸ்ட்டா இருக்கும்னு நான் நினைக்கல. ஆனால் இதெல்லாம் நடந்துமோன்னு  பயமா இருக்கு.
( தொடர்ந்தாலும் தொடரலாம் ..அழுகின தக்காளி எதுவும் வந்து விழாமல் இருந்தால்)
-நியோ 
இதன் தொடர்ச்சி நாளை. கார்த்திக் அம்மா 

2013/03/26

சிறிய வயதில் செய்த தவறாம். அதற்கு பிறகு 20 வருடங்களாக  எந்த தவறும் செய்யவில்லையாம்.அதனால் அவருக்கு தண்டனை தராமல் விடுவித்துவிட வேண்டுமாம்.
அப்படி பார்த்தால் நளினி ,கசாப் ,டெல்லியில் பெண்ணை கற்பழித்த 17 வயது '' சிறுவனும்!!! '' சிறிய வயதுதான். எல்லோரையும் மன்னித்து விடலாம்.
எல்லோரும் சிறு வயதில் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யுங்கள் .அப்புறம் ,  மிக முக்கியமான விஷயம் சினிமா நடிகராக ஆகி விடுங்கள். ஏனென்றால் சினிமா நட்சத்திரங்கள் என்றால் தெய்வப் பிறவிகள்.அவர்கள்  எல்லா சட்ட திட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.
இதில் பெரிய்ய்ய்ய கொடுமை என்னவென்றால் ,தமிழ்நாட்டு பிரச்சினைகளுகேல்லாம் வாயே திறக்காத ஒரு பெரிய நட்சத்திரம் பொன்மொழிகளாக உதிர்த்துள்ளதுதான்.
வாழ்க சஞ்சய் தத் .

2013/03/20

எந்த channel திருப்பினாலும் மனுஷ்ய புத்திரனே ஏ ஏ ,மனுஷ்ய புத்திரனே ஏ ஏ ,பேசிக் கொண்டிருக்கிறார் .

2013/03/16

திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்ற முன்னோட்டம் ஒரு தொலைக்காட்சியில் வருகிறது.
அதில் அவர் சொல்கிறார்
'' '' அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்பது 
'' நாலடி, ஈரடி திருக்குறள் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .அதை நம் மக்கள் உடலில் விழும் அடி போல் என்று மாற்றி விட்டார்கள் ''
அவருக்கு உண்மை தெரியவில்லையா
அல்லது நகைச்சுவைக்காக  சொல்கிறாரா
இறைவன் திருவடி (அடி ) உதவுவது போல் என்பதுதான் உண்மை.
மனிதனை நம்புவதை விட இறைவனை நம்பு 
(இறைவன் என்பவன் உள்ளானா  இல்லையா என்பது அடுத்த விஷயம்.)
ஆனால் கடவுள் (உன்னில் கடவுள் ) என்பதே உண்மை.எனவே மற்றவரை நம்புவதை விட உன்னை நம்பு என்று நம் முன்னோர்கள் சொல்வதாக நான் பொருள் கொண்டேன். வாழ்க்கையிலும் இதை அனுபவ பூரணமாக உணர்ந்துள்ளேன்.துயரத்தில் மூழ்கி கிடந்த போது  உதவ யாரும் முன்வரவில்லை.கார்த்தி சொல்லிக் கொடுத்த'' '' நம் பாரத்தை நாமே சுமந்து கொள்வோம் '' '' என்ற வார்த்தைகளின்படி நானே என் துயரில் முழுகி  கொண்டேன்.எனக்கு நானே ,என்ற வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறேன்.
கார்த்திக்+அம்மா 

2013/03/14

*
தன் கொடுங்கோலாட்சியை  ஆரம்பித்துவிட்டார்  சூரியனார் .இனி 6 மாதம் கருவாடுதான்.சென்னை மாநகராட்சி குடிதண்ணீர் குழாய்கள் வழியாக  இலவச சுடுதண்ணீர் அனுப்பும்.Geyser  போட  வேண்டாம்.
AC இருக்கிறது என்று யாரும் அலட்டாதீர்கள் .அதற்கு தேவையான மின்சாரம் inverter மூலம் கூட கிடைக்காது.Get  ready .
**
யாராவது எழுதுவார்களா என்று பார்த்தேன்.எதற்கு வம்பு என்ற பயமோ?
நீ.வெ .ஒரு கோடி
நிகழ்ச்சி பற்றிதான்.
வில்லனாகவே பார்த்துவிட்ட பிரகாஷ் ராஜ்..... .இன்னும் அந்த நடிகரை மறந்து புதியவராக பார்க்க வேண்டும்.பார்க்கலாம், ஜெயிப்பாரா என்று.
சூர்யாவிற்கு அவரது நல்லவர் என்ற image நிறைய கை கொடுத்தது.
***
என்ன நடுவில் நடுவில் english வார்த்தைகள் அதிகம் என்று பார்க்கிறீர்களா .விஷயம் இருக்கிறது.
ஒரு கடையில்
'' இயேசுவை நம்புகிறவனோ  வாழ்க்கையில் ஜெயிக்கிறான் '' என்ற வாசகம் இருந்தது.என் டீச்சர் புத்தி அடங்குமா? அந்த கடை பெண்மணியிடம் ''இயேசுவை நம்புகிறவனே '' என்று இருக்க வேண்டும் என்றேன்.அவர் அதை படித்துவிட்டு ,அந்த வாசகத்தை விளக்கி'' இயேசுவை நம்புகிறவர் நலம் பெறுவார்'' என்றார்.
ஆமாம் .ஆனால்  ''நம்புகிறவனோ ' என்றால் அது ஐயப்பாடு * ஆகிவிடும் என்றேன் .அப்புறம்தான் அவருக்கு புரிந்தது. நான் இலக்கிய பிழை பற்றி சொல்கிறேன் என்று.அவருடைய மறுமொழிதான் high light .
''இப்போதெல்லாம் யாருக்கு madam தமிழ்  தெரிகிறது? எல்லோருக்கும் இங்கிலீஷ் தான் தெரியும் '' என்றார்.
நம் மக்கள் பேசும் இங்கிலீஷ் !!எத்தனை தவறுகளுடன் ?
வீசா -விசா
அனியன் -ஆனியன்
ரிசீட் -ரெசிப்ட்
சொல்லிக் கொண்டே போகலாம் .
ஒருவர் சொல்கிறார் '' புறநானூறு  song  '' என்று.
அது 'poem '
நான் ஒன்றும் ஆங்கில மேதாவி அல்ல.ஆனால்  நான் ஆங்கிலம் தெரிந்தவள் என்று அலட்டிக் கொள்வதும் இல்லை.
தமிழும் சரியாக பேசாமல், ஆங்கிலமும் சரியாக பேசாமல் ..கொடுமை.
*ஐயப்பாடு  --போன்ற வார்த்தைகள் எத்தனை பேருக்கு புரியுமோ?அதனால் இனி ஆங்கிலம் கலந்த நடையில்தான் எழுத வேண்டும்.
என் bolg ஐயும் 4 பேர் படிக்க வேண்டாமா?
கார்த்திக்+அம்மா 

2013/03/12

Italy:
Refusing to send the sailors.
This too should be Italy?Another good chance for the parliamentarians to stall a day.
They will shout that this too is the cunning act of  Mrs.Sonia.
Parliamentarians, have a great day.

2013/03/08

இன்று உலக மகளிர் தினம்.நானும் கூட 1974ல் மகளிர் தின பரிசாக என் தாயின் initial  சேர்த்து என் பேரின் முதல் எழுத்துகளை அமைத்துக் கொண்டேன்.
ஆனால்,
இன்று யோசித்தால் ,தொலைக் காட்சிகள் ,மற்ற மிகைப் படுத்தல்கள் பார்க்கும் போது  ஒரு நல்ல விஷயத்தை காமெடி ஆக்குகிறோமோ என்று தோன்றுகிறது.
அது எதற்கு T .V யில் வரும் பெண்கள் அந்த காட்டு கூச்சல் கத்துகிறார்கள்?அவர்கள் பேசுவதை பார்த்தால் ஏதோ  பெண்கள் எல்லாம் வெளிச்சத்தையே காணாத ஒரு இருட்டறையில் அடைத்து வைத்துள்ளது போல் தோன்றுகிறது.
இன்றைய பெண்களை விட ,புராண காலத்திலிருந்து பெண்கள் முழு சுதந்திரத்துடனேயே இருந்துள்ளனர்.
அவர்கள் கணவரை அவர்களே தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தது.பூஜை ,புனஸ்காரங்களில் அவர்கள் சம முக்கியத்துவம் பெற்றனர்.
தசரதனுக்கு தேர் ஓட்டுகிறாள்  அவன் மனைவி.(தேர் ஓட்டுவது ,அதிலும் போரில் தேர் ஓட்டுவது சாதாரணமான விஷயம் அல்ல.)ஒரு பெண் போரில் கலந்து கொள்கிறாள்.எத்தனை எத்தனை 100 ,100 ஆண்டுகளுக்கு முன்பு.அப்போது பெண்ணடிமைத்தனம் என்ற கேள்வி எங்கே?

தமிழ் சினிமாவின் முதல் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி. தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குனரும் அவர்தான். 1936ம் ஆண்டு "மிஸ்கமலா" என்ற படத்தை இயக்கினார். முதல் பெண் தயாரிப்பாளர், முதன் முதலில் தியேட்டர் கட்டிய பெண். இப்படி பல முகங்கள் அவருக்கு உண்டு. 
இது  இன்று நான் படித்த செய்தி 
சுதந்திரத்திற்கு முன் நடந்த விஷயம்.நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது.
என் அம்மாவுடன் பிறந்த சகோதரிகள் நால்வர்.ஒரே குடும்பத்தில் பிறந்து,ஒரே சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்.ஆனால்  என் அம்மா மட்டும்தான் படித்தார்.ஒரு சகோதரி அந்த காலத்திலேயே ''காதல் ''.படிப்பு கட் .அடுத்த சகோதரிக்கு படிப்பு ஏறவில்லை .என் தாயின் ஆர்வம், விடாமுயற்சி ,கடின உழைப்பு அவர் வாழ்வின் வெற்றிப் படிக்கட்டுகளில் தாவித் தாவி ஏறினார் .
என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒருவர் சாதிப்பதற்கு, இனமோ,மதமோ,மற்ற எதுவுமே தடைக் கல் இல்லை .
தயவு செய்து பெண்ணுரிமை  பெண்ணுரிமை என்றார் கூச்சலிடாதீர்கள்   
கார்த்திக்+அம்மா  

2013/03/07

GAIL and TN farmers:
There are so many doubts .I don't understand so many things.
First
Is the land taken by GAIL without the consent of the farmers?
Has it not signed any agreement with the farmers?
Were the farmers so ignorant about this project ?
Don't the land owners have any right over the land ,can't they say NO?
Or, that they have sold the land at a low cast and realizing this fact at a later stage after signing the agreement and now protesting?
AND the BIGGEST doubt is ( as far as my geographical knowledge goes )the route via Karnataka will be shorter than going through Tamilnadu.
If so why this route?
Tamilnadu people allow every project to be carried on and only at the finishing stage WE start protesting like the Koodankulam project.
Can anyone clear my doubts?
karthik+amma

2013/02/25

பாராட்டு:
 அஷிஸ் பிரேம்ஜி :
உண்மையிலேயே பெர்ய மனது வேண்டும்.12300 கோடிகள் .அள்ளிக் கொடுப்பது சாதாரணமான விஷயமல்ல.பாராட்டுகள்
திட்டு:
இருக்க வேண்டியதுதான் ஒரு தலைவர் மீது பற்று. அவரை பாராட்டலாம்.பின்பற்றலாம்
ஆனால் எதற்கும் ஒரு எல்லையுண்டு.
அளவு மீறிய வெறியாகவோ , பைத்தியக்காரத்தனமாகவோ இருக்கக் கூடாது.18 லிட்டர் ரத்தம் என்பது எத்தனை பேர் உயிரை காப்பாற்றி இருக்கும்?அதில் சிலை செய்தால்தான் தலைவர் மேல் வைத்த பக்தி வெளிப்படும் என்றால் இதை ஒரு கொலை வெறி என்றே சொல்லலாம்.
ஆனால்  பிறந்த நாளன்று அம்மா எங்கே?
கார்த்திக்+அம்மா 

2013/02/08

கார்த்திக் என் அம்மா வீட்டின் மூன்றாவது தலைமுறையின் முதல் மகன்.நான் 4 சகோதரர்களுடன் பிறந்த ஒரே பெண் என்பதால் நானே over செல்லம்.
அப்படியானால் கார்த்திக் பற்றி சொல்லவே வேண்டாம்.செல்லமோ செல்லம்.
செந்தில்  பிறக்கும் போது  குடும்பத்தில் எல்லோருக்கும் மிகப் பெரிய கவலையே கார்த்தி செந்திலை எப்படி வரவேற்பானோ  என்பதுதான்.
ஒரே குழந்தையாய் வளரும் குழந்தைகள் அடுத்த குழந்தை வரும்போது கோபம் கொள்வது ,அந்த குழந்தையை கிள்ளுவது ,அடிப்பது என்ற வகையில் தன்  கோபத்தை, குரோதத்தை காட்டும் என்றெல்லாம் படித்தும், கேள்விப்பட்டும் இருந்ததால் எல்லோருக்கும் ஒரு கலக்கம் இருந்தது.நான் செந்திலை பிரசவித்து மருத்துவமனையில் இருந்தபோது கார்த்தியை அழைத்து வந்தனர்.எல்லோரும் அவனையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.என்னருகில் வந்தவன் கால் நீட்டிப் போட்டு உட்கார்ந்து   '' என் தம்பியை என் மடி மீது போடுங்கள் '' என்றானே பார்க்கலாம்.!!!!!
எல்லோருக்கும் அப்படி ஒரு நிம்மதி பெருமூச்சு .
அன்றிலிருந்து அவன் இறுதி மூச்சு வரை தம்பி என்றால் உயிர்.தம்பிக்காக எதுவும் செய்வான்.செந்தில் செய்யும் குறும்புகளை அப்படி ரசிப்பான்.
உயிர் பிரியும் நேரத்தில் என்ன நினைத்தானோ?
செந்தில் தன்  தந்தையை இழந்த போது  கூட அவ்வளவு துவண்டு விடவில்லை.அண்ணன் மறைவு .... சொல்ல முடியாத சோகம்.
நாட்கள் சோகத்திலேயே ஓடுகின்றன .
மீண்டும் ஒரே ஒரு முறை கார்த்தியை கண்ணில் பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்புடனும் ஏக்கத்துடனுமே  நிமிடங்கள் நகர்கின்றன .
கார்த்திக்+அம்மா


2013/01/30

கம்பருக்கும் அரசனுக்கும் கருத்து வேறுபாடு வந்த போது  கவிச்சக்கரவர்த்தி சொன்னார்
'' மன்னவனும் நீயோ
வளநாடும் நின்னதோ
குரங்கேற்காத கொம்பும் உண்டோ ''
 ....  .... ...
எனக்கும் என் தலைமை ஆசிரியருக்கும் கருத்து வேறுபாடு வந்தால் நான் இதை சொல்லி விட்டு போய்க் கொண்டே இருப்பேன்.
திறமைக்கு எங்கும் மதிப்பு உண்டு.எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் .
சோதனைகள் வரும்.
எனக்கும் சோதனைகள் வந்தன .போராட்டம்.போராட்டம்.
நான் சொல்வேன்,'
'' சத்தியம் என்ற தீயில் என்னை நானே எரித்துக் கொண்டு அதையும் நெஞ்சில் ரத்தக் கண்ணீருடன், முகத்தில் சிரிப்புடன் ஏற்றுக் கொல்லும்  பிறவி நான் ''
எனக்கே அந்த தைரியம் இருந்தால் ....
என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

அடுத்த C .M  ஐ உருவாக்குகிறார்கள் .இதைத்தான் ''குரங்கு பிடிக்க போய்  பிள்ளையார் பிடித்த கதையோ?

பழமொழி மாற்றி (பிள்ளையார் பிடிக்க குரங்கான கதி ) உளறி விட்டேன் என்று நினைக்கிறீர்களா , இல்லை  வேண்டுமென்றேதான் மாற்றி சொன்னேன்.
கமலஹாசன் விஷயம்தான்.
எனக்கே மனது விரக்தியாகும் நேரத்தில் இப்படிப்பட்ட எண்ணமே வரும்.அதற்காக ஓட  முடியுமா?இருந்து போராடத்தான் வேண்டும்.நானே அதை செய்யும்போது, கமல் இப்படி பேசுவது சரியா ? போராடுங்கள்.
கார்த்திக்+அம்மா 

2013/01/29

'' '' ''The ROYAL RETREAT '' '' ''
டி .வி யில் ஒரு program தவறாமல் 25 வருடங்களாக பார்க்கிறேன் என்றால் அது நம் முப்படை அணிவகுப்புதான். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ,எப்பொழுதும் பிரமிப்பில் ஆழ்த்தும் ஒரு விஷயம்.
நிறைய பேர் 26 அன்று பார்ப்பார்கள்.
ஆனால் இன்று நம் முப்படைகள்'' ''  '' போர் பாசறை திரும்பும் நாள்.'' '' ''இந்த பதிவு எழதும் இந்த நேரம் பொதிகையில் அந்த நிகழ்ச்சிதான் போய்க் கொண்டிருக்கிறது.இப்படி ஒரு மாபெரும் விஷயம் நடப்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.
இதுவும் மிக முக்கியத்துவம் வாய்ந்த அற்புதமான ,அழகான ,நம்மையறியாமலே பெருமிதப் பட வைக்கும் ஒரு நிகழ்ச்சி.யு ட்யுப்பிலாவது பாருங்கள்.
கார்த்திக்+அம்மா 

2013/01/26

 karthik at his dearest Anna University 
.பதிவு எழுதி வெகு நாளாயிற்று.
எதைப் பற்றி எழுதுவது?
நாட்டில் ஏதாவது நல்லது நடந்தால்தானே?
கற்பழிப்பு
ஊழல்
கொலை
 கொள்ளை
இதை எல்லாவற்றையும் விட
ஆர்ப்பாட்டம் ,ஆர்ப்பாட்டம்
சாலை மறியல்
யார் வேண்டுமானாலும்  எதற்கு வேண்டுமானாலும் கொடி  தூக்கலாம்  .
கல்லெடுத்து அடிக்கலாம்.பேருந்து கண்ணாடியை உடைக்கலாம்.அதையும் மீறி பேருந்தை எரிக்க கூட எரிக்கலாம்.
இதை விட அற்புதமான விஷயம் ,எதைப் பற்றி எழுதினால் என்ன விதமான விளைவுகள்  என்ற பயமே ஏற்பட்டு விட்டது.
அதனால் கார்த்தியை பற்றி எழுதினால் ''ஒரே சோக கீதம் ''என்ற comment .ஆனால் நான் கார்த்தி எழுதிய இந்த விஜயநகர் blog ஐ தொடர்வதற்கு காரணமே கார்த்தியை பற்றி எழுத வேண்டுமென்பதுதான்.
அதனால் கார்த்தியை பற்றி .
2000 ம் ஆண்டு, Jan 26 .கார்த்தி  bangalore  லிருந்து சென்னை வீட்டிற்கு வந்தான்.அம்மாவை பார்த்து 100 முத்தம் வாங்கிக் கொண்டால் போதும் அப்படி ஒரு நிம்மதியான தூக்கம் வரும்.விடிகாலை வந்தவுடன் தூங்க ஆரம்பித்தான்.நான் கோலம் போட  ஆரம்பித்தேன். எப்போதும் ஜன 26+ஆக் 15 இந்தியா கோலம் போட்டு கலர் கொடுப்பேன்.என் flat security நேபாளி வந்து ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு ''இது எங்கள் நாடு '' என்று நேபாளத்தை தொட்டு பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்.இந்தியாவும்,மூவர்ண கொடியும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.
climax இதுதான்.திறந்திருந்த கதவு காற்றில் அடித்து கொண்ட வேகத்தில் சாத்திக் கொண்டது.இந்த automatic கதவுகளை கண்டுபிடித்த மகான் யாரோ ?கதவுக்கு வெளியில் நான்.mobile இல்லை.சாவி இல்லை.
கார்த்தி லேசில் தூங்க மாட்டான். ஆனால் தூங்க ஆரம்பித்தால் சாதாரணத்தில் எழுப்ப முடியாது ஒரு 1/2 மணி நேரமாக கதவை உடைக்காத குறையாக தட்டியாயிற்று.கார்த்தி அசைந்தால்தானே.
அம்மாவிடம் வந்தாகிவிட்டது என்ற திருப்தியில் ,பெங்களூரில் நான் இல்லாமல் தூங்காத தூக்கத்தையெல்லாம் சனி,ஞாயிறு  2 நாட்களில் தூங்கி முடிப்பான்.
அப்படி கதவை தட்டி தட்டி கத்தி எல்லாம் போராடிக் கொண்டிருந்த போதுதான் வெளியில் சென்றிருந்த செந்தில் வந்து மொட்டை மாடிக்கு சென்று ஒரு கம்பியால் படுக்கையறை ஜன்னலை தட்டி ஒரு வழியாக கார்த்தியை எழுப்பி அவன் கதவை திறந்து,ஒரே ஓட்டமாக பள்ளிக்கு சென்று கொடியேற்றி ,நிம்மதி பெருமூச்சு விட்டு .....
interesting episodes
karthik +amma 

2013/01/08

Vinothini and Acid
இந்த அழகான பெண் மீது ஆஸிட்  வீசிய அந்த கொடூரனை கடுமையாக கண்டிக்கிறேன்.
ஆனால்,
நான் சிறுமியாக  இருந்த போது   [ எத்தனை வயது  என்பதெல்லாம் நினைவில்லை. ] 1965   யாக இருக்கலாம் .என் ஊர் ஒரு சிறு கிராமம்.அங்கு ஒரு ஆசிரியர  ,அவருடைய மகள் படித்து நல்ல வேலையில் இருந்திருக்கிறார்.
அவரை இப்படித்தான் ஒரு வெறியன் காதலிக்க  சொல்லி வம்பிழுத்து அந்த மறுக்க ,அந்த பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டான்.
இப்போது போல் அப்போது மீடியா கிடையாது.மருத்துவம் கிடையாது.மனித உரிமை சங்கங்கள் கிடையாது.
அந்த பெண் ஒரு தனி அறையில் முடங்கிப் போனார்.
எல்லோரும் இதைப் பற்றி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் நான் அந்த வீட்டிற்கு சென்றேன் .தற்செயலாக அந்த அறைக்கு சென்று விட்டேன். அப்பப்பா,
அந்த முகம் ....
இன்றும் என் நினைவின் ஆழத்தில் அப்படியே இருக்கிறது.
இன்று நேற்றல்ல 
கிராமத்தில் அல்ல ,நகரத்தில் அல்ல 
எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் பெண்ணுக்கு கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
1962 அல்லது 1965 எந்த ஆண்டோ எப்படியாக இருந்தாலும் குறைந்தது ஒரு 50 வருடங்களுக்கு முன்பே இது போன்ற கொடுமைகள் நடந்துள்ளது.
இதெற்கெல்லாம் என்ன தீர்வு என்பதை பேசிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
கார்த்திக் +அம்மா 

2012/12/26

கொடுமை,கொடுமைடா சாமி.எந்த channel திருப்பினாலும் பாலியல் பலாத்காரம் என்ற செய்தியே.
பேசாமல், பாலியல் பலாத்காரம்   Sex  harassment  என்ற ஒரு channel இதற்கென்றே பிரத்தியேகமாக ஆரம்பித்துவிடலாம்.
குமுதத்தில் ஞானி எழுதியதை படிக்க நேர்ந்தது. அவருடைய பெரும்பான்மையான கருத்துகளை ஆதரிக்கும் அதே நேரத்தில் அவரின் சில கருத்துகளை மறுக்கிறேன்.
பெண்ணை ஆணின் அடிமையாக இருக்கும் நோக்கிலேயே வளர்க்கப் பட்டார்கள் என்கிறார்.
கிடையவே கிடையாது.
பெண்ணின் உடல் அமைப்பு வித்தியாசமானது.தாய்மை பெண்ணிற்கு கொடுக்கப் பட்ட வரமோ  சாபமோ தெரியாது.ஆனால் உடல் ரீதியாக அது அவளுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஒரு ஆண்  சிகரெட் குடிக்கலாம். பெண்ணுக்கு மட்டும் ஏன் கண்டிஷன் என்கிறார்.
ஒரு பெண் சிகரெட் பிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ அவளுக்கு பிறக்கும் குழந்தையை பாதிக்கும் என்பது ஞானிக்கு தெரியாதா?
தன குழந்தைக்கு பால் புகட்டும் சமத்தில் அந்த தாய்க்கு உணவு கட்டுப்பாடுகள்  உண்டு. இல்லையென்றால் சிசு கஷ்டப்படும்.
மேலை நாட்டுப் பெண்களே [ மது சிகரெட்டில் அவர்களுக்கு எந்த கட்டுப் பாடும் இல்லை.] ஆனால் அவர்களே தாய்மை அடைந்திருக்கும் சமயத்தில் இந்த விஷயங்களை தவிர்க்கிறார்கள்.
பிறக்கும் குழந்தை எப்படி வேண்டுமானாலும் பிறக்கட்டும்.அடுத்த தலைமுறை எப்படி வேண்டுமானாலும் கஷ்டப் படட்டும் என்று நினைத்தால் பெண்கள் எப்படி வேண்டுமானாலும் குடிக்கட்டும்.
உடல் உறவில் ஆணுக்கு பாதிப்பில்லை. அவன் கை வீசி நடக்கிறான். பெண் சுமக்கிறாள்.
இதுதான் பிரச்சினையே.
அதனால்தான் அவளை பாதுக்காக்க வேண்டியுள்ளது.
அது அடிமைத்தனம் அல்ல.
குந்தி செய்த தவறால்தான் மகாபாரதமே.
கர்ணன்தான் மூத்தவன் என்ற உண்மை சொல்லப் பட்டிருந்தால் குருசேத்திர போரும் இல்லை. அத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அத்தனை லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்க வேண்டியது இல்லை. குந்தியின் தப்பான கர்ப்பம் நாட்டையே ஆட்டி  வைத்தது.
அதுதான் விஷயமே.
ஞானியை விட  நான் அறிவு குறைந்தவள்தான் .
தோன்றியதை எழுதினேன்.
கார்த்திக்+அம்மா 

2012/12/12

 என் கார்த்தி +அவன் இஷ்ட நடிகர் :
எனக்கு சினிமாவை பற்றி அதிகம் தெரியாது .அதில் அதிக விருப்பமும் இல்லை. அதிலும் நடிகர்களை அவ்வளவாக ரசிப்பதில்லை.
ஆனால் என் அன்பு மகன் கார்த்திக்கிற்கு சினிமா பிடிக்கும்.
ரஜினி மிகவும் பிடிக்கும்.அண்ணா பல்கலையில் தன்னை பாஷா , மாணிக் பாஷா என்றுதான் ஸ்டைலாக சொல்வான். அந்த படம் வந்தபோது அவன் செய்த மார்பிங் இது.
இன்று அவன் இஷ்ட நடிகரின் பிறந்த நாள்.எனக்கு இது பெரிய விஷயமில்லை.ஆனால் கார்த்தி இருந்திருந்தால் மிகவும் சந்தோஷப் பட்டிருப்பான்.
கார்த்திக் அம்மா ..

2012/11/27

chips :
phone bill கட்ட போனேன்.கட்டணத்தை கொடுத்து விட்டு ரிசீட் [risi :t ]கொடுங்கள் என்றேன்.அவர் காது கேளாதவர் போல் இருந்தார்.எனக்கு லேசான கோபம்.ஏனென்றால் கடந்த இரு மாதங்களாக ரசீது கொடுக்க மறுத்ததாக செந்தில் சொல்லியிருந்ததால், ஒரு ரூபாய் மிச்சப் படுத்தப் பார்க்கிறாரே என்று.
மறுபடியும், பிரிண்டரைக் காட்டி ரிசீட் கொடுங்கள் என்றேன்.பிரிண்டரைப் பார்த்து விட்டு என்னைப் பார்த்தவர் ரசீது புத்தகத்தை எடுத்து ரசீது எழுதிக் கொடுத்தார்.பெரிதாக சாதித்து விட்ட பெருமையில் வீட்டிற்கு வந்த பின் எண்ண ஓட்டங்களில் ஒரு விஷயம் புரிந்தது என் மரமண்டைக்கு.நான் ரெசிப்ட் என்று கேட்டிருக்க வேண்டும் என்று.ஹையோ phonetics teacher ????????.
.......     ......  ......
   ஆங்கில உச்சரிப்புதான் அப்படிஎன்றால் தமிழும் அப்படித்தான்.
'மிளகு தக்காளி கீரை இருக்கிறதா ?'' என்று கேட்டு  நிறைய பேரை குழப்பியிருக்கிறேன்.
****    *****
நிப்பாட்டு :
நிறைய முறை ஆட்டோவில் போகும்போது இறங்கும் இடம் வந்தவுடன் ''நிறுத்துங்கள் '' என்பேன். ஆட்டோ நிற்காமல் போய்க் கொண்டே இருக்கும். '' நான் இறங்கும் (எறங்கும் )  இடம் வந்து விட்டது.நிறுத்த சொல்கிறேன் .போய்க் கொண்டே இருக்கிறீர்களே ''  என்று சத்தம் போட்டவுடன் தான் ஆட்டோ நிற்கும்.
         இப்போதுதான் புரிகிறது ( அய்யோ மரமண்டை ,உனக்கு எதுதான் புரிந்திருக்கிறது?) நிப்பாட்டு  என்று சொல்லாமல் 'நிறுத்து' என்று சொல்லி அவர்களை குழப்பியிருக்கிறேன் என்று.
constitutionally  நிப்பாட்டு என்பதுதான் சரி என்று ஆகி விட்டது.
படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் நிப்பாட்டு என்றே சொல்கிறார்களே, பஸ் நிறுத்தம் என்ற வார்த்தை இவர்கள் கண்ணில் படவே படாதா ?
****      *************
நான் பணி  புரிந்து கொண்டிருந்த பொது, என் சக ஆசிரியர் என்னிடத்தில்   ஓடி வந்து''  டீச்சர் கட்ச்டுச்சி டீச்சர் '' என்றார்.நான் எதோ பூரான்,பல்லி ,தேள் தான் கடித்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டு ''என்ன சார் கடித்தது ?' என்றேன்.''இல்லை டீச்சர் ,நான் தேடிய file கட்ச்டுச்சி'' என்றார்.
ஆஹா ,file கிடைத்து விட்டது என்பதைத்தான் அப்படி சொன்னார் என்பது புரிந்த போது , எஸ்,வி.சேகர் சுவற்றின் மேல் கையை வைத்துக் கொண்டு தலை முட்டிக் கொள்வார்.அது போல் ஒரு தலையணையை [ அதுதாங்க அந்த தலவாணி ] வைத்து முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
****   ***
நான் ஆங்கில ஆசிரியையாக அரசு பள்ளியில் பணி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழ் வழி மாணவர்கள் ஆங்கிலம் படிக்க முடியாத மொழி என்று நினைத்துக் [wet ] கொள்வார்கள் .[ காயப் போடவே மாட்டார்கள் ].
நான் சொல்வேன் உங்களுக்கும் நிறைய words தெரியும் .உதாரணமாக 'உங்கள் முகத்தில் உள்ள உறுப்புகளை சொல்லுங்கள்.face .nose ,mouth etc ''என்று அவர்களை சொல்ல வைத்து ''பாருங்கள், உங்களுக்கு எவ்வளவு வார்த்தைகள் தெரிகிறது.I know  that you do not know that you know so many words ''என்பேன்.
விகடம்? ஹும் ?
**************
பள்ளி ஆண்டு விழாக்கள் போன்ற விழாக்களில்( 90 s ) என் compering மிகவும் பிரபலம்.
ஒரு பாடலுக்கு மாணவர்கள் நடனமாட வந்த போது  நான் கொடுத்த intro .
'' A problem becomes no problem  if the problem is approached in a non  problematic  manner .
பிரச்சினை என்பது பிரச்சினையே அல்ல, பிரச்சினையை  பிரச்சினை அற்ற முறையில் அணுகினால் ....மாணவர்களே என்ன தேடுகிறீர்கள்?  கல்லா?.....அடிப்பதற்கா? ..no problem என்று ஆட வருகிறார் சம்பத் +2 மாணவர் '' என்றவுடன்
மாணவர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் ஒரே (ஒன்றே ஒன்றுதான் )கைதட்டல்
கலா கார்த்திக்
இந்த build up உனக்கே கொஞ்சம் over ஆக தெரியவில்லை?
இதைப் படித்துக் கொண்டிருப்பவர்கள், (ஒரு 1000 பேர் ) தலையைப் பிய்த்துக் கொண்டு அண்ணா  சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
  கடி, கடி, அடிக்கடி கடி.
வலிக்காமல், சலிக்காமல் அடிக்கடி கடி.
பி.கு.
ஆட்டிற்கு வாலை  அளந்து வைத்தவன் புத்திசாலி.
இந்த 2 இழப்புகளும் இல்லையென்றால் என் வாயாடித்தனத்திற்கு எல்லை ஏது ?
பி.பி.கு .
இந்த வாயாடி இப்போது ஊமையாகி விட்டாள் .
கார்த்திக்+அம்மா 

2012/11/24

வீரபாண்டி ஆறுமுகம் மரணம்:அஞ்சலி:
''நீங்கள் நல்லவரா  கெட்டவரா " என்று நாயகன் படத்தில் வரும் வசனம்தான் நினைவிற்கு வருகிறது.
அவருடைய உறவினள்  என்ற முறையிலும் ,சேலத்து மகள் என்ற முறையிலும் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள்,[பூலாவரி சுகுமாரன் ,மிசா சிறையில் ice  முள் படுக்கையில் வைத்து அவரை விசாரித்த விவகாரத்தில் இருந்து ]எழுத ஆரம்பித்தால் 4,5 பக்கங்கள் எழுதலாம்.ஆனால், நல்லவரோ, கெட்டவரோ  நமக்கு தெரிந்த ஒருவர்,பழகிய ஒருவர் ,உறவினரோ ,யாராயிருந்தாலும் எந்த இழப்பும் மனதை மிகவும் பாதிக்கிறது.
சமீபத்தில் மும்பையில் போல் சேலத்தில் கூடிய கூட்டமும் மக்கள் வெள்ளமாக இருக்கிறது.
அவரைப் பற்றி நிறைய எழுதலாமா என்று தோன்றுகிறது.
பார்க்கலாம்.அடுத்த பதிவில்.அவருக்கு என் அஞ்சலி.
அவரை சேலத்து சிங்கம் என்று சொல்வார்கள்.
கார்த்தியும் தன்னை அப்படித்தான் சொல்லிக் கொள்வான்.
என் அஞ்சலி.
கார்த்திக்+அம்மா  

2012/11/21

Ajmal Kasab hanged:
Who ever it is, be them terrorists or godfathers ,life is life.I really sympathize this young fellow being hanged.
But it is really justifiable that he should be hanged.Unless otherwise  more and more people will get ready to do more such cruel acts .This act would instill a fear in those who plan to indulge in terrorism .
And the most pathetic fact is that ''PAKISTHAN DISOWNED HIM ''.and this is the most important lesson that they should learn.Dying in a foreign land without the dear ones near.
This was the post I wrote on 26.11.2008
//    சன்தீப் உண்ணிகிருஷ்ணனின் அருகில் அவருடைய தாயை பார்த்தபோது ,,,, நானும் அப்படித்தான் என் மகனுடன் பேசினேன்." கார்த்தி போகாதே, நீ வாழ பிறந்தவன், நீ வாழ வேண்டும் ,,போகாதே என் மகனே" என்றுதான் அவனிடம் பேசினேன். Just replace myself and Karthik there.. கத்தவில்லை,,, கதறவில்லை..ஆடவில்லை,,ஆர்ப்பரிக்கவில்லை. உடற்கூறு சோதனைக்கு அவனை கூட்டி சென்றபிறகு, வெளியில் உட்கார்ந்திருந்த அந்த ஒவ்வொரு மணித்துளியும் மனம் கதறிக் கொண்டேயிருந்தது. "கார்த்தி , எழுந்துவிடு, எழுந்துவிடு" என்று. ஆனால், சினிமாவில்தான் இதெல்லாம் நடக்கும். அந்த வீரனின் தாயின் அழுகை எல்லோர் மனதிலும் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், என் மனதில் அது வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
*** ** **
அடுத்து உண்ணிகிருஷ்ணனின் தந்தையின் கோபம்.:
என் கணவரின் இழப்பின் போது நானும் அதே போல் " போங்கடா நாய்களா" என்றேதான் கத்தினேன். இத்தனை நாட்கள் நான் over ஆக react செய்து விட்டோமா என்று தோன்றியதுண்டு. ஆனால், ஒருவரின் இழப்பை, இன்னொருவர் தன் சுய நலத்திற்கும், பகட்டுக்கும் பணத்துக்கும் பயன்படுத்தினால், இது போன்ற கோபம்தான் வரும், அது சரிதான் என்று இன்று மனம் தெளிந்து விட்டது6/11
.// //

இன்றும் என் மனம் அதே நிலையில்தான் உள்ளது.சந்திப்பை என்னால் மறக்க முடியவில்லை.His height  and posture resembled karthik very much .அந்த உயரமும் கம்பீரமான நடையும் என் கார்த்திக்கை போலவே இருந்தது.அந்த தாயைப் போல்தான் வெறித்த பார்வையுடன் இருந்தேன்.'அவன்'  என்ற வார்த்தை ''அது ''என்றான கொடுமை????????கார்த்தி என்று அன்புடனும் admiration உடனும் சொன்னவர்கள் ஒரு பார்சல் ஆக அவனை பார்த்த கொடுமை   .
அன்று இறந்த 166 பேர்   வீட்டிலும் இதே சோகம்தான் இருந்திருக்கும்.அதனால் கசாப்பை மன்னிக்க முடியவில்லை.அனாலும்  ஒரு உயிர் இல்லாமல் போவது வேதனையான விஷயம்தான்.
அவனை பயிற்றுவித்து அனுப்பியவர்களை என்ன செய்வது ?கசாப்பின் தாயின் நிலையை பற்றி யார் நினைத்தார்கள்?
Will this terrorism stop ? SHOULD .
கார்த்திக்+அம்மா 

2012/11/17

 Textbook Claims Non Vegetarians Commit Crime
CBSE topper wants to clear civil se...
// // //புது டெல்லி: மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எல்லாம் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று 6 ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் அசைவ உணவுப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பாடப்புத்தகத்தில் நாடார்களைப் பற்றி கூறப்பட்டுள்ள சர்ச்சையே இன்னும் ஓய்ந்த பாடில்லை. ஆங்காங்கே போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ‘நியூ ஹெல்த்திவே' என்ற பெயரில் உள்ள பாடத்தில் ஹெல்த், ஹைஜீன், பிசியாலஜி, பாதுகாப்பு, பாலியல் கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதில்தான் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் எளிதில் ஏமாற்றுவார்கள், பொய் கூறுவார்கள், கொடுத்த வாக்கை காப்பாற்ற மாட்டார்கள், நாணயம் தவறிவிடுவார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், வன்முறையாளர்களாக இருப்பார்கள், செக்ஸ் குற்றங்களில் அதிகம் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.// // //
Who is this genius who is sitting there on the CBSC syllabus committee?
யார் இந்த அதி மேதாவி ?
எத்தனை  பொய்யான தகவல்கள் . அதிலும் தமிழ்  நாட்டைப் பற்றியே குறி வைத்து தமிழ் நாட்டை  கேவலப் படுத்துவது ஒன்றே குறிக்கோள் போல் எழுதும் இவர் யார் ? 
ஒரு விஷயம் சொல்லாமலே புரிகிறது கண்டிப்பாக இவர் அந்த உயர் ஜாதி சார்ந்தவர் .
எத்தனை முறை iஇப்படி நம்மை கேவலப் படுத்துவார்கள் 
அசைவ உணவு உண்ணாத இவர்கள்தான் கோவிலின் கருவறையை  படுக்கையரையாக மாற்றி அதையும் செல்போனில் படம் pபிடித்து மகிழ்ந்தவர்கள்இன்னும் எவ்வளவோ  சொல்லிக் கொண்டே போகலாம் இந்த விளையாட்டை இதோடு நிறுத்திக் கொள்வது நல்லது   .
 

2012/11/14

14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா 

2012/11/12

வரவே மாட்டான்  என்று தெரிந்தும்
வந்து விட மாட்டானா
ஏதாவது அதிசயம் நடந்து
அம்மா , என் அம்மா
என்று செல்லமாக  சொல்லிக் கொண்டு
ஓடோடி வந்து என் கன்னத்தோடு
கன்னமாக இழைத்து கொஞ்சுவானே
...  ....
வந்து விட மாட்டானா என்று மனம் ஏங்கி
வாசலையே  பார்த்துக் கொண்டிருக்கிறது.
1999 தான் நாங்கள் இறுதியாக கொண்டாடிய தீபாவளி .
அப்போது மேட்டூர் [mettur dam ] ல் இருந்தோம். கார்த்தி அண்ணா பல்கலையில் , கிண்டி ,hostel ல் .
தீபாவளிக்கு  அடுத்த நாள் semester exam .கார்த்திக் வீட்டிற்கு வருவதா ,தேர்வு அடுத்த நாள் என்ற குழப்பம்.
ஆனால் அண்ணன் வந்தே ஆக வேண்டும் என்று செந்தில் பிடிவாதம்.தம்பியின் ஆசை எதுவானாலும் அதை at any  cost  செய்து தருவதுதானே கார்த்திக்கிற்கு  பழக்கம் .அதனால் 1999 தீபாவளிக்கு வந்தான்.
2000 ல் என் கணவர் மறைந்த பிறகு தீபாவளி  கொண்டாட்டம்  நின்று விட்டது .
ஆனால் 3 பேரும் , நான், கார்த்தி, செந்தில் என 3 பேரும் சேர்ந்திருப்பதே பெரிய தீபாவளியான சந்தோசம்.ஆனால் அதுவும் இல்லை என்று  ஆனது தாஆஆஆந்க தாங்க முடியாத ,  வேதனை,  வேதனை..   வேதனை தரும் விஷயம்.சோகம் .கஷ்டம் .
2004 ம வருடம் தீபாவளிக்கு  பெங்களூரில் இருந்து சென்னை வர train ,bus ticket எதுவும் கிடைக்காமல் driver சீட்டீற்கு பின்னால் இருக்கும் சீட்டில் 6 பேருடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டே வந்து அவ்வளவு சோர்வுடன் வந்தான்.அதுதான் கடைசி தீபாவளி .
ஏன் ?ஏன் ?ஏன் ?ஏன் ?

2012/10/25

இது செய்தி.
// //  இந்த நிலையில் தற்போது அந்தக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, கலா, நீலா, மாயா என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இதையடுத்து அம்மா பெயர் வைத்த சிங்கக் குட்டிகள் என்று பலரும் அந்த சிங்கக் குட்டிகளை ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துச் செல்கின்றனரா//  //..ஹ ஹ ,
கலா [கலா கார்த்திக் ]என்றாலே சிங்கம்தானே.
வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் பிறந்த சிங்கக் குட்டிகள் மூன்றிற்கு முதல்வர் வைத்த பெயர்.
கார்த்தி எப்போதும் சொல்வான்.  ''நான் சேலத்து சிங்கம் ''.என்று.
முதல்வருக்கு நன்றி.
கார்த்திக் அம்மா


சின்மயி பற்றி பல விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது.சத்தியம் தொலைக் காட்சியில் மனுஷ்யபுத்திரன்  பேசுகிறார்.
HATS off மனுஷ்யபுத்திரன்.
அவர் கேட்கிறார்.சின்மயி நேரடியாக I .G யை பார்த்து புகார் கொடுக்கிறார். மற்றவர்கள் அப்படி செய்ய  முடியுமா ? என்று ....எனக்கும் இது போல் ஆபாச s .m .s ,தொலைபேசி தொல்லைகள் வந்தன. போலீசில் புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.எனக்குதான் அரைமணி நேர உபதேசம் .
அதே போல் என் கைப்பை [purse ]திருடப்பட்டது. police station சென்றேன்.புகாரை எடுத்துக் கொள்ளவே இல்லை.
சாதாரண  police station லியே இப்படி என்னை நடத்தினார்கள் என்றால், I .G ..ha ,ha நினைத்துப் பார்க்க கூட முடியாது.
ஜாதி, செல்வாக்கு என்று நான் சொல்ல வரவில்லை.ஏனென்றால்  ''பயம்தான்.''
கார்த்திக் அம்மா 

2012/10/18

T.V Bits
தருமி ஐய்யா சொன்னாரே  என்று சரவணன்  மீனாட்சி ஒரு 10 நிமிடம் பார்த்தேன். என்னப்பா ,அந்த பெண் கணவனை அத்தனை 'டா ' போடுவதும் சரவணன் 100  '' டி '' போடுவதும், அவன் தன அப்பாவை அது இது,யோவ் என்று சொல்வதும்,
தாங்கவில்லை.
*ஆச்சி  சாம்பார் பொடி :
எங்கிருந்து பிடித்தார்கள் சிநேகாவிற்கு  மகளாக வரும் அந்த குட்டிப் பெண்ணை? ஜோர். அப்படியே  சினேகா ஜாடை. தன்  தந்தை வந்தவுடன்  அம்மாவின் சாம்பார் மணத்தை   பற்றி அவர் கேட்பார் என ஆசையோடு ஓடி வருவதும் ,அவர் அதைப் பற்றி கேட்காமல் போனவுடன், முகத்தில் தெரியும் அந்த ஏமாற்றம் ...இயல்பாக உள்ளது. ஏதோ  ஒரு குழந்தை ஏதோ  ஒரு சினிமாவில் நடித்ததைப் பற்றி மூச்சு  விடாமல் பாராட்டியவர்கள் ,இந்த பெண்ணையும் சிறிது பாராட்டலாமே.
*சொல்வதெல்லாம் உண்மை:
        இந்த நிகழ்ச்சியில் வரும் பெண்கள் 90% கள்ள உறவு.திருமணத்திற்கு முன்பே உறவு என  ...இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த சில இளைஞர்கள் ''திருமணம் செய்யவே  பயமாயிருக்கிறது '' என்றனர்.நேற்று நிகழ்ச்சியில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பெண் 7 மாதம் வரை தான் கருவுர்ரிருப்பதே தனக்கு தெரியவில்லை என்று சாதித்தார் .அந்த பெண்ணிற்கு ஆதரவாக எத்தனை பேர்.
இப்படியே போனால், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது ஒரு கட்டாயம்  என்று  ஆகி விடும் போல இருக்கிறது.Something  undigestable
* பழைய பாடல்கள் நிகழ்ச்சியில் K .R விஜயா பாடும் 'அத்தை மடி மெத்தையடி '' பாட்டும்,
கண்ணன் வருவான் பாட்டும் பார்த்த போது 1981+1982ல் ல் இருந்த என்னை நானே பார்த்துக் கொண்ட மாதிரி இருந்தது.அந்த hairstyle ,மாட்டல் ,பூ ,அதே design  புடவை என [ நானும் அப்படி ஒல்லியாக இருந்தேன் ],கார்த்தியை எடுத்துக் கொண்டு இப்படித்தான் ஆடல் ,பாடல் என்று சிறகடித்துப் பறந்தேன்.
அதே போல் ஜெமினி +விஜயா குழந்தையை குளிக்க வைக்கும் காட்சியும்.அப்போது நானும் என் கணவரும் கார்த்தியும் என பெரயவர்கள் உடன் இல்லாத தனிக்குடித்தனம்.நான் கார்த்தியை மடியில் வைத்துக் கொள்ள அவன் தந்தை தண்ணீர்  ஊற்ற என அவனை குளிக்க வைப்பதே ஒரு பெரிய இன்பமான வைபவம்.

















அந்த பாடல்கள் எனக்கு குளுக்கோஸ் .
கார்த்திக்+அம்மா 

2012/10/14

தி English  and த  English
நான்  டீச்சர் ஆக இருந்தபோதே  இந்த discussion  வந்தது. ஏன்  The  U .S .A  and why  not the India .
Here  we  to consider  some grammatical  rules . the word THE is  pronounced  both  as  thi and as  tha .When the word that follows the article 'the ' starts with a,e,i,o,u sounds [take note , its the sound and not the letters ] then the should be pronounced as''  thi  ' 'and if it is followed by other words it should be pronounced as'' tha ''.
*The second rule is :if the thing referred to is 'unique ' ..only one ..then the article 'the ' is added before the word even if the word starts with other than a,e,i,o,u sounds. For example,  'the sun '  the moon''...
     I and my students  would get into an inter action and I would vehemently, passionately  and PATRIOTICALLY say that it should be THE India ,  because it is unique,special to us and the greatest.
Suddenly one student came with the question ''why do they advertise as 'The Chennai  Silks ?'',
   My reply was that ''they might (the chennai silks ) owners , knowingly or unknowingly might have tried to assure the customers that their shop is unique.
    Anyhow ,in the film English, Vinglish actor SriDevi asks why not the [tha ]India.As for as knowledge goes it should be 'thi ' India.
*If at all any student by mistake had written india [in small letters , lower case ] instead of capital 'I' i would give him a 0/100.And that student would realize his mistake.

*a,b,c....z  are letters of the alphabet  and it should not be said as 'alphabets' all the 26 letters constitute English alphabet.
only if the letters of different languages are referred to then we can say alphebets.
Grammar என்பது மிகவும்  இனிமையான பாடம். நடத்த  நடத்த நிறைய  விஷயங்கள்  சொல்லிக் கொண்டே போகலாம். எனக்கு மனப்பாடம் செய்வதே  பிடிக்காத  விஷயம். வருட முடிவில் என் மாணவர்களும்  என் வழிக்கு வந்து விடுவார்கள்.
இன்னும் பல அனுபவங்கள் அடுத்த பதிவில்.for  eg  debate
இதுவே  மாற்றான் பட அளவிற்கு நீளமாக இருக்கிறது ,தாங்கவில்லை ,போதும் ,bore  என்கிறிர்களா ,
விடுவதாயில்லை   நான்
அன்புடன்,
கார்த்திக்+அம்மா 

2012/10/09

ahaaaa,
I am BELOW  POVERTY  LINE
so long i have been thinking that i belonged to the so called upper middle class.Switch on the T.V  all channels talk about so many having accumulated not 10  or 20 crores  but simply just 1000 or 10000 or 32000 crores.Be it Emu or redsoil or online or lottery and the list is endless.Somehow many persons have money more than 100 crores.
I feel ashamed to have been thinking that I am rich .Now i realize  compared to these people i am below, below , below poverty line.
மக்களே ,என் இனிய தமிழ் மக்களே
என் சோகக் கதையை கேளுங்களேன் .
இது நாள் வரை  நான் ஏதோ ஒரு குட்டி [ குட்டியூண்டு ]செல்வந்திரி என்று நினைத்திருந்தேன்.இந்த உயர் மத்திய வர்க்கம் என்று நினைத்திருந்தேன்.ஆனால், இப்போது வரும் செய்திகளை பார்க்கும் போது ,ஒரு பக்கம் ஈமு ,ஒரு பக்கம் செம்மண், ஒரு பக்கம் தங்க நகை திட்டம்,  [அடேயப்பா , எத்தனை ரூம் போட்டு யோசிப்பார்கள் ? ஆனாலும் சும்மா  சொல்லக் கூடாது , அறிவுப்பா அறிவு , அறிவோ  அறிவு,] எத்தனை வகையான திட்டங்கள், எவ்வளவு பணக்காரர்கள்? அதுவும் ஒரு கோடியா அல்லது 2 கோடியா ?மினிமம் 100, 32000,160000 கோடி.
எனக்கு அழுகை அழுகையாக வருகிறது.இவர்களை பார்க்கும் போது நான் வறுமைக் கோட்டிற்கு கிழே தான் இருக்கிறேன்.
வாழ்க பணக்கார தமிழ்நாடு
கார்த்திக்+அம்மா 

2012/10/02

நீங்களும்  வெல்லலாம்  நிகழ்ச்சியில்  சூர்யா சொன்னார் : எனக்கு  பிடித்த பாரதியார்  பாட்டு :
தேடி  சோறு  நிதந் தின்று .....
.....    ......   ....
சொல்லடி  சிவசக்தி 
       இது கார்த்திக்கிற்கு  மிகவும் பிடிக்கும்.அவனுடைய  கேபினின் மேசையில் இந்த பாட்டு ஓட்டப்  பட்டிருக்கும் This was in the year 2002.Karthik used to have Bharathiyar's book with him.
Its  GREAT  IRONY that as in the poem HE NEVER GREW OLD.

What to say? Look at his table.He is HE .

2012/09/19

தற்போது ஜெயா தொலைக்காட்சியில்  விஸ்வநாதன் +ராமமூர்த்திக்கு   நடத்திய  பாராட்டு விழாவை பார்த்தேன்.
என்னை கவர்ந்த விஷயங்கள் :
*பெண்கள்  அனைவரும் படு பாங்காய் புடவை அணிந்து பாந்தமாய் ,பவ்யமாய்  இருந்தது. இங்கு வந்த சிலர் மற்ற அரங்குகளில் கொடுமையான உடை அணிந்து படு கவர்ச்சியாய் வந்துள்ளனர்.
முதல்வர்  இந்த உடை விஷயத்தில் கவனம் செலுத்துவதாக  அறிந்து அதற்காக அவரை பாராட்ட வேண்டியது அவசியம்.
*யாரும் தவறாகவோ ,அலட்டலாகவோ, இல்லாமல் ,தன ஆசிரியையின் முன்பு பயபக்தியுடன் இருக்கும் மாணவர்கள் போல் இருந்தது போல் தோன்றியது.
*நிறைய பழைய நடிகர்கள் ,நடிகைகள் மனம் நெகிழ்ந்ததை பார்க்க முடிந்தது.பரபரப்பான  அரங்கம் அதிரும் கைதட்டல்கள் இல்லை.மற்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் யாரோ கைதட்டிக் கொண்டே இருப்பார்கள்.விசில் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.ஊய்  என்ற சத்தம் காதை கொல்லும் .
ஆனால் அது எதுவும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி .After so long a time a program , a  decent program without dirty dances and irritating comedy ,made  me  write this post even as the program  continues and  has  not ended .
முதல்வருக்கு ice , காக்கா என்று யாரும் கூவ வேண்டாம்.மனதிற்கு சரியென்று தோன்றியது. எழுதினேன்.
கார்த்திக்+அம்மா 

//  //  குற்றச்சாட்டுகள் குறித்து புதிய துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சையிடம் கேட்டபோது, ""என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். துணைவேந்தர் பதவிக்கு போட்டியிட்டு கிடைக்காதவர்கள் கிளப்பி விடும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு கவலை இல்லை. என் மீது தவறு இருந்தால், வேளாண் பல்கலையில் 35 ஆண்டுகளாக பதவி உயர்வுகள் வழங்கப்பட்டது எப்படி, அதிகாரிகளையும் நீதித்துறையையும் மீறி உயர் பதவிகளை பிடிக்க முடியுமா, அரசுகள் மாறினாலும் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதற்கு, நான் ஒன்றும் எம்.எல்.ஏ.,வோ அரசியல்வாதியோ இல்லை. சாதாரண ஏழை கிறிஸ்தவ ஆசிரியர். நான் குற்றமற்றவன் என்பதை விரைவில் நிரூபிப்பேன். உண்மைக்காக பாடுபடுவேன். அனைவரையும் கல்விச் சென்றடைய செய்வதே இனி என் முக்கிய நோக்கமாக இருக்கும்,'' என்றார்.//  // //
இது ஒரு துணைவேந்தர் சொல்வது.
ஒரு ஆசிரியராக இருப்பவரே மதத்தை பற்றி பேச கூடாது.மாணவர்கள் மத்தியில் பல பிரச்சினைகள்  வரும்.  அப்படியிருக்க பல  ஆசிரியர்களை நியமிக்க அதிகாரம் உள்ள பதவியில் அமரும் இவர்  தன மதத்தை நிலை நாட்டுவது  எந்த வகையில் நியாயம்?
இவர் ஜெயிலில் இருந்துள்ளார் ,பணம் கையாடல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கு இவர் சொல்லும் பதில் இது.
ஏற்கனவே ஒரு திரைப் படம் நேற்று அண்ணா சாலையில் ஏற்படுத்திய களேபரம் போதாதா ?
மதம் ஒரு அபின், சாராயம், விஸ்கி என எல்லாம் கலந்த எல்லை கடந்த போதை தரும் ஒரு கொடிய விஷம்.
இந்த ஒரு காரணத்திற்காகவே இவரை இந்த பதவியில் இருந்து விலக்கலாம் .
.....       .......        ......
இந்த T .V channels பிள்ளையாரை ஒரு வழிப் படுத்திவிட்டன. Too much of anything is  good for nothing .மிகைப் படுத்தல் ,ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பேசினாலும் அதன் ஈர்ப்பு குறைந்து விடும்.T .V channels எந்த காரணம் கிடைக்கும் ,program போடலாம் என்று அதிக ஊட்ட சத்து கொடுத்தால் அதிக ஆபத்துதான்.
கார்த்திக்+அம்மா  

2012/09/15

FDI in RETAIL
Central Govt has given the freedom to States to decide as to their wish.If Tamil nadu  wishes it can permit FDI .Once it decides not to allow , well and good, you need not have.
T.N  C.M has announced that she is against it.
Well , the matter is over.
But all the T.V channels are enjoying the chance to have programs on it.
அப்பப்பா , பேசுபவர்கள் எதற்காக இப்படி கத்துகிறார்கள்?
தமிழிசை  கத்தும் சத்தம் காதை  கிழிக்கிறது.
அவருடன் பேசும்  அமெரிக்கை  நாராயணன் எவ்வளவு பொறுமையாக பதில் சொல்கிறார்.
சொல்லும் விஷயத்தை அழுத்தம் திருத்தமாக சொல்வதே சரியான முறை.
அடுத்தது,
ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது  குறுக்கிட்டு பேசுவது....அவர் பேசி முடிக்கட்டுமே.அவருடைய கருத்து என்ன அன்று தெரிந்து கொண்டு , அந்த கருத்துகளுக்கு பதில் சொல்லுங்களேன்.
எவர் ஒருவர் தன மீதும் ,தன கருத்துகளின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார்களோ , அவர்கள்தான் இப்படி பேசுகிறார்கள் .
நானும் ஒரு  மேடைப் பேச்சாளிதான் .நானும் பல பட்டி மன்றங்களில் பேசியுள்ளேன்.need  it be said that i would always be the winner .
ஒரு பட்டி மன்றத்தில் பேசி விட்டு மேடையை விட்டு இறங்கிய பிறகும் ஒரு பேச்சாளர் என்னுடன் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். எனக்கோ வீட்டுக்கு செல்ல வேண்டிய அவசரம். கார்த்தி , செந்தில் தனியாக இருப்பார்கள். அவர்களுக்கு உணவு தயாரித்து தர வேண்டும் என்ற என் அவசரம் எனக்கு.
மேடைப் பேச்சும் , அந்த நடுவரின் தீர்ப்பும் என்ன supreme  court  judgement ஆ ?
ஏன் மக்கள் இவ்வளவு உணர்ச்சி வசப்படுவார்களோ?
         சரி, இந்த FDI  விஷயத்திற்கு வருவோம்.
நான் வேளச்சேரியில்  இருக்கிறேன்.மாலை ஒரு 5 மணிக்கு விஜயநகர் சிக்னலில் வந்து பாருங்கள்.ஒரு 15 சிறு வியாபாரிகள் சாலையின் ஓரத்தில் 10 ரூபாய் ஒரு கவர் என அனைத்து காய்களும், கீரைகளும் வைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அருகிலேயே, ஊட்டி ,பொன்கவிதா ,Daily fresh  என ,+Reliance ,Cee Dee Yes என்ற கடைகளும் இருக்கின்றன.
ஆனாலும், இந்த சிறு, (மிக சிறு ) கடைகளிலும் வியாபாரம் நன்றாகத்தான் நடக்கிறது .
Customers are not fools .அவர்களுக்கு தரமான பொருட்கள், சரியான விலையில் விற்கும் கடைகள்தான் தேவை.
எனவே  ஆயிரம் Wall Mart வரட்டுமே.நம்மூர் அண்ணாச்சிகளும் அதே தரத்தில் , அதே விலையில் கொடுக்கட்டுமே.நாங்கள் உங்கள் கடையை விட்டு வேறு கடைக்கு ஏன் போகிறோம்?
அடுத்த விஷயம்,
நான் அனுபவித்த விஷயம்,
the treatment  that one gets at these shops .ஏதாவது கேளுங்கள், காது  கேட்காத  போல இருப்பார்கள்.
அதுவே பெரிய  mart களில் , madam  என்ற மரியாதை இருக்கும்.
ஆக, இந்த FDI வரமா, சாபமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்.
பார்ப்போம்.
கார்த்திக்+அம்மா 

2012/09/06


அம்மாவிற்கு அஞ்சலி


















Today is September 5 th..Teacher's day.
My mom was a very good teacher and Head Mistress of a Govt.high school.She joined duty  at the age of 17 and worked till 59. just can't guess. 42 years of service.
A very dynamic lady. Multi talented, versatile, boldest,and a dedicated and devoted teacher.
And there's no other testimony that she was the best of the best teachers , that she died on September 5 th last year.
இந்த கவிதை (??) எப்போதோ எழுதியது.இப்போது எதேச்சையாக கண்ணில் பட்டது.என் தாய்க்கு இது எவ்வளவு பொருத்தம்  என்று அதிசயமாக இருந்தது.

கதிரோனுக்கு காட்சியே விரிவுரை 
பூவிற்கு மணமே  முகவுரை 
வெண்ணிலவிற்கு குளிர்மையே  அணிவுரை 
          ஆயின் 
எம் ஆசிரியைக்கு  இவையனைத்தும்  எவ்வுரை ?
உரைப்பதற்கு  இதுவென்று கட்டியிட்டால் 
எல்லையுண்டாயின்  உண்டு ஓர் உரை.
எல்லையில்லார்க்கு  ஏது  அணிந்துரை ?
.... ...   .....    .....
காண முயலெய்திய  அம்பினின் 
யானை பிழைத்த வேலினிது  
என்பர்.. அது போல் ,
தோல்வியை முன்னெதிர்  கொண்டு
வெற்றியிலா  முயற்சிக்கு 
யான் இயற்ற விரும்பினேன் 
(அதாவது  அந்த நல்ல  ஆசிரியை  பாராட்டி கவிதை எழுதுவது என்பது அவ்வளவு கஷ்டமான  விஷயம் )
எளிமைக்கோர்  எடுத்துக் காட்டாம் 
களிப்புக்கோர் கண்ணாடியாம் 
தவறு ,தவறு 
எளிமைஎன்றேனே  அது தவறு 
நகையால்  நகைச்சுவை  எனும் நகையால் 
போர்த்திய நகைப் பெட்டகம் 
அப்படியாயின் எளிமை  ஏது ?
வலிமையே முழுமையாய் 
வாழ்ந்தே வென்றாய் 
அம்மா உனக்கு என் அன்பு வணக்கங்கள்