இது கார்த்தி August 01/ 2004 ல்
வலைப் பூ ஆசிரியராக இருந்து எழுதியது.
அதை அப்படியே copy செய்கிறேன்.
**** *****
விஜயநகரத்து இளவரசர் 'நியோ 'வருகிறார் பராக்!பராக்!!
இவ்வாரம் ஆசிரியராக வரவிருப்பவரை நான் சந்தித்தது 'பொன்னியின் செல்வன் ' யாகூ குழுமத்தில் வரலாற்றின் மீது ஆர்வமுள்ள அவர் கொஞ்சம் வித்தியாசமாக 'விஜயநகர் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.இருக்கிறார்.ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு (2003 ) முன்பே வலை பதிய ஆரம்பித்திருந்தாலும் , சமீபத்தில்தான் தூசி தட்டி எழுத ஆரம்பித்திருக்கிறார்....(இது கார்த்தியை பற்றி வலைப்பூ அளித்த அறிமுக உரை.)
***
இனி வருவது கார்த்தியின் அட்டகாசம் :
....'நான் நல்லவன்.வல்லவன்.நாலும் தெரிஞ்சவன் .
ஏழைகளின் பாவங்களை தாங்கும் சுமைதாங்கி ', இப்படி எல்லாம்
சொல்லணும்தான் ஆசை. ஆனா என்னை பத்தி தெரிஞ்சவங்க கொஞ்சம் பேர் இங்க இருக்காங்க. அதனால வேற வழி இல்லாம உண்மையை சொல்றேன்.என்னோட philosophy ரொம்ப சிம்பிள் .நாம நம்மள பாத்துப்போம் . ஒலகம் அது தன்ன தானே பாத்துக்கும்.' --இதுதான் நான் ...
ஆயுத எழுத்து அர்ஜுனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் - அவனுக்கு girl friend இருக்கு. எனக்கு இல்ல ( இது வரை ) அப்புறம், அவன் எ$$மெரிக்கா போவான். நான் பெங்களூர் வந்து குப்பை கொட்டிட்டு இருக்கேன்.
நான் கொஞ்சம் வராற்று பைத்தியம்.ஸ்கூல்ல , காலேஜுல கல்கி , சாண்டில்யன் நாவல்கள் எல்லாம் படிச்சதினால வந்தது.( நான் படிச்ச தமிழ் நாவல்கள் , வரலாற்று நாவல்கள் மட்டும்தான்.) இப்போதைய பொழுது போக்கு , வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு போய் photo பிடிப்பது. (கல்லையும் மண்ணையும் போட்டோ எடுத்துகிட்டு திரியறான்னு வீட்ல திட்றாங்க )
{இது நான் ,கார்த்திக் அம்மா ,அவனை செல்லமாக சொன்னது }
அப்போ அப்போ வரலாற்று புத்தகங்களை படிப்பேன். (நாவல்கள் இல்ல.History of Tanjore Nayaks , Vijayanagar Inscriptions மாதிரி.
இது இல்லாம மைக்கேல் கிரைட்டன் ,ப்ரெடரிக் பார்சித் நாவல்கள், ஷெர்லாக் ஹோம்ஸ் ,அயன் ரேண்டின் 'objectivism தத்துவம் பிடிக்கும் .
Neo
( இதுவும் வலைப்பூவின் வாசகம்.....இவருடைய புனைப் பெயரும் வித்தியாசமானதே! 'நியோ' - முதலாவது மேட்ரிக்ஸ் படத்தில் அசத்திய நாயகனுடைய பெயர் இவரும் இங்கே அசத்துவார் என்று நம்புகிறேன். இவ்வாரம் உங்களுடன் ' நியோ ' என்கிற கார்த்திகேயன் .
இது அடுத்த நாள் பதிவு.
வணக்கம் !வெல்கம்!வந்தனம்!ஸ்வாகதம் !லலிதா ஜுவல்லரி வழங்கும் ...'
சே ! முதல்ல இப்படி ஓவரா டி .வி பாக்கறத நிறுத்தனும்.
வலைப்பூ நண்பர்களுக்கு வணக்கம்.
நான் வலை பதிய ஆரம்பிச்சே கொஞ்ச நாள்தான் ஆகுது.அதுக்குள்ளே இப்படி ஒரு பொறுப்பான வேலை !சரி, வலைப்பூவிற்கு போறாத காலம் நாம என்ன செய்ய முடியும்!
இந்த வாரம் என்கிட்டே இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? எனக்கே தெரியாது !
எதுவும் எதிர்பார்க்காதீங்க ! மனம் போன போக்கில போகப் போறேன்..ஒரு வெட்டிப் பையனோட மனம் எந்த போக்கில போகப் போகுதுன்னு பார்ப்போம்.
'நியோ ' கார்த்திகேயன் - பேரு நல்லா இருக்கு. ஒரு வகையில பொருத்தமாகவும் இருக்கு. நியோ மாதிரியே 3,4 மணி வரைக்கும் கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டு காலையில 11-12 மணிக்கு ஆபீஸ் வந்து மேனேஜர் கிட்ட திட்டு வாங்கற சீன்ல மட்டும்
நியோ
posted by Editor at 02.28 PM
******
Aug 02/2004
இனிய நண்பர்கள் தினம்!
இன்னைக்கு எனக்கும் எனக்கும் நடந்த ஒரு உரையாடல்.
நான்-1:இனிய நண்பர்கள் தினம்!
நான்-2:இன்னைக்கு எண்டா இத சொல்ற?
நான்-1:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல?
நான்-2:இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்லையே!
நான்-1:அதான் நானும் சொன்னேன்.!இன்னைக்கு நண்பர்கள் தினம் இல்ல .அதுக்காக நண்பர்கள மறந்து ட முடியுமா?
நான்-2:இப்ப முடிவா என்ன சொல்ல வர்ற ?
நான்-1:ஆரம்பத்துல இருந்தே சொல்றேன்.நேத்து இந்த மாதிரி 10,15 s .m .s ,ஈ -மெயில். கடுப்பாயிட்டேன்.அப்புறம் ஒரு நண்பன் பண்ணினான்.'happy friendship day ' ன்னான் .'அப்படின்னா என்னடா?ன்னேன்
''அதெல்லாம் தெரியாது.இன்னிக்கு friedship day .எல்லா friends ம் வாழ்த்து சொல்லிக்கிறாங்க .நானும் சொன்னேன்.:''சரி ஒழிஞ்சு போ !''
****
அடுத்து என் தம்பி அம்மா கிட்ட பாக்கெட் மணி கேட்டுட்டு இருந்தான். ''எதுக்குடா?
இன்னைக்கு பிரண்டஸ் டே ! அதுக்காக friends எல்லாம் கேக் வெட்ட போறம் '
ஏன்டா ,தினமும் அதே வெட்டிப் பசங்க கூட தான சுத்தற.இன்னைக்கு மட்டும் ஸ்பெஷல் வந்தது.?
சே !ஐம்பது ரூபா குடுக்கறதுக்கு இவ்வளவு லெக்சரா?'
**** ***
அதான் யோசிச்சிட்டு இருந்தேன் .இந்த நண்பர்கள் தினம்.காதலர் தினம்.அன்னையர் தினம். தந்தையர் தினம்.பெண்கள் தினம்.ஆண்கள் தினம். இதெல்லாம் ரொம்ப அவசியமா? குறிப்பா அன்னையர் தினம் ...தினமும் அம்மா கிட்ட சண்டை போட வேண்டியது.அன்னையர் தினத்தன்னிக்கு மட்டும்,''மம்மி வி ஆல் லவ் யூ 'ன்னு கார்டு வாங்கி குடுத்துட்டா சரியா போச்சா ?'' தினமும் இருக்க வேண்டிய அன்பு வருஷத்துக்கு ஒரு நாள் மட்டும் வந்துட்டு மத்த நாள் எல்லாம் காணாம போறதுல அர்த்தம் இல்ல. பல பேர் வாழ்த்து சொல்லணும் சொல்றாங்க .
நான்-2: எல்லாரையும் அப்படி சொல்லிட முடியாதுடா.அதுவும் இல்லாம ,உன் கூட ஸ்கூல்ல ,காலேஜ்ல எல்லாம் படிச்சவங்கள எல்லாம் நீ தினமுமா ஞாபகம் வெச்சுகிட்டு இருக்க?அவங்கள வருஷத்துக்கு ஒரு தடவையாவது நினச்சு பாக்க இது ஒரு reminder ஆ இருக்கு இல்ல!
நான்-1:ஆ.ஸ்கூல் நண்பர்கள்,காலேஜ் நண்பர்கள் !"ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே..!
நான்-2:டேய் ! கண்ட்ரோல் !! பேச்ச மாத்தாதே!
நான்-1:சரி.இந்த மாதிரி ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை ஞாபகத்துக்கு வர்றவங்க ஓ .கே ! மே தினம், போங்கள் இதெல்லாம் ஓ .கே .மத்தபடி இந்த காதலர் தினம் அன்னையர் தினம் பெண்கள் தினம் எல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலை.அதுக்கு ஒரு கிரீட்டிங் கார்டு,கிப்டுன்னு தேவை இல்லாத தண்டம்.அம்மா,அப்பா,நண்பர்கள், காதல் கிட்ட எல்லாம் அன்பை சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.
நான்-2;உன்கிட்ட என்னால பேசி புரிய வைக்க முடியாது.நம்ம வலைப்பூ நண்பர்கள் கிட்டவே நியாயம் கேட்போம்.
எங்களுக்கு [கார்த்தி+கார்த்தி] ஒரே குழப்பமா இருக்கு.நீங்க என்ன நினைக்கிறீங்க? இதெல்லாம் தேவையா? இல்ல வெட்டி வேலையா?
Posted by Editor
August 03/2004
சிக்கன் சாலையை கடந்தது ஏன் ?- 4
இத்தனை நாள் இது எப்படி தோணாம போச்சுன்னு தெரியேலை. காலங் காலமா நாம நம்ம சினிமாவையும் நடிகர்களையும்தான் ஓட்டிட்டு இருப்போம் ? இந்த சிக்கன் சாலையை ஏன்ல மட்டும் அவங்களை விட்டுவிட்டு யாரோ சாண்டில்யன், தினத்தந்தி ,ஹிந்துன்னு யார் யாரையோ ஓட்டிட்டு இருக்கோம்.சரி,,நம்ம பாரம்பரியத்தை காப்பாத்துவோம்!பழையன:1 2 3
நாட்டாமை:
பஞ்சாயத்து சீன்
நாட்டாமை சரத்குமார் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார்.
கிராமத்தான்:1 சரி,சரி, எல்லாம் இப்படியே பாத்துட்டே இருந்தா எப்படி .சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க.
கிராமத்தான்-2:இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு.நம்ம சின்னப்பம்பட்டி சின்னாயியோட கோழி சாலையை கடக்கறப்போ , புளியம்பட்டி ஜமீன்தார் மகன் அத புடிச்சிட்டு போய் குழம்பு வச்சு சாப்புட்டுட்டார். அந்த பொண்ணு இப்ப நியாயம் கேக்குது. என்ன புள்ள நான் சொல்றது சரிதான ?
பெண்:( கண்ணீரும் கம்பலையுமாய் ): உண்மைதானுங்கோ
ஜமீந்தார் மகன்:என்னமோ ஒரு கோழி போனதுக்கு இப்படி புலம்பறியே!இந்த கோழிய விட்டா ஊர்ல வேற கோழியே இல்லையா?
( நாட்டாமை பொங்கி எழுகிறார்)
நாட்டாமை:என்றா பேசற?கோழின்னா அவ்வளவு இளக்காரமா போச்சா?உன்ன ஒன்னும் கோழிய சாப்பிட வேணாம்னு சொல்லல. காசு குடுத்து வாங்கி சாபிடுன்னுதான் சொல்றேன்.உன்ன ஒன்னும் சாலைய கடக்கிற கோழிய புடிக்க வேணாம்னு சூழல. எனக்கும் கொஞ்சம் மிச்சம் வெச்சுட்டு சாப்பிடுன்னுதான் சொல்றேன்..இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்பு ..(தீர்பு ...) (தீர்பு ...)
மணிரத்தினம் பாதாம்- மதவாதம்-தீவிரவாதம் பாதாம்:
(எல்லாம் low pitch ல )
ட்ராபிக் போலீஸ் :ஏன் ?
அரவிந்த் சாமி:கோழி...சாலை...கடக்கணும்...
ட்ராபிக் போலீஸ்: முடியாது
அரவிந்த் சாமி:ஏன் ?
ட்ராபிக் போலீஸ்:சிக்னல் .உனக்கு இதெல்லாம் புரியாது.
pitch கொஞ்சம் அதிகரிக்க
அரவிந்த் சாமி:ஏன் ?எதுக்காக இதெல்லாம் எப்ப நிறுத்துவீங்க.உங்க லஞ்ச வெறி எப்போ அடங்கும?இந்த சின்ன கோழிய பாருங்க.இதுக்கு என்ன தெரியும்?இது கைல லஞ்சத்த கொடுக்குறீங்களே.இது என்ன நியாயம்?
ட்ராபிக் போலீஸ்:மாத்திட்ட.ஒரு ட்ராபிக் போலிஸ நல்ல போலீஸா மாத்திட்ட. போ. கோழிய கூட்டிட்டு போ.
3:அலை பாயுதே:
கோழி : கார்த்திக் நீ நான் வெஜிடேரியனா ? கசாப்பு கடையில வேலை பாக்கிரவனா?ஏன்னா கசாப்பு கடையில வேலை பாகிரவங்கதான் இப்படி எல்லாத்தையும் விட்டுட்டு கோழி பின்னால சுத்திட்டி இருப்பாங்க
மாதவன்:கோழி, நீ சாலைய கடப்பன்னு நான் நினைக்கல.உன்ன சிக்கன் 65 பண்ணினா டேஸ்ட்டா இருக்கும்னு நான் நினைக்கல. ஆனால் இதெல்லாம் நடந்துமோன்னு பயமா இருக்கு.
( தொடர்ந்தாலும் தொடரலாம் ..அழுகின தக்காளி எதுவும் வந்து விழாமல் இருந்தால்)
-நியோ
இதன் தொடர்ச்சி நாளை. கார்த்திக் அம்மா