About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/06/11

என் கணவர்  மேட்டூர் அணையில் A E E யாக பணியாற்றிக் கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி :
அவர் சிவில் துறை என்பதால் அணையின் பராமரிப்பு பொறுப்பு அவருக்கு..
    அணையில் நீர் குறைவாக இருக்கும் போது சுரங்கமின் நிலையம் செயல்படாது.அந்த நாட்களில்தான் அணையின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
அப்படி ஒரு நாள் என் கணவர் சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
திடீரென  ஏதோ ஒரு சத்தமும் அதிர்வும் கேட்டிருக்கிறது.
என் கணவரும் அவருடன் சென்ற இன்னும் இருவரும் வரும் அபாயத்தை உணர்ந்து அதிர்ந்துள்ளனர்.
அது என்னவென்றால், சுரங்கத்திற்குள் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தண்ணீர் வரும் வேகம் அது பற்றி தெரிந்தவருக்குதான் புரியும்.
விபரீதத்தை உணர்ந்தவர்கள் மின்னல் வேகத்தில் ஓட ,தண்ணீர் துரத்த ...,நூலிலையில் தப்பித்தனர்.தவறு யார் மீது ? ஆய்விற்கு செல்கிறேன் என்று இவர் சொல்லவில்லை.ஏன்  என்றால் அணையின் நீர் மட்டம் அவ்வளவு குறைவாக இருக்கும் போது தண்ணீர் திறக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இவர் தைரியமாக சென்று விட்டார்.
சிவில் A E E  உள்ளே சென்றிருப்பார் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
......  ....
இந்த பழைய கதை இப்போது எதற்கு என்கிறீர்களா?
24 பிஞ்சு முகங்கள் அணை நீரில் அடித்து செல்லப் பட்ட செய்திதான்.
நெஞ்சு பதறுகிறது.எல்லோர் முகமும்  கார்த்தி முகமாக தெரிகின்றன.அந்த பெற்றோர்கள் இடத்தில் என்னை நிறுத்துகிறேன்.அந்த வேதனை என்ன என்று எனக்கு தெரியும்.
ஆனால் இதில் யாரை தவறு சொல்வது?
இத்தனை மாணவர்கள் அந்த நேரத்தில் அங்கு இருப்பார்கள் என்று அணை அதிகாரிகள் எதிர்பாராதது.
விதி.As always i say its ''HAPPENISM '' நிகல்விசம் .இன்று இது இப்படி நடக்கிறது.இதற்கு முன் வினையோ ,கர்மாவோ ,பாவமோ புண்ணியமோ காரணம் இல்லை.
இந்த நிமிடம் இது இப்படி நடக்கிறது. அவ்வளவுதான்.
ஏற்றுக் கொள்ள முடியாத, தீராத சோகம்தான்.நான் அனுபவிக்கிறேனே.கண்ணீருடன் வாழ்க்கைதான்.அந்த பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்?விதியே உன் விளையாட்டு எல்லை மீறுகிறது.
வேதனையை பகிர்ந்து கொள்ளும்
கார்த்திக் அம்மா

2014/06/03

கோபிநாத் மண்டே = கார்த்தி
எதற்கெடுத்தாலும் , எந்த நிகழ்வோ, செய்தியோ
மனம் என்னை அறியாமல் கார்த்தியுடன் சம்பத்தப் படுத்தி விடுகிறது.
இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்தார்   மத்திய அமைச்சர் கோபிநாத் மண்டே என்ற செய்தி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது .முதலில் இதை நம்பக் கூட முடியவில்லை.
அதே போல்தான் கார்த்தியும். வீட்டிலிருந்து 8.50 a .m க்கு அலுவலகத்திற்கு புறப்பட்டான். கூப்பிடு தூரம் என்பார்களே. 10 நிமிட தூரம்தான். வீட்டிலிருந்து புறப்பட்ட 10 நிமிடங்கள் கூட இல்லை.அலைபேசி அழைப்பு வந்தது.
விதி. விதி. விதி
வேறொன்றும் சொல்ல முடியாது.
கோபிநாத் மண்டேவின் கல்லீரல் சிதைந்தது என்று சொல்வதையே கார்த்திக்கிற்கும் சொன்னார்கள்.
இதயத் துடிப்பு நின்று விட்டது.அவரை பார்க்கும் போது எந்த காயமும் இல்லாமல் உறங்குவது போன்றுதான் இருக்கிறார்.கார்த்தியும் அப்படித்தான் இருந்தான்.
( ( (மோத்தி பாக் சாலையில் உள்ள சிக்னலில் சிகப்பு விளக்கு எரிந்ததையும் மீறி தனது காரை இயக்கிய அவர் முண்டேவின் கார் மீது மோதினாரா என விசாரணை செய்து வருவதாக டெல்லி காவல்துறை இணை ஆணையரான எம்.கே.மீனா கூறியுள்ளார்.
முண்டேவின் கார் டிரைவரும் குர்வீந்தர் சிக்னலை மீறி தங்கள் கார் மீது மோதியதாக புகார் தெரிவித்துள்ளார். எனவே குர்வீந்தர் மீது அதிவேகமாகவும், அலட்சியமாகவும் கார் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் முண்டேவின் கையில்  மட்டும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பு அவர் சுயநினைவை இழந்துவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முண்டே மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
விபத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் முண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அவரது கல்லீரல் சேதமடைந்து 2 லிட்டர் அளவுக்கு ரத்தம் போயுள்ளதும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
கார்கள் மோதியபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த முண்டே இருக்கையின் மறுபுறம் வந்து விழுந்துள்ளார்இது எல்லாமே கார்த்தியின் விபத்தில் அச்சு அசலாக நடந்தது.) ) )
 
இதற்கப்புறம்தான் எல்லாமே.
அவர் என்பது '' அது '' என்றாகிவிடும்.
''பாடி'' வந்து விட்டதா? என்பார்கள்.
சுரீர் என்று உடல் முழுவதும் மின்சாரம் பாயும்.
வாய்விட்டு கூட கத்த முடியாது.
அப்புறமென்ன?
ஒரு நாள், 10 நாள்
உடன் இருப்பவர்கள் அவர் அவர் வேலையை பார்க்க சென்று விடுவர். யாரையும் குறை சொல்லவில்லை.
இது உலக நியதி.
அவர்கள் எல்லோரும் சென்ற பின்புதான் இழப்பின் தாக்கம் முழுமையாக தெரியும்.
அப்புறமென்ன?
வாழ்நாள் முழுவதும் ஊமை அழுகைதான்.
......     ........
என்ன வாழ்க்கை?
நிலையாமை.
ஒரு நிமிடம்.
ஒரே ஒரு நிமிடம்தான்.
வாழ்க்கை தலைகீழ்.
இந்த ஜூன்  3ம் தேதி 2005 ல் தான் சென்னையிலிருந்து  பெங்களூருக்கு புது வாழ்வு தொடங்க புறப்பட்டோம்  நானும் செந்திலும்.
கார்த்தியுடன் சேர்ந்து வாழப் போகிறோம் என்ற சந்தோஷத்தில்.
''பல்லாக்கு வாங்க போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக''
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
விதியே,விளையாட்டில் எப்போதும் வெற்றி உனக்குத்தான்.
சோகத்துடன்,
கார்த்திக் அம்மா

2014/05/27

குமுறல்கள்:
my first disclaimer : i am not jealous with anybody ,nor  am  i  a  cynic .
யார் மீதும் பொறாமையோ , மற்ற ego எதுவுமோ இல்லை.
சௌந்தர்யாவை  மனமார பாராட்டுகிறேன்.
ஆனால் சௌந்தர்யாவை ஓ ஓ ஓவராக பாராட்டும் பலரை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
ஒருவர் சொல்கிறார்.''இந்த பெண்ணுக்கு இந்த ஐடியா எப்படி வந்தது என்றே தெரியவில்லை''
எத்தனை இளைஞர்களுக்கு இந்த மாதிரி கனவு இருக்கிறது தெரியுமா? அவர்களிடம் இந்த 'ரஜினி' என்ற மந்திர சொல்லையும், 150 கோடியும் கொடுத்திருந்தால் அவர்களும் சாதித்திருப்பார்கள்.இந்த படத்தை பார்க்கும் எத்தனை பேர் ஏக்க பெருமூச்சு விடுகிறார்கள் தெரியுமா?
*******
Green ink :
என் வீட்டிற்கு ஒருவர் வந்திருந்தார். எழுத பேனா கேட்டேன் .''இது பச்சை மை'' என்றார். அதிர்ந்து ''அதிர்ந்து'' விட்டேன்.
ஏன் தெரியுமா?
அவர் 8ம் வகுப்பு கூட தேறாதவர்.
உள்ளாட்சி ,ஒரு கிராம பஞ்சாயத்தில் ஏதோ ஒரு பதவியாம்.
''G '' போட்ட வண்டியில் வந்தார்.
கொடுமையே !!!!!
எத்தனை மென்பொருளை வடிவமைத்து நாட்டின் பொருளாதாரத்தையே  உயர்த்தும் பொறியாளர்கள் எல்லாம் கனவு கூட காண முடியாது இப்படி ஒரு பச்சை மை, G வண்டி.
நான் பணியில் சேர்ந்த போது பச்சை மையில் கையெழுத்திடும்  உரிமை இருந்தது. சில வருடங்களுக்கு பிறகு AEE  போன்ற பலருக்கும் அந்த உரிமை மறுக்கப் பட்டது.அனல்மின் நிலைய கட்டுமானத்தில் பணியின்போது  எத்தனை சிரமங்களை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் .tunnel ,chimney போன்ற கட்டுமானங்கள் எவ்வளவு அறிவும் ,அர்பணிப்பும் தேவைப்படும் விஷயம் தெரியுமா?.அவர்களுக்கெல்லாம் பச்சை மை கிடையாது.
யாரை குறை சொல்வது?
*****
+1 பாடங்கள்;
மாநகராட்சி செய்த முடிவு:
மாணவர்களின்  தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இனி +1 பாடங்களை நடத்தாமல் +1 லும் +2 பாடங்களையே நடத்த வேண்டும் என்பதுதான் அந்த முடிவு.
எல்லா தனியார் பள்ளிகளிலும்  இதைத்தான் செய்கிறார்கள்.
ஆனால் இதன் விளைவு என்ன தெரியுமா?
+1 கணிதம்தான் மிக முக்கியமானது. B .E சேர்ந்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் மாணவர்கள் இருப்பார்கள். இந்த M 3 என்ற ஒன்று இருக்கிறது பாருங்கள். அது அவர்கள் சேரும் எந்த வேலைக்கும் பயன்படுவதில்லை.ஆனால் அந்த M 3 யில் தேறி விட்டால் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள்.பட்டம் பெற்றுவிடுவார்கள்.ஆனால் ஒரு 30% பேர்தான் தேறுவார்கள். இந்த அடியில் துவண்டு விடும் மாணவர்கள் அதிர்ச்சியில் அடுத்து அடுத்து arrears என்று ,வாழ்க்கையையே தொலைத்து விடுவார்கள்.
என் மாணவர்கள் பலர் இப்படி ஆகியுள்ளனர்.ஒரு 10 கணக்குகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வைத்து (அதுவும் ஒரு vocational பிரிவு )மாணவன் 200க்கு 200 பெற வைத்து கிண்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தோம்.ஆனால்....அதனால் +1 கணிதம் மிக மிக முக்கியம்.
கார்த்திக் அம்மா

2014/05/24

கார்த்தியும் கோச்சடையானும் :
 கார்த்திக்கிற்கு  பிடித்த நடிகர்  ரஜினி..அவருடைய படம் என்றால் முதல் நாளன்றே பார்க்கும் பழக்கம் உள்ளவன்..
இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும்  என்று கார்த்திக்கிற்கும் ஆசை இருந்தது..குடும்ப பாரம் காரணமாக  அந்த ஆசையை தள்ளிப் .போட்டிருந்தது என் செல்லம்.
 படம் தொடங்கும்  போது கார்த்தி இருந்திரிருந்தால் கண்டிப்பாக இந்த டீமில்  அவன் பங்கு நிச்சயம் இருந்திருக்கும்.
 வேதனையில் மனம் தள்ளாடுகிறது .
கார்த்திக் அம்மா

2014/05/12

அன்னையர் தினம் :
என் அன்னை:
என் தாய்
என் அம்மா
அவன் எனக்கா  மகனானான் ?
நான் அவனுக்கு  மகள் ஆனேன்.
என் தாயே,
என் தெய்வமே அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் நாம் மீண்டும் தாய் மகனாகப் பிறந்து சேர்ந்து இருக்க வேண்டும்.
இல்லையேல் சொர்க்கத்தில்   (அப்படி ஒன்று இருந்தால் )  உன்னுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.
கார்த்திக் அம்மா

2014/05/10

என் blog ஐ யார் படிக்கிறார்களோ இல்லையோ வருணபகவான் நிச்சயம் படிக்கிறார். பின் என்ன? வருண பகவான் கருணை செய்ய வேண்டும் என்று எழுதினேன். கொட்டி தீர்த்து குளிர்ச்சியாக்கிவிட்டார்  சென்னையை.
நன்றி வருண பகவானே.


முதல் மதிப்பெண் :ஊசிப் போன வசனம்:
முதல் மதிப்பெண் பெறும் அனைவரும் சொல்லும் வசனம்:
டாக்டராகி  ஏழை மக்களுக்கு சேவை செய்வேன் .
கலெக்டராகி ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்.
இது வரை எத்தனை பேர் அப்படி சேவை செய்திருக்கிறார்கள்  என்ற லிஸ்ட்டை  யாராவது தந்தால்  நன்றாக இருக்கும்.
நான் முதல் மார்க் வாங்கினேன். மகிழ்ச்சி.என்பதோடு நிறுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்.

2014/05/08

தேர்தல் விழா முடிந்து விட்டது.இனி அடுத்த நாடகங்கள் ஆரம்பிக்கும்.எல்லா M .P க்களும் மந்திரியாக முயற்சிப்பார்.
கொடுத்த வாக்குறுதிகள் செவ்வாய்,சனி கிரகத்திற்கு பறந்து விடும்.
இதற்கு என்ன தீர்வு?
ஏழையின் சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.
இருந்தாலும் சொல்வதை சொல்லி வைக்கிறேனே..
மிக அதிக வாக்கு பெற்றவர் M .Pயாக  6 மாதம் இருக்க வேண்டும். அதற்குள் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த 6 மாதத்திற்கு அவருக்கு அடுத்து அதிக வாக்கு பெற்ற அடுத்த வேட்பாளரை M .Pயாக்க வேண்டும். 
அவருக்கும் அதே 6 மாதம்.
அவரும் சரியாக  கடமை செய்யவில்லைஎன்றால் அடுத்தவர்.
இப்படி ஒரு system வந்தால் எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள்.
5 வருடம் நம்மை யாரும் அசைக்க முடியாது என்ற திமிரில்தான் 1000 +2000 கோடி சொத்து சேர்க்கும் வேலையில் இறங்குகின்றனர்.
My suggestion :
Who cares if i record my idea?
Anyhow, i will write my ideas here. The elections being over the next drama will start.All elected M.P s will try to become Ministers.( Not to serve the country)
but to fill up their coffers at least with 1000 or 2000 crores.
Those who voted will have to wait for another 5 years.
THE SOLUTION:
The candidate who secured the maximum votes should be M.P for the first six months.If by the given time if they don't fillup their promises they should quit. 
And the next candidate should become the M.P.
Like this without another election for another 5 years the cycle should continue.
This system will instill a fear in their mind and the M.Ps will try to work for the people.
 AM I  RIGHT ?


2014/04/30

வாக்குப் பதிவு நாளில் இருந்தே இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இரண்டு மனமாக இருந்தது.
இன்று எழுதுகிறேன்.
ஆந்திராவில் சிரஞ்சீவி ஓட்டு  போட  வந்தபோது வரிசையில் நிற்காமல் செல்ல முயன்றிருக்கிறார்.
கார்த்தி (இந்த பெயருக்கு ஒரு தனி இதுதான்) என்ற நபர் அவரை தடுத்து நீங்கள் மட்டும் எந்த வகையில் ஸ்பெஷல் ,வரிசையில் நின்று வாருங்கள் என்று தைரியமாக சொல்லி ,செய்தும் காட்டி விட்டார்.
ஆனால் நம் தமிழ் நாட்டில் ஒரு நடிகர் வாக்கு சாவடியில் தன தொண்டரடி பொ டியால்வார்களுடன் நின்று ஏதோ கருத்தரங்கிற்கு வந்தவர் கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தார்.
ஓட்டு பெட்டி ரெடியாகவில்லை என்றால் அந்த presiding  officer  யாரையும் உள்ளே அனுமதிக்கவே கூடாது.யாராயிருந்தாலும் வெளியில் தான் நிற்க வேண்டும்.
எல்லோரும் அந்த நடிகரை பார்த்து அப்படியே மயங்கி நின்றனர்.
அவர்களை கண்டிப்பாக சஸ்பெண் ட் செய்திருக்க வேண்டும்.
சரி, அவர்கள்தான் தவறு என்றால், இந்த தெய்வப் பிறவி சரியாக நடந்திருக்க வேண்டுமல்லவா?
வை.கோ. வந்தார். வாக்கு சாவடியில் பணியில் இருந்தவர்கள் எழ முற்பட்டனர்.அவர்களை உட்காரும்படி கைகாட்டி விட்டு ஓட்டு பதிவு செய்தார்.இது பாராட்டுக்குரியது.
மற்றவர்கள் எல்லோரும் வரிசையில் நின்றே வாக்களித்தனர்.
நான் ஒரு சுயநலமி, பச்சோந்தி, கருமி என்று அந்த நடிகரே கதறினாலும் மக்கள் மாற மாட்டார்கள்.
************      ******
முதல்வர் கொட  நாடு சென்றார் என்று ஆர்பாட்டம் செய்யும் தொலைகாட்சிகள் ஹாங்காங் பயணம் பற்றி ஏன்  அடக்கி வாசிக்கின்றன?
  எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ?
கார்த்திக் +அம்மா

முகுந்த் :அஞ்சலி :நன்றி .தந்தி  .t .v
நாட்டுக்காக உயிர் நீத்த வீர மகனே உனக்கு என் வீர வணக்கங்கள்.
தந்தி தொலைக் காட்சியில் நேரலையாக அவரது இறுதி காட்சிகளை ஒளிபரப்பினார்கள்.
2 மணி நேரம் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.கண்கள் கலங்கியபடியே இருந்தது.
எத்தனையோ கேவலமான நிகழ்ச்சிகளை மணிக்கணக்காக பார்க்கிறோம்.
நம் முகுந்தின் தியாகத்திற்கு நாம் செய்யும் கைம்மாறு இதுதான் என மனம் அமைதி கொண்டது
கார்த்திக்+அம்மா

2014/04/26

EVM : வாக்கு பதிவு இயந்திரம் :பழுது:
தொலைக் காட்சிகளில்   ''  வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ,  பழுது ஏற்பட்ட காரணத்தால் வாக்கு பதிவு தடைபட்டது ''  என்று செய்தி சொல்கிறார்கள்.
நானும் தேர்தல் பணி செய்துள்ள அனுபவத்தில் சொல்கிறேன்.
EVM பழுதாவதில்லை.அதை சரிவர SET செய்ய வேண்டும். ஒரு சிறு தவறும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
அதை உபயோகப் படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்தாலும் பலர் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.அதனால் அதிகாரிகள் செய்யும் தவறே .மற்றபடி இயந்திரம் சரியாகத்தான் இருக்கும்.
பல விஷயங்கள் இப்படித்தான் அரைகுறையாக புரிந்து கொள்ளப் பட்டு உண்மைகள் உறங்கி விடுகிறது.
கார்த்திக் அம்மா

2014/04/24

karthik  and  phone :
அடிக்கடி ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் .நினைவலைகள் முன்னோக்கி ,பின்னோக்கி என்று ஓடும் .
அப்படித்தான் இன்றும்.
2004 தேர்தலும் , அப்போது கார்த்தி என்னுடன் இருந்த நினைவுகளுமாக இருந்த நான்   ''அடடா  இந்த விஷயத்தை கார்த்தியிடம் சொல்ல வேண்டுமே ''  என்று என்னையும் அறியாமல் என் கை செல் போனை எடுத்து விட்டது.
ஒரு நிமிடம் .
       ''கார்த்தி என்னுடன் இல்லை. அவன் இந்த உலகை விட்டு போய் 8 ஆண்டுகள் ஆகி விட்டது. அவனுக்கு நான் செல்போனில்  பேச முடியாது '' என்ற உண்மை உறைத்த போது
அப்பப்பா 1000 வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல் அப்படி ஒரு வேதனை.
துடித்துப் போனேன்.
எனக்கு ஏன் இப்படி நடந்தது?
நான் ஏன்  என் மகனை இழந்தேன்?
ஏன் இந்த தீராத வேதனை?
கார்த்திக் அம்மா
கார்த்திக் அம்மா

2014/04/22

VOICE   or   NOISE
அப்பாடா ,
ஒரு வழியாக இன்றுடன் பிரசாரம் முடிகிறது.   டி .வி  க்களும் இந்த NOISE ,இந்த காட்டு கத்தலை நிறுத்திவிடும்.
எதற்கு இப்படி கத்தி காட்டு கூச்சல் போடுவார்களோ? அதிலும் பெண்கள் மூச்சு விடாமல் கத்துகிறார்கள்.
எல்லோரும் ஒரு 5 நிமிடம் பேசலாம்.ஆனால் எல்லோரும் ஒரே நேரத்தில் கத்துகிறார்கள்.
ஒன்றுமே புரிவதில்லை.
தொகுப்பாளர்களும் அதற்கு துணை போகிறார்கள். அவர்கள் நினைத்தால் மைக் off செய்து கத்துபவர்களை  கட்டுபடுத்தலாம். ஆனால் நிகழ்ச்சி மிக சுவராஸ்யமாக இருப்பதாக ,செய்வதாக நினைத்துக் கொண்டு ,...எரிச்சல்தான் மிஞ்சும்.
வாக்களிப்பு முடிந்ததும் மறுபடி ஆரம்பிப்பார்கள்.
நன்றாக பேசுங்கள்.ஜனநாயகத்தை வாழ விடுங்கள்.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2014/04/21

மாநகராட்சி GEYSER  வெந்நீர் :
thanks to corporation .சென்னை மாநகராட்சிக்கு நன்றி.
இலவச வேட்டி ,சேலை போல் இலவச வெந்நீர்.
tap திறந்தால்  சுடுநீர்தான் வருகிறது.
SUN ( அந்த சூர்யன்) இல்லைங்கோ .இவர் நம் சூர்ய  பகவான்.
இன்னும் 4 மாதங்களுக்கு அவர் ஆட்சிதான்.
கொடுங்கோலாட்சிதான்.
வருண பகவான் டெபாசிட் இழந்து விடுவார்.
சீ சீ ..இந்த election fever .தேர்தல் தாக்கம் பாருங்கள்.
சூர்ய பகவான் சற்றே கருணை கொள்ளும்
கலா கார்த்திக் ( கார்த்திக் அம்மா )
( கார்த்திக் அம்மா )

2014/04/13

Election 2004 and I (karthik  amma )
 நான் (கார்த்திக் அம்மா ) வேலையில் சேர்ந்த போது  26 வயது.  (அதற்கு முன்பே 22 வயதில் கல்லூரியில் Asst Prof ஆக வேலை செய்து , கார்த்திக்கிற்காக அந்த வேலையை விட்டது ஒரு சிறுகதை )   அப்போது அந்த வயதில் அரசு வேலை அந்த வயதில் கிடைப்பது பெரிய விஷயம். M .G .R  புண்ணியம்.T .N .P .S .C  தேர்வு வைத்தார்.அதனால் நல்ல rank பெற்று லஞ்சமில்லாமல் வேலை கிடைத்தது.
அப்போது செய்முறை தேர்விற்கு என்னை ஒரு பள்ளிக்கு பணித்தனர்.அதே போல் +2 பொது தேர்விற்கும் என்னை மேட்டூரில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்கு நியமித்தனர்.எந்த வேலையையும் திறம்பட செய்வதுதான் என் ரத்தத்தில் ஊறிய விஷயமாயிற்றே.அந்த பள்ளிக்கு நான் என்பது போல் ஆகிவிட்டது.தேர்வு நடக்கும்போது  சுற்று வரும் அதிகாரிகள் என் தேர்வு மையத்திற்கு வருவதே இல்லை. எல்லாம் perfect ஆக இருக்கும் என்ற நம்பிக்கை.
இதில் என் சீனியர் களுக்கு காதில் புகை.
இந்த பள்ளி என்பதால் தான் நான் சிறப்பாக செய்வதாக அவர்கள் வாதம்.
சரி.சவால்.ஒரு மோசமான பள்ளி ,சேலம் மாவட்டத்தில் .அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பிளேடு ( அதாவது பிளேடால் கூடாத இடத்தில் வெட்டுவது ) போடுவதில்  வல்லவர்களாம்.
அந்த வருடம் எனக்கு அந்த பள்ளி. சவால்  சவால்தான்.
அந்த பள்ளிக்கு சென்றேன். என்னதான் வீரமாக சவாலை ஏற்றுக் கொண்டாலும் உள்ளுக்குள் சிறிது உதறல்தான்.என்னவோ தெரியவில்லை.மாணவர்கள் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் பழகினர்.ஒரு பிரச்சினையும் இல்லை.
சென்றேன். .வென்றேன் .வந்தேன்.
vini ,vidi  visi
went .worked .won .
அட ,இது சின்ன பெண்ணாக தெரிந்தாலும் பெரிய ரௌடி  போல் ...என்பதாக பேராகி விட்டது.அதிலிருந்து எங்கு பிரச்சினையோ அங்கே எனக்கு பணி .
Election 1999.
எனக்கு ஒரு ரௌடி ஊரில் பணி .presiding officer .6 p .m . ஒரு கும்பல் வாக்கு சாவடி அருகே வர ஆரம்பித்தது..'' யாராவது ஏதாவது பிரச்சினை செய்தால் வாக்கு சாவடியை இழுத்து மூடி விடுவேன். தேர்தலே நடக்காது '' என்று ஒரு சிம்ம கர்ஜனை. எல்லோரும் ஓடி விட்டனர்.
2004. சென்னை ..அதிலும் வட சென்னையில் தேர்தல் பணி .
வாக்கு  பதிவிற்கு முதல் நாள் .VOTING  MACHINE  பற்றி நான் எதுவுமே கண்டு கொள்ளவில்லை.கார்த்தி, செந்தில், என்னுடன் பணியாற்றிய ஒருவரின் மகன் என மூவரும் எல்லாம் செட் செய்தாயிற்று .என் அருமை கண்மணி கார்த்தி ஒரு வார்த்தை ''அம்மா இது என்னுடைய academic project  என்று சொல்ல வேண்டுமே. இந்த VOTING  MACHINE என்னுடைய academic project என்று சொல்ல வேண்டுமே   ..(ref .karthik 's resume ).
அடுத்த நாள் ஓட்டு  பதிவு. கள்ள ஒட்டு போட  துடித்தது ஒரு கும்பல்." ஒரே ஒரு கள்ள ஓட்டு கூட போட அனுமதிக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டேன். முதலில் நட்பாக கேட்டார்கள். சிறிய கெஞ்சல் . அப்புறம் மிரட்டல்தான். எதற்கும் பயப்படவில்லை.
" உயிருடன் வெளியே போக மாட்டாய்" என்றார்கள்.
பக்கத்து சாவடிகளுக்கு பிரியாணி .எங்களுக்கு தண்ணீர் கூட தரவில்லை. செந்தில் அனைவர்க்கும் சாப்பாடு வாங்கி வர ...என் செலவு.
D .S .P வந்தார். '' ''சார், வோட்டு பதிவு முடிந்து வெளியே செல்லும் பொது எனக்கு பாதுகாப்பு வேண்டும்". என்றேன் அவருக்கு ஆச்சரியம் இந்த சின்ன உருவம் .இவ்வளவு தைரியமா என்று. இந்த ஒரு வாக்கு சாவடியில்தான் ஒரு கள்ள வோட்டு கூட இல்லை என்று பாராட்டியவர் சொன்னது போலவே வந்தார். வாழ்க்கை வீரமாக ,சாதனைகளாகத்தான்  இருந்தது 2005 வரை . இப்போது புலி எலியாகி விட்டது. யானை பூனையாகி விட்டது.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா.

2014/04/06

என் அத்தை ஒருவர் நினைவு இப்போது வருகிறது.என் அப்பாவின் சகோதரி. ஒவ்வொரு முறை தோட்டத்தில் எந்த அறுவடையாயிருந்தாலும்  வந்து விடுவார்.
  என் அம்மாவிடம்'' மேலைக்கு இன்னாலைக்கு (ள  .உச்சரிப்பு எல்லாம் எதிர்பார்க்க முடியாது) இருக்கிறேனோ இல்லையோ .எனக்கு நெல் கொடு, எல் கொடு '' என்று கேட்பார்.
முதல் முதலாக இந்த வசனம் கேட்ட போது நான் சோகமாகி விட்டேன்.ஆனால் கிட்டத்தட்ட ஒரு 20 வருடம் கழித்துதான்  காலமானார்.
         இப்போது அத்தை கதை எதற்கு என்று கேட்கிறீர்களா?
ஒருவர் அடுத்த தேர்தலின் போது நான் இருப்பேனோ இல்லையோ ,இதுவே கடைசி தேர்தலாக  இருக்கலாம் என்று பல தேர்தல்களாக ஒட்டு கேட்கிறார் ???????
2. ஒருவருக்கு 10  பத்தே கோடிதான் சொத்தா ஆ ஆ ம்.
நம்பிட்டோமே,.. நம்பிட்டோமே.
3.மூன்றாண்டுகளுக்கு முன்பு பாலாறும் தேனாறும் பாய்ந்த தமிழ் நாட்டில் இப்போதுதான் பஞ்சம் பசி பட்டினி எல்லாம் தலை விரித்தாடுகிறதாம்
இன்னொரு அம்மணி சொல்கிறார்..
எல்லோருக்கும் மக்களின்  மேல் அப்படி பாசம் பொங்கி வழிகிறது. மக்களை வாழ வைக்க துடிக்கிறார்கள்.
4.கடவுள் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறார் கடவுள் இல்லவே இல்லை என்று சொன்ன பெரிய நாத்திகர். .
எனக்கே நிறைய வருடங்களாக ஒரு சந்தேகம். அறிஞர் என்று பட்டம் கொடுக்கும் அளவுக்கு அந்த தலைவர் என்ன அறிந்திருந்தார்?
I used to tell ''some questions are unanswerable.'' ..even if one knows the answer.
Some questions are asked not expecting any answers.

2014/04/04

அம்மாடியோ .மயக்கம் வருது :
   
மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ***** வீட்டில் பறிமுதல் செய்த 914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88 லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
2.புறம்போக்கு  நிலத்தை அடமானம் வைத்து 250 கோடி கடன் பெற்று மருத்துவ கல்லூரி கட்டியுள்ளார் ஒருவர்.புறம்போக்கு நிலத்தை .அடமானம் வைத்தவர் தவறு செய்தவர்தான்.  ஆனால் கடன் கொடுத்த வங்கி ,  அதன் மேலாளர்   இவர்களை என்ன சொல்வது?
3.இன்னொரு மருத்துவக் கல்லூரி   1200  கோடி வருமான  வரி (வருமானம் அல்ல ,  வரி மட்டுமே ) கட்ட வேண்டுமாம் .
எனக்கு வரும் கேவலமான பென்சன் தொகைக்கு வரி பிடித்தே ஆக வேண்டுமென்று எனது வங்கி இந்த மாத பென்சனே தரவில்லை.
இதெல்லாம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறதா?
  இவர்கள் என்னைப் போன்றவர்கள் கட்டும் வரிப் பணத்தில் தானே ஆனந்த தாண்டவம் ஆடுகிறார்கள்.எப்போது மாறும் இந்த கொடுமை?

2014/03/18

சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயமாக நம் சிறு ஆசைகள் அல்லது எண்ணங்கள் நிறைவேறும் அதிசயம் நடப்பதுண்டு.
அம்மா குடிநீர் பாட்டில்களில் ஜெ படம் இருந்தது மனதை அரித்துக் கொண்டே இருந்தது.தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை தூக்கி வீசுவதும் ,காலால் உதைப்பதும், குப்பை தொட்டியில் போடுவதும் மனதை சங்கடப் படுத்தியது.
இப்போது அந்த சங்கடம் நீங்கி விட்டது

2014/03/14

காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே  சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான்  சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
இது பற்றி பதிவு ஏற்கனவே  எழுதியுள்ளதால் மீண்டும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் எந்த channel  திருப்பினாலும் இதே கதை.
எரிச்சல் எரிச்சலாக வந்தது.
என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள்  கணவனை இழந்துள்ளனர்?
அவர்கள் கண்ணுக்கெல்லாம்  எமதர்மன் தெரியவில்லையா?
அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
கோவிலுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்கு  இப்படி கதை சொல்லிக் கொண்டே போக வேண்டாம்.

2014/03/09

HALDIGHAT
 Only after Karthik's exit I came to know about his blog----''vijayanagar blogspot''.His friend helped me with his password.
It was ''HALDIGHAT''
haldighat
I could not understand what it stood for.
No surprise it is something connected with history ,as everyone knows Karthik was mad after History and it was (how painful it is to use past tense with Karthik ) he who started
'' '' varalaru.com'' ''.
So the password ''haldighat'' ''

// //Battle of Haldighati

Mughal forces outnumbered Pratap's men.
.On June 21, 1576 (June 18 by other calculations), the two armies met at Haldighati, near the town of Gogunda in present-day Rajasthan. // //

இது ஏன் எனக்கு தோன்றவில்லை.
கார்த்தி என்னை விட்டு பிரிந்த பிறகுதான் எனக்கு மெய்ல் ,ப்ளாக்  பற்றியெல்லாம் தெரிய  வந்தது.
கார்த்தியின் நண்பன் பாஸ் வோர்ட்  தந்தான். அது haldighat .அது என்னவாக இருக்கும் என்று நெடுநாட்களாக புரியவில்லை.
இப்போது தெரிந்து விட்டது. அது அக்பருக்கும்  மகாராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே போர் நடந்த இடம்.
கார்த்தி ஒரு வரலாற்று பைத்தியம். கல்லூரியில் 2ம் ஆண்டு( 1999 ம் ஆண்டு ) படிக்கும் போது '' '' வரலாறு..com '' '' ஆரம்பித்தான்.
அப்படியிருக்க password வரலாறு சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தோன்றாமல் போயிற்று.
கார்த்தி கார்த்திதான்.
அம்மா 

2014/03/06

கற்பழிப்பும் குடியும் .போர்னோ?
Its been widely accused that liquor is the main reason for rape cases.
But its been conveniently forgotten that PORNO is the main reason .Mobile phones also are a source of this. From children to old are becoming addicts to this PORNO. Remember in loksabha some M.Ps were suspended for viewing this porno in their mobile in parliament itself.
So take some strict measures to cut this PORNO.
நிர்பயா ,உமா மகேஸ்வரி என்று கற்பழிப்பு கொலைகளுக்கு காரணம்  மது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  ஆனால் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதுதான் போர்னோ .சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதன் பிடியில் தத்தளிக்கின்றனர்.கைபேசி, வலைதளங்கள் என அதன் வட்டம் விரிவடைகிறது. சினிமாக்களில் கையளவு துணியுடன் ஒரு 50 பெண்கள் உடல் முழுதும் காட்டி ஆடும் நடனங்களும் இதற்கு அடுத்த காரணம்..ஆகவே செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் போர்னோ வையும் இந்த ஆபாச நடனங்களையும் ஒழிப்பதுதான்.

2014/02/27

62 வயது :
மத்திய அரசுக்கு என்ன ஆயிற்று?
ஓய்வு பெரும் வயதை 62 ஆக அதிகரிக்க போவதாக சொல்கிறார்கள்.இப்படி வயதானவர்களே பணியில் இருந்தால் ...இழைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும்?
உதாரணமாக இந்த மார்ச் மாதத்தில் ஒரு 10 லட்சம் பேர் ஓய்வு பெறுவதாக  வைத்துக் கொள்வோம்.அவர்கள் இன்னும் 2 வருடம் கழித்து தான் இடத்தை காலி செய்வார்கள்.அது வரை உமாமகேஸ்வரி போன்ற பெண்கள் இரவுப் பணி  செய்து வாழ்க்கையை தொலைக்க வேண்டியதுதான்.
எப்படியும் நாம்தான் மறுபடி ஆட்சிக்கு வரப் போவதில்லை.போகும் போது வரப் போகும் அரசுக்கு முடிந்த வரையிலான தலைவலியை ஏற்படுத்திவிட்டு போகலாம் என்ற நல்ல (? )எண்ணமோ !!!!1
இதற்கு ,இதனால் பாதிக்கப் படப் போகும் இளைஞர்களுக்கு  ஒரே ஒரு வழிதான் உள்ளது. அதுதான் நம் இளவரசர்  ராகுலிடம் கெஞ்சுவது. அவர் உடனே ஒரு வேண்டுகோள்  வைப்பார் .உடனே மாற்று அறிவிப்பு வந்துவிடும். துக்ளக் ஆட்சிதான்.
வாழ்க இந்தியா .

2014/02/07

கந்த சஷ்டி கவசம் :
எனக்கு பிடிக்காத பாடல். ஏன் ?
இதை எழுதியவர் ஒரு முனிவர்,ஞானி .
அப்படிப்பட்டவர்
கட்டு கட்டு கதறிடக் கட்டு ,
கட்டியுருட்டு கைகால்  முறிய
என்று சொல்கிறார்.
எப்படிப் பட்ட எதிரியாக இருந்தாலும் அவரும் ( மனம் திருந்தி நல்லவராக மாறி )நன்றாக வாழ வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்து ',
டுடு டகு  டகு
என்ற அர்த்தமற்ற  சப்தங்கள்.
ஆ ஆ ஆ னால்  தினமும் ஒரு முறை இதை சொல்லிவிடுகிறேன்.  பயம்தான்.  பக்தி அல்ல  .கார்த்தியும் நானும்  பகுத்தறிவுடன் கூடிய வாதம் செய்வோம்.
அதனால்தான் விபத்து நடந்தது என்று என்னை எள்ளி நகையாடினர் பலர்.
இது எப்படி என்றால் நம் மேல் அதிகாரியை நமக்கு பிடிக்காவிட்டாலும்  அவரை பார்த்தவுடன் ஒரு காலை வணக்கம்  சொல்வோமே அது போல்தான். சொல்லாவிட்டால் அன்று முழுதும்  அவர் முறைத்துக் கொண்டே திரிவார்.
அது போன்ற பயம்தான்.
எதற்கு வம்பு?
சொல்லிவிட்டால் பிரச்சினை முடிகிறது .அதனால்  எரிச்சலுடன் கவசம் சொல்கிறேன்.
வெறுமே இறைவா  (அப்படி ஒருவர் இருந்தால் ) என்று சொன்னால்  அவருக்கு கேட்காதா? நம் கஷ்டம் தெரியாதா? புரியாதா?
கஷ்டத்தை தீர்க்க மாட்டாரா?

2014/01/30

 எத்தனையோ   தாய்மார்கள் கெஞ்சியபோதும், போராடிய போதும்    கண்டு  கொள்ளாத அரசு  இப்போது  12  சிலிண்டர்கள் தரப் போகிறதாம் .அப்போது முடியாதது இப்போது நாட்டு    இளவரசர்  சொன்னவுடன் கொடுக்க முடிகிறது.என்ன நியாயமோ?

2014/01/17

Schumacher  and Karthik
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஷூமேக்கர்  ஒரு பெர்ய கார் பந்தய வீரர்.அவர் பனிச் சறுக்கு விளையாட்டின் போது சறுக்கி விழுந்து உயிருக்கு போராடி வருகிறார்.
கார்த்தி  U .S  சென்றிருந்த போது  இதே பனி சறுக்கு விளையாட்டின் போது தவறி விழுந்த வேகத்தில் கையிலிருந்த குச்சிகள் இரண்டும் எங்கோ போய்விட , சறுக்கிக் கொண்டே வந்திருக்கிறான்.எப்படியோ சமாளித்து எழுந்து நின்று விட்டிருக்கிறான்.
இதை என்னிடம் அவன் விவரித்த போது ,'' கண்ணப்பா ,பயந்து விட்டாயா ,இறந்து விடுவோம் என்று நினைத்தாயா?''
என்று கேட்டேன்.
அதற்கு கார்த்தி ''இல்லை அம்மா , எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்தேன் '' என்று பதில் சொன்னான்.
அப்படி பனிசறுக்கில் தப்பியவன் பைக் விபத்தில் பலியானான்.
நேர்மாறாக 300 கி.மீ வேகத்தில் வண்டிஓட்டிய போதெல்லாம் விபத்தில் சிக்காத ஷூமாக்கர்  பனி சறுக்கில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்.
What an IRONY
ஷூ மேக்கர் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தவர்.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது?
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2014/01/15

மன்மோகன் ஆட்சியின் அவலம்
திடீரனெ  ஒரு S .M .S வந்தது.கேஸ் புக்கிங் ரத்தாகிவிட்டது என்று..தொலைபேசியில் அந்த அலுவலகத்தை அழைத்தால் போனை  தொடவே மாட்டார்கள்.
சரி என்று நேராக அலுவலகம் சென்றால் எனக்கு முன்பே ஓரு 25 பேர் கத்திக் கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் அதே போல் செய்தி.
விஷயம் என்னவென்றால்  9 உருளை வாங்காதவர்களுக்கும் மான்யமில்லா விலையில் பில் போட்டு அனுப்பியுள்ளார்கள்.தவறை உணர்ந்த அவர்கள் சத்தமில்லாமல் சரி செய்திருக்கலாம். அதை விட்டு எல்லோருக்கும் செய்தி அனுப்பி எல்லோரையும் குழப்பி.  
அமைச்சர் ஆதார் அட்டை அவசியமில்லை என்கிறார். துணை அமைச்சரோ கண்டிப்பாக ஆதார் அட்டை வேண்டும் என்கிறார்.
என்னதான் நடக்கிறது?
மக்கள் மிகவும் குழம்புகிறார்கள்.காங்கிரசுக்கு ஓட்டு  போடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைவை மறு பரிசீலனை செய்கிறார்கள்.
தேவயாணி விஷயமும்  எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறது .
ராகுலின்  கார் பெட்ரோல்  இல்லாமல் நடு வழியில் நின்று விட்டது என்ற செய்தி அவமானமாக இருக்கிறது.
இப்போது பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது. தேர்தல் வந்தால் விலை குறையும் .
மன்மோகன் வந்த போது சந்தோஷப் பட்ட அனைவரும் இப்போது வெறுப்பில் உள்ளனர்.
வரும் அடுத்தவர் என்று நம்பப்படும் அவர் ஹிட்லராக இருப்பாரா அல்லது நல்லவராக இருப்பாரா என்ற சந்தேகம் .எதிர்காலம் மிகவும் பயமுறுத்துகிறது.

2013/12/25

இப்போது சன்  டி .வி யில் பாட்ஷா  படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கார்த்தி ஒரு ரஜினி ரசிகன்.
நான் கார்த்தி ரசிகை.
இந்த படத்தில் ''  அழகு ,அழகு '' என்று ஒரு பாடல் வருமே. நமீதா  பார்க்கும் எல்லோரையும்  ரஜினியாக  நினைத்து  படும் பாடல்.
கார்த்தியிடம் நான் சொல்வேன்.
'' கார்த்தி நீ U .S போய்  விட்டால் நானும்  இப்படித்தான் பார்ப்பவர்களை எல்லாம் நீயாக நினைத்து  இப்படி செய்தாலும் செய்வேன்''...
என்று சொல்வேன்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்  ஒரு பார்வை பார்க்கும் என் செல்ல மகனை   ஆசையுடன் பார்ப்பேன்.
(கார்த்தி என்னை விட்டு அமெரிக்கா போய்  விடுவான் ,அவனை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம்  இருந்து கொண்டே இருந்தது.ஆனால்  இப்படி ஒரு கொடுமையான பிரிவை எதிர் பார்க்கவில்லை.)
விதி.
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2013/12/20

கீழே தரப்பட்டுள்ள பதிவு கார்த்தி பணி புரிந்த DELL ல் பணி புரியும் ஒருவர் கார்த்தியைப் பற்றி எழுதியது.
***  ******* ****
கார்த்திக் என்னை விட ஒரு வருடம் சீனியர். வயதிலும் சரி; படிப்பிலும் சரி. படிப்பை பொறுத்த வரைக்கும் சீனியர் மட்டுமில்லை- படு கெட்டியும் கூட. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு பெருநிறுவனத்தில் வேலை வாங்கி பெங்களூர் வந்து இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன. யாருக்கு என்ன நடந்தால் என்ன? காலம் நிற்கவா போகிறது? காலம்தான் ஓடிவிட்டது ஆனால் கார்த்திக்கினால் காலத்தின் வேகத்தோடு ஓடி வர முடியவில்லை. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பாகவே நின்று கொண்டான்.
கார்த்திக்கின் கதையைப் பற்றிச் சொல்வதற்கு முன்பாக- 
கார்த்திக்கை நான் பார்த்தது கூட இல்லை. அவனது அம்மாவிடம் பேசியிருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் பெங்களூர் வருவார். நான்கைந்து நாட்களுக்கு விவேக் நகரில் இருக்கும் ‘ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ல் தங்கிச் செல்வார். ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் என்றால் கிராமம் இல்லை. அபார்ட்மெண்ட்தான். எப்பொழுதோ இந்த ஊரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்த போது விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக நிறைய அபார்ட்மெண்ட்களை கட்டியிருக்கிறார்கள். போட்டிகள் முடிந்தவுடன் மற்றவர்களுக்கு விற்றுவிட்டார்கள். மரங்களும்,நிறைந்த குளுமையுமாக அட்டகாசமான அபார்ட்மெண்ட் அது. அங்குதான் கார்த்திக் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறான். 
கார்த்திக் எங்கள் நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தான். அவன்  எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த அதே சமயத்தில் சேர்ந்தவர்கள் இன்றைக்கு சீனியர் டெலிவரி மேனேஜர்கள் ஆகிவிட்டார்கள். கார்த்திக்கைப் பற்றி அவ்வப்போது இவர்களிடம் பேசியிருக்கிறேன். ‘அவன் இங்கேயே இருந்திருந்தா இந்நேரம் டைரக்டர் ஆகியிருப்பான்’ என்பார்கள். அவ்வளவு திறமைசாலியாம். வேலையில் அடித்து நொறுக்கியிருக்கிறான். நிறையப் பேருக்கு ரோல் மாடலாகவும் இருந்திருக்கிறான். மீட்டிங்கில்‘கார்த்திக் மாதிரி இருங்கள்’ என்று மேனேஜர்கள் தயக்கமே இல்லாமல் சொல்வார்களாம்.
கார்த்திக்கின் அம்மா ‘நிசப்தம்’ வாசிப்பவர். ஒரு முறை விபத்தில் இறந்து போன மனிதரைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அந்தக் கட்டுரை ஏதோவிதத்தில் தன்னைச் சலனப்படுத்திவிட்டதாகவும் பெங்களூர் வரும் போது சந்திக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்ததால் நான்கைந்து மாதங்களுக்கு முன்பாக ஸ்போர்ட்ஸ் வில்லேஜூக்கு சென்றிருந்தேன். மழை தொடங்கியிருந்தது. அவர்களின் அபார்ட்மெண்ட்டைச் சுற்றிலும் மரங்கள் அதிகம் என்பதால் இருள் சற்று தடிமனாகவே கவ்வத் தொடங்கியிருந்தது.
வீட்டில் கார்த்திக்கின் அம்மா மட்டும்தான் இருந்தார். வேறு யாரும் இல்லை. கார்த்திக் அவரை விட்டுப் போய்த்தான் நான்கைந்து வருடங்கள் ஆயிற்றே. ‘இறந்துவிட்டான்’ என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துவதேயில்லை. 
சொல்லவில்லை பாருங்கள்- கார்த்திக் விபத்தில் இறந்துவிட்டான். அவன் மிக வேகமாக வண்டி ஓட்டுவான் என்று அவர்களது நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வேகம் என்றால் மின்னல் வேகம். அப்படியான ஒரு வேகத்தில்தான் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டுவிட்டான். தலைவிரி கோலமாக அவனைக் கிடத்தி வைத்திருந்த மணிப்பால் மருத்துவமனைக்கு ஓடியதாக அவனது அம்மா சொன்னார். ஆனால் பெரிய பலனில்லை. அவர் சென்ற போது அத்தனையும் முடிந்திருக்கிறது. தனது உயிரைக் கொடுத்து வளர்த்திருந்த மகன் இந்த புவியை விட்டு விலகியிருந்தான். 
மரணம் எல்லோருக்கும் பொதுவானதுதான். எல்லோருமே  அதனை எதிர்கொள்கிறோம். இருந்தாலும் பெரும்பாலான மரணங்களை பெரும்பாலானவர்கள் கடந்துவிடுகிறோம். ஆனால் கார்த்திக்கின் மரணத்தை அவனது அம்மாவால் கடக்கவே முடியவில்லை. பெருமலையாகவோ அல்லது பெருங்கடலாகவோ மாறி நின்றுவிட்டது. தலைவிரி கோலமாக தனது மகனின் மரணத்தை எப்படி எதிர்கொண்டாரோ அதே புள்ளியில் நின்றுவிட்டார். கிட்டத்தட்ட standstill.
அந்த வீடு கார்த்திக் இருந்த போது எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது. படுக்கை விரிப்புகள் கூட மாற்றப்படவில்லை. அவன் பயன்படுத்திய கம்ப்யூட்டர், டேபிள், அவன் ஒட்டி வைத்திருந்த நிழற்படங்கள் என அத்தனையும் அப்படியே இருக்கின்றன. அவனது வாழ்வின் இறுதி நொடிகளைத் தனது சக்கரத்தில் சுமந்து சென்ற பைக்கை வீட்டின் வரவேற்பறையிலேயே நிறுத்தி வைத்திருக்கிறார். 
கார்த்திக்கின் அம்மாவிடம் பேசுவதற்கு ஒரே விஷயம்தான் இருக்கிறது. ''''‘கார்த்திக்’' '''. அங்கிருந்த நாற்பது நிமிடங்களும் அவனது நிழற்படங்களைக் காட்டினார். அவனது நண்பர்களைப் பற்றி பேசினார்- அந்த நண்பர்களில் ஒருவர் எனக்கு இப்பொழுது மேனேஜர். இன்னொருவர் முன்னாள் மேனேஜர்,  கார்த்திக்குக்கு நிகழ்ந்த விபத்து பற்றி பேசினார், அவனது எழுத்து பற்றிச் சொன்னார், அவனது ஆர்வங்கள் குறித்து உற்சாகமடைந்தார். 
அவனது மின்னஞ்சல்களிலும், அவனது வலைப்பதிவிலும், அவனது டைரிகளிலும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை புரட்டிக் கொண்டிருக்கிறார். ‘தனக்கான செய்தி’ எதையாவது இந்த எழுத்துக்களில் விட்டுச் சென்றிருப்பான் என்று இன்னமும் துழாவிக் கொண்டிருக்கிறார். இனியும் அதையேதான் தொடர்வார். இதுதான் அவரது வாழ்க்கை. இதுதான் அவரது உலகம்.
தனது உலகத்தை ஒட்டுமொத்தமாகச்  சுருட்டி ஒற்றை பெயருக்குள் வைத்துக் கொண்டிருந்த அந்த அம்மையாரைப் பார்க்கும் போது எனது பெரும்பாலான வார்த்தைகள் வறண்டு போய்விட்டன. தனது வாழ்க்கையின் மிச்சக்காலம் முழுவதையும் இப்படியே கழிக்கப் போகிறேன் என்ற அவரது வைராக்கியம் சற்று அச்சமூட்டுவதாக இருந்தது. தனக்கான அத்தனை சிறகுகளையும் கத்தரித்துக் கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதைப் போன்ற வதை உலகில் வேறு எதுவும் இல்லை. அதை அவர் சர்வசாதாரணமாகச் செய்து கொண்டிருக்கிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது பயத்தில் அவ்வப்போது எச்சிலை விழுங்கிக் கொண்டேன். அவரது கண்களை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்தேன்.
பேச்சுவாக்கில் அவனது நினைவிலேயே நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். நாட்கள் மட்டும்தான் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அவர் உருக்குலைந்து போயிருக்கிறார். அவர் காட்டிய பழைய நிழற்படங்களில் இருந்ததற்கும் தற்போதைய உருவத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறார்.  ஐந்தாறு வருடங்களில் முடி மொத்தமாக நரைத்து கண்கள் குழிவிழுந்து, தோல் சுருங்கி தனது உருவத்துக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லாமல் மாறிவிட்டார். ஒவ்வொரு மாதமும் டிபன் பாக்ஸில் தக்காளிச்சாதமோ அல்லது எலுமிச்சை சாதமோ எடுத்துக் கொண்டு சென்னையிலிருந்து பெங்களூர் வந்துவிடுகிறார். தனது மகன் வாழ்ந்த வீட்டில், தனது மகனின் மூச்சுக் காற்று நிறைந்த இந்த இடத்தில் நான்கைந்து நாட்கள் இருந்துவிட்டு திரும்பச் செல்கிறார். யாருமே இல்லாத வீட்டில் அவரும் கார்த்திக்கும் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அவனது தலையை தனது மடி மீது வைத்து வருடுகிறார். அவனுக்கு ஊட்டி விடுகிறார். அவன் உற்சாகமாக வீட்டிற்குள் அலைந்து கொண்டிருக்கிறான். நான்கைந்து நாட்களில் அவர் திரும்பச் சென்றவுடன் அந்த வீட்டின் மீது பெரும் அமைதி கவிகிறது. அங்கு கார்த்திக் தனிமையில் தனது அம்மாவுக்காக காத்திருக்கக் கூடும். இந்த உலகம் புரிந்து கொள்ள முடியாத தனிமை அது.//
*************   **************
 இந்த  பதிவில் சில திருத்தங்கள்.
1.கார்த்தி இவரை விட வயதில் இளையவன் .
2. photos (நிழற்படங்கள் -கார்த்தியுடையது ) நான் ஒட்டியது. அறை  முழுவதும் கார்த்தியின் படங்களே.
3* .கார்த்தி அங்கு தனிமையில் இல்லை. நான் வரும் போது என்னுடனே அவனும் வருகிறான். பேருந்தில் என் மடியில் அமர்ந்து வருகிறான்.
4.கார்த்திக் உலகை விட்டு நீங்கி 8 வருடங்கள் ஆகின்றன.
5. கார்த்தியும் நானும்  சேர்ந்துதான் வீடு வாங்கினோம்.(பணத்தை பற்றி சொல்லவில்லை.அதை நான் என்றுமே ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை. நானும் கார்த்தியும் அந்த அலுவலகம் சென்ற போது அங்கு இருந்தவர்கள் கார்த்தியிடம் என்ன காட்டி '' உன் அக்காவா ?''என்று கேட்டார்கள் )
6. கார்த்தி தன்னை விட வயதில்  பெரியவன் என்று சொல்லும் இவர் கார்த்தியை அவன் இவன் என்று சொல்லாமல் அவர் என்று சொல்லியிருக்கலாம்.
       ஆனாலும் என்னைப் பற்றியும் கார்த்தியை பற்றியும் பதிவிட்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் .நன்றி.

2013/12/10

Office Serial :
தற்செயலாக இந்த சீரியலை கடக்க நேர்ந்தது.அப்போது இந்த காட்சி வந்தது.நிறுத்தி பார்த்த போது இந்த வசனம் வந்தது:
'' '' ''என் பிறந்த நாள் office ல் ஒன்று .
உண்மையான பிறந்த நாள் ஒன்று.'' '' ''
6 மாதம் அதிகமாக கொடுத்து விட்டார்கள்.
.........   ............
இதே  இதேதான்  கார்த்திக் விஷயத்திலும் நடந்தது.
கார்த்திக்கின் உண்மையான பிறந்த நாள் 14.11.1981
சான்றிதழிலோ  16.06.என்று கொடுத்திருந்தோம்.அவன் வேலை செய்த DELL  ஆபீஸ் ல் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வழக்கம் உண்டு.(இப்போது எப்படியோ தெரியாது.)
அந்த வழக்கப் படி 16.06 அன்று கார்த்திக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்து என்று மைக்கில் சொல்லியிருக்கிறார்கள்..கார்த்திக் அதை புரிந்து கொள்ளவே இல்லை.அவன் மனதில்  14.11 மட்டுமே பதிந்திருந்ததால் அவன் சலனமே இல்லாமல் இருந்திருக்கிறான். அவன் நண்பன் '
' '''கார்த்தி உன்னைத்தான் சொல்கிறார்கள் ''
என்றதும்தான் சுதாரித்துக் கொண்டு மேடை ஏறியுள்ளான்.
...... .................
எப்படியாவது ஒரு 5 நிமிடம் கார்த்திக்கின்    நினைவுகளில் இருந்து வேறு  சிந்தனையில் இருந்தாலும் ,இப்படி ஏதோ ஒன்று அவனை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
கார்த்தியின் நினைவையே  oxygen ஆக சுவாசிக்கும்,
கார்த்திக் அம்மா      

2013/12/07

:அழுகை

Miracle:
I think this piece had been written in 2006. Accidentally I came to see it when I was Searching for some other paper.
It goes like this.
......   .............   
One of Karthik's friends while trying to comfort me said :
''I read in a book that  '' you should not encourage any person to cry. It's very bad.Somehow see to it that they stop shedding tears''
After he left I might have written this.
*********
May be if its a drama ,an acting ,an attempt to make belief  ,if I cry to create a scene , to get sympathy ,the tears will stop.
If you don't cry with me
I will cry alone
Will my tears stop
If you don't cry with me?
Will my tears stop?
Will it?
Its spontaneous and who can arrest the bubbling stream of Coorg, the Thalai Kaveri?
Do I expect you to cry with me?
If you cry thats up to you.
If you don't cry that's also up to you.
That 's not going to make any difference in my grief.
If at all I recover that will be a miracle.
அந்த நண்பன் சொன்னான் .அவன் என்னுடன் சேர்ந்து அழ மாட்டானாம்.அது தவறு என்று படித்தானாம்.
என்னை வந்து பார்ப்பதையும் ,என் சோகத்தை பகிர்ந்து கொள்வதிலும் இருந்து விலக அவனுக்கு ஒரு காரணம் தேவைப் பட்டது.
விலகிக் கொள் .
அதற்கு எதற்கு ஒரு மொக்கை தத்துவம்?
என் துக்கம் எனக்கு.அது நீங்கினால் அதிசயம்.
எதுவும் நடக்கலாம்.
நாம் யார் எதையும் தீர்மானிப்பதற்கு?
என் அழுகை நாடகமா ?
போதும் என்றவுடன் நிற்பதற்கு? அடி வயிற்றிலிருந்து வெடித்து கிளம்புகிறது.
பார்ப்போம்.

2013/11/29

I STOP WHEN I STOP

 Karthik 's  scribblings :
கார்த்தியின் பழைய நோட்டுகளை புரட்டிக் கொண்டிருந்தேன்.தன்னுடைய வாழ் நாள் குறைவு என்று தெரிந்ததாலோ என்னவோ ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் எந்த துறையையும் விட்டு வைக்காமல் முயற்சி செய்துள்ளான்.
அப்படி கண்ணில் பட்ட வரிகள்.:
NEON  BULB UNPLUGGED :

Remade  shall be the blade
that was  broken
And the crownless
Shall be the king
இவை சினிமா வசனங்கள் என எண்ணுகிறேன்.தெரியவில்லை .
ஆனால் அடுத்து வரும் வரிகள் அவனுடைய முயற்சி என்பது உறுதி.
...........   ................
2 busy 2 B SAD
2 + ve  2 B  doubted
2 optimistic  2 B fearful
2 determined 2 B defeated
...........  ...............
i don't want leisurely deadlines.
Work expands to fill available time.
I don't want impossible deadlines.
How can there be a limit to me.
Impossibility is a human concept.
I STOP WHEN I STOP 
இது கார்த்தி தன் மேனஜர் (அ )டீ.எல்  நச்சரிப்பு தாங்காமல் எழுதியது என நினைக்கிறேன்.
அவன் திடீர் விபத்தும் அவன் பிரிவும் என்னை செயல் இழக்க செய்திருந்த வேளையில் எவ்வளவு சென்சார் செய்ய வேண்டுமோ அவ்வளவு சென்சார் செய்த பிறகு எனக்கு கிடைத்த மிச்சம் .எத்தனையோ கேள்விகள் மனதிற்குள்.யாரிடம் இருந்தும் பதில் கிடைக்காது என்று தெரியும்.மனம் ஊமையாக அழுகிறது.
கார்த்திக் அம்மா

2013/11/21

A T M
நானாக இருந்திருந்தால் '' ''அப்பா சாமி, இந்தா பணம். நகை ''என எல்லாவற்றையும் கொடுத்து விட்டு அவனுக்கு ஒரு கும்பிடு போட்டிருப்பேன்.பெங்களூர் பெண் இப்படியா செய்வார்? அவன் கத்தியை எடுத்த பின்னும் போராடுகிறார்.
மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்  என்பதை உணராதவரோ?
G A S :
சேலம் மாவட்டத்தில் எரிவாயு வெடித்து வீடே இடிந்து 6 பேர் பலி.
இதில் கொடுமை என்னவென்றால்  பக்கத்து வீட்டோரும் பலியானதுதான்.ஹெல்மெட் போட்டு போங்கள் என்ற அறிவுரை சரிதான்.பக்கத்து வீட்டு எரிவாயு உருளைக்கு எந்த ஹெல்மெட்?
ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும் . விதி வலியது. எந்த இடத்தில் எந்த ரூபத்தில் வந்து தாக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது.
ப.சிதம்பரம்:
இவர் ஏன் இப்படி பேசுகிறார்?சில நாட்களுக்கு முன்புதான் உயிரோடிருக்கும் முன்னால் பிரதமர் வாஜ்பாய் அவர்களை ''இறந்து விட்டார். அமரர் '' என்றார்.
இப்போது நாட்டு பணம் அனைத்தையும்  I S R O வுக்கு கொடுக்க முடியாது என்கிறார்.
பாவம் அந்த விஞ்ஞானி . இன்னும் கொஞ்சம் அதிக நிதி தாருங்கள் என்றார்.இந்தியாவின் மொத்த பணத்தையும் கேட்கவில்லை.ஒரு லட்சம் கோடி வாராக் கடன் என்று பெரிய பண முதலைகளுக்கு தாரை வார்த்தது பற்றி வாய் திறக்கவில்லை.
அவரும் குழம்பி நம்மையும் குழப்புகிறார்.
.....    .....
இவருக்கு அண்ணன் நம் வருங்கால பிரதமர் கனவில் இருப்பவர்.காந்தியை ''மோகன்லால் '' ஆக்கி விட்டார்.
என்னவோ , நம் கதி அதோ கதிதான்.
கலாகார்த்திக்

2013/11/14

பிறந்த நாள்
14.11.1958
நான் இந்த உலகுக்கு வந்த நாள்.
14.11.1981
நான் உயிர் கொண்ட நாள்.
என் உயிரை நான் கண்ட நாள்.
என் அன்பு மகன்  கார்த்தி பிறந்த நாள்.
என் தெய்வத்தை நான் பார்த்த நாள்.
வாழ்வின் இன்பம்,இனிமை ஆரம்பமான நாள்.













வாழ்வின் சந்தோஷமான நாட்கள்.
இன்று எனக்கும் என் கார்த்திக்கிற்கும் பிறந்த நாள்.என் கார்த்தி மகன் பிறந்த நாள்.அவனுடன் வாழ்ந்த அந்த சந்தோஷமான 23 வருடங்கள்.கார்த்தி மகன், உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
கார்த்திக்   அம்மா

2013/11/05

திக் திக் 44 நிமிடங்கள்...+ராதாகிருஷ்ணன்  FAN ஆனேன்
HAPPY HAPPY ..மங்கள்யான் வெற்றி
அப்பப்பா  44 நிமிடங்கள் வயிற்றுக்குள் 1000 பட்டாம் பூச்சிகள் பறந்தன. Live ஆக பார்க்க ஆசை ஆசையாக  இருந்தது. ஆனால் என்னைப் போல் வாழ்விழந்த  ஒரு வீணாப் போனவள்  பார்த்தால் எங்கே  mission  தோல்வியாகிவிடுமோ என்ற பயம் இருந்தாலும் ஆர்வத்தை கட்டு படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டிருநதேன்.
என் பிரார்த்தனை வீணாகவில்லை.
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்  அனைவருக்கும்  என் மனமார்ந்த வாழ்த்துகளும் வணக்கங்களும்  நன்றிகளும்.
அடுத்ததாக  நிச்சயமாக  நம் ராதாகிருஷ்ணனை  பற்றி  .நிறையவே சொல்ல வேண்டும். Dedication என்று இவரை உருவகப்படுத்தலாம்.
இதற்கு முன் ஒரு செயற்கைக்கோள்  தோல்வியாகி கீழே விழுந்த போது தன்னுடன் இருந்த அனைத்து ஆராய்ச்சியாளர்களையும்  அனுப்பி விட்டு அந்த தோல்வியை தன்னுடையதாக மட்டுமே ஏற்றுக்கொண்டு பேசி விட்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அரங்கை விட்டு வெளியேறிய காட்சி இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.
இன்று பாருங்கள் :
 எல்லோரையும் அழைத்து பேச வைக்கிறார்.நிச்சயமான பெருந்தன்மை.
யக்ச்பால் என்றொரு வயதான  அறிவியலாளர் .1990 களில் இவர் தொலைக்காட்சியில் அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு  பதில் தருவார்.பைத்தியமாக அலைவோம்.அந்த நிகழ்ச்சி பார்ப்பதற்கு.
அந்த மனிதரை இன்று பார்க்கிறேன். எதோ நெருங்கிய உறவினர் ஒருவரை பார்ப்பது போல் சந்தோஷமாக இருந்தது.
அமைச்சர்  நாராயணசாமி
இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை என்று நினைத்தால்  Dr ராதாகிருஷ்ணன்  '' .இவர் 2010 லிருந்து  மிக நெருக்கமாக உதவியாக இருந்தார்'' என்கிறார்.இந்த மனிதர் ஒரு வித்தியாசமானவர்தான்.இவரது மனைவி 2 சக்கர வாகனத்தில் சென்று விபத்துக்குள்ளானார்  என்று செய்தி படித்த போது இவ்வளவு எளிமையான  ஒரு அமைச்சரான மனிதரா  என்று வியந்தேன்.இப்போது அந்த  .மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது.
.....     .......
மரண மொக்கை படங்களை  எடுத்து விட்டு இமாலய  சாதனை செய்தது போல் பேசும் நம் சினிமா பிரபலங்களை யும் இந்த விஞ்ஞானிகளையும் (scientists ) ஒப்பிட்டு வேதனைதான் அடைய வேண்டியுள்ளது.
சினிமா நடிகர்கள் 20 கோடி 30 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.
ஆனால் இவர்களுக்கோ  1 அ 2 லட்சம் சம்பளம் இருக்கலாம்.இவர்களுக்கு கட் அவுட் கிடையாது.பாலாபிஷேகம்  கிடையாது..ஆனால் இவர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களால்தான் நம் இந்தியா  வெற்றி நடை போடுகிறது.
பி.கு.
எனக்கும் படிக்கும் காலத்தில் இப்படி சாதனை செய்ய வேண்டுமென்று வெறி இருந்தது.
விதி வேறு விதமாக சிரித்தது.
ISRO  தலைவர் திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டார் .Religion starts when science fails
கார்த்திக் அம்மா

2013/11/02

மியாவ் என்றது    புலி    புர்ர் என்றது  பூனை ::

ஷாருக் கான் சொத்து 2500 கோடியாம் .
ஒரு  நிகழ்ச்சியில்  வந்து எனக்கு டான்ஸ்  தெரியாது. நீங்கள் ஆடினால் அதைப் பார்த்து நான் ஆடுவேன்  என்று என்ன நடிப்பு நடித்தார். இதை அகங்காரத்துடன்  அங்கீகரித்த   பூனை  என்னவோ தனக்கு மட்டுமே  டான்ஸ்  தெரியும் என்ற மிதப்பில் ஆடியது. 
அட
 தன்னை விட எல்லா விதத்திலும் சீனியர்  என்ற ஒரு மதிப்பு மரியாதை வேண்டாம்?
அந்த டான்ஸ் மேதையின் முகத்தில்  அப்படி ஒரு கர்வம் தெரிந்தது.
உங்களை விடவா நான் ? என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.
2500 கோடியில்  பாதி கூட இருக்காது இவருடைய சொத்து.அவரின் பிரபலத்தில்  பாதி கூட இருக்காது இந்த 'ப்ரோ ' வுக்கு.
பொதுவாகவே நம் தமிழ் சினிமா நடிகர்கள் தங்களை தெய்வப் பிறவிகளாக  .நினைத்து கொள்கிறார்கள்.
S R K  வந்தார். பேசினார். சென்றார். படம் வெளியிட்டு கோடிகளை அள்ளினார். புலி பதுங்குவது பாய்வதற்கு என்று உணராமல் முட்டாள் பட்டம் கட்டிக்  கொண்டது பூனை.
......       .......    .......
டெல்லி முதல்வரும்  வெங்காயமும்::
டெல்லி முதல்வர் ஒரு வாராமாக  சமையலில் வெங்காயம் சேர்த்து கொள்ளவில்லையாம்.
என்ன ஒரு நிர்வாகத் திறமை.
வெங்காய விலையை குறைக்க என்ன முயற்ச்சிகள் எடுக்கலாம் என்று முனையாமல் .....காமெடி .....
 

2013/10/30

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

விதியே உன் விளையாட்டுக்கு எல்லை இல்லையா?

பயங்கர பேருந்து விபத்து - 40 பேர் பரிதாபச் சாவு!40 பேர்.அதில் பாதிக்கும் மேல் வாலிப வயது. .
! l
Updated: Wednesday, October 30, 2013, 13:47 [IST] aanthi ரா அருகேயுள்ள மெகபூப் நகரில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 45 பேரும் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! பெங்களூருவில் இருந்து ஹைதராபாத்துக்கு 45 பேருடன் தனியார் பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், மெகபூப் நகர் மாவட்டம், பலீம் என்ற ஊர் அருகே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக சாலை தடுப்பில் பேருந்து மோதியது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! இதில் டீசல் டேங்க் வெடித்தில் பேருந்து தீப்பிடித்தது. மளமளவென தீ பரவியதில் பேருந்தில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் 38 பேர் கருகி உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 7 பேரும் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!! ஆனால் சிகிச்சை பலனின்றி எஞ்சிய 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கருகிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. .ஆந்திரா: தனியார் பேருந்து தீ விபத்து.. பயணித்த 45 பேரும் பலியான பரிதாபம்!!
எத்தனை ஆசையுடன் கிளம்பியுருப்பர்.புதிதாக கல்யாணமான  மனைவியை பார்க்கும் ஆவலுடன்,  அம்மாவிற்கு பிடித்த புடவை வாங்கிக் கொண்டு, இனிப்பு வாங்கிக் கொண்டு என்று எவ்வளவு சந்தோஷமாக புறப்பட்டிருப்பார்கள்
இன்னும் 1 அ 2 மணி நேரத்தில் வீட்டில் இருந்திருக்க வேண்டியவர்கள்.
இறப்பிலும் கொடுமை இப்படி கரிக் கட்டையாதல்தான் .யாரென்று அடையாளம் தெரியாமல்.....
எந்த தாயும் தன மகனை அணு அணுவாக ரசித்திருப்பார்கள்.இப்படி பார்க்க நேரிட்டால்?
கார்த்திக்கிற்கு ஒரு சிறு கீரல் கூட இல்லை.அப்படியே வீட்டில் படுக்கையில் தூங்குவது போலவே இருந்தான். மணிப்பால் மருத்துவமனையில் அவன் படுக்கைக்கு அருகில் செல்லும் நிமிடம் வரை மகன் மயக்கத்தில் ,தூக்கத்தில் இருக்கிறான் என்றே நினைத்தேன் .அப்படி பார்த்த எனக்கே அவன் இல்லை என்று தெரிந்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி ,
வார்த்தையால் சொல்ல முடியுமா?
அப்படி இருக்க இன்று 40 தாய்கள் எப்படி கதறுவார்களோ?
எந்த ஹெல்மெட்? எந்த கவசம்? எந்த புண்ணியம்? எந்த கர்மா? 40 பேரும் பாவம் செய்தவர்களா? 40 தாய்களும்  பாவிகளா?சுற்றம்,  உறவு, என்று அத்தனை பேரும் சொல்வர் ''என்ன பாவம் செய்தாளோ ?''இவர்கள் எல்லோரும் உத்தமர்கள் போலும் ...இந்த தாய் மட்டுமே பாவம் செய்தவள் போலும் ஏற்கனவே  வெந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி  சந்தோஷப்பட்டு போவார்கள்.அடுத்து ஒரு மாமேதை வந்து '' எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவர்கள்தானே''' என்று சாத்தான் வேதம் ஓதி விட்டு போகும்.யார் முன்னால்  போவது, யார் பின்னால் போவது என்ற நியதி இல்லையா?
கதறியவள் நான், வேதனையை அனுபவித்தவள் நான் என்பதால் காலையில் நடந்த  பெங்களூர்  பஸ் விபத்து என்னை மிகவும் பாதித்தது.மனம் மிகவும் , மிகவும் கனத்து போயிற்று. யாருக்கு யார் ஆறுதல் சொல்ல முடியும்?சொன்னால் ஆறுமா? காலமும் குறைக்க முடியாது இந்த வேதனையை..

2013/10/28

அமரர்   வாஜ்பாய்க்கு  ஆழ்ந்த .இரங்கல் :
கொடுமைடா  சாமி.ஒரு ex P .M உயிரோடு  இருக்கிறாரா இல்லையா என்று கூடவா தெரியாது?
மத்திய அரசும் அதன் அமைச்சர்களும் தன்னிலை மறந்து விட்டனரா?  File  காணோம் என்றால்  நான் என்ன watchman  வேலையா பார்க்க முடியும்  என்று கேட்கிறார் P .M .ஏன் காணாமல் போயிற்று யார் காரணம் என்று தெரிந்து அவர்களை dismiss செய்யலாமே.சிறையில் தள்ளலாமே. files கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கலாமே.
கேட்டால் சோனியாதான் எல்லாவற்றிற்கும் காரணம்.
வாஜ்பாய் அமரர் ஆனதற்கும் சோனியாதான் காரணமோ?
இவர் அடுத்த பட்ஜெட் போடப் போகிறார்.
இந்திய  மக்கள் எல்லாவற்றிற்கும் தயார்.
.....     ....   ....  .....
கதவை திறந்தால்  100 பேர் கம்பு ,கொம்புடன்  தயாராக இருக்க போகிறார்கள் (ஐயோ , ஐயோ  உன் பதிவை 1 அ 2 பேர் படித்தாலே அதிகம் .இப்படி  ஒரு build up தேவையா கலா கார்த்திக்?)
சரி,  சசரிரி .
வழக்கம் போல் 19 century படத்தை இப்போது பார்ப்பதுதானே என் வழக்கம்.அன்று
அவ்வை ஷண்முகி பார்த்தேன்.அந்த பெண் என்னமாய் நடித்திருக்கிறது.தெய்வ மகள் பெண்ணை பாராட்டியவர்கள் இந்த பெண்ணை பாராட்டினார்களா?
வசனம் அற்புதம்.மீனா அழகு. சாம்பார் சூப்பர். எல்லோருமே நிறைவாக செய்திருந்தனர்.குட்டி பெண் என் மனதை மிகவும் கவர்ந்தாள்.

2013/10/27

இஷ்டம் : திரை விமர்சனம் :
 எப்போது வந்த படமோ தெரியாது. இன்று Z டி .வி யில் ஒளிபரப்பானது.அகஸ்மாத்தாக  பார்க்க நேரிட்டது.
பொதுவாகவே I .T சம்பந்தப்பட்ட படம் என்றால் ஒரு ஆர்வத்துடன் பார்ப்பதுண்டு.
ஏனென்றால் அவர்களில் 90 % பேர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
Office தொடரில் வருவது போல்தான்.நீ என்னை லவ் பண்ணுகிறாயா , நான் உன்னை லவ் செய்யட்டுமா என்ற கேள்வியிலேயே நாட்கள் ஓடும். சரி திருமணம்தான் செய்து கொள்ளலாமே  என்று முடிவு செய்கிறார்கள்.
இந்த படமும்  அதே போல்தான்.அவசர கல்யாணம். அவசர பிரிவு.
           எனக்கு மிகவும் பிடித்த வசனம் .பையனின் அம்மா  அந்த மாதர் சங்க தலைவியை காய்ச்சும் இடம்தான்.
பல பெண்கள் குடும்ப பந்தத்திலிருந்து வெளியேற காரணமே இவர்கள்தான். பெண்கள் அடிமை இல்லை. பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று இந்த மாமேதைகள்  சொல்லும் அறிவுரையாலேயே  பல பெண்கள் வாழ்க்கையை இழக்கின்றனர்.
ஆண்களில் ராமன்கள் உண்டு என்று படத்தை முடித்திருந்தார்.டைரகடர்.
 இந்த படம் ஓடியதா, வெற்றி படமா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை.ஆனால் இது போல் படங்கள் இன்னும் வர வேண்டும். நிறைய மாயைகள் மறைய வேண்டும். படத்தின் டைரக்டருக்கும்  தயாரிப்பாளருக்கும் என் நன்றிகள்.
வெங்காய விலை ..மற்றவற்றின் விலை...வருமான உயர்வு 
எனக்கு வேதனைப்படுவதா , நகைப்பதா என்று தெரியவில்லை.
  எப்படி இப்படி ஒரு கூப்பாடு?
என்னவோ வெங்காய விலை மட்டும்தான் அதிகமாகியுள்ளதா கவும்  மற்ற பொருள்கள் எல்லாம் 1 ரூபாய்க்கும் 2,3 ரூபாய்க்கும் கிடைப்பது போலவும் ....எந்த பொருளின் விலை கம்மியாக உள்ளது?
அரிசி,பருப்பு,எண்ணெய் ,பால் பொருட்கள் ,சோப்பு போன்ற பொருட்கள் விலை யும்தான் விண்ணை எட்டியுள்ளது.
ஒரு சோப்பு  50 ரூபாய்க்கு விற்றால் வாங்கும் மக்கள் ,10 நாட்களில் ''சிகப்பாகி விடுவீர்கள்''  என்ற கிரீம்களை  500 ரூ கொடுத்து வாங்கும் மக்கள் ,அந்த கடைகளில் போய் அவர்கள் சொல்லும் விலையில் ஒரு போலி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு பெருமையுடன் வரும் மக்கள்  அதைப் பற்றி ஏதாவது  குறை சொல்கிறார்களா ?
அட ,ஒரு துணிக்கடைக்கு  சென்றேன். ஏதாவது ஒரு நாள் ( வருடத்தில் ஒரு நாள் ,யாராவது  உறவினர்கள் வந்து அவர்களுக்காக  செல்ல வேண்டியிருக்கும் )
அப்படி சென்ற போது எனக்கு மயக்கம் வராத குறைதான்.ஒரு சாதாரண சுடிதார் கூட 2500 ரூ ,அதை விட சாதாரண புடவை 1500 -10000 வரை.
என்னுடன் வந்தவர்கள் உணவுக்கு தக்காளி,பால் செலவுக்கு அத்தனை கஞ்சத்தனம் செய்பவர்கள் , அந்த கடையில் ரூ 10000 த்திற்கு  துணி எடுத்தனர்.
   சரி.....இப்போது தீபாவளி  வருகிறது. பட்டாசு விலை 30%  அதிகமாகி உள்ளதாக செய்தி சொல்கிறது.
யாராவது 2000 ரூ விட கம்மியாக வாங்குகிறார்களா  என்று சொல்லுங்கள்?
அப்போது மட்டும் எந்த புலம்பலும் இல்லை. அது ஒரு பெருமை.!!!1
இதை விட முக்கியமான விஷயம் :எல்லோரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது.எல்லோரின் வாங்கும் திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது
     வெங்காயமே இல்லாமல் சமைத்தாலும்  நன்றாக இருக்கும்.
விரத நாட்களில் உணவில் வெங்காயம்  சேர்க்க மாட்டார்கள்.அன்றுதான் உணவு இன்னும் அதிக சுவையுடன் இருப்பது போல் தோன்றும் .
சரி ,10 வெங்காயம் போடும் இடத்தில் 5 வெங்கயம் போட்டு  பயன்பாட்டை குறைத்து ,கம்மியாக வெங்காயம் வாங்குங்கள் .
வியாபாரிகள் எவ்வளவு நாள் பதுக்க முடியும்?
கண்டிப்பாக விலையை குறைத்துதானே விற்க வேண்டும்.
செயல் இழந்த மத்திய அரசு 
என்னதான் செய்கிறது அரசு? வியாபாரிகள் பதுக்குகிறார்கள் என்று சொல்லி விட்டால் சரியா? ஒரு ரெய்டு  போய் அதை வெளியே கொண்டு வர முடியாதா?ஏற்றுமதியை  நிறுத்த முடியாதா? காமெடி செய்கிறது மத்திய அரசு.

2013/10/18

கிராமத்து குர்பானி :
ஒட்டகங்களை  வெட்டக் கூடாது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார் என்ற செய்தி எனக்கு பழைய நினைவுகளை கிளறி விட்டது.
நாங்கள் ( நான்+என் சகோதரர்கள் ) கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம்.நான் P .S .G .என் அண்ணா கோவை அரசு மருத்துவ கல்லூரி.
கிராமத்தில் 'தவம்'  என்று கொண்டாடுவார்கள். பங்காளிகள் எனப்படும் அனைவரும் எங்கிருந்தாலும் வந்து குல தெய்வ வழிபாடு செய்வார்கள்.எனக்கு விவரம் தெரிந்து வந்த முதல் தவம்அது.
என் அண்ணா கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்.ஏதோ  பண்டிகை என்று நினைத்து தன நண்பர்களையும் அழைத்து வந்து விட்டார் வீட்டிற்கு.அடுத்த நாள் கிராமத்திற்கு சென்றோம்.என் பெரியப்பாதான் ஊர் தலைவர். சிற்றரசர் போல்.ஊருக்கு அவர்தான் ராஜா. ஊரே கையெடுத்து கும்பிடும்.  சினிமாவில் வருவது போல்தான்.
ஆனால் நான் ''பெரியப்பா' என்று அதட்டலாக( அப்படியே அழைத்து பழகிவிட்டது ) கூப்ப்பிட்டால் போதும். சிறியதாக ஒரு நடுக்கம் வந்து ''என்ன பொண்ணு'' என்பார்.
அவரை நன்றாக அலங்கரித்து,மாலை போட்டு ஒரு குதிரையில் ஏற்றி கோவிலுக்கு கூட்டி வந்தார்கள். எனக்கு அவரை பார்க்க (அழகாக இருந்தார்) வேடிக்கையாக இருந்தது.
ஆனால் உண்மையான வேடிக்கை அப்புறம்தான் ஆரம்பித்தது.எங்கிருந்துதான் அவ்வளவு ஜனங்கள் வந்தார்களோ ?ஆளுக்கொரு ஆடு, கோழி .ஒருவர் வெட்டி வெட்டி என் பெரியப்பாவிடம் கொடுக்க, அவர் அந்த ஆட்டை வாயில் வைத்து அதன் ரத்தத்தை உறிஞ்சி துப்பினார்.அத்தனை மக்களும் அதை கையிலேந்தி (அதற்கு அவ்வளவு தள்ளு முள்ளு ,அடிதடி,) குடிக்க,.....
அதை குடித்தால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்குமாம்.நோயுள்ளவர்களுக்கு நோய் பஞ்சாய் பறந்து விடுமாம்.ஊரே ரத்த மயமாக காட்சியளித்தது.ஒரூ  1000 ஆடு ,கோழிகள் இருக்கும்.
ஏற்கனவே பெரியப்பாவிற்கு கள்ளை ஊற்றி அரை மயக்கத்தில்தான் கொண்டுவந்தார்கள்.இல்லையென்றால் அந்த ரத்தத்தை குடிக்க முடியாதாம்.கள்  மயக்கம்+ரத்தமும் சேர்ந்து கொள்ள பெரியப்பா முழு மயக்க நிலைக்கு போய்க் கொண்டிருந்தார்.
.......   ..... பார்த்து கொண்டிருந்த நான்,+ என் அண்ணா,+ அவரது நண்பர்களும்தான்   மயக்க நிலை. .....விதிர் விதிர்த்து போய்  விட்டோம். ...சத்தியமாக இப்படி  ஒரு நிகழ்வை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
'' டேய் மம்முட்டி ( என் அண்ணாவை அப்படித்தான் அழைப்பார்கள்...நாங்கள் மம்மட்டியான் ஊர் என்பதால்.) டேய் மம்முட்டி, இன்னொரு முறை பண்டிகை, பொங்கல்  என்று ஊருக்கு கூப்பிட்டால் மவனே '' என்று தலை தெறிக்க பறந்தோடியவர்கள்தான் ......அப்புறம் என் திருமணத்திற்குதான்,(அதுவும் சேலத்தில் நடந்ததால்)வந்தார்கள். இன்று அவர்கள் பெரிய மருத்துவர்கள்.
......     .....   ......  
இப்போது நிகழ்காலத்திற்கு  வருவோம். ஒட்டகம் வெட்டக் கூடாது என்பவர்கள், இது போல் ஆடுகளையும் வெட்ட கூடாது என்று போராடலாமே . நகரில் உள்ள இறைச்சி கடைகளின் முன் போய்  தர்ணா செய்யலாமே.
அன்புடன்,
கலா கார்த்திக் (கார்த்திக் அம்மா )


2013/10/09

ராமேஸ்வரம் கோவிலில் பன்றி :

        பன்றி வந்தால் நல்லதுதானே
.விஷ்ணுவின் அவதாரம்தானே.
தங்கை ஆத்துக்காரரை பார்க்க மைத்துனன் வந்தால் வரவேற்க வேண்டியதுதானே.அவரே விஷ்ணு..அவரை சபையில் வைத்து அபிஷேகம் செய்து பூஜை செய்ய வேண்டியதுதானே சரி.
அதை விடுத்து கோவிலை சுத்தம் செய்தால் விஷ்ணு கோபித்து கொள்ள மாட்டாரா?
எந்த நேரம் பன்றி, எந்த நேரம் வராகம் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோமே.
நிறைய புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்து மகா மேதைகளே இதற்கும் ஒரு கதை சொல்லி எங்களை முட்டாளாக்குங்களேன்.

2013/10/07

பழி வாங்கிய மாணவன் :
நான் ஆசிரியையாக இருந்த காலம்.
மாணவர்களை திட்டுவதில் பல ரகம்.
தோலை உரித்து உப்புகண்டம் போட்டு விடுவேன்
2.கொடிக்கம்பத்தில் தலைகீழாக கட்டி தொங்க விடுவேன்
3.ஒரே அறையில் அத்தனை பல்லும் கொட்டி விடும்
இப்படி திட்டியதை மனதில் வைத்து கொண்டே இருந்திருக்கிறான் ஒரு மாணவன்.இதற்காகவே பல்மருத்துவமும் படித்திருக்கிறான்.(ர் ).
எனக்கு பல்வலி என்றேன் செந்திலிடம்.அவனும் என் மாணவன்தானே.இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று என் மாணவன் (செந்திலின் நண்பன் ) அழைத்து சென்றான்.
மாணவனுக்கு என்னை பார்த்ததும் பெரிய அதிர்ச்சி.கனகம்பீரமாக இருந்த நான் கடுங் கிழவியாக இருப்பேன் என்று எதிர்பார்க்காத அவன் திகைத்து ''என்ன Mm இப்படி ஆகி விட்டீர்கள்?''
சரி. விசாரிப்புகள் எல்லாம் முடிந்து treatment ஆரம்பம்.4 பல் எடுத்தாக வேண்டும் என்று சொல்லி 10 நிமிடத்தில் படக் படக் என்று 4 பல்லையும் பிடுங்கி விட்டார்.இப்படி பழி வாங்க வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தாரோ.
அவன் மனைவி, மருத்துவமனையில் வேலை செய்யும் அனைவரிடமும் என் English Mm என்று ஓடி ஓடி சென்று சொல்லி அவ்வளவு சந்தோஷப் பட்டதை பார்த்து நான் நெகிழ்ந்தே போய்  விட்டேன்.அவர் Dr .முரளிமணி .
வாசன் DENTAL  CARE .
மாணவர்களை 'மகன்களே ' என்றுதான் அழைப்பேன்.
கார்த்தி,செந்தில் இருவரையும் குட்டிஸ் என்று சொல்வது வழக்கம்.
அப்படி மகன்களே என்று உறவாடியதன் பலன் என் மகன் தன கடமையை செய்து விட்டான்.
வாழ்க. 

2013/09/28

 நல்ல தமிழ் இனி மெல்ல சாகும் என்றார் பாரதியார்.உண்மைதான்.
ஒரு தொலைகாட்சியில்  சமையல் நிகழ்ச்சியில்
''இஞ்சி  புளி  சாறு '' என்பதற்கு
இன் ஜி  புலி சாறு 
என்று போடுகிறார்கள்.
இதை என் வீட்டு தமிழ் அறிஞரிடம்  காட்டினேன்.அந்த மேதை  கேட்டார்.எந்த ''  லி '' போட வேண்டும் என்று.
என்ன சொல்வது.
கார்த்திக்+அம்மா

2013/09/27

 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை வாக்களிக்கும் இயந்திரத்தில் வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இனி நான் ஓட்டு  போடுவேனே

ஆஹா  நன்றி நன்றி
இனி நான் கண்டிப்பாக ஓட்டு போடுவேன்.இத்தனை நாட்களாக ஓட்டு  போடவில்லை(.அவ்வளவு youth )
எதற்காக ஓட்டு போட்டு ஒரு சாதாரண ஆளை 200 கோடிக்கு அதிபதியாக்க  வேண்டும்?ஒரு சாதாரண தி....டனை  அதிகாரத்துடன் திருட அனுமதிக்க நான் வோட்டு போடுவேன்?
இனி நான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  நிராகரிப்பேனே

.சந்தோஷமாக இருக்கிறது .

2013/09/21

Blind and Teacher job:
First I register my whole hearted sympathy to the visually challenged and its our social duty to help them.
But PLEASE at any cost do not give them the teacher job.
When I ( karthik amma ) was working as a teacher one blind man worked as a teacher. And what a hell of problems did we ( both students and teachers ) face.
He cannaot write on the board.
He cannot control the students.He used 4 students as monitors, who really did the spy job only and the class students had to obey those boys as otherwise they would get terrible beatings from the teacher.
and the high light is that he would force all the students to attend tuition.
அவர்களை நான் தவறாக சொல்லவில்லை இந்த ஆசிரியர் வேலை மட்டும் வேண்டாம்.
வேண்டவே  வேண்டாம்.
சாதாரணமாகவே  இந்த மாணவர்கள் பல தவறுகள் செய்வார்கள்.அப்படியிருக்க இந்த பார்வையில்லாதவர்கள்  எப்படி அவர்களை கண்காணிக்க முடியும்?
கரும்பலகையில்  எழுதி பாடம் நடத்தினாலே பாடம் சிறப்பாக இருக்கும்.
(கண்ணிருக்கும் எத்தனை பேர் எழுதி பாடம் நடத்துகிறார்கள்  என்று கேள்வி கேட்காதீர்கள் . சில கேள்விகளுக்கு பதில் தெரிந்திருந்தும்  பதில் சொல்ல முடியாது ).
அரசு அவர்களுக்கு கண்டிப்பாக வேலை தரட்டும்.
ஆனால் ஆசிரியர் வேலை மட்டும் தரவே வேண்டாம்.
கார்த்திக் +அம்மா
 

2013/09/05

இன்று என் அம்மாவின் நினைவு நாள்.
அற்புதமான பெண்.
எனக்கு தெரிந்து அவர் போல் ராஜ வாழ்க்கை  வாழ்ந்தவர் யாரும் இருக்க முடியாது.அழகு, அறிவு, அந்தஸ்து ,செல்வம்  அனைத்தும் பெற்றவர்.
ஒரு சிறந்த தலைமை ஆசிரியராக செயலாற்றியவர்.
அவர் வாழ்க்கையின் சில துளிகள்.
77 வயது வரை வாழ்ந்தவர்.
எந்த வேலையையும்  சவாலாக செய்யக் கூடியவர்.
சிறந்த விளையாட்டு வீராங்கனை.
Best swimmer
poet
orator மேடையில் வெளுத்து வாங்குவார்.
இப்படி எல்லாமும் செய்தாலும் அவருக்கு ஆகவே ஆகாத ஒரு விஷயம் சமையல்.
அவர் சிறு வயதாக இருந்த போது  அவர் அம்மா சாம்பார் தாளிக்க சொல்லி விட்டு எங்கோ சென்றுள்ளார். என் அம்மா ஒரு உதவியாளர் (! ! ) உடன் சேர்ந்து தாளிக்கும் கரண்டியை ஒரு நீள குச்சியில் கட்டி எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அது பொரிய ஆரம்பித்தவுடன் அப்படியே போட்டு விட்டு வெளியே ஓடி விட்டாராம்.
 .திருமணத்திற்கு பிறகும் அதே கதைதான்.
எனக்கு மொத்தம் 6 பாட்டிகள் .
இவர்தான் மெத்த படித்த மேதை. அந்த  .காலத்திலேயே அரசு வேலையில் இருந்தவர்.
அதனால் .செல்லமோ செல்லம்.அதனால் சமையல் வேலை அம்மாவிற்கு இல்லை.
ஒரு பொங்கல்  வந்து விடக்  கூடாது..அம்மா பொங்கல் செய்வதற்குள் ஒரு பிரளயமே நடக்கும்.
High light ஏ  இதுதான்.
எனக்கு பெண் பார்க்கும் படலம் .நானோ I .A .S  படிப்பேன் என்று ஒரு பிடிவாதம். அதனால் யாராவது பெண் பார்க்க வருகிறார்கள் என்றால் சண்டைதான்.அப்படித்தான் அன்று கார்த்தியின் அப்பா பெண் பார்க்க வந்தனர். அவர்கள்தான் ஒரு 2 அ  3 பேர் வரலாம் வந்தவர்கள் 8 பேர்.நான் சண்டை.அம்மாவிடம் பேசவில்லை.அப்பா கெஞ்சியதால்  ஒரு முறைப்புடன் வந்து ஒரு நிமிடம் நின்று விட்டு அறைக்குள் சென்று விட்டேன்.வந்தவர்களிடம் அம்மா சாப்பிட்டுவிட்டு போகலாமே என்றவுடன் அவர்களும் (என் மாமனார் )சரி என்று விட்டனர். அன்றைக்கு பார்த்து சமையல் பெண் வரவில்லை. நானோ முறுக்கிக் கொண்டு அறையில்.
ஒரு அரை மணி நேரம் கழித்து அம்மா மெதுவாக அறைக்கு வந்தார்.நான் ஒரு முறைப்பு.தயங்கி நின்றவர் மெதுவாக ''கண்ணம்மா '' என்றார். எப்போதும் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.மறுபடியும் ஒரு முறைப்பு.
'' குக்கர் whistle வரவில்லை '' என்றார்.
பாவமாகி விட்டது.சமையல் அறைக்கு போய்  பார்த்தால், குக்க்கரில் தண்ணீரே ஊற்றவில்லை.அப்புறம் என்ன ? வழக்கம் போல் என் சமையல்தான்.
தன 77 வயது வாழ்க்கையில் ஒரு முழு சமையல் செய்யாமலே வாழ்ந்து காட்டி விட்டார்.
*****
நான் 1996 ல் M .B .A  பட்டம் IGNOU  பல்கலை.சென்னை I I டி  யில் பட்டமளிப்பு விழா.எங்கும் ஒரு கும்பலாக போவதே வழக்கம்.அதே போல் இதற்கும் எல்லோரும் கிளம்பியாகி விட்டது.ஆனால் 2 பேர் மட்டும்தான்  உள்ளே  செல்லலாம் என்று சொல்லி விட்டனர்.என் கணவரும் வர வேண்டும் .கார்த்திக்கிற்கும் ஆசை .ஆனால் அம்மா வந்தே ஆக வேண்டும் என்று ...எப்படியோ கெஞ்சி கூத்தாடி 3 பேருக்கு அனுமதி வாங்கி நான், என் கணவர் ,அம்மா 3 பேரும் உள்ளே போய்விட்டோம்.பட்டம் பெறப் போகிறவர்களின் பெயர்களை படித்தனர். என் பெயர் படித்தவுடன் என் அம்மாவும் எழுந்து நின்றார்.
என் கணவரோ '' படித்து பட்டம் பெற்றவள் அவள். நீங்கள் உட்காருங்கள்'' என்று கலாய்க்க 
இப்படி ஒரு மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தை கூட நழுவ விடாமல் வாழ்க்கையை சுகமாக சந்தோஷமாக  வாழ்ந்தவர்.
கார்த்தி முதல் பேரன். அவன் இழப்பு அவரின் வாழ்வில் பேரிடி. கடைசி நாட்களில் துக்கத்தில் மூழ்கி போனார்.
ஒரு சிறந்த ஆசிரியையாக  வாழ்ந்த அவர் மறைந்த தினம் இன்று.
....... ஆசிரியர் தினம்......
அம்மா உங்களுக்கு என் அன்பு வணக்கங்கள்.

2013/08/28

Today School Edu. Dep has announced that both 10 & 12 exams will be held at the same time.
And the practical exams will be held after the written exams are over.
    In 2006,  I was in the book review committee and then I SUGGESTED that the practical exams should be conducted after the written exams.
When I joined duty as a teacher we had enough time to revise.The third term will be for revision. Only in March revision exams will be held. So  for  2 months we will revise thoroughly
என் கருத்து சபை ஏறவில்லை என்று அப்போது என்னை கேலி கூட செய்தனர்.
ஆனால் இன்று எனக்கு ஒரு திருப்தி.

சொல்வதெல்லாம் உண்மை:
இது வரை ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு பெண் கூட ஒரு கணவனுடன்  (ஒரே ஒரு கணவனுடன் ) வாழ்ந்த மாதிரியே தெரியவில்லை. என்ன கலாச்சார சீரழிவு.பெண்கள் தெளிவாக பொய் பேசுகிறார்கள். வாழ்க பெண் சுதந்திரம்.

பாராளுமன்றம்:
  குற்றம்  செய்து இருந்தாலும்   even though you are a  criminal you  can continue  as ministers and M .P s .
இந்த விஷயத்திற்கு மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக ,அவையில் கூச்சல் குழப்ப ம்  செய்யாமல், அவையிலிருந்து  வெளி நடப்பு செய்யாமல் ,
அட , அட
இவ்வளவு ஒற்றுமையாக ஒரே நாளில் மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் .   நாடே  அவர்களுக்கு மட்டும்தான்......அவர்களுக்காகத்தான் .
அவர்கள் சம்பள உயர்வு விஷயத்திலும் அப்படித்தான்.ஒரே நாளில் மசோதா நிறைவேறியது.
வாழ்க ஜனநாயகம்.
 

2013/08/25

August  26 ...2005
என் வாழ்வில் வந்திருக்கவே  கூடாத நாள்.
என் அருமை கண்மணி கார்த்திக்கிற்கு விபத்து ஏற்பட்டு  என்னை விட்டு பிரிந்த நாள்....
என் வாழ்வில் வந்திருக்கவே கூடாத நாள்.

2013/08/20

மீள் பதிவு:
இன்னும் மனம் 2005 லேயே இருக்கிறது.
தேறும் வழி தெரியவில்லை.
மகன் ஏக்கம் உயிரை கொல்கிறது  Still living in 2005.
Today is 21st aug.
I+KARTHIK+SENTHIL WERE IN KARUR.
******    *****88
.//  //இன்று  பௌர்ணமி .
2005 Aug  20 ம் தேதி அன்றும் பௌர்ணமி.அன்று நான், கார்த்தி, செந்தில் மூவரும் Bangalore லிருந்து கரூர் நகருக்கு புறப்பட்டோம். கார்த்தியின்  நண்பருக்கு திருமணம். திங்கள்  அன்று திருமணம்..சனிக்கிழமை கிளம்பினோம்.இரவு 7 மணி.செந்தில் காரை ஓட்டி  வர நான் முன் சீட்டில் ..கார்த்தி பின் சீட்டில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து கை கழுவ  கார் கதவை திறக்க நான் ''ஜாக்கிரதை கண்ணம்மா '' என்கிறேன்.'' ''ஆமாமாம்.பார்த்து ,பறந்து விடப் போகிறாய் ''  என்று (கார்த்தி ஒல்லியாய் இருப்பதை கேலி செய்து ) செந்தில் சொல்ல  பேச்சும்  சிரிப்புமாக வந்து கொண்டிருந்தோம்.அப்போது செந்தில் ''அம்மா இங்கு பாருங்கள். '' என்று முழு ,பிரகாசமான நிலவை காட்டினான். நான் ''இது என்ன பெரிய நிலா,  இதை விட அற்புதமான நிலா   பின் சீட்டில் இருக்கிறது.  என் கார்த்தி மகன் முகம்தான் என் பிரிய நிலா. அழகு நிலா '' என்று சொல்ல பின் சீட்டில் இருந்த கார்த்தி இரண்டு சீட்டிற்கு  நடுவில் தன முகத்தை நீட்ட அவனை கொஞ்சி உச்சி முகர்ந்து என் இரு கைகளில் அவன் முகத்தை ஏந்த , செந்தில் '' போதும் ,போதும் அம்மாவும்  மகனும் கொஞ்சியது '' என்று செல்லமாக கோபிக்க .சேலம்  சென்று என் அம்மா வீட்டில் தங்கி ,எல்லோருடனும்  அவ்வளவு சந்தோஷமாக  இருந்து விட்டு கரூர் சென்றோம்.
அந்த 3 நாட்களும் எவ்வளவு சந்தோஷமான  நாட்கள்.
சினிமாவில் வருமே .ஒரு பெரிய குடும்பம் .சந்தோஷமான,  பாசமான  குடும்பம் பாட்டு  பாடி ஆடி முடிக்கும் போது  வில்லன்கள் வந்து அவர்களை நாசப் படுத்துவார்களே.
அதே போல்தான்  என் வாழ்விலும்  நடந்து விட்டது.
கடைசி, கடைசி என்று கார்த்தி தன் உறவினர்கள்,  நண்பர்கள் என அனைவருடனும் சந்தோஷமாக இருந்தான்.கரூரிலிருந்து  திரும்பும் போதும் சேலம் சென்று தன்  பாட்டி  தாத்தா  மாமன்கள்  என எல்லோரையும் பார்த்து விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்து விட்டு bangalore  சென்றோம்.
என் வாழ்வின் கடைசி சந்தோஷமான நாட்கள்.
இன்றும் முழு நிலவை பார்க்க தைரியம் இல்லாமல் பைத்தியமாக இருக்கிறேன்.
கார்த்திக் +அம்மா
KALAKARTHIK

2013/08/10

மேட்டூர் அணை :
கர்நாடகா முதல்வர் சொல்லி விட்டார் .இந்த வருடம் கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுத்தாகிவிட்டது .
டிசம்பரில் கொடுக்க வேண்டும்
நான் பிடித்த  முயலுக்கு 3 கால் என்பவர்களிடம் என்ன பேசுவது.
அவ்வப்போது மழை பெய்ய வேண்டும் என்றுதான் வேண்டிக் கொள்ள வேண்டும்.
...............     ...............  ................
என் கணவர் மேட்டூர் அணையின் பொறுப்பு பொறியாளராக இருந்தார். அப்போதெல்லாம் அந்த அணைக்கு நாங்கள்தான் முழு பொறுப்பு ,அது எங்கள சொத்து என்பது போலெல்லாம் எனக்கு எண்ணம்.
அணைக்கு L T T E  மிரட்டல் இருந்தது.எனக்கு அழுகை.
.விரதம்.பூஜை என்று எத்தனை வழிபாடுகள்.
அது ஒரு காலம்.
.................. ............   .......
என் செல்ல கண்மணி கலாம் சொல்கிறார்.
''2017 க்கு பிறகு லஞ்சமில்லா  இந்தியாவை  உருவாக்கலாம்.''
அப்படியானால்  அதுவரை லஞ்சம்  இருக்கலாமா ?
ஏஞ்சாமி , நமக்கு தெரிந்த nano tech ,missile  பற்றியெல்லாம்  பேசலாமே.
ஏற்கனவே  கனவு காணுங்கள் ( have an ambition ) என்று சொல்ல போய்   ஆளாளுக்கு துவைத்து கிழித்து  காயப் போட்டார்கள்.
நல்ல வேளை .இதை யாரும் கவனிக்கவில்லை போலும்.
கவனிக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் இப்போது  ஜனாதிபதி இல்லையே.
சினிமாவின் கஷ்ட காலம் :
என்ன ஆயிற்று ,சினிமா உலகிற்கு ?
4,5 முக்கிய உயிர்கள் திடீர் திடீரென மறைந்தன .
ஜேம்ஸ் வசந்தன் பிரச்சினை
சேரன் பிரச்சினை.
தலைவா பிரச்சினை.
இன்னும் இது போல் பல.
அதை விட கனகா பிரச்சினை.
ஏதாவது பரிகாரம்,வாஸ்து என்று முயற்சி செய்யலாமே.

2013/07/24

                       HAPPENISM HAPPENISM HAPPENISM
This is a new "ISM' founded by Kalavathy Karthikeyan.This is a new religion.It has no gods,no rituals,no poojas,no mantras,no bajans.This HAPPENISM believes not in karma,sin,janmas,previous births,rebirths,soul,anma,athma and salvation.
This religion firmly believes that any incident or action or event or motion occurs not due to any pre destined design or because an omnipotent sitting in some mountains [with a wife simply doting on him saying "YES LORD" to everything he says ..and with a lot of so called sages dressed funnily chanting some hymns in praise of him] directs each and every minute action of the whole earth, of the 1000s of billion people and decides their birth,course of life,time of marriage,time of death and the whole lot.Isn't it unimaginable and unbelievable for a man turned to become all powerful,all capable and to become the sole deciding authority?
And he needs no computers,no calculators,no statistics!And we believe that we act as is written on our forehead.How many lines are written on your forehead?Is it a micro chip,where a hell lot can be written?If so,this Funny god knows embedding and programming!
If this is a disclaimer,what does HAPPENISM CLAIMS? It says that any action,event,motion,incident or accident happens because it so happens.Let me explain.You are reading this now.Which god or destiny directed you to read this?Did your astrologer predict you that you will be reading this blog at this time?Go and ask him what you had been doing exactly at that time?Can any astrologer tell you that you were reading Vijayanagar blog at that point of time?No,..no one can..So HAPPENISM defines that it so happened that you are reading this blog now.
Shall i exemplify with a better a well known example?As many of you know I and Karthik have roamed over the roads of Bangalore in his favourite Fiero in mists,in rains,midnight,early morning,and i pinching him and playing with him while he was driving and he will drive at such high speed and "without a helmet".Why didn't any accident happen then?How many times would he have crossed the same u turn and was he not aware that he had to be cautious?His friends could site so many such rash driving days,but it so happened that he happened to apply a sudden brake.If it's your god and if there is a karma or the sins of the previous births is there no appeal?No redemption?No annihilation?Even in the man framed constitution there is a provision to go for appeal.Your gods do not give any such choice.Then how do you believe that he will save us?He cannot do anything against destiny eh?If so why should we beg him to save us?
SO let us believe in this HAPPENISM and strengthen ourselves to face the happenings.Instead of being a slave to someone who ditches and deserts at the deserved time[isn't something like the villain of the movies who ruthlessly kills his ardent follower].
So HAPPENISM says that you be your master and let things happen as they happen.
இது ஒரு மீள் பதிவு.அப்போதெல்லாம் தமிழில் எழத தெரியாது.
இது என் புதிய மதம்.
                             நிகழ்வியல்
ஆம்.என்னதான் ஜாதகம் , முயற்சி , தலைவிதி  என்று ஆயிரம் விஷயங்கள் சொன்னாலும் எது நடக்கிறதோ அதுதான் நடக்கிறது.
இதற்கு முன்ஜனமம், பாவம், புண்ணியம் ,என்ற கணக்கெல்லாம் இல்லை.
இது இப்போது நடக்கிறது.
உத்திரகாண்டில் ஏற்பட்ட மனித மாமரணங்கள், மஞ்சுளா விஜயகுமாரின் மரணம் ,2004 ன் சுனாமி ,இதற்கெல்லாம் எந்த காரணத்தை சொல்லலாம்.
அதனால் இது இன்று இப்படி நடக்கிறது.
அதை அப்படியே எற்றுக் கொள்வது ஒன்றுதான் மனிதனால் செய்ய முடியும்.
thats HAAPENISM
a NEW RELIGION
யாரையும் புண்படுத்தாத ,எந்த பகை உணர்வையும் உண்டாக்காகாத மதம். போன ஜன்மத்தில் என்ன பாவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லக் கேட்டு குற்ற உணர்ச்சியில் கூனி குறுக போக செய்யாத ஒரு மதம்.
கார்த்திக் +அம்மா
அண்ணா பல்கலை  ராகிங் பற்றி சொல்லும்போது  எனக்கு இந்த நினைவு வருகிறது.
கார்த்தி கிண்டி அண்ணா பல்கலையில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் அருகில் வந்து இன்னொரு மாணவன் உட்கார்ந்து பயங்கர அதிகாரமாய்
'' உன்   பெயர் என்ன ,ஊர் என்ன ''என்ற range ல் கலாய்த்திருக்கிறான் .
ஒரு 5 நிமிடம் அவனை  பேச விட்டு ,பிறகு எழுந்து போகும்போது
'' ''நான் 3ம் வருட மாணவன் .comp.society secretary.
உன் senior ''
என்று கூலாக சொல்லிவிட்டு அந்த மாணவனின்  முகத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு வகுப்பிற்கு சென்றானாம்.
அதுவரை கார்த்தியை junior என்று நினைத்து ராகிங் செய்த அந்த மாணவனின் முக பாவனையை கற்பனை செய்த எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.
கார்த்தியின் sense of humour  தனி range தான்.
வாழ்க்கை நல்லாதானே  போய்க் கொண்டிருந்தது.
எங்கேயிருந்து வந்தது இந்த சுனாமியும் அது தந்த மீள முடியாத சோகமும்.
கார்த்தி+அம்மா

2013/07/17

Tit Bits
ஒவ்வொரு டி .வி யிலும் புது புது செய்தி வாசிப்பவர்கள் வருகிறார்கள் .வாழ்த்துவோம்.ஆனால் அவர்கள் உச்சரிப்பு தாங்க முடியவில்லை. 'ஒகே நக்கல் 'என்றது ஒரு பெண். என்னடா சொல்கிறது என்று ரூம் போட்டு யோசித்தால் அது 'ஒகேனக்கல்.
இன்னொரு பெண் மத்திய உணவு என்றது. அட மதிய உணவைத்தான்   அப்படி சொன்னது.
2.ரமணன்  இன்று மக்கள் டி .வி யில் சமையல் நிகழ்ச்சியில் வந்து வடை சுட்டார். மிகவும் எளிமையாகவும்  இனிமையாகவும் பேசினார்.அவர் மனைவி அவ்வளவு பாந்தமாக இருந்தார். ஒரு ஆதர்ஷ தம்பதியினர் என்று பார்ப்பதற்கு மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
3.Z தமிழ் தொலைக்காட்சியில் ஒரு இளைஞன் தன்னை விட 20 வயது மூத்த பெண்ணை (அந்த பெண்ணுக்கு பேரக் குழந்தை இருக்கிறது.) காதலிக்கிறேன் என்று எந்த ஒரு குற்ற உணர்வோ அவமான உணர்வோ இன்றி தான் எதையோ சாதித்து விட்ட பெருமையுடன் பேசினான். லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் உனக்கு வெட்கமாயில்லையா  என்று கேட்டார்.நான் மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருக்கிறேன்.
அதுதான் எல்லோரும்  காதல் எங்கள் பிறப்புரிமை என்று முழங்குகிறார்களே.ஆதலினால் காதல் செய்வீர்.
4.)  18 வயதிலிருந்து 16 ஆக குறைக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி விட்டது. அதனால் 16 வயதிலும் கற்பழிக்கலாம் .தண்டனை எதுவும் கிடையாது.ஏன்  ஆண்கள் எல்லோருமே கற்பழிக்கலாம் .யாருக்கும் தண்டனை எதுவும் கிடையாது என்று சொல்லி விட வேண்டியதுதானே.
5.இந்துலேகா  விளம்பரத்தில் ஒரு 6,7 ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் தன்  நண்பனிடம் தன் காதலி நீண்ட முடி வேண்டும் என்று கேட்பதாக சொல்கிறான்.இதை மாற்றி L .K .G பையன்கள் பேசுவது போல் வைத்தால் இன்னும் பேஷாக இருக்குமே.
6. பிரியங்கா சோப்ரா பாடிய  பாடலை 2 மில்லியன் பேர் பார்த்தார்களாம்  .அந்த அம்மணியின் அங்கங்கள் அனைத்தும் தெரியும்படி உள்ள அந்த உடையில் வந்தால் யார்தான் பார்க்க மாட்டார்கள். இந்த சினிமா காட்சிகலால்தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாகிறது என்று நான் உறுதியாக சொல்வேன்.
7.இன்சூரன்ஸ் பணத்திற்காக கண்வனை கொன்ற மனைவி என்று செய்தி சொன்னார்கள் .
கள்ள காதலுக்காகவும் கொலை செய்கிறார்கள். மிகவும் சாதாரண விஷயமாகி விட்டது.வாழ்க பெண் சுதந்திரம்.
8.இன்று ஆடி 1.எங்கள் சேலம்  மாவட்டத்தில் மிக விசேஷம் புது மாப்பிள்ளைக்கு கொண்டாட்டம்.பெண் வீட்டிற்கு அழைத்து கோழிக் குழம்பும் சீர் வரிசையும் என கொண்டாட்டம்தான் ... .சிறுவர்கள் தேங்காயில் அரிசி பருப்பு வெல்லம் நிரப்பி தீயில் சுட்டு உண்ணுவார்கள் .காலையில் அறுகம்புல்லை  தலை மீது வைத்து நீராடுவார்கள் .
9.பழைய நினைவுகளை அசை போட்டபடி நாட்களை ஒட்டிக்  கொண்டிருக்கிருக்கிறேன் .
வேதனையுடன்
கார்த்திக்+அம்மா

2013/07/16

 எங்கும் கார்த்திக் ,எதிலும் கார்த்திக்
நிறைய சினிமா ஹீரோக்கள் பெயர் கார்த்திக்,
ஆபீஸ் தொடர் நாயகன் பெயர் கார்த்திக்.
தந்தி டி ,வி anchor பெயர் கார்த்திக்
gas deliver செய்பவர்  பெயர் கார்த்திக்.
phone bill கட்டப் போனால் அங்கும் கார்த்திக்.
......
கார்த்தி கார்த்தி என்று மனம் கதறிக் கொண்டேயிருக்கிறது.

2013/07/05

I did not love...why?

  நான் காதலிக்கவில்லை :  காரணம் :
எந்த channel  திருப்பினாலும் திவ்யா  , இளவரசன்  காதல் பற்றிய விவாதம்தான்.என்னவோ பிறவி எடுத்ததே காதலிக்கத்தான் என்று 90 % தலைவர்கள் ,எழுத்தாளர்கள்  சிந்தனையாளர்கள் என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ளும் பலரும் பேசுகின்றனர்.
இவர்கள் வீட்டில் நடந்தால் ஒத்துக் கொள்வார்களா?
எத்தனை பிரபலங்கள் தங்கள் வாரிசுகளின் காதலை எதிர்த்தார்கள் என்று நமக்கு தெரியும்.
.....    ......
நானும்   6  வருடம் கல்லூரியில் படித்தேன்.என்னோடு ஒரு 1000 மாணவிகள்  படித்தோம். 1 அல்லது 2 பேர்  காதலித்திருக்கலாம்.அதுவே    பெரிய விஷயம்.
..... எங்களுக்கும்  வாய்ப்புகள் இருந்தன .நாங்களும் காதலித்திருக்கலாம் .
ஆனால் அன்பு , பாசத்தை கொட்டி வளர்த்த பெற்றோரின் நினைவு ,அவர்களுக்கு நாங்கள் கொடுத்த  மரியாதை   எங்கள் யாருக்கும் காதல் என்ற எண்ணமே வரவில்லை.நமக்காக எத்தனை கஷ்டப் பட்டிருப்பார்கள்.நமக்கு ஒரு   சிறிய கஷ்டம் என்றாலும்  எவ்வளவு துடித்திருப்பார்கள் ?
அவர்கள் நமக்கு ஒரு துணை தேடும்போது  இந்த மணமகன்  நம் பெண்ணை நன்றாக காப்பாற்றுவானா  என்று பல வகையிலும்  ஆராய்ந்து தேர்ந்தெடுப்பார்கள் .
என்னையும் என் பெற்றோர் கேட்பார். '' இந்த பையனை உனக்கு பிடித்திருக்கிறதா ? ''
நான் சொல்வேன் " நீங்கள் யாரைக் காட்டி இவனை திருமணம் செய்து கொள்  என்றால் செய்து கொள்வேன் ''
அப்படித்தான் நடந்தது.
திருமண வாழ்வில் எனக்கும் என் கணவருக்கும் ஏதாவது மனக் கஷ்டம் என்றால் கூட என் தாய் தந்தையிடம் சொல்ல மாட்டேன்.அவர்கள்  மனம் துடித்து போவர் .
இந்த காலத்தில் இந்த இளவரசன் 19 வயது.இந்த படிக்கும் வயதில் காதல், கல்யாணம் .படிக்கும் வயதில்  காதல் ஏன்  என்று யாரும் கேட்கவில்லை.பொன்.ராதாகிருஷ்ணன்  மட்டும்தான் சொன்னார். உடனே அதற்கு ஒருவர் பதில் சொல்கிறார் .''அவர் தன உயர் ஜாதி புத்தியை காட்டுகிறார்'' என்று.
ஜாதியை உள்ளே கொண்டு வந்தது கட்சிகள்.
அந்த பெண்ணின் தந்தை இறந்த போது ஏன் யாரும் ஆர்பாட்டம் செய்யவில்லை?
கட்சிகள் நடத்திய வன்முறைதான் அரங்கேறியது.அந்த தந்தைக்காக யாரும் அழவில்லை. ( இந்த டி .வி களைத்தான் சொல்கிறேன்.)இந்த டி .வி கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஒரு டி .வி சொல்கிறது ....''தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது"  ...என்னவோ உத்திரகாண்டில் தன உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றிய பிரவீனுக்கு இணையாக இவர்களை பேசுகிறார்கள் .அந்த பிரவின் பற்றி ஒரு இரங்கல் செய்தி கூட பல தொலைகாட்சிகள் செய்யவில்லை.
இவர்கள் ஊதி பெரிசாக்குகிறார்கள்.
பெற்றோர்களை நேசியுங்கள் .காதல் தேவையில்லை.கல்யாணத்திற்கு பிறகு கணவனை காதலியுங்கள்.அது அன்பு. அதுவே நிலைக்கும்.
(கார்த்தியின் கருத்து என்னவாக இருந்திருக்கும் என்று தெரியாததால் )
கார்த்தி+அம்மா ..அல்ல ..
கார்த்தி அம்மா (மட்டும்)