About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2015/01/09

பெண்ணே  பெண்ணே
நேற்று என் சொந்த கிராமத்திலிருந்து 4  பேர் வந்திருந்தனர். உறவினர்களா என்பது தெரியாது.இதுவரை ஜாதி மதம் பார்த்து பழகவில்லை.
அவர்களில் ஒரு பெண்.
வயது 20.
கொடுமை என்னவென்றால் கணவனை இழந்து 9 மாத கைக்குழந்தையுடன் வெறுமையாக நின்றது.பழனி கந்தசாமி ஐயாவிடம்  கருத்து பகிர்ந்ததற்கு இது ஒரு முக்கிய காரணம். 20 வயதில் வெறும் நெற்றியுடன், வளையில்லா கைகளுடன்.......பார்த்த நிமிடத்தில் மனம் கலங்கிப் போயிற்று.
அந்த பெண்ணிற்காக சில அலுவலகங்கள் அலைந்து சில நன்மைகளை செய்து தந்தேன் . மறு கல்யாணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்கிறாள்.சமுதாயம் அவளை கொத்த காத்திருக்கிறது. எப்படி சமாளிப்பாள்?
படித்து கை நிறைய சம்பளம் +கார்த்தியின் யானை பலம்  நிலையிலிருந்த நானே எவ்வளவு போராட வேண்டியிருந்தது.கைம்பெண் என்றால்நல்ல நிகழ்ச்சிகள், எதிரில் வந்தால் அபசகுனம் என்பது போன்ற எண்ணற்ற கொடுமைகளை சந்திக்க வேண்டுமே. ஆ ஆ அப்படியெல்லாம் இல்லை. சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டது என்று மட்டும் சொல்லாதீர்கள்.10 % கூட மாறவில்லை.
அந்த பெண்ணை மேற்கொண்டு படிப்பை தொடர். உனக்கான உதவிகளை செய்கிறேன் என்று சொன்னேன்.
சீக்கிரம் இளைய மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும்.
இது போன்றவர்களுக்கு உதவி செய்ய என்னை அர்பணித்துக் கொள்ளவேண்டும். கார்த்தியின் திருவடியை அடையும் வரை என்னால் முடிந்த உதவிகளை இவர  போன்றவர்களுக்கு  செய்ய வேண்டும்.
கலாகார்த்திக். (அம்மா )
  

2015/01/08

தொலைக் காட்சி தொடர்களும் மதுவும்தான் நாட்டை கெடுக்கிறது என்று ஒரு மருத்துவர் சொன்னார்.
அவருக்கு தெரியுமோ  தெரியாதோ அவர் தொலைகாட்சியிலேயே தொடர்கள் வருகிறதே.

2014/12/09

பள்ளியில் சிறுத்தை :
ஒரு பள்ளிக்குள் சிறுத்தை புகுந்ததை கண்ட மாணவர்கள் அலறல்.
...........     ..........
நல்ல விஷயம்தானே. ஏன்  சிறுத்தை படிக்கக் கூடாதோ ?
அட்மிசன் கொடுக்க மறுத்த தலைமை ஆசிரியரை சிறையில் தள்ள வேண்டும்.
அல்லது சிறுத்தைகளுக்கென்று ஒரு தனி பள்ளி ஆரம்பிக்கலாம்.
.........   ........
இப்படியும் இருக்கலாம்
ஒரு ஆங்கில படத்தில் வருமே.
ஒரு மனித குரங்கு ஒரு பெண்ணை விரும்பி அவளுக்காக நகருக்கு வந்து உயிரை விடுமே.
அது போல் இதுவும் எதாவது காதல் விவகாரமோ என்னவோ?
எதற்கும் இதற்கு ஒரு விசாரணை கமிசன் அமைக்கலாம்.
அன்புடன்
கார்த்தியும் +கார்த்தி அம்மாவும்

2014/11/28

பிலிப் ஹியூக்ஸ்:
மனம் கனத்து போகிறது.அவரும் கார்த்தியாகவே தெரிகிறார்.
 கார்த்தியின் விபத்தின் போது helmet அணியவில்லையா என்ற கேள்வியே பெரிதாக இருந்தது.
அணியவில்லைஎன்றாலும் தப்பு. அணிந்தாலும் தப்பு.
இவர்  (  பிலிப் ஹியூக்ஸ்  ) ஹெல்மெட் அணிந்துதான் ஆடினார். ஆனால் அது பழசு.என்கின்றனர்.
அதே ஹெல்மெட்டை போட்டுதானே 4 வருடங்கள் விளையாடி இருக்கிறார்.
எல்லாம் விதி.
போகும் நேரம் வந்தால் , போவதற்கு ஒரு காரணம். அவ்வளவுதான்.
அந்த தாயின் கண்ணீர்???????????????
நிற்காத கண்ணீர்.
குறையாத துக்கம்.
அவன் நினைவுகளே வாழ்க்கை என்றாகி விடும். நான் வாழும் வாழ்க்கை போல்.

2014/11/22

என் வீட்டிற்கு ஒருவர் வந்தார்.
வீட்டில் valuables எதுவும் இருக்க வேண்டாமே என்றார்.
If I am of any value ,I am the valuable in the house என்றேன் .அவருக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
இப்படி சிலேடை பேசி பேசித்தான் சீரழிந்து விட்டேனோ என்னவோ..
in 90s when I was a teacher , as punishment I made some students stand  out of the class .My CEO came and asked "  " why are they standing out ? " ".I said " "because they are outstanding " ".திகைத்து போனார்.இந்த வசனம் பின்னாளில் ஒரு சினிமாவில் வந்து விட்டது ..
அது போல்தான் கார்த்தி, செந்தில் இருவரும்( ஒரு 6,7 வயது இருக்கும்.)  கொண்டிருந்தனர். கார்த்தி செந்திலை  பார்த்து சொன்னான். "You  are goodly bad "
the instant reply from Senthil was " " you are rightly wrong ".இதை கேட்டு கொண்டிருந்த நான் ஆச்சரியப் பட்டு போனேன். சரி,சரி, அம்மாவின் வாய் மகன்களுக்கு வருவது சரிதானே.
****** *****
ஒரு கவிஞர் ஒரு பாட்டெழுதி விட்டால் போதும்.ஒரு 4 சேனலில் அந்த 5 year project பற்றி ஒரு மணி நேர விளக்கம் கொடுக்கிறார்.
இவரைப் போல் எத்தனை பேர் பாட்டு எழுதுகிறார்கள்.அவர்கள் எல்லாம் இப்படி விளம்பரப் படுத்திக் கொள்கிறார்களா ?சரி,தனக்கு தானே பாராட்டு விழா எடுத்துக் கொள்ளும் குடும்பம் அல்லவா?
பதிவர்கள் எத்தனை பேர் அற்புதமான கவிதைகள் எழுதுகின்றனர்.உண்மையிலேயே அற்புதமான கவிதைகள்.
****     ******
யாரோ எதோ ஒரு ஜாதியின் இலவரசராம் .Prince of வ.......ர .....அப்பா .....,தந்தை குலம் சொல்கிறதாக செய்தி படித்தேன். எப்போதப்பா அந்த ஜாதி அவருக்கு பதவி கிரீடம் சூட்டியது?அந்த ஜாதிக்கு அப்பாவும் மகனும் என்ன செய்தார்கள் என்று ஒரு பட்டியல் வெளிட்டால் நன்றாக இருக்கும்.
**      ****
மீனவர் விடுதலை ஒரு நாடகம் என்ற கூக்குரல் எழுகிறதே.உண்மை என்ன?

2014/11/17

முத்த புரட்சி :
எது கலாசாரம் என்று கேட்கிறார்கள்?
கலாசாரம் என்பது மிக மிக முக்கியமாக ஆரோக்கியம் சம்பந்தப் பட்ட விஷயம்.
ஒருவர் 100 பேருடன் முத்தம்  தரும்போது எத்தனை பேருடைய எச்சில் கலப்படம் ஆகிறது.எத்தனை நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது..
ஏன்  ஒரு மருத்துவர் குழந்தைகளுக்கு எல்லோரும்  முத்தம் தரக் கூடாது என்று சொல்கிறார்கள்?
அது என்ன கலாச்சார சீர்கேடு?
ஆரோக்கியமா  அல்லது எதேச்சாதிகாரமா?
ஒரு நோய்வாய்ப் பட்டவரை எல்லோரும் வந்து பார்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, அந்த மருத்துவர்கள் முட்டாள்களா ,திமிர் பிடித்தவர்களா,பழமைவாதிகளா , என்ன என்று சொல்லுங்கள்.
ஒரு கணவன் மனைவி உறவிற்கே எத்தனை விதிகள் உள்ளன தெரியுமா?
எதையும் பழமை, கட்டுப்பாடு,மூடத்தனம் என்று இது எங்கள் சுதந்திரம் என்று நேரம் காலம் பார்க்காமல் எல்லாம் செய்ததின் விளைவுதான் இன்று இத்தனை நோய்கள்.
பாதி பேர் வெளியில் சொல்லாமல் எத்தனை நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர்  என்பது தெரியுமா?
எதை எடு, எங்கள் சுதந்திரம், எங்கள் உரிமை என்று கத்துவதே 
வேலை.
போதாதற்கு மீடியா
அவர்களுக்கு ஏற்ப ஒரு 4 பேர்.
ஏதோ அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் பேசுவதும் சகிக்கவில்லை.
,போதும் . நிறுத்துங்கள்.
 முன்னோர் காட்டிய வழியில் வாழ்க்கையை நடத்துங்கள்.

2014/11/16

தமிழ்நாட்டில் கொலை கொலை அதிகமாகிவிட்டது என்பதற்கான முக்கிய காரணம்
1.காதல் .
முக்கியமாக பெண்கள் படிக்கும் வரை தன தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய இளிச்சவாயன் ஒருவனை காதலிப்பது போல் நடிப்பது. படித்து முடித்து, வேலைக்கு சேர்ந்து விட்டால் அவர்களின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்து விட்டதாக நினைத்துக் கொண்டு பழைய காதலனை கைகழுவி விடுவதுதான் நடக்கிறது.
eg :
மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி?


மாணவி தேஜாஸ்ரீ கொலை வழக்கில் 2 கொலையாளிகள் சிக்கியது எப்படி? என போலீஸ் அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

’’கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் யுவஆதித்தனும், இளம்பெண் ஹரிணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இது பெற்றோருக்கு முதலில் தெரியாது. பின்னர் தெரிந்து விட்டது. ஹரிணியின் குடும்பம் ஏழை குடும்பம். ஆனால் யுவஆதித்தன் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஹரிணி என்ன கேட்டாலும் யுவஆதித்தன் வாங்கி கொடுத்து வந்துள்ளார். துணிமணி என எது கேட்டாலும் உடனே அவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார். சில மாதத்திற்கு முன்பு ஹரிணிக்கு சென்னையில் வேலை கிடைத்துள்ளது.

இதை அறிந்த யுவஆதித்தன் வருத்தப்பட்டார். தனது காதலி சென்னைக்கு சென்று விட்டால் பார்க்க முடியாது, பேச முடியாது என வருத்தப்பட்டார். இதனால் ஹரிணியிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தீபாவளி அன்று சென்னை சென்ற யுவஆதித்தன், காதலி ஹரிணியை சந்திக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. மறுநாள் ஹரிணியின் நிறுவனத்திற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ஹரிணி தன்னை பார்க்க வரவேண்டாம் என கூறி அவரை கண்டித்து உள்ளார்.

இருப்பினும் யுவஆதித்தன் அன்று முழுவதும் ஹரிணி நிறுவனத்தில் அவருக்காக காத்து இருந்தார். இதை அறிந்த ஹரிணி காவலாளியை அழைத்து யுவஆதித்தனை விரட்டி விட கூறினார். காவலாளியும் விரட்டி விட்டுள்ளார். இதனால் யுவஆதித்தன் கோபம் அடைந்தார். தன்னை விரட்டி விட்ட காதலியையும், காதலியுடன் சேரவிடாமல் தடுத்த அவரது பெற்றோரையும் கொல்ல சதிதிட்டம் போட்டுள்ளார்.

இதற்கு கடந்த ஒருமாதமாக காத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிணியின் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினரை கொல்ல முடிவு செய்து நண்பருடன் வந்துள்ளார். ஆனால் வீட்டில் தேஜாஸ்ரீ மட்டும் இருந்துள்ளார். இதனால் இவரை மட்டும் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்த கொலை வழக்கு செல்போன் மூலம் துப்பு துலங்கி உள்ளது. கொலை செய்ய புறப்பட்ட யுவஆதித்தன் அன்று மாலை சேலம் புறப்பட்டு வந்துள்ளார். தன்னை செல்போன் மூலம் போலீசார் பிடித்து விட்டால் என்ன செய்வது என கருதி அன்று மாலை 3மணியளவில் செல்போனை அணைத்து வைத்து விட்டார். கொலை நடந்து முடிந்து தப்பி சென்ற பின்னர் இரவு 9மணியளவில் செல்போனை ஆன் செய்துள்ளார். இந்த கொலைக்கு உதவிய அவரது நண்பர் சசிக்குமார் மாலை 6மணி அளவில் சேலம் வந்து இருப்பதும் செல்போனில் பதிந்து உள்ளது. இதை வைத்து இருவரையும் கண்காணித்த போலீசார் பின்னர் கைது செய்து விட்டனர். முதலில் மறுத்த இருவரும் பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹரிணி கிடைக்காத ஏக்கத்தில் யுவஆதித்தன் கொலை வெறியுடன் சுற்றி திரிந்துள்ளார். மாணவி கொலை நடந்த அன்று வீட்டில் தேஜாஸ்ரீயை தவிர வேறு யாரும் இல்லை. இருந்து இருந்தால் அனைவரையும் கொல்ல இருந்தேன் என யுவஆதித்தன் வாக்குமூலத்தில் கூறி உள்ளான் //
...........
பெண்களே திருந்துங்கள்.

2014/11/14

இன்று பிறந்த நாள் :
இன்று என் உயிர் மகன் கார்த்திக்கிற்கு பிறந்த நாள்.
எனக்கும் இன்றே பிறந்த நாள்.
ஆம்.
இருவருக்கும் ஒரே நாள் பிறந்த நாள்.
நான்:14.11.1958.
கார்த்தி:14.11.1981.அவன் பிறந்த அன்று என்ன சந்தோசம். என் தாய் வீட்டின் 3வது தலைமுறையின் முதல் மகன். 4 சகோதரர்களுடன் பிறந்த செல்லப் பெண் நான் என்பதால் கார்த்தி பிறந்த  போது ஒரே ஆர்பாட்டம்தான்.
ஆனால் இன்று??????????????

என்னை விட்டு பிரிந்து என்னை ஊமையாக்கி, சிலையாக்கியவனை,

நான்  அவனை சிலையாக்கி அவனுடைய  வீட்டில் நடு  நாயகமாக நிற்க வைத்து அழகு பார்க்கிறேன்.
மனதிற்கு சிறு ஆறுதல்.
அவன் பிறந்ததை நினைத்து சந்தோஷப் படுவதா, பிரிந்து விட்டானே என்று வருத்தப் படுவதா?
கார்த்திக் அம்மா

2014/10/29

முதல்வர்..உத்தரவு.....
ஆரம்பிச்சிட்டாங்கையா .மறுபடியும் ஆரம்பம்.
தமிழக அரசு அறிவிப்பு  என்று  செய்திகள் வந்தபோது அப்பாடா என்று இருந்தது.
முன்பெல்லாம்  விவசாயிகளின்  வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறக்க ......     ........ உத்தரவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்தி வரும்போது எரிச்சலாக இருக்கும்.இந்த நதிகளெல்லாம் எப்போது தனி ஒருவருக்கு பட்டா செய்யப் பட்டது.என்ற கேள்வி எழும்.(மனதிற்குள்தான்.)
விவசாயிகல் கெஞ்சிய பிறகுதான் தண்ணீர்  திறக்கப் படுமா?
இல்லை .வேண்டாம். அந்த தண்ணீரை திறக்காமலே வைத்துக் கொள்ளட்டுமே . .
அப்பாடா
இந்த எரிச்சலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தாகி விட்டது.தமிழ்நாடு நமக்கும் சொந்தமானதுதான் என்று நினைக்க ஆரம்பித்தோமா.
மீடியாக்கள் ஆரம்பித்து விட்டன. முதலில் தமிழக அரசு அறிவிப்பு என்றார்கள். அப்புறம் ops சொன்னார் என்றார்கள்.
இன்று மறுபடியும் பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக ,
விவாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்வர் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார் என்று செய்தி சொல்கிறார்கள்.
அதிகாரத்தில் இருப்பவர்களே இப்படி சொல்ல சொல்கிறார்களா அல்லது அவர்களின் தயவை நாடி ஊடகங்களே இப்படி சொல்கின்றனவா?
போதும் போதும்.
'' '' தமிழக அரசு அறிவிப்பு '' ''
என்றே செய்தி சொல்லுங்கள்.
கார்த்திக் அம்மா

2014/10/27

சோதனை மேல் சோதனை :
இன்று விடியும். நாளை விடியும். ஏதாவது நல்லது நடந்துவிடாதா என்ற எதிர்பார்ப்புடன்தான் காலையில் எழுகிறேன்.
ஆனால் நல்லது நடக்கவில்லைஎன்றாலும் பரவாயில்லை.திரும்பிய பக்கமெல்லாம் சங்கடம்தான்.உறவுகள் விலகுகின்றன.யாரிடம் பேசினாலும் சரியில்லாமல் போகிறது.ஒரு சிறு விஷயம் கூட பல அலைச்சலுக்கு ,பல முயற்சிகளுக்கு  பின்னரே நடக்கிறது.
சர்வ சாதாரணமாக எல்லோர் வீட்டிலும் நல்ல நிகழ்ச்சிகள் ஒன்று கூட என் வீட்டில் நடக்கவில்லை.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்கிறது தத்துவம்.
மனித மனம்.ஆயாசப்படுகிறது.மனம் ஊமையாக அழுகிறது.
தனிமை ,பழைய நினைவுகள்.
இவை அனைத்திற்கும் மேலாக கார்த்தியின் ஏக்கம் .
என்ன வாழ்க்கை.
என்று நடக்கும் நல்ல விஷயங்கள்?
என்று கிடைக்கும் விடுதலை.
என்று முடியும்
இந்த புவி உலக வாழ்க்கை.
வேதனையுடன் கார்த்திக் அம்மா

2014/10/16

அன்றும்  இன்றும் :
பொழுதை ஓட்டியாக வேண்டுமே.எதிலும் மனம் ஒன்றுவதில்லை.t .v சேனல்களை மாற்றிக் கொண்டே இருப்பேன்.சில சமயங்களில் ஏதாவது அகப்படும்.
அப்படித்தான் இந்த காட்சியை பார்க்க நேரிட்டது. எந்த சினிமாவோ தெரியவில்லை.
ஒரு பெண் கைக்குழந்தையுடன் வந்து ஒரு ஆணிடம் ஏதோ சண்டையிடுகிறாள்.
ஒலியை கூட்டினேன்.:''
''ஏய்  என்னைப் பார்த்து கண்ணடிக்கிராயே  இது நியாயமா ''என்று கேட்கிறாள் அந்த பெண்.
ஆண் :ஏன் நீ தாவணி போட்ட வயதில்  கண்ணடித்த போது வெட்கப் பட்டாயே .இப்போது என்ன?''
பெண் : இப்போது எனக்கு திருமணம் ஆகி விட்டது.நான் உனக்கு அண்ணி "
ஆண் :அண்ணியாயிருந்தாலும் நீ எனக்கு முறை பெண்தான் .இனியும் இப்படித்தான் செய்வேன்''
பெண்: உன்னை  திருத்த முடியாது"...என்று சொல்லி விட்டு போய்விடுகிறாள்.
******* அதிர்ச்சியாக இருந்தது. திருமணம் ஆன  அனைத்து பெண்களையுமே தாயாய் ,சகோதரியாக பார்த்த காலம் எங்கே.
இது என்ன கலிகாலம்.
இந்த வசனத்தை கேட்கும் அனைவருக்கும் இந்த  கோணல் புத்தி வராது என்பது என்ன நிச்சயம்.
***
இன்று அக்கா தங்கை என்ற படம் ஓடியது.
அதில் ஜெய்சங்கர் தன அண்ணியிடம்
''இந்த வீட்டை கோவிலாக்கி அதில் இருக்கும் தெய்வம் நீங்கள்.உங்கள் மீது எனக்கு அத்தனை பக்தி''  என்கிறார்.

உறவுகளை எப்படி புனிதப் படுத்தியிருக்கிறார்கள் அந்த காலத்தில்.
இன்று இப்படி கொச்சை படுத்துகிறார்கள்.
கொடுமை.கொடுமை.
கார்த்திக் அம்மா

2014/09/24

சாதனை ஒன்று:
வாழ்த்துகள்.இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் .

வேதனை ஒன்று:
மண்டலின் சீனிவாசன்.
அழகு,அறிவு,திறமை,செல்வம் அனைத்தும் இருந்தும் நிம்மதியற்ற வாழ்க்கைதான் இவரது இறப்பிற்கு காரணமா? மனம் மிக வருந்துகிறது.இவரின் தந்தை நிலைதான் இன்னும் பரிதாபம்.எவ்வளவு பெருமைப் பட்டிருப்பார்.எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பார்.
இன்று அதற்கெல்லாம் சேர்த்து வைத்து துக்கம்.ஆறுதல் சொல்ல முடியாத ஆறுதல் சொல்கிறேன்.

தீர்ப்பு ஒன்று:
27ம் தேதி . என்ன தீர்ப்போ என்ன விளைவுகளோ? திக். திக்

2014/09/18

விவாகரத்து :
மனம் மிக மிக வருந்துகிறது.
சமீபத்தில் எனக்கு  நெருங்கிய இரு இளம்பெண்கள் மணமுறிவு  பெற்றுவிட்டனர்.
அதில் ஒரு பெண் தன சொந்த  அ த்தை மகனையே திருமணம் செய்திருந்தார்.சிறு வயதிலுருந்தே  வளர்த்த அத்தை.ஆனால் அண்ணன் மகள் என்கிற போது இருந்த பாசம் அதே பெண் மருமகள் என்று ஆகிற போது ஏன் காணாமல் போகிறது? தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்பது போன்ற வழக்கமான பிரச்சினைகள்.பெண்ணின் பெற்றோர் வரதட்சினை கொடுமை வழக்கு போட்டு பெண்ணை கூட்டி சென்றுவிட்டனர்.வழக்கு முடியும் முன்பே அந்த மகனுக்கு மறுமணம் செய்து வைத்து அவனுக்கு குழந்தையும் பிறந்து விட்டது.
என் கேள்வி
அந்த பெண்ணின் நிலை?
       அடுத்த பெண்:இந்த பெண்ணும் நன்கு படித்த,நல்ல குடும்பத்து பெண்.சினிமாவில் வருவது போல் ஒரு பையன் துரத்தி துரத்தி காதலித்தான்.சினிமாவில் காட்டப்படும் அத்தனை செயல்களையும் செய்தான்.முதலில் பிடிவாதமாக மறுத்த அந்த பெண்,மெல்ல மெல்ல மனம் இறங்கி(??? )...இரு வேறு  ஜாதி (எனக்கு ஜாதி பற்று,வெறி எல்லாம் கிடையாது ) ஆனால் நாட்டு நடப்பில் இந்த விஷயமே அந்த மாமியாருக்கு விஷமாகி விட்டது.பெண்ணுக்கு வாய்சொல் வறுத்தல்தான்.

   இரு பெண்களுமே நல்ல பெண்கள்.
  ஒரு பதிவர் எழுதியிருந்தார்.
மாமனார் இல்லாத வீட்டில் பெண் கொடுக்க வேண்டாம்.மாமனார் இருந்தால் அந்த பெண்ணுக்கு ஏதாவது கொடுமை நடக்கும்போது தன மனைவியை தட்டி ( ?????????????????? ) கேட்பார் அந்த பெண்ணுக்கு உறுதுணையாக ,  ஆறுதலாக இருப்பார்.அதனால் மாமியார் மட்டுமே  இருக்கும் வீட்டில் பெண் கொடுக்க வேண்டாம் என்று ஒரு நீள  பதிவு போட்டிருந்தார்.
இந்த இரண்டு வீட்டிலுமே மாமனார்கள் இருக்கின்றனர்.வாய் பேச முடியாத ஊமைகளாக.
எப்படியோ ,இப்போது இந்த இரு பெண்களுமே தனிமை.
பெற்றோர்கள் ஆதரவு  என்பதும் ஒரு மாயை.
பின்னாளில் அது அடுத்த கொடுமையாக இருக்கும்.
மறுமணம் நிறைவாக அமைந்து விடுவதில்லை.பையனின் அம்மாக்கள் வெற்றி நடமிடுகின்றனர்.
முதல் மனையை அம்மாவின் செயல்களால் பிரிந்த மகன்கள் அடுத்த மனைவியின் போது உஷாராகி விடுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு காரணமானவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கலாம்.
எப்படியோ இளம் பெண்கள் ,இப்போது இளம் வயது.வேலை உண்டு.காசு உண்டு.ஆனால் மற்ற பிரச்சினைகள் அதிகம்.
எப்படியோ இளம் பெண்கள்பாதிக்க படுகின்றனர்.
            மனம் மிக மிக வருந்துகிறது.

2014/08/21

ஆனந்த்  பனியன் விளம்பரம்
ஆனந்த் பனியன் விளம்பரத்தில்
''ஏய் ,இது அப்பா  பனியன் ''என்பதற்கு அந்த சிறுவன்'' இது ஆனந்த பனியன்''
என்று சொல்லும் பதிலை கேட்கும் போதெல்லாம் எனக்கு கார்த்திதான் கண்ணில் நிற்பான்.
இதே போல் சிறுவனாக இருந்த போது கார்த்தி நான்  .வேலை செய்யும் பள்ளிக்கு வந்திருந்தான்.
ஆசிரியைகளில் ஒருவர் அவனிடம் வாய் கொடுக்க ஆரம்பித்தார். அவருக்கு எப்போதுமே மற்றவர்களை மடக்குவதும் , மட்டம் தட்டுவதுமே வேலை.
அவர் கார்த்தியிடம் கேட்டார்
''எங்கள் பள்ளிக்கு ஏன் வந்தாய் ?''
அவர் எதிர் பார்த்த பதில் ''நான் எங்க அம்மா பள்ளிக்கு வந்தேன்.'' என்பது.
அப்படி ஒரு பதில் கிடைத்தவுடன் இது உங்க அம்மாவிற்கு சொந்தமா?உங்க அம்மாதான் கட்டினார்களா? என்றெல்லாம் கேட்கலாம் என்ற திட்டத்துடன்தான் கேட்டார்.
ஆனால் கார்த்தியோ
''இது அரசுப் பள்ளி.எல்லோருக்கும் வர உரிமை உண்டு ''
என்ற பதிலைத் தந்தவுடன் அந்த ஆசிரியை முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே.
பின்னாளில் இது பற்றி அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
அப்படி ஒரு பல்பு வாங்குவோம் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர்.
கார்த்தி   கார்த்திதான்.

2014/08/19

world  photography day :
கார்த்தியும் அவன் நண்பனும் ஹோட்டல் அறையில் கண்ணாடியில் டார்ச் லைட் அடித்து தங்களை தாங்களே எடுத்துக் கொண்ட போட்டோ



இரண்டு அணில்களும் தங்களை யாரும் பார்க்கவில்லை என்ற  நம்பிக்கையில் உறவாடினால், என் கார்த்தி கண்ணன் அந்த அழகை புகைப் படமாக மாற்றி அவர்கள் ரகசிய சந்திப்பை இப்படி வெட்ட வெளிச்சமாக்கி விட்டானே.கார்த்தி கண்ணம்மா, உனக்கே இது நியாயமா?இருவர் வீட்டிற்கும் தெரிந்தால் என்ன ஆகுமோ?
செல்ல கோபத்துடன்
அம்மா .
இன்று உலக புகைப்பட தினம்.
கார்த்தி ஒரு சிறந்த புகைப் பட ஆர்வம் கொண்டவன்.1998 லிருந்தே நிறைய சரித்திர சம்பந்தப்பட்ட புகைப்படங்களாக எடுத்து கிட்டத்தட்ட 1000 புகைப் படங்கள் உள்ளன.என்றாவது ஒரு கண்காட்சி வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.இப்போது பல கேமராக்கள் வந்து விட்டன.இப்போது எடுப்பதை பாராட்டும் அதே வேளையில் தனக்கு கிடைத்த சாதாரண கேமராவில் கார்த்தி எடுத்த சில போடோக்கள்.+அவனுடையதும்.
.ஆல்ப்ஸ் மலை.விமானத்தில் பயணம் செய்த போது கார்த்தி எடுத்தது.

2014/08/13

தர்மபுரி மாவட்டம் :
தமிழ்நாட்டிலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் இன்று பாராட்டப்படும் மாவட்டமாக மாறியுள்ளது.
திரு.தம்பிதுரை :
தர்மபுரியில் பிறந்த இவர் இன்று மக்களவையின் துணை சபாநாயகராக பதவி ஏற்கிறார் :
திருமதி.பானுமதி:
இவரும் இதே தர்மபுரி மாவட்டத்தில் பிறந்தவரே.
இன்று உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்கிறார்.
தர்மபுரி  காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
பக்கத்து மாவட்டம் (அப்போது தர்மபுரி சேலம் மாவட்டத்தில்தான் இருந்தது )
பக்கத்து மாவட்டம் சேலத்துக்காரி என்ற வகையில் நானும் பெருமை பட்டுக் கொள்கிறேன்.
கார்த்தியைப் பற்றி சொல்லாமல் என் பதிவு நிறைவு பெறாதே.
கார்த்தி  ''நான் சேலத்து சிங்கம் '' என்று சொல்லிக் கொள்வான்.
''சத்திரியனுக்கு சாவு இல்லை''   என்றும் சொல்லிக் கொள்வான்.
விதி கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தது யார் காதிலும் விழவில்லை.
கேட்டபோது எல்லாம் முடிந்து விட்டிருந்தது.
கார்த்திக் அம்மா

2014/08/09

Tit Bits :
இஸ்கான் கோவில்:
இந்த முறை பெங்களூரு சென்றிருந்த போதுதான் முதல் முறையாக இஸ்கான் சென்றேன்.
கோவில் பார்க்கும் ஆசையிலோ அல்லது கடவுளை (அப்படி ஒருவர் இருந்தால் ) பார்க்கும் ஆசையிலோ அல்ல.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த ஒரு பெண்மணியுடன் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .
உண்மையிலேயே சொல்கிறேன்.வரலாற்றில் படித்தோமே.நம் நாட்டிற்கு வந்தவர்கள் கோவிலை கொள்ளையடித்தார்கள் என்று.
நானாகவே இருந்தாலும் செய்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.
அப்பப்பா ,பிரமிப்பாக இருந்தது.
கடவுள், வழிபாடு என்று எதுவுமே தெய்வீகமாகவே  இல்லை.
பார்,பார் எங்கள் செல்வத்தை பாருங்கள். பாருங்கள் என்று ஆர்பரித்துக் கொண்டிருந்தது கோவில்.
பூஜையும் மனதை கவரவில்லை.
அது ஒரு shopping mall  போல்தான் இருந்தது.
என் மேல் கோபப்படுபவர்கள் பற்றி நான் கவலை கொள்ளவில்லை.
உண்மையைத்தான் சொல்கிறேன்.
*****      *******
Sensodyn paste விளம்பரம்:
அப்பப்பா
தமிழா பேசுகிறார் அந்த அம்மா .ஐயோ கொலை. கொலை. ஏன் நல்ல உச்சரிப்புடன் பேச கூடியவர் யாருமே இல்லையா? ரத்த கொதிப்பு அதிகமாகிறது.
****** 
இந்த 4 பேர் உட்கார்ந்து பேசுவது என்பது எல்லா தொலைக் காட்சியிலும் தினசரி நிகழ்ச்சியாக உள்ளது.
ஏனப்பா .இந்த 4 முகங்களையே தான் பார்க்க வேண்டுமா?
பேசுகிறார்களா? உரைக்கிறார்களா ? குரைக்கிறார்களா ?
தாங்க முடியவில்லை கார்த்திகா.
உன்னை மறக்க நினைத்துதான் t .v யே  பார்க்கிறேன்.
ஆனால் விளம்பரத்தில் உன் பெயர். சினிமாவில் கதாநாயகன் பெயரும் கார்த்தி.
anchor  பெயரும் கார்த்தி.
நடிப்பவர் பெயர் கார்த்தி.
கார்த்தி,கார்த்தி,கார்த்தி.
அம்மாவும் கார்த்திக் அம்மா

2014/08/01

 01 August 2005
நாட்கள் ஓடுகின்றன. ஆனால் மனம் கார்த்தியுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது.
 01 August 2005  அன்று பள்ளியில் பணியில் சேர வேண்டிய நாள் என்பதால் நானும் கார்த்தியும் பெங்களூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்திறங்கினோம்.அவன் நண்பர் வீட்டிற்கு சென்று பைக் எடுத்துக் கொண்டு என்னை பள்ளியில் விட்டு விட்டு மகாலிபுரம் சென்றான்.
இரவு ரயிலில் புறப்பட்டு மீண்டும் பெங்களூர் சென்றோம்.
இது போல் சரித்திர ,வரலாறு சம்பந்தப்பட்ட இடங்கள் என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் மிகவும் ஆசை. வெறி என்று கூட சொல்லலாம்.எவ்வளவோ ஆசைகளும் திட்டங்களும் மனதில் வைத்திருந்த அந்த மகன் இல்லாமல் நான் தவிக்கும் தவிப்பு..... கொடுமை. கொடுமை.
கார்த்திக் அம்மா

2014/07/31

அன்பு ஜீவனுக்கு இன்று பிறந்த நாள். வலைப் பதிவில் அறிமுகமாகி இன்று உயிர் நண்பர்,உயர்ந்த அன்பர் என்று நட்பும் உறவும் வலுப் பெற்றுள்ளது.அவரின் வலை http ://jeevans blogspot .com .
நீடூழி வாழ வாழ்த்துக்கள்.
அன்புடனும் நெஞ்சம் நிறைய வாழ்த்துகளுடனும்
கார்த்திக்+செந்தில்+அன்பு அம்மா

2014/07/28

ஆடி மாதம் :
ஆடி மாதம் சூரியன் தெற்கு நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கும் மாதம்.
மழை பெய்து புதுப் புனல் (நீர் ) வரும் மாதம்.
உழவர்கள், விவசாயிகள் நாற்று நடும்  மாதம்.
மழை மாதம் என்பதாலும், விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டிய மாதம் என்பதாலும்தான் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப் பட்டன.அந்த காலத்தில் அரிசி முதல் அனைத்து பொருட்களும் உரலில் குத்தி ,வீட்டிலேயே தயாரிக்க வேண்டும். குறைந்தது 15 நாட்கள் அனைவரும் வேலை செய்ய வேண்டும். வேறு ஊர்களில் இருந்து வர வேண்டியவர்கள் மழையில் நடந்து அல்லது மாட்டு வண்டியில்தான் வர வேண்டும். இத்தனை சிரமங்களால்தான் இந்த மாதத்தில் திருமணம் வேண்டாம் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள்.
புது தண்ணீர் நோய்கள் கொண்டு வரும் என்பதால், வேப்பிலை மற்றும் மஞ்சள் தண்ணீர் (சிறந்த நோய் தடுக்கும் ஆற்றல் உள்ளவை ) ஊற்றுதல் என்ற பழக்கத்தையும் கொண்டு வந்தனர்.
இது  அறிவியல் என்று சொன்னால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள். அதனால் மாரி அம்மன் என்ற தெய்வத்தை உருவாக்கினார்கள்.
நான் சிறு வயதாக இருக்கும்போது வயலில் வேலை செய்பவர்களுக்கு ஒரு  பிளாஸ்டிக் பக்கெட் நிறைய சாதம், ஒரு தூக்கு நிறைய சாம்பார் என வீட்டிலிருந்து கொண்டு சென்று வேலை செய்யும் அனைவருக்கும் உணவளிப்போம்.சற்று படித்த குடும்பம் என்பதால் அரிசி சாதம்....
மற்ற வயல்களில் வேலை செய்வோருக்கு ராகி களி ( அதை கரைத்தால் கூழ்  ) தான் தருவர். வேலை செய்வோர் வீட்டில் சமைக்க நேரம் + வசதி இல்லாததால் இந்த உணவை மகிழ்ச்சியுடன் உண்ணுவர்.
அந்த வழக்கம்தான் கூழ் ஊற்றும் சடங்காக மாறி விட்டது.எல்லாம் ஆடம்பரமான, அர்த்தத்தை புரிந்து கொள்ளாத சம்பிரதாயமாக மாறி விட்டது. இந்த மாரியம்மன், காளியம்மன் எல்லாம் lower gods என்று மேல்குடி ஒதுக்கி வைத்ததும் ஒரு காரணம்.
*******
நேற்று விஜய் டி .வி யில் சினிமா விருது நிகழ்ச்சியில் SRK யின் பேச்சு சிறப்பாக இருந்தது.அவருடைய ஆங்கிலம் மிக சரியாக இருக்கும்.நானும் ஒரு ஆங்கில ஆசிரியைதான்.நான் எந்த தவறுகளை எல்லாம் செய்ய கூடாது என்று என் மாணவர்களிடம் சொல்வேனோ அந்த தவறுகள் இல்லாமல் பேசுவார்.சாதரணமாக senior most  என்றுதான் நிறைய பேர் சொல்வர்.ஆனால்  most senior என்பதுதான் சரி.
அதே போல் postponed  என்பதற்கு advanced என்பதுதான் சரியான எதிர்பதம் . நிறைய பேர் preponed  என்ற வார்த்தையை பயன்படுத்துவர்.
எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில ஆசிரியை எப்போதும் அந்த இடத்திற்கு சற்றும் பொருந்தாத onomatopoeic +high  sounding வார்த்தைகளை பயன்படுத்துவார்.பார்ப்பவர்கள் என்ன ஒரு அருமையான ஆங்கிலம் என்று பாராட்டுவர். எனக்குதான் தெரியும்.எத்தனை தப்பான ஆங்கிலம் என்று.நான் ஒன்றும் பெரிய அப்பா டக்கர் இல்லை. ஆனால் எனக்கே எல்லாம் தெரியும் என்று வேஷம் போட  மாட்டேன்.போகட்டும் என் கார்த்திக் மகனின் ஆங்கிலம் அவ்வளவு அருமையாக இருக்கும்.அவன் பேசும்போது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.
எல்லாம் போய்விட்டது.வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது.
கார்த்திக் அம்மா

2014/07/18

மஹாபாரதம் : Tit Bits :
பாஞ்சாலி :
ஐவருக்கும் பெண்டாட்டியாம்  அழியாத பத்தினியாம்: விளக்கம் :
பாஞ்சாலிஒரு சாதாரணப் பெண் அல்லல்.தெய்வப் பிறவி அல்லது அசாதாரணப் பெண்.
எனவே அவள் ஒரு மானுடனுடன் (மனிதனுடன்) உடலுறவு கொள்வதற்கு அப்பாற்பட்டவள்.
எனவே ஐவரை மணந்தாலும் ,  யாருடனும் உடலுறவு  கொள்ளாததாலும் யாருக்கும் மனதாலும்  களங்கப் படாததாலும் அவள் அழியாத ....( '' ''.கன்னித் தன்மை .'' '' )....அழியாத பத்தினியாம்.
 இதுதான் உண்மை.
அதனால்தான் பாஞ்சாலி, என்கிற திரௌபதிக்கு நிறைய இடங்களில் கோவில் உண்டு. திருவிழா உண்டு.
துரியோதனன் :
எனக்கு புரியாத விஷயம் என்னவென்றால் துரியோதணனை ஏன் கெட்டவனாக சித்தரிக்கிறார்கள் என்பதுதான்.
திருதராஷ்டிரன் குருடன் என்பதால் அவர் அரசராக செயல்பட வேண்டாம்.சரி. ஒத்துக் கொள்ளலாம்.
ஆனால் துரியோதனன்  தகுதியுடையவன்தானே.முறைப் படி அவன்தானே அரசனாக வேண்டும்.
இந்த உரிமையை அவன் கேட்டதில் என்ன தவறு?
தர்மர் சொர்கத்திற்கு சென்ற போது   தனக்கு முன்  துரியோதனன்அங்கு இருப்பதை கண்டு வியந்து போகிறான் என்கிறது காவியம்.
சரிதானே.Poetic Justice ..
கார்த்திக்  அம்மா 

2014/07/17

புன்னகை அரசன்:
நடிகர் பிரபு அவர்களின் சிரிப்பு சிறப்பாக இருக்கிறது.அவருக்கு ஏன் புன்னகை அரசர் என்று பட்டம் கொடுக்கவில்லை?
தனது தந்தையை விடவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
************
ஐயோ ஐயோ ஏதோ
நானும் சினிமா பத்தி ஏதாவது பதிவு போடலாம், போட்டு ஜனநாயக  நீரோடையில் இணையலாம் என்று பார்த்தால்,
இப்படி கூட்டமாக ஒன்று சேர்ந்து அடிக்க வருவீர்களா ?
escape .
கார்த்திக் அம்மா

2014/07/14

Super Star யார்?
எனக்கு சினிமா அறிவு மிகவும் குறைவு.2008 வரை நான் பார்த்த சினிமாக்கள் ஒரு 50 இருக்கலாம். நம்ப மாட்டீர்கள்.ஆனால் உண்மை அதுதான்.நேரம் இருந்ததில்லை.ஆர்வமும் இருந்ததில்லை. பெரிய குடும்பத்தில் நிறைய பொறுப்புகளுடன் இருந்ததால் சினிமா இரண்டாம் பட்சமாகியது.
நிறைய படிப்பேன்.எல்லா எழுத்தாளர்களையும் படிப்பேன்.
இப்போது இந்த கதை எதற்கு?
ரஜினி என்றால் கார்த்திக்கிற்கு மிகவும் பிடிக்கும்.
இப்போது அவர் படங்களை பார்க்கும் போது கார்த்தியின் தேர்வு சரி என்று உறுதியாகிறது.( கார்த்திக்கிற்கு பிடிக்கும் என்றால் ..எனக்கு..? அவரின் சிகரெட் ,குடி பழக்கம் அவர் மேல் எனக்கு ஒரு சிறு கசப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் அல்லாமல் இன்னும் சில காரணங்கள்  சொல்லலாம்.  ஆனால் வேண்டாம்.)
இப்போது பிரச்சினை என்னவென்றால் சில நடிகர்கள் தாங்கள்தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்வதுதான்.
ஒருவர் ஒரு வாரப் பத்திரிகையை குத்தகை எடுக்கிறார்.
இன்னொருவர் செய்ததுதான் amazing .ஒரு ஆங்கில தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக இரு முறை ஒளிபரப்பி கொடுமை படுத்தியதுதான்
இவ்வளவு வெறியா?
இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா?
மக்கள் சொல்ல வேண்டும்.
நமக்கு நாமே பட்டம் சூட்டிக் கொள்ளக் கூடாது.
 சினிமா உலகில் போட்டி நல்லதுதான்.அது நடிப்பில் மட்டுமே இருக்கட்டும்.

2014/07/13

என்ன ஆயிற்று சென்னைக்கு? ஒரே சோகமயம்.
ஒரு வாரம் மவுலிவாக்கம்.
இந்த வாரம் S B I கட்டிடம்.
எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த கட்டிடம்.
முறையான பராமரிப்பு வேண்டும்.இது என் வேலையல்ல, இது என் பொறுப்பு அல்ல என்று எல்லோரும் தட்டிக் கழிப்பது மிகவும் தவறு.
சுயநலமும் பணத்தாசையும் மனிதர்களை ஆட்டி வைக்கிறது. வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால் பணமே வாழ்க்கையாகிறது.ஆடம்பரத்தின் மேல் வெறி அதிகமாகிறது.
அன்பு , பாசம் அர்த்தமற்ற சொற்களாகின்றன . லட்சம் ,இழப்பீடு என்ற வார்த்தைகளில் உயிர்கள், உறவுகள் மறக்கப்படுகின்றன. யாவும் அரசியலாக்கப் படுகிறது.
நீ 5 லட்சம் தருகிறாயா,  நான் 7 லட்சம் தருகிறேன் பார் .
இதுதான் கலிகாலமா?
கார்த்திக் அம்மா

2014/06/23

என் அன்பு மகன் கார்த்தி தன கைப்பட எழுதிய கவிதை இது.
Handwriting Recognition என்ற மென்பொருள் முயற்சிக்காக
அவன் எழுதியது.
இந்த கவிதையை என்னையும் எழுதி தர கேட்டது என் உயிர்.
நானும் எழுதி கொடுத்தேன்.
கார்த்தியின் கையெழுத்து இதை விட நன்றாக இருக்கும். ஆனால் மாற்றி மாற்றி எழுதினால் என்ன செய்ய முடியும் என்பதற்காக இப்படி எழுதியது என் தங்கம்.
அதனை தட்டச்சு வடிவில் தருகிறேன்.

''தமிழ்த்தாயின் தாள் பணிந்து ''நான் எழுதும் ''
சிறு வாழ்த்து தமிழ் கூறும் நல்  உலகுக்கு.
சாதி மத பேதமின்றி
இறைவனின் உருவமிது என உணர்த்தினால்
மனத்தின் கண் பிரிவு வருதல் நிச்சயம் என உணர்ந்த
தெய்வப் புலவன்
இறைவனின் திருவடி எனும் தாமரைத்தாள் பற்றி பாடி போனான்.
அவன் கருத்துணர்ந்து
அனைவரும் ஒற்றுமையாய் வாழ்ந்து
சிறப்புறுவோமாக .
...... ......இதை உரைநடையில் தருகிறேன்.
...... தெய்வப் புலவர் திருவள்ளுவர் தன்  குறள்களில் எந்த இடத்திலும் தெய்வத்திற்கு ஒரு உருவம் தந்திருக்க மாட்டார்.
ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட உருவம் என்றால் ஒரு மதத்திற்கு உரியதாகி அடுத்த மதத்தினர் மனம் புண்பட்டு மத துவேஷம் ஏற்பட்டு மக்களிடையே பிரிவு சண்டை தோன்றலாம் என்பதால் ''திருவடி'' பற்றி மட்டுமே சொல்வார்.
இதைத்தான் கார்த்தி சொல்லி எல்லோரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று சொல்கிறான்.
தமிழ்த்தாயின் தாள் பணிந்து '
இது எழுதப்பட்ட வருடம் 2001..என் கண்மணியின் எண்ணம் எவ்வளவு உயர்ந்ததாக இருக்கிறது.அதை சொல்வதில் எவ்வளவு தன்னடக்கம் இருக்கிறது .அன்றே தமிழ் பற்றை வெளிப்படுத்திய பாங்கு.
இவ்வளவு நல்ல உள்ளம் கொண்ட அந்த தெய்வ மகனை இந்த உலகத்திலிருந்து விரட்ட அந்த தெய்வத்திற்கு எப்படித்தான் மனம் வந்ததோ?இத்தனை 1000 கோடி பேர் இருக்கும் இந்த உலகில் என் மகனுக்கு ஒரு துளி இடம் இல்லாமல் போயிற்றா?
என் தெய்வமே  உன்னைக் காணும் நாளும் வருமோ?
கார்த்திக் அம்மா




2014/06/19

எப்போதும் ஒரு சோகமான விஷயம் அல்லது நன்றாக இல்லாத செய்தியை பற்றியே எழுதிக் கொண்டிருக்கிறேனே ,.... ஏதாவது  ஒரு நல்ல விஷயத்தைப் பற்றிதான் எழுத வேண்டும் என்று ஒரு நல்ல செய்திக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்.
இன்றுதான் ஒரு செய்தி கிடைத்தது.
ஹோமி பாபா என்ற ஒரு அணு ஆராய்ச்சியாளர் இருந்தார். எத்தனை பேருக்கு தெரியுமோ?1966 ல் விமான விபத்தில் ''கொலை'' செய்யப்பட்டார்.
வளர்ந்து வரும் எந்த அறிவாளிகளும்  இப்படி விபத்தில் மாட்டுவது ( மாட்ட வைக்கப் படுவது ) பல வருடங்களாக நடக்கும் ஒரு விஷயம்.எத்தனையோ உதாரணங்கள் சொல்ல முடியும்.
எனக்கு இவரின் இறப்பில் எனக்கு மிகப் பெரிய வருத்தம் உண்டு.
99 வயதில் இறக்கும் ஒரு அரசியல்வாதி, ஒரு நடிகர் பற்றி ''இவரது மறைவு நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு என்று ஊடகங்களும் தலைவர்களும் அறிக்கை விடும் போது எரிச்சலாக இருக்கும்.
ஆனால் ஹோமிபாபாவின் இறப்பு உண்மையிலேயே நாட்டிற்கு மிகப் பெரிய இழப்பு.
நேற்று அவருடைய வீடு ஏலத்திற்கு வந்துள்ளது.
யாரோ ஒரு பெயர் சொல்ல விரும்பாத நல்லவர் 112 கோடி அதிகம் கொடுத்து வாங்கியுள்ளார்.
ஒரு நடிகை பால் குடித்த கிண்ணத்தை ஒரு அண்டா தண்ணீரில் கழுவி அந்த நீரை ஒரு கிண்ணம் 10 ரூபாய் என்று விலை வைத்து விற்க அதை வாங்க வரிசையில் நின்று வாங்கி குடித்து ஜன்ம சாபல்யம் அடைந்த மகான்கள் வாழும் இந்த நாட்டில் ....
ஒரு scientist வீட்டை வாங்கிய அவருக்கு என் வணக்கங்கள். வாழ்க
அன்புடன் ,
கார்த்திக் அம்மா

2014/06/11

என் கணவர்  மேட்டூர் அணையில் A E E யாக பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி :
அவர் சிவில் துறை என்பதால் அணையின் பராமரிப்பு பொறுப்பு அவருக்கு..
    அணையில் நீர் குறைவாக இருக்கும் போது சுரங்கமின் நிலையம் செயல்படாது.அந்த நாட்களில்தான் அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்படி ஒரு நாள் என் கணவர் சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
திடீரென  ஏதோ ஒரு சத்தமும் அதிர்வும் கேட்டிருக்கிறது.
என் கணவரும் அவருடன் சென்ற இன்னும் இருவரும் வரும் அபாயத்தை உணர்ந்து அதிர்ந்துள்ளனர்.
அது என்னவென்றால், சுரங்கத்திற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் வேகம் அது பற்றி தெரிந்தவருக்குதான் புரியும்.
விபரீதத்தை உணர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் ஓட ,தண்ணீர் துரத்த ...,நூலிலையில் தப்பித்தனர்.தவறு யார் மீது ? ஆய்விற்கு செல்கிறேன் என்று இவர் சொல்லவில்லை.ஏன்  என்றால் அணையின் நீர் மட்டம் அவ்வளவு குறைவாக இருக்கும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவர் தைரியமாக சென்று விட்டார்.
சிவில் A E E  உள்ளே சென்றிருப்பார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
......  ....
இந்த பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?
24 பிஞ்சு முகங்கள் அணை நீரில் அடித்து செல்லப் பட்ட செய்திதான்.
நெஞ்சு பதறுகிறது.எல்லோர் முகமும்  கார்த்தி முகமாக தெரிகின்றன.அந்த பெற்றோர்கள் இடத்தில் என்னை நிறுத்துகிறேன்.அந்த வேதனை என்ன என்று எனக்கு தெரியும்.
ஆனால் இதில் யாரை தவறு சொல்வது?
இத்தனை மாணவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருப்பார்கள் என்று அணை அதிகாரிகள் எதிர்பாராதது.
விதி.As always i say its ''HAPPENISM '' நிகல்விசம் .இன்று இது இப்படி நடக்கிறது.இதற்கு முன் வினையோ ,கர்மாவோ ,பாவமோ புண்ணியமோ காரணம் இல்லை.
இந்த நிமிடம் இது இப்படி நடக்கிறது. அவ்வளவுதான்.
ஏற்றுக் கொள்ள முடியாத, தீராத சோகம்தான்.நான் அனுபவிக்கிறேனே.கண்ணீருடன் வாழ்க்கைதான்.அந்த பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?விதியே உன் விளையாட்டு எல்லை மீறுகிறது.
வேதனையை பகிர்ந்து கொள்ளும்
கார்த்திக் அம்மா

2014/06/03

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
 
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

2014/05/27

குமுறல்கள்:
my first disclaimer : i am not jealous with anybody ,nor  am  i  a  cynic .
யார் மீதும் பொறாமையோ , மற்ற ego எதுவுமோ இல்லை.
சௌந்தர்யாவை  மனமார பாராட்டுகிறேன்.
ஆனால் சௌந்தர்யாவை ஓ ஓ ஓவராக பாராட்டும் பலரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஒருவர் சொல்கிறார்.''இந்த பெண்ணுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது என்றே தெரியவில்லை''
எத்தனை இளைஞர்களுக்கு இந்த மாதிரி கனவு இருக்கிறது தெரியுமா? அவர்களிடம் இந்த 'ரஜினி' என்ற மந்திர சொல்லையும், 150 கோடியும் கொடுத்திருந்தால் அவர்களும் சாதித்திருப்பார்கள்.இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள் தெரியுமா?
*******
Green ink :
என் வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். எழுத பேனா கேட்டேன் .''இது பச்சை மை'' என்றார். அதிர்ந்து ''அதிர்ந்து'' விட்டேன்.
ஏன் தெரியுமா?
அவர் 8ம் வகுப்பு கூட தேறாதவர்.
உள்ளாட்சி ,ஒரு கிராம பஞ்சாயத்தில் ஏதோ ஒரு பதவியாம்.
''G '' போட்ட வண்டியில் வந்தார்.
கொடுமையே !!!!!
எத்தனை மென்பொருளை வடிவமைத்து நாட்டின் பொருளாதாரத்தையே  உயர்த்தும் பொறியாளர்கள் எல்லாம் கனவு கூட காண முடியாது இப்படி ஒரு பச்சை மை, G வண்டி.
நான் பணியில் சேர்ந்த போது பச்சை மையில் கையெழுத்திடும்  உரிமை இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு AEE  போன்ற பலருக்கும் அந்த உரிமை மறுக்கப் பட்டது.அனல்மின் நிலைய கட்டுமானத்தில் பணியின்போது  எத்தனை சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் .tunnel ,chimney போன்ற கட்டுமானங்கள் எவ்வளவு அறிவும் ,அர்பணிப்பும் தேவைப்படும் விஷயம் தெரியுமா?.அவர்களுக்கெல்லாம் பச்சை மை கிடையாது.
யாரை குறை சொல்வது?
*****
+1 பாடங்கள்;
மாநகராட்சி செய்த முடிவு:
மாணவர்களின்  தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இனி +1 பாடங்களை நடத்தாமல் +1 லும் +2 பாடங்களையே நடத்த வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
எல்லா தனியார் பள்ளிகளிலும்  இதைத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இதன் விளைவு என்ன தெரியுமா?
+1 கணிதம்தான் மிக முக்கியமானது. B .E சேர்ந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் மாணவர்கள் இருப்பார்கள். இந்த M 3 என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அது அவர்கள் சேரும் எந்த வேலைக்கும் பயன்படுவதில்லை.ஆனால் அந்த M 3 யில் தேறி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.பட்டம் பெற்றுவிடுவார்கள்.ஆனால் ஒரு 30% பேர்தான் தேறுவார்கள். இந்த அடியில் துவண்டு விடும் மாணவர்கள் அதிர்ச்சியில் அடுத்து அடுத்து arrears என்று ,வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள்.
என் மாணவர்கள் பலர் இப்படி ஆகியுள்ளனர்.ஒரு 10 கணக்குகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வைத்து (அதுவும் ஒரு vocational பிரிவு )மாணவன் 200க்கு 200 பெற வைத்து கிண்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம்.ஆனால்....அதனால் +1 கணிதம் மிக மிக முக்கியம்.
கார்த்திக் அம்மா

2014/05/24

கார்த்தியும் கோச்சடையானும் :
 கார்த்திக்கிற்கு  பிடித்த நடிகர்  ரஜினி..அவருடைய படம் என்றால் முதல் நாளன்றே பார்க்கும் பழக்கம் உள்ளவன்..
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்  என்று கார்த்திக்கிற்கும் ஆசை இருந்தது..குடும்ப பாரம் காரணமாக  அந்த ஆசையை தள்ளிப் .போட்டிருந்தது என் செல்லம்.
 படம் தொடங்கும்  போது கார்த்தி இருந்திரிருந்தால் கண்டிப்பாக இந்த டீமில்  அவன் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்.
 வேதனையில் மனம் தள்ளாடுகிறது .
கார்த்திக் அம்மா

2014/05/12

அன்னையர் தினம் :
என் அன்னை:
என் தாய்
என் அம்மா
அவன் எனக்கா  மகனானான் ?
நான் அவனுக்கு  மகள் ஆனேன்.
என் தாயே,
என் தெய்வமே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நாம் மீண்டும் தாய் மகனாகப் பிறந்து சேர்ந்து இருக்க வேண்டும்.
இல்லையேல் சொர்க்கத்தில்   (அப்படி ஒன்று இருந்தால் )  உன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

2014/05/10

என் blog ஐ யார் படிக்கிறார்களோ இல்லையோ வருணபகவான் நிச்சயம் படிக்கிறார். பின் என்ன? வருண பகவான் கருணை செய்ய வேண்டும் என்று எழுதினேன். கொட்டி தீர்த்து குளிர்ச்சியாக்கிவிட்டார்  சென்னையை.
நன்றி வருண பகவானே.


முதல் மதிப்பெண் :ஊசிப் போன வசனம்:
முதல் மதிப்பெண் பெறும் அனைவரும் சொல்லும் வசனம்:
டாக்டராகி  ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் .
கலெக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்.
இது வரை எத்தனை பேர் அப்படி சேவை செய்திருக்கிறார்கள்  என்ற லிஸ்ட்டை  யாராவது தந்தால்  நன்றாக இருக்கும்.
நான் முதல் மார்க் வாங்கினேன். மகிழ்ச்சி.என்பதோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

2014/05/08

தேர்தல் விழா முடிந்து விட்டது.இனி அடுத்த நாடகங்கள் ஆரம்பிக்கும்.எல்லா M .P க்களும் மந்திரியாக முயற்சிப்பார்.
கொடுத்த வாக்குறுதிகள் செவ்வாய்,சனி கிரகத்திற்கு பறந்து விடும்.
இதற்கு என்ன தீர்வு?
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.
இருந்தாலும் சொல்வதை சொல்லி வைக்கிறேனே..
மிக அதிக வாக்கு பெற்றவர் M .Pயாக  6 மாதம் இருக்க வேண்டும். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த 6 மாதத்திற்கு அவருக்கு அடுத்து அதிக வாக்கு பெற்ற அடுத்த வேட்பாளரை M .Pயாக்க வேண்டும். 
அவருக்கும் அதே 6 மாதம்.
அவரும் சரியாக  கடமை செய்யவில்லைஎன்றால் அடுத்தவர்.
இப்படி ஒரு system வந்தால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
5 வருடம் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரில்தான் 1000 +2000 கோடி சொத்து சேர்க்கும் வேலையில் இறங்குகின்றனர்.
My suggestion :
Who cares if i record my idea?
Anyhow, i will write my ideas here. The elections being over the next drama will start.All elected M.P s will try to become Ministers.( Not to serve the country)
but to fill up their coffers at least with 1000 or 2000 crores.
Those who voted will have to wait for another 5 years.
THE SOLUTION:
The candidate who secured the maximum votes should be M.P for the first six months.If by the given time if they don't fillup their promises they should quit. 
And the next candidate should become the M.P.
Like this without another election for another 5 years the cycle should continue.
This system will instill a fear in their mind and the M.Ps will try to work for the people.
 AM I  RIGHT ?


2014/04/30

வாக்குப் பதிவு நாளில் இருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மனமாக இருந்தது.
இன்று எழுதுகிறேன்.
ஆந்திராவில் சிரஞ்சீவி ஓட்டு  போட  வந்தபோது வரிசையில் நிற்காமல் செல்ல முயன்றிருக்கிறார்.
கார்த்தி (இந்த பெயருக்கு ஒரு தனி இதுதான்) என்ற நபர் அவரை தடுத்து நீங்கள் மட்டும் எந்த வகையில் ஸ்பெஷல் ,வரிசையில் நின்று வாருங்கள் என்று தைரியமாக சொல்லி ,செய்தும் காட்டி விட்டார்.
ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு நடிகர் வாக்கு சாவடியில் தன தொண்டரடி பொ டியால்வார்களுடன் நின்று ஏதோ கருத்தரங்கிற்கு வந்தவர் கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தார்.
ஓட்டு பெட்டி ரெடியாகவில்லை என்றால் அந்த presiding  officer  யாரையும் உள்ளே அனுமதிக்கவே கூடாது.யாராயிருந்தாலும் வெளியில் தான் நிற்க வேண்டும்.
எல்லோரும் அந்த நடிகரை பார்த்து அப்படியே மயங்கி நின்றனர்.
அவர்களை கண்டிப்பாக சஸ்பெண் ட் செய்திருக்க வேண்டும்.
சரி, அவர்கள்தான் தவறு என்றால், இந்த தெய்வப் பிறவி சரியாக நடந்திருக்க வேண்டுமல்லவா?
வை.கோ. வந்தார். வாக்கு சாவடியில் பணியில் இருந்தவர்கள் எழ முற்பட்டனர்.அவர்களை உட்காரும்படி கைகாட்டி விட்டு ஓட்டு பதிவு செய்தார்.இது பாராட்டுக்குரியது.
மற்றவர்கள் எல்லோரும் வரிசையில் நின்றே வாக்களித்தனர்.
நான் ஒரு சுயநலமி, பச்சோந்தி, கருமி என்று அந்த நடிகரே கதறினாலும் மக்கள் மாற மாட்டார்கள்.
************      ******
முதல்வர் கொட  நாடு சென்றார் என்று ஆர்பாட்டம் செய்யும் தொலைகாட்சிகள் ஹாங்காங் பயணம் பற்றி ஏன்  அடக்கி வாசிக்கின்றன?
  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?
கார்த்திக் +அம்மா

முகுந்த் :அஞ்சலி :நன்றி .தந்தி  .t .v
நாட்டுக்காக உயிர் நீத்த வீர மகனே உனக்கு என் வீர வணக்கங்கள்.
தந்தி தொலைக் காட்சியில் நேரலையாக அவரது இறுதி காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
2 மணி நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.கண்கள் கலங்கியபடியே இருந்தது.
எத்தனையோ கேவலமான நிகழ்ச்சிகளை மணிக்கணக்காக பார்க்கிறோம்.
நம் முகுந்தின் தியாகத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதான் என மனம் அமைதி கொண்டது
கார்த்திக்+அம்மா

2014/04/26

EVM : வாக்கு பதிவு இயந்திரம் :பழுது:
தொலைக் காட்சிகளில்   ''  வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ,  பழுது ஏற்பட்ட காரணத்தால் வாக்கு பதிவு தடைபட்டது ''  என்று செய்தி சொல்கிறார்கள்.
நானும் தேர்தல் பணி செய்துள்ள அனுபவத்தில் சொல்கிறேன்.
EVM பழுதாவதில்லை.அதை சரிவர SET செய்ய வேண்டும். ஒரு சிறு தவறும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
அதை உபயோகப் படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்தாலும் பலர் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.அதனால் அதிகாரிகள் செய்யும் தவறே .மற்றபடி இயந்திரம் சரியாகத்தான் இருக்கும்.
பல விஷயங்கள் இப்படித்தான் அரைகுறையாக புரிந்து கொள்ளப் பட்டு உண்மைகள் உறங்கி விடுகிறது.
கார்த்திக் அம்மா

2014/04/24

karthik  and  phone :
அடிக்கடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் .நினைவலைகள் முன்னோக்கி ,பின்னோக்கி என்று ஓடும் .
அப்படித்தான் இன்றும்.
2004 தேர்தலும் , அப்போது கார்த்தி என்னுடன் இருந்த நினைவுகளுமாக இருந்த நான்   ''அடடா  இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்ல வேண்டுமே ''  என்று என்னையும் அறியாமல் என் கை செல் போனை எடுத்து விட்டது.
ஒரு நிமிடம் .
       ''கார்த்தி என்னுடன் இல்லை. அவன் இந்த உலகை விட்டு போய் 8 ஆண்டுகள் ஆகி விட்டது. அவனுக்கு நான் செல்போனில்  பேச முடியாது '' என்ற உண்மை உறைத்த போது
அப்பப்பா 1000 வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் அப்படி ஒரு வேதனை.
துடித்துப் போனேன்.
எனக்கு ஏன் இப்படி நடந்தது?
நான் ஏன்  என் மகனை இழந்தேன்?
ஏன் இந்த தீராத வேதனை?
கார்த்திக் அம்மா
கார்த்திக் அம்மா

2014/04/22

VOICE   or   NOISE
அப்பாடா ,
ஒரு வழியாக இன்றுடன் பிரசாரம் முடிகிறது.   டி .வி  க்களும் இந்த NOISE ,இந்த காட்டு கத்தலை நிறுத்திவிடும்.
எதற்கு இப்படி கத்தி காட்டு கூச்சல் போடுவார்களோ? அதிலும் பெண்கள் மூச்சு விடாமல் கத்துகிறார்கள்.
எல்லோரும் ஒரு 5 நிமிடம் பேசலாம்.ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள்.
ஒன்றுமே புரிவதில்லை.
தொகுப்பாளர்களும் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் நினைத்தால் மைக் off செய்து கத்துபவர்களை  கட்டுபடுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி மிக சுவராஸ்யமாக இருப்பதாக ,செய்வதாக நினைத்துக் கொண்டு ,...எரிச்சல்தான் மிஞ்சும்.
வாக்களிப்பு முடிந்ததும் மறுபடி ஆரம்பிப்பார்கள்.
நன்றாக பேசுங்கள்.ஜனநாயகத்தை வாழ விடுங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2014/04/21

மாநகராட்சி GEYSER  வெந்நீர் :
thanks to corporation .சென்னை மாநகராட்சிக்கு நன்றி.
இலவச வேட்டி ,சேலை போல் இலவச வெந்நீர்.
tap திறந்தால்  சுடுநீர்தான் வருகிறது.
SUN ( அந்த சூர்யன்) இல்லைங்கோ .இவர் நம் சூர்ய  பகவான்.
இன்னும் 4 மாதங்களுக்கு அவர் ஆட்சிதான்.
கொடுங்கோலாட்சிதான்.
வருண பகவான் டெபாசிட் இழந்து விடுவார்.
சீ சீ ..இந்த election fever .தேர்தல் தாக்கம் பாருங்கள்.
சூர்ய பகவான் சற்றே கருணை கொள்ளும்
கலா கார்த்திக் ( கார்த்திக் அம்மா )
( கார்த்திக் அம்மா )

2014/04/13

Election 2004 and I (karthik  amma )
 நான் (கார்த்திக் அம்மா ) வேலையில் சேர்ந்த போது  26 வயது.  (அதற்கு முன்பே 22 வயதில் கல்லூரியில் Asst Prof ஆக வேலை செய்து , கார்த்திக்கிற்காக அந்த வேலையை விட்டது ஒரு சிறுகதை )   அப்போது அந்த வயதில் அரசு வேலை அந்த வயதில் கிடைப்பது பெரிய விஷயம். M .G .R  புண்ணியம்.T .N .P .S .C  தேர்வு வைத்தார்.அதனால் நல்ல rank பெற்று லஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது.
அப்போது செய்முறை தேர்விற்கு என்னை ஒரு பள்ளிக்கு பணித்தனர்.அதே போல் +2 பொது தேர்விற்கும் என்னை மேட்டூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு நியமித்தனர்.எந்த வேலையையும் திறம்பட செய்வதுதான் என் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே.அந்த பள்ளிக்கு நான் என்பது போல் ஆகிவிட்டது.தேர்வு நடக்கும்போது  சுற்று வரும் அதிகாரிகள் என் தேர்வு மையத்திற்கு வருவதே இல்லை. எல்லாம் perfect ஆக இருக்கும் என்ற நம்பிக்கை.
இதில் என் சீனியர் களுக்கு காதில் புகை.
இந்த பள்ளி என்பதால் தான் நான் சிறப்பாக செய்வதாக அவர்கள் வாதம்.
சரி.சவால்.ஒரு மோசமான பள்ளி ,சேலம் மாவட்டத்தில் .அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பிளேடு ( அதாவது பிளேடால் கூடாத இடத்தில் வெட்டுவது ) போடுவதில்  வல்லவர்களாம்.
அந்த வருடம் எனக்கு அந்த பள்ளி. சவால்  சவால்தான்.
அந்த பள்ளிக்கு சென்றேன். என்னதான் வீரமாக சவாலை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் சிறிது உதறல்தான்.என்னவோ தெரியவில்லை.மாணவர்கள் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் பழகினர்.ஒரு பிரச்சினையும் இல்லை.
சென்றேன். .வென்றேன் .வந்தேன்.
vini ,vidi  visi
went .worked .won .
அட ,இது சின்ன பெண்ணாக தெரிந்தாலும் பெரிய ரௌடி  போல் ...என்பதாக பேராகி விட்டது.அதிலிருந்து எங்கு பிரச்சினையோ அங்கே எனக்கு பணி .
Election 1999.
எனக்கு ஒரு ரௌடி ஊரில் பணி .presiding officer .6 p .m . ஒரு கும்பல் வாக்கு சாவடி அருகே வர ஆரம்பித்தது..'' யாராவது ஏதாவது பிரச்சினை செய்தால் வாக்கு சாவடியை இழுத்து மூடி விடுவேன். தேர்தலே நடக்காது '' என்று ஒரு சிம்ம கர்ஜனை. எல்லோரும் ஓடி விட்டனர்.
2004. சென்னை ..அதிலும் வட சென்னையில் தேர்தல் பணி .
வாக்கு  பதிவிற்கு முதல் நாள் .VOTING  MACHINE  பற்றி நான் எதுவுமே கண்டு கொள்ளவில்லை.கார்த்தி, செந்தில், என்னுடன் பணியாற்றிய ஒருவரின் மகன் என மூவரும் எல்லாம் செட் செய்தாயிற்று .என் அருமை கண்மணி கார்த்தி ஒரு வார்த்தை ''அம்மா இது என்னுடைய academic project  என்று சொல்ல வேண்டுமே. இந்த VOTING  MACHINE என்னுடைய academic project என்று சொல்ல வேண்டுமே   ..(ref .karthik 's resume ).
அடுத்த நாள் ஓட்டு  பதிவு. கள்ள ஒட்டு போட  துடித்தது ஒரு கும்பல்." ஒரே ஒரு கள்ள ஓட்டு கூட போட அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டேன். முதலில் நட்பாக கேட்டார்கள். சிறிய கெஞ்சல் . அப்புறம் மிரட்டல்தான். எதற்கும் பயப்படவில்லை.
" உயிருடன் வெளியே போக மாட்டாய்" என்றார்கள்.
பக்கத்து சாவடிகளுக்கு பிரியாணி .எங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை. செந்தில் அனைவர்க்கும் சாப்பாடு வாங்கி வர ...என் செலவு.
D .S .P வந்தார். '' ''சார், வோட்டு பதிவு முடிந்து வெளியே செல்லும் பொது எனக்கு பாதுகாப்பு வேண்டும்". என்றேன் அவருக்கு ஆச்சரியம் இந்த சின்ன உருவம் .இவ்வளவு தைரியமா என்று. இந்த ஒரு வாக்கு சாவடியில்தான் ஒரு கள்ள வோட்டு கூட இல்லை என்று பாராட்டியவர் சொன்னது போலவே வந்தார். வாழ்க்கை வீரமாக ,சாதனைகளாகத்தான்  இருந்தது 2005 வரை . இப்போது புலி எலியாகி விட்டது. யானை பூனையாகி விட்டது.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா.

2014/04/06

என் அத்தை ஒருவர் நினைவு இப்போது வருகிறது.என் அப்பாவின் சகோதரி. ஒவ்வொரு முறை தோட்டத்தில் எந்த அறுவடையாயிருந்தாலும்  வந்து விடுவார்.
  என் அம்மாவிடம்'' மேலைக்கு இன்னாலைக்கு (ள  .உச்சரிப்பு எல்லாம் எதிர்பார்க்க முடியாது) இருக்கிறேனோ இல்லையோ .எனக்கு நெல் கொடு, எல் கொடு '' என்று கேட்பார்.
முதல் முதலாக இந்த வசனம் கேட்ட போது நான் சோகமாகி விட்டேன்.ஆனால் கிட்டத்தட்ட ஒரு 20 வருடம் கழித்துதான்  காலமானார்.
         இப்போது அத்தை கதை எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஒருவர் அடுத்த தேர்தலின் போது நான் இருப்பேனோ இல்லையோ ,இதுவே கடைசி தேர்தலாக  இருக்கலாம் என்று பல தேர்தல்களாக ஒட்டு கேட்கிறார் ???????
2. ஒருவருக்கு 10  பத்தே கோடிதான் சொத்தா ஆ ஆ ம்.
நம்பிட்டோமே,.. நம்பிட்டோமே.
3.மூன்றாண்டுகளுக்கு முன்பு பாலாறும் தேனாறும் பாய்ந்த தமிழ் நாட்டில் இப்போதுதான் பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தலை விரித்தாடுகிறதாம்
இன்னொரு அம்மணி சொல்கிறார்..
எல்லோருக்கும் மக்களின்  மேல் அப்படி பாசம் பொங்கி வழிகிறது. மக்களை வாழ வைக்க துடிக்கிறார்கள்.
4.கடவுள் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறார் கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரிய நாத்திகர். .
எனக்கே நிறைய வருடங்களாக ஒரு சந்தேகம். அறிஞர் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த தலைவர் என்ன அறிந்திருந்தார்?
I used to tell ''some questions are unanswerable.'' ..even if one knows the answer.
Some questions are asked not expecting any answers.

2014/04/04

அம்மாடியோ .மயக்கம் வருது :
   
மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ***** வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
2.புறம்போக்கு  நிலத்தை அடமானம் வைத்து 250 கோடி கடன் பெற்று மருத்துவ கல்லூரி கட்டியுள்ளார் ஒருவர்.புறம்போக்கு நிலத்தை .அடமானம் வைத்தவர் தவறு செய்தவர்தான்.  ஆனால் கடன் கொடுத்த வங்கி ,  அதன் மேலாளர்   இவர்களை என்ன சொல்வது?
3.இன்னொரு மருத்துவக் கல்லூரி   1200  கோடி வருமான  வரி (வருமானம் அல்ல ,  வரி மட்டுமே ) கட்ட வேண்டுமாம் .
எனக்கு வரும் கேவலமான பென்சன் தொகைக்கு வரி பிடித்தே ஆக வேண்டுமென்று எனது வங்கி இந்த மாத பென்சனே தரவில்லை.
இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறதா?
  இவர்கள் என்னைப் போன்றவர்கள் கட்டும் வரிப் பணத்தில் தானே ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள்.எப்போது மாறும் இந்த கொடுமை?

2014/03/18

சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயமாக நம் சிறு ஆசைகள் அல்லது எண்ணங்கள் நிறைவேறும் அதிசயம் நடப்பதுண்டு.
அம்மா குடிநீர் பாட்டில்களில் ஜெ படம் இருந்தது மனதை அரித்துக் கொண்டே இருந்தது.தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை தூக்கி வீசுவதும் ,காலால் உதைப்பதும், குப்பை தொட்டியில் போடுவதும் மனதை சங்கடப் படுத்தியது.
இப்போது அந்த சங்கடம் நீங்கி விட்டது

2014/03/14

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
இது பற்றி பதிவு ஏற்கனவே  எழுதியுள்ளதால் மீண்டும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் எந்த channel  திருப்பினாலும் இதே கதை.
எரிச்சல் எரிச்சலாக வந்தது.
என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்  கணவனை இழந்துள்ளனர்?
அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?
அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
கோவிலுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்கு  இப்படி கதை சொல்லிக் கொண்டே போக வேண்டாம்.

2014/03/09

HALDIGHAT
 Only after Karthik's exit I came to know about his blog----''vijayanagar blogspot''.His friend helped me with his password.
It was ''HALDIGHAT''
haldighat
I could not understand what it stood for.
No surprise it is something connected with history ,as everyone knows Karthik was mad after History and it was (how painful it is to use past tense with Karthik ) he who started
'' '' varalaru.com'' ''.
So the password ''haldighat'' ''

// //Battle of Haldighati

Mughal forces outnumbered Pratap's men.
.On June 21, 1576 (June 18 by other calculations), the two armies met at Haldighati, near the town of Gogunda in present-day Rajasthan. // //

இது ஏன் எனக்கு தோன்றவில்லை.
கார்த்தி என்னை விட்டு பிரிந்த பிறகுதான் எனக்கு மெய்ல் ,ப்ளாக்  பற்றியெல்லாம் தெரிய  வந்தது.
கார்த்தியின் நண்பன் பாஸ் வோர்ட்  தந்தான். அது haldighat .அது என்னவாக இருக்கும் என்று நெடுநாட்களாக புரியவில்லை.
இப்போது தெரிந்து விட்டது. அது அக்பருக்கும்  மகாராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே போர் நடந்த இடம்.
கார்த்தி ஒரு வரலாற்று பைத்தியம். கல்லூரியில் 2ம் ஆண்டு( 1999 ம் ஆண்டு ) படிக்கும் போது '' '' வரலாறு..com '' '' ஆரம்பித்தான்.
அப்படியிருக்க password வரலாறு சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தோன்றாமல் போயிற்று.
கார்த்தி கார்த்திதான்.
அம்மா 

2014/03/06

கற்பழிப்பும் குடியும் .போர்னோ?
Its been widely accused that liquor is the main reason for rape cases.
But its been conveniently forgotten that PORNO is the main reason .Mobile phones also are a source of this. From children to old are becoming addicts to this PORNO. Remember in loksabha some M.Ps were suspended for viewing this porno in their mobile in parliament itself.
So take some strict measures to cut this PORNO.
நிர்பயா ,உமா மகேஸ்வரி என்று கற்பழிப்பு கொலைகளுக்கு காரணம்  மது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  ஆனால் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதுதான் போர்னோ .சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதன் பிடியில் தத்தளிக்கின்றனர்.கைபேசி, வலைதளங்கள் என அதன் வட்டம் விரிவடைகிறது. சினிமாக்களில் கையளவு துணியுடன் ஒரு 50 பெண்கள் உடல் முழுதும் காட்டி ஆடும் நடனங்களும் இதற்கு அடுத்த காரணம்..ஆகவே செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் போர்னோ வையும் இந்த ஆபாச நடனங்களையும் ஒழிப்பதுதான்.

2014/02/27

62 வயது :
மத்திய அரசுக்கு என்ன ஆயிற்று?
ஓய்வு பெரும் வயதை 62 ஆக அதிகரிக்க போவதாக சொல்கிறார்கள்.இப்படி வயதானவர்களே பணியில் இருந்தால் ...இழைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்?
உதாரணமாக இந்த மார்ச் மாதத்தில் ஒரு 10 லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக  வைத்துக் கொள்வோம்.அவர்கள் இன்னும் 2 வருடம் கழித்து தான் இடத்தை காலி செய்வார்கள்.அது வரை உமாமகேஸ்வரி போன்ற பெண்கள் இரவுப் பணி  செய்து வாழ்க்கையை தொலைக்க வேண்டியதுதான்.
எப்படியும் நாம்தான் மறுபடி ஆட்சிக்கு வரப் போவதில்லை.போகும் போது வரப் போகும் அரசுக்கு முடிந்த வரையிலான தலைவலியை ஏற்படுத்திவிட்டு போகலாம் என்ற நல்ல (? )எண்ணமோ !!!!1
இதற்கு ,இதனால் பாதிக்கப் படப் போகும் இளைஞர்களுக்கு  ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் நம் இளவரசர்  ராகுலிடம் கெஞ்சுவது. அவர் உடனே ஒரு வேண்டுகோள்  வைப்பார் .உடனே மாற்று அறிவிப்பு வந்துவிடும். துக்ளக் ஆட்சிதான்.
வாழ்க இந்தியா .

2014/02/07

கந்த சஷ்டி கவசம் :
எனக்கு பிடிக்காத பாடல். ஏன் ?
இதை எழுதியவர் ஒரு முனிவர்,ஞானி .
அப்படிப்பட்டவர்
கட்டு கட்டு கதறிடக் கட்டு ,
கட்டியுருட்டு கைகால்  முறிய
என்று சொல்கிறார்.
எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் அவரும் ( மனம் திருந்தி நல்லவராக மாறி )நன்றாக வாழ வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து ',
டுடு டகு  டகு
என்ற அர்த்தமற்ற  சப்தங்கள்.
ஆ ஆ ஆ னால்  தினமும் ஒரு முறை இதை சொல்லிவிடுகிறேன்.  பயம்தான்.  பக்தி அல்ல  .கார்த்தியும் நானும்  பகுத்தறிவுடன் கூடிய வாதம் செய்வோம்.
அதனால்தான் விபத்து நடந்தது என்று என்னை எள்ளி நகையாடினர் பலர்.
இது எப்படி என்றால் நம் மேல் அதிகாரியை நமக்கு பிடிக்காவிட்டாலும்  அவரை பார்த்தவுடன் ஒரு காலை வணக்கம்  சொல்வோமே அது போல்தான். சொல்லாவிட்டால் அன்று முழுதும்  அவர் முறைத்துக் கொண்டே திரிவார்.
அது போன்ற பயம்தான்.
எதற்கு வம்பு?
சொல்லிவிட்டால் பிரச்சினை முடிகிறது .அதனால்  எரிச்சலுடன் கவசம் சொல்கிறேன்.
வெறுமே இறைவா  (அப்படி ஒருவர் இருந்தால் ) என்று சொன்னால்  அவருக்கு கேட்காதா? நம் கஷ்டம் தெரியாதா? புரியாதா?
கஷ்டத்தை தீர்க்க மாட்டாரா?

2014/01/30

 எத்தனையோ   தாய்மார்கள் கெஞ்சியபோதும், போராடிய போதும்    கண்டு  கொள்ளாத அரசு  இப்போது  12  சிலிண்டர்கள் தரப் போகிறதாம் .அப்போது முடியாதது இப்போது நாட்டு    இளவரசர்  சொன்னவுடன் கொடுக்க முடிகிறது.என்ன நியாயமோ?

2014/01/17

Schumacher  and Karthik
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஷூமேக்கர்  ஒரு பெர்ய கார் பந்தய வீரர்.அவர் பனிச் சறுக்கு விளையாட்டின் போது சறுக்கி விழுந்து உயிருக்கு போராடி வருகிறார்.
கார்த்தி  U .S  சென்றிருந்த போது  இதே பனி சறுக்கு விளையாட்டின் போது தவறி விழுந்த வேகத்தில் கையிலிருந்த குச்சிகள் இரண்டும் எங்கோ போய்விட , சறுக்கிக் கொண்டே வந்திருக்கிறான்.எப்படியோ சமாளித்து எழுந்து நின்று விட்டிருக்கிறான்.
இதை என்னிடம் அவன் விவரித்த போது ,'' கண்ணப்பா ,பயந்து விட்டாயா ,இறந்து விடுவோம் என்று நினைத்தாயா?''
என்று கேட்டேன்.
அதற்கு கார்த்தி ''இல்லை அம்மா , எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்தேன் '' என்று பதில் சொன்னான்.
அப்படி பனிசறுக்கில் தப்பியவன் பைக் விபத்தில் பலியானான்.
நேர்மாறாக 300 கி.மீ வேகத்தில் வண்டிஓட்டிய போதெல்லாம் விபத்தில் சிக்காத ஷூமாக்கர்  பனி சறுக்கில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்.
What an IRONY
ஷூ மேக்கர் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தவர்.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது?
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2014/01/15

மன்மோகன் ஆட்சியின் அவலம்
திடீரனெ  ஒரு S .M .S வந்தது.கேஸ் புக்கிங் ரத்தாகிவிட்டது என்று..தொலைபேசியில் அந்த அலுவலகத்தை அழைத்தால் போனை  தொடவே மாட்டார்கள்.
சரி என்று நேராக அலுவலகம் சென்றால் எனக்கு முன்பே ஓரு 25 பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அதே போல் செய்தி.
விஷயம் என்னவென்றால்  9 உருளை வாங்காதவர்களுக்கும் மான்யமில்லா விலையில் பில் போட்டு அனுப்பியுள்ளார்கள்.தவறை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் சரி செய்திருக்கலாம். அதை விட்டு எல்லோருக்கும் செய்தி அனுப்பி எல்லோரையும் குழப்பி.  
அமைச்சர் ஆதார் அட்டை அவசியமில்லை என்கிறார். துணை அமைச்சரோ கண்டிப்பாக ஆதார் அட்டை வேண்டும் என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
மக்கள் மிகவும் குழம்புகிறார்கள்.காங்கிரசுக்கு ஓட்டு  போடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைவை மறு பரிசீலனை செய்கிறார்கள்.
தேவயாணி விஷயமும்  எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது .
ராகுலின்  கார் பெட்ரோல்  இல்லாமல் நடு வழியில் நின்று விட்டது என்ற செய்தி அவமானமாக இருக்கிறது.
இப்போது பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது. தேர்தல் வந்தால் விலை குறையும் .
மன்மோகன் வந்த போது சந்தோஷப் பட்ட அனைவரும் இப்போது வெறுப்பில் உள்ளனர்.
வரும் அடுத்தவர் என்று நம்பப்படும் அவர் ஹிட்லராக இருப்பாரா அல்லது நல்லவராக இருப்பாரா என்ற சந்தேகம் .எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது.

2013/12/25

இப்போது சன்  டி .வி யில் பாட்ஷா  படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்தி ஒரு ரஜினி ரசிகன்.
நான் கார்த்தி ரசிகை.
இந்த படத்தில் ''  அழகு ,அழகு '' என்று ஒரு பாடல் வருமே. நமீதா  பார்க்கும் எல்லோரையும்  ரஜினியாக  நினைத்து  படும் பாடல்.
கார்த்தியிடம் நான் சொல்வேன்.
'' கார்த்தி நீ U .S போய்  விட்டால் நானும்  இப்படித்தான் பார்ப்பவர்களை எல்லாம் நீயாக நினைத்து  இப்படி செய்தாலும் செய்வேன்''...
என்று சொல்வேன்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  ஒரு பார்வை பார்க்கும் என் செல்ல மகனை   ஆசையுடன் பார்ப்பேன்.
(கார்த்தி என்னை விட்டு அமெரிக்கா போய்  விடுவான் ,அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம்  இருந்து கொண்டே இருந்தது.ஆனால்  இப்படி ஒரு கொடுமையான பிரிவை எதிர் பார்க்கவில்லை.)
விதி.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2013/12/20

கீழே தரப்பட்டுள்ள பதிவு கார்த்தி பணி புரிந்த DELL ல் பணி புரியும் ஒருவர் கார்த்தியைப் பற்றி எழுதியது.
***  ******* ****
கார்த்திக் என்னை விட ஒரு வருடம் சீனியர். வயதிலும் சரி; படிப்பிலும் சரி. படிப்பை பொறுத்த வரைக்கும் சீனியர் மட்டுமில்லை- படு கெட்டியும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெருநிறுவனத்தில் வேலை வாங்கி பெங்களூர் வந்து இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்கு என்ன நடந்தால் என்ன? காலம் நிற்கவா போகிறது? காலம்தான் ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கினால் காலத்தின் வேகத்தோடு ஓடி வர முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகவே நின்று கொண்டான்.
கார்த்திக்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக- 
கார்த்திக்கை நான் பார்த்தது கூட இல்லை. அவனது அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் பெங்களூர் வருவார். நான்கைந்து நாட்களுக்கு விவேக் நகரில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ல் தங்கிச் செல்வார். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்றால் கிராமம் இல்லை. அபார்ட்மெண்ட்தான். எப்பொழுதோ இந்த ஊரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக நிறைய அபார்ட்மெண்ட்களை கட்டியிருக்கிறார்கள். போட்டிகள் முடிந்தவுடன் மற்றவர்களுக்கு விற்றுவிட்டார்கள். மரங்களும்,நிறைந்த குளுமையுமாக அட்டகாசமான அபார்ட்மெண்ட் அது. அங்குதான் கார்த்திக் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். 
கார்த்திக் எங்கள் நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தான். அவன்  எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அதே சமயத்தில் சேர்ந்தவர்கள் இன்றைக்கு சீனியர் டெலிவரி மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். கார்த்திக்கைப் பற்றி அவ்வப்போது இவர்களிடம் பேசியிருக்கிறேன். ‘அவன் இங்கேயே இருந்திருந்தா இந்நேரம் டைரக்டர் ஆகியிருப்பான்’ என்பார்கள். அவ்வளவு திறமைசாலியாம். வேலையில் அடித்து நொறுக்கியிருக்கிறான். நிறையப் பேருக்கு ரோல் மாடலாகவும் இருந்திருக்கிறான். மீட்டிங்கில்‘கார்த்திக் மாதிரி இருங்கள்’ என்று மேனேஜர்கள் தயக்கமே இல்லாமல் சொல்வார்களாம்.
கார்த்திக்கின் அம்மா ‘நிசப்தம்’ வாசிப்பவர். ஒரு முறை விபத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்தக் கட்டுரை ஏதோவிதத்தில் தன்னைச் சலனப்படுத்திவிட்டதாகவும் பெங்களூர் வரும் போது சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் வில்லேஜூக்கு சென்றிருந்தேன். மழை தொடங்கியிருந்தது. அவர்களின் அபார்ட்மெண்ட்டைச் சுற்றிலும் மரங்கள் அதிகம் என்பதால் இருள் சற்று தடிமனாகவே கவ்வத் தொடங்கியிருந்தது.
வீட்டில் கார்த்திக்கின் அம்மா மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை. கார்த்திக் அவரை விட்டுப் போய்த்தான் நான்கைந்து வருடங்கள் ஆயிற்றே. ‘இறந்துவிட்டான்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துவதேயில்லை. 
சொல்லவில்லை பாருங்கள்- கார்த்திக் விபத்தில் இறந்துவிட்டான். அவன் மிக வேகமாக வண்டி ஓட்டுவான் என்று அவர்களது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேகம் என்றால் மின்னல் வேகம். அப்படியான ஒரு வேகத்தில்தான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டுவிட்டான். தலைவிரி கோலமாக அவனைக் கிடத்தி வைத்திருந்த மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடியதாக அவனது அம்மா சொன்னார். ஆனால் பெரிய பலனில்லை. அவர் சென்ற போது அத்தனையும் முடிந்திருக்கிறது. தனது உயிரைக் கொடுத்து வளர்த்திருந்த மகன் இந்த புவியை விட்டு விலகியிருந்தான். 
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருமே  அதனை எதிர்கொள்கிறோம். இருந்தாலும் பெரும்பாலான மரணங்களை பெரும்பாலானவர்கள் கடந்துவிடுகிறோம். ஆனால் கார்த்திக்கின் மரணத்தை அவனது அம்மாவால் கடக்கவே முடியவில்லை. பெருமலையாகவோ அல்லது பெருங்கடலாகவோ மாறி நின்றுவிட்டது. தலைவிரி கோலமாக தனது மகனின் மரணத்தை எப்படி எதிர்கொண்டாரோ அதே புள்ளியில் நின்றுவிட்டார். கிட்டத்தட்ட standstill.
அந்த வீடு கார்த்திக் இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. படுக்கை விரிப்புகள் கூட மாற்றப்படவில்லை. அவன் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேபிள், அவன் ஒட்டி வைத்திருந்த நிழற்படங்கள் என அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அவனது வாழ்வின் இறுதி நொடிகளைத் தனது சக்கரத்தில் சுமந்து சென்ற பைக்கை வீட்டின் வரவேற்பறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். 
கார்த்திக்கின் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரே விஷயம்தான் இருக்கிறது. ''''‘கார்த்திக்’' '''. அங்கிருந்த நாற்பது நிமிடங்களும் அவனது நிழற்படங்களைக் காட்டினார். அவனது நண்பர்களைப் பற்றி பேசினார்- அந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு இப்பொழுது மேனேஜர். இன்னொருவர் முன்னாள் மேனேஜர்,  கார்த்திக்குக்கு நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார், அவனது எழுத்து பற்றிச் சொன்னார், அவனது ஆர்வங்கள் குறித்து உற்சாகமடைந்தார். 
அவனது மின்னஞ்சல்களிலும், அவனது வலைப்பதிவிலும், அவனது டைரிகளிலும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிக் கொண்டிருக்கிறார். ‘தனக்கான செய்தி’ எதையாவது இந்த எழுத்துக்களில் விட்டுச் சென்றிருப்பான் என்று இன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறார். இனியும் அதையேதான் தொடர்வார். இதுதான் அவரது வாழ்க்கை. இதுதான் அவரது உலகம்.
தனது உலகத்தை ஒட்டுமொத்தமாகச்  சுருட்டி ஒற்றை பெயருக்குள் வைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையாரைப் பார்க்கும் போது எனது பெரும்பாலான வார்த்தைகள் வறண்டு போய்விட்டன. தனது வாழ்க்கையின் மிச்சக்காலம் முழுவதையும் இப்படியே கழிக்கப் போகிறேன் என்ற அவரது வைராக்கியம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை. அதை அவர் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பயத்தில் அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டேன். அவரது கண்களை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன்.
பேச்சுவாக்கில் அவனது நினைவிலேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாட்கள் மட்டும்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உருக்குலைந்து போயிருக்கிறார். அவர் காட்டிய பழைய நிழற்படங்களில் இருந்ததற்கும் தற்போதைய உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்.  ஐந்தாறு வருடங்களில் முடி மொத்தமாக நரைத்து கண்கள் குழிவிழுந்து, தோல் சுருங்கி தனது உருவத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லாமல் மாறிவிட்டார். ஒவ்வொரு மாதமும் டிபன் பாக்ஸில் தக்காளிச்சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் வந்துவிடுகிறார். தனது மகன் வாழ்ந்த வீட்டில், தனது மகனின் மூச்சுக் காற்று நிறைந்த இந்த இடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு திரும்பச் செல்கிறார். யாருமே இல்லாத வீட்டில் அவரும் கார்த்திக்கும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனது தலையை தனது மடி மீது வைத்து வருடுகிறார். அவனுக்கு ஊட்டி விடுகிறார். அவன் உற்சாகமாக வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கிறான். நான்கைந்து நாட்களில் அவர் திரும்பச் சென்றவுடன் அந்த வீட்டின் மீது பெரும் அமைதி கவிகிறது. அங்கு கார்த்திக் தனிமையில் தனது அம்மாவுக்காக காத்திருக்கக் கூடும். இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாத தனிமை அது.//
*************   **************
 இந்த  பதிவில் சில திருத்தங்கள்.
1.கார்த்தி இவரை விட வயதில் இளையவன் .
2. photos (நிழற்படங்கள் -கார்த்தியுடையது ) நான் ஒட்டியது. அறை  முழுவதும் கார்த்தியின் படங்களே.
3* .கார்த்தி அங்கு தனிமையில் இல்லை. நான் வரும் போது என்னுடனே அவனும் வருகிறான். பேருந்தில் என் மடியில் அமர்ந்து வருகிறான்.
4.கார்த்திக் உலகை விட்டு நீங்கி 8 வருடங்கள் ஆகின்றன.
5. கார்த்தியும் நானும்  சேர்ந்துதான் வீடு வாங்கினோம்.(பணத்தை பற்றி சொல்லவில்லை.அதை நான் என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நானும் கார்த்தியும் அந்த அலுவலகம் சென்ற போது அங்கு இருந்தவர்கள் கார்த்தியிடம் என்ன காட்டி '' உன் அக்காவா ?''என்று கேட்டார்கள் )
6. கார்த்தி தன்னை விட வயதில்  பெரியவன் என்று சொல்லும் இவர் கார்த்தியை அவன் இவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லியிருக்கலாம்.
       ஆனாலும் என்னைப் பற்றியும் கார்த்தியை பற்றியும் பதிவிட்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .நன்றி.

2013/12/10

Office Serial :
தற்செயலாக இந்த சீரியலை கடக்க நேர்ந்தது.அப்போது இந்த காட்சி வந்தது.நிறுத்தி பார்த்த போது இந்த வசனம் வந்தது:
'' '' ''என் பிறந்த நாள் office ல் ஒன்று .
உண்மையான பிறந்த நாள் ஒன்று.'' '' ''
6 மாதம் அதிகமாக கொடுத்து விட்டார்கள்.
.........   ............
இதே  இதேதான்  கார்த்திக் விஷயத்திலும் நடந்தது.
கார்த்திக்கின் உண்மையான பிறந்த நாள் 14.11.1981
சான்றிதழிலோ  16.06.என்று கொடுத்திருந்தோம்.அவன் வேலை செய்த DELL  ஆபீஸ் ல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வழக்கம் உண்டு.(இப்போது எப்படியோ தெரியாது.)
அந்த வழக்கப் படி 16.06 அன்று கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து என்று மைக்கில் சொல்லியிருக்கிறார்கள்..கார்த்திக் அதை புரிந்து கொள்ளவே இல்லை.அவன் மனதில்  14.11 மட்டுமே பதிந்திருந்ததால் அவன் சலனமே இல்லாமல் இருந்திருக்கிறான். அவன் நண்பன் '
' '''கார்த்தி உன்னைத்தான் சொல்கிறார்கள் ''
என்றதும்தான் சுதாரித்துக் கொண்டு மேடை ஏறியுள்ளான்.
...... .................
எப்படியாவது ஒரு 5 நிமிடம் கார்த்திக்கின்    நினைவுகளில் இருந்து வேறு  சிந்தனையில் இருந்தாலும் ,இப்படி ஏதோ ஒன்று அவனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
கார்த்தியின் நினைவையே  oxygen ஆக சுவாசிக்கும்,
கார்த்திக் அம்மா      

2013/12/07

:அழுகை

Miracle:
I think this piece had been written in 2006. Accidentally I came to see it when I was Searching for some other paper.
It goes like this.
......   .............   
One of Karthik's friends while trying to comfort me said :
''I read in a book that  '' you should not encourage any person to cry. It's very bad.Somehow see to it that they stop shedding tears''
After he left I might have written this.
*********
May be if its a drama ,an acting ,an attempt to make belief  ,if I cry to create a scene , to get sympathy ,the tears will stop.
If you don't cry with me
I will cry alone
Will my tears stop
If you don't cry with me?
Will my tears stop?
Will it?
Its spontaneous and who can arrest the bubbling stream of Coorg, the Thalai Kaveri?
Do I expect you to cry with me?
If you cry thats up to you.
If you don't cry that's also up to you.
That 's not going to make any difference in my grief.
If at all I recover that will be a miracle.
அந்த நண்பன் சொன்னான் .அவன் என்னுடன் சேர்ந்து அழ மாட்டானாம்.அது தவறு என்று படித்தானாம்.
என்னை வந்து பார்ப்பதையும் ,என் சோகத்தை பகிர்ந்து கொள்வதிலும் இருந்து விலக அவனுக்கு ஒரு காரணம் தேவைப் பட்டது.
விலகிக் கொள் .
அதற்கு எதற்கு ஒரு மொக்கை தத்துவம்?
என் துக்கம் எனக்கு.அது நீங்கினால் அதிசயம்.
எதுவும் நடக்கலாம்.
நாம் யார் எதையும் தீர்மானிப்பதற்கு?
என் அழுகை நாடகமா ?
போதும் என்றவுடன் நிற்பதற்கு? அடி வயிற்றிலிருந்து வெடித்து கிளம்புகிறது.
பார்ப்போம்.

2013/11/29

I STOP WHEN I STOP

 Karthik 's  scribblings :
கார்த்தியின் பழைய நோட்டுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.தன்னுடைய வாழ் நாள் குறைவு என்று தெரிந்ததாலோ என்னவோ ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் எந்த துறையையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்துள்ளான்.
அப்படி கண்ணில் பட்ட வரிகள்.:
NEON  BULB UNPLUGGED :

Remade  shall be the blade
that was  broken
And the crownless
Shall be the king
இவை சினிமா வசனங்கள் என எண்ணுகிறேன்.தெரியவில்லை .
ஆனால் அடுத்து வரும் வரிகள் அவனுடைய முயற்சி என்பது உறுதி.
...........   ................
2 busy 2 B SAD
2 + ve  2 B  doubted
2 optimistic  2 B fearful
2 determined 2 B defeated
...........  ...............
i don't want leisurely deadlines.
Work expands to fill available time.
I don't want impossible deadlines.
How can there be a limit to me.
Impossibility is a human concept.
I STOP WHEN I STOP 
இது கார்த்தி தன் மேனஜர் (அ )டீ.எல்  நச்சரிப்பு தாங்காமல் எழுதியது என நினைக்கிறேன்.
அவன் திடீர் விபத்தும் அவன் பிரிவும் என்னை செயல் இழக்க செய்திருந்த வேளையில் எவ்வளவு சென்சார் செய்ய வேண்டுமோ அவ்வளவு சென்சார் செய்த பிறகு எனக்கு கிடைத்த மிச்சம் .எத்தனையோ கேள்விகள் மனதிற்குள்.யாரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்று தெரியும்.மனம் ஊமையாக அழுகிறது.
கார்த்திக் அம்மா

2013/11/21

A T M
நானாக இருந்திருந்தால் '' ''அப்பா சாமி, இந்தா பணம். நகை ''என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.பெங்களூர் பெண் இப்படியா செய்வார்? அவன் கத்தியை எடுத்த பின்னும் போராடுகிறார்.
மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்  என்பதை உணராதவரோ?
G A S :
சேலம் மாவட்டத்தில் எரிவாயு வெடித்து வீடே இடிந்து 6 பேர் பலி.
இதில் கொடுமை என்னவென்றால்  பக்கத்து வீட்டோரும் பலியானதுதான்.ஹெல்மெட் போட்டு போங்கள் என்ற அறிவுரை சரிதான்.பக்கத்து வீட்டு எரிவாயு உருளைக்கு எந்த ஹெல்மெட்?
ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும் . விதி வலியது. எந்த இடத்தில் எந்த ரூபத்தில் வந்து தாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
ப.சிதம்பரம்:
இவர் ஏன் இப்படி பேசுகிறார்?சில நாட்களுக்கு முன்புதான் உயிரோடிருக்கும் முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களை ''இறந்து விட்டார். அமரர் '' என்றார்.
இப்போது நாட்டு பணம் அனைத்தையும்  I S R O வுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.
பாவம் அந்த விஞ்ஞானி . இன்னும் கொஞ்சம் அதிக நிதி தாருங்கள் என்றார்.இந்தியாவின் மொத்த பணத்தையும் கேட்கவில்லை.ஒரு லட்சம் கோடி வாராக் கடன் என்று பெரிய பண முதலைகளுக்கு தாரை வார்த்தது பற்றி வாய் திறக்கவில்லை.
அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.
.....    .....
இவருக்கு அண்ணன் நம் வருங்கால பிரதமர் கனவில் இருப்பவர்.காந்தியை ''மோகன்லால் '' ஆக்கி விட்டார்.
என்னவோ , நம் கதி அதோ கதிதான்.
கலாகார்த்திக்

2013/11/14

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா

2013/11/05

திக் திக் 44 நிமிடங்கள்...+ராதாகிருஷ்ணன்  FAN ஆனேன்
HAPPY HAPPY ..மங்கள்யான் வெற்றி
அப்பப்பா  44 நிமிடங்கள் வயிற்றுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறந்தன. Live ஆக பார்க்க ஆசை ஆசையாக  இருந்தது. ஆனால் என்னைப் போல் வாழ்விழந்த  ஒரு வீணாப் போனவள்  பார்த்தால் எங்கே  mission  தோல்வியாகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஆர்வத்தை கட்டு படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருநதேன்.
என் பிரார்த்தனை வீணாகவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்  நன்றிகளும்.
அடுத்ததாக  நிச்சயமாக  நம் ராதாகிருஷ்ணனை  பற்றி  .நிறையவே சொல்ல வேண்டும். Dedication என்று இவரை உருவகப்படுத்தலாம்.
இதற்கு முன் ஒரு செயற்கைக்கோள்  தோல்வியாகி கீழே விழுந்த போது தன்னுடன் இருந்த அனைத்து ஆராய்ச்சியாளர்களையும்  அனுப்பி விட்டு அந்த தோல்வியை தன்னுடையதாக மட்டுமே ஏற்றுக்கொண்டு பேசி விட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
இன்று பாருங்கள் :
 எல்லோரையும் அழைத்து பேச வைக்கிறார்.நிச்சயமான பெருந்தன்மை.
யக்ச்பால் என்றொரு வயதான  அறிவியலாளர் .1990 களில் இவர் தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு  பதில் தருவார்.பைத்தியமாக அலைவோம்.அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு.
அந்த மனிதரை இன்று பார்க்கிறேன். எதோ நெருங்கிய உறவினர் ஒருவரை பார்ப்பது போல் சந்தோஷமாக இருந்தது.
அமைச்சர்  நாராயணசாமி
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்தால்  Dr ராதாகிருஷ்ணன்  '' .இவர் 2010 லிருந்து  மிக நெருக்கமாக உதவியாக இருந்தார்'' என்கிறார்.இந்த மனிதர் ஒரு வித்தியாசமானவர்தான்.இவரது மனைவி 2 சக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்  என்று செய்தி படித்த போது இவ்வளவு எளிமையான  ஒரு அமைச்சரான மனிதரா  என்று வியந்தேன்.இப்போது அந்த  .மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
.....     .......
மரண மொக்கை படங்களை  எடுத்து விட்டு இமாலய  சாதனை செய்தது போல் பேசும் நம் சினிமா பிரபலங்களை யும் இந்த விஞ்ஞானிகளையும் (scientists ) ஒப்பிட்டு வேதனைதான் அடைய வேண்டியுள்ளது.
சினிமா நடிகர்கள் 20 கோடி 30 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
ஆனால் இவர்களுக்கோ  1 அ 2 லட்சம் சம்பளம் இருக்கலாம்.இவர்களுக்கு கட் அவுட் கிடையாது.பாலாபிஷேகம்  கிடையாது..ஆனால் இவர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களால்தான் நம் இந்தியா  வெற்றி நடை போடுகிறது.
பி.கு.
எனக்கும் படிக்கும் காலத்தில் இப்படி சாதனை செய்ய வேண்டுமென்று வெறி இருந்தது.
விதி வேறு விதமாக சிரித்தது.
ISRO  தலைவர் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார் .Religion starts when science fails
கார்த்திக் அம்மா

2013/11/02

மியாவ் என்றது    புலி    புர்ர் என்றது  பூனை ::

ஷாருக் கான் சொத்து 2500 கோடியாம் .
ஒரு  நிகழ்ச்சியில்  வந்து எனக்கு டான்ஸ்  தெரியாது. நீங்கள் ஆடினால் அதைப் பார்த்து நான் ஆடுவேன்  என்று என்ன நடிப்பு நடித்தார். இதை அகங்காரத்துடன்  அங்கீகரித்த   பூனை  என்னவோ தனக்கு மட்டுமே  டான்ஸ்  தெரியும் என்ற மிதப்பில் ஆடியது. 
அட
 தன்னை விட எல்லா விதத்திலும் சீனியர்  என்ற ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?
அந்த டான்ஸ் மேதையின் முகத்தில்  அப்படி ஒரு கர்வம் தெரிந்தது.
உங்களை விடவா நான் ? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
2500 கோடியில்  பாதி கூட இருக்காது இவருடைய சொத்து.அவரின் பிரபலத்தில்  பாதி கூட இருக்காது இந்த 'ப்ரோ ' வுக்கு.
பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்கள் தங்களை தெய்வப் பிறவிகளாக  .நினைத்து கொள்கிறார்கள்.
S R K  வந்தார். பேசினார். சென்றார். படம் வெளியிட்டு கோடிகளை அள்ளினார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று உணராமல் முட்டாள் பட்டம் கட்டிக்  கொண்டது பூனை.
......       .......    .......
டெல்லி முதல்வரும்  வெங்காயமும்::
டெல்லி முதல்வர் ஒரு வாராமாக  சமையலில் வெங்காயம் சேர்த்து கொள்ளவில்லையாம்.
என்ன ஒரு நிர்வாகத் திறமை.
வெங்காய விலையை குறைக்க என்ன முயற்ச்சிகள் எடுக்கலாம் என்று முனையாமல் .....காமெடி .....