Vijayanagar - விஜயநகரம்

I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo

About Me

My photo
Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
View my complete profile

2018/02/24

My salutes

சொல்ல வார்த்தைகள் இல்லை வீர மங்கையே.
கண்கள் குளமாகின்றன .
வணங்குகிறேன்.
கார்த்திக் அம்மா 
இந்திய விமானப்படையின் விங் கமாண்டராகப் பணியாற்றி வந்தவர் டி.வட்ஸ். இவரது மனைவி குமுத் மோர்கா, ராணுவத்தில் மேஜராகப் பதவி வகித்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த மோர்கா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மனைவியிடம் விடைபெற்று விட்டு கடந்த 15-ம் தேதிக்குப் பணிக்குச் சென்ற டி.வட்ஸ், மீண்டும் திரும்பவே இல்லை. அசாமின் மஜூலித் தீவுப் பகுதியில் வட்ஸ் மற்றும் அவரது சக விமானப்படை விமானி ஜெய் பால் ஜேம்ஸ் ஆகியோர் பயணம் செய்த விமானப்படை ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. 
அவர் உயிரிழந்த சில நாள்களில் மோர்கா, பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். இந்தநிலையில், வட்ஸின் இறுதி ஊர்வலம் அண்மையில் நடைபெற்றது. அந்த இறுதி ஊர்வலத்தில் ராணுவச் சீருடை அணிந்தபடி, பிறந்து 5 நாள்களே ஆன தனது குழந்தையுடன் மேஜர் குமுத் மோர்கா கலந்துகொண்டார். தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினருடன், கையில் குழந்தையை ஏந்தியபடி கணவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவர் செல்வது போன்ற புகைப்படங்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:29 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/02/15

காதலர் தினம்

காதலர் தினம் :
காதல் என்பது தனி மனித உரிமை.
right .
தாய் தந்தை இல்லாமல் தானே பிறந்து,
தானே தனி மனிதனாக வளர்ந்து விட்டீர்களா ?????????????
அதுவும் சரி.
காதல் செய்யுங்கள்.
ஆனால்
கண்ட இடத்தில் காதல் செய்ய வேண்டாம்.
ஒரு பொது இடத்தில் முத்தம் கொடுப்பது
பொது இடத்தில் கட்டி பிடிப்பது
போன்ற அறுவறுப்பான செயகைகளை தவிருங்கள்.
காதலித்தவரையே கல்யாணம் செய்யுங்கள்.
கடைசி வரை அவருடனேயே குடும்பம் நடத்துங்கள்.
உங்கள் தனி மனித சுதந்திரம்
இன்னொரு தனி மனிதனின் தலை வலியாக மாற கூடாது.
ஆதலினால் காதல் செய்வீர்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 08:47 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/02/07

karthik karthik

this was posted by karthik in 2004
3 Names you go by:
Kuchi
Demi
Karthik

3 Screen names:
PonniyinSelvan
Neo
Aragon

3 Physical things you like about yourself:
Me
Me
Me

3 Physical things you don't like about yourself:
NA
NA
NA

3 Parts of your heritage:
Rich colorful history
Endurance
Honour

3 Things That Scare You:
Idiots
Theory Exams
MBA Assignments

3 Of Your Everyday Essentials
Music
Computer w/ net conn
Bike/Car

3 Things You Are Wearing Right Now
Shirt
T-Shirt (yeah, one on another)
Jean

3 Things You Want In A Relationship
Dependence
Independence
Sensibility

Two Truths and A Lie (in no particular order)
I am always logical
I am hyper-egoistic
I am in love

3 Physical Things About the Opposite Sex That Appeal To You
Liveliness
Dressing Sense
Eyes

3 Things You Want To Do Really Badly Right Now
Dance like crazy
Drive like crazy
Rock-climbing

3 Careers You Are Considering
Archaeologist
Director
Technical Architect

Three Places You Want To Go On Vacation
Hampi
Ladakh
Switzerland

Three Kids Name You Like
Ilaya Pallavan (I named my uncle's kid so. He will grow up to curse me, I guess)
Arun
Kayazhvizhi

Three Things You Want To Do Before You Die
Make a movie on Vijayanagar
Build Indian history database
Write a path-breaking AI application

People Who Have To Take The Quiz Now:
Mani@Balasubramani
Sudhakar
Kicha
Posted by Ponniyinselvan/karthikeyan at 13:04
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
  

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 15:59 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/02/06

சுடிதாரில் அம்மன்

ஹா ஹா ,நல்ல ரசனை உள்ள குருக்கள்.
நவீன காலம் .அம்மன் மட்டும் இன்னும் என்ன மடிசார்
ஏன் என்று நினைத்தாரோ என்னவோ.
இப்போதெல்லாம் ஐதீகம் கெடவில்லை.
அடுத்து நீச்சல் உடை.யா ?
நடத்துங்கள் ராஜ்ஜியத்தை.
அவரை பார்த்து சோடா பாட்டில் வீசலாமே .
(மயூர நாதர் கோவில்  அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் செய்தார் பட்டர் என்பதுதான் செய்தி.)
கலி  முத்தி போயிடுத்தோன்னோ .
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:39 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/02/02

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை  பலருக்கும் நல்ல நாள்.
ஆனால் எனக்கு அது தாங்க முடியா துயர் தந்த நாள்.26.08.2005
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கார்த்தியுடன் 8.50 வரை இருந்த அந்த நிகழ்வுகள்,பேசிய வார்த்தைகள் மட்டுமே நினைவில் இருக்கும்.
செந்திலை தவிர மற்றவர்களிடம் நேரிலோ  தொலை பேசியிலோ பேசுவதில்லை.
100% தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதுண்டு.
முடிந்த வரை மௌன விரதம் மேற்கொள்கிறேன்.
2011 வரை கார்த்தியின் விபத்தின் போது கார்த்தியை ஆட்டோவில் கொண்டு சென்று மணிப்பால் மருத்துவ மனையில் சேர்த்த அந்த நல்லவருக்கு சரியாக காலை 9 மணிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவிப்பேன்.
மனம் அவர் பாதம் பணியும்.
ஆனால் அவர் தொலைபேசி எண்னை  மாற்றி விட்டார் என்று நினைக்கிறேன்.
என் தொல்லை தாங்காமல் அப்படி செய்திருக்கலாம்.
ஆனால் இன்றும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என் மனம் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டே இருக்கிறது.
மகனின் பிரிவு வேதனை ,அவனை பார்க்க முடியாத ஏக்கம்
சொல்ல முடியாத துயரம்.
கண்ணீருடன்
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:46 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/02/01

க் க் க் ஆ கோல்டு +லலிதா ஆண்ட்டி
தாங்க முடியலடா சாமி.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.
எந்த சேனல் திருப்பினாலும் இந்த இரண்டு விளம்பரங்கள்.
நிஜமாகவே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு போய் அடுத்த கடையில் காட்டினால்  அந்த கடைக்காரர் என்ன சொல்வார் .
மக்கள் எதையும் கணக்கு போட தெரிந்துள்ளார்கள்.
இத்தனை விளம்பரத்திற்கு எத்தனை செலவு..இது யார் தலையில் விடியும் என்பதெல்லாம் யோசிக்க தொடங்கி விட்டார்கள்.
விளம்பரத்தை குறைக்கலாம்.
இதில் சரவணா ஸ்டோர்ஸ் பாராட்டுக்கு உரியது.பண்டிகை காலத்தில் அதிகமான விளம்பரம்.இப்போது குறைவு.
வியாபாரம் மக்களை ஓரளவிற்குத்தான் ஏமாற்ற வேண்டும்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:38 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/01/31

என் தந்தையும் அப்படித்தான்:
//   இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பிற்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தலைமையாசிரியர் வீ.மனோகரன் தனது பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் சரவணக்குமார், நீலகண்டன், செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் ஆகியோருடன், இரவு நேரங்களில் 10, 11, 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் வீடுகளுக்கு சென்று,  இரவு நேரத்தில் படிக்கிறார்களா என கண்காணிப்பதுடன் அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுறை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். //   //
இந்த செய்தியை படித்தவுடன் என் தந்தை நினைவுதான் வந்தது.
அப்போது வறுமையில் இருந்த மாணவர்கள் ஹாஸ்டலில் தங்கி படிக்க வேண்டும்.
இலவச ஹாஸ்டல்.
என் தந்தை இரவில் இரு முறையாவது திடீர் என்று சென்று கண்காணிப்பார்.
அப்போது அந்த பள்ளி மிகவும் பிரபலம்.
அப்போதெல்லாம் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தனர் ஆசிரியர்கள்.
   இப்போது இப்படி ஆசிரியர்களை பார்ப்பது அரிதாகிறது.
வாழ்த்துக்கள் 
கார்த்திக் அம்மா

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:21 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/01/14

ஆண்டாள் :
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.
நோயுடன் போராடும் மக்கள்.
வறுமையின் பிடியில் பலர்.
வேலையில்லா பிரச்சினை.
தண்ணீர் இல்லை.
விவசாயம் இல்லை. விளைச்சல் இல்லை.
எத்தனை கஷ்டங்கள் .
இதையெல்லாம் விட்டு விட்டு
உண்மையில் இருந்தாரா  இல்லையா என்பது கூட உறுதி படுத்த இயலாத ஒருவருக்கு என்ன ஆர்ப்பாட்டம்.
இந்த விஷயத்தில் காட்டும் தீவிரத்தில் 50% மக்களின் துயர் தீர்க்க செயல்பட முன்வரலாம்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:23 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/01/09

நீயா .நானா :
ஜாதி :
இந்த வார    நீயா   நானாவில் குழந்தைகளை  மைய படுத்தி   நிகழ்ச்சி இருந்தது.
ஒரு குழந்தை ஜாதி என்றால் என்ன என்று கேட்டது.
a very simple answer .
who is a teacher?
a doctor?
a carpenter?
எந்த தொழிலை நாம் செய்கிறோம் என்பதே ஜாதி ஆகியது.இப்போது போல் அப்போது பள்ளி , கல்லூரிகள் கிடையாது.
அப்பா தனக்கு தெரிந்த தொழிலை மகனுக்கு சொல்லி கொடுத்தார்.அப்படியே அது குல  தொழில் ஆகியது.
அவர்கள் செய்யும் வேலையை வைத்து அந்த பெயரிலேயே சொல்ல ஆரம்பித்தனர்.  
தச்சு வேலை செய்தவர் ஆசாரி ஆனார்.
விவசாயம் (வேளாண் )செய்தவர்  வேளாளர் ஆனார்.
வாணிபம் செய்தவர் வாணிய  செட்டியார் ஆனார்.
எங்கள் ஊரில் 'மரமேறி ' என்ற ஜாதி உண்டு.
தென்னை மரம் , பனை மரம் ஏறி காய் பறிப்பது அவர்கள் வேலை.
மரம் ஏறுவதால் மரமேறி .
பறை எனும் கருவி அடித்து ஊருக்கு செய்தி சொன்னவர் பறையர்.
அவ்வளவுதான்.
D.N.A or Blood group எல்லாம் இல்லை.
நாட்கள் செல்ல செல்ல பிற வேண்டாத கருத்துக்கள் உள்ளே வந்தது.
இப்போது நீ எந்த union ? நான் எந்த union ?
இங்கு ஒரு ஜாதி உருவாகிறது. (அது ஜாதி என்று தெரியாமல் )
people flock together and form a group based on job or ideals .
நீ A.D.M.K வா ?
நான் D.M.K.
இப்போது கட்சியாக பிரிகிறார்கள்.
A.D.M.K குடும்பம் P.M.K சம்பந்தம் செய்கிறார்கள்.
அது பெரிய விஷயமாக பேசப் படுகிறது.
இங்கு ஜாதி பின்னுக்கு போய் கட்சி முன்னிலை படுகிறது.
நான் டீச்சர் ஜாதி.
ஒரு கூட்டத்தில் இன்னொரு டீச்சரை பார்த்தவுடன் எனக்கொரு நட்பு உணர்வு ஏற்படுகிறது.
ஒரு மருத்துவர் (doctor ) இன்னொரு டாக்டருடன் நட்பு  ஆகிறார் (மருத்துவர் என்றும் ஒரு ஜாதி உண்டு.)
அப்படித்தான் ஜாதி.
இதை அந்த சிறுமிக்கு விளக்க தெரியாமல் பெரியவர்கள்  தடுமாற அந்த குழந்தை மேதாவித் தனமாக முகத்தை வைத்துக் கொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
வாஸ்து என்று அடுத்த வார்த்தை கேட்கப் பட்டது.
பதில் இல்லை.
அது பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
கார்த்திக் அம்மா


Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:05 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/01/06

news channels and breaking news and thundering music :
இப்போதெல்லாம் செய்தி சேனல்களில் செய்திகளை கேட்பதில்லை.
கீழே ஓடும் செய்திகளை படிக்கிறேன் .
ஏன் ?????????
ஒரு 5 நிமிடம் செய்தி வாசிக்கிறார்கள்.
அப்புறம் ஒரு 10 நிமிடம் விளம்பரங்கள்.
காதை  செவிடாக்கும் இரைச்சலான இசை???????
(இல்லை ...ஓசை )
அப்பறம் செய்தி வரும் என்றால்
ஒரு இடி மியூசிக் .என்னவென்றால் breaking news .என்னடாப்பா பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் போர் வந்து விட்டதா என்று அதிர்ந்து பார்த்தால்
தலைவர் குளித்து விட்டார்
தலைவர் காலை உணவு உண்டார்.
தலைவர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.
சரி இது ஒரு 5 நிமிடம் இடித்தாயிற்று.
இனி செய்தி வரும் ???????
ஒங்க ஆசைக்கு என்று தமிழை கொலை செய்து
என் ரத்த கொதிப்பை ஏற்றி
வேண்டாண்டா சாமி.
நான் செய்தியே பார்க்கலை .
ஆளை விடுங்கடா சாமி என்று கதற விட்டு ......
டி .வி யை off  செய்து விட்டு மோட்டு வலையை பார்த்துக் கொண்டு கார்த்தி நினைவுகளில் மூழ்கி விடுகிறேன்.
கார்த்திக் அம்மா
பி .கு
ஒட்டு வீடுகளில்தான் மோட்டு வலை இருக்கும்.
அதனால் சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:13 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2018/01/04

வைரஸ் காய்ச்சல் :
10 நாட்கள்.
என்ன வலி.
அப்பா .பிரித்து மேய்ந்து விட்டது viral fever .தலையே தூக்க முடியவில்லை.உடல் வலிக்கு மாத்திரை சாப்பிட்டால் தலை சுற்றல்.
தலை சுற்றலுக்கு மாத்திரை சாப்பிட்டால்
வயிற்றுக்குள் நெருப்பு பந்தை போட்டது போல் வயிறு எரிச்சல்.
அதற்கு ஒரு மாத்திரை சாப்பிட்டால்
loose motion .
இன்னும் சரியாகவில்லை.
கார்த்தி வீட்டிற்கு முதல் தேதியானால் கிளம்பி விடும் நான் இன்னும் சென்னையில்.
விலா  எலும்பு உடைந்த போது கூட என்னுடைய பெங்களூரு கிரி வலத்தை நிறுத்தாத நான் இப்போது ,இன்றுதான் 04.01 mail பார்க்கிறேன்.
கஷ்டப் படவே பிறந்த ஜென்மம் நான்.

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:53 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/12/26

IMPOTENT:
PLEASE TAKE A DICTIONARY AND LOOK FOR THE MEANING OF THIS WORD.:
It is :
powerless 
lacking all strength
helpless 
அப்பாடா
குருமூர்த்தி சொன்னாலும் சொன்னார்.
உடனே ஆரம்பித்து விட்டார்கள்.
எப்படி சொல்லலாம்.
நாங்கள் ஆண்மை இல்லாதவர்களா???????????????
கடவுளே.
O GOD .
எனக்கே இந்த அனுபவம் உண்டு.
DEPENDANT ......dependant
DEPENDENT ......dependent
இரு வார்த்தைகள் உண்டு.
ஒரு கடிதம் எழுதும் போது dependant  என்ற வார்த்தையை எழுதினேன். என் கிளார்க் சிரித்தார்.(கேலியாக)
ஒரு ஆங்கில ஆசிரியை எழுதுவதை பார் என்று.
நான் ஒன்றும் சொல்லவில்லை.
It is foolish to argue with fools.
மௌனம்தான் சிறந்த பதில்.
குருமூர்த்தி அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
மற்றபடி அவர் சொல்லும் மீதி விஷயங்களில் எனக்கு விவாதம் உண்டு.
அதை பிறகு ஒரு நாள் பேசலாம்.
பி .கு.
ஒரு முறை சுப்பிரமணிய சுவாமி paraiya என்ற வார்த்தையை பயன் படுத்தி விட்டு பட்ட அவஸ்தை நினைவிற்கு வருகிறது.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/12/20

J.J @APPOLLO
I am not a great political analyst.
Not even a novice.
நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.
அரைகுறைதான்.
என் வாழ்க்கையைப் போல் அறிவும் அரைகுறைதான்.
ஆனால் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.
'' அம்மா '' வின் வீடியோ வெளியானது
தினகரனுக்கு உதவுமா என்று தெரியவில்லை.
 அம்மாவை பார்த்த மக்கள் உணர்ச்சி மிகுதியில் இரட்டை இலையில்   வோட்டு போடப் போகிறார்கள்.
புத்திசாலித் தனமாக செய்வதாக நினைத்துக் கொண்டு தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டார்களோ ?
24 அன்று தெரியும்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 18:42 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/12/19

நான் திமிர் பிடித்தவள் :
எனக்கு மேட்டூரில் கொடுக்கப்பட்ட பல பட்ட பெயர்களில் இதுவும் ஒன்று.
பொய் பேச மாட்டேன்.
தவறு செய்ய மாட்டேன்.
பயங்கரமான கொள்கை வாதி.
PERFECTIONIST to the core .
my  punch dialogue :
ஊழல் செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள் .
உங்களை திருத்த நான் வரவில்லை .
நீங்கள் திருந்த மாட்டிர்கள் .
என்னை அந்த சாக்கடையில் இழுக்காதீர்கள்.
இப்படியெல்லாம் பேசினால்
'''''அவ யாருக்கும் அடங்க மாட்டா ''''''''
'''''அவ யார் பேச் சையும் கேட்க மாட்டா ''''''
நான் அவர்களிடம் கேட்பேன்
காந்தி பொய் சொல்லவில்லை என்றால் மஹாத்மா என்கிறீர்கள்
ஆனால் எனக்கு  ''''திமிர் பிடித்தவள் ''பட்டம் கட்டுகிறீர்கள் .ஏன் ???
போராட்டம்தான்.
எப்போது ......
....யார் .....
என்ற விவரங்கள் வேண்டாம்.
என் கணவர் Quality control engineer .
ஒரு கையெழுத்து போட்டால் போதும்.
அன்றைய அரசு ஒரு சூட்கேஸ் தருவதாக சொல்லியது.
சென்னைக்கு வரவழைக்கப் பட்டார்.கணவர்.
அவருடன் junior er .
நானும் உடன் வந்திருந்தேன்.
என் கணவருக்கு இந்த விஷயத்தை என்னிடம் சொல்ல தைரியம் இல்லை.
நான்தான் ராட்சசி ஆயிற்றே .
ருத்ர தாண்டவம் ஆடி விடுவேனே .
விஷயம் சொல்லப் பட்டது.
என் பதில் 
பணம் வாங்கினால் நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள்.
நான் என் மகன்களுடன் வாழ்ந்து கொள்கிறேன்.
இந்த விஷயம் தெரிந்தவுடன்
எத்தனை பேருக்கு என் மேல் எவ்வளவு கோபம்.
இவ பெரிய் ய் ய் ய் ய .........
  கார்த்திதான் சொல்வான் 
என் அம்மா சிங்கம் 
எப்போதும் அப்படியேதான் இருக்க வேண்டும் என்று ( இந்த சிங்கம் சிங்கிள் வசனம் வருவதற்கு முன் ).
கண்ணம்மா கார்த்தி 
உன் சொல்படி இந்த அம்மா சிங்கமாகத்தான் இருக்கிறது.
ஆனால் கிழட்டு சிங்கம்
சக்தியற்ற சிங்கம்.
உலகில் இருந்து விலகி தன்னை தானே ஒரு தனி அறை  சிறையில் அடைத்து கொண்ட சிங்கம்.
இப்போது சொல்லுங்கள்.
நான் திமிர் பிடித்தவள்தானே
கார்த்தி அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:25 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/12/11

இது செய்தி : :
மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்
இது உண்மை : :
நமக்கு தெரியாத யாரோ ஒருவருக்கு நடந்தால் அது செய்தி.
நமக்கே நடந்தால்??????????????
செந்திலின் (கார்த்திக்கின் தம்பி )
நண்பன்  ஒருவன் சென்னையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தான் (past tense ).
புதன் மாலை வேலையில் இருந்து திரும்பி வந்த அவன் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் எனக்கு களைப்பாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறான் .
ரெஸ்ட் எடு என்று சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள். 
சற்று நேரம் கழித்து எனக்கு முடியவில்லை என்று சொல்லியிருக்கிறான்.
நண்பர்கள் ஆம்புலன்ஸ் தேடிய போது அந்த ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டதால் ஆட்டோ,cab  என்று தேடியதில் நேரம் வீணாகி அவன் நாடித்  துடிப்பு குறைந்து டாக்டர் வந்து பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. 
புதன் இரவிலிருந்து மேட்டூர் சென்று எல்லாம் முடித்து வெள்ளி இரவுதான்  வீடு திரும்பினான் செந்தில்.
l .k .g முதல் ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி வளர்ந்த நட்பு 
மனம் அதிர்ந்து ....அழுது ......
ஒரு உயிர் அது சம்பந்தப் பட்டவர்களுக்குத்தான் பெரிது.
ஆனால் ஆம்புலன்ஸ் சேவையில் தொய்வு என்பது தெரிகிறது.
எல்லா சேவைகளும்தான்.
கார்த்திக் அம்மா
. 

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 08:48 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/12/06

இரவு 11 மணி
நம்ப  நம்ப முடியவே இல்லை.
ஒரு அரசு அதிகாரி இரவு 11 மணி வரை வேலை செய்கிறார்.
11 மணிக்கு ஒரு மனுவை தள்ளுபடி செய்கிறார்.
என்ன ஒரு கடமை உணர்ச்சி.
புல்லரிக்கவில்லை.
புல் அரிக்கவில்லை.
மரமே அரிக்கிறது.
இந்த வருட விருது இவருக்குத்தான்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 19:26 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
புயலால் பாதிக்கப் பட்டு மீனவர் குடும்பங்களின் படும் துயர் கண்டு மனம் மிக மிக வேதனைப் படுகிறது.
பெண்களின் கதறல் பதற வைக்கிறது.
எந்த வழியில் அவர்களுக்கு உதவ முடியும் என்றும் தெரியவில்லை.
இவர்களின் என்றும் தொடரும் கஷ்டங்களுக்கு ஒரு விடிவு
ஒரு தீர்வு கண்டு பிடிக்க
சம்பந்தப் பட்டவர்கள் முயற்சி செய்யுங்களேன்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 19:06 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/27

மக்கள் டி .வி
நம்பிக்கை    டி .வி
இரண்டு சேனல்களிலும்  12ம் வகுப்பு பாடங்கள்   மற்றும் கேள்வி  தாள் பற்றி அருமையாக பாடம் நடத்துகிறார்கள்.
மாணவர்கள் பார்த்து பயன் அடையவும்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:45 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
திருப்பதி உண்டியல் s .a சந்திரசேகரும் :
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவள் நான் .Religious Tolerance உண்டு.
என் அம்மாவைப் போலவே பக்கத்து வீட்டு பெண்களையும் என் அம்மாவாகவே மதிக்கும் குணம் உண்டு.
ஆனால் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.
என் தாயை மீண்டும் மீண்டும் கேலி செய்தால் பொங்கத்தான் வேண்டும்.
கோபம்தான் வரும்.
மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?
ஒரு நடிகரின் தந்தை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா ?
திருப்பதி கோவில் உண்டியலில் பணம் போட்டு லஞ்சம் கொடுக்கிறோமாம்.
படிக்காமலேயே பாஸ் செய்ய வைத்து விடுவாரா கடவுள் என்று கேட்கிறார் .
அப்புறம் ஏன் உன் மகன் jesus saves என்று letter head ல் அடிக்க வேண்டும்?
சர்ச்சில் ,  வருமானத்தில் 10ல் ஒரு பங்கு கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லையா?
உங்கள் சர்ச்சை
(church  ) பற்றி பேசுங்கள்.
அதை பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்.
உங்கள் மதத்தின் குளறுபடிகளை பற்றி பேசினால் தாங்க மாட்டீர்கள்
கோவில் உண்டியலில் பணம் போடுவது தர்ம காரியங்களுக்கு பயன் படுத்தத்தான் .
மனதை ஒரு முகப் படுத்தி concentration கிடைக்கும் முறைதான் வழிபாடு.
உடலை ஆரோக்கியம் ஆக்கவே கற்பூரம் ,மலர்களின் வாசனை,ஹோமம் ,சாம்பிராணி எல்லாம்.
தெரிந்தால் பேசவும்.
அறிவியல் அடிப்படையில் உருவானது இந்து மதம்.
வழிபாடுகள் அனைத்திலும் அறிவியல் இருக்கும்.
புரிந்து கொள்ளவும்.
நிறுத்திக் கொள்ளவும்.

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 11:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/23

BREAKING NEWS :
அப்பப்பா  கொடுமை தாங்க முடியவில்லை.
உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் BREAKING NEWS : என்று போடுவதுடன் ஒரு கொடுமையான பின்னணி இசை காதை பிளக்கிறது.
செய்தி வாசிக்கும் போதும் அப்படித்தான்.
ஒரே இரைச்சலான இசை.
எனக்கு இருக்கும் ஒரே social மீடியா இதுதான்.
எனது இந்த கருத்து t .v களுக்கு போகுமா என்று தெரியவில்லை.யாராவது இதை அனைத்து t .v களுக்கும் என் வேண்டுகோளாக தெரிய படுத்துங்கள்.
அன்புடன்
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 10:38 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/22

கந்து வட்டி கொடுமையா ????
எனக்கு ஒன்று புரியவில்லை.
எந்த பைனான்சியரும்  நம் வீடு தேடி வந்து ''நீ என்னிடம் கடன் வாங்கித்தான் ஆக வேண்டும் ''   என்று நம்மை மிரட்டி பணம் கொடுக்கிறார்களா ?
இல்லையே.
நாம்தான் அவரிடம் நடையாய் நடந்து வாங்குகிறோம்.
வாங்கும்போதே இத்தனை வட்டி தருகிறோம் என்று சம்மதித்துதான் பணம் வாங்குகிறோம்.
அப்புறம் கடன் கொடுத்தவர்களை ஏன் கொடுமைக்காரர்கள் ...கொலைக்கு தூண்டினார்கள்      என்று  சொல்கிறார்கள்?
ஒரு முறை கடன் வாங்கி விட்டோம்.
கட்ட முடியவில்லை.
உஷாராகி விட வேண்டுமல்லவா ?
நானும் ஒரு நிலம் வாங்க கடன் வாங்கினேன்.
வட்டி கட்ட ஆரம்பித்த போது புரிந்து விட்டது.
இது மீள முடியாத புதை குழி என்று.
அன்றே நிறுத்தினேன்.
ஏதோ
 உயிர் காக்க மருத்துவ செலவு செய்ய கடன் வாங்கலாம்.
அது நியாயம்.
மற்றபடி
ஒரு படம் தோல்வியடைந்தவுடன் உஷாராகி விட வேண்டும் .
அதை விட்டு
தகுதிக்கு மீறி கடன் வாங்கி விட்டு பாவப்பட்ட பைனாசியர்தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு
தற்கொலை செய்வது கண்டிப்பாக ஏற்க முடியாது.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 11:47 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/14

என் மகனே
என் மகனே
தங்கமே
தெய்வமே
செல்லமே
உன் பிறந்த நாள் இன்று
....(14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.).....

14.11.1981         இந்த நாள் தான்

நான் உயிர் கொண்ட நாள்.

என் உயிரை நான் கண்ட நாள்.

என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.

என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.

வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.
வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா
kalakarthik
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:25 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
அன்பே அன்பே
14.11.81
என் அன்பு மகன்
என் உயிர் மகன்
என் தங்க மகன்
கார்த்தியின் பிறந்த நாள்.
என்னுடைய   பிறந்த நாளும்தான்.
ஆனால் சூரியன் அருகில் நட்சத்திரம் போல்
கார்த்தியின் பிறந்த நாளே முதன்மை.
என் பிறந்த நாள் ????????
அருவமாய் இருப்பினும்
(மறு  பிறவி எடுத்து )
உருவமாய் இருப்பினும்
தெய்வமாய் இருப்பினும்
அன்பு மகனே
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கார்த்திக் அம்மா

கலாகார்த்திக் 
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:14 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/13

Ryan Murder :
A good new culture is engulfing  this generation.
I was terribly TERRIBLY shocked when a mother of class 9 student argued with me like as follows.
this was what happened.":
In his son's class a boy drew the picture of CONDOM and started marking parts .:
He was so generous and he offered to help his classmates by clarifying DOUBTS of them regarding it.
Parents were summoned and the extreme shock to the school was that the parents started bombarding the staff  and teachers shouting ''
 '' WHAT'S WRONG ?
WHY DO YOU WORRY?
ITS THEIR FREEDOM
NOTHING WRONG IN KNOWING IT
and to top that
the teachers said that a boy and girl had sexual act in classroom .
the parents supported their children and made fun of the teachers for being ''so barbaric'' and following 19th century customs.
So now regarding this RYAN murder let us not be barbaric and be SO SO SO OO MODERN and take it lightly.
என்னடா கலரும் மொழியும் மாறி விட்டது என்ற அதிர்ச்சியா ?
இது போன்ற செய்திகளை நம் மொழியில் எழுத கூட விரும்பவில்லை.
நாம் பட்டிக் காடுகள்தான்.
நான் சொன்ன செய்தி ரேயான் பள்ளியில்தான் நடந்தது.
என்னிடம் பேசிய அம்மா என்னையும் முறைத்து நீயெல்லாம் ஒரு ஜென்மம் என்ற ரீதியில்தான் பார்த்தார்.
நாடு எங்கோ போகிறது.
அதனால் இது போன்ற கொலைகள் சர்வ சாதாரணமாகி விடும்.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:49 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/11/09

சசி & கோ  ரெய்டு
இது மிகவும் தரமற்ற நடவடிக்கை என  தோன்றுகிறது .
இந்த குடும்பம் பற்றி  நல்ல சான்றிதழ் தருவது சிரமம் .
ஆனால்
இவர்கள் மட்டும்தான் ஊழல் பேர்வழிகள்
மற்றவர்கள் எல்லாம் தூய்மையின் சின்னம் என்பது போல் ...
யார் யார்
எவ்வளவு
என்பது தெரியாதா ?
எல்லோர் மீதும் நடவடிக்கை எடுத்தால் பாராட்டலாம்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 13:22 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/26

என் ஆருயிர் கண்மணி கார்த்தி ஆரம்பித்தது இந்த வலை (blog  )
அவனின் பிரிவிற்கு பின் அவனை யாரும் மறந்து விடக்  கூடாதே என்ற தவிப்பில் அவன் அம்மா நான், கலா கார்த்திக் அதை தொடர்கிறேன்.
என் தெய்வத்தைப் பற்றியே அதிகம் எழுத மனம் ஆசைப் படும்.
"""""""""ஒரே புலம்பல் """"""""""""
என்ற முத்திரை குத்தப் பட்டதால் வேறு சில செய்திகளை பற்றி எழுதினாலும்
கார்த்தியைப் பற்றி எழுதினால்தான் நிம்மதி கிடைக்கிறது.
கார்த்தி மகனுக்கு வரலாறு என்றால் அதிக ஈடுபாடு.
வரலாறு.காம்  ஆரம்பித்தான் 2001ல்.
அப்புறம் வேலை சுமை 
குடும்ப சுமை 
18 வயதில் அம்மாவின் டிரான்ஸபர் 
தம்பியின் படிப்பு 
தந்தையின் மருத்துவ செலவிற்கு ஏற்பட்ட கடன் 
என அவன் சிறிய தோளில் எத்தனை பெரிய சுமைகள்.
ஒரு சிறு முக சுழிப்பு இருக்காதே.
கணவர் இழப்பால் சோர்ந்து போகும் என்னை தேற்ற அவன் எடுத்துக் கொண்ட முயற்சிகள்.
இத்தனைக்கும் நடுவில் தான் அவன் blog , வரலாறு .காம் 
என அத்தனையும் செய்தான்.
தன்னை சுற்றியிருந்த அத்தனை பேரின் தேவைகளையும் பூர்த்தி செய்தான்.
தோளின் சுமையே அவனை அழுத்தியதால்தானோ என்னவோ 
தாங்க முடியாமல் மகன் முடிந்து விட்டான்.
கார்த்தி போல் மகன் கிடைக்க
ஒரு 1000 ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் 
அதே 1000 ஜென்மங்கள் பாவம் செய்திருக்க வேண்டும் 
அவனை 23 வயதில் பறிகொடுக்க ..
பாவி நான்.
சோகம் வற்றா நதியாகி விட்டது.
கண்ணீர் வற்றா கண்கள் .
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 11:43 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/24

கந்து வட்டி :
கந்து வட்டி வாங்கி கடன் கட்ட முடியாமல் ஒரு குடும்பத்தில் நால்வர் தீ  வைத்து கொண்டு இறந்த சம்பவம் எல்லோராலும் பேசப் படுகிறது.
......  
மனசாட்சியே  இல்லையா ?
மனிதாபிமானமே  இல்லையா
என்று என்னை யாரும் திட்டாதீர்கள் .
என் அனுபவத்தில் சொல்கிறேன்.
என் கணவர் சிவில் பொறியாளர்.
பலரும் வீடு கட்டித் தர கேட்பர் .
நான் சொல்வேன் .
கடன் வாங்கி வீடு கட்டும் முன் நன்கு யோசியுங்கள்.
வட்டிக்கு கடன் வாங்கி வீடு கட்டி தற்கொலை வரை போனவர்கள் பலரை நான் பார்த்தேன்.
ஒரு 10000 ரூபாய்க்கு 500 மாத வட்டி.
அப்படியென்றால் 20 லட்சத்திற்கு எவ்வளவு வட்டி என்று கணக்கு போட்டு கொள்ளுங்கள்.
கடன் கொடுப்பவர்களை ஏன் தவறு சொல்ல வேண்டும்?
இவ்வளவு வட்டி என்று அவர்களிடம் சம்மதித்துதானே  பணம் வாங்குகிறோம்.
.....
இப்போது தற்கொலை செய்து கொண்ட குடும்பம் ''  '' காது குத்து விழா '' விற்கு 60000   (  ''அறுபதாயிரம் '' )  கடன் வாங்கி உள்ளனர்.
ஒரு ஏழை குடும்பம்.
அப்போது 60000 அதிகம் இல்லையா ?
இது அளவிற்கு மீறிய ஆடம்பரம் இல்லையா?
அதற்கப்புறம் வீடு கட்ட தனி கடன்.
வங்கிக்கு சென்றால் நம்மிடம் அவர்கள் கொடுக்கும் கடனுக்கு உரிய சொத்து உத்திரவாதம் அல்லது ஒரு பிணையாளர் இருந்தால்தான் கடன் கொடுப்பார்கள்.
இந்த குடும்பம் அப்படி சொத்து அல்லது திருப்பி கட்டும் வசதி இருந்திருந்தால் வங்கிக்கே சென்று கடன் வாங்கியிருப்பார்கள்.
வங்கி வட்டியும் ஆளை முழுங்கும்.
அப்படியிருக்க தனி நபரிடம் வாங்கும் கடன் பற்றி சொல்லவே வேண்டாம்.
.....
நான் சொல்ல வருவது இதுதான்.
.....விரலுக்கேற்ற வீக்கம் என்ற சொல் உண்டு.
நம் தகுதிக்கேற்ப செலவு செய்யலாம்.
அது விட்டு அகலக் கால் வைத்தாலும்
ஆடம்பர செலவு செய்தாலும் இக்கதிதான்.
ஒரு நோய் ,ஒரு படிப்பு செலவிற்கு கடன் வாங்கியிருந்தாலாவது நியாயம் என்று சொல்லலாம்.
இதில் அரசை குறை சொல்வது எப்படி சரியாகும்?
ஊதும் சங்கை ஊதி வைப்போமே.
கார்த்திக் அம்மா

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 15:44 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/23

பாரதியாரெல்லாம் இப்போ வந்து பாட்டு பாடினா கண்டிப்பா கோர்ட்டு, கேஸு தான் என்று ட்வீட்டியுள்ளார் நடிகை கஸ்தூரி.

.......   ....... யார் யாரை 
யார் யாருடன் கம்பேர் செய்வது?
பாரதியை கேவலப் படுத்தாதீர்கள்.
பாரதி பாடியது நாட்டிற்காக.
சுயநலமில்லாத  செயல்.
அவர் கைது செய்யப் பட்டார். 
சிறையில் துன்பம் அனுபவித்தார்.
வெளி வந்தும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்.
அவரின் தேச பற்றை கொச்சை படுத்த வேண்டாம்.
அவர் அரச பதவிக்கோ 
பணத்திற்கோ ஆசைப் படவில்லை.
......
இப்போது நடப்பது பணத்திற்காகவும் 
பதவிக்காகவும் 
பிரபலத்திற்கும் 
ஒரு முகமூடியுடன் நடக்கும் நாடகம்.
மீண்டும் கெஞ்சுகிறேன்.
பாரதியை சிறுமைப் படுத்த வேண்டாம்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/20

நடிகர்கள் முதலமைச்சர்கள் :
அட அட
எந்த சேனல் திருப்பினாலும் மெர்சல்  மெர்சல் .
நான் எந்த கடசியையும் சேர்ந்தவள் அல்ல.
அதே போல் எந்த நடிகரின் ரசிகையும் அல்ல.
.......
ஒரே ஒரு கேள்விதான்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
எல்லோருக்கும் முதல் அமைச்சர் ஆகலாம்
அடிப்படை basement  என்ன?
சினிமாவில் வீரம்
பன்ச் பேசுபவர்கள் ஏன்
தெருவுக்கு தெரு மேடை போட்டு பேச வேண்டியதுதானே.
அதென்ன
சினிமா வசனம் என்ற ஒரு பெரிய கேடயத்தின்  பின்னால் நின்று கொண்டு பேசுகிறீர்கள்.?
தைரியமாக தெருவுக்கு வாருங்கள்.
சினிமாவில் மக்கள் பிரச்சினைகளுக்கு கத்துபவர்கள்
நிஜத்தில் என்ன செய்தார்கள்?
கேரளாவில் இருந்து கழிவு கொட்டின விஷயம் பற்றி கேரளா முதல்வரிடம் போய் பேசியிருக்கலாமே ?
விவசாயிகள் பிரசினை பற்றி பிரதமரிடம் பேசியிருக்கலாமே ?
இப்போது மருத்துவர்கள் மாநாடு போட்டு சினிமாவில் சொன்ன பிரச்சினை பற்றி பேசி அவர்களை திருத்தலாமே.?
செயலில் காட்டுங்கள்.
அப்புறம் முதல்வர் பதவி பற்றி யோசனை செய்யலாமே ?
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 21:57 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
M.L.A vs I A S
எல்லாம் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான்.
காலையில் ஒரு எம்.எல் .ஏ  மக்களிடம் 2 மாதம் கழித்துதான் தண்ணீர் வரும்.
வீட்டு வீட்டுக்கு தண்ணீர் தர முடியாது.
உங்கள் காலில் எல்லாம் விழ முடியாது
என்று அவ்வளவு தெனாவெட்டாக பதில் சொல்கிறார்.
திமிராக பதில் சொல்கிறார்.
........
5 வருடத்தில் இன்னும் 3.5   வருடம் தான் இருக்கிறது.  அதற்கப்புறம்  இதே மக்களிடம்தான் வர வேண்டும் என்ற நிலை இருக்கும்போதே இவ்வளவு திமிரான பதில் வருகிறது.

ஆனால்

60 வயது வரை பதவி உறுதி என்ற நிலை இருக்கும் போதும் என்ன ஒரு பொறுமையான பதில்.
எல்லா ஊர்களுக்கும் சென்று ஒரு  விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்.
இவர் தூங்கி எத்தனை நாட்கள் ஆனதோ.
எத்தனை கேள்வி கேட்டாலும் சலிப்பு இல்லை.
அலுப்பு இல்லை.
கோபம் இல்லை.
kudos
RADHAKRISHNAN  I .A .S
அவரின் அழகுக்கு சினிமாவிற்கு போயிருந்தால் 100 ..200 கோடி சம்பாதித்திருக்கலாம்.
ஆனால்
நல்ல உழைப்பு.
இந்த ஒரு நெருக்கடியான நிலையில் அவர் செய்யும் ''சேவை '' உண்மையிலேயே பாராட்ட வேண்டும்.
வாழ்த்துக்கள் ராதாகிருஷ்ணன்
கார்த்திக் அம்மா

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:55 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/15

கோவிலும் ...கொடிமரமும் 
இப்போது ஒரு டி .வி நிகழ்ச்சியில்  பெண்ணியம் பற்றி ஒரு பெண்ணியவாதி பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.
கொடிமரமும்  ஆண் பிறப்புறுப்பின்  அடையாளம் என்று.
அடக்  கொடுமையே 
பேச வாய்ப்பு கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசலாமா ??????????
கொடி மரம் ஒரு செய்தி ஊடகம் .
அந்த காலத்தில் கோவிலில் என்ன விஷேசம் என்பதை மக்களுக்கு தெரிய படுத்த கொடியில் (ஒரு துணியில் )எழுதி  எல்லோரும் பார்க்கும் வண்ணம் உயரத்தில் இருக்க செய்ய பயன் பட்டது தான் கொடிமரம்.
மூவர்ண  கொடியை எங்கு  பார்த்தாலும்   ""இந்தியா "" என்பது போல் தான் .
அந்த கொடிமரம் வழிபாட்டு பொருள் அல்ல.
இப்போது கொடிமரத்தை  அண்ணாந்து பார்த்து விட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கும்பிடுவோரை பார்த்தால் எனக்கு பரிதாபமாக  இருக்கும்.
எத்தகைய அறியாமை.

I    AM  SCIENTIFICALLY     RELIGIOUS
.
மதமோ கடவுளோ 
உண்மையோ 
பொய்யோ 
நமக்கு மீறிய ஒரு விஷயம் உள்ளது.
நம்முடைய ambitions ,aims ,wishes ,plans ,future  எல்லாம் ஒரே ஒரு நிமிடத்தில் சுக்கு நூறாக உடைகிறது.
ஆனால் கடவுள் , பரிகாரம் , முன்ஜென்ம பாவம், முன்னோர் சாபம்  என்று ஒரே அடியாக நம்மை முட்டாளாக்கி அடிமைப் படுத்துதலில் எனக்கு நம்பிக்கையில்லை.
குழந்தை இல்லையென்று 3000 அடி  உயரத்தில் கிரிவலம் சுற்றுகிறேன் என்று பரிகாரம் செய்யப் போய் விழுந்த இடம் தெரியாமல் ....
என்ன மடமை????
அரச மரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்றால் 
அந்த காற்றில் உள்ள வேதி பொருள் ஹார்மோன் அதிகப் படுத்தும் காரணியாய் இருக்கும்.
அரசனை நம்பி புருஷனை விட்டாளாம் என்பதன் அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்.
இனி கோவிலுக்கு சென்றால் கொடியில் அந்த கோவிலில் என்ன விசேஷம் என்று பாருங்கள்.
இல்லை நான் கும்பிடுவேன் என்றால் தவறு ஒன்றும் இல்லை.
நல்ல உடற்பயிற்சி.
செய்யலாம்.
நம்பிக்கை ஒரு motivating  catalyst .

நேற்று என் மாணவர்கள் என்னை அழைத்து பூங்கொத்து கொடுத்து பெருமை படுத்தினர்.
சந்தோஷமாக இருந்தது.
நன்றி.
கார்த்திக் அம்மா  
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:26 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/09

கார் விபத்தும்  நடவடிக்கையும்:
தரமணியில் ஆடி கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ஐஸ்வர்யா முதல், நடிகர் அருண் விஜய், போர்சே காரை குடிபோதையில் ஓட்டி வந்து டிரைவர் உயிரை பறித்த விகாஷ் வரை இப்போது ஜாமீனில் வெளியே சுற்றிக்கொண்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் ஜெய் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தினார். இதற்காக அபராதமும் கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.(அவருடைய லைசென்ஸ் பறிக்கப்பட்டு 6 மாதம் வண்டி ஓட்டக் கூடாது என்றும் தடை விதிக்கப் பட்டுள்ளதாக சொன்னார்கள்.)
ஆமாம் 
தெரியாமல்தான் கேட்கிறேன்.
ஐஸ்வர்யா 
விகாஷ் 
இருவர் மேலும் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது???????????
என்ன தண்டனை?????????????
நடிகர் ஜெய்  மேல் மட்டும் ஏன் உடனை நடவடிக்கை????????
இன்று செய்தி படி ஒரு பெண் குடிபோதையில் கார் ஓட்டி  விபத்து நடந்துள்ளது.
பெரிய இடமாம்.
இவர் மேல் என்ன கேஸ் போடுவார்கள்?
முதலில் அந்த பெண்ணே வண்டி ஒட்டவில்லை 
ட்ரைவர்தான் ஓட்டினார் என்று கதை சொல்வார்களோ???????
காலம் கலிகாலம்.

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 11:23 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/08

சரியான உச்சரிப்பு :

receipt     ரிசிட்

yacht     யாட்

Aisle    எய்ல்   ( பஸ்ஸில் W  A  என போட்டிருக்குமே )

orange    ஒரிஞ்

buses   பஷீஸ்   buziz

roses   ரோசிஸ்  ரொஸிஸ்

most senior  என்று சொல்ல வேண்டும்  senior most  தவறு

அதே போல் most  junior

postponed  ( preponed  தவறு   advanced  என்று சொல்ல வேண்டும் )

தொடரலாமா 

உத்தரவு தந்தால்  மேற்கொண்டு இது போல் சில டிப்ஸ் வரும்.

அன்புடன்

கார்த்திக் அம்மா




Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:34 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/10/07

M .G .R  இருந்திருந்தால் ::::;
ஊரெங்கும் மக்கள் படும் அவதிகள் சொல்ல முடியாத அளவு இருக்கிறது.
ஒரு புறம் டெங்கு.
எத்தனை  உயிர் இழப்புகள்.
மக்கள் அழுகுரல் மனதை கஷ்டப் படுத்துகிறது.
வறுமை
வேலையின்மை.
கல்வி கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை கை  விடுகிற அவலம் .
விவசாயிகள் கஷ்டம்.
......     ........ இன்று M .G .R இருந்திருந்தால் எனக்கு எந்த விழாவும் வேண்டாம்.
அதற்கு செலவு செய்யும் பணத்தில் ஏழைகளுக்கு  கொசு வலை வாங்கி கொடுங்கள்.
கொசு மருந்து அடியுங்கள்.
கல்வி கட்டணத்தை குறையுங்கள்.
என்று எத்தனை செய்திருப்பார்.
கொசு வலையில் அவர் பெயர் போட்டு மக்களுக்கு கொடுத்தால் தினமும் அவரை நினைத்து போற்றுவார்களே.
வயிற்றுக்கு உணவில்லாத போது  வான வேடிக்கை தேவையா ?????????????
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/30

+கார்த்தி+சிலை+மணிமண்டபம்
இது பெங்களூருவில்  கார்த்தியின் வீடு.
அதில் கார்த்தியின் சிலை.
வருபவர்கள் யாரோ நிற்கிறார் என்றே நினைத்துக் கொள்வர்.
இப்போது ஒரு மணிமண்டபத்திற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் நடக்கிறதே.
என் பொருளாதார நிலைக்கு நான் 2.5 லட்சம் செலவில் சிலை செய்தேன்.
அந்த வீட்டின் மதிப்பு 1.5 கோடி.
அந்த வீட்டை வாடகைக்கு விட்டால் குறைந்தது 25000 அல்லது 35000 கிடைக்கும்.
என் பொருளாதார நிலைக்கு அது பெரிய வருமானம்தான்.
ஆனால் வீட்டை விற்கவும் இல்லை.
வாடகைக்கும் விடவில்லை.
அந்த வீட்டை ஒரு கோவிலாக ,புனிதமாக வைத்துள்ளேன்.
கார்த்திக்கிற்கு விபத்து நடந்த அன்று வீடு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது.
அவனுடைய bike ம்
சிலையும்
ஊஞ்சலும் மட்டும்தான் சேர்ந்துள்ளது.
(ஊஞ்சல் கார்த்தி , செந்தில் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கியது.)
மாதம் ஒரு முறை சென்னையில் இருந்து பெங்களூரு சென்று வருகிறேன்.
அங்கு இருக்கும் அனைவருக்கும் தெரியும்.அதை நான் எவ்வளவு போற்றுகிறேன் என்று.
......    ......  ......
என் கார்த்தி தன்  23 வயதில் எத்தனை சாதனைகள்.
U .S ல் மிகப் பெரிய சம்பளத்தில் 2002 ம் வருடம் வேலை கிடைத்தும் இந்தியாவிற்குதான் உழைப்பேன் என்றவன்.
அவனுடைய resume  படித்து பாருங்கள்.
அவன் நாட்டிற்கு செய்த அளவு கூட ஒரு நடிகர் செய்யவில்லை.
அவரை பிடிக்கும் என்றால் என்னை  போல் சொந்த செலவில் செய்யுங்கள்.
அவருக்கு நீங்களே ஒரு மண்டபம் கட்டுங்கள்.
ஒரு 10000 பேரை அழைத்து திறப்பு விழா செய்யுங்கள்.
அதை விட்டு
அரசு செலவில் , அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று நிர்பந்திக்க என்ன உரிமை இருக்கிறது???
M .G .R  விழா பற்றியும் என் கேள்வி அதுதான்.
என் வரிப் பணத்தை என் அனுமதியில்லாமல் உங்கள் விருப்பத்திற்கு செலவு செய்ய உங்களுக்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது?கட்சி செலவில் செய்யுங்கள்.
என்னை முன்மாதிரியாக கொள்ளலாமே.கார்த்தியின் தம்பி செந்திலும் அந்த வீட்டை வாடகைக்கு கூட வீட கூடாது என்று உறுதியாக சொல்லி விட்டான்.அவனுக்கும் என் நன்றி.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 13:35 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/28

20000 கோடி ....இவர்களாவது ஏதோதோ தொழில் செய்தார்கள்.
ஆனால் எங்க ஊர்க்காரர் 40000 கோடி வைத்திருக்கிறார் என்கிறார்கள்.
அடுத்த சந்ததிக்கு ஏதாவது மிச்சம்  மீதி இருக்குமா ???????????
......    ......   ......
ஒரு நடிகர் கலாசாரத்தை காப்பாற்றவே நடித்தார் என்று கூவுகிறார்கள்.
நான் விவரம் தெரிந்து சினிமா பார்த்த போது எப்போதும் சிகரெட்டும் மது கிண்ணமும் வைத்து கொண்டுதான் பார்த்திருக்கிறேன்.
அதோடு காதல் காட்ச்சிகளில் காம ரசம் சொட்டும்.
என்ன கலாசாரத்தை காப்பாற்றினார்.
.......   ......
எதை எழுதவும் பயமாக இருக்கிறது.
எதோ ஒல்லி சட்டம் குண்டு சட்டம் இருக்கிறதாமே .எதுக்கு வம்பு.
கார்த்தியை பற்றியே எழுதுகிறேனே .இந்த கிழம் புலம்பும் என்று சலித்து கொள்ளாமல் படியுங்களேன்.
அன்புடன்
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 21:24 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/16

'' ''இன்னாம்மே பொறம்போக்கு 
யார்ந  நானா பொறம்போக்கு 
நீதா மொள்ளமாறி  முடுச்சவிக்கி 
இன்னொரு தபா பேசுன மாமியார் ஊட்டுக்குத்தான் போவ  கண்டுக்கினியா 
ஆங் 
நான் மாமியார் ஊட்டுக்கு போனா நீ மச்சான் ஊட்டுக்கு போவியா 
நான் இன்னாத்துக்கு போவேன் 
நீ ரெண்டு கொல பண்ணல 
அப்புடி போடு அருவாளை 
நீ மணல் திருடல 
உன் மச்சான் கொள்ள அடிக்கல 
உன் சம்பந்தி ஊழல் பண்ணல 
நீதாண்டா சாவடிச 
நீதாண்டா 
கம்மனாட்டி 
இன்னாடா பேச சொல்லவே மல பேயுது '' ''
ஹி ,ஹி 
வேற ஒண்ணுமில்லிங்கோ 
டி .வி பாத்துகிட்டே செத்த கண் அசந்துட்டனுங்கோ 
கண்ணா பின்னான்னு உளறி இருக்கணுங்க  ஊ ட்டுல இருக்கறவங்க பயந்து போய் மூஞ்சில தண்ணி அடிசாங்களா 
மலன்னு நெனச்சு முழுச்சுகிட்டனுங்க .
OOOO GGGOODD  ஓ கடவுளே
ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்வதும்
மட்ட மொழியில் பேசுவதும்
தாங்க முடியவில்லை.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:53 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/15

காலத்தின் கோலம்:
கொடுமைடா சாமி.
ஹெலிகாப்டர் புறப்பட்ட நேரத்தில் குனிய ஆரம்பித்தவர்கள் ,நிமிர மறந்து குனிந்தே இருந்தவர்கள் இன்று பேசும் பேச்சு .....
மாண்புமிகு, மேதகு,உயர்திரு ,நாட்டை காக்க வந்த சிங்கம் என்று இத்தனை அடைமொழிகளுடன் இன்றைய முதல்வரை சொல்கிறீர்கள்
சொல்லிக் கொள்ளுங்கள்.
ஆனால் ,
ஒரு பெண்மணியின் எதிரில் மூச்சு விட  கூட பயந்த நீங்கள் இன்று
'' செல்வி ஜெயலலிதா '' என்று கூட சொல்லாமல்
ஜெயலலிதா என்று சொல்லிப் பேசுவது எத்தனை கொடுமை.
அதிலும் ஒருவர் சொல்கிறார்.;;"அந்த பொம்பிளை""  என்று.
அந்த '' பொம்பிளையால்தான் '' '' நீங்கள் அனைவரும் எம்.எல்.ஏ ஆனீர்கள்  என்பதை மறக்க வேண்டாம் .
கிடைத்த வோட்டு அத்தனையும் ஜெ அவர்களுக்கு கிடைத்த வோட்டு.
பதவிக்காகவும் பணத்திற்காகவும் இப்படி மனசாட்சியை குழி தோண்டி புதைக்காதீர்கள்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 09:40 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/10

எழுதலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
'' ''இது எப்போதும் சுய புராணம் பாடும்'' '' என்ற சலிப்பு வருமே என்று நினைத்து இந்த பதிவை தவிர்த்தேன்.
ஆனால் வந்த இரண்டு செய்திகள் என்னை எழுத வைக்கிறது.
M .B .B .S
நானும் டாக்டர் கனவில்தான் இருந்தேன்.எப்போதும் நான்தான் first rank .என் ஆசிரியைகள் எல்லோரும் '' கலா  டாக்டர் '' என்றே சொல்லிக் கொண்டிருப்பர்.
நான் படித்தது ஒரு கிராமம். தமிழ் மீடியம் .P .U படிப்பில் நல்ல மதிப்பெண்கள்.(திடீரென ஊர் மாற்றம் .விடுதி வாழ்க்கை.ஆங்கில வழி.என அனைத்து கடல்களையும் கடந்து ) distinction மதிப்பெண் எடுத்து தேர்வு பெற்றேன் .
ஆனால் அப்போது எந்த நுழைவு தேர்வும் கிடையாது.
நேர்முகம் மட்டும் .
25 மதிப்பெண்கள்.
100+25.
நான் 100 மார்க் என்றால் நேர்முக மதிப்பெண் சேர்ந்து தரம் நிர்ணயிக்கப் பட்டது.
என் தோழி 90 மார்க்.
நான் 95.
ஆனால் அவளுக்கு மருத்துவ சீட் கிடைத்தது.
நேர்முக மார்க்கை அவளுக்கு அதிகம் போட்டு அவளுடைய cutoff அதிகம்.
எனக்கு நேர்முக தேர்வில் கேட்கப் பட்ட கேள்வி
'' உனக்கு முறுக்கு பிடிக்குமா ...வடை பிடிக்குமா ?''
சிறுமி திகைத்தாள்.
பதில் சொல்ல பயந்தாள்.
நேற்று தமிழிசை ,கிருஷ்ணசாமி மகள்
எவ்வாறு M .B .B .S சீட் பெற்றனர் என்பதை டி .வி யில் சொன்னார்கள்.
மனம் வேதனை பட்டது.
இந்த 58 வயதிலும் நான் மெடிக்கல் எக்ஸாம் எழுத செல்வது போலவும் விடை தெரியாமல் அழுவது போலவும் கனவு வரும்.
நான் தற்கொலை செய்யலாமா என்று யோசித்தேன்.
அப்போது இருந்த முதல் அமைச்சர்தான் காரணம்.
ஆனால்
பி.எஸ் .சி கெமிஸ்டரியிலிருந்து  இலக்கியத்திற்கு மாறி படித்து ஒரு நல்ல ஆங்கில ஆசிரியை என்று பேரெடுத்து பல மாணவர்களை டாக்டர்களாகவும் எஞ்சினியர்களாகவும் வக்கீல்களாகவும் உருவாக்கினேன்.
அனிதா
YOU HAVE DONE A GREAT MISTAKE.(by going to grave.).
எத்தனை துறைகளில் சாதித்திருக்கலாம்.
யாரும் தற்கொலை முடிவை தேட வேண்டாம்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 08:59 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/09/08

நீட் .:
எல்லோரும் பேசி பேசி முடித்து விட்டார்கள் .
என்னவோ தமிழ்நாட்டில் ஒரு மாணவருக்கு கூட மருத்துவ இடம் கிடைக்கவில்லை என்பது போல் கத்தி தீர்த்து விட்டார்கள்.
ஆனால் கீழே இருக்கும் பதிலை பதிலை பாருங்கள்


  ஆக யாருக்கோ அடி .பலத்த அடி .இதனால் எங்கோ எரிமலை வெடித்து யார் யாரோ பலியாகி போயினர்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:05 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/30

வக்கிரம் ...வக்கிரம்...வக்கிரம்.
நானும் பார்க்கிறேன் .வர வர மனிதர்களுக்கு வக்கிர புத்தி அதிகமாகிக் கொண்டே வருகிறது.
கீழ் வரும் செய்தியை பாருங்கள்.
கறவை பசுவை நேற்றுமுன்தினம் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி போட்டிருந்தார். அப்போது அங்குள்ள புதரில் மது அருந்திய வாலிபர்கள், பசுவை அடித்து துன்புறுத்தினர். மேலும் அதன் பால் சுரப்பி காம்புகளை பிளேடால் அறுத்து கொடூர செயலில் ஈடுபட்டனர். இதனால் மடி காம்பிலிருந்து அதிகளவில் ரத்தம் வெளியேறியதால், பசு மாடு வலி தாங்காமல் சத்தம் போட்டது. இதைக்கேட்டு அல்லிமுத்து சம்பவ இடத்துக்கு சென்றார். அப்போது அங்கு 5 வாலிபர்கள், மாட்டை கொடுமை படுத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த விவசாயி, அவர்களை தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த வாலிபர்கள், “மாட்டின் காம்பை அறுத்தது போல உன்னையும் அறுத்து விடுவேன்” என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். தகவலின்பேரில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடம் வந்து மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். காம்பு அறுபட்டதால், தற்போது பால் கறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால் அதிகமாக சுரந்த நிலையில், மடியில் நெறி கட்டியுள்ளது. இதனால் மாடு மிகவும் சிரமப்பட்டு வருகிறது. அத்துடன் அறுபட்ட காம்பில் இருந்து பால் தானாகவும் வெளியேறி வருகிறது. மாடு அவதிப்படுவதை பார்த்து அல்லிமுத்து மற்றும் அவரது குடும்பத்தார், கண்ணீர் விட்டு அழுகின்றனர்
என்ன ஒரு புத்தி.இவர்களை அப்படி செய்ய வேண்டும்.அரபு நாடுகளில் நடப்பது போல் நாடு ரோடில் வைத்து உறுப்பை அறுக்க வேண்டும்.
அந்த மாடு படும் வேதனையை இவர்களும் அனுபவிக்க வேண்டும்.
ஆத்திரத்துடன் 
கார்த்திக் அம்மா  
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:37 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/26

இதுதான் உண்மை.
அதை விட்டு ஆளாளுக்கு ஒரு கதை சொல்வர்.

Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 13:39 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/25

விநாயகர் சிலைகளை கரைப்பது ஏன் 
www.dinamani.com/.../விநாயகர்-சிலைகளை-ஏ..
நம் முன்னோர்கள் எந்த ஒரு பண்டிகையையும் ஒரு அறிவியல் காரணம் கொண்டே கொண்டாடினர்.
அதே போல்தான் பிள்ளையார் சிலை கரைப்பும்.
''DESILTING '' என்று சொல்லி விட்டால் சுலபமாக புரியும்.
தினமணி இதை விரிவாக கொடுத்துள்ளது.
எனக்கு லிங்க் கொடுக்க தெரிந்த அளவில் கொடுத்துள்ளேன்.
வலை சித்தர் இதை வலையேற்றினால் நிறைய பேரை இந்த செய்தி சென்றடையும்.
கலாகார்த்திக் 
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:09 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/21

அடேயப்பா .கண்ணை கட்டுதே.
ஒரு 200 பேர்கள்
வெள்ளை வேட்டி   வெள்ளை சட்டையில்
எதோ ரதங்களில் வருவது போல் வருவதையும் போவதையும் பார்த்தால்
பிரமிப்பிற்காக இருக்கிறது.
அவர்கள் நம் ஊர் மக்கள் போலவே தெரியவில்லை.ஏதோ  தேவலோக மக்கள் போல தெரிகிறார்கள்.
நாங்கள் ...ஆம் ஆத்மீகள் .....சாமான்யர்கள் ....அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒண்டு குடித்தனம் இருப்பது போலவும்
அவர்கள் தயவில் வாழ்வது போலவும்
ஒரு மன மயக்கம் வருகிறது.
தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்களை நினைத்த நேரத்தில் நீக்கவும்  அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஒரு  பயம் இருக்கும்.
5 வருடம் என்னை எந்த கொம்பனும் அசைக்க முடியாது என்ற திமிரா ?
நானே நிரந்தர முதல்வர்போன்றோருக்கு நடந்தது ஒரு பாடமாக வேண்டும்.
ஆடாதே மனிதா
ஆடாதே
என்ற பாடல் வரிகள்தான் நினைவு வருகிறது.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

my mother

dear everybody,
in my blog now and then , my mom will peep into.she will write some 'PULAMPAL' and she dare call them
''POEMS''
bear her for my sake.

the first one is mine[which i wanted to refine, but found no time].

POSSIBILITY
i DON'T WANT LEISURELY DEADLINES
WORK EXPANDS TO FILL THE AVAILABLE TIME
I DON'T WANT IMPOSSIBLE DEADLINES
HOW CAN THERE BE A LIMIT TO ME?
IMPOSSIBILITY IS A HUMAN CONCEPT
I STOP WHEN I STOP

karthik amma starts;
what a poem!as if he defined and decided his end.
he often used to tell 'kal ka na ho'[there is no tomorrow].only sages could foresee.my son might have had the insight,or else why should he write like this? amazingly,he was always having Bharathiar's poem which starts as
thedich choru nitham thinru
[the meaning of the poem is]
i am not an ordinary person, who cares for the material wealth,
who runs after food,
who is interested in silly gossip,
who is often depressed with the silliest problems,
who is interested in pricking others,
who will become old with grey hair ,
and fall a prey to death,[like these funny persons]
oh!''SHIVASAKTHI''
tell me SHIVASAKTHI.
Don't u find that he has lived as he defined. he never became old.was as fresh and was in his favourite jeans and t shirt[he never had the habit wearing nighties or shorts,he hated that, for he thought it to be most indecent,felt half naked.his friends always made fun of him for sleeping in jeans]till the last second he was in jeans and no one saw him otherwise till he was taken to postmortem.
Hats off to you karthik.
very few people can only live as they like.most of us have to compromise a lot and have to forego all our principles and .you are the luckiest and blessed to have lived the way you liked.
Karthik,
there is a saying,
it is not how long you lived,
but
how well you lived
in that sense you lived a whole and complete life.
THE SHORTEST BUT THE SWEETEST LIFE.
இதுவும் மீள் பதிவு.
ஆகஸ்ட் மாதம்.என்றாலே கார்த்தியுடன் வாழ்ந்த கடைசி நாட்கள் என்பதால் மனம் பேயாய் கதறுகிறது.
26ம் தேதி கார்த்தியின் விபத்து நாள்.எங்காவது ஓடலாமா எதையாவது செய்து கொள்ளலாமா என்று மனம் ஆடுகிறது.
கார்த்தியை நினைத்தால் வாழ முடியவில்லை.
செந்திலை நினைத்தால் சாக முடியவில்லை.
யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது.தாங்க முடியாத வேதனையுடன் கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:11 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/20

மீள் பதிவு

KARTHIK ...AGAIN   ஜூலை 2006

Dear friends,
have u all forgotten me?
I HAVE COME BACK ALIVE.

Here after u can see me talking 2 u often. u know something?
ON 26 AUGUST at 8.50 a.m i started from home after having a nice and happy breakfast with my dearest and sweetest mom,[with my usual accessories,laptop,G.MINI,]. I WAS ENJOYING MY DRIVE while suddenly i had to apply brake.in a second i was flying in the air[enjoying it too?...as i used to take everything in that sense.]
i continue my blog
visit my blog frequently.
I AM WRITING MY BIOGRAPHY.
with luv and luv only,
karthik.k
Posted by Ponniyinselvan 
posted on July 2006
இது கார்த்திக் அம்மா கார்த்தியின் வலையை தொடர ஆரம்பித்த கதை.
கார்த்தி போலவே எழுத முயற்சித்து 
எப்படியோ எழுதுகிறேன்.
படிப்பவர்கள் கார்த்தி எழுதுவதாகவே நினைக்க வேண்டும் என்று விரும்பினேன்.
ஆனால் 
சில காரணங்களால் நான்தான் என்று 
கார்த்திக் அம்மா 
என்று பதிவிடுகிறேன்.
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:30 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
GOD (..DOG ..)
தாங்கலை .முடியலை.
தொலைக்க காட்சியை பார்த்தால் ப +ப.
செய்தித்தாளை பார்த்தால் ...ப+ப.
வலை பக்கம் வந்தால் +ப+ப
பணம் +பதவி ????
பன்னிரு +பலனி
தூக்கத்திலும் இந்த இரைச்சல் நிற்க மாட்டேன் என்கிறது.
போதும். முடியட்டும்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:21 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/13


 பாராட்டுக்கள் 
இது  இதுதான்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கடந்த 6 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த இந்த விபத்தில், தனது சமயோசித செயல்பட்டால், மேலும் பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான். அதனால் அவர் பெற்றோர்களுக்கு ஹீரோவாக மாறியுள்ளார். கோரக்பூர் பிஆர்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் கடும் ஆபத்தில் சிக்கினர். அவர்களுக்கு தனது கார் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை, சொந்த செலவில் வெளியில் வாங்கிவந்து உயிரைக் காப்பாற்றியுள்ளார் டாக்டர் கான். Dr Khan the hero who prevented more children from dying at Gorakhpur இது பற்றி பிஆர்டி மருத்துவமனையில் சம்பவத்தை நேரில் பார்த்த கெளரவ் திரிபாதி என்பவர் கூறுகையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைக் கண்டுபிடித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். செய்வதறியாது அனைவரும் திகைத்த போது டாக்டர் கபீல் கான், சமயோசிதமாகச் செயல்பட்டார். உடனே தனது மருத்துவ நண்பர்களுக்கு போன் பண்ணினார். அவர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டார். அதனையடுத்து தனது காரை எடுத்துக்கொண்டு விரைந்தார். இன்னும் சில மணிநேரங்கள் மட்டுமே ஆக்சிஜன் பிஆர்டி மருத்துவமனையில் இருக்கும் என்பதை புரிந்துகொண்டு, வெளியில் சென்று 3 ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி வந்தார். அதுவும் அரைமணி நேரம்தான் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றும் என்ற நிலை ஏற்பட்டது. உடனே, மேலும் 10 சிலிண்டர்களை வெளியில் வாங்கி வந்து பச்சிளம் குழந்தைகளை காப்பாற்றினார். Dr Khan the hero who prevented more children from dying at Gorakhpur தனது சொந்த செலவில், இதை டாக்டர் கான் இதைச் செய்தார். அர்ப்பணிப்போடு அவர் செய்த உதவியால் மேலும் பல பச்சிளம் குழந்தைகள் உயிர் காப்பாற்றப் பட்டுள்ளது. இதனால் அவர் ஏழை எளிய பெற்றோர்களுக்கு ஹீரோ போல தெரிகிறார். அவரை ஹீரோவாக நினைத்து பாராட்டுகிறார்கள்" என்று கூறினார். இந்த நிலையில் 63 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணம் என்ற குற்றச்சாட்டை உ.பி.மாநில அரசு மறுத்துள்ளது. மூளைக் காய்ச்சல் காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதைத்தான்  எல்லா அதிகாரிகளிடமிருந்தும்  நான் எதிர்பார்க்கிறேன் .ஏற்கனவே இது பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.(posted on 12.11.2015)
அட என்ன செய்வார்கள்?????????
வேலையை விட்டு தூக்குவார்களா ???
ஒரு தள்ளு வண்டியில் காய் விற்பவர் பிழைக்கவில்லை ????
அட ஒரு மடத்தில் சேர்ந்து விடலாம்.
60 குழந்தைகளை காப்பாற்றினோம் என்ற நினைவு போதும்.
அந்த பெற்றோர் நன்றியுடன் கூட இருக்க வேண்டாம்.
அரசு விருது,  வேண்டாம்.
மனிதனாக பிறந்த நான் செய்ய வேண்டிய கடமை இது.
செய்தேன்.
அவ்வளவுதான்.
பாராட்டுக்கள்.அந்த மருத்துவருக்கு.
அன்புடன்
கார்த்திக் அம்மா 


Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 11:25 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/09

தன்யா ராஜேந்திரன் :
இவர் என்ன ட்விட் போட்டார் என்பதெல்லாம் தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.
நானும் இப்படித்தான் ஏதோ ஒரு பதிவிற்கு கருத்து சொல்ல போய்
அய்யோடா .....
என்ன ஒரு கேவலமான ,
கீழ்த்தரமான  எதிர் வினைகள்.
என்ன
ஒரு பெண் என்றால் உடனே உடல் உறவு சம்பந்தப் படுத்தி தாக்க வேண்டுமா ?
உடனே ஒரு ஆணுடன் சம்பந்தப் படுத்த வேண்டுமா ?
நீ என்ன அவனுக்கு ****பாட்டியா  என்று கேட்க வேண்டுமா ?
பெண்ணின் உடம்பை குறித்து பேச வேண்டுமா ?
வலையில்
படித்தவர்கள் , படிக்காதவர்கள்
நல்ல வேலையில் இருப்பவர்கள் , இல்லாதவர்கள்
ஒரு குடும்ப தலைவனாய் இருப்பவர்கள்
என்று ஒரு கூட்டமே இருக்கிறது.
இவ்வளவு வக்கிரமா ???
பெண் என்றால் character assassination தானா ?
சீ  என்றாகி விட்டது.
இவர்களை திருத்த முடியாது.
இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று தோன்றியது.
கருத்துரை எழுதுவதையே நிறுத்தி விட்டேன்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 21:43 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/08/08

மொட்டை அடித்தாயிற்று :
மொட்டை
முழு மொட்டை
ஹா  ஹா
முதலில் சந்தன மரம் கடத்தப்பட்டது.
அப்புறம் கிரானைட் கற்கள் ஏற்றுமதி என்ற பெயரில் காலி .
அப்புறம் சிலை கடத்தல்.
அப்புறம் மணல் .
அப்புறம் தாது மணல் (உலகிலேயே மிக அபூர்வமாக கிடைக்கும்)
அப்புறம் அப்புறம்
இன்னும் என்னடா பாக்கி என்று யோசித்தார்கள்.
அட
கோயில் தூண்கள் இருக்குதே
மறந்து போய்ட்டமே
இடி கோவிலை.
ஏற்று கப்பலில்
இன்னும் என்னடா பாக்கி இருக்குது தமிழ் நாட்டில்???????????????
எங்களுக்கு ...தமிழ் நாட்டு மக்களுக்கு............
 என்ன மிச்சம் இருக்கிறது????????????
இந்த பணம் போதுமா உங்களுக்கு ??????
எவ்வளவு பணம் .....நிரந்தர ....நானே என்றவர்கள் வாழ்வையெல்லாம் பார்த்த பின்னுமா ?????
பணம் பாதாளம் வரை பாயும்
பணத்தால் எதையும் சாதிக்கலாம்
என்றவர்கள் கதை தெரிந்த பின்னுமா ???????????????
வாழ்க்கை ஒரு நொடியில் முடியக் கூடியது .
புரிந்தால் சரி.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 21:03 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/07/26

Kamal says ,
யோசித்துப்பார்க்கும் பொழுது, இன்று வரை என் தகப்பனாரின் மறைவுக்கு நான் அழுததே இல்லை. அவர் மறைந்த போது என் வயது எட்டு. ஏன் அழவில்லை - சத்தியமாகத் தெரியவில்லை. மிச்ச வாழ்க்கையைத் தகப்பனில்லாமல் எதிர்கொள்ள வேண்டும் என்ற மகா திகில் முன் அழுகை வரவில்லையோ???

வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் untimelyயாகப் பிடுங்கிக்கொள்ளப்படும்போது எஞ்சுவது ஒரு மிகப்பெரிய ஷாக் மட்டுமே. புலன்கள் செயலிழந்து விடுகின்றன. என்று அந்த வலியும், ஷாக்கும் குறைகிறதோ அன்று தான் அதற்காக அழ முடியும். 

ஒரு மறைவிற்கு உங்களால் அழ முடிந்தால் நீங்கள் பாக்கியவான்கள். Vent out பண்ண முடியவில்லையென்றால் you are yet to overcome the shock.
எவ்வளவு உண்மை.
கார்த்தியின் அந்த நாள் ...
அன்று நான் அப்படித்தான் பிரமை பிடித்து 
அழாமல்
 கல்லாய் 
விரக்தியாய்
 உயிரற்று 
உணர்வற்று இருந்தேன்.
இப்போது கண்ணில் கண்ணீர் வற்றுவதில்லை .எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்,யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் என்னை அறியாமல் கண்ணீர் துளி எட்டிப் பார்க்கும்.
யார்க்கும் தெரியாமல் லாகவமாக துடைத்துக் கொள்வேன். 
BUT I AM YET TO OVERCOME THE SHOCK. 
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 14:25 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/07/25

REVERED PROFESSORProfessor Yash Pal 
Yash Pal
A great man.We used to watch his ''Turning point '' so religiously .My salutes to the great MAN.
KALKARTHIK
karthik amma 

 



  

 
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 10:51 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/07/21

ஆடி மாதம் பயிர் நட வேண்டும்  .ஏர் உழ வேண்டும்.தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.குடும்பமே வயலில்தான் இருக்கும்.ஆண்கள் பெண்கள் அனைவரும் விடியல் காலையிலேயே வயலுக்கு வந்து விடுவர்.அதனால் பெண்களுக்கு சமைக்க நேரம் இருக்காது. அதனால் நில உரிமையாளர் வீட்டில் இருந்து அனைவருக்கும் உணவு வரும்.அரிசி சாதம் ,சாம்பார் சூடு என்பதாலும் விரைவில் ஜீரணித்து பசி எடுக்கும் என்பதாலும் கம்பங் கூழ் அல்லது ராகி கூழ் தருவர்.இரண்டாவது ஆடி மாதம் புது தண்ணீர் வரும் கூடவே தொற்று நோய்களும் வரும். அதை தடுக்கவே வேப்பிலையும் மஞ்சளும் கலந்த நீர்.இதை சும்மா சொன்னால் ஜனங்கள் கடைபிடிக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தெய்வத்தை உருவாக்கினர்.மாரி என்றால் மழை. அதனால் மாரியம்மன் .கட்டு கதைகளை நிறுத்தி நம் முன்னோர்களின் அறிவியல் அறிவை புரிந்த கொள்ளுங்கள்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 10:34 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/07/17

இன்று ஆடி மாத பிறப்பு.
எங்கள் சேலம் மாவட்டத்தில் சிறப்பான கொண்டாட்டமாக இருக்கும்.
புதுமண தம்பதியினருக்கு மாமனார் விட்டு அழைப்புடன் சீரும் கிடைக்கும்.
''கோழி அடிச்சு கொளம்பு வச்சு '' மருமகனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு.ஜோர் ஜோர்தான்.
சிறுவர்கள் காலையில் அருகம்புல் தலையில் வைத்து நீராடி ''ஒப்பிட்டு '' (போளி ) பலகாரம் சாப்பிட்டு ...சொல்லாமல் அறியப்படுவது கோழிக்குழம்பு ...
ஒரு தேங்காயை எடுத்து உரசி மொழு மொழு வென செய்து அதில் ஒரு கண்ணை துளையிட்டு பாதி தண்ணீரை எடுத்து விட்டு உள்ளே எள் ,வெள்ளம்,அரிசி ,ஏலக்காய் போட்டு புரசை குச்சியால் துளை அடைத்து நெருப்பில் சுட்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்து அதை உடைத்து சாப்பிட்டு மகிழ்வர்.
தேங்காய் சுடும் நோம்பி (நோன்பு) என்றேதான் சொல்வார்கள்.
பழைய நினைவுகள் .
காலம் மாறி 
கோலம் மாறி
 இன்று சென்னையில்.
வாழ்க்கை சக்கரம் எனக்கு சுழன்றது போல்
காற்றில் அலையும் காகிதமாய் என்னை அலைய விடுவது போல்
யாருக்கும்    வேண்டாம் .
ஆடி மாதம் புது தண்ணீர் வருவதால் நோய் தொற்றும் வரும் என்பதால் இந்த தேங்காய் நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்ற அறிவியல் அடிப்படையில்தான் இந்த தேங்காய் சுடும் நோம்பி
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:48 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/07/05

பாராட்டு :
தந்தி .அசோகா :
ஆச்சி ஓனர் :
ஹரி தந்தி டி .வி யை விட்டு வெளியேறிய போது ஒரு வெற்றிடம் ஏற்படுமோ என்ற எண்ணம் வந்தது.
ஆனால் அசோகா சூப்பர் .மெல்லிய நகைசுவை.
அதனினும் மெல்லிய கிண்டல்.ஒரு '' ''ஹும் '' என்ற ஒலியிலேயே மற்றவரை மடக்கும் பாங்கு.குடோஸ் அசோகா ...
வாழ்த்துக்கள்.
 ஆச்சி மசாலா அதிபர் 
என் பொருளுக்கு (product )க்கு நானே உத்தரவாதம்.ஏன் ஒரு கால் மீட்டர் துணியில் ஒருவரை ஆட விட்டு ஒரு கீச்சு குரலில் ஒருவரை பேச விட்டு .....நான் தருகிறேன்.உங்களுக்கு உத்தரவாதம்.என்ற தொனியில் தன பொருளின் விளம்பரத்தில் தானே வரும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அதேதான் சரவணா ஸ்டோர்ஸ் அதிபருக்கும்.
அதேதான் லலிதா நகைக் கடை அதிபருக்கும்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 10:46 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/30

நள்ளிரவு 12 மணி :
இந்தியா சுதந்திரம் பெற்ற நேரம் நள்ளிரவு 12 மணி.:
நள்ளிரவில் சுதந்திரம் வாங்கினோம்.
இன்னும் விடியவே இல்லை என்கிறார் ஒருவர்.
.......     .......
இப்போது எதற்கு இந்த நள்ளிரவு கொண்டாட்டம்?????????
காலையில் நடத்தினால் என்ன?
பெட்ரோல் விலையை இப்படித்தான் செய்து கொண்டிருந்தார்கள்.இப்போது நடைமுறை மாறியுள்ளது.
விடியற்காலை பொழுது நல்ல பொழுது.
அப்போது செய்திருக்கலாம்.
என்னவோ
தலையெடுத்ததெல்லாம் தண்டல்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 05:59 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/25

ரஜினி படிக்காதவர் :
எதை வேண்டுமானாலும் பேசலாமா?
காமராஜ் படித்தவரா?
M .G .R படித்தவரா ?
கலைஞர் படித்தவரா ?
படிப்பு என்பது என்ன?
பேருக்கு பின்னால் நாலு பட்டம் போட்டுக்கொள்வதா ?
அப்படி பட்டங்கள் வாங்கி விட்டால் எல்லாமும் தெரிந்து விடுமா ?
M .B .B .S படித்தவருக்கு சட்டம் முழுதும் தெரியுமா
சட்ட வல்லுனருக்கு கட்டிட கலை தெரியுமா ?
கட்டிட கலை தெரிந்தவருக்கு மோட்டார் என்ஜின் பற்றி தெரியுமா?
ஆக படிப்பு என்பது பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.
மீதி விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களை நானும் ஏற்கிறேன் .
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 16:38 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/24

தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதியவர்களில் 41% மட்டுமே தேர்ச்சி - கேரள விலிருந்து 79.5% தெலுங்கானா 77% ஆந்திரா 72.93%. Karnataka 72.85%. முதல் 25 ரேங்கில் தமிழகத்திலிருந்து ஒருவரும் பெற வில்லை. 
இது செய்தி.
 தொலைக்காட்சிகளில் கூவி கொண்டிருந்தார்கள்.
குரைத்துக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளிகள் 'o ' தான் என்கிறார்கள்.
சரி.தமிழ்நாட்டில் CBSE பள்ளிகள் இல்லவே இல்லையா?????
 தரம் உள்ள வையாக அவை இல்லையா????
அந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் உள்ள ஒரே சிலபசைதானே படித்திருப்பார்கள்????
அப்புறம் ஏன் இந்த நிலை????
என்ன நடந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் ????????
எல்லோரும் பார்த்து நடுங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு.......
எங்கு போய்க் கொண்டிருக்கிறது?????
வேதனையுடன் 
கார்த்திக் அம்மா  
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:41 2 comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/23

இன்று ஒரு தொலைக்காட்சி யில் 'o 'positive ரத்த வகை என்று படிப்பதற்கு பதிலாக zero positive  என்று படித்தார் அந்த செய்தி வாசிப்பாளர்.
நன்று.நன்று. வாழ்க தமிழ்
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 17:56 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/21

செய்தி:
ஜனாதிபாதி கான்வாய் வாகன வழியில் வருவதை தெரிந்தும், காவலர் நிஜலிங்கப்பா துரிதமாக செயல்பட்டு அவசர ஊர்திக்கு வழி ஏற்படுத்தி பாதுகாப்பாக அனுப்பியதை பார்த்த பலர், அவருக்கு மனமார பாராட்டு தெரிவித்தனர்

comment :
ஜனாதிபதி கான்வாய் தனை மட்டுமே நிறுத்த முடியும்.
ஒரு பிரதமர்,
ஒரு முதல்வர் கான்வாய் தனை நிறுத்த முடியுமா??????
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 12:12 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/18

இன்றைய நீயா   நானா :
  என் பணி சம்பந்தப் பட்ட தலைப்பில் ...அரசு vs தனியார் பள்ளிகள் ...
at the outset  let me first tell you that regarding syllabus Govt syllabus is in no way inferior to any other syllabus.
நானும் syllabus framing committee யில் இருந்திருக்கிறேன்.
Review committee யில் இருந்திருக்கிறேன்.
ஆங்கிலம் மட்டுமல்ல
என் பழைய பள்ளியில் கெமிஸ்ட்ரி பாடம் முதற்கொண்டு அப்பாட ஆசிரியர்களுடன் நானும் விவாதத்தில் இருப்பேன்.
உங்களில் எத்தனை பேருக்கு ஆங்கில பாடத்திற்கும் practical  செய்முறை தேர்வு உண்டு என்று தெரியும்??????????
Railway reservation
pay in slip
money order form
college application form
cheque
resume
dictionary
glossary
encyclopedia
இத்தனை செய்ய வேண்டும்.
இதற்கு முத்தாய்ப்பாக
ஒவ்வொரு மாணவனும் 5 நிமிடம் பேச வேண்டும்.
interview உண்டு.
இதை எத்தனை பள்ளிகளில் செய்கிறார்கள்????????
ஒரு workbook இருக்கும்.
எந்த பதிப்பகம் அதிக கமிஷன் கொடுக்கிறதோ அந்த workbook வாங்கி தருவார் தலைமை ஆசிரியர்.
அதை கோடிட்ட இடங்களை நிரப்புக என்ற பாணியில் செய்தால் போதும்
செய்முறை முடிந்தது.
நான் செய்தேன்
நான் செய்தேன்
என்ற பெருமைக்காக அல்ல இந்த பதிவு.ஆனால் நான் செய்தேன் .மூன்று வகை application form கொண்டு வந்து xerox செய்து மாணவர்களை அவர்களின் விவரங்களை அவர்களே பதிவு செய்தனர்.
அதே போல் resume யும் மாணவர்களின் சொந்த விவரங்கள்.
கார்த்தியின் ஆங்கில செய்முறை ரெக்கார்டு புத்தகம் எத்தனை (including  Montford ) பள்ளிகளுக்கு சென்றது.?
ஒரு பள்ளியில் அதிசயித்தனர்.
என்னுடைய tape ரெக்கார்டர் எடுத்து சென்று இதே சென்னை பள்ளியில் அனைத்து மாணவர்களையும் பேச செய்து record செய்தேன்.
எதற்கு இந்த சுய பிரதாபம்?
ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை சரியாக செய்தால் அரசு பள்ளிகள் சிறக்கும்.
நான் பணி  புரிந்த பள்ளியில் மாணவனை சேர்ப்பதற்கு அமைச்சரிடம் இருந்து recommendation கடிதம் வந்த காலம் உண்டு.
எங்கள் +2 ஆசிரிய டீம் அவ்வளவு சிறப்பாக செயல் பட்டோம்.
அடுத்து 2002ல் ஒரு பள்ளி யில் வேலை செய்த போது 100 மாணவர்கள் +1ல்  இருந்தனர்.
அந்த ஜூன் மாதம் 350 மாணவர்கள் +1ல் சேர்ந்தனர் .தலைமை ஆசிரியர் என்னை அழைத்து '' யாரோ நல்ல english  டீச்சர் வந்திருக்கிறார் '' என்று சொல்லி இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் '' ''என்கிறார்.

ஒரு ஆசிரியை தன்னுடைய 42 வது  வயதில் வேலை கிடைத்து என்னுடைய பள்ளியில், ,  அரசு பள்ளிக்கு வந்து சேர்ந்தார்.
அவர் சொன்னது,'' என்னுடைய கணவர் இது நாள் வரை தனியார் பள்ளியில் (4000)சம்பளத்திற்கு நாயாய் உழைத்தது போதும்.இது அரசு பள்ளி.ஓய்வு எடுத்துக்கொள் '' ''
இதுதான்.
அரசு என்றால் வேலை செய்ய வேண்டாம். சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்ற மனப் போக்கு மாறி அரசு பணியாளர்கள் உண்மையாய் உழைத்தால் வேறு யாரும் போட்டிக்கு வர முடியாது.
ஒரு பள்ளியில் வங்கிக்கு சென்று pay in slip form எடுத்து வர சொன்னேன்.அந்த மாணவர்கள் ஆர்வ மிகுதியில் அனைத்து form களையும் எடுத்து வந்து விட்டனர்,
வங்கி மேலாளர் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்து விட்டார்.
தலைமை ஆசிரியர் என்னை அழைத்து ''உங்கள் கடன் கட்ட மாணவர்களை விட்டு form எடுத்து வர சொல்விர்களா என்று மிரட்டினார்.என் விளக்கத்தை கேட்ட பிறகு அவரும் வங்கி மேலாளரும் என்னை பாராட்டினர் .
என் வேண்டுகோள் இதுதான்.
அரசு ஆசிரியர்களே
நிறைய சம்பளம் கொடுக்கிறது அரசு.
Do justice to that .
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 16:43 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/14

தெர்மோகோலும் அதிகாரிகளும்:
இன்று சட்ட சபையில் செல்லூர் ராஜு அமைசசரை பார்த்து தி .மு.க தெர்மோகோல் என்று கூவி கேலி செய்துள்ளார்கள்.
இது மிகவும் தவறு.
நான் ஒன்றும் அந்த அமைசசருக்கு ஆதரவாக சொல்லவில்லை.
இப்போதைய அரசியல்வாதிகள் பற்றி NO COMMENTS .
ஆனால் என் மில்லியன் டாலர் கேள்வி ???????????
அதிகாரிகளின் பங்கு என்ன??????
அதிகாரிகள் படித்தவர்கள்தானே .
அவர்களுக்கு தெரியாதா ??????
ஒரு குழந்தை கூட சொல்லும்.
இந்த அதிகாரிகள் கொடுத்த ஆலோசனை படிதானே
அமைச்சர் செயல்பட்டார்.
சட்டசபையில் கூவியவர்கள் ஏன் அந்த அதிகாரிகளை பற்றி வாய் திறக்கவில்லை??????????
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 18:41 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/11

என்னதான் டென்ஷன் ஆகக் கூடாது என்று உறுதி செய்தாலும்

          ''  ''  ஒங்க கனவுக்கு '' '' என்ற விளம்பரத்தை கேட்கும் போது தமிழ் இப்படி சாகிறதே என்று ரத்த அழுத்தம் ஜிவ்வென்று எம்புகிறது.

       அப்பாடா  இந்த விளம்பரம் முடிந்தது என்று மூச்சு விடலாம் என்று பார்த்தால் உங்களுக்கு தங்க நகை இலவச சேவை செய்யவே நான் ஜென்மம் எடுத்தேன் என்று ஒருவர்.
...........ஒரு விளம்பரம் ஒரு 10 முறை வந்தால் சகித்துக் கொள்ளலாம்.
....ஒரு நாளைக்கு 100 முறை என்றால் தாங்க முடியலடா தேவுடா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:07 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
நான் பச்சை தமிழனுமல்ல
நான் சிகப்பு தமிழனுமல்ல :
நீ எச்ச கல நாய் ??????????
நீதான் எச்ச கல நாய்??????
போடா பிச்சகார நாய் ???
நீ திருடிக் கொண்டு ஓடுனயே 
ஹா ஹா .என்ன அருமையான தமிழ் ?
என்ன சபை நாகரிகம்????
தமிழ்நாடு இப்படி சீரழியும் என்று நினைக்கவேயில்லை .
அதனால் 
நான் தமிழன் என்று சொல்ல ...............
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:01 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
நானும் விவசாயிதான் :
இந்த படத்தில் இருக்கும் பெண்ணின் உடை நம் கலாசார உடையா?
நானும் விவசாயிதான்.
எனக்கும் நிலம் இருக்கிறது.
தண்ணீர் இல்லை.
300 தென்னை மரங்கள் காய்ந்து விட்டன.
போராடலாம்.
ஒரு வரை முறை இருக்கிறது.
தமிழ் நாட்டில் யார் கோவணம் காட்டுகிறார்கள்.
நானும் கிராமத்தை சேர்ந்தவள்தான்.
எங்கள் கிராமத்தில் யாரும் வேட்டி கூட கட்டுவதில்லை.(அரசியல்வாதிகள் தவிர.)
அய்யாக்கண்ணு அவர்களே,உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இனி போராட போனால் கோவணம் கட்டி தமிழ்நாட்டை கேவலப் படுத்தாதீர்கள்.
அதுவும் அந்த பெண்ணின் உடை,
கொடுமை.
கொடுமை.
போராட நாகரிகமான வழிகள் எத்தனையோ இருக்கும் போது 
இது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது.
நான் உங்களை விட வயதிலும் ,அனுபவத்திலும் மிக மிக சிறியவள்.
மனதில் பட்டதை சொன்னேன்.
கார்த்திக் அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 06:21 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/06

சென்னை +மரங்கள்+வெயில் :
நானும் சென்னை வந்து 17 வருடங்கள் ஆகி விட்டது.
ஒவ்வொரு வருடமும் இது போல் வெயில் இல்லை என்று சொல்வது வழக்கம்.
ஆனால் உண்மையிலேயே இந்த வருடம்தான் தாங்க முடியாத வெயில்.
வீட்டிற்குள் சூர்ய வெயில் வரவே வராது.
வெளியே எப்படி கொளுத்தினாலும் வீட்டிற்குள் கஷ்டம் தெரியாது.
ஆனால் இந்த வருடம் ஹால் முழுதும் சூர்ய தாக்கம்.
என்னடா
என்று மண்டையை உடைத்துக் கொண்டால்
மண்டைக்குள் திடீரென பல்ப் எரிந்தது.
ஆம்.
1 லட்சம் மரங்கள் விழுந்தனவே..
அதுதான் இந்த காய்ச்சு காய்ச்சியெடுக்கிறது.
வேர்க்குரு கொப்பளித்து நடம் செய்கிறது.
எந்த க்ரீமும் போடாத நானே கையில் க்ரீமும் கையுமாக சுத்துகிறேன்.
இன்று முதல் மழை பெய்யுமாம்.
மழை தாயே கருணை செய்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 18:20 1 comment:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

2017/06/01

JUNE 3 2005
இது ஒரு மீள்பதிவு .காலம் ஓடுகிறது. மனம் மட்டும் 2005 லியே இருக்கிறது.
1st June 2005
I had sent all my household articles to my dearest dearest Karthik's house in Bangalore and was waiting to leave on THIRD , JUNE .How restless did i feel. Excited.Happy at the thoughts that I was going to my son's house.I did not get a transfer. BUT the LEAST WORRIED about my job.The only thought that was haunting me was that, I am going to be with my dearest dearest son.
June third I left Chennai to Bangalore very very happily without knowing the fact that a GREAT GREAT Tsunami was waiting to blow me up to 100 lac pieces.
all my dreams and happiness shattered to 1000 lac pieces.
Now I am leading a lifeless life.
When will my Karthik take me ?
amma (kalakarthik)
 போன வேகத்தில் திரும்ப வந்து விட்டேன்.ஆசையுடன் அழைத்துச் சென்ற மகனை விபத்து என்ற ஒற்றை வார்த்தையில் பறி  கொடுத்து விட்டு மீண்டும் சென்னைக்கே வந்து நடைப் பிணமாக இருந்து கொண்டிருக்கிறேன்.
இப்படி ஒரு வேதனை தேவையா? மனம் கதறிக் கொண்டே இருக்கிறது.
அம்மா
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:49 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
31.05.2017:
பணி ஓய்வு :
இன்றுடன் நான் பணி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் 2006 லியே விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.
கார்த்தி விரும்பாத வேலையை தொடர மனமில்லை.
இன்று
அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்னை மேள தாளத்துடன் வீட்டில் கொண்டு வந்து விட்டிருப்பர் .
எந்த அதிர்ஷ்டமும் இல்லாதவள் நான்.
Posted by Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) at 20:46 No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Blog Archive

  • ▼  2025 (8)
    • ▼  July (1)
      • ஆடி பண்டிகை
    • ►  June (1)
    • ►  May (1)
    • ►  April (1)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (1)
  • ►  2024 (12)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  August (1)
    • ►  June (1)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2023 (26)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (2)
    • ►  March (5)
    • ►  February (4)
    • ►  January (3)
  • ►  2022 (27)
    • ►  December (4)
    • ►  November (7)
    • ►  October (5)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  July (3)
    • ►  June (2)
    • ►  March (1)
    • ►  February (1)
    • ►  January (1)
  • ►  2021 (35)
    • ►  December (2)
    • ►  November (5)
    • ►  October (2)
    • ►  September (1)
    • ►  August (2)
    • ►  July (3)
    • ►  June (2)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (7)
    • ►  January (3)
  • ►  2020 (40)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (2)
    • ►  September (4)
    • ►  August (4)
    • ►  July (3)
    • ►  June (3)
    • ►  May (1)
    • ►  April (5)
    • ►  March (4)
    • ►  February (5)
    • ►  January (4)
  • ►  2019 (57)
    • ►  December (4)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (3)
    • ►  June (6)
    • ►  May (6)
    • ►  April (1)
    • ►  March (6)
    • ►  February (4)
    • ►  January (9)
  • ►  2018 (85)
    • ►  December (4)
    • ►  November (10)
    • ►  October (4)
    • ►  September (5)
    • ►  August (11)
    • ►  July (9)
    • ►  June (6)
    • ►  May (10)
    • ►  April (6)
    • ►  March (8)
    • ►  February (7)
    • ►  January (5)
  • ►  2017 (82)
    • ►  December (6)
    • ►  November (8)
    • ►  October (9)
    • ►  September (6)
    • ►  August (10)
    • ►  July (5)
    • ►  June (13)
    • ►  May (6)
    • ►  April (5)
    • ►  March (3)
    • ►  February (5)
    • ►  January (6)
  • ►  2016 (65)
    • ►  December (4)
    • ►  November (7)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (7)
    • ►  May (7)
    • ►  April (7)
    • ►  March (8)
    • ►  February (5)
    • ►  January (5)
  • ►  2015 (53)
    • ►  December (5)
    • ►  November (5)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (5)
    • ►  February (4)
    • ►  January (10)
  • ►  2014 (51)
    • ►  December (1)
    • ►  November (5)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (6)
    • ►  July (6)
    • ►  June (4)
    • ►  May (6)
    • ►  April (9)
    • ►  March (4)
    • ►  February (2)
    • ►  January (3)
  • ►  2013 (62)
    • ►  December (4)
    • ►  November (5)
    • ►  October (8)
    • ►  September (4)
    • ►  August (5)
    • ►  July (5)
    • ►  June (7)
    • ►  May (5)
    • ►  April (4)
    • ►  March (8)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2012 (49)
    • ►  December (3)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (4)
    • ►  August (8)
    • ►  July (1)
    • ►  June (6)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (5)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2011 (48)
    • ►  December (7)
    • ►  November (1)
    • ►  October (6)
    • ►  September (3)
    • ►  August (3)
    • ►  July (3)
    • ►  June (9)
    • ►  May (5)
    • ►  April (1)
    • ►  March (5)
    • ►  February (2)
    • ►  January (3)
  • ►  2010 (25)
    • ►  December (1)
    • ►  November (1)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (5)
    • ►  June (3)
    • ►  May (4)
    • ►  April (2)
    • ►  March (3)
  • ►  2009 (25)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  October (1)
    • ►  September (1)
    • ►  August (1)
    • ►  July (2)
    • ►  June (1)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (1)
    • ►  January (8)
  • ►  2008 (50)
    • ►  December (6)
    • ►  November (2)
    • ►  October (3)
    • ►  September (2)
    • ►  August (3)
    • ►  July (7)
    • ►  June (1)
    • ►  May (4)
    • ►  April (7)
    • ►  March (4)
    • ►  February (6)
    • ►  January (5)
  • ►  2007 (80)
    • ►  December (12)
    • ►  November (10)
    • ►  August (10)
    • ►  July (8)
    • ►  June (7)
    • ►  May (7)
    • ►  April (5)
    • ►  March (9)
    • ►  February (3)
    • ►  January (9)
  • ►  2006 (68)
    • ►  December (7)
    • ►  November (4)
    • ►  October (13)
    • ►  September (7)
    • ►  August (28)
    • ►  July (9)
  • ►  2005 (20)
    • ►  August (1)
    • ►  July (4)
    • ►  June (4)
    • ►  May (2)
    • ►  April (2)
    • ►  March (1)
    • ►  February (3)
    • ►  January (3)
  • ►  2004 (19)
    • ►  December (3)
    • ►  November (3)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (4)
    • ►  June (2)
  • ►  2003 (2)
    • ►  October (1)
    • ►  September (1)
Awesome Inc. theme. Powered by Blogger.